Advertisement

               காதல் தோழா 6

”மல்லி, ரோஜா பூவின் வாசம் அந்த அறை முழுவது இருந்தது. கட்டிலின் பக்கத்தில் பழம்,இனிப்பு பலகாரம் இருந்தது. மெத்தையில் ரோஜா பூவினாலே காதல் புறாக்கள்  போன்று அலங்காரம் செய்திருந்தது. அதை எல்லாம் ஒருவித வெறுப்புடன் பார்த்துக்கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.” ரகு.

“எல்லா பொண்ணுக்கும் வர்ர முதல் இரவு தான், இதுல பயப்பட எதுவும் இல்லை கண்ணம்மா, மாப்பிள்ளை உன்னை அன்பா பார்த்துப்பாங்க. நீயும் அனுசரனையா நடந்துக்கோடா..” ஹேத்துவின் தலையில் ஒரு கூடை மல்லிகை பூ வைத்து அலங்காரம் செய்துகொண்டே அவளிடம் முதல் இரவுக்கான செய்முறையை அவர் பாணியில் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்.”

“ஆனால் அவளோ, அதையெல்லாம், கேட்க்கும் அளவிற்க்கு அவளின் நினைவு இங்கு இல்லை.”

“எல்லாம் முடிந்து அவளை இரண்டு முறை உலுக்கிய பின் தான் நிகழ்வுக்கு திரும்பினால். ‘என்ன ஹேத்துமா… அத்தை பேசிட்டு இருக்கேன் நீ எங்க கவனத்தை வைச்சுருந்த.’

“ஒன்னுமில்லை அத்தை…”

“சரி இந்தா, பால் சொம்பு… உன் அத்தை, மாமா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போ…” அவளை வெளியில் அனுப்ப.

“அவளும், அவர் சொல்லியது மறவாமல் செய்துவிட்டு, ரகுவின் அறையின் முன் வந்து நின்றால்.”

“கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால்”

“அவனோ, கதவு திறப்பதும், அவள் வருகையை அவளின் கொலுசின் ஒலியில் அறிந்துகொண்டான். ஆனால் திரும்பவில்லை”

“டேபிளில் பால்சொம்பை வைத்துவிட்டு திரும்பகையில் அவளின் எதிரில் வந்து நின்றான்.”

“திடீரென அவள் முன், அவன் நின்றது அவளது தைரியம் சுத்தமாக காணாமல் போனது. அவன் நிற்ப்பதை பார்வத்தள் ஒர் அடி பின்னடைந்தால்” நொடியும் தாமதிக்காமல் அவன்,

“ நான் ஒரு பொண்ணை காதலிச்சேன்… அவன் நிறுத்த” அதிரடியாக ஆரம்பித்தான்.

“அவளோ, நானும் ஒருத்தரை விரும்பினேன்…” உனக்கு சளைத்தவள் நானும் இல்லை எனும் வகையில் அவளும் ஆரம்பித்தால்

“கிட்டதட்ட, இரண்டு வருட காதல் என்னது”

“ என் காதல் மூனு வருஷம்”

“இப்போவும் அவளை தான் நினைச்சுட்டு தான் இருக்கேன்… ஆனா அவளை நினைச்சுட்டு உன் கழுத்துல நான் தாலிக்கட்டலை.” அவன் மனதை மறைக்காமல் கூறினான்.

“ நானும் அவரை நினைச்சுட்டு நீங்க கட்டுன தாலியை ஏத்துக்கலை” அவளும் உண்மையை கூறினால்.

“அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை கரெக்ட் தான…” அவன் மகிழ்ச்சியாய் கேட்க.

“அப்போ உங்களுக்கும், பிடிக்காத கல்யாணம்மா…” அவளும், மகிழ்ச்சியில் கேட்டால்.

“ஹே… நான் கூட உன்கிட்ட சண்டை போடனும்னு நினைச்சேன், பிடிக்காதா கல்யாணத்துல நான், உன்னை கட்டாயப்படுத்தகூடாதுனு உண்மைய சொல்லனும்னு இருந்தேன்.”

“ஆனா உனக்கும், பிடிக்காத கல்யாணமுனு சொல்லிட்ட. இப்போ என்ன பண்ணலாம்” சர்வ சாதரணமாக, அவளுடன் பழகி பல வருடம் ஆகியது போல அவன் இயல்பாய் பேசினான்.

“ஹப்பா, இப்போ தான் நிம்மதியா இருக்கு… நானும் உங்க கூட இந்த முதல் இரவு நடக்காதுனு சண்டை போடனும்முனு நினைச்சேன். என் மனசில்ல இருக்கிறதை சொல்லனும் நினைச்சேன்.” அவளும் இயல்பாய் பேசினால்.

“ஒகே… இப்போ நம்ம இண்ட்ரோ, நான் ரகுநாத், சொந்தமா கார் ஷோரூம் வச்சுயிருக்கேன். நீ” அவன் கேட்க.

“ நான் ஹேத்தான்சிகா… எல்லாரும் ஹேத்துனு கூப்பிடுவாங்க நீங்களும், அப்படியே கூப்பிடுங்க… எம்.எஸ்.சி முடிச்சிருக்கேன்.”

“ஒகே, இப்போ என்ன செய்யலாம் ஹேத்து… அடுத்த நாள் நாம நல்ல கணவன், மனைவியா நடிக்க ஆரம்பிக்கனும்.. என்ன பண்ணலாம்” கூலாக கேட்டான்.

“ எல்லார் முன்னாடியும், நல்லா கணவன், மனைவியா நடிக்கலாம். ஆனா அவங்களுக்கு சந்தேகம் வரமா பார்த்துக்கனும்… அதுக்கு நீங்களும் பொறுப்பு.”

“ஒகே… ஆனா பெரியவங்க கண்ணுக்கு நாம நடிக்குறோம்னு தெரிஞ்சா நம்ம இரண்டு பேரும் அவ்வளவு தான்”

“ஆமாம்…”

“இப்போதைக்கு, அவங்க கண்ணுக்கு நம்ம ஃப்ர்ஸ்ட் நைட் முடிஞ்சதா காட்டனும்.”

“என்னது….” அவள் அதிர.

“இல்லை ஹேத்து, நான் சொல்லவர்றது… இந்த பூவெல்லாம் கசங்கி, இந்த பால் செம்புல இருக்குற பால் காலியகனும், முக்கியமா, இந்த பழம். அப்புறம் உன் தலையில் இருக்குற பூ எல்லாம் கொஞ்சம் கசங்குனதா இருந்தா தான் நம்ம சந்தோஷமா இருக்கோம்னு நினைப்பாங்க.”

“ஓ…….. அப்படியா ஒரு நிமிஷம்…” அவள் கட்டில் உள்ள பூக்கள் அனைத்தையும், அவளின் கைகளால் கசக்கி எடுத்துவிட்டு, அவளின் தலையில் இருந்த ஒரு கூடை மல்லியை ஒரு நிமிடத்தில் நாறு நாறாக உதிர்த்தால்.”

“இந்த பால், பழம் மட்டும் நீங்களே காலி பண்ணிடுங்க என்னால இவ்வளவையும் சாப்பிட முடியாது…” எல்லாவற்றையும் முடித்துவிட்டு இறுதியாய் அவனிடம் அதை தள்ளிவிட்டால்.

“ஒகே சூயர்… ஆனா அளவா தான் சாப்பிட முடியும்…”

“யுர் விஸ்…”

“ஒகே ஹேத்து, நாளையில இருந்து என் மனைவியா நடிக்க வாழ்த்துகள்.” என அவள் கைப்பற்றி வாழ்த்தினான்.

“ நாளையில இருந்து என் கணவனா நடிக்க உங்களுக்கு என் வாழ்த்துகள் ரகுநாத்” என அவன் கைப்பற்றி வாழ்த்தினால்.

“பல ஆண்டுகாலமாய் போற்றப்படும், உறவை இருபது நிமிடத்தில் நாடகமாக மாற்றியமைத்த புகழ் இவர்கள் இருவரையும் சேரும் என்பது போல் நடந்துகொண்டனர்.”

“ஜன்னலில் அருகில் நின்றுகொண்டு வானத்தில் உள்ள நட்சத்திரத்தை விழியகலாமல் பார்த்துகொண்டிருந்தால் சரண்யா. அந்த நட்சத்திரம் போல தான் நானும். குடும்பத்தில் ஒருத்தியாய் வாழ்ந்த நான் இப்பொழுது ஒரு குடும்பத்தில் மருமகளாய் இருக்கின்றேன். பின்னிருந்து அவளின் தோளில் கை வைத்து திருப்பினான் விஜய்.”

“ரொம்ப நேரம் காத்திருந்தயா சரண்யா…”

“ நான் இப்போ தான் வந்தேன்… நீங்க போன் பேசிட்டு இருந்தீங்க அதனால நான் உங்களுக்கா இங்கயே காத்திருந்தேன்…”

“என் ஃப்ரண்ட் கால் பண்ணிருந்தான்… மேரேஜ்க்கு வரமுடியாதனால இப்போ போன் பண்ணி விஷ் பண்ணான்.” அவளில் தோளில் கை போட்ட படியே அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.

“ஓ… அப்படியா”

“என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் அமைதியாக இருந்தனர். அவன், அவளை ஓரவிழியால் பார்த்துகொண்டிருந்தான். அப்பொழுது தான் உணர்ந்தான் அவள் அசகவுரியமாக இருப்பதை.”

“ உனக்கு அன்கம்பர்டெபிளா இருந்தா நகையெல்லாம் கழட்டி வச்சுரு.ட்ரெஸ் கூட சேன்ஞ் பண்ணிட்டு வா.”

“ம்ம்… சரிங்க..”

“பக்கத்தில் உள்ள, ட்ரெஸிங் டேபிளில் நகை அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு, அவனை பார்த்து திரும்பினால். கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாலி மட்டும் இருந்தது அதில் அவள் மிகவும் அழகாக தெரிந்தால்.”

“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணலையா”

“இல்லை, பெரியம்மா, அம்மா, எல்லாரும் இந்த சேலையில தான் முதலிரவு நட… நட..” என அவள் திணற, முகமோ சிவந்துவிட்டது.

“ நீ சொல்லுறது எனக்கு புரியவே இல்லை சரண்யா”

“ அது… இன்னைக்கு இந்த சேலையில தான் அது நடக்கனுமா..”

“எது?? அவன் தெரிந்துகொண்டே அவளிடம் வம்பிழுக்க.”

“அவளுக்கு வெட்க்கம் அளவு கடந்து, அவளின் முகத்தில் காணப்பட்டது. அவனின் முகம் காணமல் ஜன்னலின் புறம் திரும்பி நின்றால்.”

“ஜன்னல் கம்பிகளை பற்றியிருந்த அவளின் கைகளில் மீது அவன் கைகளை வைத்தான். இன்னும் இந்த கம்பியா தான் பிடிச்சிட்டு நிக்கப்போறியா.”அவளின் காதில் பட்டும் படாமல் உதட்டால்  கேட்டுக்கொண்டிருந்தான்.

“அவளோ கூச்சத்தில் அவனிடம் இருந்துகொண்டே நெலிந்தால். அவனோ, அவளின் இடையில் கைகொடுத்து தன்னோடு இறுக்கி கொண்டான்.”

“அவளின் நாணத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு, அவளை தன்னுடையவளாக மாற்றினான். பெண்ணின் அங்கம் முழுதும் அவனது ஆட்சி மட்டுமே, அது மட்டுமா அவளின் கூச்சத்தையும் அவனது சிரிப்பினால் தொலைவிட்டால் அந்த பெண்ணவள்.”

“தாம்பத்தியத்தின் எல்லை வரையிலும் அவளை அழைத்துகொண்டு சென்றான். ஒரு கட்டத்தில் அவளால் அவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அழுதுவிட்டால்.”

“என்னாச்சு, ஏன் அழுகுற… அவளின் கண்ணீர் அவனுக்கு அந்த இருட்டிலும் நன்றாக தெரிந்தது.”

“ரொம்ப…ரொம்ப… வலிக்குது”

“சாரி… சாரி… ரொம்ப படுத்திட்டேன், நீ தூங்கு” என அவளிடம் இருந்து உடனே விலகி கொண்டு அவளை உறங்க வைத்தான்.

“வலியில் கண்களை சுருக்கிகொண்டும், கால்களை குறுக்கி கொண்டும், ஒரு சாய்த்து தூங்கினால்.”

“ஒரு ஜோடி தங்களின்  வாழ்க்கை என்னும் நாடகத்தை தொடங்க. மற்றொரு ஜோடி தங்களின் வாழ்க்கையை முழுமையாக உணரத்தொடங்கினர்.”

“உண்மையில ஹேத்துக்கு பிடிச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சேங்களா, மாமா.” கிஷோர் அன்புவிடம் கேட்க.

“மாமாகிட்ட எதுக்கு இப்படி பேசுற கிஷு, அவளுக்கு பிடிக்காமலா நாங்க கல்யாணம் பண்ணி வச்சோம்.” சகுந்தலா அவனிடன் கேட்க,

“ஆமா, அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. அது உங்களுக்கு தெரியுமா”

“என்ன சொல்லுற கிஷு… ஹேத்துக்கு கல்யாணம் பிடிக்கலையா. அப்புறம் ஏன் அவ கல்யாணம் பண்ணிக்கனும்.” திகைப்பாய் கிஷூவின் அப்பா கேட்க.

“ஏன்னா, நீங்க எல்லாம் அவமேல வச்ச பாசம் தான் இதுக்கு காரணம். உங்க பாசத்துக்கு முன்னாடி அவ எப்படி இந்த கல்யாணம் வேண்டாமுனு சொல்லுவா.”

“உனக்கு எப்படி தெரியும் கிஷூ”

“அவளோட ஓவ்வொரு உணர்வும் என்ன சொல்லுது, நினைக்குதுனு எனக்கு தெரியும். காலையில என் முகத்துல முழிச்சு குட் மார்னிங் சொல்லுற முதல் இரவு எனகிட்ட குட் நைட் சொல்லுற வரை என்கூடவே இருந்து பழகினவளோட உணர்வு என்ன சொல்லுதுனு எனக்கு தெரியும்”

“அப்படி இல்லை கிஷூ, நீ அவள் மேல அதித பாசம் வச்சுருக்கனால உனக்கு அப்படி தெரியுது. என் பொண்ணு பற்றி எனக்கு தெரியும். அவளுக்கு இந்த கல்யாணம் எவ்வளவு சந்தோஷம் கொடுக்கும்னு பெத்த அப்பாவுக்கு தான் தெரியும். நீ வேணா பாரு, ஹேத்து சந்தோஷமா தான் இருப்பா.”

“அவரின் நம்பிக்கையில் எல்லாரும், வியந்தனர். ஒருவனை தவிர, அவனுக்கு தெரியும் ஹேத்துவிர்க்கு இது பிடிக்காத கல்யாணம் என்று. ஆனால் அவன் எப்படி கூறுவான், ஆதாரம் இருந்தால் மட்டுமே அவர்களிடம் உண்மையை சொல்லமுடியும்.”

“பார்க்கலாம் அவரின் நம்பிக்கையை நான் ஏன் கெடுக்க வேண்டும். அவள் நல்லா வாழ்ந்தாலே அவனுக்கு நிம்மதி தான்.”

“ முதலில் கண்விழித்தது ஹேத்து தான்… பக்கத்தில் இருக்கும் ரகுவை பார்த்தால். அவன் சொன்ன நிலையியே படுத்திருந்தான் எல்லை மீறவில்லை. அவளும் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டால் அவளும் எல்லையை மீறவில்லை.”

“இது நேற்று எடுத்துகொண்ட உறுதி மொழி. இருவரும் படுப்பதற்க்கு ஆயுத்தமாக அவளோ, அதற்க்கு ஒரு கண்டிஷனை போட்டால்.”

“இருவரும் ஒரே கட்டிலில் படுக்கலாம், ஆனால் அவன், அவள் மீது கை, கால் போட்டால், ஒரு வாரத்திர்க்கு அவன் கீழே படுக்க வேண்டும், இதே சட்டம் தான் அவளுக்கும், அவளும் அவன் மீது அதே மாதிரி நடந்துகொண்டால் ஒரு வாரத்திர்க்கு கீழே படுக்க வேண்டும் என கூறி நடுவில் மிகபெரிய கரடி பொம்மையை வைத்துவிட்டு உறங்கிவிட்டால்.”

“குளித்து முடித்து, சரிகை அதிகம் இல்லாத புடவையை உடுத்திகொண்டு, அலங்காரம் செய்தால். இடைவரை உள்ள கூந்தலை தளர பின்னினால். நெற்றிக்கு பொட்டு வைத்தவள். வகிட்டிற்க்கு குங்குமம் வைக்கும் போது நினைக்கவே கூடாது என சில நினைவுகள் அப்பொழுது ஞாயபகம் வந்தது.”

“தினமும், நான் தான் உன் வகிட்டுக்கு குங்குமம் வச்சுவிடுவேன் தனு. அதை மட்டும் மறந்திறாத அந்த நாளை நான் எதிர்ப்பார்த்திட்டு இருக்கேன்.” அவன் கூறியதும், இன்றும் அவளுக்கு நினைவு இருக்கிறது.

“ஒரு நிமிடம் கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டு. எந்த நினைவும் என் மனதில் இல்லை என்பது போல் வகிட்டிர்க்கு குங்குமம் வைத்தால்.”

“அறையைவிட்டு கீழே சென்றவள், யாரும் எழுந்திரிவில்லை. மணியை பார்த்தால் காலை ஐந்து முப்பது.”

“ இன்னேரம் என் வீட்டுல நான் இழுத்து போர்த்திட்டு தூங்கிவேன். ஆனா, இங்க வந்ததும் எல்லாம் மாறிப்போச்சு. ஹேத்து இனி உன் நிலைமை அதோ கதி தான்.” தனுக்குள் புலம்பியவள் நேராக சமையல் அறைக்கு சென்றால்.”

“காஃபியை போட்டு, அதை எடுத்துக்கொண்டு, கௌசியின் அறைக்கு சென்றால். அவள் வந்த நின்ற நேரம், சரியாக அவரும் கதவை திறந்தார்.”

“குட் மார்னிங் ஹேத்து… ஏன் அதுக்குள்ள எழுந்திரிச்சுட்ட. தூங்கிருக்கலாமே.”

“இல்லை அத்தை… புது இடம் கொஞ்சம் தூக்கம் வரலை. அதான் எழுந்திரிச்சுட்டேன்.” என பொய்யை வாரி வழங்கினால். மனதிலோ (எல்லாம் என் அம்மாவ சொல்லனும், எனக்கு தெரியாம என் போன்ல அலாரம் செட் பண்ணிருக்குங்கா. அது மட்டும் அடிக்கலைனா நான் எதுக்கு இன்நேரம் எழுந்திரிக்க போறேன்.) அவள் நினைத்துகொண்டால்.

“போக போக பழகிடும் ஹேத்து…” என சொல்லிகொண்டே காஃபியை வாங்கினார்.

“அடுத்த காஃபியை  எடுத்துகொண்டு, அவர்களின் அறைக்கு சென்றால். அங்கோ, அவன் இன்னும் துயில் கலையவில்லை போல.”

“அவனை மெதுவாக எழுப்பினால், ‘ரகு.. ரகு…” அவனின் கைமேல் கை வைத்து எழுப்பிக்கொண்டிருந்தால்.”

“இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குரேன்ம்மா…” அவளின் கை பிடித்துகொண்டே புரண்டு படுத்தான். அவனோடு சேர்ந்து அவளும் அவன் மேல் நன்றாக விழுந்துவிட்டால்.”

“அவளோ, ரகு… எழுந்திரிங்க… என் கைய விடுங்க..” இன்னும் அவனை பலமாக உலுக்கினால்.”

“பலமாக உலுக்கப்படுவதை உணர்ந்தவன் வேகமாக எழுந்தான்”

“ஹேத்து தன் மேல் கிடப்பதை பார்த்தவன், ‘சாரி சாரி ஹேத்து… என் அம்மா தான் என்னை தினமும் எழுப்புவாங்க. அதான்… சாரி ஹேத்து’ என அவன் மன்னிப்பு வேண்ட.

“அவளோ, ம்ம்ம்… ஒகே இனி இது மாதிரி நடக்க கூடாது” அவனை பார்த்து முறைப்புடன் கூறினால்.”

“ நடக்கவே நடக்காது…” அவளிடம் சொல்லிவிட்டு குளியல் அறையில் நுழைந்துகொண்டான்.

“இருவரும், முதல் முறையாக நேற்று இரவும் முகம் பார்த்துகொண்டனர். ஆனால் அதை இப்பொழுதுவரை இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. முதலில் கவனித்தது ரகு தான், அவளின் முகம் பரிட்சையமானவை போல் தெரிந்தது. ஆனால் ஞாயபகத்திற்க்கு தான் கொண்டு வர முடியவில்லை. அவளுக்கோ அப்படி  எதுவும் தோன்றவில்லை அப்படியே தோன்றினாலும் அவள் நினைத்தும் பார்க்க மாட்டாள்.”

                                                    தொடரும்………………

Advertisement