Advertisement

               காதல் தோழா 5

“ஹேத்துமா இன்னும் ட்ரெஸ் மாத்தாம ஏன் இப்படியே உக்கார்ந்திருக்க. ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் தூங்குமா நாளைக்கு மூனு மணிக்கு எழுந்திருக்கனும். இப்படியே முழிச்சிட்டு இருந்தா காலையில எழுந்திரிக்க முடியாது ஹேத்து.” சகுந்தலா அவளிடம் பேசிகொண்டே அவளின் அருகில் வந்தார்.

“அவளின் முகத்தை, திருப்பி அவர் என்னவென்று கேட்டார். அவளோ ‘ பயமா இருக்கு அத்தை, உங்க எல்லாரையும் விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்.’ சகுந்தலாவின் இடையை கட்டிகொண்டு அழுதால்.

“இங்க பாரு கண்ணமா, எல்லா பொண்ணுக்கு இருக்குற பயம் தான் டா. கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போகிடும் டா. அவளின் தலையை கோதிகொண்டே பேசினார்.”

“கிஷோர் ஏன் அத்தை இன்னும் வரலை. என் நிச்சியத்துக்கும் அவன் வரலை, இப்போ கல்யாணத்துக்கும் அவன் வரலையா அத்தை. ஏன் அவன் இப்படி பண்ணுறான்.” கிஷோரை பற்றி கேட்டால்.

“என்னனு தெரியலை டா, அவன் எங்க இருக்கானு எனக்கும் தெரியலை டா. ஆனா உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவான். நீ கவலைப்படாம இரும்மா.”

“என்ன அத்தையும், மருமகளும் கொஞ்சியாச்சா. ஏன் அண்ணி, அவளுக்கு சரி சமமா நீங்களும் பீல் பண்ணுறீங்க.”

“இல்லை சித்ரா… ஹேத்துமா கொஞ்சம் பயப்பட்டா போல அதான் சமாதானம் செய்ஞ்சுட்டு இருந்தேன்.”

“இங்க பாரு ஹேத்து அங்க எல்லாருமே உன்னை நல்லா பார்த்துப்பாங்க  நீ தேவையில்லாத கற்பனை பண்ணிக்காதே. இப்போ தான் நிச்சயதார்த்தாம் முடிஞ்சது அதுக்குள்ள அழுது வடிஞ்ச முகமா இருக்க கூடாது ஹேத்து.” அவளின் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, அவளை சரி படுத்தினார்.

“ஆமாம், ஹேத்துவுக்கும், ரகுவுக்கும் இப்பொழுது தான் ஊர் முன்னிலையில் நிச்சயம் முடிந்தது. நிச்சயம் முடிந்து இருவரையும் அருகருகே நிற்க்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் மனதில் சிறிதளவிலும் மகிழ்ச்சி இல்லை ஆனால் ஒருவரின் மீது ஒருவர் மூட்டை மூட்டையாக வெறுப்பு மட்டும் அதிகமாக இருந்தது.”

“இருவரும் அருகில் இருந்தாலும், நூலிலை அளவு இடைவெளி அதிகமாக இருந்தது. அவளின் மனதிலோ, ‘என் நந்துகூட இப்போ நிச்சயம் நடந்திருந்தா நான் சந்தோஷமா இருந்திருப்பேன்’ என அவளும். ‘என் அஞ்சலி பிடிவாதகாரியா இருந்தாலும், அவளை தான் முதலில் காதலித்தேன் அவளுடன் என் நிச்சியம் நடந்திருந்தால் நான் இப்படியா உம்மென்று இருப்பேன்’ என அவனும் நினைத்துக்கொண்டிருந்தனர்.”

“எல்லா சடங்குகளும், முடிந்து அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தப்பித்தால் போதும் என வேகமாக அவரவர் அறைக்கு சென்றனர்.”

“அடுத்த நாள் கல்யாணம், இனி என் கையில் எதுவும் இல்லை. பார்க்கலாம் அவனின் வாழ்க்கையில் நான் எந்த நிலையில் இருக்கின்றேன் என்பதை..

“அவளுடன், என் வாழ்க்கை நல்லபடியாக செல்லுமா??, அவளின் மனநிலையில்  நான் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்பதை பார்க்கலாம்.”

“காதலே இல்லாத இருவரின் மனநிலையை மாற்ற, பென்ஸ் காரில் எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாக கல்யாண மண்டபத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த கார்.அதில் ஒருவனும்”

“இனி இவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்ப்படுத்த போகும், இன்னொருவரும் சென்னையை நோக்கி விமானத்தில் வந்துகொண்டிருந்தால் அவள்”

“ நள்ளிரவு, இரண்டை தொட்டுகொண்டிருந்தது பெங்களூரில் ஆரம்பித்த பயணம், இதோ சென்னையில் மிக பிரம்மாண்டமான மண்டபத்தின் முன் வந்து நின்றது. அதில் இருந்து ரிபோக் சூ, ரோலக்ஸ் வாட்ச், கூலர் கண்ணாடியுடன், ஓட்டோ டீசார்ட், அதற்க்கேற்றார் போல் ஜீன்ஸுடன் நவ நாகரித்துடன் ஒருவன் காரில் இருந்து இறங்கினான்.”

“மண்டபத்தை சுற்றி பார்த்தவன், சின்ன புன்னகையுடன் உள்ளே நுழைந்தான். அங்கு பெண் வீட்டு உறவினர்களும், மாப்பிள்ளை வீட்டு உறவினர்களும், கொஞ்சம் பேர் மண்டபத்தில் உறங்கிகொண்டிருந்தார். அதெல்லாம், பார்த்துகொண்டே, மணமகள் அறையின் முன் வந்து நின்றான்.”

“மெதுவாக கதவை தட்டினான், ஆனால் அதற்க்கு பதில் இல்லை. மீண்டும் கதவை தட்டினான். இப்பொழுது சகுந்தலா தூக்க கலக்கத்துடன் கதவை திறந்தார்.”

“அவரின் முகத்தை கண்ட பொழுதில், புன்னகையுடன் தன் அன்னையை பார்த்தான்.”

“யார் இந்த நேரத்தில் என, கண்ணை கசக்கிக்கொண்டே தன் முன் நின்ற உருவத்தை அப்பொழுது தான் நன்றாக் பார்த்து ஆச்சர்யம் அடைந்து, கிஷோ” என அழைக்க போக அவரின் வாயில் கைவைத்து அமைதியாக இருக்க சொன்னான்.

“அவரை அணைத்துகொண்டே, உள்ளே அழைத்து சென்றவன். மெத்தையில் சுகமாய் தூங்கிக்கொண்டிருக்கும் ஹேத்துவை பார்த்தான். மறுந்துக்கும் அவள் முகத்தில் கல்யாண கலை இல்லை. அதை புரிந்தகொண்டவன், மனதில் சின்ன வலி ஏற்ப்பட்டது.”

“எப்போ வந்த கிஷோர்… அதுவும் இந்த நேரத்துல தான் வரமுடிஞ்சதா.” என அவனிடம் கேட்டார்.

“இல்லை, வேலை எல்லாம் முன்னமே முடிஞ்சது. ஆனா எனக்கு மேல ஒருத்தன் எம்.டினு இருக்கானே, அவன் தான் என்னை வச்சு செஞ்சுட்டான். அதான் ஹேத்து நிச்சயத்துக்கூட வரமுடியலை.”

“போன், தொலைஞ்சு போச்சும்மா அதான் உங்களை காண்டாக்ட் பண்ண முடியலை. ஹேத்து என்னை ரொம்ப மிஸ் பண்ணாலாம்மா” அவன் கேட்க.

“ஒவ்வொரு நிமிஷமும் உன்னை தான் கேட்டா, இன்னைக்கு கூட நிச்சயம் முடிஞ்சதும் உன்னை கேட்டு அழுதுட்டா. அதுகடுத்து நானும், சித்ரவும் தான் சமதானம் செஞ்சோம்.”  அவளின் நிலையை அவனிடம் சொன்னார்.

“ அதுக்கு தான்ம்மா நான் வேகமாக வந்தேன். இப்பொ அவகிட்ட சொல்லாதீங்க நான் வந்ததை. காலையில நானே சப்ரைஸ் பண்ணுரேன்.”

“சரிடா.. இப்போ எங்க தங்க போற.”

“வீட்டுக்கு போயிட்டு காலையில சீக்கிரம் வரேன்ம்மா.”

“சரி பார்த்து போ…”

“அவன் மண்டப வாசாலுக்கு வந்து அவனை வழியனுப்ப வந்தவர், அவன் திரும்பி அவன் அன்னையிடம் வந்தான்.”

“ஹேத்துக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருந்தது தானேம்மா. அவளோட சம்மத்துடன் தான இந்த கல்யாணம் நடக்குது.” அவன் திடீரென கேட்க.

“ஏன் டா… அவளோட முழு சம்மத்துடன் தான் இந்த கல்யாணம் நடக்குது. நீன் ஏன் இப்படி கேட்க்குற.” அவர் சந்தேகமாக கேட்க.

“இல்லைமா… அவளுக்கு பிடிச்சதை தான நாம செஞ்சு கொடுப்போம் அதான் கேட்டேன்.” அவரிடம், அவன் நினைத்ததை சொல்லாமல் காரை எடுத்துகொண்டு சென்றான்.

“சூரியனின் வருகையால், அனைத்து மனிதர்களும் அன்றைய தினத்தை இனிதாக தொடங்க கடவுளை வேண்டிகொண்டனர். அதே போல் அந்த கல்யாண் மண்டபத்தில் பட்டுசேலையுடன் அங்கும் இங்கும் அலைந்து ஐயருக்கு, வேண்டிய பொருளை எடுத்துக்கொடுத்தும், வந்தவர்களை  அழைக்கவென வாசலில் இருவீட்டு பெரியவர்களும்,பெற்றோர்களும், நின்றுகொண்டு வரவேற்றும் கொண்டிருந்தனர்.”

”மணமகளின் அறையில், கல்பனாவும், பிரியாவும் ஹேத்துவுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். தோழிகள் கிண்டல் கேலியுடன் அலங்காரம் செய்ய, கல்யாணப்பெண்ணோ எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தால்.”

“அதே போல் மணமகனின் அறையில், நிர்மலின் உதவியுடன் வேஷ்டியை கட்டிகொண்டிருந்தான் ரகு. பட்டு சட்டையை போட்டுவிட நிர்மல் அவன் அருகில் செல்ல. அவனோ எந்தவித உணர்வின்றி நின்றிருந்தான்.”

“அவன் தோளில் கை வைத்து அவனை திருப்பினான். ‘எல்லாத்தையும் மறக்க ட்ரை பண்ணப்பாரு டா… அம்மாவுக்கா ட அதனால அஞ்சலிய மறக்கப்பாரு.”

“அம்மா என்றவுடன், அவனது காதலி மறந்து போனான். நிர்மல் கொடுத்த சட்டையை போட்டுகொண்டு இருக்கும் போது தான் மணமகனின் தாய் மாமான் அவனுக்கு மாலையிட்டு அவனை அழைத்துகொண்டு மேடைக்கு சென்றார்.”

“ஏதோ நினைவில் இருந்தவள், தன் கண்களை யாரோ மூடுவது போல இருந்தது.”

“யார்… யாரு.. என் கண்ணை மூடுனது யாரு ப்ரியா.. என அருகில் இருந்த தோழியிடம் கேட்டால். ஆனால் அவளின் தோழிகளோ வாய்க்குள்ளே சிரிப்பை அடக்கிகொண்டனர்.”

“யாராவது சொல்லுங்க டி, யாரு என் கண்ணை மூடுனது. தன் கண்ணை மூடின கையை தொட்டுப்பார்த்தால், அந்த கை தொட்டவுடன் அவளுக்கு மிகவும் பரிச்சயமான கையை தொடுவது போல உணர்வு.”

“கி… கிஷோ… கிஷோர்… நீ தானே” என அவள் சரியாக கண்டுபிடிக்க. அவனோ, அவளின் கண்களிலிருந்து கையை எடுத்தவுடன் அவள், அவனை திரும்பிப்பார்த்தால்.”

“எப்படி இருக்க டா மாமா, என் நிச்சயத்துக்கு கூட வரலை நீ, அப்படி என்ன உனக்கு அவ்வளவு பெரிய வேலை இருந்தாதா. உன்னை…” அவனை கேட்டுகொண்டே சரமாரியாக அவனை அடித்தால்.

“ஹே.. ஹேத்து… போதும், எனக்கு வலிக்குது… அய்யோ சாரி ஹேத்து” அவளின் அடியை பொறுக்க முடியாமல் அவளின் கெஞ்சினான்.

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டா மாமா…” அவனை கட்டியணைத்து அவளின் வேதனை சொல்ல முடியாமல் தவித்தால்.

“ நானும் உன்னை அதிகமா மிஸ் பண்ணேன், சாரி டா.. அதான் கல்யாணத்துக்கு கரெக்ட்டா வந்துட்டேன்ல…” அவளை சமதானம் செய்தான்.

“எப்போ வந்த கிஷூ அத்தை சொல்லவே இல்லை , நீ வந்ததை”

“ நான் நேத்து நைட் இரண்டு மணிக்கு வந்தேன், அம்மாகிட்ட  நான் தான் சொன்னேன் உன்கிட்ட சொல்லவேனானு. சப்ரைஸா இருக்கட்டும்னு.”

“என்னை எழுப்பிருக்காலாமே,”

“ நீ தூங்குற அழக பார்த்துட்டு தான் நான் வீட்டுக்கு போயிட்டு, இதோ இப்போ வந்தேன். வாசல்ல அப்பா,அம்மா, மாமா,அத்தை எல்லாரையும் பார்த்துட்டு வந்தேன்.”

“பாஸ் போதும், கல்யாணப்பொண்ண ரெடி பண்ணனும், இப்போ கொஞ்ச நேரம் வெளிய போறீங்களா. என பிரியா சொல்ல.”

“அவன் எதுக்கு போகனும் அவன் இங்க தான் இருப்பான், நான் ஆல்ரெடி ரெடியாகிட்டேன். நீ இங்கயே இரு கிஷூ.”

“ நீ ரெடியாகு ஹேத்து, நான் மாப்பிள்ளைய பார்த்துட்டு பேசிட்டு வரேன்.” அவளிடம் சொல்லிகொண்டு சென்றான்.

“அவளோ மனமில்லாமல் சரி என தலையாட்டினால்.”

“வெளியில் வந்தவன், நேராக மணமகன் அறைக்கு செல்ல அங்கோ, மாப்பிள்ளையை மேடை அழைத்து சென்றுவிட்டனர் என ஒருவர் சொல்லிக்கொண்டு சென்றார்.”

“மீண்டும் தனது அத்தை மகளை காண செல்லும் போது, அவனின் அம்மா, அழைத்தார்.”

“இந்த மாலையை ஹேத்து கழுத்துல போட்டு அவளை மேடைக்கு அழைச்சுட்டு வா.” என அவனிடம் சொல்ல.

“அம்மா, அப்பா தானே போடனும் மாலையை. ஏன் என்கிட்ட கொடுக்குறேங்க.”

“அப்பாவும், அண்ணாவும் ஐயர்கூடவே இருக்காங்க அதான் உன்கிட்ட கொடுக்கிறேன் போடா. அவளை அழைச்சுட்டு வா.” என அவனை அனுப்பி வைத்தார்.

“மாலை தட்டுடன் அவன் மணமகளின் அறைக்கு சென்று, அவளுக்கு மாலையிட்டு கையோட அழைத்து வந்தான்.”

“ஏன் ஹேத்து அமைதியா வர்ர.. உனக்கு தான் கல்யாணம் எந்த மகிழ்ச்சியும் இல்லாம இப்படி சோகமா இருக்குற.” அவளை அழைத்துக்கொண்டு போகும் போதே அவளிடம் பேசினான்.

“இல்லை… இல்லை… இல்லை… யாரு சொன்னா இது எனக்கு பிடிச்ச கலயாணமுனு. என் அப்பாவுக்காக தான் இந்த கல்யாணமே பண்ணிக்கிறேன் கிஷூ” கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

“ஆனால் சுற்றிலும் இருக்கும் அவர்களது உறவினர்கள், மற்றும் மகிழ்ச்சியில் இருக்கும் அப்பா, மாமா, அத்தை அம்மா இவர்களின் பாசத்திற்க்காக எதுவும் செய்யலாம் அதற்க்கு தான் இந்த கல்யாணமே தவிர என் சந்தோஷத்திற்க்கு இல்லை.”

“என்ன ஹேத்து நான் பேசிட்டு வரேன் நீ அமைதியா இருக்குற.”

“எனக்கு பிடிச்சு தான் இந்த கல்யாணம் நடக்குது. நீ எதுவும் குழப்பாதே. என்ன அப்பாவ விட்டு போறேன் அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.”

“ எங்க போக போற… இதோ இருக்கு சாலிகிராமம், இதோ இருக்கு நம்ம வீடு ரொம்ப தூரம் இல்லை சரியா. தினமும் உன்னை பார்க்க நான் வரேன். எப்பவும் நான் உனக்கு துணையா தான் இருப்பேன் ஹேத்து. சரியா.” அவளின் மனதுக்கேற்ற மாதிரி பேசி தெளிய வைத்தான்.

“மேடையில் அவளை அமர்த்திவிட்டு அவன் கொஞ்சம் தள்ளி நின்றான். அப்பொழுது தான் மணமகனின் முகத்தை பார்த்தான். எங்கயோ பார்த்த உணர்வு அவனுக்கு. ஆனால் நினைவு பிடிபடவில்லை.”

“தன் அருகில் ஒருவர் அமர்வது போல் உணர்வு ஆனால் அவன் சிறிதும் திரும்பி பார்க்கவில்லை. அவளோ அவன் அருகில் இருப்பது தணலில் மீது இருப்பது போல இருந்தது அவளுக்கு. இருவரும் இப்படி நினைத்துகொண்டிருக்க, ஐயரோ அவன் கையில் தாலியை கொடுத்து கட்டச்சொன்னார்.”

“ஐயரின் குரலுக்கு செவிசாய்த்து அவன் கையில் தாலியை வாங்கினான். அப்பொழுது அவனுள் ஒரு உணர்வு. இவளின் கழுத்தில் தாலிக் கட்டிவிட்டால் இனி என் மனைவி ஆனால் காதலி இல்லையே?? நான் என் காதலியை மறந்து இதோ அருகில் இருக்கிறாளே இவளை மனப்பூர்வமாக மனைவியாய், என்னில் சரிபாதியாய் ஏற்க்கிறேன் ஆனால் அவள் என்னை ஏற்பாளா???” கையில் தாலியை வைத்துகொண்டு சிந்தித்தான்.

“ரகு தாலியை கட்டுப்பா” என கௌசியில் குரலில் இருந்து நிகழ்வுக்கு வந்தான். அவள் கழுத்துக்கு அருகில் தாலியை கொண்டு சென்று அவனின் சரிபாதியாய், மனைவியாய் அவளை அவனுடையாத ஏற்க முடிவு செய்து, மனதில் அஞ்சலி இருந்த இடத்தில் இனி இவள் மட்டுமே.”

“ஆனால் அஞ்சலியை போல் இவளை ஒரு நாளும் நான் காதலிக்க மாட்டேன். என் மனைவி மட்டுமே இவள்” என மூன்று முடிச்சுடன் அவளை மனைவி ஸ்தானத்தில் வைத்துக்கொண்டான்.

“அவளோ அவன் தன் கழுத்தில் தாலி கட்டியது, என்ன தான் ஒரு பெண் காதலித்திருந்தாலும், வாழ்க்கையில் ஒருவனுக்கு மட்டுமே இடம் அது கணவன் மட்டும் தான். அதில் அவனை கொண்டு வந்தால். ஆனால் காதலனாய் அல்ல வெறும் கணவன் என்ற பந்தம் மட்டுமே.”

“இனி என் வாழ்க்கையில் நந்துவிர்க்கு இடம், இல்லை. இவன் மட்டுமே. தமிழச்சியின் மரபாய் அவளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வளர்ந்தவள் தானே.”

“குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், சிறியவர்கள், என அனைவரும் புடை சூழ. அவளை தன்னில் ஒருபாதியாய் ஏற்றுக்கொண்டு, அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.”

“சீதையின் மறுமுகம் இவளிடம் இருக்கிறதோ… என்ற கணிப்பில் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்த சரண்யாவை ஒரு நிமிடம் அசையாது பார்த்தான். மென்னடையில் கொடி போல் அவளின் கூந்தல் ஆட, பூமிக்கு வலிக்குமோ என்ற நடையில் அவள், அவனில் அருகில் வந்து அமர்ந்தால்.”

“குனிந்த தலை நிமிராமல், அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த பட்டுபுடவையில் அவள் மிகவும் அழகாக இருந்தால். அவனோ பட்டுவேஷ்டி சட்டையில், மாப்பிள்ளைக்கு உரிய கம்பீரத்தில் அமர்ந்திருந்தான்.”

“ராமன், சீதை கல்யாணத்தை நடத்திகொடுக்க சிவன், பார்வதி மற்றும் தேவர்களும்,ரிஷிகளும், பூலகம் வந்தார்கள். அதே போல் தான் விஜய், சரண்யாவின் திருமணத்தை நடத்திகொடுக்க, அவர்களின் உறவினர்களும், குடும்பம் உறுப்பினர்களும், போட்டி போட்டு கொண்டு அவர்களைன் திருமணத்தை நடத்திகொடுக்க வந்திருந்தனர்.”

“அனைவரின் சாட்டியாகவும், ஆசீர்வாதமும், பெற்று, சரண்யாவின் கழுத்தி மஞ்சல் தாலியை கட்டி அவளை, அவனுடையவளாக மாற்றினான். மூன்று முடிச்சுடன் அவளின் காதில் மெல்லிய குரலில் ‘என்னில் நீ பாதியடி, உன்னில் நான் பாதியடி’ சொல்லிவிட்டு அவளின் நெற்றியில் குங்குமம வைத்துவிட்டான்.”

“அவனின் திடீர் பேச்சால் கொஞ்சம் அதிர்ந்தாலும், அவன் கூறிய ஒவ்வொன்றையும் தன் மனதில் சேகரித்து வைத்துக்கொண்டால் பெண்ணவள்.”

“எல்லாரின் ஆசீர்வாதமும் பெற்று, மணமக்களுடன் எடுத்துகொண்ட புகைப்படமும், அவர்களின் நிலையை எண்ணி கேலி செய்யும் உறவினர் கூட்டமும், இந்த நாளை என்றும் மறக்காமல் வைத்திருந்தனர்.”

“அனைத்து சடங்கும், சம்பிரதாயமும் முடிந்து, மணமக்கள் கிளம்பும் நேரமும் வந்தது.”

“அப்போ நாங்க கிளம்புரோம், அண்ணா, அண்ணி… நல்ல நேரம் போகுறதுக்குள்ள பொண்ணை வீட்டுக்கு அழைச்சுட்டு போகனும். இப்போ கிளம்புனா தான் கரெக்ட்டா இருக்கும்.” கௌசல்யா, அன்புவிடம் சொல்ல.

“சரிம்மா, பார்த்து போயிட்டுவாங்க.”

“ நாங்க முன்னாடி கிளம்புறோம் ரகு, மருமகளை பார்த்து கூப்பிட்டு வா.” அவனிடம் சொல்லிவிட்டு முன்னே சென்றனர்.

“ஹேத்து… அங்க எல்லாம் பார்த்து நடந்துக்கோம்மா, இங்க இருக்குற மாதிரி அங்கயும் எந்த பிடிவாதமும், சேட்டையும் பண்ணக்கூடதும்ம.  நல்லா இருக்கனும், நீ. அங்க இருக்குறவங்கிட்ட நல்ல பேரு வாங்கனும் சரியா.” ஒரு தாயாய் அவளிடம் சொல்ல அவளோ, தலை நன்றாக ஆட்டினால்.”

“அப்பா, அடிக்கடி வந்து பார்க்கிறேன் ஹேத்துமா… நீ எப்பவும் சிரிச்ச முகமா இருக்கனும் செல்லம்மா.” அன்பு மகளின் பிரிவை தாங்க முடியாதவராய் கண்கலங்கிவிட்டார்.

“தந்தையை கட்டியணைத்து அவளும், கண்கலங்க ஆரம்பிக்க. இடையில் புகுந்த கிஷு தான் நிலைமை சீராக்கினான். “

“என்ன மாமா, அவளே முதல் முறையா, மாமியார் வீடுக்கு போறா இப்போ போய் அழுது வடியுறீங்க.. அவளை சந்தோஷமா வழியனுப்பி வைக்கனும்.” பெரிய மனிதனாய் அவன் கூறினாலும், அவன் மனதிலும் அவளின் பிரிவை தாங்க முடியவில்லை.

“போயிட்டு வரேன் அம்மா…”

“போயிட்டு வரேன்ப்பா…”

”சரிம்மா, அத்தையும், மாமாவும் உன்கூட வருவாங்க…” ஒரு அன்னையாய் மகளின் துணைக்கு அனுப்பி வைத்தார்.

“ நீயும் வா கிஷூ… அம்மா, கிஷூவையும் வரச்சொல்லுங்க.” அவள் அடம் பிடிக்க.

“ நான் எப்படி வரமுடியும், ஹேத்து…” என அவன் சொல்ல.

“ நீங்களும், வாங்களேன், அவ கூப்பிடுறால” முதல் முறையாய் பேசினான் ரகு,கிஷுவிடம்.

“கிஷோர் நீயும் போயிட்டு வா..” அன்பு சொன்னார்.

“சரிங்க மாமா, அத்தை போயிட்டு வரோம்..” ரகு, அன்புவிடமும், சித்ராவிடமும் சொல்லிகொண்டு, அவளின் கையை பிடித்துகொண்டு காரில் ஏறினான்.

“அவளும், அதை ஏற்க பழகிக்கொண்டால். ஆனால் மற்றவர்களுக்காக  மட்டுமே, அவளுக்கு இல்லை.”

“ நானும் உன்கூட வரேன் அக்கா, நீ மட்டும் என்னை விட்டு போற. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்க்கா. தினமும், நீ தானே எனக்கு சாப்பாடு ஊட்டிவிடுவ, தலை பின்னி பூ வைச்சுவிடுவ. இப்பொ நீ போனா நான் என்ன பண்ணுவேன்.” சிறு குழந்தை அழுதுகொண்டே சரண்யாவை கட்டிகொண்டு இருந்தது.

“ஷிவானி, அக்கா இங்க பக்கதுல இருக்குற ஊருக்கு தான் போறா. நாளைக்கு வந்திருவா. நீ இப்படி அழக்கூடாதும்மா. ஷிவானியின் தந்தை சமாதானம் செய்ய. அதையும் மீறி அவள் அழுதுகொண்டிருந்தால்.”

“அக்கா, நாளைக்கு வருவேன் ஷிவானி. அது வரைக்கு அம்மாக்கிட்ட சமத்தா இருக்கனும் சரியா… அக்கா போயிட்டு வரேன் செல்லம்” ஷிவானியின் கன்னத்தில் முத்தமிட்டு, அனைவரிடமும் சொல்லிகொண்டு காரில் ஏறினால்.

“எல்லா பெண்களுக்கும் வரும் அழுகை என்றாலும், பிரிவின் துயரம் அதிகம் தானே… புதிதாக எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  ஆனால் அதுவே அவர்களுக்கு பழகிவிடும்.”

“அவர்களுக்கான நேரமும், காலமும், தங்கு தடையின்றி வந்தது. இரு ஜோடிகளுக்கான முதல் இரவு.  இந்த இரவு இவர்களின் வாழ்க்கையில் எந்த மாதிரியான சூழ்நிலையை ஏற்ப்படுத்த போகிறது என தெரியவில்லை.??”

                                             தொடரும்……………………

Advertisement