இடம் மாறும் மனங்கள்!

11

துர்க்கா, வர்ஷினியை பார்க்கவென தம்பியின் கட்டிலில் அமர்ந்தாள்.

சர்வேஷ் “துர்க்கா இவங்க வர்ஷினி.. எங்களோட க்ரைம் பார்ட்னர்.. பாய்ஸ் நாங்க எங்க போனாலும் இவ வருவா.. எங்க ஜூனியர்” என ஸ்பெஷல் இன்ட்ரோ கொடுப்பது போல.. புன்னகையோடு வர்ஷினியை பார்த்துக் கொண்டே அக்காவிற்கு அறிமுகம் செய்தான்.

ராக்கி “அக்கா, அப்படி க்ரைம் பண்ண காரணமே இவன்தான் அக்கா.. வர்ஷினி  பொண்ணு லாங்க்வேஜ் கற்றுக் கொள்ள.. டியூஷன் போக எனதான் வந்தது.. ஆனால், என்னமோ அதன்பிறகுதான் நாங்க தெரியாமல் பானிபூரி சாப்பிட போக வேண்டியிருந்தது.. நிறைய பர்த்டே கொண்டாட வேண்டி இருந்தது..” என்றான் விளையாட்டாக.

சர்வேஷ் வர்ஷினியிடமிருந்து பார்வையை எடுத்து.. தன் நண்பனை முறைத்தான்.

துர்க்கா “எவ்வளோ நாளாட்சி ஹைட்ராபாத்திலிருந்து  வந்து.. சென்னை செட் ஆகிடுச்சா” என்றாள், வர்ஷினியை பார்த்து.

வர்ஷினி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..

லக்ஷ்மி வந்தார் “உங்களை இதுக்கு முன்னாடி இவர்கள் கூட்டத்தில் பார்த்ததில்லையே” என்றார் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே.

ராக்கி “எல்லாம் நேரம் காலம் ஒத்து வரணுமில்ல.. எங்களுக்கே இப்போதான் இவ உயிரோட இருக்கானே தெரிந்தது” என்றான் நண்பனை பார்த்து முறைப்பாக.

லக்ஷ்மி “ஓ.. எப்படி ஒத்து வந்தது திடீர்ன்னு” என்றாள், ஆராய்ச்சியாக.

துர்க்கா “அவங்களை சாப்பிட விடு லக்ஷ்மி.. நீங்க சாப்பிடுங்க வர்ஷினி.. இங்க சென்னையில் எந்த ஹெல்ப் வேணும்ன்னாலும் கேளுங்க.. அடிக்கடி வீட்டுக்கு வாங்க.. அம்மா தனியாதான் இருக்காங்க.. இவதான் பக்கத்தில் இருக்கா.. அடிக்கடி வந்து பார்த்துக்கொள்கிறாள்.. நீங்க ட்டச்சில் இருங்க வர்ஷினி.” என்றாள்.

வர்ஷினி புன்னகையோடு “தேங்க்ஸ் அக்கா. இப்போது எல்லாம் நல்லா பழகிட்டேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை..” என்றாள், புன்னகையோடு மறுப்பது போல.

சர்வேஷ் முகம் வாடி போனது.

வர்ஷினி “டைம் ஆச்சு நான் கிளம்பனும்..” என்றாள்.

சர்வேஷ் ஏதும் சொல்ல முடியாமல் இருந்தான். எல்லோருக்கும் இப்போதுதானே வந்தார்கள் என இருந்தது.

மஞ்சரி “வர்ஷினி நாங்க ட்ராப் பண்ணறோம்.. கொஞ்ச நேரம் இருங்களேன்” என்றாள்.

லக்ஷ்மி “அதானே.. இப்போதானே வந்தீங்க வர்ஷினி, அதுக்குள்ள கிளம்பறீங்க.. இவன் வந்தால்தான் வீட்டில் இப்படி யாராவது வருவாங்க அம்மா ஹாப்பியாக இருப்பாங்க.. கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க” என்றாள்.

வர்ஷினி “இல்ல, நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. அதான்” என்றாள்.

மஞ்சரி “அட நாங்க லஞ்ச்க்கு வருவதை சொல்றீங்களா.. அதெல்லாம் பார்த்துக்கலாம் வர்ஷினி..” என்றாள்.

சர்வேஷ் “அப்புறம் போலாம்.. ராக்கி உன்னை ட்ரோப் பண்ணுவான்.. நீ வா.. அக்கா பசங்களை பாரு” என சொல்லிக் கொண்டே, தன்னுடைய ஸ்டிக் எடுத்தான்.. நடப்பதற்கு.

துர்க்கா வியந்து பார்த்தார், தம்பியை.. எவ்வளவு சகஜமாக பேசுகிறான்.. என. லக்ஷ்மியும் ஆராய்ச்சியாக பார்த்தார் “இரு டா.. நான் கூப்பிடுறேன் பசங்களை” என்றார்.

வர்ஷினி அமைதியாகிவிட்டாள்.. எல்லோரும் சொல்லும் போது என்ன சொல்லுவது என.

பிள்ளைகள் எல்லோரும் வந்தனர்.. லக்ஷ்மியின் இரண்டு பெண் பிள்ளைகள்.. துர்க்காவின் மகன்.. துருவ்.. என எல்லோரும் வந்தனர்.. லக்ஷ்மி “ராக்கேஷ் தம்பி கொஞ்சம் வா ப்பா” என கூப்பிட்டுக் கொண்டு வெளியே சென்றார்.

பிள்ளைகள் எல்லாம் வர.. பேசிக் கொண்டிருந்தனர் சற்று நேரம். 

பின் வர்ஷினி எழுந்து கைகழுவ வெளியே வந்தாள், துர்க்காவும் அவளோடு பேசிக் கொண்டே வந்தாள். இருவரும் அப்படியே டைனிங் டேபிள் அருகில் அமர்ந்தனர்.. தன் பயனுக்கு மொட்டை போட்டதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் சர்வேஷ் “வர்ஷினி” என அழைத்தான்.. வர்ஷினி பதில் சொல்லாமல் எட்டி பார்த்தாள்.. அவனோ “ஒரு போட்டோ எடுத்து கொடேன்.. பசங்களுக்கு என்னை இப்படியே பார்க்கணுமாம்” என்றான். வெளியே இருந்த எல்லோரும் சிரித்தனர்.

வர்ஷினி உள்ளே சென்றாள்.. சர்வேஷ் கட்டிலில் பிள்ளைகள் அமர்ந்திருக்க.. லக்ஷ்மியின் மகள் பெரியவள் “ஆன்ட்டி.. டோட்டல் டேமேஜ்ஜூம் தெரிவது போல எடுங்க ஆன்ட்டி” என்றாள்.

சொல்லிய பிள்ளை “மாமா சிரிங்க.. ஒன்று டூ த்ரீ” என்றாள்.

வர்ஷினி விழித்துக் கொண்டே போனினை வாங்கி போட்டோ எடுத்துதாள்.. சர்வேஷ் “வர்ஷினியோட ஒன்னு எடுத்துப்போம்” என்றான் நல்லபிளையாக.

அப்படியே பிள்ளைகள் எல்லாம் அமர்ந்திருக்க.. வர்ஷினி தன்னோடு சேர்த்து ஸெல்ப்பி எடுத்தாள்.

வர்ஷினி, விழித்துக் கொண்டே போனினை கொடுக்க.. குட்டி பெண் “மாமா மறந்திடாதீங்க, சரியானதும் எங்களை எல்லோரையும் ஒன்டே அவுட்டிங் கூட்டிட்டு போகனும்.. மம்மி டாடி இல்லாமல், இல்லை.. இதை.. வாட்ஸ்சப் குரூப் எல்லாத்திலும் போட்டுடுவேன்” என போட்டோவை பார்த்து விட்டு, தன் மாமாவின் சிஸ்டம் முன் அமர்ந்தாள் கேம்ஸ் விளையாட.

சர்வேஷ் புன்னகையோடு “ம் ம்.. எடுத்த போட்டோவை எனக்கு வாட்ஸ்சப் அனுப்புடி” என்றான்.

“எல்லாம் அனுப்புவோம்” என்றது நான்காவது படிக்கும் கீர்த்து. புன்னகையோடு வர்ஷினியை பார்க்க, வர்ஷினி ஹால் நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்.. சர்வேஷ் அவசரமாக “வர்ஷினி, அந்த லாப்டாப் எடுத்துக் கொடேன்” என்றான்.

வர்ஷினி தயக்கமாகவே வந்து எடுத்து கொடுத்தாள்.. துர்க்காவின் மூன்று வயது பிள்ளை.. அவனின் போன் பார்த்துக் கொண்டிருக்க.. சர்வேஷ் அவனை காட்டி “இது துர்க்கா அக்கா பையன்.. இவனுக்குதான் மொட்டை போட்டது.. ஒரே அழுகை” என தொடர்ந்தான் பேச்சினை. ‘எத்தனை பேர் எத்தனை தரம் பேசுவீங்க’ என எண்ணிக் கொண்டே நின்றாள்.

அவனுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை.. அதே நேரம் அவளை அப்படியே விடவும் முடியவில்லை தவித்து போனான்.. சர்வேஷ்.

வர்ஷினி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.. பிள்ளைகள் எல்லாம் அங்கிருந்ததால்.. ஒவ்வொருவரையும் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான்..

சற்று நேரத்தில் பேச்சு தடம்மாறியது “ராக்கி ஊருக்கு போயிடுவான்.. சோ ப்ளீஸ் நீ வந்து அடிக்கடி பாரு என்னை” என்றான்.. சின்ன குரலில்.

வர்ஷினி விழித்து சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து “எதுக்கு, நீங்க இப்படி பேசவா.. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. கத்துறீங்க வர்ஷினி போட்டோ எடுன்னு..” என்றாள் கோவமாக.. சற்றுமுன் அவன் அழைத்ததை கூறினாள்.

சர்வேஷ் “ஹேய் என்ன நீ.. இப்படி கோவப்படுற.. என்னோட க்கும்.. பிரென்ட்ன்னுதானே கூப்பிட்டேன்.. நீதான் எதோ நினைச்சிக்கிற” என்றான் சின்ன குரலில் அவனும்.

வர்ஷினி பதிலே சொல்லாமல் கிளம்பினாள் இந்த பேச்சு பிடிக்கவில்லை என.

சர்வேஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘அதென்ன பேசவே கூடாதுன்னு பிடிவாதமா இருக்கா..’ எனதான் மனதில் ஓடியது அவனுக்கு.

சர்வேஷ் எழுவதை பார்த்து, துர்க்கா வந்து அவனை ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

சற்று நேரம் மீண்டும் அரட்டை தொடர்ந்தது.. வர்ஷினி, பழைய கதைகள் பேசும் போது எழுந்து சென்றுவிட்டாள் பிள்ளைகளோடு பேச. சர்வேஷ் மட்டும் இதனை கவனித்துக் கொண்டிருந்தான். அவனால் சட்டென எழுந்து சொல்ல முடியவில்லை. தம்பியின் பார்வையை உணர்ந்து.. லக்ஷ்மி அடிக்கடி வர்ஷினியோடு சென்று பேசிக் கொண்டிருந்தாள்.

அப்படிதான் சர்வேஷ் அறையில் இருந்த பால்கனியில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. பெரிதான வ்வீயூ என இருக்காது.. எட்டி பார்த்தால்.. சாலை தெரியும் அவ்வளவுதான். ஆனால் அந்த இடம் துணி காயவைக்கவும்.. சின்ன சின்ன செடிகளுமாக இருந்தது. மிளாகாய் செடி.. கற்பூரவள்ளி என சர்வேஷ்ஷின் அன்னை வைத்திருந்தார். பெண்ணவள்.. தன் தமக்கையோடு நின்று பேசிக் கொண்டே அந்த செடியின் இலைகளை தன் கைகுட்டையால் துடைத்துக் கொண்டிருந்தாள்.

சர்வேஷ் அதை ரசித்துக் கொண்டிருந்தான் ஹாலில் அமர்ந்துக் கொண்டு.

கிரேவி கடையில் வாங்கிக் கொண்டார்கள்.. சப்பாத்தி தோசை மட்டும் வீட்டில் செய்துக் கொண்டனர்.. இரவு உணவு முடிந்தது. 

கிளம்பினர் ராக்கி குடும்பமும் வர்ஷினியும். சர்வேஷ் கலகலப்பாக இருப்பவன் அவள் கிளம்பவும் அமைதியாகவே நின்றான்.

வர்ஷினிக்கு அந்த அமைதிதான் என்னமோ செய்தது.. “வரேன் சர்வேஷ். உடம்பை பார்த்துக்கோங்க” என்றாள்.

சர்வேஷ் இமைகளை மட்டும் அசைத்து சரி என்றான்.

அந்த இரவு பலபல யோசனைகள் சர்வேஷ்ஷூக்கு, அங்கங்கே அவள் அமர்ந்த.. நின்ற.. இடங்களை எண்ணிக் கொண்டே உறங்கி போனான்.

அதிகாலையில் விழிப்பு வர.. அவளின் அலைபேசிக்கு செய்தி அனுப்பினான் “தேங்க்ஸ் போர் கம்மிங்.. நான் எதிர்பார்த்திருக்கவில்லை நீ வருவேன்னு. தேங்க்ஸ்” என செய்தி அனுப்பியிருந்தான்.

வர்ஷினிக்கு எழுந்ததும் அந்த செய்தியை கேட்க்க இதமாக இருந்தது. மனது குளிர்ந்து. ‘எதுக்கு திரும்ப வந்து நிக்குறாங்க.. முடிஞ்சிபோச்சி எல்லாம்’ என ஒருகுரல் எழுந்தது அவளுள்.. 

ஆனால், இந்த குரல் என்னமோ செய்தது.. நான்குமுறை கேட்டுவிட்டுதான் தன் வேலையை பார்க்க சென்றாள்.

இன்று ராக்கி தம்பதி மதியம் விருந்துக்கு வீடு வந்திருந்தனர். விஜயா விருந்து ஏற்பாடுகளை நன்றாக செய்திருந்தார். துருவிற்கு துணிகள் எடுத்து கொடுத்தனர் பெரியவர்கள் நேரம் இனிமையாக கடந்தது.

அந்த வாரம் வேகமாகவே ஓடியது. ராக்கியின் குடும்பம் வெளிநாடு கிளம்பினர். 

ராக்கி, வர்ஷினியிடம் போனில் “சர்வேஷ், ரொம்ப வருஷமா தனியாதான் இருக்கான்.. நான்தான் கூடவே இருந்தேன்.. ஒன்றாகவே வருவோம் போவோம். இந்தமுறை எதோ மிஸ் ஆகிடுச்சு” என்றவன். “தப்பாக நினைக்காத.. அவனுக்கு, இன்னமும் சரியாக ஆறுவாரம் ஆகும்ன்னு சொல்லியிருக்காங்க.. தனியா இருப்பான்.. நீ அடிக்கடி அவன்கிட்ட பேசு வர்ஷினி.. முடிந்தால் போய் பாரு..” என்றான்.

வர்ஷினிக்கு பதில் ஏதும் சொல்ல முடியவில்லை “சரிங்க ராக்கி” என்று முடித்துக் கொண்டாள்.

சர்வேஷ் எங்கும் நகர முடியவில்லை. அதனால் போனிலேயே வழியனுப்பி வைத்தான். மனது பாரமாகதான் இருந்தது அவனுக்கு. தன் வீடே இப்போது பாரமானதுதாக உணர்ந்தான், ஒருமாதிரி குழப்பாமாக இருந்தான்.

வர்ஷினிக்கு அடுத்த பத்துநாட்கள் சரியாக இருந்தது. 

சர்வேஷ் முடிந்த போதெல்லாம் அலுவலகத்தோடு தொடர்பில் இருந்தான். லீவ் கிடைத்ததால்.. சிலபல கட்டுபாடுகள் இருந்தது அவனுக்கு. கொஞ்சம் துவண்டு போனான்.. அதில். வர்ஷிணியின் தாக்கம் அடிக்கடி வந்தாலும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எப்படி அவளிடம் பேசுவது, என்ன செய்வது.. என ஏதும் புரியவில்லை அவனுக்கு. அதனால், அமைதியாகவே இருந்தான்.