Advertisement

                                  காதல் தோழா 3

 

“என்னங்க, கல்யாண தேதி குறிச்சிட்டாங்களானு கேளுங்க சம்மந்திக்கிட்ட”

“இல்லை சித்ரா, சம்மந்தி ஜோசியர்கிட்ட போகும் போது என்னையும் அழைச்சிட்டு போகனும் நேத்தே சொன்னாங்கம்மா. ஆனா இன்னும் எனக்கு போஃன் பண்ணலைம்மா”

“வேலையா இருப்பாங்க போல, அவங்க போஃன் பண்ணா சொல்லுங்க கெளசி அண்ணிக்கிட நான் பேசனும்”

“சரிம்மா, சொல்லுறேன்…”

“ஹேத்து என்ன பண்ணறா சித்ரா”

“ நிச்சயம் முடிஞ்சதுல இருந்து, என்கிட்ட சரியா பேசலைங்க… என்னனு கேட்டா ஒன்னும் சொல்லமாட்டேங்குறா. கிஷோர் நிச்சயத்துக்கு வரலைனு கோவம் போல” அவர் மனதில் கிஷோர் மட்டுமே காரணம் என்று போல் கூறினார்.

“அப்படியா… அவனுக்கு போஃன் போட்டா எடுக்க மாட்டாறான். நான் மாமாவுக்கு போஃன் பண்ணி கேட்க்குறேன். இப்போ ஹேத்து எங்க இருக்கா”

“ ரூம்ல இருக்காங்க அப்படியே சாப்பிட கூப்பிட்டுவாங்க. ஒழுங்க சாப்பிட்டு மூனு நாள் ஆகுதுங்க.” குறையாக சொன்னார்.

“சரிம்மா…”

“கையில் ரமணிசந்திரன் நாவலில் கண்கள் பதிந்திருந்தாலும், நினைவும், மனதும் வேறெங்கோ பயணத்தில் இருந்தது. அவளின் நினைவை கலைப்பது போல் அறையின் கதவு திறந்துகொண்டு வந்தார் அன்பு”

“தந்தையின் வரவை உணர்ந்து, மெத்தையில் எழுந்து அமர்ந்தாள். ‘வாங்கப்பா,”

“என்னமா, சரியாவே நீ சாப்பிடுறது இல்லைனு அம்மா சோகமா சொல்லிட்டு இருந்தா. கிஷோர் மேல கோவமா ஹேத்துமா.”

“ஆமாம் அப்பா, அவன் கடைசிவரைக்கு என் நிச்சியத்து வரலை. போஃன் பண்ணா, எடுக்கலை. செம கோவத்துல இருக்கேன்ப்பா.”

“அவனுக்கு என்ன வேலையோ, வராமா இருப்பானா அவன். உன் கல்யாணத்துக்கு அவன் தான் முன்னாடி நிப்பான் கவலைப்படாதேம்மா. இதுக்கா சரியா சாப்பிடுல நீ”

“ம்ம்ம்… அவான் வருவானாப்பா”

“கண்டிப்பா வருவான்… நீ இப்படியே ரூம்ல இருந்தேனா அம்மாவும், நானும் எப்படி கல்யாண வேலை பார்க்க முடியும்.” அவரின் மனதில் உள்ளதையும் எடுத்து சொன்னார்.

“இல்லைப்பா, நான் சந்தோஷமா இருக்கேன்… நீங்க கவலைப்படாம இருங்கப்பா, வாங்க சாப்பிட போகலாம்” தந்தைக்காவது இனி மகிழ்ச்சியாய் இருக்க நினைத்தால்.”

“ நினைத்தால் மாறமுடியுமா?? அவள் மனதில் இருக்கும் காதல் தான் மறக்க செய்யுமா?? பாவம் அவள் அறியவில்லை முதல் காதலனை மறந்து, தனக்கு நிச்சியம் ஆனாவனை எப்படி இதயம் ஏற்க்கும் என்று?”

“காதல் ஒன்றும் நிமிடத்திற்க்கு நிமிடம் மாறும் பச்சோந்தி இல்லை. அது இரு உயிர்களுக்குள் இருக்கும், அன்பு, நேசம், பாசம், உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு வரம். ஆனால் இவளால் பெற்றோர்களுக்கு மட்டுமே உணர்வுகளை மறைக்கமுடியுமே தவிர, அவனுக்கு இல்லை. பார்க்கலாம் அவளின் உணர்வை அறிவானா??? இல்லையா???”

“கல்யாணம் நல்லா  க்ரேண்டா இருக்கனும், யாரும் ஒரு குறையும் சொல்லக்கூடாது. சாப்பாடு முதல் கொண்டு எல்லாமே பர்பெக்ட்டா இருக்கனும் கோபால். ஒன்னு மிஸ் ஆனாலும் உங்க கம்பெனில மேல நான் கம்ப்ளைட் குடுப்பேன். அப்புறம் மாப்பிளை, பொண்ணு அறை, உறவுக்காரங்க அறை எல்லாமே க்ளீனா, நீட்டா இருக்கனும், தண்ணி வசதி கொஞ்சம் குறையக்கூடாது. வரவேற்ப்புல எங்க சொந்தக்காரவங்க, பொண்ணு வீட்டு சொந்தக்காரவங்க இருப்பாங்க. நீங்க எல்லாம் ரெடி பண்ண வேண்டாம். அரேன்ஞ்மெண்ட் பக்காவ இருக்கனும்.”

“முதல் நாள், அப்புறம் கல்யாணம் நாள் இந்த ரெண்டு நாளுக்கான சாப்பாடு மெனு என் மனைவி கௌசல்யா சொல்லுவாங்க. அதை மட்டும் அவங்ககிட்ட ஒப்படைக்குரேன்.”

“ஒகே சார்… எல்லாமே சரிய செஞ்சு கொடுப்போம், எங்க மேல நீங்க கம்ப்ளைண்ட் கொடுக்க தேவையிலாத மாதிரி இந்த கல்யாணத்தை நாங்க நடத்துகொடுக்குறோம் சார். எங்களை நம்புங்க.” அந்த அரேன்ஞ்மெண்ட் மேனேஜர் நம்பிக்கையுடன் கூறிகொண்டு இருந்தார்.”

“உங்க மேல நம்பிக்கை இல்லாமையா. கம்பெனி ஆர்ம்பிச்ச நாலு மாசத்துல உங்களுக்கு இந்த காண்ட்ராக்ட் கொடுப்பேன். என்ன இருந்தலும் சிறு பிரச்சனை வரத்தானே செய்யும். அதான் முன்னாடியே எச்சரிக்கை பண்ணேன் கோபால். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.”

“அய்யோ சார்… இதுல தப்பு என்ன இருக்கு… எங்கமேல நம்பிக்கை வச்சு இந்த பெரிய காண்ட்ராக்ட்ட கொடுத்திருக்கீங்க அதுக்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.”

”சரிப்பா… இரு என் மனைவிய கூப்பிடுறேன். அவங்க சாப்பாடு பற்றி உங்ககிட்ட சொல்லுவாங்க.”

“சரிங்க சார்.”

“கௌசிம்மா… இங்க வா…”

“காஃபி ட்ரேயுடன் வர்வேற்ப்பு அறைக்கு வந்தார். ‘என்ன தம்பி, சார் உங்களை நல்லா பயமுறுத்திட்டாரா.” என பேசிகொண்டு வந்திருந்த மேரேஜ் காண்ட்ராக்ட்ரிடம் கேட்டார்.

“மேடம், சார் பயமுறுத்தல ஆனா, எல்லாமே கரெக்ட் அஹ் இருக்கனும் சொன்னாங்க. இது எல்லாருமே எதிர்ப்பார்க்குறது தானே மேடம்.”

“முதல காஃபி சாபிடுங்க நான் என்ன மெனு சொல்லூறேன்.”

” நோ மேடம், வொர்க் பர்ஸ்ட், நெக்ஸ்ட் தான் காஃபி.”

“இங்க காஃபி பர்ஸ்ட், நெக்ஸ்ட் தான் வொர்க்” அன்பு கட்டளை விதித்தார்.

“ கல்யாணத்துக்கு முதல் நாள் ஈவ்னிங்க் காஃபி, ஸ்னாக்ஸ் கோபி மஞ்சுரியன், வாழைக்காய் பஜ்ஜி”

“ இரவு உணவுக்கு, வரவங்களுக்கு செறிமானம் ஆககூடிய சாப்பாடா இருக்கனும்,” என வரிசையாய் உணவு வகைகளை அடுக்கினார்.

“மகனின் கல்யாண வேலையில் இவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க, அவனோ ஆபீஸில் அமர்ந்துகொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.”

“ நிச்சயம் முடிந்த நாளில் இருந்து, இன்று வரை அவன் சிந்தனையிலே இருந்தான். அது அவன் காதலியை பற்றியா, இல்லை வருங்கால மனவியை பற்றியா எனக்கேட்டால் அவனால் சொல்ல முடியாது.”

”அஞ்சலியை காதலித்த நாளில் இருந்தே அவன் மகிழ்ச்சியாய் இருந்தான் என்றால், அது இல்லவே இல்லை. அஞ்சலியிடம் முதலில் காதல் சொன்னவன் அவன் தான் என்றாலும் அவளின் பிடிவாதம் அவனுக்கு போக போகத்தான் தெரிந்தது.”

“ அவனது இரண்டாவது கம்பெனி ப்ராஞ்ச் ஓப்பனிங்க்காக அவன் அலைந்துகொண்டிருக்கும் போது  தான் அவளின் பிடிவாதம் தெரிய ஆரம்பித்தது.”

“எங்க இருந்தாலும், டே காஃபி பார்க்கு வா ரகு, உனக்காக வெயிட் பண்ணுரேன்.”

“இல்லை அஞ்சலி, முக்கியமான வேலை இருக்கு… நாளைக்கு மீட் பண்ணாலாம்” அவன் சொன்னது கட் செய்துவிட்டான்.

“ஆனால் அவளோ, அவனின் வேலையை பொருட்படுத்தாது. அவனுக்காகவே காத்திருந்தால். இரவு ஒன்பது மணி போல் அவனுக்கு போஃனுக்கு வந்தது.”

“என்ன அஞ்சலி, இப்போ தான் வேலை முடிஞ்சு வரேன் ப்ளீஸ் நாளைக்கு பேசுறேன்” என அவன்  அழுப்பாக கூறி வைக்க போக.

“ நான் இன்னும் அதே காஃபி ஷாப்ல தான் இருக்கேன் ரகு, நீ வந்தா தான் நான் என் வீட்டுக்கு போவேன். இல்லைனா இரவு முழுக்க இங்கயே இருப்பேன்” அவள் சொல்லிவிட்டு போஃனை வைத்தாள்.

“முதலில் அவனுக்கு புரியவில்லை, ஆனால் அதே காஃபி ஷாப்பில் இன்னும் எனக்காக அவள் காத்திருப்பது அவனுக்கு மகிழ்ச்சியை தரவில்லை, கோவத்தையும், பதற்றத்தையும் தான் தந்தது.”

“வேக வேகமாக கீழே சென்று, காரை எடுத்துகொண்டு, யாருமற்ற அந்த சாலையில் வேகமாய் சென்றான். அவள் சொன்ன காஃபி ஷாப்பில் அவளை சுற்றி, அந்த ஷாப்பின் ஓனரும், சர்வரும் இருந்தனர்.”

“மேடம் மணி பத்தாக போகுது. நாங்க ஷாப்பை க்ளோஸ் பண்ணிட்டு கிளம்பனும். நீங்க போனாதான் நாங்க கிளம்ப முடியும்” அவள் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக சொன்னார்.

“ அவளோ, அதையெல்லாம் காதில் வாங்காமல் அந்த சாலையை பார்த்துகொண்டிருந்தால். அவன் வருவானா?? இல்லையா?? என்று”

“அந்த காஃபி ஷாப்பில் வண்டிய நிறுத்திவிட்டு ஓடி வந்தான், அவள் எந்த நிலையில் இருக்கிறால் என்று.”

“ஆனால் அவனையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தால். ‘என்ன அஞ்சலி வேலை இருக்கு, நாளைக்கு மீட் பண்ணலானு சொன்னா இப்படியா இவ்வளவு நேரம் வரைக்கு இருப்ப. கிளம்பு போகலாம்” தன்மையாக பேசினான்.

“அவளோ, அவன் பேசியது கேட்டும், கேட்காமல் எழுந்து வெளியே சென்றால்”.

“பின்னாடியே அவனும் வந்தான், ‘என்ன அஞ்சலி ஏன் அமைதியா இருக்க, நான் பேசுனது உன் காதில விழுந்துச்சா, நான் சொன்னது கேட்க்காம ஏன் எனக்காக வெயிட் பண்ண.”

“சிம்பில் நான் உன்னை காதலிக்குறேன். அதுனால என்ன வேலையில நீ இருந்தாலும் நான் கூப்பிட்ட உடனே என் கண்ணு முன்னாடி நீ இருக்கனும் அப்படி இல்லையினா. என்ன செய்வேனு இதோ இப்போ பார்தேல அப்படி செய்வேன்.ஞாயபகம் இருக்கட்டும்” அன்று தான் அவளின் பிடிவாததை முழுமையாக கண்டான்.

“என் குடும்பம் பரம்பரை பணக்கார வர்க்கம், நீயும் அப்படி தான் அப்புறம் எதுக்கு வேலை வேலைனு அதை கட்டிட்டு அழுகுற. நம்ம தலமுறையே உக்கார்ந்து சாப்பிடுர அளவுக்கு சொத்து இருக்க, ஆனா நீ முக்கியமான வேலைனு என்னை ஒதுக்கிட்டு அது பின்னாடி போகுறது எனக்கு பிடிக்கலை ரகு. எனக்கு உன்கூட நேரம் செலவழிக்கனும், பேசனும், பழகனும், இன்னும் நாமா ஒழுங்காவே காதலிக்க ஆரம்பிக்கலை ரகு.”

“காதலிக்கும் போது, என்ன வேலை இருந்தாலும், நீ தான் எனக்கு முதல்னு சொல்லுவ. ஆனா இப்போ அந்த வேலை உனக்கு முக்கியமா போச்சு. போ அந்த வேலையைவே காதலி, என்னை வேண்டாம்.” என கோவமாய் பேசிவிட்டு அங்கிருந்து அவளது காரை எடுத்துகொண்டு புயல் போல் சென்றுவிட்டால்.

“அவள் பேசியதை கேட்டதும் மனதில் , “தவறான ஒருத்தியை காதலித்து விட்டோமோ” என அவன் சிந்தித்தான். காதலித்த நாள் இருந்து அவளுக்கென நேரம் ஒதுக்குவான் ஆனால் அது வெறும் பதினைந்து நிமிடம் தான். ஆனால் அதுகூட இப்பொழுது ஒதுக்க நேரம் இல்லையென்றால் என்ன செய்வது”.

“அதற்கடுத்து அவளிடம் இருந்து ஒரு போஃன் கால் இல்லை, மெசேஜ் இல்லை, பார்ப்பது கூட அறிதாக இருந்தது அவளை. அவனும் விட்டுபிடிக்கலாம் என அவளை கண்டுகொள்ளாமல் நல்லதொரு முகூர்த்ததில் அவனது இரண்டாவது கம்பெனியை ஓப்பன் செய்தான்.”

“அவனது உழைப்பில் முதல் கம்பெனியை தொடர்ந்து, அடுத்த இரண்டு கம்பெனிகளை ஆரம்பித்து அதுவும் பெயர் சொல்லும் அளவிர்க்கு நன்றாக சென்றுகொண்டிருந்தது.”

“ஆனால் அஞ்சலி மட்டும், அவனிடம் இருந்து வில்கி இருந்தால். அவளது இடத்தில் இருந்து பார்த்தால் எல்லாமே சரி. ஆனால் அவன் இடத்தில் இருந்து பார்த்தால் எவ்வளவு அளவுக்கு காதலி முக்கியமோ, அதை அளவு அவன் உழைப்பில் உருவான தொழிலும் முக்கியம்.”

“சிந்தனையில் இருந்தவனை கலைத்தான் நிர்மல். ‘ரகு ஆர் யூ ஆல்ரைட்’ அவன் தோளில் கை வைத்தான்.

“ஹான்… என்ன நிர்மல்”

“என்னாச்சு மேன்… ஏன் யோசனையா இருக்க??”

“ நத்திங் நிரு… இம்பார்ட்டெண்ட் வொர்க் இருக்கா”

“எஸ் மேன்… இன்னைக்கு நம்ம ஷோரூம்க்கு ஆடி, அண்ட் பென்ஸ், ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி ஆகுது.”

“ நீ இருந்து அந்த அக்ரீமெண்ட்ல சைன் பண்ணனும், அதான் உனக்கு ஞாயபகம் படுத்துனேன்.”

“ஓஓ… ஞாயபகம் இருக்கு நிரு… எப்போ கோகனும்.”

“லெவன் ஒக்லாக்”

“ஓகே டா”

“ரகு, என்கிட்ட ஷேர் பண்ண முடியாத அளவுக்கு நீ விலகி இருக்காத. நான் எப்பவுமே உன் நண்பன் தான். அதை மறக்காத சரியா.”

“சரிடா… வொர்க் முடிஞ்ச பின்னாடி பேசலாம்.” அவனு மனதில் இருக்கும் குழப்பத்தை நண்பனாவது தீர்த்து வைப்பான என பார்க்கலாம்”

“ நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்

அன்பே ஓர் அகராதி…

நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்

அன்பே உன் தலைக்கோதி” அழகான காதல் பாடல் சரண்யாவின் கைப்பேசியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

“அப்பொழுது தான் குளித்து முடித்து தலையை காய வைத்துகொண்டிருந்தால் சரண்யா. போன் எடுத்துப்பார்த்தால் அதில் சின்ன புன்னகையுடன் விஜயின் போட்டோ அந்த டிஸ்ப்ளேவில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.”

“கொஞ்சம் வெட்க்கமும், ஆசையும் போட்டி போட்டுகொண்டு இருந்தது. சிரிப்புடன் அந்த போனை ஆன் செய்து காதுக்கு கொடுத்தால்.”

“சொல்லுங்க…”

“எழுந்திரிச்சிட்டயா… சரண்யா”

“ம்ம்ம்… இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன்.”

“ஓஓ… சாப்பிடயா”

“இல்லை… இனிமே தான்.. நீங்க ஆபீஸ் கிளம்பிட்டேங்களா நீங்க…”

“சாப்பிட்டு கிளம்பனும்…”

“மெதுவா பைக்ல போங்க… ஸ்பீடா போகாதீங்க.”

“சரி..”

“ நேர நேரத்துக்கு சாப்பிடுங்க… ஆஃப்டர்னூன் ஜூஸ் குடிங்க”

“சரி…”

“ம்ம்ம்… அவ்வளோ தான்” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, விஜயை அவனின் அத்தை அழைத்தார்கள்.

“இதோ வரேன் அத்தை, ஓகே சரண்யா… அத்தை சாப்பிட கூப்பிடுறாங்க… அடுத்த வாரம் கல்யாண சேலை எடுக்கனும் சொன்னாங்க அப்போ பார்க்கலாம்.”

“ம்ம்ம்… சரிங்க..”

“ நீயும் சாப்பிடு, எனக்கு மட்டும் சொன்னாப்போதாது”

“ம்ம்ம்… சரிங்க”

“ எனக்கு நேரம் கிடைச்சா உனக்கு போன் பண்ணுறேன். பாய்”

“ம்ம்ம்… பாய்” அவனிடன் பேசி முடித்து போனை வைத்தால்.

“அம்மா, அப்பாவை இழந்து பெரியப்பா, பெரியம்மா வளர்ப்பிலும், கவனிப்பிலும்  வளர்ந்தவள் சரண்யா. ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜில் முதுகலை பட்டம் இந்த வருடம் தான் முடித்தால்.”

“காஞ்சிபுரத்தில் சித்தி, சித்தாப்பா வீட்டிர்க்கு விடுமுறைக்கு வந்தால். வெள்ளிகிழமை மாலை கோவிலுக்கு சித்தியுடன் கோவிலுக்கு சென்றவளை பார்த்த முதல் பார்வையில் விஜய்க்கு பிடித்துவிட்டது.”

“மாமாவிடமும், அத்தையிடம் சரண்யாவை சுட்டிக்காட்டி அந்த பெண் போல் எனக்கு வாழ்க்கை துணைவி அமைந்தால் நன்றாக இருக்கும் என விளையாட்டாக கூறினான். ஆனால் அவனின் மாமாவோ சரண்யாவேயே தனது மருமகனுக்கு பெண் பார்த்துவிட்டார்.”

“அவனுக்காகவே, தங்களுக்குகென குழந்தை கூட பெற்றுக்கொள்ளாமல் அவனுக்காவே வாழ்ந்தார்கள். அது தான் அவன் விருப்பம் கொண்ட பெண்ணையும் பார்த்துவிட்டனர்.”

“விஜய் தனியாய் வளர்ந்தவன் என்றாலும், அவனுள் இருக்கும் குணம் எனக்கு பிடித்த பொருள், எனக்கு மட்டுமே என்ற ரகம் தான் அவனது குணம். ஆனால் எவ்வித பாதிப்பு கொடுக்கும் என அவன் அறியவில்லை”

“சரண்யா, அமைதி, அன்பு, பாசம் என அனைவருக்கும் வாரிவழங்குவாள். பிடித்த பொருளா இருந்தாலும் மற்றவர்கள் கேட்டால் விட்டு கொடுத்து விடுவால். அதனால் அவள் மீது எல்லாருமே அன்பாக இருப்பார்கள். அதே போல் தான் இனி வருங்கால கணவனுக்கும்,. ஆனால் அதனால் பாதிக்கப்பட போவது அவள் என நினைக்கவில்லை.”

“விஜய்… கல்யாண சேலையும், பட்டு வேஷ்டி சட்டையும் எடுக்கனும். பொண்ணு வீட்டுல நாங்க இன்னைக்கு பேசிடுரோம். உனக்கு லீவ் கிடைக்குமா.”

“போகலாம் அத்தை… ஆனா கல்யாண சேலை நானும், சரண்யாவும் தான் செலக்ட் பண்ணுவோம். அதனால சரண்யாவையும் அழைச்சுட்டு வரச்சொல்லுங்க அத்தை.”

“சரிடா… சொல்லிறோம்…”

“மாமா எங்க அத்தை”

“அவரு, கல்யாண மண்டபம் பார்க்க போயிருக்காங்க விஜய்”

“சரிங்க அத்தை… இந்தாங்க என் எ.டி.எம் கார்ட் மாமாகிட்ட கொடுத்துருங்க அத்தை. என்கிட்ட செலவுக்கு இருக்கு அத்தை. இதை மத்ததுக்கு யூஸ் பண்ணிக்கோங்க.”

“ஏண்டா…  நம்ம கிட்ட இல்லாத பணமா”

“இல்லை அத்தை… சரண்யாவுக்கு எடுக்க போற தாலி ஜெயின், மோதிரம், சேலை இது எல்லாம் மட்டும் என் பணமா இருக்கடும். பீளீஸ் அத்தை.”

“சரிடா… கொடு” அதை வாங்கிகொண்டார்.

“என்ன அண்ணி, போஃனவே பார்த்துட்டு இருகீங்க. அண்ணா போன் பண்ணாங்களா…” கேலியுடன் கேட்டால்.

“ஆமாம் டீ… ஆபீஸ் கிளம்பிட்டாரு அதை சொல்ல போன் பண்ணாங்க.”

“அதை மட்டுமா சொன்னாங்க” அவளை கிண்டலுடன் பார்த்தால்.

“வேற என்ன சொல்லுவாங்க”

“ஒரு ஐ லவ் யூ, ஒரு கிஸ்… அப்புறம் ஒரு கனவுல ஹக்கிங்… கார்த்திகா சொல்லிகொண்டே போனால்.”

“போதும் டீ… அப்படியெல்லாம் நாங்க பேசலை… இப்படியெல்லாம் பேசுனா எனக்கு கூச்சமா இருக்கு டீ… தயவு செஞ்சு என்கிட்ட பேசாத கார்த்திகா”

“ரொம்ப பண்ணுறீங்கண்ணி… இதைவிட அண்ணா பேசப்போறாங்க அப்போ என்கிட்ட சொன்ன மாதிரி சொல்லுவீங்களா.”

“அவர் அப்படியெல்லாம் பேச மாட்டாரு…”

“பார்க்கலாம்… அம்மா கோவிலுக்கு கூப்பிட்டாங்க வாங்க போகலாம்”

“ நானும் பார்க்குறேன்…இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன்.” அவளை வெளியே துரத்திவிட்டு உடை மாற்றினால்.

“இரு ஜோடிகளின் வாழ்க்கை எந்த திசையை நோக்கி போகப்போகிறது என தெரியாமல். இருஜோடிகளின் கல்யாண நாளை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள்.”

 

                                                  தொடரும்…………….

Advertisement