Advertisement

              என்னை தந்திடுவேன் 3

 

”ரோஹித் எப்போ வந்த … “அவன் அணைப்பில் இருந்துகொண்டே கேட்டாள்.

“ இப்போ தான்…. மீட்டிங்க் முடிஞ்ச அடுத்த நிமிஷம் கிளம்பிட்டேன்டி..”

“அப்போ மீட்டிங்க்கு வந்தவங்களை” அவள் தயங்கி நிற்க..

“அதெல்லாம், ராஜ் பார்த்துப்பான்.. அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு தான் வந்தேன்..”

“ஆனா அவங்க என்ன நினைப்பாங்க… நீ ஒரு கம்பெனியோட எம்.டி.. நீ இருந்து பார்ப்பது போல் வருமா..”

“அதெல்லாம் ஒன்னும் நினைக்கமாட்டாங்க… இப்போ நீ என்னை மட்டும் கவனிச்சா போதுடீ” அவள் கழுத்தில் கன்னத்தை வைத்து தேய்த்துக்கொண்டான்.

“ரோஹித் வந்தவுடனேவா… ஆபீஸ்ல இருந்து வந்திருக்க.. போய் ரெப்ரஸ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்..” அவனை தள்ளியபடியே பேசினால்.

“ம்ம்ம்… சரி ரெப்ர்ஸ் பண்ணிட்டு வரேன்.” அவளிடம் இருந்து விலகி உள்ளே சென்றான்.

“அப்பொழுது தான் அவள் ஆஃன் செய்தபடியே விட்டிருந்த லேப்டாப் மற்றும் கோப்புகளையும் பார்த்தால்… அவன் உள்ளே சென்றுவிட்டான என அவள் பார்க்க, அவன் உள்ளே சென்றுவிட்டான் என உறுதி செய்துகொண்டால், அப்பொழுது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.”

“வேக.. வேகமாக அந்த லேப்டாப் மற்றும் கோப்புகளை அவனுக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு உள்ளே அவள் அறையில் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வந்தால்.”

“சாப்பாட்டு மேஜையில் அவனுக்காக செய்து வைத்த உணவுகளை எடுத்து வைத்துகொண்டு இருந்தால். அதை பார்த்தவன் என்றும் இல்லாத மகிழ்ச்சியாய் உணர்ந்தான்.”

“பிறந்ததில் இருந்து அன்னை, தந்தை பாசத்தை உணராதவன் இன்று அவனின் காதலியின் பாசத்தை அதிகமாக உணர்கிறான். தாத்தாவின் கவனிப்பில் வளர்ந்தாலும், அதில் தெரியும் பாசம் அவனை வளர்ப்பதில்  மட்டுமே ஆனால் ஹீராவின் காதலும், பாசமும், அவனை ஒவ்வொரு நாளில் அவனை மகிழ்ச்சிப்படுத்துக்கிறது.”

“ஹலோ என்ன அப்படியே பார்த்துட்டே இருக்கீங்க…” அவன் முன் சொடக்கு போட்டு அவனை கனவில் இருந்து வெளிகொண்டு வந்தால்.

“ஹான்.. என்ன  ஹீரா..”

“ம்ம்ம்… சார் கனவில இருந்து வெளிவந்துட்டேங்களா… வாங்க சாப்பிடலாம். அடுத்து கனவு காணலாம்” அவனை கை பிடித்து இழுத்துகொண்டு போனால்.

“அவனுக்கு மிகவும் பிடித்த சமையல் செய்து அவனுக்கு பரிமாறி… ஊட்டியும் விட்டாள்.”

“எப்படி இருக்கு… உங்களுக்கு பிடிச்சிருக்கா” அவனிடம் கேட்டால்.

“சூப்பர்… உன் சமையல அடிச்சுக்க ஆளே இல்லைடீ… எப்படி கத்துகிட்டே”

“உனக்கு தான் ஆபீஸ் வேலையே சரியா போகிடுமே… அதுவும் உன் பாஸ்க்கு பி.ஏ வேற.” அவள் நிலை தெரியாமல் கேட்டு வைக்க.

“அவளோ… அவனுக்கு ஊட்டுவதை நிறுத்தி அவனைப்பார்த்தால். இதற்க்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் அவனை திகைத்து பார்க்க. அவனோ என்ன என்பது போல் கேட்டான்.”

“ நீ ஏன் என்னை திகைச்சு பார்க்குற.”

“என் பாட்டி தான் எனக்கு கத்துகொடுத்தாங்க… அவங்களுக்கு நான் சும்மா இருக்கவே பிடிக்காது… கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சேன் அப்படியே பழகிருச்சு” முழு பொய்யை கூறினால்.

“ஓஓ… அப்போ கண்டிப்பா உன்னை ட்ரில் வாங்கிருப்பாங்க இல்லையா ஹீரா…”

“ம்ம்ம்… ரொம்ப…”

“ரோஹித் உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்…”

“பாஸ் இந்த டைமும்… ஹீரா மேடம் எங்க போனாங்கனு தெரியலை.”

“எப்படி… எப்படி டா அவளை தப்பிக்க விட்டேங்க…”

“பாஸ் அவங்க பின்னாடி இருபத்தினாலு மணி நேரமும் நம்ம ஆளுங்க இருக்காங்க ஆனா அதை மீறி அவங்க எப்படி, யாருக்கு தெரியாம எங்க போனாங்கனு தெரியலை பாஸ்.”

“உங்களை… ஹீராவை பற்றி சொன்னவனை போட்டு அடி பின்னிவிட்டான்.”

“போங்க டா… அவ எங்க இருக்கானு எனக்கு தெரியனும்… இல்லை உங்களை கொன்னுடுவேன். என் கண்ணு முன்னாடி நிக்காம அவளை தேடுங்க.”

“ஓகே.. பாஸ்.. அந்த வலியை பொறுத்துகொண்டு அவன் அடியாள் பதில் கூறிக்கொண்டு சென்றான்”

“ஹீரா… அப்படி எங்க தான் இடையில இடையில காணாம போறீயோ… உன்னைவிடமாட்டேன் ஹீரா.” அந்த அறையில் கத்திக்கொண்டிருந்தான்.

“கபிலன்… வாழ்க்கையை எதார்த்ததில் வாழாமல் அடுத்துவர்களின் சாபத்தாலும், பிடிவாததாலும் வாழ்பவன். நாட்டுக்கே இவன் தான் ராஜா என்னும் கனவில் வாழ்பவன். இவனால் பயன்பெற்றவர்கள் இருந்தாலும். இவனால் ஏற்ப்பட்ட பாதிப்பில் வாழ்ந்தவர்கள் தான் அதிகம்.”

“கபிலன் வாழ்க்கையில் அதிகம் காயம் ஏற்ப்பட்டாலும் அந்த காயம் தந்த வலியும், வடுவும் ஆறாததாக இருந்தது. அதில் ஹீராவின் பங்கும் இருந்தது. வேலையின் நிமித்தமாக அவன் சென்னை வந்திருக்க அங்கு தான் ஹீராவை சந்தித்தான். அவர்களது சந்திப்பு அனைவருக்குமான தொழில் வர்த்தக கூட்டம் என்பதால் அந்த சந்திப்பு. அப்பொழுதே அவன் கண்ணுக்குள் ஹீரா விழுந்துவிட்டால். ஆனால் அவனின் பார்வையில் இருந்து தப்புவதே அவளின் வேலையாக இருந்தது.”

“விடமாட்டேன் ஹீரா… உன்னை தேடி சென்னைக்கே வரேன். இனி என் பார்வையில இருந்து நீ தப்ப முடியாது. இனி உன் வாழ்க்கை என் கையில் தான்” துளியும் காதல் இல்லாத அவன் பேச்சை மறைந்திருந்து பார்த்துகொண்டிருந்த அவனது அன்னையின் கண்ணுக்கு தெளிவாக விழுந்தது.”

“லக்‌ஷ் ஏன் டீ சோகமா இருக்க..” அவளின் தோழி மேகவி கேட்க.

“ஒன்னுமில்லைடி…”

“லக்‌ஷ்… அக்காவ நினைச்சு பீல் பண்ணுறையா…” அவள் தோழி சரியாக கேட்க.

“ஆமாம் டீ…”

“அக்காவுக்கு முக்கியமான வேலை இருக்கும் டீ… கண்டிப்பா உன்னை பார்க்க வருவாங்க. நீ பீல் பண்ணா உன் அக்காவுக்கு பிடிக்குமா.”

“ம்ஹூகும்.. பிடிக்காது…”

“அப்போ நீ பீல் பண்ணாத டீ… கொஞ்சமாச்சு சிரி டீ” அவளை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தால்.

“லக்‌ஷ்… உன்னை ஒருத்தன் பார்த்துட்டே இருக்கான். அந்த ப்ஃளூ கலர் சார்ட் போட்டுருக்கான் சட்டுனு பார்க்காதா. “ மேகவி சொல்ல மெதுவாக வேடிக்கை பார்த்துகொண்டே திரும்பினால்.

“லக்‌ஷுக்கோ அதிர்ச்சியாக இருந்தாலும், மனதிலோ “எப்போது தூரத்தில் நின்று பார்த்துவிட்டு செல்பவன் இன்று தோழியின் கண்ணுக்கே தெரியும் படி நின்றுக்கொண்டிருக்கிறான். இது மட்டும் அக்காவிற்க்கும், அக்‌ஷய்க்கு தெரிந்தால் அவ்வளவு தான் அவன் இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடுவான்.”

“என்னடி அவனையே பார்த்துட்டு நிக்கிற…” மேகவி உலுக்க.

“ஒன்னுமில்லை நாம போகலாம் க்ளாஸ்க்கு…  வா” அவளின் கையை பிடித்துகொண்டே அவனை கவனித்தும், கவனிக்காமல் சென்றால்.

“லக்‌ஷின் செயலை பார்த்தவன், புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு கிளம்பினான். அவன் மனதில் “எவ்வளவு தூரம் நீ என்னைவிட்டு விலகி போறேனு நானும் பார்க்குறேன் வடிவு.. எங்க போனாலும் இந்த ரோஹன் உன்னை பார்க்குறதை விடமாட்டேன்.” உறுதி எடுத்துகொண்டு காரை எடுத்துகொண்டு சென்றான்.

“என்ன சொல்லனும் ஹீரா” அவளை மடியில் அமர்த்திகொண்டே கேட்டான்.

“என் தங்கைய பார்க்க போகனும்…”அவள் திக்க.

“ம்ம்ம்… பார்க்க போகலாம்.” அவனையும் சேர்த்து கூறினான்.

“இல்லை… இல்லை… ரோஹித் நம்ம விஷயம் இன்னும் என் குடும்பத்துக்கோ, என் தங்கைக்கோ தெரியாது அதுனால…”

“அதுனால…” அவனும் கோவமாய் கேட்க.

“ நான் மட்டும் போய் அவளை பார்த்துட்டு இரண்டு நாளுல திரும்பிடுறேன்.” முழுதாய் கூறினால்.

“வேண்டாம்… நீ போக வேண்டாம்” அவளை எழுப்பிவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட்டான் கோவமாக.

“அவனது கோவத்தை பார்த்து திகைத்தாலும், அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவனிடம் உண்மையையும் கூறமுடியாமல், பொய்யையும் சொல்ல முடியாமல் அவள் தவித்துவிட்டால்.”

“இப்பொழுது என்ன சொல்லி சமாதானம் செய்வது அவனை. குழம்பி தவிக்க. அவனோ, ஏற்கனவே தவிரவிட்ட பொருள் இப்பொழுது தாக் கையில் சேர்ந்திருக்க. மறுபடியும் தவறவிட அவன் என்ன பைத்தியமா.”

“இனி அவள் எங்கும் செல்லக்கூடாது. முதலில் அவள் என்னிடம் சொல்லாமல் சென்று இருந்திருந்தாலும், இந்த முறை அவளை எங்கும் அனுப்பவது இல்லை. என்னைவிட்டு விலகினால் அது எனதும், அவளது உயிராக மட்டுமே இருக்கும்.” என அவன் நினைத்திருந்தான்.

“அவனை தேடி அவனது அறைக்கு சென்றால். அங்கு பால்கனியில் நின்றுகொண்டு தோட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான். அவனது தோளில் கை வைத்து அவனை திருப்பினால். அவள் வருவதை உணர்ந்திருந்தாலும், அதை உணராமல் இருந்தான்.”

“கோவமா ரோஹித்” அவனது முகத்தை கைகளில் தாங்கிக்கொண்டெ கேட்டால்.

“உன் மேல கோவம் தான், முதல் இரண்டு சந்திப்புக்கு பின்னாடி இப்போ தான் ஒன்னா இருக்கோம். ஆனா நீ என்னைவிட்டு விலகி போறதுல தான் இருக்க.”

“அன்னைக்கு ஒரு நாள் தான் என்கூட இருந்த, அடுத்த நிமிஷம் எங்க போனனு தெரியாம நான் தவிச்ச தவிப்பு உன்க்கு எப்படி தெரியும். ஈசியா என்னைவிட்டு போயிட்ட, ஆனா நான் உன்னை நினைச்சு ஏங்குனது உனக்கு தெரியாது”

“அதுகடுத்து தான் நீ விட்டு குறிப்பு எனக்கு நிம்மதியாச்சு. உன்னை தேடி போகலாம்னு நினச்சா ராஜ் என்னை தடுத்துட்டான். சரி எப்படியும் நீ என்னை தேடி வந்துடுவேனு நம்பிக்கையோட இருந்தேன் அதை மாதிரி வந்துட்ட. ஆனா இப்பவும் என்னைவிட்டு போக நினைச்சுட்ட ஆனா முதல மாதிரி சொல்லமா போகாம இப்போ என்கிட்ட சொல்லிட்டு போகப்போற. அவ்வளவு தான் வித்தியாசம்.”

“உன்கிட்ட ஒன்னுமட்டும் கேட்க்குறேன் ஹீரா.. அதுக்கு மட்டும் பதில் சொல்லு”

“என்ன ரோஹித்”

“என்னைவிட்டு பிரியுறது உனக்கு அவ்வளவு சந்தோஷமா, இல்லை என்னை தவிக்கவிடுறதுல சந்தோஷமா சொல்லுடீ” அவளை இருதோள்களை பிடித்துக்கொண்டு கேட்டான்.

“அவளோ, நான் விலகி சென்றது இவனுள் இவ்வளவு பாதிப்பா… அப்போ என் ரோஹித்த அவ்வளவு தவிக்கவிட்டேனா. என் காதலனை இப்படி ஏங்கவிட்டேனே. கடவுளே”. ஹீரா மனதில் அவனுக்காக அழுதுகொண்டே இருக்க.

“வேண்டாம் நீ அழுதா எனக்கு பிடிக்காது… உன் மனசுல என்னை நினைச்சு தான் பீல் பண்ணுறேனு தெரியும். ஆனா அதை என்கிட்ட காட்டாதே. நீ பீல் பண்ணா எனக்கு தான் ரொம்ப கஷ்ட்டமா இருக்கும் டீ அழுகாத டீ” அவள் மனதில் அவனை நினைத்து அழ, அவனும் அதை புரிந்துகொண்டு அவளின் அழகையை நிறுத்த நினைப்பது அவளுக்கு இன்னும் அவன் காதல் புரியாமலிருக்க அவள் என்ன முட்டாளா.”

“சாரி ரோஹித் உன்னை இதுக்கடுத்தும் நான் விலகி கஷ்ட்டப்படுத்துனா, அதைவிட வலி வேறெதுவும் இல்லை. இனி நான் உன்னைவிட்டு விலகி போகமாட்டேன்.  இப்போ என்ன நான் ஊருக்கு போககூடாது உன்னைவிட்டு இனி எங்கயும் போகமாட்டேன். எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும் அது எல்லாம் என் ரோஹித் காதலுக்கு முன்னாடி சின்னது தான். போகமாட்டேன் ரோஹித் நீ இப்படி பீல் பண்ணாத.” அவனின் கன்னத்தொடு கன்னம் வைத்து இழைத்துகொண்டே பேசினால்.

“ நீ எதுக்கு சாரி கேட்க்குற. நீ எனக்கு எவ்வளவு முக்கியமுனு சொன்னேன் அதுக்கு தான். நீ சாரி சொல்லி என்னை தள்ளி வைக்காத டீ. ஐ லவ் யூ ஹீரா… ஐ லவ் யூ சோ மச் டீ”  அவளை கட்டிகொண்டு சமதானம் செய்தான்.

“ம்ம்ம்… மீ டூ லவ் யூ ரோஹித்”

“காதல் மட்டுமே வாழ்க்கை இனி எங்கள் வாழ்க்கையை பிரிக்க அவளால் முடியாதே. என அவன் நினைக்க. ஒரு  பெரிய புயல் அவளை ரோஹித்துடன் இருந்து பிரிக்க சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என இருவரும் அறியாமல் தங்களது காதலில் மூழ்கி இருந்தனர்.”

“வேண்டாம் கபிலா… அந்த பொண்ணுதான் உன் வாழ்க்கையா. ஏன் அந்த பொண்ணு பின்னாடி உன் ஆட்கள வைச்சு கண்காணிக்க விடுற. அந்த பொண்ணு இல்லைனா வேற பொண்ணு அம்மா பார்க்குறேன் கபிலா. அம்மா பேச்சை கேட்கமாட்டியா” கபிலனின் அன்னை சுந்தரி அவனிடம் தன்மையாக பேச.

“அவ மேல என்ன இவ்வளவு பாசம் உங்களுக்கு. என்மேல பாசம் வைச்சா போதும், தேவையில்லாம அவ மேல வைக்காதீங்கம்மா… நீங்க எனக்கு மட்டும் தான் அம்மா. அவளுக்கு இல்லை… இனி என் வேலையில நீங்க தலையிடாதீங்க.”

“அவளுக்கு நான் அம்மா இல்லை தான். ஆனா அந்த பொண்ணுக்கும் எனக்கு…” வாய் வரை வந்த விஷயம் அவனிடம் இப்பொழுது சொன்னால் நிலை மாறிடும் என அறிந்தவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.”

“அவரின் அமைதியை பார்த்த கபிலன். ‘என்ன எதுவோ சொல்ல வந்தீங்க, முழுசா சொல்லுங்க அந்த பொண்ணுக்கும், உங்களுக்கும் என்ன உறவு சொல்லுங்கம்மா’ அவரை மேலும் சொல்லுமாறு கேட்டான்.

“ஒன்னுமில்லை கபிலா… நீ கிளம்பு. ஆனா அந்த பொண்ணு உனக்கு இல்லை இது மட்டும் என்னால தெளிவா சொல்லமுடியும்.” எனறவர் அதற்க்கு மேல் எதுவுமில்லை என்பது போல் அவர் அறைக்கு சென்றுவிட்டர்.

“அவனோ, ஹீராவுக்கு, நம்ம குடும்பத்துக்கும் என்ன உறவா இருக்கும். இதுவரைக்கு அவளுக்குனு கூட இருக்கிறது அவளோட தங்கை மட்டு தானு தெரியும். ஆனா அம்மா எதுவோ சொல்ல வந்துட்டு, பாதில சொல்லாம போயிட்டாங்க. என்னவா இருக்கும் அவன் யோசிக்க அவனது யோசனையை தடை செய்வது போல போன் அழைப்பு வந்தது.”

“அதில் பிசியாகிவிட்டான், ஆனால் அவன் மனதில் ஹீராவின் உறவில் ஏதோ உள்ளது என நினைத்துகொண்டு அவனது ஆபீஸ்க்கு கிளம்பிவிட்டான்.”

“என்ன யோசித்தும் லக்‌ஷிர்க்கு அவனது முகத்தை மறக்க முடியவில்லை, ஏன் தான் அவனை கண்டோம் என எரிச்சல், கோவம், தவிப்பு. என ஒவ்வொரு உணர்வும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது. கையில் புத்தகம் இருந்து அதில் கவனம் செலுத்த முடியவில்லை.”

“சாப்பிட அழைக்க வந்த அக்‌ஷய், அவளது கவனம் புத்தகத்தின் மீது இல்லாமல் எங்கோ இருப்பது அவன் கண்ணுக்கு தெரிந்தது. அதை பார்த்துவன். ஹீராவை நினைத்து தான் பீல் பண்ணுகிறால் என தவறாய் எண்ணிக்கொண்டு. அவளை அழைத்தான்.”

“லக்‌ஷ்… லக்‌ஷ்… அவள் முன் கையை ஆட்டி ஆட்டி அவளை கூப்பிட்டான்.”

“ஹான்… என்ன அக்‌ஷய் அண்ணா” அப்பொழுது விழித்தால்.

“என்ன… ஹீராவை பற்றி யோசித்துகொண்டு இருந்தியா..”

“ஆமா… ஆமா… அண்ணா”

”வரேன் சொல்லிருக்காங்கல… கண்டிப்பா வருவாங்க… இப்போ சாப்பிட வரீயா..” அவளை அழைத்துக்கொண்டு சாப்பிட்டு மேஜைக்கு சென்றான்.

”ம்ம்ம்.. சரிங்கண்ணா.”

“ நல்லவேளை… நான் அவனை பற்றி நினைத்துகொண்டிருந்தேன் என அக்‌ஷய்க்கு தெரிந்தது நான் அவ்வளோ தான். எண்ணிக்கொண்டே சாப்பிட அமர்ந்தால்.

“ நல்லா சாப்பிடு லக்‌ஷ்… நீ சாப்பிடுறது ஏனோ தானோனு இருக்கு, வயித்துக்கு தான் சாப்பிடனும். இப்படி கொரிக்க கூடாது. இந்தா சப்பாத்தி ரெண்டு வைச்சுக்கோ, இந்தா உனக்கு பிடிச்ச உருளக்கிழங்கு குருமா வைச்சுயிருக்கேன்… இன்னும் ஒரு சப்பாத்தி வைச்சு சாப்பிடுமா…”

“சரிங்கண்ணி… அதுக்குனு இவ்வளவா… போதுங்கண்ணி” அவள் தடுக்க தடுக்க வைத்தால்.

“என்னங்க உங்களுக்கு தனியா சொல்லனுமா… சாப்பிடுற இடத்துல போன் பார்க்காதீங்கனு எத்தன டைம் சொல்லிருக்கேன். போஃன இங்க கொடுங்க” அவனின் கையில் இருந்த போஃனை வாங்கினால்.

“முக்கியமான போஃன் கால் டீ..”

“அதுக்குனு இங்கயுமா… முதல சாப்பிடுங்க அடுத்து போஃன் பாருங்க.” அவனை அடிக்கினால்.

“அவர்களை பார்த்து சின்ன சிரிப்புடன், சாப்பிட்டுவிட்டு எழுந்தால் லக்‌ஷ்.”

“அவள் அந்தப்பக்கம் போனதும், ரோகினியின் கையை பிடித்து அருகில் இழுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.” அவனின் எதிர்ப்பாராத செயலில் சற்று அதிர்ந்தாலும் அவனின் செய்கையில் புன்னைகையுடன் அவன் கொடுத்தை வாங்க்கிகொண்டு சென்றால்.”

“லக்‌ஷ் இந்தா பால் குடிச்சிட்டு தூங்கு…,  நாளைக்கு என்ன டிபன் பண்ணட்டும் உனக்கு”

“உங்களுக்கு பிடிச்சதே பண்ணுங்க அண்ணி, நாளைக்கு எக்ஸாம் தான் அதுனால ஆஃப்டர்னூன் வந்திருவேன்.”

“சரிமா… தூங்கு காலையில படிச்சிக்கலாம்…” அவள் தூங்குவதுக்கு உதவி செய்துவிட்டு அவள் அறையில் இருந்து வெளிவந்தால்.

“என்ன தூங்கிட்டாலா லக்‌ஷ்…”

“ம்ம்ம்… நீங்க இன்னும் தூங்க இருக்கீங்க”

“ஹீராக்கிட்ட இருந்து போஃன் வரும் அதான் பார்த்துட்டே இருக்கேன்.”

“பாவம் அவ… எங்க எங்க அலைவானு தெரியல… அவளை கஷ்ட்டப்படுத்தி பார்க்குரதுல இந்த கிழவிக்கு என்ன சந்தோஷோமோ. நான் மட்டும் ஹீரா இடத்துல இருந்தேன் இன்னேரம் அந்த கிழவிக்கு சங்கு தான்.” ரோகினி கொலைவெறியுடன் பேச.

“அவள் பேசுவதை பார்த்து, அக்‌ஷய்க்கு, சிரிப்பு வந்தாலும்… அதை அவள் முன் காட்டாமல் அவளிடம் பேசினான். ‘இப்படி பேசுனது மட்டும் ஹீராவுக்கு தெரிஞ்சது என் சீட்டு கிழிஞ்சிரும் டீ…”

“கிழிஞ்சா கிழ்ஞ்சிட்டு போகட்டும்ங்க… அதுக்காக என்னால ஹீராவுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு குறைஞ்சுட்டும்மா என்ன.”

“என்ன பண்ண முடியும் ரோகினி… இதுல நாம தலையிடக்கூடாது… நம்மகிட்ட அவங்க லக்‌ஷ் ஓப்படைச்சிட்டு போயிருக்காங்க, அதை மட்டும் தான் நாம பார்க்கனும்.”

“ம்க்கும்…  நான் எதுவும் பேசலைங்க, ஆனா ஹீராவோட வாழ்க்கை இப்படியே போயிடுமோனு எனக்கு தான் பயமா இருக்கு.”

“கடவுள்னு ஒருத்தர் இருந்தா ஹீராவுக்கு எப்பவும் துணை இருப்பாரு, நீ அதைப்பற்றி கவலைப்படாம இரு…” அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தான்.

“யாருக்கும் தெரியும் இனி வாழ்க்கை  ஹீராவுக்கு மிகப்பெரிய சோதனை வைத்திருப்பது. சோதனை கடந்து சாதனை படைப்பது தான் வாழ்க்கை. அதில் ஹீராவின் பங்கு எந்தளவு இருக்க போகிறது என தெரியவில்லை.”

   தொடரும்…………………

 

Advertisement