சிவகுமாரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நெருங்கியது.
மருமகள் ஐஸ்வர்யா.. ஆதிரனோடு ஒருவாரம் முன்பே வந்தாள். தர்ஷன் இரண்டுநாட்கள் முன்பாக வருவதாக ஏற்பாடு. மருமகள் பொறுப்பாக வீட்டில்.. உறவுகளை வரவேற்று இன்முகமாக எல்லாம் செய்யத் தொடங்கினாள்.
ஆதிரன் வீட்டில் இருந்தது எல்லோருக்கும் மகிழிச்சியாக இருந்தது. சேர்ந்தார் போல குழந்தை இப்படி.. தங்கியதே இல்லை.. இப்போது பேரன் வீட்டில் இருக்கவும் வீடே திருவிழாதான்.
வர்ஷினி, பெர்மிஷன் லீவ்.. என எடுத்துக் கொண்டு சாப்பாடு சொல்லுவது.. ஹால் பார்ப்பது.. அலங்கார ஏற்பாடு.. தானும் அண்ணியுமாக சென்று சொந்தங்களுக்கு அழைப்புது என எல்லாம் செய்தாள்.
ஐஸ்வர்யா வர்ஷினி இருவரும் தங்களுக்கான உடைகள் எடுத்துக் கொண்டனர். அதற்காகவே ஒருநாள் முழுவதும் செலவிட்டனர்.
தர்ஷன் இரண்டுநாள் முன்பே குடும்பத்தோடு வந்தான். தங்கை, என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறாள் என கேட்டுக் கொண்டான்.. கடைசி நேர வேலைகளை தர்ஷன் பொறுப்பாக பார்த்தான்.
ஷர்மி அன்னை தந்தையோடு இரண்டுநாள் முன்பே வந்துவிட்டாள்.
சிவகுமார் விஜயா தம்பதியின் சஷ்ஷட்டியப்த பூர்த்திவிழா இன்று. நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் என 200 நபர்கள் கூடியிருந்தனர் மண்டபத்தில்.
ஆதிரன் தர்ஷன் ஐஸ்வர்யா மண்டபத்தின் வரவேற்ப்பில் நின்றனர். அளவான மண்டபம்.. அந்தணர்கள் மந்திரங்கள் ஓத.. சிவகுமார் விஜயா தம்பதி அமர்ந்து பூஜைகள் செய்துக் கொண்டிருந்தனர்.
சிவகுமாரின் உறவுகள் எல்லோரும் முன்பே வந்திருந்தனர் மதுவர்ஷினியின் மாமனார் மாமியார்.. தர்ஷனின் மாமனார் மாமியார்.. என சம்பந்திகள் நேற்றே வந்துவிட்டனர்.
ஷர்மி வர்ஷினி இருவரும் ஒரே மாதிரி கருநீல வண்ணத்தில் மெஜந்தா பார்டர்.. பட்டு புடவையில் வலம் வந்தனர். பெண்ணவள் தன் அன்னை தந்தையோடு அமர்ந்துக் கொண்டாள்.
வர்ஷினியின் அலுவகலத்தில் தன் டீம் நண்பர்களை அழைத்திருந்தாள். அவர்களின் இருவரும் வந்தனர். வர்ஷினி இறங்கி வந்து அவர்களை வரவேற்றாள்.
அப்போதுதான் சர்வேஷ் தன் அன்னையோடு வந்தான். வர்ஷினி “வாங்க ஆன்ட்டி.. வாங்க சர்வேஷ்” என்றாள். அமர வைத்தாள்.
சர்வேஷ் கையில் அந்த பெரிய கட்டு இப்போது இல்ல.. கைகளை அதிகம் அசைக்காமல் பளூ தூக்காது இருக்கும் படி மருத்துவர்கள் சொன்னதால்.. பிங்க் வண்ண பேண்டைட் சுற்றி அசைக்காமல் வைத்திருந்தான்.
வர்ஷினி, மீண்டும் சென்று அமர்ந்துக் கொண்டாள் மேடையில்.
தர்ஷன் ஐஸ்வர்யா சர்வேஷ் அவனின் அம்மா இருவரையும் பார்த்து வரவேற்றனர். உமரின் பெற்றோர் அருகே அமர்ந்து சர்வேஷ்ஷின் அன்னை பேசிக் கொண்டிருந்தார்கள்..
தர்ஷன், சர்வேஷ்ஷினை நன்றாக உற்று பார்த்தான்.. கையில் கட்டு, ஒரு சாமியார் கலர் வேஷ்ட்டி.. கருப்பா நீலமா எந்த தெரியாத நிறத்தில் முழுகை சட்டை.. தர்ஷனுக்கு சர்வேஷ்ஷிடம் விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. தர்ஷன் “என்ன கோலம் இது.. கையில் அடி.. சாமியார் மாதிரி.. காவி வேஷ்ஷ்டி.. என்னாச்சு” என்றார் இயல்பாக.
சர்வேஷ் மனதுக்குள் ‘எல்லாம் உன் தங்கைக்காக்தான்’ என எண்ணிக் கொண்டு “சும்மாதான்.. வேஷ்டி எல்லாம் கட்டி ரொம்ப வருஷமாச்சு அதான்.” என்றான்.
தர்ஷன் “கையில் என்ன” என்றான்.
சர்வேஷ்.. பதில் சொன்னான். ஆனால், மனதில் குறும்பான பதில்தான் ஓடியது.
சிறுவயதில் எப்போதும் தர்ஷன்… வர்ஷினியை இவர்களோடுதான் பார்ப்பான். அப்போதெல்லாம் தங்கை என பெரிதான அபிப்ராயம் இருக்காது. ஆனால், வீட்டில் ஒருத்தி என தெரியும்.. எனவே, இவர்களோடு பார்க்கும் போதெல்லாம்.. உமரிடம் சொல்லுவான் “ஏன் டா.. இவளை கூட்டி வரீங்க.. சீக்கிரம் வீடு போங்க டா” என்பான்.
அப்போதெல்லாம் அருகில் சர்வேஷ் “அதெல்லாம் முடியாதுன்னு சொல்லுடா.. என்ன இப்போ.. அப்படிதான் வருவா.. நாங்க என்ஜாய் பண்ணிட்டுதான் போவோம்.. ஷர்மி இங்கதானே இருக்கா.. கிளம்ப சொல்லுடா.. கிளம்பு கிளம்பு ” என பேசுவான். நக்கலாக.. அந்த நினைவு இருவருக்கும் நிழலாக நினைவு வர.. சங்கோஜப் புன்னகை இருவருக்கும்.
தர்ஷன் வேலை பற்றி விசாரித்து எப்போது போக வேண்டும் என விசாரித்துக் கொண்டிருந்தான்.
சர்வேஷ் “அங்க பாரு தர்ஷன் கூப்பிடுறாங்க” என மேடையை நோக்கி கை நீட்டினான். அங்கே தர்ஷனை அய்யர் அழைத்துக் கொண்டிருந்தார்.. சர்வேஷிடம் விடைபெற்று மேலே வந்தான்.
பெரியவர்களுக்கு திருமாங்கல்யாதாரணம் நடந்து, விழா இனிதாக நிறைவடைந்தது. சிவகுமார் தம்பதிகளிடம் இளையவர்கள எல்லோரும் ஆசீர்வாதம் பெற்றனர். பரிசுகள் கொடுத்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.
ஷர்மி வந்து அமர்ந்துக் கொண்டாள் சர்வேஷ் அருகில் “எப்படி இருக்கீங்க அண்ணா” என கேட்டு பேச்சுக்கள் சென்றது.
சர்வேஷ் அவனின் அன்னை இருவரும் மேடைக்கு வந்து பரிசு கொடுத்தனர்.. சர்வேஷ்ஷை முன்பே தெரிந்தது எல்லோருக்கும். அவன் தன் அன்னையை அறிமுகம் செய்து வைத்தான்.. சிவகுமார் தம்பதியிடம், ஆசி வாங்கி.. போட்டோ எடுத்து கொண்டனர்.
சர்வேஷ்ஷின் அன்னை உமர் பெற்றோரோடு உண்பதற்கு சென்றார்.. சர்வேஷ் ஷர்மியோடு சென்று அமர்ந்துக் கொண்டான்.
சர்வேஷ் கண்கள் அவ்வபோது வர்ஷினியை தேடியது. அவளை கண்டுக் கொண்டதும் இமைக்காமல் அவளையே பின் தொடர்ந்தது.. கேம்ஸ் விளையாடும் போது தன் காயினை பின் தொடரும் பார்வையாக அவளையே வட்டமிட்டது அவனின் விழிகள்.
வர்ஷினிக்கு நளின மொழி அவ்வளவு கைவரவில்லை இந்த புடவையில்.. புடவை தட்டி தட்டி நின்றுக் கொண்டாள் மேடையில்.. சல்வாரில்.. ஜீன் டி-ஷர்ட்டில் இருந்த உடல்மொழில் இல்லை.. எதோ புதிதாக புடவை கட்டியவள் போல.. அதை கையாளத் தெரியாத உடல்மொழி.. என அவளின் தடுமாற்றம் இவனுக்கு புன்னகையை கொடுத்தது.
சர்வேஷ் கிளம்பினான். வர்ஷினி வாசல் வரை வந்து வழியனுப்பினாள். சர்வேஷ், அவளிடம் எப்படியாகினும் தன் காம்ப்ளிமென்ட்டினை சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டே இருந்தான்.. ஆனால் முடியவில்லை. அவளிடம் ஆசையாக நெருங்கவே முடியவில்லை.. தூரமாக பார்க்க முடிகிறது ரசிக்க முடிகிறது.. ஆனால், நெருங்க பதட்டமாகிறது.
ஷர்மிக்கு ஓரளவு எதோ புரிய.. முத்துனாயகியிடம் பேசிக் கொண்டே வாசல் வந்தாள்.
இருவரும் ஒருநிமிடம் நின்றனர்.
சர்வேஷ் “டிக்கெட் போட்டுட்டேன்..” என சொல்லி தேதி சொன்னான்.
“ஓ.. சூப்பர்.. இப்போ வேலை பார்க்க முடியுதா..” என்றாள்.
“ம்.. ஓரளவு.. அடிக்கடி ரெஸ்ட் எடுக்கணும் கை.” என பேசினான் பின் “இந்த சண்டே பார்க்கலமா” என்றான்.
வர்ஷினி ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.
சர்வேஷ் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு..“இந்த கலர் சரீ.. க்கும்.. நைஸ்.. நீ அதை ஹன்டடுல் பண்ண முடியமா திணறுவது.. ரொம்ப அழகா இருக்கு..” என சொல்லி தலை கோதிக் கொண்டு அவளையே பார்த்தான்.
வர்ஷினிக்கு கேட்டது இவன் குரலா.. தன்னையா சொன்னான்.. என தோன்ற.. கூச்சமாகிற்று “சண்..டே முடியமான்னு தெரியலை.. நான் சொல்றேன்.. பைய்” என்றவள்.. உள்ளே நடந்துவிட்டாள்.
சர்வேஷ் கிளம்பினான் புன்னகையோடு.
வீடு வந்தனர்.
ஷர்மி வர்ஷினி இருவரும்.. அன்று இரவு முழுவதும்.. மொட்டைமாடியிதான் இருந்தனர். ஐஸ்வர்யா உண்பதற்கு என கொண்டு வந்து கொடுத்தாள்.
எல்லோரும் சீக்கிரமாக உறங்க சென்றுவிட இவர்கள் மட்டும் நிறைய கதைகள் பேசிக் கொண்டிருந்தனர்.