Advertisement

              காதல் தோழா 2

 

“அம்மா, மாப்பிள்ளை வீடுக்காரவங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்களாம். அப்பா சொல்லச்சொன்னாங்க” அந்த வீட்டின் கடைகுட்டியான ஷிவானி கத்திகொண்டே மணப்பெணின் அறைக்குள் நுழைந்தால்.

“அதுக்கு ஏண்டி இப்படி கத்திகிட்டே வர்ர. சரி பெரியாம்மாக்கிட்ட எல்லாம் பலகாரம், டீ, சாப்பாடு ரெடியானு கேட்டுவா. அப்படியே பெரியப்பாக்கிட்ட மாப்பிள்ளை குடும்பத்தை வரவேற்க வெளிய நிக்க சொல்லு” சரிங்க அம்மா அந்த குட்டி பெண் மறுபடியும் ஓடினால் பெரியம்மாவிடம்.

“சரண்யா,  நான் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க கவனிக்க போகனும், ஏய் கார்த்திகா சரண்யாவ ரெடி பண்ணு. எப்போ பார்த்தாலும் போன் அஹ பார்த்துகிட்டே இரு. முதல உன் அத்தை மகளை பாரு.” அவரின் அண்ணன் மகளை பார்த்து சொல்லிவிட்டு சென்றார்.

“அண்ணி, அண்ணா சூப்பரா இருக்காங்க ஆனா நீங்க தான் அவங்க போட்டோவ பார்க்க மாட்டேங்குற. எப்படியண்ணி மாப்பிள்ளை போட்டோவ பார்க்காம இப்போ நிச்சயத்துக்கு சம்மதிச்சுருக்கீங்க.”

“அதான் , பெரியப்பா, பெரியம்மா  பார்த்தாங்களே அப்புறம் எதுக்கு நான் பார்க்கனும். எனக்கு என்ன செய்யனுமுனு அவங்களுக்கு தெரியாதா.”

“அதுக்குனு மாப்பிள்ளை போட்டோ பார்க்கமா இருக்குறது எல்லாம் ஓவர் அண்ணி” சரண்யாவுக்கு ஒவ்வொரு நகையை மாட்டிகொண்டே பேசினால்.

”வாங்க, வாங்க.. எல்லாரும் வாங்க…” மாணிக்கவேல்,வசந்தா மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றனர்.

“இவங்க பொண்ணோட பெரியப்பா மாணிக்கவேல், இவங்க பொண்ணோட பெரியம்மா, வசந்தா. இவங்க பொண்ணோட சித்தப்பா, சித்தி என செந்தில், மாலதியை மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஒரு பெரியவர்.”

“இவங்க தான் மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க, மாப்பிள்ளையோட மாமா,பொன்னம்பலம், அத்தை பொன்னருவி. மாப்பிள்ளை விஜய். பையனுக்கு அப்பா,அம்மா இல்லை எல்லாமே மாமா, அத்தை தான் சின்னவயசுல இருந்தே பிள்ளையா பார்த்து வளர்த்தாங்க.”

“பரஸ்பரம் அறிமுகம் முடிந்த உடனே பெண்ணை அழைத்து வரசொன்னார்கள்.”

“அக்கா, மாமா சூப்பர்.. உனக்கு ஏத்த மாதிரி இருக்காங்க… அவங்களையே கட்டிக்கோ.” அந்த சிறு பெண் மாப்பிள்ளையை பற்றி பேச.

“அப்படியா ஷிவானி.. உனக்கு பிடிச்சுருக்கா… அப்போ எனக்கும் பிடிக்கும்.” சரண்யாவும் விளையாட்டாய் கூறினால்.

“வாயாடி… உன் அக்கா பார்த்து சொல்லனும் மாப்பிள்ளையை பிடிச்சுருக்கானு. நீ சொல்லுற.” கார்த்திகா சொல்ல.

“என் அக்காவுக்கு என்னை பிடிக்கும், அப்போ எனக்கு பிடிச்சது தானே அவளுக்கும் பிடிக்கும், இல்லையா அக்கா” ஷிவானி, சரண்யாவை பார்த்து கேட்க.

“ஆமாம் என் குட்டிக்கு பிடிச்சது தான் இந்த சரண்யாக்கும் பிடிக்கும்” அவளும் சேர்ந்துகொண்டால்.

“ஏய் கார்த்திகா, மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டாங்க. இப்போ பொண்ணை அழைச்சுட்டு வரசொன்னாங்க. கூப்பிட்டு போடி. என அவளின் அன்னை சொல்லிச்சென்றார்.

“வாங்க அண்ணி., போகலாம்” பெண்ணை அழைத்துகொண்டு சபைக்கு வந்தார்கள்.”

“சரண்யா, இவங்க மாப்பிள்ளையோட மாமா, அத்தை வணக்கம் சொல்லுமா.” பெரியப்பா அறிமுகபடுத்தினார்.

“அவளும், அவர்களை பார்த்து வணக்கம் வைத்து, ஆசீர்வாதமும் வாங்கினால்” சரண்யாவின் செயலில் பெருமைகொண்ட இரு வீட்டாரும் மகிழ்ந்து போயினர்.

“இந்தா சரண்யா, காஃபி, எல்லாருக்கும், கொடு. இது மட்டும் மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டியது.” என வெள்ளி டம்பளரை குறிப்பிட்டு சொன்னார் சித்தி மாலதி.

“சரிங்க சித்தி.” வாங்கிகொண்டு அனைவருக்கும் கொடுத்துவிட்டு இறுதியாக மாப்பிள்ளையின் அருகில் வந்தால். அதுவரை தூரத்தில் ரசித்த அவளது முகத்தை, இப்போது அருகில் ரசித்தான்.”

“அவனது அருகே குனிந்து அவனுக்கு காஃபியை ட்ரேயை நீட்டினால். அவனோ அவளை பார்த்துகொண்டே மெதுவாக எடுத்தான். அவன் கை டம்பளரை பற்றும் போது அந்த இடைவெளியில் அவனது முகத்தை ஒரு நிமிடம்  நிமிர்ந்து பார்த்தால். அவனும் அதை தானே எதிர்ப்பார்த்தான்.”

“எல்லாம் சம்பிரதாயம் முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்துவிட, பெண்ணிடம் மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என கேட்க சொன்னார்கள்.”

“என்ன சரண்யா, பையன பிடிச்சிருக்கா.” பெரியன்னை கேட்டதும்.”

“சிறிய புன்னைகையுடன் பிடித்திருக்கிறது என தலையசைத்தால்.”

“அக்காவுக்கு, மாமாவ பிடிச்சிருக்காம், பெரியப்பா” அனைவரின் முன்னிலையிலும் உரக்க கூறினால் ஷிவானி.

“அதற்கடுத்து, நிச்சய தம்பூலம் மாற்றி, சிறிய மோதிரம் மாற்றிக்கொண்டனர் மாப்பிள்ளையும், பெண்ணும்.”

“மாப்பிள்ளை, பெண்ணுடன் தனியாக பேசவேண்டும் என, அவனின் மாம சொல்ல, ஷிவானியுடன் அவனை சரண்யாவின் அறைக்கு அழைத்து செல்ல சொன்னார்.”

“மாமா.. என் அக்காவ கல்யாணம் பண்ணிக்க நீங்க கொடுத்து வைச்சுருக்கனும், ரொம்ப நல்லவங்க. எனக்கு எதுவேணாலும் வாங்கி தருவாங்க. அவங்களை நீங்க நல்லா பார்த்துக்கோங்க.சரியா.. இது தான் அக்கா ரூம். போங்க” அவனை உள்ளே போக சொன்னால் ஷிவானி.

“ரொம்பவே நல்லாவே நான் உன் அக்காவ பார்த்துகிறேன். சரியா.” அந்த குட்டி பெண்ணின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றான்.

“வாங்க… இங்க உக்காருங்க என அவளின் மெத்தை காட்டினால். அவனை அமரச்சொல்லிவிட்டு அவள் நின்றிருந்தால்.”

“அறை முழுவதும், கிருஷ்ணன், ராதை ஓவியம் அழகாக மாட்டப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பொம்மைகள் இருக்க. மறுப்பக்கம், அவளது கப்போர்ட் இருந்தது.”ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு, அவளை பார்த்து பேசலானான்.

“எனக்கு அம்மா, அப்பா இல்லை. என் மாமா, அத்தை தான் என் அம்மா, அப்பா, எல்லாமே. உன்னை முதல் முதலா காஞ்சிபுரம் கோவில் தான் பார்த்தேன் பிடிச்சிருந்தது. என் மாமாகிட்ட உன்னை மாதிரி பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும் சொன்னேன். ஆனா உன்னையே கல்யாணம் பண்ணிப்பேனு நான் நினைக்கலை.”

”இப்போகூட பொண்ணு பார்க்க போறோமுனு சொன்னாங்க, ஆனா பொண்ணு நீதானு என்கிட்ட போட்டோகூட காட்டல.”

“ம்ம்ம்… பிடிசிருக்கா..”

“எதை சொல்லீறீங்க”

“என்னை தான் கேட்டேன்.” அவன் கேட்க.

“பிடிசிருக்கு..” அவள் சொன்னவுடன். அவளிடம் சிறிய பாக்ஸ் ஒன்றை நீட்டினான்.

“அவளோ என்ன இது என பார்க்க.”

“ஒரு சின்ன கிஃப்ட் வாங்கிக்கோ”

“தாங்கஸ்…,”சொல்லிகொண்டு அவள் வாங்கிகொண்டால்.

“அந்த குட்டி பொண்ணு யாரு, ரொம்ப அழகா பேசுச்சு” ஷிவானியை பற்றி கேட்க.

“என் சித்தி பொண்ணு, ஷிவானி, என் குட்டி தங்கை”

“சோ க்யூட் குட்டி பொண்ணு”

“அடுத்து என்ன பேசுவது என் தெரியாமல், ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க.” ஷிவானி அவனை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தால்.

“மாமா… மாமா.. சித்தாப்பா கூப்பிட்டாங்க உங்களை” சிவானி, அவனின் கைப்பிடித்து அழைத்தால்.

“ம்ம்.. போகலாம்டா.. அவளிடம் பேசிகொண்டு, சரண்யாவின் முகத்தை பார்த்து போயிட்டுவரேன் என தலையசைப்புடன் அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

“அவளோ, அவனின் தலையசைப்பை சரி என்பது போல் ஏற்றால்”

“அழகான ஜோடிகளின் நிச்சிய விழா, எல்லோரின் சம்மதம் படி நிறைவாக முடிந்தது.”

“இனி கல்யாணக்கனவுகளில் அவர்கள் மிதக்க. மற்றொரு ஜோடியே நிச்சய விழாவை எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர்.”

“வாழ்க்கையில் காதல் செய்தால் அது நிறைவேற வேண்டும் என்பது தான் அவர்களின் குறிக்கோல் ஆகும். ஆனால் ஒருத்தியின் காதலோ, பட்டாமாய் வானில் பறக்க, மற்றொருவனின் காதல் உயிர்புடன் இருக்கிறதா, இல்லையா என்பதை அறியாமல் இருவரும் நிச்சிய விழாவிற்க்கு தயராகினர்.”

”ராஜரத்தினம் ஊரில் இருந்து வந்ததும், மனைவியின் நிலையை அறிந்து, ரகுவை திட்டி தீர்த்தார். பிறந்தது முதல் அவரின் அன்பில் வளர்ந்தவனுக்கு தந்தையின் திட்டுகளை தாங்கமுடியவில்லை. தன்னால் தான் அன்னைக்கு இப்படி நிலை ஏற்ப்பட்டது என அவன் நினைத்துக்கொண்டான். அதனால் அவன் தாயிடமும், தந்தையிடமும், அவர்கள் பார்க்கும் பெண்ணையே கல்யாணாம் செய்துகொள்வதாக இருவரிடமும் சம்மதம் சொல்லிவிட்டான்”

“அவன் சம்மதம் சொன்ன அடுத்த நொடி, பரப்பரபாய் சுழன்றனர். பெண்ணுக்கு தேவையான புடவை, நகை, சீர் தட்டுகள், என அனைத்தும் தயராக வைத்துக்கொண்டு நாளை நிச்சியவிழாவை எதிர்கொள்ள. அவன் தன்னை முழுமையாக தயராக்கிகொண்டான். இவையெல்லாம் குடும்பத்துக்காக மட்டுமே என அவன் நினைத்துகொண்டான்.”

“அவன் மனதில், நிறைந்த காதல் இப்பொழுது முழுமையாக வெளிவராமல் பார்த்துக்கொண்டான். ஆனால் எப்படி கட்டப்படுத்தியும், அவளை நினைக்க வைப்பேன் என சபதம் செய்யும் விதியை நினைத்தால் அவன் என்ன செய்ய முடியும்.”

“இறுதியாக அவளுக்கு மெசேஜ் செய்யலாமா, வேண்டாமா என அவன் யோசிக்க. முடிவாய் ஹேங்க்ஹவுட்ஸ்  மூலமாய் அவளுக்கு மெசேஜ் செய்தான். “ஹாய், எப்படி இருக்க,” அனுப்பிவிட்டான்.

“ஆனால் அந்த பக்கம் பதில் இல்லை”

“கடையாசியா உன்கிட்ட ஒன்னு சொல்லனும், உன்னைவிட்ட பிரிய எனக்கு நேரம் வந்திருச்சு அஞ்சலி. இனி நீயே என்கிட்ட வந்தாலும், நான் உன்னை ஏத்துக்க முடியாது. நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம். பாய்” சுருக்கமாய் மெசேஜ் செய்துவிட்டு அவளின் மெயில் ஐடியை ப்ளாக் செய்துவிட்டான்.”

“ரகு.. இன்னும் தூங்காம என்ன பண்ணுற. நாளைக்கு சீக்கிரம் எழனும் ஞாபகம் வைச்சுக்கோ. வேலையெல்லாம் அப்புறம் பார்த்துகலாம்”

“சரிங்கப்பா” அவன் படுக்கையில் விழுந்ததும் உறங்கிப்போனான்.

“கையில் வைத்திருக்கும் மருதாணியில் உள்ளை சிவப்பையும், அழகையும், பார்த்தவளின் மனம், அவளின் காதலன் மீது சென்றது.”

“தயவுசெய்து தினமும் மருதாணி வை தனு, அப்போ தான் உன்னை இன்னும் காதலிக்க தோணும் எனக்கு” என அவன் வாட்ஸ்ப்பில் அவளின் மருதாணி போட்டோவை பார்த்து ரிப்ளே செய்ததை பார்த்தால்.

“தினமும் மருதாணி வைக்கனுமுனா, நீயே வந்து வச்சுவிடு. ஒரு நாள் மருதாணி வைக்கவே என் அம்மா பின்னாடி கெஞ்சிட்டு இருக்கேன் இதுல தினமும் மருதாணினா என் அம்மா அவ்வளோ தான்.”

“சரி, நானே தினமும் உனக்கு மருதாணி வச்சுவிடுரேன். ஆனா மருதாணி வைச்சுவிட்டா எனக்கு என்ன தருவா தனு” அவன் கிரக்கமாக கேட்டான்.

“ நீ மட்டும் என் கண்ணு முன்னாடி வா. அப்புறம் நீ என்ன கேட்கிறயோ அதை கண்டிப்பா நான் தரேன்.” என மூன்று வருடக் காதல், அதுவும் இருவரும் ஒருவரின் ஒருவர் முகம் பார்க்காமல் காதல் செய்துகொண்டிருந்தனர். இன்று வரை அவர்களின் போட்டோவை கூட பார்த்ததில்லை இருவரும். இப்பொழுதான் அவனுக்கு மருதாணி பிடிக்கும் என்பதால் அவள், கையில் மருதாணி வைத்துகொண்டு, மருதாணி வைத்த கையை மட்டும் போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்தால்”

“பேச்சு மாறக்கூடாது தனு, நான் என்ன கேட்டாலும் நீ தரனும்”

“ நான் மாறமாட்டேன், நீ தான்  மூனு வருஷமா கண்ணு முன்னாடி வரமாட்டேங்க்குற.”

“எனக்கு மட்டும் உன்னை பார்க்கம இருக்கனும்னு வேண்டுதலா. என் வேலை அப்படி.”

”சரி.. சரி… இந்த வருஷமாச்சும் மீட் பண்ணலாமா.. நந்து”

“பார்க்கலாம்… புது கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்… வேலை நெட்டி முறிக்குதுடா ட்ரை பண்ணுரேன் தனு”

“அதான் என்னடா இன்னும் கம்பெனி பற்றி பேச்சு வரலைனு நினைச்சேன். நான் போனை வைக்குறேன்…” அவள் கோவப்பட.

“சரி.. பேசல.. போன் வைக்காத.. தனு..” அவன் கெஞ்சினான்.

“முதல் வாரம் ஒரு முறை போன் பண்ணுனேங்க, அப்படியே வாரம் மாசமாச்சு.. இப்போ மூனு மாசத்துக்கு ஒருமுறை தான் போன் பண்ணுறேங்க. இப்பவும் நீங்க ஆபீஸ் விசயம்னா எனக்கு கோவம் வராதா.” அவனை மிஸ் செய்வதை மறைமுகமாக கூறினால்.

“சரி தனு பேசலை, இனி முதல் மாதிரி, வாரம் ஒரு முறை பேசுறேன். கோவச்சிக்காத” அவளை சமதானம் செய்து. அன்று முழுவது அவளுக்கு மட்டுமே நேரம் செலவழித்தான்.

“இன்றோடு, அவன் போன் செய்து எட்டு மாதம் ஆகிருந்தது.. அவனிடம் இருந்து இப்பொழுது வரை ஒரு போன், மெசேஜ் இல்லை. அவளும் அவனுக்கு அழைத்துப்பார்த்தால். ஆனால் அவனின் போன் எடுக்கவில்லை.”

“அதற்கடுத்து அவளுக்கு, அவனின் நினைவு வந்தால். அதை தவிர்க்க, படிபிலும், ப்ரண்ட்ஸூடன் நேரத்தை போக்கினால்.”

“என்ன ஹேத்து… மருதாணியவே பார்த்துட்டு இருக்க…. “ அவளிடம் கேட்டுக்கொண்டே பக்கதில் அமர்ந்தார் சகுந்தலா..

“மருதாணி அழகா இருக்கானு பார்த்துட்டு இருந்தேன், அத்தை…” அவரின் பேச்சில் தீடிரென மாற்றினால்.

“உனக்கென்ன ஹேத்துமா.. நீயும் அழகு, கூடவே மருதாணியும் அழகு…” அவளின் தலையை பாசத்துடன் கோதிகொண்டே சொன்னார்.

“கிஷோர் எப்போ வருவான் அத்தை… நாளைக்கு நிச்சயதார்த்துக்கு அவன் வருவான, மாட்டானா.”

“உன் நிச்சயத்துக்கு அவன் இல்லைனா, நானே அவனை வீட்டை விட்டு துரத்திட மாட்டேன்.. சூரியன் வர்றதுக்கு முன்னே நம்ம வீட்டு வாசல்ல அவன் இருப்பான்.”கிஷோரின் வரவை கிண்டலாக சொன்னார்.

“என்னம்மா… நாளைக்கு நிச்சியத்தை நினைச்சு பயப்படறியா…” அவளின் எண்ணத்தை கேட்க.

“கொஞ்சமா இருக்கு அத்தை…” மறைக்காமல் கூறினால்.

“ரொம்ப நல்ல குடும்பம்டா… நம்ம சொந்தம் தான். உன்னை பார்த்து பிடிச்சு போய் தான் கேட்டாங்க… அவங்க உன்னை மகளை போல பார்த்துக்குவாங்க.. எதை நினைச்சு பயப்படமா தூங்கு ஹேத்துமா.. அத்தை இருக்கேன்.” என அவளை மடியில் சாய்த்துக்கொண்டு தூங்க வைத்தார்.

“ நொடிபொழுதில் உறங்கிவிட்டவளை, தலையணையில் படுக்க வைத்துவிட்டு, கதவை சாற்றிவிட்டு வெளியவந்தார்.”

“என்ன சொன்னா அண்ணி.. அவ” சித்ரா கேட்க்.

“பயமா இருக்குனு சொல்லுறா… சித்ரா.. அவங்களை பார்த்ததும் அந்த பயம் போயிடும்.. சரி வா எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டு தூங்கலாம். நாளைக்கு சீக்கிரம் எழனும்.”

“காஞ்சிப்பட்டில் காஞ்சி காமாட்சியை போல் இருந்தால் ஹேத்தான்சிகா. ஆனால் புன்னகை மட்டும் இல்லை. மகளுக்காக சேர்த்து வைத்த தங்க நகைகள், அனைத்து அவள் கழுத்தில் குடியேறியது.”

“தயரான பின் தன்னையே கண்ணாடியில் பார்த்தவளின் மனதில் என்ன இருந்தும் அவனை நினைக்க மறக்கவில்லை. அவள் மனதில் ‘இதுவே அவன் என்னை பெண்பார்க்க வருவதென்றால் நான் அமைதியாக இருப்பேனா, இல்லையே.. மகிழ்ச்சியில் பார்த்து பார்த்து அலங்காரம் செய்துகொள்வேன்.” ஆனால் வருவது அவன் இல்லையே. வேறொருவன் தான் என்னை  நிச்சயம் செய்ய வருகிறான்.” மனது எடுத்து சொன்னது.

“ஹேத்துவின் அறைக்கு வந்த அன்புவும்,கிஷோரின் தந்தையும் ஹேத்துவை பார்த்து அசந்திவிட்டனர். ’மச்சான் நம்ம ஹேத்துவா இது..’ கிஷோரின் தந்தை கேட்க.

“எனக்கும் அதே சந்தேகம் தான் மாமா”  

“அவர்களின் வரவை உண்ர்ந்துகொண்ட ஹேத்து, திரும்பி பார்த்தால்.”

“அந்த காமாட்சி அம்மன் போல் இருக்க ஹேத்துமா… உன்னை பார்க்க, அவ்வளவு அழகா இருக்கம்ம…” அவளின் மாமா சொல்ல.

“ஆமாம்… என் பொண்ணு அவ்வளவு அழகு… என் கண்ணு பட்டுடும் போல” என பக்கத்தில் இருக்கும், மை டப்பாவை, மையை எடுத்து அவளின் காதோரத்தில் சிறிய பொட்டாய் வைத்துவிட்டார் அன்புசெல்வன்.”

“இப்போ யாரு கண்ணும் படாது.. இல்லையா மாமா” அவரிடம் கேட்க. அவரும் ஆம் என தலையசைத்தார்.

“மாமனும், அப்பாவும் பொண்ணை பார்த்துட்டே இருப்பேங்க போல.. அங்க மாப்பிள்ளை  வீட்டுக்காரவங்க வந்துட்டாங்களானு கேளுங்க.. உங்க பொண்ண அப்புறம் ரசிக்கலாம்.. சகுந்தலா சொல்ல.

“சரிம்மா, போறோம்..” இருவரும் கிளம்பினர்.

“கிஷோர் வரலியே அத்தை…. அவன் வரமாட்டான..” ஏக்கத்துடன் கேட்க.

“இல்லைமா அவன் போன் எடுக்கலை.. எப்படியும் இன்னைக்கு வந்திருவாண்டா என் ராஜாத்தி… அத்தை உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்.” சென்றார்.

“ட்ரெசிங் டேபிள் முன்னாடி அமர்ந்தவள். அப்பொழுதான் யாழியை பார்த்தால். அது ரெடியாகமல் அவளை பார்த்து முறைத்துகொண்டிருந்தது.”

“ஏன் என்னைப்பார்த்து முறைக்குற…”

“அவளைப்போல் தானும் உடை உடுத்த வேண்டும் என்பது போல் சுட்டிக்காட்டியது”

“அதற்க்கும், மேக்கப் போட்டுவிட்டு, சின்னாதாய் இருக்கும் சட்டையை அதுக்கு போட்டுவிட்டால்.” இதை பார்த்த சித்ரா.

“ஆமா உன்னை தான் பொண்ணு பார்க்க வர்ற மாதிரி இப்படி ட்ரெஸ் பண்ணிருக்க.. நீ இந்த ரூம் அஹ் விட்டு இன்னும் அஞ்சு மணி நேரத்துக்கு வெளியே வராத.. அப்போ தான் உனக்கு பாதம் மில்க் தருவேன் சரியா..” என்றும் அதனுடன் சண்டை போடும் சித்ரா இன்று அதனிடம் பேரம் பேசினார்.

“யாழியும், அவர் சொல்வது போல் நடந்து கொள்ள, அதனிடத்தில் அமர்ந்துகொண்டது.”

“இப்பவாச்சும், என் பேச்சை கேட்குதே…. இந்தா ஹேத்து சாப்பிடு..” அவளுக்கு ஊட்டிவிட்டார்.

“மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வந்துட்டாங்களாம் சித்ரா… நீயும் அண்ணாவும் போய் வரவேற்க முன்னாடி போங்க.. நான் ஹேத்துக்கூட இருக்கேன்.. என சகுந்தலா சொல்ல. மகளுக்கு ஊட்டிகொண்டிருந்தவர் அதை அப்படியே சகுந்தலாவிடம் கொடுத்துவிட்டு சென்றார்.”

“மாப்பிள்ளை வீட்டை வரவேற்று, அவர்களின் அறிமுகம் முடிந்து.. அவர்களின் வேலைகளை கொஞ்சம் பேசிகொண்டிருக்கும் போது தான் ஒரு பெரியவர் இப்படியே பேசிட்டுயிருந்தா.. பொண்ணை எப்போ பார்க்க??”

“ஆத்தா… போய் பொண்ணை அழைச்சுட்டு வாம்மா.. என் பேரன் எப்போடா  பொண்ணை கண்ணுல காட்டுவாங்கனு எதிர்ப்பார்த்துட்டு இருக்கான்.. இல்லையா பேராண்டி..” மாப்பிள்ளையை பார்த்து கேலி செய்ய. அவனோ உதட்டளவிற்க்கு மட்டுமே புன்னகை சிந்தினான்.

“இதோ அழைச்சுட்டு வரோம்.” இரு பெண்கள் ஹேத்துவை அழைக்க சென்றனர்.

“எல்லாருக்கும், நமஸ்காரம் பண்ணிக்கோம்மா..” என சகுந்தலா சொல்ல, அதை மாற்றாமல் செய்தால்.

“பொண்ணை எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு, என்னங்க சொல்லுறீங்க..”

“ஆமாம் எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்கு..” என மாப்பிள்ளையின் அன்னையும்,தந்தையும், சொல்ல.. அதை பின்பற்றி அனைவரும் பெண்ணை பிடித்திருப்பதாய் சொன்னார்கள்.

”எல்லாரின் சம்மதமும் அறிந்த, பெண்வீட்டார் மாப்பிள்ளையின் சம்மதத்தை கேட்க நினைத்து அவனின் முகத்தை நோக்கினர்.

“எனக்கும், பொண்ணை பிடிச்சிருக்கும்மா..” அவனின் தாயிடம் சொன்னான்.

“எங்க எல்லாருக்கும், உங்களையும், மாப்பிள்ளையும் பிடிச்சிருக்கு, ஹேத்துமா உனக்கு.” அன்பு கேட்க.

“பிடிசிருக்குப்பா..” இருவரும் முகத்தை பார்க்காமல் சம்மத்தை சொன்னார்கள்.

“அப்புறம் என்ன, மாமா சம்பிரதாயத்தை ஆரம்பிக்கலாம்”

“ நொடியும் தாமதிக்கமல், பெண்ணுக்கு எடுத்துவந்த சேலையை கொடுத்து, உடுத்தி வரச்சொன்னார்கள்., அடுத்தடுத்து எல்லாமும் துரிதமாய் செயல்பட்டு, மாப்பிள்ளையையும், பெண்ணையும் மோதிரம் மாற்ற அருகருகே நிற்க்க வைத்தனர்.”

“இருவரும் மெதுவாய் நடந்து வந்து அருகில் நின்றனர்..”

“அவனின் கையில் மோதிரத்தை கொடுத்தார்”

“அவளின் கையில் சகுந்தலா, மோதிரத்தை கொடுக்க.”

“இப்பொழுதும் முகத்தை காணாமல், அவளின் முன் கையை நீட்டினான். ஹேத்துவும் தனது கையை அவனிடம் கொடுத்தால்.”

“போட்டுவிடு, பேரான் டி.. எவ்வளவு நேரம் தான் பொண்ணு கையை பார்த்துட்டு இருப்ப..” அவர் சொல்ல.

“காதலியை மறக்கும் நேரம் தொடங்க்கிவிட்டது. என நினைத்துக்கொண்டு அவளின் விரலில் மோத்திரத்தை அணிந்துவிட்டான்.”

“ஹேத்து, அவனின் முன் கை நீட்டினால். அவனது கைக்காக.. அவனும் கையை நீட்டினான்..”

“இனி என் காதல் முடிவுரை தான், என எண்ணிக்கொண்டு, அவனது விரலில் மோதிரத்தை அணிந்துவிட்டால்.”

“ரகுநாத் – ஹேத்தான்சிகா, நிச்சயதார்த்தம் சிறப்பாகவும், அவரவர் பெற்றோர்களின் மகிழ்ச்சியில் இனிதாய் முடிந்தது.”

“இருவரின் உள்ளத்தில், காதல் வேறொருவரின் மீது… ஆனால் இவர்களின் வாழ்க்கை????”

 

                                             தொடரும்……………

Advertisement