Advertisement

                                   காதல் தோழா 8

”இருபதாவது முறையாக அவளின் எண்ணிற்க்கு முயற்சி செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவள் எண்ணிற்க்கு அழைப்பு போகவில்லை.”

“என்ன கிருஷ்… காலையில இருந்து போனைவே வெறிச்சுப்பார்த்துட்டு இருக்க. இப்படி தான்  நான் அப்போ வரும் போது உக்கார்ந்திருந்த, இப்போ மீட்டிங் முடிஞ்சு நானே வந்துட்டேன் ஆனா இன்னும் நீ அதே இடத்துல தான் இருக்க. என்னாச்சுடா உனக்கு” அவனின் நண்பன் கேட்க.

“ஒன்னுமில்ல… கொஞ்சம் டென்ஷன்”

“என்ன டென்ஷன்.”

“…………..”

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… சொல்லு”

“என் தனுக்கு போன் பண்ணேன்… அவ எடுக்கலை… அதான்”

“தனு…” அவன் கண்கள் சுருக்கி யார் அந்த பெண் என்ற கேள்வி நிற்க.

“ என் காதலி…”

“அடப்பாவி… இது எப்போ இருந்து…”

“இரண்டு வருஷம்.”

“என்னது……….. இரண்டு வருஷமா???”

“ஆமாம்… இரண்டு வருஷமா அவள் முகத்தை பார்க்காம நானும், என் முகத்தை பார்க்காம அவளும் காதலிச்சுட்டு இருக்கோம்.”

“முகத்தை பார்க்காம, அதுவும் இந்த காலத்துல  நீயும், அந்த பொண்ணும் காதலிச்சுருக்கீங்களா….” என அவன் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் கேட்டான்.

“அவள் எனக்கு அறிமுகமானதே மெயில் தான் டா… அப்போ என்னை பத்தி வெளியான ஆர்டிக்கல என்னைப்பத்தி படிச்சுருக்கா… அப்புறம் எனக்கு மெயில் பண்ணிருக்கா. நானும் அதை முதல்ல அலட்சியமா விட்டுட்டேன். ஆனா அவளோ அந்த கவிதையோட வந்த வாழ்த்து எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்கு பின்னாடி நான் ஃப்ரியா இருக்கும் போது அவளுக்கு மெயில் பண்ணி பேசுவேன் அவளும் நான் மெயில் அனுப்புனதுக்கு இரண்டு நாள் கழிச்சு தான் பதில அனுப்புவா.”

“ஒரு வருஷம் கழிச்சு அவளுக்கு என் காதல் சொல்லிடலாமுனு  நினைச்சேன். என் பிறந்த நாள் அன்னைக்கு அவளுக்கு என் காதல அவகிட்ட சொன்னேன் இமெயில. அவ என் இமெயில் பார்த்துட்டு  எனக்கு பதில் அனுப்பலை. நானும் புது கம்பெனி டீலிங்ல வேலை அதிகமாயிருச்சு அவளை பத்தி நினைக்ககூட முடியாத அளவுக்கு.”

“ஒரு மாசம் கழிச்சு அவ எனக்கு இமெயில் பண்ணா”

“என்னானு”

“என்னை காதலை அவ ஏத்துக்கிறேன் சொல்லி…”

“அப்புறம்.”

“எங்க போன் நம்பர் மாத்திக்கிட்டோம்… நான் ஃப்ரியா இருக்கும் போது அவ காலேஜ்ல இருப்பா. அவ ஃப்ரியா இருக்கும் போது நான் கம்பெனில முக்கியமான வேலையில இருப்பேன். இதுக்கிடையில அவளுக்கு ஒரு நாள் போன் பண்ணி பேசுனேன்.”

“அப்போ தொடர்ந்தது எங்க காதல். அடுத்த என் பிறந்தால் வர்ர வரைக்கு நாங்க ரெண்டும் பேரும் எங்க முகத்தை பார்த்துக்காம காதலிச்சோம். போட்டோ கூட நாங்க சேர் பண்ணிக்கலை.”

“அடுத்து தான் உனக்கே தெரியுமே… தாத்தாவுக்கு உடம்பு சரியில்லமா போயி. அவரோட கம்பெனியும் சேர்த்து பார்த்துக்க சொல்லி அவர் என்னை கம்பெல் பண்ணது. நானும் அவரோட கம்பெனியை எடுத்து நடத்த ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கு அவளுக்கு நான் போன் பண்ணவும் இல்லை, பேசவும் இல்லை.”

“ஆனா நேத்து திடீர்னு அவளுக்கு வேறு யாருடனோ கல்யாணம் ஆகுற மாதிரி கனவு வந்துச்சு. அதான் இன்னைக்கு அவ போன்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.”

“டேய் பீல் பண்ணாத… அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்காது. உன் காதலுக்காக அவ காத்திட்டு இருப்பா.”

“ நானும் அப்படி தான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனா  நான் கனவு கண்ட மாதிரி அவளுக்கு கல்யாண நடந்திருந்தா. என் காதல் தோத்து போச்சுனு அர்த்தம்.”

“அப்படியெல்லாம் இருக்காது…”

“இந்த ஒரு மாசம் நீ ஃப்ரி பண்ணிக்கோ, அந்த பொண்ணை தேடி போ… நான் கம்பெனிய பார்த்துகிறேன்.”

“இல்லை டா… எல்லா வேலையும் உனக்கு கொடுத்துட்டு போனா நல்லா இருக்காது. இப்போ தான் உன் கல்யாணம் முடிஞ்சுருக்கு நீயும் வாழ்க்கையை இன்னும் என்ஜாய் பண்ணாம எனக்காக கம்பெனில வந்துருக்க. உன்னை இந்த நிலைமையில உன்னை தனியா விட்டா எனக்கு தான் கில்டியா இருக்கும்.”

“டேய்… நான் உன் நண்பன் டா… என் கஷ்டத்துல நீ பங்கெடுக்கும் போது, உன் கஷ்டத்துல நான் ஏன் பங்கெடுக்க கூடது. வேணா ஒன்னு பண்ணலாம்.”

“என்ன”

“சென்னையில நாம ஆரம்பிக்க போறோ புது கார் ஷோரூம்க்கு புது பாட்னர் ஒருத்தர் அங்க தான் இருக்காங்க. அவங்க கூட சேர்ந்து நம்ம பிஸ்னஸ் நடந்த மாதிரியும் ஆச்சு, உன் காதலிய கண்டு பிடிச்சதும் ஆச்சு.” என அவன் ஐடியா கொடுத்தான்.

“ நல்ல ஐடியா தான்… அப்போ நான் இன்னைக்கே கிளம்புரேன். ஆனா எல்லா வேலையும் நீயே இழுத்து போட்டு பண்ணாத சரியா. அப்புரம் தங்கச்சி எனக்கு போன் பண்ணிரும்.”

“ சரிடா…”

“ தன் காதலியை தேடி செல்கிறான். அவளின் முகவரி கூட தெரியாமல். ஆனால் அவன் கண்ட கனவு பழித்துவிட்டது என அறியாமல் அவளை தேடி செல்கிறான்.”

“என்ன அஞ்சு… ஏன் மொபைலையே பார்த்துட்டு இருக்க. அப்படி என்ன இருக்கு அதில. அவளின் தோழி கேட்பதை கூட அறியாமல் அவளின் காதலன் அனுப்பிய மெஜிலே அவள் கண்கள் இருந்தது.”

“அஞ்சு…” தோழியின் தோளை தட்டினால்.

“தனிகாவை ஒரு பார்வை பார்த்தவள். அவள் கையிலேயெ போனை கொடுத்தால்.”

“என்ன அஞ்சு இது… உன் லவ்ரா இப்படி அனுப்பியது…” அதிர்ச்சியில் கேட்க.

“ஆமாம்…” தலையை அசைத்தால்.

“என்னாச்சு அவங்களுக்கு” தோழி கேட்க.

“கல்யாணம் ஆகப்போகுதுனு மெசேஜ் பண்ணிருக்கான்… எனக்காக கூட அவனால காத்திருக்க முடியலை போல. என்னை தேடி அவன் வந்திருக்கலாம் தானே… ஆனா ஏன் அவன் வரலைனு தெரியலை தனிகா”

“ஹேய் பீல் பண்ணாத டீ… அவன் இல்லைனா என்ன. உனக்குனு பிறந்தவன் கண்டிப்பா வருவான். சரியா…”

“இல்லை டி அவன என்னால மறக்க முடியாது டீ” அவளின் தோழியை கட்டியணைத்து அழுது கொண்டிருந்தால்.

“தோழியின் நிலையை பார்த்தவள், அவளுக்கு என்ன ஆறுதல் சொலுவது என தெரியாமல் அவளை சாய்த்துகொண்டால்.

“அவனை தேடி போகலாம் டி” அஞ்சலியை நிமிர்த்தி கூறினால்.

“என்ன சொல்லுற தனிகா…”

“ஆமா அவன் ஏன் உன்னை மறந்துட்டு, வேற பொண்ணை கல்யாணம் பண்ணானு உனக்கு தெரியனும். அப்போ நீ காதலிச்சது பொய்யா… இல்லை அவன் காதலிச்சது பொய்யானு தெரியனும்.”

“உண்மையான காரணம் என்னனு பார்க்கலாம்… இப்போவே சென்னை கிளம்பலாம்.” தோழியை தேற்றியவள் உடனே ஆயுத்தமனால்.

“இடையில் காணாமல் போன காதலனும், கோபத்தில் விட்டு சென்ற காதலியும் அவர்களின் முன்னால் காதலன், காதலியை தேடி வருகின்றனர்.”

“இதை அறியாமல் ரகுவும், ஹேத்துவும் வழக்கம் போல் அவர்களின் நாடகத்தை நடத்துகின்றனர் யாருக்கும் தெரியாமல்.”

“உனக்கு பிடிச்சதெல்லாம் நானே சமைச்சுருக்கேன் ஷனா… வா வந்து சாப்பிடு..” என கௌசி அழைக்க.

“வாவ் அத்தை எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சிருக்கீங்க… ஆனா நான் டைட்ல இருக்க்கேன் அத்தை”

“என்ன டி டைட்… அம்பத்திரண்டு கிலே எல்லாம் ஒரு வெயிட்டே இல்லை ஒழுங்க நல்லா சாப்பிடு…” என அவளை அதட்டி கொண்டிருந்தார்.

“ அத்தை நீங்க குண்டா இருந்தாலும், ஒல்லியா இருந்தாலும் மாமா ஏத்துப்பார். ஆனா நான் குண்டான எனக்கு வரப்போறவன் என்னை பார்த்துட்டு ஒடிப்போயிடுவான்.”

“என் கஷ்டம் உஙகளுக்கு புரியாது… ஹேத்து நீயே சொல்லு என் பீலிங் உனக்கு நல்லா புரியும். ஏன்னா நீயும், நானும் தான் இந்த காலத்து பொண்ணுங்க.” என அவள் ஹேத்துவை துணைக்கு அழைத்தால்.

“அத்தை அவ சொல்லுறதும் சரிதான்… ஆனா அவளுக்கு பிடிக்கும்னு நீங்க செஞ்ச சிக்கன் ப்ரைட் ரைஸ், சிக்கன் க்ரேவி, சிக்கன் வறுவல் எல்லாத்தையும் நான் எடுத்துட்டு போயிடுரேன்.” ஷனாவையே போட்டு தாக்கினால்.

“என்னது சிக்கனா……”

“அய்யோ ஹேத்து… அப்படியெல்லாம் பண்ணாதீங்க… நான் டைட்னு எப்போ சொன்னேன். நீங்க எனக்காக செஞ்சதெல்லாம் நான்  சாப்பிடலைனா வேஸ்ட் ஆகிரும்.”

“சிக்கன் பிரியை ஆனா த்ரிஷ்னாவே அலறவிட்டால் ஹேத்து…”

”எப்படி போகுது கல்யாண வாழ்க்கை”

“எப்பவும் போல நல்லாவெ போகுது ஷனா”

“உன் காலேஜ் ஸ்டடிஸ் முடிஞ்சிருச்சு, அப்புறம் என்ன பிளான்”

“இன்னும் யோசிக்கலை ஹேத்து…”

”மாமா கூட, சேர்ந்து கம்பெனில வொர்க் பண்ணலாமே ஷனா…”

“ஹூகும் எனக்கு அதெல்லாம் பிடிக்காது ஹேத்து… சுதந்திரமா இந்த உலக்கத்தை சுத்தி வரனும்… இந்த வேலை, சம்பளம், எல்லாமே டென்ஷன் தான். எனக்கு அதெல்லாம் வேண்டாம் ஹேத்து.”

“குட்… நானும் இப்படிதான்… ஆனா என் அப்பா தான் ஹேட்டல் வந்து பிஸ்னஸ் கத்துக்கோ… ஹேட்டல் பார்த்துக்கோனு. ஆனா எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டேன்.”

“அப்போ நாம ரெண்டும் ஸேம் தான் அடிச்சிக்கோ” என இருவரும் ஹைபை கொடுத்துக்கொண்டனர்.

“வாப்பா, கிஷோர்… எப்படி இருக்க தம்பி…”

“ நல்லா இருக்கேன் பெரியம்மா… நீங்க எப்படி இருக்கீங்க… பெரியப்பா, ரகு எப்படி இருக்காங்க…”

“எல்லாரும் நல்லா இருக்கோம் தம்பி…”

“அம்மா, அப்பா எப்படி இருக்காங்க தம்பி”

“ம்ம் நல்லா இருக்காங்க பெரியாம்மா”

”அவனுக்கு, காஃபி கொடுத்துகொண்டே பேசினார் கௌசி…”

“ஹேத்துவும், ஷனாவும் பேசிகொண்டே கீழே வந்தனர். அப்பொழுது தான் ஹேத்து கிஷோருடன் மாமியார் பேசிகொண்டிருப்பது தெரிய ஷனாவிடம் பேசிகொண்டிருப்பத்தை பாதியில் விட்டுவிட்டு அவனிடம் ஓடினால்.”

“கிஷூ…” அவனை அழைத்துகொண்டே அவன அருகில் சென்றால்.

“ஷனாவோ, தன்னிடம் பாதியில் பேச்சைவிட்டு ஓடும் ஹேத்துவை பார்த்த ஷனா யாரைப்பார்த்து இவள் ஓடுகிறால் என அவளும் போனால்.”

“எப்படிருக்க கிஷூ…”

“ஹேத்து நான் நல்லா இருக்கேன்… நீ எப்படி இருக்க… ரகு உன்னை நல்லா பார்த்துகிறரா…”

“ம்ம்ம் ரொம்ப நல்லா பார்த்துகிறாங்க… அத்தை, மாமா… எல்லாருமே” அவள் மகிழ்ச்சியில் சொல்லிக்கொண்டிருந்தால்.

“அப்பா, அம்மா… அத்தை,மாமா எப்படி இருக்காங்க கிஷூ”

“ நல்லா இருக்காங்க… மாமா தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறாரு.”

“ம்ம்ம் அப்படியா…” ஹேத்து கண் கலங்க ஆரம்பித்தால்.

“யாரிந்த கிஷூ…” என  ஆர்வமாய் பார்த்தால் ஷனா…”

“ஹேத்து அவனின் முகத்தை  மறைப்பது போல் நின்றிருந்ததால் ஷனாவிற்க்கு தெரியவில்லை.”

“எதாவது சாப்பிட்டயா… காஃபி எடுத்துட்டு வரேன் இரு…”

“இப்போ தான் ஹேத்து நான் கொடுத்தேன்…”

“அப்படியா அத்தை… உக்காரு… கிஷூ்”

“அவனை அமர்ந்தவுடன், அத்தையின் அருகில் சென்று நின்று கொண்டால்.. அப்பொழுதான் ஷனா அவனைப்பார்த்தால்.”

“அத்தையின் அருகில் நிற்க்கும் போது தான் ஷனாவை பார்த்தால், “சாரி ஷனா என் அத்தை பையான பார்த்ததும், உன்னை விட்டு விட்டு போயிட்டேன்… சாரி”

“இருக்கட்டும் ஹேத்து…”

“கிஷூ… இவங்க த்ரிஷ்னா… ரகுவோட மாமா பொண்ணு…”

“ஷனா, இவன் என் அத்தை பையன் கிஷோர்.” என இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தால்.

“இருவரும், ஒருவரை அறிமுகம் தங்களுக்குள்ளேயெ அறிமுகம் செய்துகொண்டனர்.”

“ஹாய்…” என கிஷூவும்

“ஹாய்” என ஷனாவும் அறிமுகம் செய்து கொண்டனர்.

“இருவரும் கைகொடுத்துகொண்டதும், இருவர்து பார்வையும் சலனமில்லாமல் அறிமுகப்பார்வையாக தான் பார்த்திகொண்டனர்.”

“ஆனால் ஒருவரின் கையில், மற்றொருவர் கை இருந்தது. அந்த கைகளின் அழுத்தம் உன்னை நான் அறிவேன் என அர்த்ததுடன் இருந்தது.”

                                                     தொடரும்…………….

Advertisement