Advertisement

          என்னை தந்திடுவேன் 2

 

”அவனை வழியனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவளது போனுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பார்த்தவள், அந்த அழைப்பை ஏற்கவா, வேண்டாம என்ற யோசனையில் இருந்தாள். ஆனால் அந்த அழைப்பு நின்றுவிட்டது. மீண்டும் அதே அழைப்பு. இந்த முறை போனை அட்டென் செய்து காதில் வைத்தாள்.”

“ஹீரா… ஐ அம் அக்‌ஷய்”

”அவள் பக்கமோ, மிகவும் அமைதியாய் இருந்தது”

“மீண்டும் அவன் பேச ஆரம்பித்தான்….. ‘ஹீரா, நீ எங்க இருக்கனு எனக்கு தெரியும்’

“ஹீராவோ, எதுவும் பேசாமல், அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை மட்டும் கேட்க நினைத்தால்”

“ஹீரா… நான் எல்லாரையும் சமாளிச்சுடுவேன் ஆனா, உன் லக்‌ஷனாவ என்னால கொஞ்சமும் சமாளிக்க முடியலை ஹீரா… அவ உன்னை தான் தேடுறா.”

“இப்போ கொஞ்சம் அடம்பிடிக்கவும் ஆரம்பிசுட்டா, ஹீரா.” அவன்         லக்‌ஷனாவை பற்றி பேசியதும், அவள் அமைதியை உடைத்தது.

“என்னாச்சு லக்‌ஷுக்கு, ஏன் அடம்பிடிக்குறா.” அவள் கேட்க.

“அவளுக்கு, உன்னை பார்க்கனுமா. அதுவும் இப்பவே”

“எப்படி முடியும், நான் வர்ரதுக்கு இன்னும் ஒன் மன்த் இருக்கு அக்‌ஷய். என்னால இப்போ வரமுடியாது, அதுவரை அவளை சமாளிச்சு பார்த்துக்கோ”

“சரி, ஆனா அவகிட்டவாது பேசு ஹீரா”

“அவகிட்ட போனை கொடு அக்‌ஷய்” அவள் அனுமதுயளித்ததும், அவன் அவளிடம் போனை கொடுத்தான்.

“லக்‌ஷனா போனை வாங்கியது, ‘எங்க போனீங்க, ஏன் இன்னும் திரும்பி வரலை, என்னைவிட்டு இப்போ அதிகமா பிரிஞ்சு போறீங்க நீங்க, உங்களை பார்க்கனும் போல இருக்கு, வீட்டுக்கு வாங்க.” அழுதுகொண்டே பேச.

“அவள் அழுகையை கேட்க முடியமால், ஹீராவின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடியத் துவங்கியது. அழுக இது நேரமில்லை என்றுணர்ந்து கொண்டு, லக்‌ஷனாவிடம் பேச ஆரம்பித்தால்”

“லக்‌ஷ், நான் வர்ரதுக்கு இன்னும் ஒன் மன்த் ஆகும், சமத்தா காலேஜ் போகனும், அக்‌ஷய போட்டு படுத்தக்கூடாது. அவங்க என்ன சொல்லுறாங்களோ அதை தான் கேட்கனும். உன் காலேஜ் செமஸ்டர்ல இந்த இயர் நீ கண்டிப்பா கோல்டு மெடல் வாங்கனும், அடுத்து நீ எம்,எஸ் படிக்க அமெரிக்க போகனும், அதை ஞாபகம் வச்சுட்டு படிக்கனும். புரியுதா” என ஒரு அன்னையை போல் அவளை கண்டித்தால்.

“சரிங்க அக்கா, ஆனா உங்களை பார்க்கனும்”

“ நீ கோல்டுமெடல் வாங்கும் போது கண்டிப்பா உன் பக்கதுல இருப்பேன், அதுவரை நான் இங்க இருக்கனும் லக்‌ஷ்”

“அப்போ, நீங்க அடுத்த மாசமும் வரமாட்டீங்களா.. போங்க பேசாதீங்க.” அவளிடம் கோவப்பட்டுக்கொண்டு, போனை அக்‌ஷயிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.

“லக்‌ஷ்… லக்‌ஷ் .. இருக்கியா, ஹலோ..” ஹீரா பேச..

“அவ கோவப்பட்டு போனை என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா ஹீரா..” அவன் பேசினான்.

“ஓகே… சரி அக்‌ஷய்.. அவளை பார்த்துக்கோ. எனக்காக. ”

“பா… பா… பாட்டி என்ன பண்ணுறாங்க அக்‌ஷய். எப்படி இருக்காங்க.”

“நான் லக்‌ஷ பத்திரமா பார்த்துகிறேன்,” “

”ம்ம்ம்.. நல்லா இருக்காங்க…, உன்னை பற்றி தான் கேட்டாங்க ஆனா, அதுல கொஞ்சமும் பாசம் இல்லை ஹீரா.”

“தெரிஞ்ச கதை தானே அக்‌ஷய் விடுங்க. நான் வர்ர வரைக்கும், கம்பெனிக்கு ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க. எதாவது முக்கியமான விஷயம் மட்டுனா எனக்கு போன் பண்ணுங்க, சரியா”

“ஒகே, ஹீரா. நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீயும் முடிஞ்சா லக்‌ஷ வந்து பார்த்துட்டுப்போ ஹீரா. அவ ரொம்ப எதிர் பார்க்குறா.” அவளுக்காய் பேசினான்.

“பார்க்குறேன் அக்‌ஷய். நீங்க வேலையை பாருங்க.” அவனுடன் பேசிமுடித்தால்.

“ஹீரா, பேசிமுடித்ததும், மீண்டும் அவளுக்கு போன் வந்தது. இப்பொழுது அழைத்தது, அவள் காதல் மன்னவன் ரோஹித். மெல்லிய சிரிப்புடன் அதை ஏற்றால்.”

“என்ன ஹீரா, அரை மணி நேரமா உனக்கு போன் பண்ணுறேன். அப்படி யாரு கூடா பேசிட்டு இருந்த.”

“இல்லை.. ரோஹித்.. முக்கியமான போன் கால்.. அதான். உன் போனை எடுக்க முடியல.” அவள் திக்கிக்கொண்டே பேசினால்.

“சரி, நான் ஆபீஸ் வந்துட்டேன், இன்னும் கொஞ்சம் நேரத்துல மீட்டிங்க் ஆராம்பிச்சுடும், போன் ஆஃப்ல இருக்கும். இதை சொல்ல தான் உன்னை கூப்பிட்டேன் ஹீரா.”

“ம்ம்ம்.. சரி ரோஹித். ஆல் தி பெஸ்ட் இன் யுவர் மீட்டிங்க்” அவனுக்கு வாழ்த்து கூறினால்.

“தாங்கஸ் டீ, சீக்கிரம் வந்திருரேன். ஓகே பாய்”

“ம்ம்.. ஒகே ரோஹித் பாய்.”அவனுடன் பேசிமுடித்து போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டால்.

“ரோஹித்துக்கு பிடித்த லஞ்ச் செய்து வைத்துவிட்டு, அவளது லேப்டாப்பை எடுத்துகொண்டு கார்டன் பக்கம் சென்று அமர்ந்துகொண்டால்.”

“முக்கியமான ப்ரான்ஞ்ச்களின் கணக்குகள் அவளின் பார்வைக்கு வந்தது. அதை எல்லாம் சரியாக உள்ளாதா என்று பார்த்துகொண்டு இருந்தால். சரியான கணக்குகளை, தனது வக்கீலிடமும், ஆடிட்டரிடமும் மெயிலில்  பேசிகொண்டே அதன் கணக்குகளை ஒப்படைத்தால்.”

”எல்லாம் வேலைகளையும் முடித்து லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு எழுந்தால்.  அவள் பக்கதில் இருக்கும் ரோஜா செடியின் அருகில் சென்றால். அதில் பூத்திருந்த மிரண்டா கலர் ரோஜாவை பார்த்துகொண்டே இருந்தவள், ரோஹித்தின் இரண்டாம் சந்திப்பு நினைவுக்கு வந்தது.”

“அவன் காதல் சொன்னது அதிர்ச்சியாய் இருந்தாலும், அவளுள் ஒருவித உணர்வு ரோஹித்துடன் இருந்தது. அதனால் அவன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால். இடையில் அவன் தன்னை கடற்கரைக்கு வரும்போது ரசித்துப்பார்த்து இருக்கிறான் என்பதையும் அறிந்தால்.”

“அவனை மீண்டும் சந்திக்கும் போது அவனிடம் பதில் சொல்வதை பற்றி தான் ஒவ்வொரு நாளும் யோசித்திக்கொண்டிருந்தால். அவனை பற்றியும், அவன் பின்புலத்தை பற்றியும், அவளுக்கு தெரியாது. அவள் நினைத்திருந்தால் அவனைப்பற்றி முழுவிபரமும் அவள் கையில் இருந்திருக்கும், ஆனால் அதை அவள் விருப்பவில்லை.”

“கிட்டதட்ட அவனை சந்தித்து ஆறு மாதம் கடந்திருந்தது.அந்த ஆறு மாதமும் அவனை தான் நினைத்திருந்தால்”

“அவன் சிந்தனையில் இருந்தவளை கலைத்தான் அக்‌ஷய்.”

“என்ன ஹீரா ரொம்ப யோசிக்குற மாதிரி இருக்கு, யாரை பற்றி இவ்வளவு யோசிக்குறேங்க.”

“கம்பெனி விஷயமா தான் யோசிச்சுட்டு இருந்தேன் அக்‌ஷய். வேறென்னும் இல்லை”

“அப்படியா….,என அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருக்க.”

“அவளோ, இவன் கண்டுகொண்டானோ என நினைத்தால்… அக்‌ஷய் எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க.”

“பொய் நல்லவே சொல்லுறேங்க ஹீரா” அவளை கண்டுகொண்டான்.

“இல்லை அக்‌ஷய்… அது வந்து,” அவள் திணுறுவதை பார்த்த அக்‌ஷய்.

“சரி சொல்லுறப்போ சொல்லுங்க, இன்னைக்கு அந்த சிவம் கம்பெனியோட பிராஜெக்ட் இன்னையோட முடியுது, என் டீம் பிரஜெக்ட் முடிச்சு கொடுத்துட்டாங்க ஹீரா. அதோட கம்பிளீட் பைஃல் இது தான். அப்புறம் அவங்களோட பிராஜெக்ட் முடியிறதுனால ஒரு சின்ன லஞ்ச் பார்ட்டி இருக்கு ஹோட்டல்ல.” கம்பெனி விஷயத்தில் தாவினான்.

“அவளும், கம்பெனியை பற்றி பேச்சை ஆரம்பித்ததும், அதில் கவனமானல். அப்பொழுது ரோஹித்தின் நினைவு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அன்றே அவனை பார்க்க போகிறோம் என நினைக்கவில்லை ”

“ஹோட்டலில் அக்‌ஷய் உடன், லஞ்சில் இருக்கும் போது தான், எதிர்பாரமல் ரோஹித்தை சந்தித்தால்”

“ அடுத்த ப்ரஜெக்டுக்காக, அக்‌ஷயுடன் சாப்பிட்டுகொண்டே பேசிகொண்டிருந்தால், ‘ஹீரா இந்த நீயூ பிரஜெக்ட்டுக்காக, நான் செலக்ட் பண்ணிருந்த மெம்பர்ஸ் போடலமா, இல்லை நீங்க செலக்ட் பண்ணிருந்த மெம்பர்ஸ போடுறீங்களா.”

“ நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த ப்ராஜெக்ட்டுக்கு கமிட் ஆகியிருக்கோம் அக்‌ஷய், அதனால நாம செலக்ட் செய்திருந்த மெம்பர்ஸ் சேர்த்தே போடலாம்,”

“ஓகே ஹீரா… உங்களுக்கு அடுத்த அப்பாயின்மெண்ட், அவளுக்கு அடுத்த வேலைக்கான நேரத்தை சொல்லு போது தான், ரோஹித் வந்தான்.”

“தன் அருகில் ஒருவன் நிற்பதை அறிந்து நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றால்ச்”

“அக்‌ஷயோ, எதற்க்காக ஹீரா எழுந்து நிற்க்கிறால், யாரைப்பார்த்து, என அவனும் அவள் பார்க்கு திசையில் பார்த்தான்.”

“எங்க டீ போனா, இத்தனை நாள், உன்னை காணமா நான் அலைஞ்சு எங்கெங்க எல்லாம் திரிஞ்சேன் தெரியுமா, பைத்தியம் மாதிரி என்னை அலையவச்சுட்டேல, உன்னை…” அவளை காணாத இந்த ஆறு மாத தவிப்பை அவளை கட்டியணைத்து தீர்த்துக்கொண்டான்.

“அந்த இறுக்கமான, அணைப்பு அவனின் நிலையை எடுத்துக்கூறியது. பதினைந்து நிமிடம் அணைப்பு அவனுக்கு தேவையாய் இருந்தது. அவளும், அவனின் அணைப்பில் சுகமாய் இருந்தால்.

“ஒரு நிலையில் இருவரையும் நினைவுக்கு கொண்டுவந்தது அக்‌ஷயின் அழைப்பு”

“ ஹீரா, சார உக்காரச்சொல்லுங்க. இன்னும் எவ்வள்வு நேரம் நிற்கப்போறீங்க” இருவரையும் அமரச்சொன்னான்.

“சாரி, அவளை பார்த்த உடனே, எமோஸனல் ஆகிட்டேன். தொலைஞ்ச பொருள் கிடைச்ச மாதிரி இருக்குது என்  நிலைமை.” அக்‌ஷையிடம் அவன் நிலையை கூறினான்.

“பார்த்தாலே தெரியுது, ஐயம் அக்‌ஷய், மே…” என ஆரம்பித்திருப்பான் அதற்க்குள், ஹீரா இடையிட்டால்.

“ நான் அவரோட பிஏ, அவரு கம்பெனில தான் வேலை பார்க்குறேன். முக்கியமான மீட்டிங்க் அதுக்கு தான் இங்க வந்தோம். இல்லை சார்.”      அக்‌ஷயை பார்த்துக்கொண்டே ரோஹித்திடம் பேசினால்.

“அவளின் பார்வையும் பேச்சையும் புரிந்துகொண்ட அக்‌ஷய், அவள் சொல்வது உண்மை போல அவளுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தான்.”

”ஐயம், ரோஹித்.., ஏ.ஆர்.எம் இண்டஸ்ட்ரீஸோட எம்.டி.” என அவன் அறிமுகப்படுத்திகொண்டான்”

“ஓஓ.. கேள்விப்பட்டுயிருக்கிறேன் ரோஹித்”

“இங்க என்ன பண்ணுறீங்க, சாப்பிட வந்தீங்களா” ஹீரா, ரோஹித்தை பார்த்து கேட்க.

“என் கம்பெனி வேலையா வந்தேன், அப்போ தான் உன்னை பார்த்தேன்.” அவன் பாதி சொல்லவதும், தயங்குவதும் இருந்தான். இதை பார்த்த அக்‌ஷய் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அங்கிருந்து புற்ப்பட்டான்.

“ஓகே, ஹீரா நீ ரோஹித்கூட பேசிட்டு வாங்க, நான் முன்னாடி கம்பெனிக்கு போறேன். பாய் ரோஹித்” இருவரிடமும் விடைபெற்று கிளம்பினான்.”

“அவன் கிளம்பின அடுத்த நொடி, ஹீராவின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டு அவளின் கையை எடுது தனக்குள் வைத்துக்கொண்டு, ‘எங்க போன, உன் பேர்கூட தெரியாம இருந்துட்டேன், உன்னை காணாம நான் தவிச்சுட்டேன் டீ” அவன் உருக்கமாய் பேச. அந்த பேச்சில் அவன் மீது கொண்டுள்ள காதல் அவள் கண்ணில் தெரிய ஆரம்பித்தது.”

“என் பெயர் ஹீராஜெகதீஸ்வர் ரோஹித்”அவனுக்கு தன் பெயரை கூறினால்.

“உலகத்துல லவ் சொன்னப்பின்னாடி, பேரு கேட்க்குற முதல் ஆள் நான் தான் டி, என் பேரு “ரோஹித்செல்வராஜ்”. இருவரும் காதல் சொன்ன பின்பு தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

“ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் உன்னை, என்கூட நீ இருந்தாலே போதும் டி, என்னைவிட்டு இனி எங்கயும் போககூடாது சரியா.”அவன் பேசிகொண்டிருக்க. அவளோ அவன் முகத்தையும், தான் இல்லாமல் தவித்த அவனது வேதனையும் கேட்டுக்கொண்டிருந்தால்.

“இந்தா.. இது என் போன் நம்பர் இனி தினமும் எனக்கு போன் பண்ணு, நாம பேசலாம்”. என அவளின் போனில் அவன் நம்பரை பதித்துவிட்டு, அவளது போனில் இருந்து அவனது போனுக்கு கால் செய்தான்.

“ இப்போவாது என்னை காதலிக்குறேனு சொல்லு டி”

“காதல் இல்லாமையா உங்களை என் பக்கத்துலையும், என் கை பிடிக்கவும் அனுமதிச்சுருக்கேன்.”

“ஹே அப்போ… என்னை… என்னை… காதலிக்க ஆரம்பிச்சட்டயா… எப்போ இருந்து என்மேல காதல் சொல்லு டி.. சொல்லு டீ.” அவன் கேட்க.

“இந்த ஆறு மாசம் எப்படி நீங்க, நான் இல்லாம, தவிச்சேங்களோ… அதைவிட அதிகமா நான் தவிச்சேன் ரோஹித்.. பகல் முழுதும் வேலை இருந்தாலும், என் இரவு முழுக்க உங்க நினைப்பு தான்.. உங்களை நினைச்சே அந்த இரவும் எனக்கு தூங்காத இரவு தான். அப்போ தான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன்” அவளின் காதல் உணர்ந்த தருணத்தை சொன்னால்.

“ உங்களை பார்த்துட்டு போன பின்னாடி, எனக்கு வேற பிரான்ஞ்ல வேலை புது அசைமெண்ட்க்கு என்னை போட்டுட்டாங்க அதான் உங்களை பார்க்க முடியலை. இதோ இப்போ தான் அந்த வேலையை முடிச்சுட்டு இன்னைக்கு தான் வந்தேன். ஆனா உங்களை பார்ப்பேனு கொஞ்சமும் நினைக்கலை” அவனுக்கு தன் நிலையை எக்காரணம் கொண்டு தெரியக்கூடாது என்று அவனிடம் மறைத்தால்.

“சரி போனது போகட்டும், இனியாவது என்னை பிரிஞ்சு போகாதே ஹீரா. அவளின் கையை அழுத்திப்பிடித்தான். அதில் இனி பிரிவு இல்லை என்பது போல் இருந்தது.”

“அங்கிருந்து அவர்களது காதல் பயணம் ஆரம்பித்தது. ரோஹித் அவளை அழைத்துகொண்டு அவன் வாங்கிய புது வீட்டிற்க்கு வந்தான்.”

“யார் வீடு ரோஹித்”

” நம்ம வீடு ஹீரா.. உள்ள வா” அவளின் தோளை அணைத்துகொண்டு சென்றான்.

“பிடிச்சிருக்கா..” அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

“ரொம்ப அழகா இருக்கு வீடு, ரொம்ப ரசிச்சு கட்டிருக்க ரோஹித்”

“உன்னை நினைச்சு தான், இந்த வீடு கட்டுனேன் ஹீரா.” அவளை பார்த்து சொன்னான்.

“என்மேல அவ்வளவு காதலா ரோஹித்”

“ம்ம்ம்… ரொம்ப எப்படி சொல்லுறது..” அவன் யோசிக்க, கணமும் தயங்காமல் அவளின் கையை இழுத்து, அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட்டான். அந்த முத்தத்தில் அதிர்ந்தாலும் அவனின் காதலை அதிலும் உணர்ந்துகொண்டால்.”

“இதழில் ஆரம்பித்த கவிதையை, ஒவ்வொரு படியாக முன்னேறினான். ஆனால் அவளின் சம்மதம் கிடைக்கமால் அடுத்த நிலை போகாமல் அவளை தள்ளி நிறுத்திவிட்டு வெளியே தோட்டத்துப்பக்கம் சென்று தலை கோதிக்கொண்டான்.”

“அவன் முன்னேறுவது தெரிந்தும், அவள் அமைதியாக இருந்தால். ஆனால் அவன் திடீரென்று தள்ளி நிற்க்க வைத்துவிட்டு அவன் வெளியே சென்றதும் அவளுக்கு என்ன மாதிரி உணர்வு ஏற்ப்பட்டது என தெரியவில்லை. அவனின் மனநிலையை அறிய அவனை தேடி சென்றால்.”

“அவனின் தோள் மீது கை வைத்ததும் அவன் திரும்பி அவளை பார்த்தான். ‘சாரி ஹீரா…. நீ கேட்டவுனே என் கண்ட்ரோல் இல்லாம நடந்துகிட்டேன். சாரிடி… “ அவன் மன்னிப்பு வேண்டினான்.

“ரோஹித் நான் ஒன்னு சொல்லவா”

“என்ன.” அவன் பார்க்க.

“என்னை எடுத்துக்கோ, உனக்கு என்மேல எவ்வளவு காதல் இருக்குனு இப்போ காட்டினயே, அதே மாதிரி எனக்கு உன்மேல எவ்வளவு காதல்னு நான் காட்டனும். அதுக்கு என்னை எடுத்துக்கோ ரோஹித்.. ம்ம்ம் எடுத்துக்கோ.” இருகைகளையும் விரித்து வா என்பது போல் அவள் அழைக்க அவனோ நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு அவர்களின் அறைக்கு சென்றான்.

“மெத்தையில் இறக்கிவிட்டதும், அவன்  அவளை பார்த்து. ‘உன் காதலை, உன்னை தொட்டு தான் நான் புரிஞ்சுகனுமுனு  இல்லை ஹீரா. எப்போ உன்னை என் கையில எடுத்துக்க சொன்னியோ அப்போவே உன் காதலை நான் புரிஞ்சுகிட்டேன் டி” அவளை பார்த்து சொல்லிவிட்டு  நகர முற்ப்பட.

“அவளோ, அவனின் டையை பிடித்து இழுத்தால். அதில் தடுமாறி அவள் கழுத்தில் அவன் முகம் பதியும் மாறு விழுந்தான். அவளின் வாசனையை கழுத்தில்  நுகர்ந்தான்”

“பிளீஸ் ரோஹித், என்னை ஏங்க வைக்காத…  நீ எனக்கு வேணும் ரோஹித்.” அவள் வெளிப்படையா சொல்ல.

“அவனோ, தாமதிக்காமல் அவளின் மீது அவனின் காதலை உணர வைத்தான். கழுத்தில் ஒவ்வொரு நிமிடமும் முத்தம் பதித்தான். காதலின் ஆசைகளை இருவரும் பரிமாறிகொண்டார்கள்.”

“அவனது ஒவ்வொரு செய்கையும் அவளுக்கு ஆணித்தரமாக பதிந்துவிட்டது. மென்மையாக அவளை காதலால் கையாண்டான். அன்புக்கு ஏங்கிகொண்டிருந்த ஹீராவின் மனதில் இதோ அன்பு காதலனாய் அவன் உணர்த்திகொண்டிருக்கும் ரோஹித்தை உயிராக நேசித்தால். மனைவியாய் அவனுக்கு தன்னை கொடுக்க எண்ணிய மனம் இன்றோ காதலியாய் அவனுக்கு கொடுத்தால் அவளின் வாழ்க்கையை.”

“காதலுக்கு மட்டுமே அடிமையாய் இருந்தவன், அவளின் மனதை அறிந்து அவளின் மீதே அடிமையாகிவிட்டான். காதலியை காணாமல் தவித்த இவனின் இதயம் இதோ, அவளின் ஏக்கத்தை முழுதாக போக்கி கொண்டிருக்கிறான்.”

“ஒரு நிலையில் அவன், அவளிடமிருந்து விலகும் போது, ‘அவளோ அவனை விலகவிடாமல் ஆக்கிரமித்தால். அவனோ  அவள் முகத்தில் தெரிந்த காதலின் அன்பு இன்னும் அதிகமாக்கியது. விடிய, விடிய நடந்த காதல் தம்பதியரின் கூடல் பகலவனின் ஆதிக்கத்தால் முடிவுற்றது.”

“களைத்து உறங்கிகொண்டிருந்த ரோஹித்தின் முகத்தை பார்த்துகொண்டிருந்தால். அப்போது அவனின் அழகையும் சேர்த்து வர்ணித்துக்கொண்டிருந்தால்.”

“அவனது நிறமே வெள்ளை தான், மீசையும் தாடியும் சுத்தமாக இல்லை, கண்ணகள் கூர்மையாகவும், முடிகள் பஞ்சு போல் இருந்தது. உடலோ ஒல்லியாய், கொஞ்சம் ஜிம் பாடியாய் இருந்தான் மொத்ததில் ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் போல் இருந்தான்.”

“முதல் முதலா நான் ஆசைப்பட்ட ஒன்னுனா அது நீ தான் ரோஹித். என்னைக்கும் உன்னைவிட்டு பிரிய மாட்டேன். ஆனா சில கடமைகளை நான் முடிச்ச பின்னாடி தான் உன்கிட்ட வரமுடியும் அதுவரை எனக்காக காத்திருக்கனும் சரியா” அவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவன் காதைல் மெதுவாய் பேசினால்.”

“ஏன்னென்றால், அடுத்த நிமிடம் அவள் அவனைவிட்டு பிரிவதுனால். இதை அறியாமல் அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.”

“என்ன டி மலரும் நினைவுகளா” என பின்னிருந்து கட்டியணைத்துகொண்டான்.

“அவனது திடீர் அணைப்பில், அதிர்ந்தாலும் அவனது பேச்சில் பழைய நினைவில் இருந்து வெளிவந்தால்.

 

                                           தொடரும்…………………

 

Advertisement