Advertisement

          என்னை தந்திடுவேன் 4

 

”ஆபீஸ்க்கு மட்டும் வந்திட்டு அவன் எங்க போறானு உனக்கு தெரியாத ராஜ். நேத்து ஆபீஸ் வந்திருக்கான், மீட்டிங் அட்டென் பண்ணிருக்கான், மீட்டிங் முடிஞ்ச அடுத்த நிமிஷம் எங்க போனான். அதுவும் வந்திருந்த கெஸ்ட்ட கவனிக்காம, அவங்களுக்கு முன்னாடி கிளம்பி போயிட்டான். அப்படி எங்க டா அவன் போறான்.” ராஜ்ஜிடம் கோவமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

“தெரியலை தாத்தா… பாஸ் என்கிட்ட வந்திருக்கவங்களை நீ கவனிச்சுக்கோ, நான் முக்கியமான வேலையா போறேனு சொல்லிட்டு போயிட்டாங்க. என்கிட்ட எங்க போறேனு சொல்லலை தாத்தா.”

“கண்டுப்பிடிக்குறேன், அவன் எங்க போறான்… எங்க வரானு நான் கண்டுபிடிக்குறேன்… இந்த வீட்டுக்கு வந்து, சாப்பிட்டு, உறங்க்கி ரொம்ப நாளாச்சு… இப்படியே விட்டா அவனை வழிக்கு கொண்டுவரமுடியாது இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்” அவர் உறுதியாக சொல்ல.

“போச்சு… போச்சு… தாத்தா பாஸ்க்கு பெரிய ஆப்பா வைக்க போறாரு போல இதை பாஸ்கிட்ட உடனே சொல்லனும்… இல்லைனா என்னை கொன்னே போட்டுருவாரு.” ராஜ் மனதுக்குள் பேசிக்கொண்டான்.

“என்ன, நான் சொன்னதை செஞ்சுடு ராஜ்… சரியா” தாத்தா சொல்ல அவனோ, அவரை பார்த்து திரு திருனு முழித்துக்கொண்டிருந்தான்.

“எ… என்.. என்ன தாத்தா செய்யனும்”

“அதான், அவன் அவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும். அப்போ தான் வீட்டுக்கு வருவான், எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். பொண்ணு பார்க்க ஆரம்ப்பிக்கனும்.” அவர் சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார்.

“ராஜ்ஜோ, என்னது கல்யாணமா… இதுக்கு அவரு முதல ஒத்துக்கனும் தாத்தா… பாஸ் நீங்க எங்க இருக்கீங்க… முக்கியமான விஷயம் சொல்லனுமே” அவன் புலம்பிக்கொண்டே அவன் வெளியே சென்றான்.

“ச்சு.. சும்மா இரு ரோஹித்… எனக்கு தூக்கமா வருது” சிணுங்கினாள் ஹீரா.

“ நான் சமத்து பிள்ளையா தான் இருக்கேன் டீ” அவன் சமத்து என கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. ஏன்னென்றால் சமத்து என்றால் அவள் மீது கைகளால் ஊர்வலம் நடத்திக்கொண்டிருந்தான்.

“ நீ சமத்துனா, நான் நம்பனுமா… ப்ளீஸ் ரோஹி கொஞ்ச நேரம் ஆச்சு என்னை தூங்கவிடு”

“ம்ஹூம்… மாட்டேன் நீ தூங்கினா, எனக்கு பிடிக்காதே… அதான் டிஸ்ட்டர்ப் பண்ணிட்டேன் இருக்கேன் டீ… நீ ஏன் டீ தூங்குற. நான் முழுச்சுட்டு இருக்கேன், அப்போ நீ தூங்காத.” விடாமல் அவளை கொஞ்சிக்கொண்டிருந்தான்.

“ரோஹி, இரவு எல்லாம் என்னை நீ தூங்கவிடமா என்னை போட்டு படுத்தி எடுத்துட்ட ,இப்போ தான் தூங்க ஆரம்பிச்சேன்… உடம்பெல்லாம் கொஞ்சம் வலியா இருக்கு. ப்ளீஸ் ரோஹி…” அவள் கெஞ்சவும், அவன் முகம் சுருங்கியது. அதை அவள் கவனிக்காமல் மீண்டும் தூங்க ஆரம்பித்தால்.

”உடனே, அவளைவிட்டு விலகியவன் நேராக கிச்சன் சென்று அவளுக்கென காஃபி தயாரித்துக்கொண்டு வந்தான். கூடவே பிஸ்கட்டும் எடுத்து வந்தான்.”

“அவளை மார்பில் சாய்த்துக்கொண்டு, காஃபியை புகட்டினான். அவளோ காஃபி சூடாக இருந்ததால் தூக்கத்திலேயே குடித்துமுடித்தால். சுடு நீரீல் பிஸ்கட்டை நனைத்து அவளுக்கு கொடுத்தான். அதையும் உணராமல் அவள் சாப்பிட்டால்.”

“எல்லாம் கொடுத்து முடித்ததும், அவளை அவன் மார்பில் வைத்துக்கொண்டே அவளை தூங்க வைத்தான். தலையை கோதிக்கொண்டே அவள் உறங்குவதை பார்த்தான். “

“அப்பொழுது தான் அவளின் அழகை ரசிக்க ஆரம்பித்தான். படர்ந்த நெற்றி, செதுக்கிய மூக்கு, ரோஜா நிறம் உதடு, திருஷ்டி பொட்டு போல் கன்னத்தில் ஒரு மச்சம்… மொத்ததில் வடகத்தியர் பெண் போல் இருந்தால். ஆனால் அவள் மேனியில் வாசம் தமிழ்நாடு என சொல்லாமல் சொல்லியது.”

“முதன் முறை, அவள் தன்னை நம்பி அவளேயே கொடுத்த நாள்… நினைவுக்கு வந்தது. ஆனால் அதற்கடுத்து தான் அவள் தன்னிடம் சொல்லாமல் எங்கயோ சென்றது. இது வரை அவள் எங்கு சென்றால் என்பதை அவன் கேட்க்கவும், அவளும் சொல்லவும் இல்லை.”

”ஏன், அவன் சந்தேகமாக ஒரு பார்வையும் பார்த்ததும் இல்லை. அன்று சென்றவள், இப்போது தான் அவனிடம்  வந்திருக்கிறால். அவள் வந்து ஒரு வாரம் முடிந்து இரண்டாவது வாரம் ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது.”

“ஏன் அன்று, என்னைவிட்டு விலகி சென்றால் என்பதை இப்பொழுதும் அவன் கேட்க முயலுவதில்லை. இனி என்கூடவே அவள் வாழ்நாள் முழுவதும் இருப்பாள் என அவன் நினைக்க. அதற்க்கு எதிராக அவள் நினைக்க போகிறால் என்பதை அவன் அறியவில்லை”

“சென்னை ஏர்போர்ட்… எல்லாம் பார்மாலிட்டிஸும் முடிந்து ஏர்ப்போர்ட்டைவிட்டு வெளியவந்தான் கபிலன். அவனுக்காக காத்திருந்த அவனது கம்பெனி கார் அவன் அருகில் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டு அவனது ஹெஸ்ட் ஹவுஸ்  நேராக சென்றாது.”

”என்னாச்சு, அவ கிடைச்சாலா???”

”…….”

“எனக்கு டீட்டைல்ஸ் வரனும் அவளை பற்றி”

“……”

“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவ என் கையில இருக்கனும் இல்லை நீங்க எல்லாரும் இந்த உலகத்துல இருக்கமாட்டீங்க ஜாக்கிரதை” கோவம் கண்ணை மறைக்கும் அளவிற்க்கு அவன் பேசினான்.

“இனி என் பார்வையில இருந்து தப்ப முடியாது ஹீரா, வாழ்க்கையில உனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்க கூடாது.” என அவன், அவளின் போட்டாவை பார்த்து கூறினான்.

“சார்… இந்த பிராஜெக்ட்ல நாம செலக்ட் பண்ணவங்க இவங்க தான் இவங்களுக்கு நீங்க இண்ட்ரோ கொடுத்திருங்க… அப்புறம் நான் ட்ரைனிங் பண்ணிக்கிறேன் சார்”

“ நோ… நோ சூர்யா… எனக்கு இந்த டைம்ல வேற வேலை இருக்கு, நீங்களே பார்த்து இண்ட்ரோ கொடுத்துருங்க. நான் கிளம்புரேன்.”

“ஆனா… சர் இந்த பிராஜெக்ட் ட்ரைனிங்”

“அதையும் நீங்களே பார்த்துக்கோங்க.”  என அவன் சூர்யாவிடம் சொல்லிக்கொண்டே கார் எடுத்துக்கொண்டு அந்த கல்லூரிக்கு சென்றான்.

“இப்பொழுதும் அதே இடத்தில் அவன் காரை பார்க் செய்துவிட்டு அவளின் வருகைக்காக காத்திருந்தான். அவளும் வந்தால்.”

“ நான் இந்த எக்ஸாம்ல கண்டிப்பா, பர்ஸ்ட் மார்க் வாங்குவேன் மேகா.. நீ எப்படி எக்ஸாம் பண்ண.”

“போடி… நான் எல்லாம் படிக்கிறதே பெரிசு இதுல மார்க் வேற… நானே எப்போடா எக்ஸாம் முடிஞ்சு குறட்டைவிட்டு தூங்கலாம்னு இருக்கேன் இதுல மார்க், எக்ஸாம் எரிச்சலா வருது டி” அவள் சொல்லிக்கொண்டே அவனை பார்த்து அதிர்ந்தால்.

“எரிச்சல் ஆகாதடி… இப்படியெல்லாம் படிச்சா தான் பின்னாடி கெல்ப்புல்லா இருக்கும் மேகா..” லக்‌ஷ் சொல்லிகொண்டே அவளை பார்த்தால், அவள் திகைத்து யாரையோ பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தால் லக்‌ஷ்.

“என்னடி ஷாக்கா இருக்க..” அவளைன் தோளை தட்டி கேட்க.

“அங்க பாரு லக்‌ஷ்… இரண்டு நாளுக்கு முன்னாடி வந்தானே அவன் தான இது.” அவன் பக்கம் கையை நீட்டி காட்டினால்.

“யாரை சொல்லுறா… இவ” என எண்ணிக்கொண்டே அவள் காட்டிய திசையில் பார்த்து முதலில் திகைத்து, பின் எரிச்சலானாள்.”

“இவர்க்கு வேற வேலையே இல்லையா… எப்ப பார்த்தாலும் இந்த நேரத்துல என் கண் முன்னாடி  வந்து நிற்க்கிறான். எனக்கு எரிச்சலா இருக்கு இன்னைக்கு என்ன ஆனாலும் சரி அவன்கிட்ட இப்படி பண்ணாதனு சொல்லனும். வாடி மேகா” அவளை இழுத்துகொண்டு அவனிடம் சென்றால்.

“தன்னை நேக்கி அவள் வருவதை பார்த்தவன், கொஞ்சம் திகைத்தாலும் அவளை எதிர் நோக்கி காத்திருந்தான்.”

“எதுக்கு இரண்டு வருஷமா என்னை பாஃலோ பண்ணுறேங்க. நீங்க என்னை காதலிக்கிறது எனக்கு தெரியும் ஆனா என்னலா உங்களை காதலிக்க முடியாது. ஏன்னா எனக்கு எங்க அக்கா சொன்ன மாதிரி கோல்டு மெடல் வாங்கனும், அவங்க ஆசைப்பட்ட மாதிரி நான் நல்லா படிக்கனும். இப்படி என்னை வந்து தினமும் பார்த்துட்டு போறது எனக்கு பிடிக்கலை.”

“ நீங்களும் உங்க நேரத்தை வீணாக்காம போய் வேலை இருந்தா பாருங்க. அவள் பேசிவிட்டு திரும்பி செல்ல முயலும் போது அவனின் குரல் தடுத்தது”

“அப்போ உனக்கு என்னை பிடிச்சிருக்கு சரிதான வடிவு”

“அவன் சொன்ன முதல் பாதியை விடுத்து, அவளின் பெயரை அவன் சொல்லியதும் கோவமும் வந்தது.”

“என்னை அப்படி கூப்பிடாத…”

“என்னை காதலிக்கிறேனு சொல்லு…”

“முடியாது… எப்பவும் உன்னை காதலிக்க மாட்டேன்.”

“எப்படியும் உனக்கு கல்யாணம் ஆகும் தானே”

“என் அக்கா பார்க்குற மாப்பிள்ளைய தான் கல்யாணம் பண்ணுவேன், உன்னை இல்லை”

“சரி நான் இனிமே வரமாட்டேன்… குட் பாய்” என அவளிடம் சொல்லிவிட்டு காரை எடுத்து சென்றான்.

“ஆனால் அவனுக்கு தேவையானது தான் கிடைத்துவிட்டதே… இனி மனைவியாக அவளை நேரடியாக சந்திக்கலாம்” என மனதில் மகிழ்ச்சியாய் இருந்தான்.

“ நன்றாக தூங்கி எழுந்தவள் முதலில் தேடியது ரோஹித்தை தான். அருகில் இருந்த நைட்டியை போட்டுகொண்டு, அவர்களின் அறையைவிட்டு வெளியே வந்தாள். அங்கயும் அவன் இல்லை.”

“ரோஹித்…”

”எங்க இருக்க ரோஹித்… நான் எழுந்துட்டேன்…” அவனை அழைத்துக்கொண்டே ஓவ்வொரு இடமாக தேடி சென்றால். எங்க போயிருப்பான் என அவனின் ஆபீஸ் அறைக்கு போனால்.

“ஆனால் அங்கும் அவன் இல்லை.” அப்பொழுது தான் அவளின் கைப்பேசி அதன் இருக்கும் இடத்தை காட்டியது. அதை எடுத்துப்பார்த்தவள் மொத்தமாக அதிர்ந்தால்.”

“இவங்களுக்கு நான் இருக்குற இடம் தெரியகூடாதே… எதுக்கு இப்போ போஃன் பண்ணுறாங்க… கம்பெனி விஷயமா இருந்தா அக்‌ஷய் என்னை கூப்பிடுவாங்க. இல்லைனா நானே தான் கூப்பிடுவேன். கம்பெனிக்கும் அவங்களுக்கும் சமந்தம் இல்லையே” போஃனை வெறித்து பார்த்துகொண்டே இருந்தால் அதை அட்டென் செய்யவில்லை.”

“மறுபடியும் விடாமல் அந்த அழப்பு அழைக்க ஆரம்பிக்க. அவள் என்ன செய்வதென்றே தெரியவில்லை.”அப்போது தான் வெளியில் இருந்து உள்ளே வந்தான் ரோஹித்.

“ஹீரா… போஃன் அடிக்குது நீ அதை வெறிச்சுட்டு இருக்குற எடுத்து பேசவேண்டியது தானே” சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

“அவன் போனில் உள்ள பெயரை பார்ப்பதற்குள், போனை அணைத்துவிட்டால்.”

“அவ்வளவு ஒன்னும் முக்கியமான போன் இல்லை ரோஹித்… கம்பெனி கால் தான் அதை அப்புறம் பார்த்துகலாம்… நீ எங்க போன..”

“ நான் எங்க போக போறேன்… பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு அழாக இருந்தா அதான் சைட் அடிச்சுட்டு வந்தேன்.” அவளிடம் கண்ணடித்துகொண்டே கூற.

“ நீ… பக்கத்து வீட்டு பொண்ண சைட் அடிச்ச…”

“ஆமாம் டீ”

“இதை நான் நம்பனும்”

“உன் இஷ்டம்…”

“அவளோ கொஞ்சம் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு, போ… போய் அவளையே சைட் அடிச்சுக்கோ… “ கோவமாக சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தால்.

“அவள் பின்னேயே சென்றான்… சமதானம் படுத்துவதற்க்கு”

“ஏன் டீ இவ்வளவு கோவப்படுற… ஆனா உன் கோவம் கூட இன்னும் ரசிக்க தான் தூண்டுது டீ” சொல்லிகொண்டே அவளை கட்டியணைக்க போக அவனை தடுத்தால்.

“ யாரு அந்த பொண்ணு”

“ஹீரா… அந்த பொண்ணு பேருகூட என் பேருல தான் ஆரம்பிக்கும்… ரோஹிதா…”

”ஓஓ… பேரெல்லாம் விசாரிச்சாச…”

“பேரு மட்டும் இல்லை… வயசு கூட தெரியும்”

“இன்னும் கோவமானால் ஹீரா…”

“பல்லை கடித்துக்கொண்டு… ‘என்ன வயசு அவளுக்கு”

”பன்னிரண்டு, இல்லைனா பதிமூனு வயசு இருக்கும்னு நினைக்குறேன் டீ” அவன் சொல்லிமுடித்ததும் தான் அவளுக்கு புரிந்தது. அவன் பேசிகொண்டிருப்பது சிறு பெண்ணை என்று.

“யூ யூ… இடியட்… இவ்வளவு நேரம் குட்டி பொண்ணப்பற்றி தான் பேசிட்டு இருந்தியா… ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.” அவள் அவனை அடித்துகொண்டே இருந்தால்.

“ஹே போதும் டி… வலிக்குது… பக்கத்துல இருக்குற பசங்க கூட விளையாட்டிட்டு இருந்தேன் டி… உன்னை வப்பிழுக்க தான் அந்த குட்டி பொண்ணு பேர மட்டும் சொன்னேன்… அய்யோ என் முடி” அவன் முடியை நன்றாக பிடித்து ஆட்டிகொண்டிருந்தால்.

“பொய் சொல்லுவியா… பொய் சொல்லுவியா…” அவனை  அடித்துகொண்டே சொன்னால்.

“அவளின் கைகளை பிடித்து, பின்னால் அவன் வைத்துக்கொண்டு. ‘ உன் பக்கத்துல இருந்தா சும்மா, சும்மா நான் கிட்ட வருவேன்… கிட்ட வந்தா என்னை கண்ட்ரோல் பண்ணமுடியாது.  அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு தோட்டத்துக்கு வந்தேன். அங்க குட்டி பசங்க பால் கேட்டு வந்தாங்க சரி நானு சும்மா தானே இருக்கேனு அவங்ககூட டீல் பேசி விளையாடிட்டு வந்தேன்.”

“ நான் அப்படி சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டாயா ரோஹி”

“ இல்லையே… ஏன் நான் கோவிக்கனும்”

“அப்போது சொன்னேன்ல அதுக்கு தான்”

“கண்டிப்பா இல்லை டி… உன்மேல கோவப்பட்டு நான் எங்க போக. உன் நிம்மதியும், சந்தோஷமும் தான் எனக்கு முக்கியம். அதே மாதிரி என் சந்தோஷமும், மன அமைதி தான் உனக்கு முக்கியம்னு நீ நினைப்ப அது எனக்கு தெரியாதா.” அவளி மூக்கின் மீது மூக்கை வைத்து உரசிகொண்டே சொன்னான்.

“அப்படியா…”

”ம்ம்ம்.. அப்படிய தான்… வெளிய போகலாமா” அவன் கேட்க

“போகலாமே… எங்க”

“அது போகும் போது டிசைட் பண்ணலாம்… நீ கிளம்பு”

“விட்டா தானே கிளம்ப முடியும்…” அவன் அவளை பிடித்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினால்.

“ம்ம்ம்… அவனின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தது.” அவளும் வெளிய செல்ல தயரானாள்.

“ரோஹித் நான் கிளம்பிட்டேன்…”

“டென் மினிட்ஸ் ஹீரா”

“இதையே அப்போ இருந்து சொல்லுற…”

“வரேன் டி… என் காதலிக்கூட வெளிய போகும் போது கொஞ்சமாச்சும் அழகா இருக்க வேண்டாம். சொல்லிகொண்டே வெளியே வந்தான்.

“எனக்கு மட்டு நீ அழாகா இருந்தா போதும். மத்தவங்களுக்கு இல்லை” அவனின் உடையை பார்த்து கூறினால்.

“உன் கண்ணுக்கு  தான் டி அழாகா இருக்க ஆசைபடுறேன்” அவளை தோளனைத்துகொண்டே கூறினான்.

“ம்ம்ம்… போகலாமா”

“வா… அவளை அழைத்துக்கொண்டு காரின் அவளை ஏற்றிகொண்டு முதல் காதல் பயணம். அவர்களின் மனநிலையில் இப்பொழுது நாங்க இருவர் மட்டுமே இந்த உலகத்தில் இருக்கிறோம். எங்களை பிரிக்க கூட யாரும் இல்லை.” என இருவரின் மனதிலும் இந்த பயணத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.

“முதலில் அவளை அழைத்துகொண்டு கோவிலுக்கு சென்றனான். அவளுக்கோ அதிசயமாய் இருந்தது. ஏன்னென்றால் ரோஹித்க்கு கோவில் என்றாலே பிடிக்காது. ஆனால் அவளுக்காக  அழைத்து சென்றான்.”

“எல்லாரும் நல்லா இருக்கனும் தாயே துர்க்காம்மா… எந்த கஷ்டம், துன்பம் வந்தாலும் அதை தாங்குற சக்தியும், பலமும் எனக்கு கொடும்மா… என் ரோஹித் நல்லா இருக்கனும், அவனோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் எந்த ஆபத்தும் வராம பார்த்துக்கோ…லக்‌ஷ் நல்லா இருக்கனும்… துர்க்காம்மா.” அவளின் இஷ்ட தெய்வமான துர்க்கையிடம் வேண்டிக்கொண்டால்.

“ துர்க்கையோ உன் வேண்டுதலை  என்னால ஏற்க முடியாதே. உன் வேண்டுதல் காலம் கடந்தது. உனக்கு அந்த கஷ்ட்டதை ஏற்க மனதைரியம் மட்டுமே என்னால் கொடுக்க முடியும் என்பது போல் அந்த துர்க்கை சிறு வேதனையுடன் அவளை ஆசீர்வதிதால்.”

“ஹீரா ரோஹித்துக்கு பிடித்த உடை எடுக்க. அவனோ அவளுக்கு எந்த உடை அழாகா இருக்கும் என பார்த்து பார்த்து எடுத்துக்கொண்டிருந்தான்.”

“அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்றனர். அவனுக்கு பிடித்ததை அவள் ஆர்டர் செய்ய. அவளுக்கு பிடித்ததை அவன் ஆர்டர் செய்தான்.”

“இப்படியே இவர்களின் மாலை பொழுது முடிந்து இரவானது. இருவரும் வீட்டிர்க்கு கிளம்பினார்கள்.”

“எல்லாம் கரெட்டா தான் போகுது… டீலர்கிட்ட பேசிட்டேன் அவங்க பார்த்துப்பாங்க. அப்புறம் கம்பெனில சில மெட்டீரியல்ஸ் மாத்தனும் அதையும் பார்த்துக்கோங்க. நான் சென்னையில இன்னும் ஒரு மாசம் மட்டுமே இருப்பேன். வேலை முடிஞ்சதும் நான் கிளம்பிடுவேன்.” கபிலன் அவன் கம்பெனி மேனேஜரிடம் பேசிக்கொண்டே எதிர் திசை சிக்னலில் நின்றிருந்த காரை எதர்ச்சையாக பார்த்தான்.

“முதலில் அவனுக்கு அவளின் முகம் சரியாக தெரியவில்ல. ஆனால் சிக்னல் பச்சை வந்தது அந்த கார் கொஞ்சம் வேக வேகமாக செல்ல ஆரம்பித்து, அவன் கண் மறைவில் இருந்து முழுவதுமாக மறைந்தது.”

“அவ… அவ.. அவ தானே.. அது அவ தான்…  அந்த வண்டிய பாஃலோ செய்து வேகமாக சென்றான்.”

“மிஸ் பண்ண மாட்டேன்… உன்னை மிஸ் பண்ணமாட்டேன்” உச்சரித்துக்கொண்டே அந்த காரை பாஃலோ செய்து அந்த வண்டியின் முன் அவன் காரை நிறுத்தினான்.”

  தொடரும்………….

 

Advertisement