மேலும், வர்ஷினி எந்த விகல்பமும் இல்லாமல் இருப்பதால்.. அவளோடு பேச ஈசியாக இருந்தது ஐவருக்கும்.. இல்லை, நால்வருக்கு, சர்வேஷ் தள்ளியே இருந்தான். அதனால் வர்ஷினி இவர்களின் நட்பினை இழந்த வருத்தத்தில் இருந்தவள்.. இப்போது நேரம் கிடைக்கவும் சொல்லிவிட்டாள். இப்போது மீண்டும் நண்பர்கள் சேர்த்துக் கொண்டனர் என்பதில் சந்தோஷமாக தலையசைத்தாள் பெண். 

பிரதாப் “கிரௌண்ட்க்கு வா ஈவ்னிங்.. டிஸ்கஸ் செய்துக்கலாம்” என்றான்.

விடைபெற்றனர் இருவரும்.

ஷர்மி “ஏன் வர்ஷினி.. இது எதுக்கு நமக்கு..” என்றாள்.

“ஏன்? நம்ம பிரிண்ட்ஸ்தானே.. “ என்றாள்.

“கிளாஸ் கட் ஆகுமே.. கிளாஸ் வொர்க் எப்போ எழுதுவ” என்றாள்.

“அதெல்லாம் பார்த்துக்கலாம்.. ஜாலியா இருக்குமில்ல..” என்றாள் கண்சிமிட்டி.

ஷர்மி முகம்..  வாடி போக.. 

வர்ஷினி “நீயும் வரியா.. நாம சேர்ந்தே மேம் கிட்ட பெர்மிஷன் கேட்ப்போம்” என்றாள்.

இப்போது இருவர் முகத்திலும் புன்னகை.

மாலையில் கிரௌண்ட் சென்றனர்.. தோழிகள் இருவரும்.

புட்பால் விளையாடிக் கொண்டிருந்தனர்.. வர்ஷினி பார்த்துக் கொண்டிருந்தாள். தன் தோழர்கள் கோல் அடித்தால்.. கைதட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு இடைவேளையில் சர்வேஷ் தவிர மற்ற எல்லோரும் வந்தனர் வர்ஷினி ஷர்மியை நோக்கி. அவளை சூழ்ந்துக் கொண்டனர்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்து ராக்கி “இப்போவெல்லாம் யாருக்கும் பயப்படறதில்ல போல..” என்றான். பெண்ணவள் புன்னகைத்தாள்.

இந்தர் “நீயே டிபன் பாக்ஸ் திறந்துக்குறீயா..” என்றான்.

உமர் “டீச்சர்ஸ் பெட்’டா இப்போ இவ.. நம்மையெல்லாம் கண்டுக்கமாட்டா” என்றான்.

பிரதாப் “டேய்.. நிறைய பாய்ஸ் பால்லோ பண்றாங்க டா இவளை” என்றான்.

ஷர்மி “அதான் இவளை கூப்பிட வந்திருக்கீங்க.. என்னடா ஜூனியர் பசங்களை கூப்பிடுறாங்களேன்னு பார்த்தேன். வர்ஷினி, இது சரிவராது. நாம் போலாம்” என்றான்.

பிரதாப் “ஷர்மி.. சும்மா சொன்னேன். நாம எல்லாம் பிரிண்ட்ஸ். ஹெல்ப் பண்ணுங்க” என்றான்.

இந்தர் “வர்ஷினியே ஒன்னும் சொல்லை.. உமர் உன் தங்கச்சி ரொம்ப பேசுறா” என்றான்.

உமர் “டேய்.. சும்மா இருடா.” என நண்பனை அடக்கியவன் பெண்களிடம் திரும்பி “வர்ஷினி ஸ்டையிலாக இங்கிலீஷ் பேசுவான்னு கூப்பிட்டிருக்கோம். அவ்வளவுதான். இதெல்லாம் சும்மா அவகிட்ட ப்ரென்ட்லியா பேசுவது. நீ ஏதாவது சொல்லி கொடுக்காத, அவளை நாங்க பார்த்துப்போம்” என்றான்.. நண்பர்களை ஒரு பார்வை பார்த்து.

ஷர்மி “ம்.. நானும் வருவேன்.. இவகூட.” என்றாள்.

உமர் தலையை கோதிக் கொண்டான் எரிச்சலாக.

இந்தர் “ஸ்கூல்லில் என்ன கேள்வி.. வா.. எல்லோருமாக போலாம்” என்றான்.

பிரதாப் “ம்.. சரிதான்..” என சொல்லி என்ன வர்ஷினி சொல்ல வேண்டும் என அவளிடம் சொன்னான்.

சர்வேஷ் சென்றவர்கள் வராதது பார்த்து அப்படியே கிரௌண்ட்டில் அமர்ந்துக் கொண்டான். பார்வை இவர்களை சுற்றியே இருந்தது.. வர்ஷினியில் நிலைத்தது. முன்பிருந்த மருண்ட பார்வையில்லை.. இயல்பான பார்வையோடு.. புன்னகை முகமாக எதோ எழுதிக் கொண்டிருந்தாள்.. அவர்கள் சொல்லுவதை கேட்டு கேட்டு. 

சர்வேஷ்க்கு, அவளிடம் பேச வேண்டும் என இருந்தது.. ஆனால், எழுந்த செல்ல எதோ தடுக்கிறது அவனை. தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். ஆனாலும் ஏதனும் சிரிப்பு சத்தம் கேட்டு அவனின் சிந்தை மீண்டும்.. இவர்கள் பக்கம் திருப்பியது.

சற்று நேரத்தில் பொறுக்க முடியாமல் “டேய்.. என்ன டா.. டைம் ஆச்சு” என்றான்.

அப்போது எல்லோரும் திரும்பி பார்க்க.. வர்ஷினியின் பார்வையும் சர்வேஷ் மேல் விழுந்தது..

உமர் “டூ மினிட்ஸ் டா.. போலாம்” என்றான்.

வர்ஷினி “சர்வேஷ்..” என கேட்க்க..  அவனிடம் பேசும் எண்ணம் எப்போது இல்லாமல் இருந்தது.. மனதுள் அவனை தேடிக் கொண்டுதானிருந்தாள்.

இந்தர் “ம்..” என்றான்.

வர்ஷினி இப்போது தன் கை தூக்கி “ஹாய் சர்வேஷ்” என்றாள்.

சர்வேஷ்க்கு படபடவென அடித்துக் கொண்டது ஹிருதயம். இதுவரை.. பாரமேரியதாக இருந்த ஹிருதயம்.. அவளின் அழைப்பில்.. எடையிழந்து லேசானதால்.. அதன் துடிப்பு சட்டென கூடி போனது.. எந்த செய்கையும் இல்லாமல் அப்படியே சிலநொடிகள் வெறித்து பார்த்தான். வேறு எந்த நினைவும் இல்லை.. அவளின் முகம் மட்டுமே தெரிகிறது அவனிற்கு.

வர்ஷினி திருதிருவென விழித்துக் கொண்டே.. தன் கையை இறக்கிக் கொண்டாள்.

நண்பர்கள் “அ..வனுக்கு.. உன்னை தெரியலை போல” என்றனர் சமாளிப்பாக.

ஆனால், இப்போது சர்வேஷ்.. இவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

அருகில் வந்தவன் “என்ன இங்க” என்றான், பெண்ணவளை பார்த்து.

வர்ஷினி “சர்வா எப்படி இருக்க” என்றாள் புன்னகையோடு..

சர்வேஷ்க்கு, அழகான பெண்ணின் விசாரிப்பு.. மீண்டும் மீண்டும் என்னமோ செய்தது அவனை.. தலை கோதி.. தன்னுடைய உணர்வுகளை சமாளித்தவன் “என்ன பண்ற இங்க.. வீட்டுக்கு போகலையா” என்றான் வர்ஷினியை நேராக பார்த்து.

வர்ஷினி “நான் பிரதாப்க்காக கேம்பைங் செய்ய போறேன்.. அதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்” என்றாள்.

சர்வேஷ் ‘என்ன டா இது’ என அசட்டையாக கையசைத்தான் நண்பர்களை பார்த்து.

ராக்கி “நம்ம வர்ஷினி டா.. டாக் ஓப் தி ஸ்கூல்.. பாரு.. நம்ம ஆளுதான் வின் பண்ணுவான்” என்றான்.

சர்வேஷ் தன் தலையில் அடித்துக் கொண்டு.. வர்ஷினியை பார்த்தான். 

வர்ஷினி “நீங்க எப்படி இருக்கீங்க.. உங்க பிரெண்ட் மீரா எப்படி இருக்காங்க” என்றாள்.

நண்பர்கள் லேசாக திரும்பி கிண்டலாக சிரித்தனர்.

சர்வேஷ் முகம் இறுக “ம்.. நல்லா இருக்கேன்..” என்றான்.

ஷர்மி “சரி, நாங்க கிளம்புகிறோம்” என்றாள்.

இருவரும் விடைபெற்று கிளம்பினர்.

மறுநாள்.. மதியமாக எல்லோரும் கேம்பைங் சென்றனர்.. வர்ஷினி பேச பேச.. எல்லா வகுப்புகளிலும்.. கைதட்டல் வந்தது. பிரதாப் அதன்பின்  பேசினான்.

சற்று நேரத்தில் சர்வேஷ் வர்ஷினியை நிறுத்தி “கொஞ்சமா சிரி.. எதுக்கு பல்லை காட்டுற” என்றான்.

நண்பர்கள் எல்லோரும் “டேய்.. சும்மா இருடா..” என அதட்டினர்.

ஷர்மி “என்ன பேசுறீங்க அண்ணா.. அவ எப்போதும் அப்படிதான்” என்றாள்.

சர்வேஷ், அதன்பின் கிளம்பிவிட்டான்.. இவர்களோடு வரவில்லை.

எல்லா வகுப்புகளும் சென்றுவிட்டு வந்தனர். பேசி பேசி.. வர்ஷினிக்கு தொண்டை வலி. சோர்ந்து போனாள். 

ஷர்மி “வேண்டாம்ன்னு சொன்னால் கேட்டியா” என திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் தோழியை.

அன்று மாலை டியூஷன் செல்லவில்லை வர்ஷினி.. உடல்நலமில்லாமல்.

ஷர்மி சர்வேஷ் இருவரும் நண்பர்களை திட்டி தீர்த்தனர்.. உங்களால்தான் இப்படி என. 

டியூஷன் முடித்து.. இந்தர் பிரதாப் ராக்கி உமர்.. என நால்வரும்.. வர்ஷினியை வீட்டில் வந்து பார்த்தனர். 

வர்ஷினிக்கு அந்த ஆனந்தத்தில் பாதி.. நலமாகியது.

மறுநாள் எலெக்ஷன்.

இன்று மாலை டியூஷன் வந்தாள் வர்ஷினி.

எல்லோருமாக சேர்ந்து படித்தனரா என்றால் கேள்விதான்.. ஆனால், எல்லோருமாக சேர்ந்து பானிபூரி சாப்பிட சென்றனர் அன்று மாலை.

ஷர்மி, வர்ஷினிக்கு எப்படி சாப்பிடுவது என சொல்லிய ஒரு ப்ளேட் காலி செய்துவிட்டாள்.

வர்ஷினிக்கு முழு பூரியையும் வாயில் போட தெரியாமல்.. தண்ணீ சிந்தி.. அவளின் உடைகளில் கரையாகியது. 

உமர்.. “நல்லா மேலே பார்த்து வாய் திற” என சொல்லி, ஒன்றிரண்டு பூரிகளை லாவகமாக வர்ஷினிக்கு ஊட்டிவிட்டான்.

அதன்பின் வர்ஷினி அப்படியே சாப்பிட ஒரளவு உண்டாள். அதை பார்த்து சர்வேஷ்.. அவளுக்கு இன்னொரு ப்ளேட் ஆர்டர் செய்து கொடுத்தான். 

இறுதியாக வர்ஷினி அங்கே இருக்கும் தண்ணீர் குடிக்க போக.. சர்வேஷ் அதை தடுத்து.. “வர்ஷி இந்தா” என மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.

நண்பர்கள் எல்லோரும் திருதிருவென விழித்து.. பின்னர் “ஓஓஹோ.. “ என கத்தினர்.

ஷர்மி “அவளுக்கு உடம்பு சரியில்லைதானே..” என சர்வேஷ்ஷூடன் சேர்ந்து பேசினாள்.

வாட்டர் பாட்டில்லை வாங்கும் அவளின் தளிர் விரல்களில் லேசான நடுக்கம்.. இதென்ன.. கான்சென் என சட்டென எண்ணம். அப்படியே தண்ணீர் பருகினாள்.

வர்ஷினி “தேங்க்ஸ்” என்றாள் பாட்டிலை திரும்ப சர்வேஷ்ஷிடம் கொடுத்து. வர்ஷினிக்கு.. இப்போது படபடவென மனம் அடித்துக் கொண்டது. இதுக்குதான் அவனை பார்க்க கூடாதுன்னு சொல்றது.. என எண்ணிக் கொண்டாள்.

சர்வேஷ் “கிளம்புங்க ரெண்டுபேரும்” என்றான் அதட்டலாக.. பெண்களை பார்த்து.

வர்ஷினி அடுத்த கடையை கைகாட்டி “ஹாட் பாதம்பால்..” என்றாள்.

பிரதாப் “வா வா…” என முன்னால் சென்றான்.

வர்ஷினி அவனோடு சென்றாள். 

சர்வேஷ் தலையை கோதிக் கொண்டு.. காட்டாத புன்னகையோடு  இறுதியாக நடந்தான். 

எல்லாம் கேலி கிண்டலுமாகவே பேசி சலித்தனர்.

அன்று ஷர்மிதான், வர்ஷினியை கைபிடித்து இழுத்துக் கொண்டு வீடு வந்தாள்.