வர்ஷினிக்கு வேலை ஓடவில்லை அலுவலகத்தில்.. இன்னமும் இரண்டுமணி நேரத்தில் க்ளைண்ட் கால் இருக்க.. அதற்கு தேவையானவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். ஆனால், கவனம் அதில் செல்லாமல் அவளை அன்னையின் பேச்சிலேயே சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தது.
சர்வேஷ், அவள் அலுவலகம் வரும் நேரம் கணக்கிட்டு எப்போதும் போல ஒரு செய்தி அனுப்பியிருந்தான்.. “வந்துட்டியா.. டேக் கேர்” என ஒரு செய்தி. அதையும் கவனிக்கவில்லை பெண். ‘அப்பா என்ன சொல்லுவார்கள்.. எனக்காகத்தானே, திருமணம் முடித்து அருகிலேயே வைத்துக் கொள்ள என்னானார்.. அக்கா அண்ணன் எல்லோரும் தூரமாகதானே இருக்கிறார்கள்.. அப்பாவின் அறுபதாவது திருமணத்திற்கு கூட அக்காவினால் வர முடியவில்லையே.. அதனால் தானே.. என்னை வெளியூரில் கூட திருமணம் செய்ய வேண்டாம் என எண்ணினார்கள்.. நான் எப்படி சொல்லுவேன்.. அப்பாவிடம். என்மீதான நம்பிக்கை போய்விடாதா’ என யோசனை.
அவளின் தோழி “டீ பிரேக்..” என சொல்லிக் கொண்டே சூடாக டீ நீட்டினாள் வர்ஷினியிடம். அதில்தான் அவளுக்கு எங்கே இருக்கிறோம் என புரிந்தது.
நேரம் பார்த்துக் கொண்டே அந்த டீயினை ருசித்த்தாள். சிலநொடிகளில் தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.
க்ளைண்ட் கால் முடித்து அவள் வருவதற்குள்.. மதிய உணவு நேரம் கடந்திருந்தது. பெண்ணவள் உண்டு முடித்து.. சர்வேஷ்ஷிக்கு செய்தி அனுப்பினாள்.
இருவருக்கும் பொதுவான நேரம் என ஏதுமில்லை. அதனால்.. பெரும்பானமையான நேரங்கள் தங்களின் இருப்பினை மெசேஜ்சில்தான் பகிர்ந்துக் கொண்டனர். அவன் தன் மதிய உணவு முடித்து.. “என்ன லஞ்ச்” என கேட்டு செய்தி அனுப்பினான்.
பெண்ணவள் உண்டுக் கொண்டே “கீரைகூட்டு.. உருளைகிழங்கு ப்ரை..” என அனுப்பினாள்.
சர்வேஷ் அப்போதே “எப்போதும் உருளைகிழங்கு.. இங்க அதுதான் நிறைய செய்வேன்.. ஈஸியானது, ஆனால் சலிச்சு போயிடுச்சு. கீரை அது சாப்பிட ஆசையாகத்தான் இருக்கும்.. அதுவும் நம்ம ஊர் அரைகீரை பருப்புகீரை எல்லாம் நான் போய் வாங்குவதற்குள் தீர்ந்திடும்.. மஞ்சரி எப்போதுவாது செய்வாள்.. அப்போது கொடுத்து விடுவாள். வீட்டில் கொஞ்சமாக கீரை விதை போட்டு வைத்து வளர்ப்பாள்.. எனக்கு அப்படி வளர்க்க வரவில்லை.. எங்க, பாதிநாள்.. ப்ரெட் சாப்பிட்டு படுத்துக்லாம்ன்னு இருக்கும்.. சமைச்சி.. பாத்திரம் தேய்த்து.. அஹ” என் நீண்ட செய்தியை பதிர்ந்தான்.
சர்வேஷ் இந்த செய்தியை பார்த்ததும் புன்னகைத்தான்.. ‘மனது அவளை பார்க்க வேண்டும்’ என இமைமூடிக் கொண்டது.. ம்கூம்.. அவனின் அடுத்த வேலைதான் நினைவு வந்தது.. அவள் வரவில்லை. கண் திறந்தவன் “சிக்கன் பிரியாணி சூப்பர்ராக செய்வேன்.. மிஸ் பண்ணிடாத” என பதில் அனுப்பி வைத்தான்.
வர்ஷினிக்கு இப்படி விளையாட்டு பேச்சு பிடித்திருக்க.. மறுபடியும் யோசிக்கிறேன் என பதில் அனுப்பினாள்.
இப்படியே சற்று நேரம் பேசிக் கொண்டனர். இப்படி கிடைக்கும் இந்த ஐந்து பத்து நிமிடங்கள்தான் அவர்கள் புரிதலை தொடங்கிய நேரம்.
இப்படி பேசிக் கொள்ளும் போதுதான் தெரிந்தது சர்வேஷ்ஷூக்கு ட்ரேவல் பிடிக்கும்.. அதிலும் நம்மூரில் டூ வ்வீல்ரில் செல்வது பிடிக்குமென. வெளிநாட்டில் டூவ்வீலர் ட்ரேவல் என்பது கிளைமேட் பொறுத்துதான் அமையுமாம், அதானால்.. இங்கே வந்தால் நிறைய டூ வ்வீல்ரை தேடுவனாம்.
வர்ஷினியும் நிறைய பகிர்ந்தாள்.. ஷாப்பிங்.. கோவில் நிறைய போகணுமாம்.. காரம் தெரியவில்லை ஆனால், ஆசையாக இருக்கு என்றாள். இப்படி கிடைக்கும் நேரங்களில்தான் பழகிக் கொண்டனர். எல்லோருக்கும் காதல் வரம்மாக இருக்காதோ.
இப்போது இரவு வர்ஷினி வீடு வந்ததும்.. ஏதாவது அன்னை கேட்ப்பார் என எண்ணி, தன் அறைக்குள்ளேயே இருந்துக் கொண்டாள். ஆனால், சிவகுமார் மனையாளிடம் ஏதும் பேசாத என்றதினால்.. விஜயா வாய் திறக்கவில்லை.. எப்போதும் பெண்ணிடம் பேசவது போல.. தோசை வேண்டுமா.. சட்னி வைத்துக் கொள்.. என கூட ஏதும் பேசவில்லை.
விஜயாவிற்கு பெண்ணிடம் கேட்டிட வேண்டும் தன் சந்தேகத்தை என தோன்றுகிறது, ஆனாலும் “என்ன ஆச்சு.. ஒன்னும் ஆகலையே.. நீதான் சாப்பிட கூப்பிட்டால்தான் வர.. அம்மாக்கு கால் வலி.. தோசை ஊற்றுவேன்னு பார்த்தால்.. ஆளைக்காணோம்.. சின்ன பிள்ளையா கூப்பிட” என்றார் தன் கோவத்தை வேறு விதமாககாட்டி.
வர்ஷினி “அம்மா சொல்ல வேண்டியதுதானே.. நீ வா..” என உண்டுக் கொண்டிருந்தவள் அப்படியே எழுந்து கைகழுவிக் கொண்டு சென்று.. தன் அம்மாவை இழுத்து அமர வைத்தாள். தான் தோசை ஊற்ற தொடங்கினாள்.
சிவகுமார் ஹாலிலிருந்து “என்கிட்டே சொல்ல வேண்டியது தானே விஜி..” என சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார்.
விஜயா தன் முட்டியை கைகளால் நீவிக் கொண்டே அமர்ந்திருந்தார்.. கணவரை பார்த்ததும் “எல்லாம் சொல்லணும்மா” என்றார்.
பெண்ணும் தந்தையும் தோசை ஊற்றினர். மூவருமாக அமர்ந்து உண்டனர்.. சிவகுமார் “முன்பெல்லாம் உன் அம்மா வாய் திறந்து ஏதும் பேசமாட்டாள்.. இப்பவெல்லாம்.. எல்லாவற்றையும் பேசிவிடுகிறாள்.. நல்லதுதான்..” என தயங்கிய குரலில் மனைவியை வம்பிழுத்தார்.
“எப்படி பேசுகிறாள் பாரு வர்ஷினி.. இப்போ சொல்றீயேன்னு எனக்கு சந்தோஷம்தான்.. இல்லையென்றால் எல்லா வேலையும் நீயே செய்யணும்.. இப்போது பார்.. பெண்ணு செய்கிறாள்.. நானும் காய்கறி கட் செய்துக் கொடுக்கிறேன்.. துணியெல்லாம் உலர்த்துதுகிறேன்.. இதெல்லாம் எதனால்.. நீ வாய் திறந்து பேசியதால்.. ” என்றார் தன் மகளிடம் சிரித்துக் கொண்டே.
வர்ஷினியும் புன்னகையோடு “நீங்க சரியான ஆளுப்பா.. அம்மாவை கோவப்படுத்தி பார்ப்பதில்.. அம்மா முகம் மாறினதும் அப்படியே கூல் செய்துடுறீங்க.. ம்ம்..” என்றாள்.
புன்னகைத்தார் மனையாளை பார்த்து சிவகுமார். வீடு இயல்புநிலைக்கு திரும்பியது. சின்ன சின்ன பேச்சுகளும் அக்கரைகளும் எப்போதும் உறவுகளுக்குள் முக்கியம் போல.
வர்ஷினி கவனமாக இருக்கத் தொடங்கினாள். பெற்றோருக்கு என நேரம் ஒதுக்கினாள். சர்வேஷ்ஷோடு வாட்ஸஅப் மூலமாக பேசிக் கொண்டாள்.
இரண்டுமாதம் கடந்தது.. விஜயா பெண்ணிடம் அன்று தவிர மாற்றத்தை காணவில்லை.. மாலை கூடியவரை சீக்கிரமாக வருகிறாள்.. துணி மடிக்கிறாள்.. உணவு சமைக்கிறாள்.. காலையில் தானே லஞ்ச் பாக் செய்துக் கொள்ளுகிறாள்.. மீண்டும் வீடு, வர்ஷினியின் திருமணம் பற்றி பேச்சினை எடுக்கத் தொடங்கினர்.
மதுவர்ஷினி பிள்ளைகள் கணவனோடு இந்தியா வந்துசேர்ந்தாள். மதுவின் கணவர் செந்தில்நாதன் மதுரை சொந்த ஊர், அதனால் நேரே அங்கே சென்றனர் குடும்பத்தோடு.
மது ஊர் வருவதால்.. விஜயா வீட்டினை சுத்தம் செய்யத் தொடங்கினார். வர்ஷினி தன் அன்னைக்கு என வேலைக்கு ஆள் ஒருவரை ஏற்பாடு செய்தாள்.
வைகுந்த் ஹரிணி என பிள்ளைகளை வரவேற்க.. விஜயா.. முருக்கு அதிரசம் சத்துமாவு உருண்டைகள் என செய்து நிரப்பி வைத்தார்.
நாளை மறுநாள் மது பிள்ளைகளோடு அம்மா வீடு வருகிறாள்.. செந்திநாதன் மதுரையில் இருந்துக் கொள்வார்.
வீடு புது மாற்றம் கொண்டது.
அப்போதுதான் சிவகுமாரின் அக்கா மாமா இருவரும் வீடு வந்திருந்தனர். ஒரு நல்லசேதி என வர்ஷினிக்கு தன் சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்திருந்தனர். மாப்பிள்ளை வெளிநாடு என தன் அக்கா சொல்லவும் சிவகுமார் அப்போதே ‘வேண்டாம் அக்கா..’ என எதையும் யோசிக்காமல் மறுத்துவிட்டார்.
சிவகுமாரி அக்காவும் நிறையமுறை எடுத்து சொன்னார்.. “என்ன இப்போது.. மது வெளிநாட்டில்தானே இருக்கா.. இவளையும் அனுப்பி வை. நீயும் விஜயாவும் கூட போயிட்டு வரலாம். இப்போதெல்லாம் ஈசிதானாமே எல்லாம். பையன் நல்ல பையன்” என எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், சிவகுமாருக்கு என்னமோ வர்ஷினி வெளிநாடு சென்றால்.. மீண்டும் அவள் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என நம்பினார். அக்கா பேச பேச.. கேள்வியாக கேட்க்க கேட்க்க.. சிவகுமார் அழுத்தமாக அமர்ந்திருந்தார்.
விஜயா கூட “ஏங்க, அண்ணி இவ்வளவு தூரம் சொல்றாங்க.. சொந்தமாக இருக்காங்க.. மாப்பிள்ளை பற்றி முதலில் விசாரித்து பார்க்கலாமே.. கொஞ்சநாளில் வர்ஷினி இந்தியா வர சொல்லலாமே” என எடுத்து சொன்னார் கணவருக்கு.
சிவகுமார் மனையாளை முறைத்தார் அங்கேயே.
சிவகுமாரின் அக்கா இப்போது “என்ன டா, இன்னமும் எதையும் மறக்காமல் இருக்க.. நாம நல்லது நினைச்சி செய்கிறோம்.. அது தவறாக போனால் என்ன செய்வது.. ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுட்டு அடுத்ததை பார்க்கணும்.. அதை விட்டுட்டு.. வெளிநாடே போகமாட்டோம்.. பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை வந்தாலும் பெண்ணினை கொடுக்க மாட்டேன்னு சொல்றது என்னமோ சரியா இல்ல குமார்..” என்றார் கோவமாக.
அந்த பேச்சு பிடிக்காமல், சிவகுமார் எழுந்து சென்றுவிட்டார்.
அவரின் மாமா போனில் பேசிக் கொண்டிருந்தார் வாசலில், அங்கே சென்று மற்றொரு சேரில் அமர்ந்துக் கொண்டார். பெண்ணினை தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள எண்ணுகிறார் சிவகுமார். மீண்டும் தவறு நடந்திடுமோ என எண்ணம் அவருக்கு. பெரியபெண் வெளிநாட்டில் பிரச்சனையில்லை அவளுக்கு.. ஜாதகம் பார்த்துதான் அனுப்பினோம்.. ஒன்றும் ஆபத்தில்லை அவளுக்கு. ஆனால், வர்ஷினிக்கு வெளிநாடு வேண்டாம்.. என தானாகவே எண்ணிக் கொண்டார்.
விஜயா தன் அண்ணியை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.. “அண்ணி, சிலருக்கு சில நம்பிக்கைகள் இருக்கும் அதிலும் பிள்ளைகள் என வரும் போது.. அதை ஒன்றுமே செய்ய முடியாதே அண்ணி. அப்படிதான் அவருக்கு.. வர்ஷினியை தன் அண்ணனுக்கு மனம் வந்து தத்து கொடுத்தார். என்னமோ அது நிலைக்கவில்லை. தன் பெண்ணினை தத்துக் கொடுத்தால் இப்படி அண்ணனுக்கு நடந்து அவரும் இல்லையோ என எண்ணம் முன்பெல்லாம். அதைவிட வர்ஷினிக்கு தாய் தந்தை என அறிமுகம் செய்து வைத்தவர்கள் அவளுக்கு இல்லாமல் போக.. நாங்கள்தான் பெற்றோர் என அவள் உணரவே நாட்கள் ஆகியது அண்ணி.. இப்போதுதான் அவள் கொஞ்சம் எங்களிடம் சகஜமாக இருக்கிறாள்.. தர்ஷன் மதுவோடு எல்லாம் ஈஸியாக பழகுகிறாள்.. அதுவும் எங்கள் கண்முன்.. ஆனால், இன்னமும் அவள் நிறைய இடங்களில் ஒதுங்கிதான் இருக்கிறாள்.. அதனாலேயே உங்கள் தம்பிக்கு அவளை தூரமாக அனுப்ப பயம் அண்ணி.. மீண்டும் பிள்ளை எங்களை ஒதுக்கிடுமோ என எண்ணம்..” என நீண்ட தன் கணவரின் நிலையை சொன்னார்.
விஜயாவின் அண்ணிக்கு நீண்ட பெருமூச்சு.. என்ன சொல்லுவது என தெரியவில்லை “சரி.. அவங்க இரண்டாவது பையனுக்காவது வர்ஷினியை பேசலாமா” என்றார்.
விஜயா அதிர்ந்தார்.. “அண்ணி, முதலிலேயே அந்த மாப்பிள்ளை பற்றி சொல்லியிருக்க வேண்டியதுதானே..” என்றார்.
“என்ன செய்றது.. பெரியவன் இருக்கானே.. அதான் அவங்க யோசிச்சாங்க.. இப்போதும் கல்யாணம் செய்ய லேட் ஆகும்..” என்றார்.
விஜயா புன்னகைத்தார். பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டார்.
டீ போட்டார். கணவருக்கு கொடுத்தார். சிவகுமாரின் அக்கா.. தன் தம்பியிடம் பேசி சமாதனாம் செய்தார்.. “உள்ளூரில்தான் வேலையில் இருக்கான்.. அவங்களோட இன்னொரு பையன் பேங்க் வேலை.. என்ன ஒருவருஷம்தான் பெரியவன்.. இப்போது பேசி வைத்துக் கொள்வோம்.. அவன் அண்ணனுக்கு பெண் கிடைத்ததும் ஒருமாத இடைவெளியில் திருமணத்தை நடத்திடுவோம்.. குடும்பம் நல்லவிதம் டா.. மனிதர்கள் காசு பணத்தை பெரிதாக நினைக்காதவர்கள்.. அதான்.. எனக்கு விட மனதில்லை” என்றார் வாஞ்சயாக.
சிவகுமார் “நீ சொன்னால் சரிதான் அக்கா.. பெரிய மாப்பிள்ளையும் வந்திருக்கார். அதனால் அவங்ககிட்ட பேசு.. முடிவு செய்து வைச்சிக்கலாம்.” என்றார்.
வர்ஷினி மாலையில் வீடு வர.. இந்த செய்தி அவள் காதுகளுக்கு சென்றது.
இப்போதுதான் பயமே வந்தது பெண்ணுக்கு. முகம் வெளிறி போக “அப்பா.. அப்பா” என்றாள்.
தந்தையும் “முதலில்..” என தொடங்கி தன் அக்கா கொண்டுவந்த வெளிநாட்டு பையன்தான் பற்றி விவரித்தார். வர்ஷினிக்கு பயம்தான் அதிகமாக இருந்தது. தந்தையோ “நான் முடியாதுன்னு சொல்லிட்டனே.. எனக்கு என் பெண்.. இந்த ஊரிலேயே இருக்கணும்.. என் கூடவே இருக்கனும்ன்னு சொல்லிட்டேன்.” என சொல்லி சிரித்தார்.
வர்ஷினி முகம் அதே பீதியில் இருந்தது.. இப்போதுதான் தந்தை கவனித்தார் “என்ன ம்மா..” என்றார்.
வர்ஷினி “அப்பா.. அதெல்லாம் அப்புறம் பேசலாமே.. எனக்கு இப்போது கல்யாணத்திற்கு என்ன அவசரம். குட்டி பசங்க வர போறாங்க.. நாம டூர் போகணும் அப்பா அவங்க கூட..” என சாதாரனம் போல சொன்னாள்.
தந்தையோ புன்னகையோடு ஆமோதித்தார் “ஆமாம்.. ஆனால், உன் அக்கா மாமா வந்திருக்கும் போதே பேசி முடிவு செய்து வைச்சிக்கலாம் டா..” என்றார் தன்மையாக,
மகளுக்கோ விடமாட்டாரா அப்பா என்தான் இருந்தது.
தந்தை பெண்ணின் பதிலில்லா யோசனையில் “என்னாச்சு டா” என்றார்.
பெண்ணவள் “இல்ல பா, எனக்கு வேலையில் ப்ரோமோஷன் கிடைக்கும் போலிருக்கு” என்றாள்.
“அதுக்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்.. நாம் முன்பே பேசியது தானே டா” என நினைவுப் படுத்தினார்.
பெண்ணுக்கு பயம்தான் வருகிறது “இல்ல பா.. ஒண்ணுமில்ல பா” என சொல்லிக் கொண்டே நிற்காமல் எழுந்து சென்றாள்.
சிவகுமார் யோசனையாக பெண்ணை பார்த்திருந்தார்.
உண்டு முடித்துதான் இந்த பேச்சுகள்.. வர்ஷிணியின் அத்தை உண்டுவிட்டுத்தான் வீடு கிளம்பினார். அதன் பிறகுதான் சிவகுமார்.. பெண்ணிடம் டிவி பார்க்கும் போது பேசினார்.
பெண்ணவள் உள்ளே சென்று கதவினை சாற்றிக் கொண்டு அழுகை. அப்பா வெளிநாட்டு மாப்பிள்ளையை வேண்டாம் என்றுவிட்டாரே என.
சர்வேஷ்ஷிடம் சொல்ல வேண்டும் என்தான் எண்ணுகிறாள், ஆனால், என்னவென சொல்லுவது.. அப்பாவிடம் எப்படி அவனை பற்றி சொல்லுவது என அழுகையாக வந்தது.
சர்வேஷ் இப்போது வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான்.. குட் நைட் என.
பெண்ணவள் அழைத்தாள் அவனுக்கு.
சர்வேஷ் அதை பார்த்ததும் எழுந்து அமர்ந்தான்.. உறங்க ஆயுதமாகியிருந்தான் அவன். அவனுக்கு அவளின் அழைப்பு ஆச்சர்யம்தான்.. “வர்ஷூ ம்மா” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல்.. வீக் டேஸ்சில் பேசுவதில்லை அவர்கள் அதனால்.
வர்ஷினி முயன்று “தூங்கிட்டீங்களா” என்றாள்.
“இல்ல டா.. இல்ல, என்னாச்சு” என்றான் அவளின் குரலின் மாற்றம் உணர்ந்து.
வர்ஷினி “அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார்” என்றாள்.
சர்வேஷ் “நைஸ்.. நான் பேசவா உன் அப்பாகிட்ட.. என் மாமனாரிடம் எப்போதடா பேசலாம்ன்னு இருக்கேன்.. நாளைக்கே பேசிடுறேன்” என்றான்.
வர்ஷினி “ஐயோ.. உங்ககிட்ட சொல்லியிருக்கேனில்ல.. அப்பா என்னை வெளிநாடு அனுப்பமாட்டார்ன்னு.. அப்படி ஒரு வரன் வந்துதாம்.. அப்பா என் அத்தை மீதே கோவப்பட்டு பேசவில்லையாம். இப்போது அவங்க தம்பிக்கு பேசுகிறார்களாம்.. அவருக்கு சென்னையில்தான் வேலையாம்” என்றாள்.
சர்வேஷ் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என அவள் அன்று சொன்னது எதோ விளையாட்டிற்கு என எண்ணியிருந்தவனுக்கு இப்போதுதான் புரிய “நீ சும்மாதானே சொன்னேன்னு நினைச்சேன்” என்றான்.
“இல்ல சர்வேஷ்.. அப்பா இதில் ரொம்ப சீரியஸ்.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை” என்றாள்.
அவனோ “இல்ல நீ முதலில் நாளைக்கு உன் அப்பாகிட்ட என்னை பற்றி சொல்லிடு.. மற்றதை என்வீட்டில் சொல்லி பேச சொல்லுகிறேன்.. இல்லை நான் பேசுகிறேன்” என்றான்.
வர்ஷினி ஏதும் பேசாமல் அழுதாள்.
“வர்ஷி.. ரிலாக்ஸ்.. அழாத.. பேசிக்கலாம்.. ஆனால், முதலில் நம் விஷயம் உன் அப்பாக்கு கண்டிப்பா தெரியனும்..” என்றான் அழுத்தமாக.
வர்ஷினிக்கு எல்லாம் புரிகிறது.. ஆனாலும், அப்பாவின் காரணம் தெரிந்தே, தான் தன் விஷயத்தை எப்படி சொல்லுவது என அழுதாள்.
அவனோ “நான் பேசுகிறேன்” என்றான்.
பெண்ணவள் “இல்ல, முதலில் நான் சொல்லறேன்.. அப்புறம் பேசுங்க” என்றாள்.
இருவரும் என்னமோ காதலின் காலத்தை உணராமலே நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டனர்.