சர்வேஷ் உசிப்பிவிடப்பட்டவனான் அந்த சர்வா என்ற வார்த்தையில்.. அது மீரா எப்போதும் அவனை அப்படிதான் அழைப்பாள்.. இப்போது, அவள் மேல் வர வேண்டிய கோவம்.. அவளிடம் கருணையாக மாறியது.. வர்ஷினிமேல் எல்லாம் திரும்பியது “உனக்கு அறிவிருக்கா.. நல்லா வெள்ளபன்னி மாதிரி இருந்தால் மட்டும் போதாது.. யோசிக்க தெரியாதா உனக்கு.. பாரின் டால்.. அவ்வளவுதான்.. நத்திங் நீ.. எனக்கும் அவளுக்குமான பிரச்சனை நீ எதுக்கு நடுவில் வர.” என அவளை நெருங்கியவன்.. காரணமே இல்லாமல் தன் இயலாமையில் “உன் பின்னாடி சுத்தி ஏமாத்திட்டா போயிட்டேன்.. எதோ ஒன்னும் தெரியலையே வெள்ள காக்கா மாதிரி திக்கில்லாமல் சுத்திரியேன்னு கிட்ட வந்தேன் அவ்வளவுதான். ச்ச.. உன்னை எப்படி நினைச்சிருந்தேன்.. இப்படி போட்டுகொடுத்திட்ட.. அவளோட கஷ்ட்டம் தெரியுமா.. உனக்கு. உன்கிட்ட நான் எப்படி பழகினேன்.. அவ வேற டி.. உனக்கு புரியுதா” என்றான்.. வர்ஷினி கண்களில் நீர் திரள நின்றிருந்தாள் ஏதும் புரியாமல்.
அவனின் வேகமான தமிழ் பேச்சுகள் சட்டென புரியவில்லை அவளுக்கு. அவனுக்கோ கோவம் “இப்படி ஏதும் தெரியாமல்.. வெஞ்சன்ஸ் வைச்சிருந்திருக்க.. ம்.. இப்போ சந்தோஷமா உனக்கு..” என தலை கோதிக் கொண்டே நிமிர்ந்தவன் “போய் தொலை.. என்னை பார்க்காத.. இனி பேசாவே பேசாத.. போய்டு..” என்றான், அத்தனை கோவமான உடல்மொழியும் வாய்மொழியுமா.
உமர் அருகில் வந்து “வா வர்ஷினி” என சொல்லி அவளை தன் சைக்கிளில் கூட்டிக் கொண்டு வீடு வந்தான்.
வர்ஷினிக்கு அப்போது சர்வேஷ் பேசியதன் முழு வார்த்தைகளுக்கான அர்த்தமும் புரியவில்லை.. ஆனால், வெள்ளை காக்கா.. பன்னி.. என சில வார்த்தைகள் மட்டும் அவள் மனதில் பதிந்தது.. வீட்டு வாசலில் உமரிடம் “என்ன சொன்னானங்க.. நான்தான் காரணமா” என்றாள்.
உமர் தலையை இல்லை எனபதாக அசைத்தான் “அவன் கோவத்தில் இருக்கான். நீ அவனை புரிஞ்சிக்கலைன்னு கோவப்படுறான். அவ்வளவுதான்” என்றான்.
ஆனால், வர்ஷினிக்கு அவன் தன்னை வெறுத்துவிட்டான் என அவனின் உடல்மொழியில் பேச்சு வார்த்தையில் புரிய “ஷர்மி” என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவள் சிலபல வார்த்தைகளை நினைவு வைத்திருந்தாள்.. அதற்கு விளக்கம் கேட்க.. ஓடினாள் பெண்.
ஷர்மி மாடியில் இருக்க வர்ஷினி “ஷர்மி சர்வேஷ் சர்வேஷ் என்கிட்டே உன் பின்னாடி சுத்தி ஏமாத்திட்டா போயிட்டேன் சொன்னாங்க.. அப்படின்னா என்ன.. டி(தி)க்கு இல்லாமல்.. என்னமோ சொன்னாங்களே..” என ஆங்காங்கே கேட்ட நினைவிருந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஷர்மி உமர் எங்கே என பார்க்க அவளின் அண்ணன்.. மீண்டும் தன் நண்பர்களை தேடி போயிருக்க.. ஷர்மி தனக்கு தெரிந்த விளக்கத்தை சொல்ல.. வர்ஷினிக்கு புரிந்தது.. ‘மீராவை, சர்வேஷ் விரும்பியிருக்கிறான்’ என்பது.
மனது கலங்கி போனது வர்ஷினிக்கு. தாய் தந்தையை இழந்து.. எதுமே புரியாமல்.. இவர்கள்தான் பெற்றவர்கள் என சொன்னாலும்.. அவளால் ஒட்டமுடியாமல் இருக்க.. காலம் ஓட தொடங்கியது அதன் போக்கில். காட்டாற்றில் சிக்கிக் கொண்ட கூழாங்கல் போல.. தொடங்கியது அவளின் ஓட்டம்.
வந்த இடத்தில்.. முதல்முதலாக நுழைந்தவன்.. கண் தேடும் போதெல்லாம் தென்பட்டவன்.. ஏதேனும் தன்னால் இயலவில்லை என்றால்.. ஒருவன் இருக்கிறான் செய்துகொடுக்க.. என மினுமினுக்கென நம்பிக்கை கொடுத்தவன்.. தன்னை திட்டி தீர்த்து விலகி ஓடிவிட்டான். தளர்ந்து போனாள் வர்ஷினி.. மீண்டும் ஒரு பயம்.. இது என்ன வாழ்க்கை! என.
தன் அன்னை உண்பதற்கு அழைக்கவும் வீடு வந்தாள்.
விஜயா “என்ன யூனிபோர்ம் கூட மாற்றாமல் ஷர்மி வீட்டில் அரட்டை.. மணி என்ன ஆகுது” என திட்ட.. என்னமோ வர்ஷினி அழுகையை கையிலெடுத்தாள். அழுதுக் கொண்டே அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி வந்தாள்.
உண்ணவில்லை.. எழுத அமர்ந்துக் கொண்டாள். வர்ஷினிக்கு சர்வேஷ்ஷின் பேச்சுகளே காதில் ஓடிக் கொண்டிருந்தது.
அவளின் தந்தை வந்தபிறகுதான் உண்ணத் தொடங்கினாள்.
அதன்பின் அதிகம் வெளியே வரவில்லை வர்ஷினி. பள்ளியில் ஷர்மியோடு பேசுவதை தவிர வேறு யாரோடும் பேசுவதும் இல்லை.
மீரா பள்ளி வரவேயில்லை அதன்பின்.
சர்வேஷ் அவ்வபோது பள்ளி வந்தான், டியூஷன் நிறுத்திவிட்டான். சர்வேஷ்ஷின் நண்பர்களோடு வெளியே செல்வதில்லை வார்ஷினி. தோழமை என்பதே இல்லாமல் போனது. வர்ஷினிக்கு மீண்டும் ஒரு ஒதுக்கம் வந்துவிட்டது.. தயங்கினால் புதியவர்களோடு பழக.. பயந்தாள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள. அப்படியே கைகளை நீட்டாமல் வாழ்வும் பழகிக் கொண்டாள்.
சர்வேஷ், தான் பேசியதெல்லாம் நிஜம்தான் என்பது போல.. அதன்பிறகு.. வர்ஷினி இருக்கும் பக்கமே வரவில்லை.
மீராவை தேர்வு எழுதும் இடத்தில்தான் பார்த்தான். பேச முடியவில்லை. அப்போதுதான் கொஞ்சம் அவன் மனது நிதானித்தது. வர்ஷினி என மனதில் ஓரத்தில் அவள் இருந்தாலும்.. பரீட்சையை காரணம் வைத்து.. சர்வேஷ் வேறு எதிலும் கவனத்தை சிதறவிட கூடாது என இருந்துவிட்டான்.
அதன்பின் எதற்கும் நேரமில்லை. சர்வேஷ் படிப்பு வேலை என அவனின் காலமும் ஓடிவிட்டது.
வர்ஷினிக்குதான் இன்று இரவு முழுவதும் பழைய நினைவுகள்.. சர்வேஷ் அடிபட்டிருக்கிறான் என சொன்னது முதல்.. காரணமே இல்லாமல் அவன்மேல் ஒரு இரக்கம் எழுகிறது. அதிலும் உனக்காகத்தான் விழுந்தேன் என பட்டவர்த்தனமாக அவன் செய்தி அனுபியிருக்கவும்.. கோவம் ஒருபுறம் என்றாலும்.. காற்றில் மிதக்கும் பூவாசம் போல.. மனது இதமாகிறது அவளையறியாமல்.
கண்கள் லேசாக சிவந்திருக்க.. பெண்ணவள் எழுந்து அலுவலகம் கிளம்பினாள்.
வர்ஷினிக்கு அலுவலகத்தில் வேலை சரியாக இருந்தது.. புது டீம்.. கொஞ்சம் பழகி.. வேலையை வாங்க.. செய்ய.. என அவள் அதிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள்.
ராக்கி அழைத்திருந்தான் மதியம்.
இரவு வேலை முடித்து வந்துதான் ராக்கிக்கு அழைத்து பேசினாள் பெண்.
அடுத்த வாரத்தில் ராக்கி ஸ்வீடன் செல்வதாக இருப்பதாக அப்போதுதான் சொல்ல.. வர்ஷினிக்கு ராக்கி சர்வேஷ்ஷினை தன் வீட்டிற்கு அழைக்கவில்லை என தோன்றியது. வர்ஷினிக்கு, சர்வேஷ் இல்லாமல் எப்படி ராக்கியை மட்டும் அழைப்பது என யோசனை.
ராக்கிக்கு, ஸ்ர்வேஷ்ஷின் நிலை தெரியுமே அதனால் “வர்ஷி, நீ சர்வேஷை எப்போது போய் பார்க்க போற.. மஞ்சரியும் இன்னமும் பார்க்கலை.. நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து போய் பார்த்திட்டு வந்திடுறீகளா. அப்புறம் அவனால் முடிந்தால் வரட்டும் இலையென்றால் அவன் கிளம்புபோது வந்துகொள்ளட்டும்.. அஹ.. நான்மட்டும் தனியாக வந்தால் என்னை கொன்னே போட்டுடுவான்” என்றான் விளையாட்டாக. எப்படியாவது வர்ஷினியை அவன் கண்ணில் கட்டிவிடும் எண்ணத்தில்.
வர்ஷினி தயங்கினால்.. “மஞ்சரிக்கு வேலையிருக்குமே.. அவங்களுக்கு பேக்கிங்கே நேரம் சரியாக இருக்குமே” என்றாள்.. சொல்லும் போதே.. எதோ தோன்ற “சரி, மஞ்சரியும் நானும் போயிட்டு பார்த்திட்டு வந்திடுறோம்.. நான் நாளைக்கு ஆபீஸ் பெர்மிஷன் போடவா.. மஞ்சரி எங்கே? கொஞ்சம் போனை கொடு ராக்கி போசிக்கிறேன்” என்றாள்.
இப்படியே இரு பெண்களும் திட்டம் போட்டு மறுநாள் சர்வேஷ்ஷை பார்க்க வந்தனர், அவர்களை அழைத்து வர துருவ் ராக்கேஷ் இருவரும் வந்தனர்.
சர்வேஷ்ஷின் அன்னை வரவேற்றார்.. சர்வேஷ் தன் அறையில் இருந்தான்.. அவனுக்கு இறங்கி கால்களை ஊன்றி நடந்துவர சங்கடமாக இருக்க.. தன் அறையிலேயே இருந்தான்.
வர்ஷினி அறைக்குள் வர.. சர்வேஷ்ஷின் பார்வை அவளிடம்தான் நிலைத்தது. இந்த நான்குநாட்களும்.. வேலையில்லாமல் பழைய மருண்ட விழிகளைத்தானே அடிக்கடி எண்ணிக் கொண்டிருந்தான்.. அந்த பயந்த பார்வையை தேடினான் அவளிடம்.
ஆனால், வர்ஷினி நிதானித்திருந்தாள். பார்வையும் உடல்மொழியும் கற்றிருந்தாள் இந்த காலத்தில். ஒரு கருணையோடுதான் பார்த்தால் சர்வேஷ்ஷை.
வர்ஷினிக்கு, சர்வேஷ்ஷை பார்த்ததும் அதிர்ச்சிதான். என்னமோ சென்றமுறை பார்த்தற்கும் இப்போது அடிபட்டு இருபதற்கும் அத்தனை வித்யாசங்கள். மனகண்ணில் அன்று கண்ட அவனின் ஸ்டைலான தோற்றம் மறக்கவில்லை அவளுக்கு.
இன்று முகம் வாடி.. உடல் இளைத்து.. என சர்வேஷ் உண்மையாகவே நலமில்லாமல்தான் இருக்கிறான் என கரிசனை வந்தது பெண்ணுக்கு “இப்போ பரவாயில்லையா எப்படி இருக்கீங்க” என்றாள்.
மஞ்சரியும் விசாரித்தாள்.. அதிர்ந்து திட்டினால் “என்ன அண்ணா, இப்படியா கவனகுறைவா இருப்பீங்க.. நெற்றியில் இன்னமும் சிவப்பா இருக்கு.. போங்கண்ணா” என கடிந்துக் கொண்டாள்.
துருவ் வந்திருப்பதால் குழந்தைகள் பிஸியாகிவிட.. காபி எடுத்து வந்த லட்சுமி அக்காதான் வர்ஷினியை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.
மஞ்சரி “அக்கா எப்படி இருக்கீங்க..” என விசாரித்தார், பின் “வர்ஷினி, இவங்க ஹைட்ராபாத்தில் படிக்கும் போது.. கூட படிச்சவங்க.. பேரு வர்ஷினி” என அறிமுகம் செய்து வைத்தாள்.
துர்க்கா வேலையில் கவனமாக இருந்ததால்.. சற்று தாமதமாகத்தான் வந்தார் இவர்களை பார்க்க.
சர்வேஷ்ஷின் அன்னை எல்லோரையும் உபசரித்தார்.. மெதுவடை சட்னி என சிற்றுண்டி பரிமாறினார்.
ராக்கி “என்னடா, உனக்கு உடம்பு சரியில்லைன்னா.. எங்களுக்கு திருவிழாதான் போலவே” என கிண்டல் செய்துக் கொண்டே உண்டான்.
சர்வேஷ்ஷின் அன்னை “என்ன ப்பா செய்ய.. ஒரே இடத்தில் இருப்பதால் சாப்பிட மாட்டேங்கிறான். அத்தோட நீங்கள் எல்லோரும் எப்போவாதுதானே வரீங்க.. அதான்..” என்றார்.
ராக்கி “அம்மா, நான் சும்மா சொன்னேன்.. நீங்க தினமும் செய்ங்க.. நான் வரேன் சாப்பிட.. அங்கே போனால் எங்கே இதெல்லாம்” என்றான்.
அன்னை புன்னகையோடு இருந்தார். மஞ்சரியை நன்றாக தெரியும் என்பதால்.. பேசிக் கொண்டிருந்தார் துருவ்’விற்கு என அவர் எப்போதும் கொடுக்கும் சத்துமாவு எடுத்து வைத்திருக்கிறேன் என பேச்சுகள் தொடர்ந்தது.
வர்ஷினி சர்வேஷ் துர்க்கா.. லெட்சுமி ராக்கி என ஐவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.