வர்ஷினி “நானாக என்ன நினைத்தேன். உண்மைதானே. மீரா உங்ககிட்ட ப்ரொபோஸ் செய்தாங்கதானே அன்று” என்றாள்.. இன்றும் அதே கோவத்தோடு.
“சரி அதனால் என்ன.. நீ போய் அவங்க வீட்டில் போட்டுக் கொடுப்பியா” என்றான் அன்றைய சூழல் தெரியாமல்.
“நான் எங்க போட்டு கொடுத்தேன்.. என்ன சொல்றீங்க நீங்க” என்றாள். அப்போதுதான் ஷர்மி அன்று சொன்னதும் நினைவு வந்தது.. சர்வேஷ் இப்படிதான் தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறான் என. இப்போதும் வலித்தது பெண்ணுக்கு.
“நான் ஒன்னும் போட்டுக் கொடுக்கல” என்றாள்.
சர்வேஷ் அவளின் குரல் உணர்ந்து “சரி இப்போது எதற்கு எந்த பேச்சு” என்றான்.
பெண்ணவளுக்கு தலைகேறியது கோவம்.. என்னை எப்படி அப்படி நினைக்கலாம் என கோவம்.. பழைய கோவம்.. அப்போ எப்படி லவ் பண்ணீங்க.. எனவும் கேள்வி அதை உடனே கேட்டால் பெண் “சர்வா.. நான்தான் அவங்க வீட்டில் சொல்லி பிரச்சனை செய்துவிட்டேன்னு நினைக்கிறீயா” என்றாள்.
சர்வேஷ் “இல்ல.. அப்படியில்ல வர்ஷி.. எனக்கு இதை பேசவே பிடிக்கலை.. விடேன்” என்றான்.
பெண்ணவள் “விடமுடியாதே.. என்மேல் ஒரு குற்றத்தின் நிழல் இருக்கே சர்வா, அதை எப்படி விடமுடியும்.. எனக்கு புரியலை.. எப்படி என்னை லவ் பண்ணீங்க.. இந்த எண்ணத்தை மனசில் வைத்துக் கொண்டு.” என்றாள்.
சர்வேஷ் “எந்த எண்ணம்.. இதெல்லாம் ஒண்ணுமேயில்ல வர்ஷி.. ஸ்கூல் டைமில் நடந்தது.. அப்போதிலிருந்தே எனக்கு உன்னை பிடிக்கும் வர்ஷினி.” என்றான்.
“புரியலை சர்வா.. நான் அப்படி செய்திருப்பேன்னு உனக்கு தோனியிருக்குல்ல.. அப்படிதானே.. உங்க லவ்’வை நான் அவர்கள் வீட்டில் சொல்லிருப்பேன்னு தோணியிருக்குல்ல.. நான் அப்படி செய்வேனா” என்றாள்.
சர்வா புன்னகையோடு “ஹேய்.. அப்போது உனக்கும் என்னை பிடிக்கும்தானே.. எதோ சிறுபிள்ளைதனமாக ஏதாவது நடந்திருக்கும்.. வர்ஷி” என்றான் அமைதியாக சமாதானப்படுத்தும் எண்ணத்துடன்.
வர்ஷினி கோவத்தின் உச்சத்திலிருந்தாள் “எப்படி சர்வா இப்போதும் அப்படியே சொல்ற.. உன்னை பிடிக்கும்ன்னா.. அதற்காக என்னவேனா செய்வேனா நான்” என்றாள்.
வினா, வினையாகதான் சர்வாவின் காதில் விழுந்தது.. சர்வா நிதானமானான். ‘தவறாகிவிட்டதோ.. வேற யார் அவர்கள் வீட்டில் சொல்லியிருப்பார்கள்.. பள்ளியே வரவில்லையே அவள்.. என்னை பள்ளியில் வந்து, மீராவின் பெற்றோர் பார்த்த போதும் அப்படிதானே இருந்தது நிகழ்வு’ என யோசித்தான்.
சர்வா “வர்ஷினி, எனக்கு புரியலை.. உண்மையாக என்ன நடந்தது அன்று” என்றான் குரலில் வீரியம் இருந்தது.. தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற த்வனி இருந்தது.
சர்வேஷ் அங்கே புன்னகையோடு தலையில் கை வைத்துக் கொண்டான்.. என்னமோ இப்போது புன்னகை வந்தது.. ஆனால் வர்ஷினி இப்போதும் சீரியஸாகதான் பேசினாள் “நானும் ஷர்மியும் சைக்கிளில் போகும் போது.. நீயும் மீராவும் பேசியதை பார்த்தோம். எனக்கு எவ்வளவு கஷ்ட்டமாயிருந்த்து தெரியுமா.. ஆனால், நீ உடனே கிளம்பிட்ட போல.. எங்களுக்கு இது தெரியாது, அன்று இரவு டியூஷன் வந்தாங்க மீராவின் அண்ணனும் அப்பாவும் உன்னை தேடி.. அப்போதுதான் தெரிந்தது மீரா அக்கா வீட்டுக்கே போகலைன்னு.. அதனால்தான் நான் சொன்னேன்.. மீரா, இந்த பக்கமாகத்தான் போனாங்க நான் பார்த்தேன்னு சொன்னேன்.. அவ்வளவுதான். நான் ஏதும் உன்னை பற்றி சொல்லவேயில்ல.. அவங்கதான்.. நீ அவங்களை ரிஜெக்ட் பண்ண துக்கத்தில் பார்க்கில் உட்கார்ந்து அழுது.. வீட்டுக்கு போகாமல் இருந்து.. அவங்க அப்பா அண்ணன் கேட்கவும் உண்மையை சொல்லியிருக்காங்க.. நான் ஏதும் சொல்லவில்லை. நீ அப்படியே மீராவை லவ் செய்திருந்தாலும் எனக்கு ஒகேதான்” என்றாள்.. இன்றும் வேகத்தோடும்.. காதலோடும்.
சர்வேஷ் “என்ன உளற..” என்றான் கோவமாக.
பின் “சாரி வர்ஷி.. எனக்கு இப்போது இதெல்லாம் பெரிதாக தெரியவில்லை.. கேட்க்கும் போது எதோ விளையாட்டாக இருக்கு.. ஆனால், நீ இவ்வளோ பீல் பண்ணியிருப்பேன்னு தெரியாது டா..” என்றான்.
“அப்போதே.. உமர், இந்தர் எல்லாம் சொன்னாங்கதான்.. எனக்கு என்னமோ அப்போது அப்படி கோவம் நீ சொல்லிட்டேன்னு. எதையும் காதில் வாங்கவில்லை.. அப்படியே இருந்துட்டேன்.” என்றான், தன்முறை விளக்கமாக.
இருவருக்கும் என்ன பேசுவதென தெரியவில்லை.
பின் சர்வேஷ் “பேபி, நான் மீராகிட்ட என்ன சொன்னேன்னு கேட்கவேயில்ல நீ ” என்றான்.
பெண்ணவள் “அதான் அவங்க பார்க்கில் போய் உட்கார்ந்திருந்தாங்களே” என்றாள்.
“ம்.. இப்போதும் சொல்றேன்.. எனக்கு உன்னை அப்போவே பிடித்து.. அதனால்தான் மீராவிடம் ‘இப்போது ஏதும் வேண்டாம்.. படிப்போம்.. அப்புறம் பார்த்துக்கலாம் எல்லாம்’ என சொன்னேன். உன் பெயரை அந்த வயதில் சொல்ல எனக்கு தைரியமில்லைதான். ஆனால், நிறைய பிடிக்கும்.” என்றான், ரசித்தது சொன்னான்.. குரல் குழைந்தது.
வர்ஷினி “எனக்கு தெரியாதே.. என்னை பார்க்காமல் போய்ட்டீங்க.. டியூஷன் கூட வரவில்லையே” என்றாள்.
“ஆமாம்.. மீரா வீட்டில், அவளை பள்ளி அனுப்பமாட்டேன் என்றுவிட்டார்கள்.. நான் மட்டும் எப்படி தவறே செய்யாதது போல பள்ளி வருவது. கஷ்ட்டமாக இருந்தது.” என்றான்.
வர்ஷினி “நீங்க என்னை பார்த்தாலும் அப்போதெல்லாம்.. பேசாமல்தான் போனீங்க” என்றாள் சோகமாக.
“ஹேய் அதான் சொல்றேனே.. உன்மேல் எனக்கு அப்போது உண்மையாகவே கோவம்.. ஏன் நீ இப்படி செய்த என. ஆனால், காலம் மாற எல்லாம் மாறிடுச்சி. உனக்கும் என்னை பிடிச்சிருக்கும்.. அதான் எதோ சொல்லியிருப்பேன்னு நினைத்துக் கொள்வேன். அதுவே தப்புன்னு இப்போதான் புரியுது” என்றான்.
பெண்ணவளும் “இல்ல.. எப்படி வேண்டுமானாலும் லவ் பண்ணலாம்ன்னு இருக்கமாட்டேன் நான்” என்றாள்.
சர்வேஷ் “சாரி.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. இதெல்லாம் நடந்திருந்தாலும் எனக்கு உன்னை பிடித்தது.. பிடிக்குது.. அது உண்மை.” என்றான்.
வர்ஷினி ஏதும் பேசவில்லை..
பெண்ணவள், உமர் திருமணத்தில்.. தன்னை பார்த்ததும் ஓடிய நாட்கள் நினைவு வந்தது அவன்முன்.. “அதான், ஹைதராபாத்தில் என்னை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிபோனீயா” என்றான்.
“அப்போவெல்லாமும் நீங்க என்னை இப்படித்தானே நினைச்சிருப்பீங்க” என்றாள்.
“போதும் வர்ஷி.. நான் அப்போதுதான் ரொம்ப ப்ளேஸ்டாக பீல் பண்ணேன் தெரியுமா” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனே தொடர்ந்தான் “எனக்கு அந்த பொண்ணோட திருமணம் நிச்சயம் நடக்கும் போதே உன் ஞாபகம்தான். அது இல்லையெனவும்.. எனக்கு வேறு ஞாபகம் வரவேயில்ல.. அதிகமாக உன்னைத்தான் நினைச்சிட்டு இருந்தேன்.. உனக்கு கல்யாணம் ஆகியிருக்க கூடாதுன்னு கூட வேண்டியிருக்கேன் தெரியுமா.. அப்புறம், என் அத்தை இறந்த போது ஹைதராபாத் வந்தேன். அப்போது தர்ஷனை பார்த்து கேட்டேன்.. அவன் படிக்கிறா.. மதுவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. உனக்கும் அல்மோஸ்ட் பிக்ஸ் ஆகிடுச்சின்னு சொன்னான்.. அதில்தான் கொஞ்சம் அப்செட் ஆகிட்டேன்.. திரும்பவும் உன்னை நினைக்காமல் இருக்கனும்ன்னுதான் நினைத்தேன்.. ஆனால் முடியலை. உமர் கல்யாணத்தில் உன்னை பார்க்கத்தான் வந்தேன்னு கூட சொல்லலாம்.. அஹ.. பார்த்தால்.. என் ஏஞ்சல் அப்படியே இருந்தால் எனக்காக” என ரகசியக் குரலில் இறுதி இரு வாக்கியங்களை பகர்ந்தான் காதலாக.