அடுத்த நான்குநாட்களும் வர்ஷினியின் மனதை தயார் செய்தான் சர்வேஷ். “வர்ஷி என்னை தெரியும்தானே உன் அப்பாக்கு, ஏன் குடும்பத்திற்கே தெரியுமே.. நான் பேசுகிறேன் வர்ஷி.. எனக்கும் சரிபாதி பங்கிருக்கே..” என பலவாறாக பேசினான். வர்ஷினியை, அவளின் தந்தை என்ன சொல்லுவாரோ என எண்ணி தானே பேசுகிறேன் என சொல்லிக் கொண்டிருந்தான்.
வர்ஷினிக்கோ சர்வேஷ்ஷின் பேச்சில் மனம் சமாதானாம் ஆகவில்லை. அவளுக்கு அவள் தந்தையின் எண்ணம் புரியும்.. அவர் எனக்காக யோசிக்கிறார்.. இதில் சர்வேஷ் பேச காரணம் அவன் என்னை திருமணம் செய்ய விரும்பிகிறேன் என்பது மட்டுமே. ஆனால், தந்தை கடந்தகாலத்தில் நடந்ததை எண்ணி.. என்மேல் உள்ள அக்கறையில் பயம் கொண்டிருக்கிறார்.. இதை எப்படி சர்வேஷ்சிடம் சொல்லுவேன்.. என இருபக்கமும் தத்தளித்தாள் பெண்.
அடுத்த நான்கு நாட்கள் கடந்தது..
மது தன் பிள்ளைகள் இருவரோடும்.. தன் அம்மா வீடு வந்தாள். வீடு குழந்தைகளின் வரவினால் நிறைந்து இருந்தது. பிள்ளைகள் இருவரும் பேசும்.. ஆங்கலம் கலந்த தமிழ் வர்ஷினியின் இளமைக்காலத்தை பெற்றோருக்கு நினைவுப் படுத்தியது.
சிவகுமார் பேரன் பேத்திகளின் ஆங்கில உச்சரிப்பினை கவனமாக கேட்டு புரிந்துக் கொள்ள வேண்டி இருந்தது. விஜயாவிற்கு சுத்தமாக புரியவில்லை.
பிள்ளைகளை வெளியே கூட்டி சென்றனர் தாத்தா பாட்டி சித்தி மூவரும். வெளியே எங்கும் மதுவர்ஷினி வரவில்லை. உண்டால் உறங்கினாள்.. அவ்வளவுதான் வேலை அவளுக்கு.
அடுத்து வந்த ஒருவாரமும் சென்றதே தெரியவில்லை வீட்டாருக்கு.
சிவகுமாரின் அக்கா அழைத்தார் ‘வர்ஷினிக்கு முன்பு சொல்லியிருந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசிவிட்டேன்.. அவர்களுக்கு இதில் முரண்பாடு இல்லை. ஆனால், ஜாதகம் ஒத்துவர வேண்டும்’ என்கிறார்கள்.
சிவகுமார் ‘சரிக்கா, பார்த்திடலாம்.. ஜாதகம் அனுப்ப சொல்லுங்கள்’ என்றார்.
அதன்படியே மறுநாள் சென்று ஜாதகப் பொருத்தம் பார்த்து வந்திருந்தனர். திருமணம் செய்யும் அளவு பொருத்தம் இருந்தது. மாலையிலேயே.. தன் அக்காவிற்கு அழைத்து சொல்லி சந்தோஷப்பட்டார் சிவகுமார்.
அதை தொடர்ந்து நேரில் பார்க்க ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கியது.
மதுவிடமும் வர்ஷினிக்கு வந்திருக்கும் வரன் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டில் திருமண பேச்சு உலாவர தொடங்கியது.
வர்ஷினிக்கு, இந்த இரண்டுநாளும்.. பெரியவர்கள் யாருமில்லாமல்.. பிள்ளைகளை சமாளிக்க வேண்டி இருந்தது. மாலையில் நேரமாக வீடு வந்தாள்.
ஹரிணி லாப்பிலிருந்து கண்ணினை எடுத்தாள் இப்போதுதான் “வர்ஷி.. டூ லேட்” என சொல்லிக் கொண்டே.. பத்து வயதேயான ஹரிணி, சின்ன டி-ஷர்ட் சார்ட்ஸ் அணிந்துக் கொண்டு பார்ப்பதற்கு பார்ப்பி வண்ணத்தில்.. கண்களை விரித்துக் கொண்டு.. வர்ஷினி எதிரே நின்றாள் குட்டி பெண்.
வர்ஷினிக்கு அவ்வளவு உயரமான பெண்ணினை தூக்கிக் கொள்ளத் தோன்றியது அவளின் குழந்தைதனத்தில். ஹரிணி இன்னமும் குழந்தைதான்.. எல்லோரிடமும் ஒட்டிக் கொள்வாள்.. வாசலில் நின்றால்.. போவோர் வருவோர் கண்கள் இயல்பாக இவள் பக்கம் திரும்பும். குட்டி பெண்ணும்.. ஹாய் என அவர்கள் பார்ப்பதை உணர்ந்து.. பேசத் தொடங்கிடுவாள்.. “இந்த கலர்க்கு பேர் என்ன” என்பாள்.
அவர்கள் ஆங்கலத்தில் சொல்ல.. இவளோ “தமில் அக்கா” என்பாள்.
“ஓ.”. என சொல்லி, அவர்களும் தமிழில் அதன் பெயர் சொல்லுவார்கள். இப்படிதான் அவள். தெருவில் எல்லோரும் பழக்கம் இப்போது அவளுக்கு.. பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு.. மாலையில் விளையாடவும் பழகியிருக்கிறாள். ஆனால், இன்று பெரியவர்களும் வீட்டில் இல்லாததது.. அக்கம் பக்கம் இருக்கும் தன் நண்பர்களும் பள்ளிக்கு சென்றுவிடுவதால்.. இந்த காலை நேரம்தான் போரிங்காக செல்வதாக எண்ணம் ஹரிணிக்கு. இப்போது சித்தியை பார்த்ததும் கோவப்படத் தொடங்கினாள்.
சர்வேஷ்ஷின் எந்த செய்தியை பார்க்க வேண்டும் என ஆவலோடு வந்தவளுக்கு.. இந்த குட்டி பெண்ணின் கோவமும் முறைப்பும்.. அவளை மட்டுமே கவனிக்க செய்தது. அதனால், சர்வேஷ் “வீடு வந்துட்டியா.. இன்றாவது பேசிடு” என அனுப்பிய எந்த செய்திக்கும் பதில் அனுப்பவில்லை பெண்.
வர்ஷினி “என்ன பாப்பு.. சரியான டைம்தானே” என சொல்லி அப்படியே சோபாவில் அமர்ந்தாள்.
ஹரிணி “தாத்தா பாட்டி அம்மா எல்லோரும் உன் அத்தை வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. ஆனால், பாட்டி சூப்பராக சமைச்சி வைச்சிட்டாங்க.. இவன்தான் என்னோட அப்பளத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டான்.. அம்மாக்கு போன் செய்து சொன்னேன்.. அம்மா பிஸி அப்புறம் பேசறேன்னு வைச்சிட்டாங்க.. உனக்கு கால் செய்ய போனேன்.. திரும்ப அம்மாவே போன் செய்து உனக்கு ஏதும் கால் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்க.” என நடந்த எல்லாவற்றையும் ஒப்புவித்தாள்.
வர்ஷினிக்கு அம்மா பொண்ணு இருவரை நினைத்தும் ஆச்சர்யம்.. அத்தோடு விரிந்த கண்களோடு.. பேசும் ஹரிணியை என்னமோ பிடித்துப் போனது.. இப்போது வர்ஷினி “நீ போன் பண்ணு பரவாயில்ல.. வேலை இருந்தால்.. கொஞ்ச நேரம் சென்று நானே திரும்ப கூப்பிடுவேன்” என்றாள் புன்னகையோடு.
எழுந்து வர்ஷினி தன் அறைக்கு சென்றாள். பின்னாலேயே ஹரிணியும் சென்றாள். வர்ஷினி வாஷ்ரூம் சென்றுவிட்டாள்.
ஹரிணி அவளின் போனில் கவனமானால்.. அப்போது சர்வேஷ்ஷின் அழைப்பு வந்தது. ஹரிணியின் விரல்கள் பட்டு சட்டென அழைப்பு ஏற்க்கபட்டுவிட்டது.
சர்வேஷ் “என்ன அதிசயம்.. இவ்வளவு சீக்கிரம் எடுத்திட்ட..” என்றான்.
ஹரிணி “ஹலோ, சாரி சர்வா.. வர்ஷினி வாஷ்ரூம் போயிருக்கா.. வந்ததும் கூப்பிட சொல்றேன்” என்றாள் பெரிய மனுஷி போல.. ஆனால், அந்த குரல்.. குழந்தையென காட்டிக் கொண்டுக்க..
சர்வேஷ் முகத்தில் மலர்ந்த புன்னகை.. ‘கூப்பிட மாட்டாள் சர்வா என.. ஆனால், இப்படிதான் சேவ் செய்திருக்கிறாளா’ என புன்னகைத்துக் கொண்டான்.
இப்போது பேசுவது யாரென அந்த குழந்தை மொழியில் தெரிய சர்வேஷ் “ஓ.. நீதானே ஹரிணி” என்றான்.
ஹரிணிக்கு தெரியாமல் அழைப்பினை ஏற்ற உணர்வு போய் “என்னை எப்படி தெரியும் உங்களுக்கு..” என ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது.
அவனோ “உன் சித்தி சொல்லியிருக்கா” என்றான்.
“நீங்க அவளோட பெஸ்ட் பிரெண்டா” என்றாள்.
இப்படியே பேச்சு தொடர.. வர்ஷினி வெளியே வந்தாள்.
ஹரிணி “உன் பிரென்ட் சர்வா” என்றாள்.
வர்ஷினிதான் பதறி போனாள்.. ஆனாலும் முகத்தில் காட்டாமல்.. “வ்வெய் யூ டேகேன் கால் ஹரிணி” என்றாள்.
ஹரிணி அதற்குள் பதறி போனாள் “இல்ல..” என தொடங்க..
வர்ஷினி போனினை காதில் வைத்து பேசத் தொடங்கினாள் “எதுக்கு இப்போ கூப்பிட்டீங்க” என்றாள்.
சர்வேஷ் “ஏய்.. அவளை ஒன்னும் சொல்லாதா.. நான்தான் சும்மா பேசிட்டு இருந்தேன்.. அவள் தெரியாமல் அட்டென் செய்திருப்பாள் போல..” என்றான்.
இப்போதுதான் குட்டி பெண்ணின் முகத்தை பார்க்க.. அது பீதியோடு இருந்தது.. வர்ஷினிக்கு இப்போதுதான், தான் அதட்டியது புரிய.. சர்வேஷ்ஷிடம் “பைய்..” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள்.
குட்டி பெண்ணின் வருத்தம் பார்த்து.. “சாரி டா..” என்றாள் கன்னம் வருடி.
“மிஸ்டேக்கனா கால் அட்டென் ஆகிடுச்சி வர்ஷி” என்றாள் சாதரணமாக மூச்சுவிட்டு.
“நான்தான் சட்டென டெம்பர் ஆகிட்டேன்.. வா.. பாட்டி என்ன ஸ்னாக்ஸ் வைச்சிருக்காங்க பார்க்கலாம்” என சொல்லி இருவரும் வெளியே வந்தனர்.
அன்றைய பொழுது இனிதாக சென்றது.. ஹரிணி வர்ஷினியை விட்டு நகரவில்லை.. இரவு இருவரும் சேர்ந்தே உறங்கினர்.
மறுநாள் வர்ஷினி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள் காலையில். விஜயா பரபரப்பாக உணவுகளை சீக்கிரமாக இன்று தயாரித்து முடிந்திருந்தார். கிட்செனில் இப்போது மதுவும் நின்றுக் கொண்டிருந்தாள்.
சிவகுமார் பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்தவர் பெண் தன் அறையிலிருந்து வெளியே வந்ததை உணர்ந்தவர் “வர்ஷினி இங்க வா” என அழைத்தார்.
பெண்ணவள் தந்தையின் அருகே வந்தாள் “என்னாப்பா.. வீடே டிப்ஃபெர்ன்ட்டா இருக்கு.. மாமா வருகிறாரா..” என்றாள்.
தந்தை தன் கையிலிருந்த திருநீர்னை பெண் நெற்றியில் வைத்தவர் “எல்லாம் சந்தோஷமான விஷயம்தான்..” என்றார்.
பெண்ணவள் என்னவாக இருக்கும் என இயல்பாக யோசித்தாள்.
மது “வர்ஷினி, நாங்க எல்லோரும் கோவிலுக்கு போறோம்.. மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து பேச.. ம்.. உங்க ரெண்டுபேரினை மீட் பண்ண வைக்கணும்ன்னு நினைச்சோம்.. ஆனால், அவங்க பெரிய பையனுக்கு முடிவானதும்.. நீங்க மீட் செய்துக்கலாம்ன்னு அவங்க நினைக்கிறாங்க.. சரின்னு அப்பா சொல்லிட்டார்..” என எல்லாவற்றையும் விரிவாக சொல்லினாள் அக்கா.
வர்ஷினி அதிர்ந்து போனாள்.. இவர்கள் ஊரிலிருந்து வந்ததால்.. என் விஷயம் தள்ளி வைத்திருக்கிறார்கள் என எண்ணியிருந்தாள்.. ‘அப்படிய இல்லையா..’ என அழுகையாக வந்தது.
சற்று விஜயா மகளின் மீது ஒரு கண் வைத்தார் அவளின் பேச்சில்லா நிலையில்.. மது “என்ன நான் போட்டோ கேட்டு வாங்கிட்டு வரேன்.. 80ஸ் மாதிரிதான் உங்க வெட்டிங் இருக்கும் போல பார்ப்போம்..” என பேசிக் கொண்டே தங்கையின் லஞ்ச் பாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
வர்ஷினிக்கு அதில் கொஞ்சம் சுயநினைவு வர “அப்பா.. உண்மையாகவா” என்றாள்.
சிவகுமார் பெண்ணின் உச்சி வருடி இமையசைத்தார் உண்மையென.
வர்ஷினி தன் தந்தையின் கை பற்றினாள்.. “இங்க வாங்க பா” என சொல்லிக் கொண்டே தன் அறைக்கு அழைத்து சென்றாள்.
சிவகுமார் “என்னம்மா.. இது உனக்கு டைம் ஆகிடும்” என்றார்.
வர்ஷினிக்கு என்ன செய்வதென தெரியவில்லை.. தன் தந்தையின் கையை விட்டாள்.. அலுவலகத்தில் தன் தோழிக்கு அழைத்தாள்.. அவள் அழைப்பினை ஏற்கவில்லை.. இவளோ இங்கும் அங்கும் நடந்தாள்.
விஜயா பெண்ணினை கவனித்தார் “நீ கிளம்பு வர்ஷி, நாங்க பார்த்துட்டு கண்டிப்பா நம்பர் வாங்கிட்டுதான் வருவோம்” என்றார். பெண் ஏதாவது சொல்லிடுவாளோ.. அப்படி அவள் சொல்லும் முன் நம் பொறுப்பினை முடித்திட வேண்டும் என எண்ணி அன்னை பதறினார்.. பரபரப்பானார் பெண்ணின் முகத்தை பார்த்தார்.
வர்ஷினிக்கும் அதே பரபரப்பு. தந்தையின் கைவிட்டு நடந்தாள் இங்கும் அங்கும்.
வீடு செவ்வக வடிவம்.. வாசல் கதவினை திறந்ததும் வரவேற்பறை.. அதை அடுத்து கிட்சென்.. கிட்செனை ஒட்டியபடி ஒரு வராண்ட.. அதை கடந்தால் இரண்டு அறைகள். அதில் ஒன்று வர்ஷினியினுடையது.
அவளின் தந்தை அறை வாசலில் நிற்க, பெண்.. அந்த சின்ன வராண்டாவில் நடந்துக் கொண்டிருந்தாள். தான் அழைத்தவர்கள் அழைப்பினை ஏற்கவேண்டி. அன்னையின் பேச்சுகள் காதில் விழுகிறது. பெண்ணவள் அன்னையின் பார்வையை தாங்கி நிற்கிறாள். அந்த பார்வை அவளிடம் கெஞ்சுகிறது.. என்னமோ சொல்லுகிறது.. வர்ஷினிக்கு மீண்டும் தன் குரற்றயுணர்வு எழுகிறது.
தந்தை “என்ன டா ம்மா..” என்றார்.. விஷயம் சொன்னதிலிருந்து அவளின் முகம் சரியில்லையே.. மனையாளும் இப்படி அவசரப்படுகிறாள் என எண்ணிக் கொண்டே மீண்டும் மகளின் அருகே வந்தார்.
மது வர்ஷினியை என்னமோ விசித்தரமாக பார்த்தாள்.. வெட்கப்படுவாள்.. இல்லை, அந்த வெட்கத்தை காட்டாமல்.. கடந்து ஓடுவாள் என பார்த்தால்.. இதென்ன பரபரக்கிறாள்.. என பார்த்திருந்தாள்.
வர்ஷினி இப்போது தன் அழைப்பினை துடித்தாள்.. தன் அறைக்கு சென்றாள். தந்தையும் சாவகாசமாக “என்ன வர்ஷினி” என கேட்டுக் கொண்டே சென்றாள்.
வர்ஷினி தன் கட்டிலில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. ‘எனக்கு தெரியவேயில்லை.. அதற்குள் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களா.. ஒருநாள் சொன்னார்கள், ஆனால், இவ்வளவு தூரம் எப்படி வந்தது..’ என யோசனையோடு அமர்ந்திருந்தாள்.
குட்டி பெண் உறங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து சிவகுமார்.. அருகில் இருந்த சேர் எடுத்து போட்டுக் கொண்டு தன் பெண்ணின் அருகே அமர்ந்தார்.
வர்ஷினி “என்கிட்டே நீங்க சொல்லவேயில்ல” என்றாள்.. கண்கள் கலங்க.
தந்தை இப்போதுதான் சீரியஸ் ஆகினார் “என்ன டா சொல்லலை” என்றார்.
பெண்ணவள் “ஏன் பா.. இவ்வளவு சீக்கிரம் எனக்கு கல்யாணம் செய்கிறீங்க..” என்றாள்.
“என்ன ம்மா இப்படி சொல்ற.. என்ன ஆச்சு சொல்லு..” என்றார்.
வர்ஷினி விழித்தாள். எப்படி அவரிடம் சொல்லுவது என தெரியவில்லை. ஆனால், இதற்குமேல் இந்த விஷயத்தினை அனுமதிக்கவும் முடியாது என எண்ணியவள்.. “அப்பா.. நான் ஒன்னு சொல்றேன்..” என சொல்லி தன் தந்தையின் கால் அருகே அமர்ந்தாள் பெண்.
சிவகுமார் இமைக்க மறந்தார்.
வர்ஷினி “சர்வேஷ்.. என்னோட பிரெண்ட் அவரை எனக்கு.. நான் அவனை.. அது வந்து ப்பா.. ஐ லைக் ஹிம் ப்பா..” என்றாள்.. ஆனந்தமாகவும் அவஸ்த்தையாகவும் சொன்னாள் பெண்.
சிவகுமார் சர்வேஷ் என முதலில் மனதில் சின்னதாக மகிழ்ந்தார்தான்.. ஆனால், அவன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறானே என அடுத்த ஷ்ணமே தோன்ற.. முகம் இறுக்கமாகியது.
வர்ஷினி “முன்பே சொல்ல வேண்டுமென எண்ணம்தான்.. எனக்கு பயமாக இருந்தது பா.. உங்களிடம் முன்பே திருமணத்திற்கு சம்மதம் என சொல்லிவிட்டேன்.. ஆனால், சர்வேஷ்.. அவனை திரும்பவும் இப்போதுதான் பார்த்தேன்.. லாஸ் மை கன்ட்ரோல்.. அவனை எனக்கு பிடிச்சிடுச்சிப்பா.. சாரி ப்பா..” என சொல்லி அவளின் மடிமீது சாய்ந்து அழத் தொடங்கினாள்.
இப்போது ஹரிணி எழுந்துக் கொண்டாள்.
கண்களை கசக்கிக் கொண்டு அமர்ந்தாள்.. தாத்தாதான் முதலில் கண்களுக்கு தெரிந்தார்.. ஏனோ அவர் பேசாமல் அமர்ந்திருப்பது உணர்ந்து “தாத்தா” என்றாள் சத்தமாக.
இப்போதுதான் கீழே வர்ஷினி அமர்ந்திருப்பது தெரிந்தது “வாட் ஹப்பேன் வர்ஷி” என்றாள் குட்டி பெண் புரியாமல்.
வர்ஷினி நிமிர்ந்து கண்களை துடைத்துக் கொண்டாள்.
அவளின் தந்தை எழுந்து வெளியே வந்தார். ஹால் சோபாவில் அமர்ந்துக் கொண்டார். மனையாள் பெரியபெண் எல்லோரும் தன்னையே பார்க்கிறார்கள் என புரிகிறது.. ஆனாலும் ஏதும் சொல்லத் தோன்றவில்லை.
குட்டிப்பெண் வர்ஷினி அழுவதை பார்த்து எழுந்து வந்தாள்.. “தாத்தா ஸ்கோல்டிங் யூ வா..” என்றாள் தூக்க கலக்கத்தில்.
வர்ஷினிக்கு சத்தம் வராமல் அழுகையை அடக்கிக் கொள்ள முயன்றாள்.. விம்மல் எழுந்தது.. அவளுக்கு பேச வரவில்லை.
ஹரிணி வெளியே வந்தாள் தன் அன்னையிடம் சொல்லவதற்கு.
ஆனால், எல்லோரும் ஹாலில் தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தனர்.
தன் அண்ணனை தேடினாள்.. அவனோ மேலே உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருக்க.. அங்கே சென்றாள்.. அவனை எழுப்பினாள். அவன் அசையவில்லை. இவள் என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் கீழே வந்து ரெஸ்ட்ரூம் சென்றாள்.
வர்ஷினிக்கு அழைப்பு வர.. சற்று நேரத்திற்குமுன் இவள் அழைத்திருந்த அலுவகல அழைப்புதான். வர்ஷினி ‘உடல்நலமில்லை நீங்க மேனேஜ் பண்ணுங்க..’ என்றாள். அவளின் குரல் சரியில்லாததை அவர்களும் புரிந்துக் கொண்டு சரி என்றுவிட்டனர்.
வர்ஷினி எழுந்து கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள். சர்வேஷ் எப்போதும் அனுப்பும் செய்தி அவளை வந்து சேர்ந்தது “ஹய் ஏஞ்சல்.. ரீச்செடு ஆபீஸ்.. டேக் கேர்” என செய்தி வந்தடைந்தது அவளை.
பார்த்தவளுக்கு சோபையான புன்னகை.. ‘எப்போதுடா பார்ப்போம்..’ என மனது ஏங்கியது பெண்ணுக்கு.
பதில் அனுப்பவில்லை.. அவனின் ஆபீஸ் மூட்’டினை குலைக்க விரும்பவில்லை பெண்.. அதனால் அமைதியாக அவனின் DP பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் அந்த நாட்டின் குளிர்தாங்கும் உடையில்.. கொட்டும் பனியினை ரசித்தபடி நின்றிருந்தான். பெண்ணவள் அமைதியாக அவனை மனதுள் வாங்கிக் கொண்டிருந்தாள்.
என்ன செய்ய முடியும்.. தூரத்தில் காதலன்.. நேரம் காலம் அறிந்து பேச வேண்டிய சூழல்தானே காதலர்களுக்கு.
சிவகுமார், விஜயாவிடமும் மதுவிடமும்.. வர்ஷினி சொன்னதை சொல்லி முடித்தார்.
விஜயா “நான் அப்பவே சொன்னேன் உங்கள் பெண்ணை கவனீங்க என்.. கேட்டீங்களா” என்றார்.