சர்வேஷ் அவளை உட்கார்ந்தபடியே அனைத்துக் கொண்டு “கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் எதற்கு வந்தன்னு கேட்டுட்டு.. இப்போது இப்படி சொல்ற..” என சொல்லி கொண்டே அவளின் இதழில் முத்தமிட்டு விலகினான்.

வர்ஷினி “ஷூ.. போதும்” என்றபடி அவனின் சிகையை கோதினாள்.

சர்வேஷ் “ஒரு வருடம் சென்று மேரேஜ் பண்ணிக்கலாம் தானே, வீட்டில் கேட்டார்கள் சரின்னு சொல்லிட்டேன்.. உனக்கும் அங்கே ஜாப்  பார்த்துக்கலாம்.. டைம் வேண்டுமல்லவா” என்றான், கீழே பேசியவற்றை பகிர்ந்தான்.

பெண்ணவள் “உண்மையாவே நாம் கல்யாணம் செய்துக்க போறோமா.. என் அப்பாக்கு உன்னை பிடிச்சிடுச்சா” என்றாள்.

“ம்.. அவராகத்தான் முதலில் வாங்க மாப்பிள்ளை என அழைத்தார் தெரியுமா” என்றான்.

பெண்ணவள் “அவராகவே பேசினாரா.. என்ன கேட்டார்” என்றால் ஆவலாக.

சர்வேஷ் ஆர்வமாகவே மாமனார் தன்னிடம் வேலை பற்றி கேட்டது.. திருமணம் பற்றி பேசியது எல்லாம் சொன்னான்.

பெண்ணவள் வாய்பிளந்து எல்லாம் கேட்டாள்.. “பாரேன்.. என்னிடம் ஒருவார்த்தை உன்னை பற்றி கேட்டதில்லை தெரியுமா” என்றாள்.

“நாங்கள் நேரில் பேசிப்போம்.. நீ எதுக்கு நடுவில்” என்றான், விளையாட்டு மொழியில்.

“ஓ.. அவ்வளவு தூரம் பேசியாச்சா” என்றாள்.

சர்வேஷ் பந்தாவாக “ரொம்பதூரம் போயாச்சு பார்த்துக்க.. அவர் எது செய்தாலும் சரியாக இருக்கும்.. அதான் கல்யாணம் பற்றி கேட்டதும் நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றான்.

பெண்ணவள் இமைக்காமல் அவனையே பார்த்தாள்..

“என்ன” என்றான்.

“இதுவும் கொஞ்சம் ஓவராக இல்லை” என்றாள்.

“இல்லை.. அவர் பெண் மேல் அவர் எவ்வளவு பாசம் வைத்திருந்தால்.. இவ்வளவு யோசித்திருப்பார். என்னை பொறுத்தவரை.. அவரோட தாட்ஸ் சரிதான். அதனால் உன்னை மனதில் நிறுத்தி யோசிப்பதால்.. அவர் கல்யாணத்தை பற்றி சொன்னதும் சரிதானே.” என்றான்.

வர்ஷினிக்கு என்ன பேசுவதென தெரியவில்லை.. அமைதியாகவே இமைக்காமல் அவளையே பார்த்திருந்தாள்.

சர்வேஷ் எழுந்து நின்றான்.. அவளுக்கு கை நீட்டினான் எழுவதற்கு.. பெண்ணவள் அவன் கைபற்றி எழுந்தாள்.

சர்வேஷ் “போதும் டி, என்னை பார்த்தது.. நான் வேறு மாமனார்க்கு பிடிச்ச மாப்பிள்ளையாக இருக்கனும்ன்னு பார்க்கிறேன்.. நீ வேற.. இப்படி பார்த்துட்டே இருக்க..” என சொல்லிக் கொண்டே அவளை அணைத்தான் “எவ்வளோ மிஸ் பண்றேன் தெரியுமா” என்றான் காதோரம்.

பெண்ணவள் எதையும் யோசிக்காமல் அவனை கட்டிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் சர்வேஷ் “போலாமா” என்றான். பெண்ணவளும் தலையசைத்தாள் சரியென. இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

வர்ஷினி தன் தந்தையின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள். சர்வேஷ் அமைதியாக சென்று தன் மாமாவின் அருகே அமர்ந்துக் கொண்டான்.

பார்த்திருந்த லக்ஷ்மிக்கு நமுட்டு சிரிப்பு.. முத்துநாயகிதான்  கண்களால் அமைதிப்படுத்தினார்.

இப்போது தர்ஷனுக்கு அழைப்பு சென்றது விஜயாவிடமிருந்து. தர்ஷன் ஐஸ்வர்யா என இருவரும் சர்வேஷ்ஷிடம் பேசினர். முத்துநாயகியும் நலம் விசாரித்து பேசினார். ஆக குடும்பங்களுக்குள் புரிதல் தொடங்கியது.

மீண்டும் வர்ஷினியிடம் திருமண விவரம் பற்றி பெரியவர்கள் எடுத்துரைத்தனர். பெண்ணவளும் கேட்டுக் கொண்டாள்.

சர்வேஷ் குடும்பம் விடைபெற்றனர். மணமக்கள் இருவரும் போனில் பிசி. இருவரும் அப்போதே போனில் செய்தி வழியாக நாளை எப்போது பார்க்கலாம் என திட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தனர்.

அடுத்து வந்த ஒரு வாரம் எப்படி கடந்தது என்று சர்வா வர்ஷி இருவருக்கும் தெரியவில்லை. நாட்கள் ஓடியது.. வர்ஷினி விடுப்பு எடுக்க முடியாது என சொல்லிவிட்டால், மறுநாள். அதனால்.. மாலையில் சீக்கிரமாக அலுவகலத்திருந்து அழைத்துக் கொண்டான் சர்வா. 

அவனுக்கு காயங்கள் எல்லாம் சரியாகிவிட்டதால்.. இரு சக்கர வாகனம் எடுத்து வந்தான்.. வர்ஷினி “உங்க பைக்கா” என ஆர்வமாக கேட்டுக் கொண்டே ஏறினாள்.

சர்வா “இல்ல டி, கார்த்திக் மாமாவினது” என்றபடி.. சுற்றும்முற்றும் பார்த்து.. வண்டியை கிளப்பினான்.

இருவரின் வாகனமும் கூட்ட நேரிசலை கடந்து  ECR சாலையில் செல்லத் தொடங்கியது. வண்டியின் வேகம் மட்டுப்பட்டது.. சர்வேஷ், வண்டியை செலுத்திக் கொண்டே  அவளின் கையை இழுத்து முன்புறம் பிடித்துக் கொண்டான் தன் கைகளுக்குள்.. “எப்போது உன்னை என் கூட கூட்டிட்டு போவேன்னு இருக்கு” என்றான்.

பெண்ணவள் முகம் சோர்வை கடந்து புன்னகைத்தது.. “இப்போதானே சம்மதம் கிடைச்சிருக்கு” என்றாள்.

“அதான் இன்னமும் டெம்ப்ட் ஆகுது” என்றான்.

“நான் என்ன சாக்லெட் டா..” என்றாள்.

“இல்ல இல்ல.. சாரி.. சும்மா சொன்னேன்.. நான் ரொம்ப ஜென்டில்மென் தெரியுமா..” என்றான்.

“அப்படி ஒன்னும் தெரியலையே.. எங்க வீட்டு மாடியிலேயே கிஸ்.. இதோ இப்படி லாங் டிரைவ்.. இதெல்லாம் எதில் சேர்த்தியோ” என்றாள்.

“இதெல்லாம்தான் குட்குவாலீட்டீஸ் ம்மா.. இதுக்கு மேலே போனால்தான் பேட். ஹே.. நான் இந்தியாவோட ஒப்போசிட் சைட் போகபோறேன்.. அதுவும் உன்னை விட்டுட்டு.. அடுத்து பதினோரு மாதம் ஆகும் பார்க்க.. ” என்றான்.

“அதனால் எல்லாம் சரியா” என்றாள்.

“சரி ம்மா.. தொடவில்லை” என சொல்லி அவளின் கையை விட்டான்.

பெண்ணவள் தன் கைகளை எடுத்துக் கொண்டாள். 

சர்வேஷ் கோவமெல்லாம் கொள்ளவில்லை “உமர்கிட்ட சொல்லணும் ஒகே ஆகிடுச்சிடான்னு.. அவன்கிட்டதான் எல்லாம் உளறினேன்.. பேசலாமா” என்றான்.

“பேசலாம்.. கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றபடி அவனை இடையோடு கட்டிக் கொண்டாள் வர்ஷினி.

இருவரும் நிதானமாகவே சில மையில் தூரங்கள் பயணித்து திரும்பினர்.

வீடு வந்து சேர்ந்தனர். சர்வேஷ் பிரிய மனமில்லாமல் “நான் காலையில் வந்து கூட்டி போறேன்” என்றான்.

வர்ஷினி “வேண்டாம் வேண்டாம்.. நான் வேலையை பார்க்கனும்.. ஈவினிங் சீக்கிரம் வாங்க” என்றாள்.

இருவருக்கும் இந்த ஒருவாரமும் காதல் வாரம்தான். வீடு சென்றதும் சர்வேஷ் எப்போதும் போல போனில் வர்ஷினியை அழைத்து பேசத் தொடங்கினான். அவளும் அதைதான் எதிர்பார்த்தாள். இப்படி  நாட்கள் கடக்க… சரியாக நான்காவது நாள் வர்ஷினி “உன்னோட ex மீரா அட்ரெஸ் தெரியுமா நம்ம பத்திரிக்கை அனுப்பனும்” என்றாள் எதோ பேசும் போது.

சர்வா “இல்ல வர்ஷி அவள் EXஎல்லாம் இல்லை.. பிரெண்ட்தான்.” என்றான்.

“சும்மா சொல்லாத.. உனக்குதான் அவள் லெட்டர் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணாலே” என்றாள் இப்போதும் அதே பொசசிவ் குரலில்.

சர்வேஷ் “நீயாக எண்ணிக் கொண்டு.. இருந்திருக்க. அதனால்தான் அன்று.. அவங்க வீட்டில் எல்லாம் சொன்னியா” என்றான். சர்வேஷ் பொறுத்தவரை.. வர்ஷினிதான், தானும் அவளும் பேசிக் கொண்டு நின்றதை பார்த்துவிட்டு வீட்டில் எல்லாம் சொல்லியிருக்கிறாள்.. அதனால்தான் மீரா அன்று வீடு செல்லாமல் இருந்திருக்கிறாள்.. ஆக வர்ஷினியால்தான் பிரச்சனை என எண்ணிக் கொண்டிருக்கிறான். இப்போது அதனைத்தான் கேட்டான்.