துர்க்கா, தினமும் திட்டி தீர்த்தாள்.. ‘எதுக்கு குடிக்கிற.. எத்தனை நாட்களாக இந்த பழக்கம்’ என அவன் ஒருகையால் சிரமப்படும் போதெல்லாம் திட்டி தீர்த்தாள்.
லக்ஷ்மியும் விடாமல் “கேளு துர்க்கா, இவன் சரியில்ல இப்போவெல்லாம்.. எனகென்னமோ பொண்ணு பார்க்கறோம்ன்னு கையை உடைச்சிகிட்டான் போல” என எடுத்துதான் கொடுத்தாள் அக்காவிற்கு.
துர்க்கா தம்பியை முறைத்தார்.
சர்வேஷ் மருத்துவமனையில் இருப்பது அறிந்து.. அவனின் மாமா வந்து பார்த்து சென்றார். அவனின் மாமா துர்க்கா இருந்தால்.. அதிக தலைகாட்டமாட்டார். வந்து பார்த்து சென்றுவிட்டார்.
தம்பி வீடு வந்ததும் கிளம்பலாம் என துர்க்கா சென்னையில் இருந்தாள் பிள்ளைகளோடு. அவளின் கணவர் மட்டும் வேலையை பார்க்க பங்களூர் சென்றார்.
சர்வேஷ், அக்காகளின் திட்டுக்கெல்லாம்.. என்னமோ கோவமேகொள்ளவில்லை. காரணம் வர்ஷினி செய்தி அனுப்பியிருந்தாள்.. “ராக்கி சொன்னாங்க.. எதோ அச்க்ஸிடேன்ட் என.. இப்போ எப்படி இருக்கீங்க, உடம்பை பார்த்துக்கோங்க” என போர்மலாக செய்தி அனுப்பியிருந்தாள்.
சர்வேஷ்ஷின் முகம் மலர்ந்துதான் போனது.. பதிலாக அவனும் “கேட்டதுக்கு தேங்க்ஸ்.. உனக்காகத்தான் விழுந்தேன்” என பதில் அனுப்பினான்.
வர்ஷினிக்கு பதிலை பார்த்ததும்.. படபடப்பானது திருந்தமாட்டான்.. என்னை சொல்லணும்.. அவனுக்கு போய் பரிதாப்பப்பட்டேனே என தன்னையே நொந்துக் கொண்டாள்.. “இன்னமும் எத்தனை வருடம் என்னையே காரணம் சொல்லுவீங்க..” என அனுப்பினாள்.
பெண்ணவளுக்கும், வலிதான்.. அவன்தான் அவளின் நினைவில். எதோ பள்ளி நாட்கள்.. மறந்தேன் என இல்லை அவள். அவளிடம் அவனின் அக்கறையே தனிதான். உன் பார்வை எனக்கு புரியும்.. என அவளுக்கு அறிவித்துக் கொண்டே இருந்தான்.. தூரமாகவே வருவான்.. எத்தனை பெண்கள் இருந்தாலும்.. என்னை மீறியதில்லை அவன் பார்வை.. என ஒருமாதிரி விரக்த்தியாக உணர்ந்தாள் இப்போது.
சர்வேஷ்க்கும் தெரியும் இப்படிதான் பதில் சொல்லுவாள் என.. ஆனால், அவனுக்கு அந்த.. யூனிபார்ம் அணிந்த.. வர்ஷினியின் நினைவுதான் இருந்தது. அவள் மிரண்டு பார்ப்பது.. கண்களால் தன்னிடம் விடைபெறுவது.. தன் நண்பர்களோடு இயல்பாக பேசுவது.. எதோ ஒருவகையில் அவளை.. நான், பார்ப்பதை அவள் உணர்ந்திருந்தாலே அந்த வர்ஷினி வேண்டும்.. ‘இப்போதும் அவளைத்தான் நான் வேண்டுகிறேன் என தெரிய வேண்டும்..’ என அவனுக்கு. அதனால் அவளிடம் பழைய ஞாபகங்களை கிளறுகிறான். அஹ.. என்ன காயங்களும் பொதுதானே.. இப்படி வாங்கியும் கட்டிக் கொள்ளுகிறான்.
“முள்ளை காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும்தான் ..
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்..
நித்தம் யுத்தம்தான்..”
!@!@!@!@!@!@!@!@!@!@!
பள்ளியில்..
மறுநாள் எலெக்ஷன் ரிசல்ட் அன்னௌன்ஸ்மென்ட்.
பிரதாப்தான் வெற்றிபெற்றான்.
ஆரவாரமாக கொண்டாடினர் நண்பர்கள்.
மாலையில் வர்ஷினி வந்து வாழ்த்துகள் சொன்னாள். அங்கேயே, ஸ்கூல் கேண்டீனில் அமர்ந்து சமோசா உண்டு பேசிக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.
மறுநாளிலிருந்து இயல்பான வகுப்புகள் சென்றது.
மீண்டும் சர்வேஷ் மீரா பள்ளியில் பேசிக் கொண்டனர். இவர்களுடைய நட்பு எப்போதும் மீராவின் புலம்பலில்தான் நடக்கும். சர்வேஷ் மீரா இருவரும் பள்ளியின் விளையாட்டு பேட்டியின் போது தோழமையாகினர். இந்த பள்ளியில் சேர்ந்த புதிதில்.. இந்த நண்பர்கள் எல்லாம் தமிழ் என்பதால் இலகுவாக பழக.. சர்வேஷ், முதல்முதலாக.. மீராவின் வாலிபால் விளையாட்டு பார்த்து.. பாராட்டினான். மொழி பிரச்சனையில் ஹிந்தி தெலுங்கு என இருவரும் பேச.. புரியவைக்க.. திக்கி திணறினர். அவளும் இவனின் புட்பால் ஆட்டம் பார்த்து பாராட்டினாள்.
இப்படியே பேச்சுகள் தொடங்கியது. இருவருக்கும் நடுவில் போட்டி எப்போதும் இருக்கும்.. இருவரும் தங்களின் அணிக்காக விளையாட.. அதன் நுணுக்கங்கள் பற்றி பேச என இருந்த பேச்சுகள்.. அப்படியே தோழமையோடு கூடவே.. கருணையாக மாறிக் கொண்டிருந்தது.
அடுத்தடுத்த வருடங்களில் மீராவின் வீட்டில்.. அவனின் அண்ணனுக்கு தெரிந்து சர்வேஷ்ஷினை மிரட்டிவிட்டு சென்றான். அதனால் சர்வேஷ், அவளிடம் பேசும் போது எப்போதும் கவனமாகவே இருப்பான்.
மீரா மீது ஒரு கருணை உண்டு அவனுக்கு. அது.. அவளுக்கு அம்மா இல்லை, அவளின் சித்தி வளர்ப்பு.. அதனால் வரும் குறைகளை இவள் சொல்ல சொல்ல.. சர்வேஷ்ஷூக்கு ஒரு கருணை அவள்மேல்.. கூடவே அந்த வயதிற்குண்டான ஒரு அக்கறை. அதனால், அவள் பேசும் போது.. இவனும் கவனமாக பேசுவான்.. அவளை தவிர்க்கமாட்டான்.
அப்படிதான் இப்போதும் விளையாட்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் போட்டிகள் தொடங்க.. மீண்டும் சர்வேஷ் மீரா சேர்ந்தே சுற்றினர்.
இந்தமுறை.. வர்ஷினியின் கண்கள் அவர்களை தொடர்ந்தது. இவளும் திடலில்தான் இருந்தாள். அதனால் அடிக்கடி பார்வை அவர்களை நோக்கி சென்றது. சர்வேஷ், வர்ஷினியை எப்போது பார்த்தாலும்.. மலர்ந்து புன்னகைத்தான்.
இப்போது வர்ஷினிக்கு.. ரிலேரேஸ் நடந்தது.. இவர்கள் அணி.. இரண்டாம் இடம் பிடிக்க.. காரணம் வர்ஷினி.. அவளின் முறை வரும்போது வேகமாக சென்றதில்.. இரண்டாம் இடம் அவர்கள் அணிக்கு.
வர்ஷினி.. தங்களின் அணி நிலவரம் தெரிந்ததும்.. ஷர்மியை தேடிக் கொண்டு வந்தாள்.. அவள் கபடி விளையாடத் தேர்வாகியிருந்த்தாள். அதனால் அங்கே வர.. இப்போது, மீரா அவளின் எதிரில் வந்தாள்.
வர்ஷினி, கொஞ்சம் அதிக உயரம்தான்.. மீரா அவளின் ஓடும் வேகத்தினையும் பார்த்திருந்தவள்.. “வர்ஷினி தானே.. நீ” என்றாள் புன்னகையோடு.
வர்ஷினிக்கு மீராவை நன்றாக தெரியுமே அதனால்.. ‘எதுக்கு கேட்க்கிறாங்க’ என எண்ணிக் கொண்டே தயக்கமாக தலையாட்டினாள்.
மீரா “வாலிபால் டீம் வரியா.. உனக்கு ரன்னிங் நல்லா வருது” என்றாள் ஆங்கிலத்தில்.
வர்ஷினி விளையாட்டு எனவும் ஆர்வமாக ‘ம்’ என தலையசைத்தாள். தயக்கமாகவே வர்ஷினி “நான் இதுவரை விளையாடியது இல்லையே” என்றாள்.
“ப்ராக்ட்டிஸ் கண்டிப்பாக கொடுப்போம்..” என்றாள் புன்னகையோடு.
இருவரும் பேசிக் கொண்டே வர.. சர்வேஷ், இருவரையும் பார்த்தான் தூரத்திலிருந்து.
மீரா தன் PT மாஸ்ட்டரிடம் அறிமுகம் செய்து ஜூனியர்கள் டீம்மில் சேருவதற்கு அனுமதி வாங்கித்தந்தாள். மீரா வாலிபால் எக்ஸ்பெர்ட். இன்டெர் ஸ்கூல் காம்படிஷன் எல்லாவற்றிலும் கோப்பையை தட்டி வந்திடுவார்கள்.. இவளின் அணி. அதனால், மறுக்காமல் வர்ஷினியை சேர்த்துக் கொண்டார் மாஸ்ட்டர்.
அடுத்த பத்துநாட்களும் மீராதான் அந்த அணிக்கு ப்ராக்டீஸ் கொடுத்தாள். ஸ்போர்ட்ஸ் டே வருவதால்.. மாலையில் பள்ளி முடித்து விளையாட்டு ஆரம்பம். எல்லோரும் திடலில் விளையாடிக் கொண்டுதானிருப்பார்.
மீரா, வர்ஷினியின் அணிக்கு பயிற்சி கொடுக்க செல்லும் போதெல்லாம் சர்வேஷ் வந்துவிடுவான்.. மீராவோடு. வர்ஷினியை பார்த்துக் கொண்டே இருப்பான்.
அவளின் உயரம்.. அதற்கு தக்க அவளிடம் பறக்கும் பந்தின் வேகம்.. அதே போல.. எதிராளியின் பந்து அவளின் உயரத்தைதான் முதலில் தாக்கும்.. அதை அவள் லாவகமாக சமாளிக்கும் திறன்.. அதையும் மீறி, அவளின் காயங்கள் என எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான்.. தான் விளையாடுவதை மறந்து.
சர்வேஷ்ஷின் அணி ஆட்கள், வந்து அழைப்பர்.. அவனை. அதன்பிறகுதான் தன் விளையாட்டினை பார்க்க செல்லுவான்.
மீராவின் கண்களில்.. சர்வேஷ்ஷின் நடவடிக்கைகள் மெதுவாக தென்படத் தொடங்கியது.
அடுத்தடுத்த நாட்களில் மீரா.. சர்வேஷ், தன்னோடு வரும் போதே.. “சர்வா.. நீ போய் விளையாடு.. நான் இங்கே பார்த்துக்கிறேன்” என சொல்லி, அவனை தள்ளி வைத்தாள்.
ஆனாலும் அந்த ஒருமாதமும் மீரா கண்டுக் கொண்டது.. சர்வேஷ்ஷின் பார்வை.. வர்ஷினியைதான் தேடுகிறது என.
ஸ்போர்ட்ஸ் டே முடிந்தது. எல்லோரும் நன்றாக தங்களின் பங்களிப்பினை தந்தனர். மீராவின் அணி வாலிபாலில் முதல்பரிசை தட்டி சென்றது.
மீண்டும் இயல்பான பள்ளி வகுப்புகள் தொடங்கியது.
சர்வேஷ், மீராவோடு சேர்ந்து.. வர்ஷினியை பார்க்கவில்லை என்றாலும்.. டியூஷனில் எந்த தடையும் இல்லாமல் அவளை பின்தொடர்ந்தான்.. பார்த்தான். பேசுவதில்லை அவளிடம்.. அவள் வீடு செல்லும் போது.. அவளும் திரும்பி பார்த்து இமையசைக்க.. இவனும் வழியனுப்பும் விதமாக இமையசைப்பான்.. அதிகபட்சமான பார்வை பரிமாற்றம் இதுதான் இவர்களுக்குள். என்னமோ இருக்கிறது தங்களுக்குள் என அவர்களே கண்டுக் கொள்ளாத நேரம் அது.
இன்று ராக்கேஷ்ஷின் பிறந்தநாள் எல்லோருமாக ஹோட்டல் சென்றிருந்தனர். ராக்கி பிரதாப் இந்தர் உமர் என எல்லோருக்கும் வர்ஷினி ஷர்மியை தவிர்க்க முடியாது. தங்களின் பள்ளி நண்பர்கள்.. தாங்கள் ஐவர் மற்றும் மீராவோடு சேர்ந்து மூன்று பெண்கள் என பதினைந்து நபர்கள் சென்றிருந்தனர் இரவு உணவுக்கு.
ரூப் கார்டன்.. அல்லோலப்பட்டது அந்த இடம். மீரா, இந்த முறை சர்வேஷ்ஷோடு என்னமோ அதிகமாக ஒட்டிக் கொண்டாள். எப்போதும் மற்ற அவனின் நண்பர்களோடு பேசமாட்டாள்.. ஆனால், இன்று சர்வேஷ்ஷுக்காக இந்த பார்ட்டிக்கு வந்தாள். வீட்டில் அவளின் அண்ணன் இருந்தால் மட்டும்தான் இதற்கெல்லாம் அனுமதி கிடைக்காது. இப்போது சித்தி அப்பாவிடம் சொல்லுவிட்டு வந்துவிட்டாள்.
வர்ஷினி இருப்பதை உணர்ந்து மீராவின் முகம் வாடி போனது. அதிலும் சர்வேஷ்ஷின் பார்வை இப்போதெல்லாம் வர்ஷினியை தொடர்வதை உணர்த்திருந்தாலே அதனால், சர்வேஷ்ஷோடு அமர்ந்தாள்.. வர்ஷி ஷர்மியோடு அமரவில்லை.
ஹோட்டலுக்கு பள்ளி தோழர்களும் சிலர் வந்திருந்தனர். வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டுதான் எல்லோரும் வந்திருந்தனர். அதனால், பொறுமையாக கொண்டாடினர்.
சர்வேஷ் மீரா என இருவரையும்.. பள்ளி நண்பர்கள் இருவர் பார்த்துவிட்டு.. கலாட்டா செய்யத் தொடங்கினர்.
மீரா லேசாக ஓரபார்வையாக வர்ஷினியை பார்த்தாள். வர்ஷினிக்கு, இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.