மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால்.. பெரிய பிள்ளைகளுக்கு என.. கேண்டீன் உண்டு.. கிரௌண்ட்டில். அங்கே கூட்டி வந்தான் சர்வேஷ்.. பார்வையால் யாரையோ தேடினான்.. நண்பர்கள் எல்லோரும் தூரமாக நின்றனர். இவன் தேடிய இடத்தில் யாருமில்லாமல் போக.. சர்வேஷ் அருகில்.. இப்போது வந்து நின்றாள் மீரா.
பார்க்க அழகாக இருந்தாள்.. சர்வேஷ் இப்போது, வர்ஷினியை பிடித்திருந்த கையை விடுத்து.. அவளின் பின்னின்று.. இரு தோள்களையும் பற்றி.. மீராவின் எதிரில்.. உரிமையாக பொம்மை போல நிறுத்தினான்.
எப்போதும் அவனின் மொழிகளை தாமதமாகவே புரிந்துக் கொள்ளுபவள்.. இப்போதும் திரும்பி சர்வேஷினை மிரட்சியாக பார்க்க.. லேசாக கண்மூடி திறந்தான் சர்வேஷ்.. பெண்ணவளின் கண்கள் சட்டென ஒளிர்ந்தது.
மீராவின் விழிகளில் பதட்டம், இப்போது.
சர்வேஷ் “என் கேர்ள் பிரென்ட்.. போதுமா.” என சொல்லியவன்.. வர்ஷினியை பின்னால் இழுத்துக் கொண்டு.. மீராவிடம் “ப்ளீஸ்.. உன் அண்ணனிடம் சொல்லிடு.. நீதான் லவ் பண்ணினேன்னு.. நான் கண்டிப்பா இல்லை.. ம்.. போதுமா.. கிளம்பு” என்றான் அழுத்தமான குரலில்.
வர்ஷினிக்கு, சரளமான தெலுங்கு புரியவில்லை.. கேர்ள்பிரென்ட் என்பதும்.. எதோ லவ் மேட்டர் எனவும் புரிய.. அவனின் கையை விடுவிக்க முயன்றாள்.
சர்வேஷ் இருந்த எரிச்சலில்.. பற்களை கடித்துக் கொண்டு திரும்பி “வர்ஷி வெயிட் பண்ணேன்..” என்றான்.
வர்ஷினிக்கு புரிந்தும் புரியாத நிலை.. அப்படியே நின்றாள்.
இப்போது நண்பர்கள் எல்லோரும் என்னமோ நடக்கிறது என பார்த்து வந்துவிட்டனர். மீரா, கண்கள் கலங்க.. சென்றுவிட்டாள்.
இந்தர் “என்ன டா.. என்ன நடக்குது.. திரும்பவும் அவ பிரச்சனையா.. ஏன் டா.. அவகிட்ட வைச்சிக்காத சொன்னால் கேட்கமாட்டியா” என எகிறினான்.
வர்ஷினியின் கையை விடாமல் சர்வேஷ் “இந்தமுறை.. அவதாண்டா வந்தாள். தெரியாமல் விளையாடும் போது டீம் சேர்ந்தோம்.. அதான் தப்பா போச்சு.” என தலை கோதிக் கொண்டே சொல்ல.
பிரதாப் “ம்.. நம்பர் நீதான் வாங்கின.. அப்படியே இவர் பின்னாடி சுத்தாமல்தான்..” என எடுக்க.
சர்வேஷ் “டேய்..” என அதட்டிவிட்டு “இரு.. நான் இவளை கேட்டில் விட்டுட்டு வரேன்” என நடந்தான்.
வர்ஷினி “நானே போய்கிறேன்” என சொல்லிக் கொண்டு கையை உதறிக் கொண்டு நடந்தாள்.
பிரதாப் “டேய்.. உன் சாக்கு போக்குக்கு.. இவளை கொண்டு வந்தியாடா” என திட்டிக் கொண்டே.. வர்ஷினியோடு நடந்தான்.
நண்பர்கள் எல்லோரும் என்ன நடந்தது என கேட்க்க.. மீராவின் அண்ணன் நேற்று இரவு வீட்டின் வெளியே நின்று.. அவளின் எண்ணிலிருந்து அழைத்திருக்கிறான். சர்வேஷ் வெளியே வர.. மீராவின் அண்ணன்.. மிரட்டிவிட்டு சென்றிருக்கிறான். அதனால்.. யோசித்த சர்வேஷ், வர்ஷினியை கேர்ள்பிரென்ட் என அறிமுகம் செய்திருக்குறான் இப்போது.
உமர் “அறிவு இல்லையாடா உனக்கு.. வர்ஷினியை யோசிக்கமாட்டியா டா.. என்ன டா நீ இப்படி பண்ற.. ஏதாவது பிரச்சனையாகிட போதுடா.. பாவம் டா அவ” என்றான்.
சர்வேஷ்க்கு இப்போதுதான் முகம் மாறியது.. எதோ ஒரு யோசனையில் செய்துவிட்டேனே என தோன்ற.. “விடுடா.. அதெல்லாம் வர்ஷினி புரிஞ்சிக்கும்.. அவளுக்கு இதெல்லாம் முதலில் புரிந்திருக்காது” என்க.
உமர் “லூஸு.. நாளைக்கு, மீரா, அவளை ஏதாவது கேட்டால்.. அத்தோடு, என்ன புரியாது.. எல்லாம் புரியும்.” என்றான்.
சர்வேஷ் சமாளித்தான். பெரிதாக கட்டிக் கொள்ளவில்லை நண்பர்களிடம் ‘தான்’ செய்தது தவறு என.. ஆனால், மனது அதை தவறு என ஒத்துக் கொண்டது. யோசனையோடு இருந்தான்.
வர்ஷினி, ஷர்மியோடு வீடு வரும்போது.. இருவரும் இந்த கதைகளை பேசிக் கொண்டே வந்தனர்.
ஷர்மி “சர்வா அண்ணா, உன்னை கேர்ள்பிரென்ட்’ன்னு சொன்னாரா.. அஹ.. அப்படியா” என நூறுமுறை கேட்டு கேட்டு.. வர்ஷினியின் மனதில்.. முன்பே தயங்கி தயங்கி இருந்த உணர்வினை.. தூண்டிவிட்டாள் இப்போது. தோழிகள் இருவருக்கும் அந்த வயதிற்கே உண்டான கள்ள சிரிப்போடு வீடு வந்தனர்.
மறுநாள், லஞ்ச் நேரத்தில் வந்தான் சர்வேஷ். வர்ஷினிக்கு என்றுமில்லாமல் இன்று.. நெற்றி வேர்த்தது.. கண்கள் ஒளிர்ந்தது.. கைகள் நடுங்கியது. எத்தனைமுறை திட்டியிருப்பான்.. ஏன் அடித்துக் கூட இருக்கிறான்.. ஹிந்தி எழுத்தினை கைபிடித்து எழுதக் கூட வைத்திருக்கிறான்.. ஆனால், அப்போதெல்லாம் வராத உணர்வு.. இன்று பார்த்தமாத்திரத்தில் கிளர்ந்தது. வர்ஷினி பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
சர்வேஷ்க்கும்.. இன்று எதோ உள்ளே உறுத்த.. சற்று தயக்கமாகவே அருகில் வந்தான்.. “வர்ஷி, நே..ற்று நடந்தது..க்கு சாரி.. ம்..” என்றான்.
வர்ஷினிக்கு தொண்டையடைத்தது, சட்டென நிமிரவில்லை பெண். என்னமோ குழப்பம் அவளுக்கு.
ஷர்மி “என்ன ண்ணா” என்றாள்.
சர்வேஷ் புன்னகையோடு இரண்டு பெரிய சாக்லெட் எடுத்துக் கொடுத்தான் “அஹ.. அது ஒண்ணுமில்ல.. எனக்கு பாரீன் பிரென்ட் இருக்கான்னு காட்ட வர்ஷினியை கூட்டி போனேன்.. அவகிட்ட கேட்காமல், அதான். சாரி வர்ஷி..” என சொல்லி, அவளின் பார்வையை எதிபார்க்காமல் ஒரு சாக்லெட்டினை அவளின் கையில் திணித்துவிட்டு, மற்றொன்றினை ஷர்மியிடம் கொடுத்து “ரொம்ப நேரம் வெயிட் பண்ணில்ல.. சாரி” என விளையாட்டான குரலில் சொல்லி கொடுத்துவிட்டு.. பறந்துவிட்டான்.
“உயிரினில் உன்னை
நான் புதைத்தே நின்றேன்..
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே..”
வர்ஷினிக்கு, நிமிரவே முடியவில்லை.. தோழியே என்றாலும்.. அவளிடம் தன் முகத்தினை காட்ட முடியாமல்.. உண்ணவும் முடியாமல் எழுந்து விறுவிறுவென தன் வகுப்பிற்கு சென்றுவிட்டாள்.
அப்படிதான் இப்போதும் இருந்தது.. வர்ஷினிக்கு. என் நினைவு எதோ.. ‘மேகம் போல அவனுக்கு. ஒன்று போனதும்.. அதாவது, திருமணம் நின்றதும்.. என்னை எதேர்ச்சியாக பார்த்ததும்.. வந்ததுவிட்டது என் மீது அக்கறை. அஹ.. வர்ஷினி, அன்று அழுகையை.. உன் பலவீனத்தை பார்க்கவில்லை.. இன்று, பார்த்துவிட்டான்.. எதையும் நான் மறக்கவில்லை என அவன் உணர்ந்துக் கொண்டானே..’ என நிற்காமல் அழுகை பெண்ணுக்கு.
காலையில் தாமதமாகத்தான் எழுந்தாள். கண்கள் வீங்கி இருக்க.. ஐஸ்வாட்டார் கொண்டு அதனை சரி செய்துக் கொண்டிருந்தாள்.
அன்னை உண்பதற்காக அழைத்தார்.
வர்ஷினி வந்தாள். தந்தை முன்பே உண்டுவிட்டதால்.. அன்னையும் மகளும் அமர்ந்து உண்டனர். நேற்று நடந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார் விஜயா. வர்ஷினியும் மஞ்சரி துருவ் என கதைகளை பேசினாள். அன்னை “வெளிநாடு போவதற்குள் ஒருநாள் வீட்டுக்கு வர சொல்லு வர்ஷினி.. அவர்களை” என்றார். சரி என்றாள் பெண்.
இப்போது வர்ஷினிக்கு, சர்வேஷ்ஷிடமிருந்து ஒரு வாய்ஸ் நோட் வந்ததற்கான நோட்டிவ்ஃவிகேஷன் காட்டி மறைந்தது. பெண்ணவள் பார்த்துவிட்டு மீண்டும் அன்னையின் பேச்சில் கலந்தாள்.
வர்ஷினி வேலை முடிந்து உள்ளே வந்தாள்.. சர்வேஷின் செய்தியை கேட்டாள் “வர்ஷினி, நேற்று நடந்தவரை.. ப்ளீஸ் மறந்துட்டேன். போர்கெட் எவெரிதிங்க்.. கேன் வீ ஸ்டார்ட் பிரோம் தி பிகினிங்..” என்றான்.
வர்ஷினியின் முகத்தில் புன்னகையான கலங்கிய முகம்தான். என்ன உணர்வென அவளால் வெளிப்படுத்த முடியவில்லை.. “எல்லாம் ஈசிதான் உங்களுக்கு. ஆனால், எனக்கு எதுவும் ஈசி இல்ல.” என பதில் அனுப்பினாள்.
சர்வேஷ் உடனே செய்தியை பார்த்தான் முகத்தில் எந்த பாவனையும் இல்லை.. “அஹ.. எனக்கும் உன்னை நினைக்காமல் இருப்பது ஈசியாக இல்ல வர்ஷி. நான் பொய் சொல்றேன்னு நினைக்காத.. நிறைய மிஸ் பண்ணியிருக்கேன் உன்னை. எனக்கு இப்பவும் கிட்கட் சாக்லெட் பார்த்தால்.. உன் ஞாபகம் மட்டும்தான் வரும்..” என்றான் ஆழ்ந்தக் குரலில்.
வர்ஷினிக்கு எதோ கோவம் அதிகமாகத்தான் வந்தது.. இப்போது மீண்டும் ஒரு செய்தி “உன்னை கஷ்ட்டபடுத்தின கர்மா என்னை சும்மா விடலை வர்ஷி..” என்றான் இறுக்கமான குரலில்.
பெண்ணவளின் மனம் தடுமாறியது.. அவனின் வார்த்தையிலும்.. குரலிலும்.. ‘என்னவாக இருக்கும்’ என. ஆனாலும் “நீங்கதான் அப்படி ஏதும் இல்லைன்னு அப்போவே சொல்லிட்டீங்களே.. அது என்னுடைய கர்மா இல்லை” என்றாள்.. இறுக்கமான குரலில்.
சர்வேஷ் “ம்.. அவள்மேல் தவறில்லை.. அந்த ஸ்கூல் யூனிபோர்மில்.. மிரண்ட விழிகளோடு.. கள்ளமே இல்லாமல் என்னை நம்பிய பெண்ணை.. நான்தான் புரிந்துக் கொள்ளவில்லை” என்றான்.. அதே இறுக்கமான குரலில்.
அவனின் வார்த்தையில்.. வர்ஷினிக்கு மீண்டு வரவே முடியவில்லை.. அவனுக்கு பதில் சொல்லவில்லை.. செய்தியை கேட்டுக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.