துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள்.

“அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக.

வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள்.

துர்கா “என்ன டா.. அங்க ஏதாவது லவ்வா..” என்றாள்.

அன்னையின் முகத்தில் கலக்கம்.. மகன் அனிச்சையாக அக்காக்களின் பேச்சில் அன்னையின் முகம் பார்க்க.. நொந்துக் கொண்டான் “ஹேய்.. நான்தான் சொல்லிட்டேனில்ல.. விடுங்க..” என்றான்.

எல்லோரும் விழித்தனர்.. யாருக்கும் சர்வா இப்படி லவ் செய்வான் என எண்ணக் கூட முடியவில்லை.

வரா “தம்பி நம்ம நாட்டு பெண்தானே” என்றாள், சின்ன குரலில்.

முறைத்தான் சர்வா. எல்லோருக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. வரா, தன் கணவனை பார்த்தாள்.

கார்த்திக் “என்ன சொல்ற சர்வா.. முழுதாக சொல்லு.. இந்த பெண் குடும்பம் நல்ல குடும்பம்.. நீ என்ன சொல்ற..” என்றார்.

சர்வா “மாமா எனக்கு.. நான் சொல்றேன்.. இப்போதிக்கு எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்ல போதுமா..” என்றான் தன் அன்னையை பார்த்துக் கொண்டே.

அன்னைக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை.. இப்போது அன்னையிடம் வந்தான்.. “அம்மா, எனக்கு உறுதியா எதுவும் சொல்ல முடியலை. நான் சொல்றேன் ம்மா.. இப்படியே இருந்திடமாட்டேன்” என்றான்.

அன்னை “என்னமோ டா.. உன் வயதில் இருக்கும் எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி செட்டில் ஆகிட்டாங்க பா.. நீ இப்படியே நின்னுடுவியோன்னு பயமா இருக்கு..” என்றார்.

மகனோ “அப்படியெல்லாம் இல்லம்மா” என்றான்.

வராவிற்கு காலையிலிருந்து கேட்டேனே எதுவுமே சொல்லவில்லையே இவன்.. என “துர்கா, நமக்கு வேலை மிச்சம்.. பார்ப்போம் டி.. இவன் எப்போது நம்மகிட்ட சொல்றான்னு..” என பேசிக் கொண்டே கிட்சென் சென்றுவிட்டாள்.

சர்வா கார்த்திக்கிடம் வந்தான் “மாம்ஸ்.. அது எனக்கு தெரியாது.. நீங்க எப்படி திடீர்ன்னு பார்ப்பீங்கன்னு..” என்றான். அவர் மூலமாக வந்த வரன் என்பதால்.. தயங்கினான் வேண்டாமே என சொல்ல.

கார்த்திக் “பராவாயில்ல சர்வா.. இன்னமும் எதையும் நாங்க அவங்ககிட்ட பேசலை.. அதனால் பிரச்சனையில்ல. நீ நிம்மதியா இரு. நல்ல சேதியை சீக்கிரம் சொல்லு” என்றார் புன்னகையோடு தோளில் தட்டி ஆதரவாக.

சர்வா நிம்மதியா உணர்ந்தான். புன்னகையோடு “இதுக்குதான் எல்லோரும் வேலையைவிட்டுட்டு வந்தீங்களாக்கும்.. அஹ.. ஏன் மாம்ஸ் நீங்க வேற..” என்றான் கட்டுகள் அவிழ்ந்த நிதானத்தில்.. பெரிதாக சிரித்துக் கொண்டே.

“என்நேரம் மாப்பள” என நொந்துக் கொண்டார், கார்த்திக்.

முத்துநாயகி காபி எடுத்து வந்து கொடுத்தார் மாப்பிள்ளைக்கு. 

சற்று நேரத்தில் கார்த்திக் கிளம்பிவிட்டார்.

சர்வா.. தன் அறைக்கு சென்றான். 

மாலையில் குழந்தைகள் இருவரும் பள்ளி வேனில் வந்து, பாட்டி வீட்டில் இறங்கிக் கொண்டனர்.. சற்று நேரம் சர்வா பிள்ளைகளோடு இருந்தான். எப்போதும் அவர்களோடு.. பட்மிட்டேன் விளையாடுவான். இன்று கார்ட்டூன் போட்டுக் கொண்டு அமர்ந்தான். மனதில் நாட்களின் ஓட்டமும் வர்ஷினியின் பாராமுகமும்தான் நினைவு வருகிறது.. யோசனையில் இருந்தான்.

மாலை ஆறுமணிக்கு மேல் வர்ஷினியை பார்க்க கிளம்பினான். என்னமோ பதிலேயில்லை அவளிடமிருந்து. வீட்டில் சென்று பார்க்க முடியாது.. அலுவலகத்தில் பார்க்கலாம் என கிளம்பினான்.

ஒருமணி நேரத்தில் வந்துவிட்டான்.. எந்த இடம் என தெரியும்.. ஆனால், உள்ளே செல்ல வேண்டாம் என வெளியேதான் நின்றான். 

மணி எட்டு.. எந்த கேட்டின் வழியே வருவாள் தெரியாது.. எந்த வண்டி தெரியாது.. எந்த நேரத்தில் முடியும் என தெரியாது.. ஆனால், வேலை செய்யும் இடம் மட்டுமே தெரியும்.. அந்த கம்பெனி வாசலில் தன் வண்டியில் அமர்ந்துக் கொண்டே அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான், சர்வா.

சர்வேஷ்க்கு அப்போதெல்லாம் வீட்டின் கஷ்ட்டம் தெரியாது.. மனதின் வருத்தமும் புரியவில்லை. சென்னையை விட ஹைதராபாத் அவனுக்கு பிடித்திருந்தது.. அப்பா படிக்க அனுப்பினார் ‘நல்லது’ என வந்து சேர்ந்தான். அப்பா இறந்தபின் அம்மாவின் அழுகை பார்த்து..  மீண்டும் படிக்க செல்லமாட்டேன் என்றான். அப்போதும் மீரா அழைத்து பேச.. சர்வேஷ்.. தன்னை பெரியவனாக எண்ணிக் கொண்டு.. இருந்தான்.

மாரல்ஸ் என எதுவும் இருக்கவில்லை, அவனுக்கு. இன்னிக்கு விளையாடினோமா.. சாப்பிட்டோமா.. நண்பர்களோடு சிரித்து பழகினோமா.. என அந்த வயதினையும் வாழ்வினையும் கொண்டாடிக் கொண்டிருந்த அலட்டலில்லாதவன் சர்வேஷ்.

 

வர்ஷினிக்கு, சர்வேஷ் தன்னை அப்படி கூட்டி சென்றது பிடிக்கவில்லைதான் என்றாலும்.. மறுநாள் நான் வருந்துவேன் என இனிப்பு கொடுத்ததில் வருத்தம் என்றாலும்.. சர்வேஷ்ஷிடம் கோவம் கொள்ள அந்த சின்ன மனம் விரும்பவில்லை. மீண்டும் மறுநாள் சர்வேஷ் வந்தான் காலையிலேயே அவளின் வகுப்பிற்கு.. வர்ஷினி அவனை பார்த்தும் நிமிராமல் சென்றாள்.

சர்வேஷ் “வர்ஷினி, குட்மோர்னிங்..” என்றான்.

பெண்ணவளுக்கு இந்த நட்பே போதுமானதாக இருந்ததோ என்னமோ முகம் மலர்ந்து “குட் மோர்னிங்” என்றாள்.

சர்வேஷ் அந்த புன்னகையை வாங்கிக் கொண்டான் தன்னுள்.. “லஞ்ச் பிரியட்டில் பார்க்கலாம்” என்றான்.. இரு கைகளையும் பேண்ட்டில் நுழைத்துக் கொண்டு.

வர்ஷினி நல்ல உயரம்.. அவனின் உயரத்திற்கு இருந்தாள்.. சர்வேஷ்ஷினால் அவளின் கண்களை நேராக பார்க்க முடிந்தது.. அதில் முன்பில்லாத ஒரு ஒளி தெரிந்தது.. அது என்ன ஒளி என அவனுக்கு அப்போது புரியவில்லை.. ஆனால், அதை தன் மீதான விருப்பமாக கண்டுக் கொண்டு.. தன் காலரினை தூக்கிவிட்டுக் கொண்டு நகர்ந்தான் அப்போது.

மதிய இடைவேளையில் சந்தித்தனர் இருவரும்.. சர்வா இயல்பாக அவளின் டிபன் பாக்ஸ் திறந்துக் கொண்டுத்தான். வர்ஷினியிடம் “நான்தான் மீராகிட்ட பேசினேன் அப்போ.. அவன் அண்ணன்” என நடந்தவைகளை ஒன்றுவிடாமல் சொன்னான்.

வர்ஷினி ஏதும் கேள்வி கேட்கவில்லை.. கருத்தும் சொல்லவில்லை.. உண்டு முடித்து கிளம்பிவிட்டாள். இப்படியேதான் அவர்களின் நாட்கள் கடந்தது.. ஒருவரோடு ஒருவர் இருந்தனர். ஏன் எதற்கு என இருவருக்கும் தெரியவில்லை. அவனின் ரெகார்ட் வேலைகளை வர்ஷினி எழுதி தருவாள். வர்ஷினியின் லாங்க்வேஜ் வேலைகளில்.. இவன் உதவி செய்வான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சாதகமாக இருந்துக் கொண்டனர்.

திடீரென சர்வேஷ் ஊருக்கு சென்றுவிட்டான் என அவனின் நண்பர்கள் சொல்ல.. எப்போது வருவான் என காத்திர்ந்தாள் பெண். 

சர்வேஷ் நீண்டநாட்கள் சென்று அவனின் இறுதி தேர்வுகளின் போதுதான் பள்ளிக்கு வந்து சேர்ந்தான்.

வர்ஷினியை மறந்துவிட்டான் போல.. சர்வேஷ்ஷுக்கு பல நெருக்கடிகள் இருக்க.. படிக்க.. அம்மாவிடம் பேச.. நண்பர்களின் அறிவுரைப்படி தேர்வுகளை சந்திக்க.. என அதற்கே நேரம் சரியாக இருக்க.. இருவரின் நட்பும் விட்டு போனது. மதிய உணவு நேரத்தில் இவள் எதிர்பார்த்திருக்க சர்வேஷ் வரவேயில்லை. தானே அவனின் வகுப்பிற்கு சென்றாள்.. அவனை பார்க்க.. “ஹே வர்ஷினி என்ன pt பிரியட்டில் இங்க இருக்க.. என்ன வேண்டும்” என்றான்.

வர்ஷினிக்கு பதில் சொல்ல தெரியவில்லை.. நம்பிக்கையான பார்வை மாறி.. மீண்டும் மிரண்ட பார்வை பார்த்தாள் பெண்.

சர்வேஷ் நண்பர்களோடு பேச தொடங்கிவிட்டான்.. அவனுக்கு வேலை அதிகமிருக்க.. அப்போது தெரியவில்லை.. அவளின் பார்வைக்கு அர்த்தம்.

சர்வேஷ், டியூஷன் பள்ளி.. படிப்பு என பிசியாகவே இருந்தான். 11ம் வகுப்பின் இறுதியாண்டு தேர்வு முடிந்தும் கூட.. சர்வேஷ்ஷுக்கு வகுப்புகள் இருந்தது.. அதனால் அவனின் உலகம் வேறானது. 

வர்ஷினி லாங்க்வேஜ் பயில என தனியாக வகுப்பு சேர்ந்துக் கொண்டாள் விடுமுறையில். 

எல்லாம் ஒரே டியூஷன் சென்டர் என்பதால்.. வர்ஷினிக்கு சர்வேஷ்ஷினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால், பேச முடியவில்லை. ஆனால், இந்தர்.. ராக்கி.. பிரதாப்.. உமர் என மற்ற நண்பர்கள் வர்ஷினியோடு நன்றாக பேசினார்.

சர்வேஷ்  மீராவோடு இப்போது பேச தொடங்கிவிட்டான். அதனால் அவன் நண்பர்களிடமே சரியாக பேசுவதில்லை.. எங்கிருந்து வர்ஷினியை கவனிக்க போகிறான்.

டியூஷன் முடித்து வர்ஷினி அவனின் நண்பர்கள் என முன்னால்.. சைக்கிளோடு வர.. சர்வேஷ் மீரா இருவரும் பின்னால் பேசிக் கொண்டே வருவர்.

வர்ஷினி அடிக்கடி சர்வேஷ்ஷினை திரும்பி பார்ப்பாள்.. சர்வேஷ், ஒன்றிரண்டு முறை அவளின் எரிச்சலான பார்வையை உணர்ந்திருவான் அந்த இருபது நிமிடநடை பயணத்தில். ஆனால், அவனால் என்னவென கேட்க்க முடிந்ததில்லை.

ராக்கி “என்ன அவனையே பார்த்திட்டு இருக்க.. வர்ஷி” என்றான்.

வர்ஷினி திடுக்கிட்டு போனாள்.. பார்க்க கூடாது என எவ்வளவு முயன்றாலும்.. என்னமோ சர்வேஷ்ஷிடமே கண்கள் போகிற்று.. மீண்டும் திரும்பி வழியை பார்த்து நடக்கத் தொடங்கினாள்.

இன்று அவளின் வழி பார்த்து நின்றுக் கொண்டிருந்தான்.. வெகுநேரமாக சர்வேஷ்.

வர்ஷினி அப்போதே கிளம்பிவிட்டாள்.. மற்றொரு கேட் வழியாக.

வெகுநேரம் நின்றான் சர்வேஷ்.. கண்டிப்பாக அவளை விட்டுவிட்டோம் என உணர்ந்தவன்.. வீடு செல்ல எத்தனித்தான்.

ஆனால், மனது அலைபாய்ந்தது.. எப்படி போனாள்.. விட்டுடுவேனோ இப்போதும்.. உண்மையான அன்பினை தொலைத்திட்டேனோ.. என மனது புலம்பியது.

“விழி உனக்கு சொந்தமடி..

வேதனைகள் எனக்கு சொந்தமடி..

அலை கரையை கடந்தபின்னே..

நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி..”

பாரில் நிறுத்தினான் வண்டியை. வேண்டுமட்டும் குடித்தான். நிதானமிழ்ந்தான்.. மாடிப்படியில் இறங்கும் போது.. நிலையிழந்து உருடுவிட்டான் கீழே.