துருவ் உண்டு முடித்து வாய் துடைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் இருந்து இறங்கி சென்றான்.. தன்னுடைய பொம்மை காரில் அமர்ந்துக் கொண்டான் விளையாட.

மஞ்சரியும் ராக்கியும் உண்பதற்கு அமர்ந்தனர்.. வர்ஷினி பரிமாறத் தொடங்கினாள். ராக்கி “சர்வாவை கூப்பிட்டேன், வர்ஷினி வந்திருக்கா நீயும் வாடா சாப்பிடன்னு  கூப்பிட்டேன்.. மிஸ் பண்ணிட்டான்..” என்றான் எதார்த்தமாக.

வர்ஷினிக்கு, நேற்று வரை இல்லாத ஒரு உணர்வு.. ‘நான் வந்திருக்கேன்னு சொன்னதால் வரலையா சர்வா’ என ஒரு எண்ணம் எழுந்தது அவளுள்.

உண்டு முடித்து.. எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். பாத்திரம் துலக்கி.. ஸ்வீட் சாப்பிட்டு என டைனிங் ஹாலில் இன்னமும் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது..

மஞ்சரி வர்ஷினி இருவரும் மேலே சென்றனர். வர்ஷினி “சாப்பாடு சூப்பர்.. உங்க கவனிப்பும் சூப்பர்..” என சொல்லிக் கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

மஞ்சரி “தேங்யூ.. நாங்கள் எல்லாம் இதை ரொம்பநாள் நினைச்சிட்டே இருப்போம். அங்கே தமிழ் ஆட்கள் இருக்காங்க.. ஜாலியாகத்தான் இருக்கும்.. ஆனால், எதோ ஒன்னு மிஸ் ஆகும்.. இந்த சுதந்திரம்.. இந்த காற்று.. ஏதும் அங்கிருக்காது. அங்கே மெனெக்கெடனும்.. நினைவுகளை கொண்டு வர.. இங்கே ஈசியா இருக்கும்.” என்றாள். 

வர்ஷினிக்கு கொஞ்சம் புரியவும் செய்தது.. தன்னுடைய பால்யநினைவுகளை அது எடுத்துக் கொடுத்ததுதான். ஆனாலும் அவளின் அன்னை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்.. அவளுக்கு விவரம் தெரியவில்லை. ஆனால், ‘அன்னை தந்தை சில முகங்கள்.. அதை தவிர வேறு யாரையும் தெரியாது.. தான் வெளிநாட்டில் இருந்த போது’ என சில நிமிடங்கள் அதன் தாக்கம் வந்து போனது, அவளுள்.

துருவ் ஹாலில் விளையாடிக் கொண்டிருக்க.. ராக்கி மகனோடு அமர்ந்துக் கொண்டான். ராக்கியின் அன்னை டிவியில் சீரியல்.. பார்க்க அமர்ந்துக் கொண்டார். ராக்கியின் தந்தை உறங்க சென்றுவிட்டார்.

மஞ்சரி “வர்ஷி, பீச் போலாமா” என்றாள்.

வர்ஷினி ஆசையாக கண்கள் விரிய “போலாம், பக்கமா இருக்குமா” என்றாள்.

மஞ்சரியும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. பேச்சுகள் மஞ்சரியின் படிப்பு திருமணம் பற்றி சென்றது.

மாலை நெருங்க.. பெரியவர்கள் தவிர நால்வரும் கடல் பார்க்கச் சென்றனர். சூரியன் மறையும் அந்தி மாலை நேரம்.. கடல் மின்னியது அந்த பொன்னிளியில்.

வர்ஷினி கடலில் கால் நனைக்கவில்லை.. மஞ்சரி கைபிடித்து இழுத்தும் வரவில்லை.. ராக்கி சற்று நேரம் மகனோடு கடலில் விளையாடினான்.. பின் அவனுக்கு தின்பண்டம் வாங்கவென கடை பக்கம் கூட்டி சென்றான். ecr அருகே வந்திருந்தனர்.. அதனால்.. கடைகள் ஏதுமில்லை, அருகில். மஞ்சரி வர்ஷினியின் அருகே அமர்ந்தாள். கடல் காற்று என பேச்சுகள் சென்றது.

ராக்கி துருவோடு சேர்ந்து சர்வேஷ் வந்தான் ஸ்னக்ஸ் வகைகளை  கையில் எடுத்துக் கொண்டு. 

சர்வேஷின் புன்னகை முகம் இருட்டில் சந்திரனாக மெல்ல தெரிய.. வர்ஷினியின் முகத்தில் சின்ன மாற்றம்.. லேசான இறுக்கம் அவளின் உதடுகளில்.

சர்வேஷ் “ஹய்” என்றான் வர்ஷினியை பார்த்து.. அவள் என்ன செய்வது என தெரியாமல் பதில் மொழிந்தாள்.

மஞ்சரி இயல்பாக பேசத் தொடங்கினாள்.. துருவ், சர்வாவின் கைகளுக்கு இடம் மாறினான். 

ராக்கி தின்பண்டங்களை பகிர்ந்தான். 

காரபொறி.. சில்லென்ற காற்றும்.. நண்பர்களோடு பேச்சும் என அந்த நேரம் இனிமையாகவே இருந்தது.

இரவு உணவிற்கு ஹோட்டல் சென்றனர்.. உண்டு முடித்து.. வர்ஷினியை சர்வாவோடுதான் வழியனுப்பினான் ராக்கேஷ். வார்ஷினியின் முகம் வாடித்தான் போனது.. ‘அவனை நான்தான் வரசொன்னேன்.. உன்னை கூட்டி போக’ என சொல்லியேதான் வர்ஷினியை அனுப்பி வைத்தான்.

வர்ஷினி சர்வாவின் காரில் ஏறினாள். சர்வா எதிர்பார்த்துக் காத்திருந்த தனிமை.. “எப்போ வந்த வர்ஷினி.. ராக்கி வீட்டுக்கு” என்றான்.

வர்ஷினி “காலையில்..” என்றாள்.

“ராக்கி சொன்னான்.. எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நீ நினைச்சிட்டு இருந்தியாம்.. உனக்கு யார் சொன்னாங்க..” என்றான் குரல் ஒரே சீராக இருந்தது.

வர்ஷினி முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.. ‘உண்மையாகவே இவன் தன்னை விட்டு தூரமாகிவிட்டான்..’ என எண்ணிக் கொண்டிருந்தாள் இத்தனை வருடங்களாக. இல்லை.. மீண்டும் அதே கண்கள்.. அதே அதட்டலோடு.. வந்துவிட்டான் என ஒரு சந்தோஷம் மனதில் இருக்கவே செய்தது, ஆனாலும் மறக்கவில்லை எதையும். 

இப்போதும் பதில் சொல்லவில்லை அவனுக்கு.

சர்வேஷ் “எப்போ ஜாயின் பண்ணனும்’” என்றான்.

“இந்த ப்ரைடேவிலிருந்து ” என்றாள்.

“எப்படி நீயே போய்டுவியா” என்றான்.

வர்ஷினிக்கு பொறுமை பறந்துக் கொண்டிருந்தது.. “ம்..” என்றாள்.

“என்னை பத்தி ஏதும் கேட்கமாட்டியா” என்றான்.

வர்ஷினி நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள். 

“அஹ.. நீ கேட்டாலும் சொல்றதுக்கு பெரிதாக ஒன்றுமில்லை.” என்றான்.

வர்ஷினியை ஏதும் அசைக்கவில்லை. அமைதியாகவே இருந்தாள்.

“நீ எப்படி இருக்க வர்ஷினி” என்றான்.. 

“ம்” என்றாள்.

“ஏன், வர்ஷி பேசமாட்டியா” என்றான்.

“பேசிட்டுதானே இருக்கேன்” என்றாள்.

“உன்னை ஹைதராபாத்தில் பார்ப்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. ரொம்ப வருஷம் கழிச்சு.. எப்படி இருந்தது தெரியுமா எனக்கு.. நோ வோர்ட்ஸ்..” என்றான் சீரான குரலில்.

வர்ஷினி மியூசிக் சிஸ்டம் ஆன் செய்தாள் சட்டென.

சர்வேஷ்க்கு, கோவம் இப்போது.. அமைதியாகினான். அவளின் வீடு நெருங்கியது.. அந்த தெருவில் செல்லாமல் சற்று தூரமாக நிறுத்தினான்.. வண்டியை.

வர்ஷினியின் முகத்தில் எந்த அதிர்வும் இல்லை.

சர்வேஷ் லேசாக அவள்புறம் திரும்பி “வர்ஷி, உன்னை பார்ப்பேன்னு நான் நிச்சயமாக எதிபார்க்கல.. பார்த்துட்டேன். பார்த்ததுக்கு அப்புறம்.. கான்ட் லீவ் யூ..” என்றான்.

வர்ஷினி “எப்படி, எதேச்சையா பார்த்த.. பழைய காதலி மேல வருகின்ற பரிதாப பார்வைதானே இது..” என்றாள் இறுக்கமான குரலில்.

சர்வேஷ் அனிச்சையாய் “ஹேய்” என மிரட்டி.. நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“உனக்கு எல்லாம் கோவமே வரகூடாது..” என அவனை முறைத்து பார்த்து சொல்லியவள்.. “சரி நான் நடந்தே போய்க்கிறேன்” என கதவை திறக்க எத்தனித்தாள் பெண்.

சர்வேஷ் “அதெல்லாம் முடியாது.. இரு” என்றான். வர்ஷினி அமைதியாகவே இருந்தாள்.

“சாரி.. சாரி.. வர்ஷி” என்றான்.

பெண்ணவள் “போ.. வேண்டாம்.. நான் வெள்ளை பன்னி.. காணாத வெள்ளை காக்கா.. ஜஸ்ட் லைக் டால்.. போ.. உன் பின்னாடி நான்தான் சுத்திட்டேன். நீதான் ரொம்..ப நல்லவனாச்சே.. ஓவ்வொரு வார்த்தையும் அப்படியே இருக்கு.. இன்னமும் எதுவும் மறையலை.. அன்னிக்கு.. யாருக்காகவோ என்னை தூக்கி சுவற்றி அடித்துவிட்டு போனவன்தானே நீ.. என் வாழ்க்கையிலிருந்து தொலைஞ்சி போயிட்ட அப்போவே.. இப்பவும் வேண்டாம் போய்டு..” என்றவள்.. லாக் கீய் ரெலீஸ் செய்துவிட்டால் சட்டென.

அதே வேகத்தில் அவளின் கையினை பற்றிவிட்டான் சர்வேஷ்.. “சாரி டா.. அப்போ எனக்கு தெரியாது.. நான் இம்மட்சூர்ராக இருந்தேன்.. சாரி..” என்றான் கண்ணில் வலியோடு.

வர்ஷினியின் கண்களில் நீர் படலம் “மறக்கலாம் சர்வா.. மன்னித்து திரும்ப ஏத்துக்க முடியாது சர்வா..” என்றாள் வலியான அதே குரலில்.

சர்வா “ஹேய் வர்ஷி” என்றான்.

“நான் முடிந்து போயிட்டேன்.. நான் மறக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. முடியலை.. இப்போ உன்னை நேரில் பார்த்துட்டேன்.. மறந்துடுவேன்.. கண்டிப்பா மறந்துடுவேன்..” என்றாள்.. கண்ணீர் வழிய.

சர்வேஷ் உதடுகளை இறுக்கமாக மூடிக் கொண்டான்.. அவளை பற்றியிருந்த கைகளை கோவத்தில் இறுக்கினான்.. 

வர்ஷினி உதறினாள். ஆனாலும் பிடியை தளர்த்தவில்லை சர்வேஷ். மற்றொரு கையால் அவளின் முகத்தில் விழுந்த முன்னுச்சி முடிகளை.. தன் சுட்டு விரலால் ஒதுக்கினான்.. பெண்ணவளின் கண்களை நேராக பார்த்தான்.. கண்ணீர் வழியும் அந்த பார்வை எரித்தது.. அவனை. 

வர்ஷினி “விடுங்க” என்றாள்..

பிடியை தளர்த்தினான்.. பெண்ணவள்.. கண்ணீரோடு இறங்கி நடந்தாள். அன்று அவளின் கண்ணீரை பார்க்காமல்.. சந்தோஷமாக சென்றுவிட்டான். இன்று அதன் வலியை உணர்ந்து.. அதை அவளிடமிருந்து வாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறான். காலம் மாறும்.. காட்சிகளும் மாறும் தானே.

“நிழலும் போனது 

நிஜமும் போனது..

எனக்குள் எனையே தேடினேன்..”