இடம் மாறும் மனங்கள்!

5

வர்ஷினி காபி குடித்து முடிக்க.. மஞ்சரி “என்ன பிரியாணி பிடிக்கும் வர்ஷினிக்கு ”என்றாள்.

அவளும் பதில் சொல்ல.. ராக்கேஷ் இப்போது தன் நண்பனுக்கு அழைத்தான். 

சர்வேஷ் அழைப்பினை ஏற்க.. ராக்கி “என்ன டா.. பங்க்ஷன் நல்லபடியாக முடிந்ததா..” என வினவினான்.

சற்று நேரம் விழா பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு.. “வீட்டுக்கு வர்ஷினி வந்திருக்கா.. நீ வரியா” என்றான்.

சர்வேஷ் “அவ என்னை பார்த்தால்.. கிளம்பிடுவா டா.. நான் வரலை.” என்றான், தயக்கமாக.

ராக்கிக்கு அடுத்து என்ன கேட்பது என புரியாமல்.. “சரி வைக்கிறேன்” என்றான். நண்பனாக சர்வேஷ் மனம் புரிந்தவனுக்கு ஒரு எண்ணம்.. ஆனால், நடைமுறை சிக்கலில் இருவரும் இப்படி நிற்கிறார்களே எனவும் தோன்றுகிறது.

ராக்கி, பெண்கள் இருக்குமிடம் வந்தான். இருவரும் வேலை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். தானும் அந்த பேச்சில் கலந்துக் கொண்டான். மனையாளுக்கு சமையலில் உதவியும் செய்ய தொடங்கினான். 

வர்ஷினி அதை பார்த்ததும் சட்டென அமைதியாகிவிட்டாள். கணவன் மனைவி இருவரும்.. கண்கள் பார்த்து.. அறிந்து.. வேலையை பகிர்ந்து செய்யத் தொடங்கினர்.

மஞ்சரி “வர்ஷினிக்கு சமையல் நல்லா வருமா” என்றாள்.. வேலையில் கவனமாக.

வர்ஷினி தன் பார்வையை மீட்டுக் கொண்டு.. மஞ்சரியின் கேள்விக்கு பதிலாக “அவ்வளவாக தெரியாது மஞ்சரிங்க. அம்மா சொல்ல சொல்ல சமைப்பேன். அப்படி இப்படின்னு ஒரு சாம்பார்.. பிரியாணி என்ற பெயரில் ஒரு தக்காளி சாதம்.. எதோ ஒன்னு சமைச்சிடுவேன்” என்றாள்.

மஞ்சரி “அஹ.. நானும் அப்படிதான். என் அடிமை வந்தபின்தான் ஓ.. சமையல்ன்னா.. இப்படிதான் செய்யனும்ன்னு தெரிஞ்சிகிட்டேன். உனக்கும் கல்யாணம் ஆகி  அப்படியொரு அடிமை வருவாங்கல்ல.. அவங்களை வச்சி நீயும்  சமைக்க பழகிக்கலாம் விடுங்க” என்றாள்.

ராக்கி “ப்பா.. இப்படி ஒரு அர்த்தத்தை கல்யாணத்திற்கு யாரும் கொடுத்திருக்க மாட்டாங்கடி. நல்லவேளை எனக்கு சமையல் தெரிந்தது வர்ஷி.. நான்தான் இவளுக்கு சமையல் சொல்லிக் கொடுத்தேன்..” என இருவரும் மாறி மாறி குறைசொல்லிக் கொண்டே.. கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

வர்ஷினி இதையெல்லாம் கண்டும் காணாதது போல் இருபதற்கு பெரும்பாடுபட்டாள். 

மஞ்சரி தொடர்ந்தாள் “சண்டே என்றால் போதும் இவரும் சர்வாவும்தான்.. குக்கிங். நான் துருவ் இரேண்டுபேரும் ஜம்முன்னு தூங்குவோம். சர்வா அண்ணா.. பிரியாணி சூப்பரா செய்வாங்க.. அப்புறம் ரசம்.. அஹ..  சர்வா வைக்கும் ரசம்சாதம் தான் துருவ் நல்லா சாப்பிடுவான்..” என சர்டிப்பை செய்துக் கொண்டிருந்தாள்.

பேசிக் கொண்டே சமையல் செய்தனர், நடுவில் கொறிக்க என தின்பண்டகளையும் விழுங்கினார். கிட்சென் வேலை முடித்து வந்து கணவன் மனைவி இருவரும் வர்ஷினியின் எதிரில் டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.. ராக்கி “இப்போ சாப்பிடலமா.. பசிக்குதா..” என்றான்.

வர்ஷினி “கொஞ்ச நேரமாகட்டும் ப்ரோ..” என்றாள்.

மஞ்சரி “என்ன ப்ரோ.. திடீர்ன்னு..” என்றாள்.

ராக்கி “ஹேய் அவ எங்களைவிட சின்ன பிள்ளை டி, எங்க ஜூனியர்..” என்றான்.

அதிர்ந்தாள் மஞ்சரி “அப்புறம் எப்படி இவ்வளோ கனேக்ட்டடா இருக்கீங்க” என்றாள்.

ராக்கி புன்னகையோடு தலையை கோதிக் கொண்டே “அதற்கு காரணம் சர்வாதான்.. அவனுக்கு இவளை..” என சொல்ல சொல்ல வர்ஷினி “சும்மா இருங்க ராக்கி” என்றாள்.

ராக்கி “நீ சும்மா இரு.. வர்ஷினி.. நீ அவனையும் கொஞ்சம் யோசிக்கலாம்.” என்றவன் “மஞ்சு, அவன் இவளுக்கு வைச்ச பேருதான் ஏஞ்சல்.. அவளை பத்திரமா பார்த்தகனும்ன்னு நினைச்சி இவ கூடவே இருப்பான்.. ஆனால், பார்த்துக்க தெரியாது.. இல்ல, தெரியலை.. அவனுக்கு” என்றான்.

வர்ஷினி எங்கோ வெறித்து பார்த்தாள்.

ராக்கி “ஹேய்.. அவனுக்கு, அப்போது தெரியலை டி.. உன்கிட்ட இப்படி பேசணும் பழகணும்ன்னு.. அப்போ, அவன் அப்படிதான் ரா’வாக இருந்தான். ஆனால்,  அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. எப்போவாது ரொம்ப குடிச்சிட்டா பீல் பண்ணிட்டே இருப்பான்.. நான் அவளை தொலைச்சிட்டேன் டா என.. புலம்பிடுவான்” என சொல்லி அமைதியானான்.

மஞ்சரி “ஹய்யோ.. சர்வாவோட லவ் நீதானா” என கொஞ்சம் சத்தமாகவே கதைத்துவிட்டாள் பெண்.

ராக்கி “ஹேய்.. கத்தாதடி” என்றான்.

மஞ்சரியின் கண்கள் விரிந்தது.. வர்ஷினியை புதிதாக பார்த்தாள்..

வர்ஷினிக்கு ‘இல்ல.. நான் இல்லையாம்.. அவனே சொல்லியிருக்கான்’ என கத்தத்தான் தோன்றியது. புன்னகைப்பதா.. சந்தோஷப்படுவதா.. அப்போது இருந்த குழப்பத்தையும்.. சோகத்தையும்.. காட்டுவதா என தெரியவில்லை. ஆனால், மஞ்சரியின் பார்வையை மட்டும் எதிர்கொள்ள முடியவில்லை.

ராக்கி சற்று நேரம் சென்று “முதல்நாள் இவளை பார்த்தே விழுந்துட்டான் போல.. மறுநாள், உமரோட சீக்கிரமாகவே லஞ்ச்க்கு போயிட்டான்.. வர்ஷினி அங்கே இருக்க.. உமர் டிபன் பாக்ஸ் திறந்து கொடுத்தான்.. சர்வா அங்கே நின்றுக் கொண்டான் போல.. நாங்க சாப்பிடும் போது வரவேயில்ல.. சாப்பிட்டானா என்னான்னு கூட தெரியாது.. திரும்பவும் கிளாஸ்க்கு வந்துட்டான்.. இப்படியே  கொஞ்சநாள்.. அப்புறம், உமரினை எதிபார்க்கவில்லை தான் மட்டுமே சென்றான்.. என்கிட்டே பேசவேயில்ல.. பலநாட்கள்” என சொல்லிக் கொண்டிருந்தான்.

வர்ஷினியின் நினைவுகள் அன்றைய தினத்திற்கு சென்றது.. வர்ஷினி “ஆமாம் சர்வேஷ் வந்தான்.. எதுக்கு தெரியுமா.. அன்னிக்கு எனக்கு ஹிந்தி எழுத முடியவில்லை.. புதிது இந்த லங்க்வேஜ்.. அவசர அவசரமா கிளாஸ்வொர்க் முடிக்கனும்ன்னா.. என்னால் எப்போதும் முடியாது. டீச்சர்ஸ் எல்லோரும் டைம் கொடுத்தாங்க.. ஆனாலும், என்னால் பாஸ்ட்’டா எழுத முடியலை மஞ்சரி.. அன்னிக்கு லஞ்ச் ஹாலில் அழுதுட்டு இருக்கிறேன்.. சர்வேஷ் வந்தான்.. முதலில் என்ன ஏது என கேட்டாங்க.. அப்புறம் என்னோட நோட் வாங்கி எழுதினாங்க.. நாலு லைன் எழுதினாங்க.. நானும் சரின்னு பார்த்துட்டுதான் இருக்கேன்.. அப்புறம் ‘என்னோட ரெகார்ட்ஸ் கூட நான் எழுதமாட்டேன்.. உன்னோடத நான் எழுதணுமான்னு கேட்டு.. பேனாவினால் என் கை முட்டியில் சட்டென ஒரு அடி.. செம வலி எனக்கு.. சிவந்து போச்சு.. கண்ணிலிருந்து தண்ணீர் கொட்டுது.. மீண்டும் தலையில் ஒரு கொட்டு வைச்சி.. எழுது.. என அழுகையோட தெலுங்கில் பேசினாங்க.. எனக்கு புரியவே கஷ்ட்டம்.. அப்புறம் இங்கிலீஷில சொன்னாங்க.. எழுத வைச்சான்.. சும்மா எழுதியிருந்தாலே.. சீக்கிரம் முடித்திருப்பேன்.. கூடவே உட்கார்ந்து இப்படி இருக்கு எழுத்து.. அப்படி இப்படின்னு சரியான டார்ச்சர்.. அப்போதிலிருந்து ஆரம்பித்தது.. இன்னமும் முடியலை போல” என்றாள்.

ராக்கி “ம்.. முடியலைதான்.. நடக்கட்டும்” என்றான்.

வர்ஷினி “ஐயோ நீங்க வேற ப்ரோ” என்றாள்.

ராக்கி “என்னை இவ்வளவு மரியாதையா கூப்பிடவே மாட்டா” என முடிக்க கூட இல்லை.

வர்ஷினி “ஆமாம்.. இவங்க எல்லாம் வேடிக்கைதான் பார்ப்பாங்க.. ஏதும் அவர்கிட்ட சொல்லவேமாட்டாங்க..” என்றாள்

அவனோ “நாங்க சொல்லி அவன் கேட்டிடுவான்.. எத்தனை முறை நாங்க சொல்லியிருக்கோம் தெரியுமா..” என்றான்.

வர்ஷினி அமைதியாக இருந்தாள்.

மஞ்சரிக்கு, சர்வா ஒருவகையில் வர்ஷினியை மனதளவில் அழுத்தியிருக்கிறார் என புரிய.. வர்ஷினியின் அமைதியை கவனித்து “சாப்பிடலாம்ங்க” என வர்ஷினியை கண் காட்டினாள் தன் கணவனிடம் ராக்கி “வர்ஷி.. வா சாப்பிடலாம்.. மஞ்சரி அம்மா அப்பாவை  கூப்பிடு” என்றான்.

மஞ்சரி எழுந்து சென்றாள்.

ராக்கி “வர்ஷி அப்சட் ஆகாதா.. சர்வா, விளையாட்டாக செய்தது எல்லாம்.. இப்போ அப்படி இல்லை அவன்” என்றான்.

வர்ஷினி எழுந்துக் கொண்டாள்.. கிட்சென் சென்று.. சமைத்தவைகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

ராக்கியும் உதவி செய்யத் தொடங்கினான்.

பெரியவர்கள் வந்து சேந்தனர்.. வர்ஷினியின் பெற்றோர் பற்றி பேசிக் கொண்டே உண்ணத் தொடங்கினர் எல்லோரும். துருவ் எழுந்து வந்தான்.. மஞ்சரி, மகனுக்கு சாதம் ஊட்டத் தொடங்கினாள்.

வர்ஷினி துருவிடம் பேசத் தொடங்கினாள் “துருவ்க்கு என்ன கலர் பிடிக்கும்” என தொடங்கினாள். அடுத்து அடுத்து என்ன கேட்பது என வர்ஷினிக்கு தெரியவில்லை.. மஞ்சரி குழந்தையிடம்..  பஸ் ரைம்ஸ் சொல்லி காட்டு என்க.. 

வர்ஷினி “ஹய்யோ.. வேண்டாம் வேண்டாம்.. ஆதிரனை அத்தை சொல்லு சொன்னாலே.. ஓடிடுவான். வேண்டாம் மஞ்சரி.. ஏதாவது செய்யுன்னு சொன்னால்.. பசங்க கேட்கமாட்டாங்க” என்றாள் புன்னகையோடு

மஞ்சரியும் “அஹ.. உண்மையாக. வர்ஷினி அத்தைக்கு எல்லாம் தெரியுதுடா” என தன் மகனிடம் பாவனையாக சொன்னால் மஞ்சரி. துருவ் அதை கேட்டு தலையை ஆட்டி புன்னகைத்தான்.