இடம் மாறும் மனங்கள்!

10

அன்று..

மீராவிற்கு அதிர்ச்சி.. எதிர்பார்த்திருக்கவில்லை.. இப்படி சர்வேஷ் முற்றிலும் தன்னை நிராகரிப்பான் என. நாட்கள் போகட்டும் படிப்போம் முதலில்.. கல்லூரி செல்லுவோம்.. வேலைக்கு செல்லுவோம் அதன்பிறகு பார்ப்போம் என சொல்லுவான் எனதான் எதிர்பார்த்தாள். அதனால், அவனின் பதிலில் வாடிபோனாள்.

மீராவின் நம்பிக்கை தளர்ந்து போனது அவளும் தளர்ந்தாள்.. நேரம் ஆக ஆக.. கோவம் தன்மீதே எழுந்தது. யோசனையோடே மீண்டும் பள்ளி வர.. வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. அதனால் அருகில் இருந்த பார்க் சென்றாள்.

தோழிகளிடம் சொல்லியாகிவிட்டது.. நாளை என்ன செய்ய போகிறோம்.. என  அந்த பார்க் முழுவதும் நடையாக நடந்தாள்.. அமர முடியவில்லை.. சுற்றிக் கொண்டே இருந்தால்.. எதோ அவமானம் கண்டுவிட்டதாக உணர்ந்தாள். அதே நேரம்.. அவனின் அருகாமையை இழக்கும் உணர்வும் வந்தது. பெண்ணவள் துவண்டு போனாள்.

மீரா வீட்டில்..

மீரா பள்ளி விட்டு வந்து.. உடைமாற்றிக் கொண்டு உண்டு டியூசன் செல்லுவாள். இன்றும் அவளை காணோம்.. நேரம் கடந்தது.. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.. அவளின் அண்ணனுக்கு. வீட்டில் சின்னம்மாவிடம் அவன் வினவ.. ‘அவர் நேராக டியூன்ஷன் போயிருப்பா.. என்ன இப்போ’ என்றார் அலட்டாமல்.

அண்ணனுக்கு முன்னமே சந்தேகம்.. இப்போது எதோ சரியில்லை எனதான் பதறியது. முதலில் தனக்கு  தெரிந்த அவளின் தோழி வீட்டிற்கு சென்றான்.. தங்கையை பற்றி விசாரித்தான். இல்லை எனவும்.. மற்ற தோழிகளிடம் போனில் விசாரிக்க சொல்லினான். அவர்களும் பள்ளி முடித்ததும் பார்க்கவில்லை என்றனர்.

அதனால் டியூஷன் வந்து விசாரித்தான் அவனின் அண்ணன். இங்கே வரவில்லை என்றனர். 

மீராவின் அண்ணன் இன்று வீடு வந்திருந்தான். தங்கையை காணோம் எனவும்.. பதட்டமாகினான். அவளை வேறு டியூஷனில் சேர்ந்ததால்.. அங்கேயும் சென்று பார்த்துவிட்டான். இப்போது அவனிற்கு உறுதியானது.. கண்டிப்பாக அந்த பையனுக்கு தெரியும் என.

அதனால், மீராவின் பழைய டியூஷன் இடம் வந்தான், சர்வேஷ்ஷினை விசாரிக்க. அவனின் அண்ணனுக்கு சர்வேஷ் அங்கே இல்லை என்றதும்.. ஒருமாதிரி இருந்தது.. மனது எதை எதையோ யோசித்து இன்னும்  கோவமானது. 

தன் தந்தைக்கு அழைத்துவிட்டான். அவர் கிளம்புகிறேன் என்று கூறி அலுவலகத்திலிருந்து கிளம்பினார்.

என்ன செய்வது என தெரியாமல் நின்றான், மீராவின் அண்ணன்.

சர்வேஷ் மற்றும் நண்பர்கள் இன்று டியூஷன் வரவில்லை.. அவனின் பள்ளி தோழனின் பிறந்தநாள் கொண்டாட எல்லோரோடும் சென்றுவிட்டனர்.

மீராவின் அண்ணன் கீழே இன்னமும் நிற்பதை கண்டார் டியூஷன் நடத்தும் ஆசிரியை. அவர், இவர்களின் பள்ளி ஆசிரியை. தங்கள் பள்ளி பெண்.. அத்தோடு முன்பு இங்கே படித்தவள் என்பதால்.. கீழே சென்று  அவர் என்னவென விசாரித்தார்.. மீராவின் அண்ணன் விவரம் சொன்னான்.

அந்த டீச்சரும் பதறினார்.. மீராவின் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளிடம் சின்ன குரலில் ‘மீராவை பற்றி தெரியுமா பாவம் அவங்க வீட்டில் பயப்படுறாங்க..’ என சொல்லி கேட்கவும்.

வர்ஷினி எழுந்து நின்றாள். டீச்சர் அவளை தனியே அழைத்து சென்று விசாரித்தார். வர்ஷினி தனக்கு தெரிந்தது எல்லாவற்றையும் சொல்லினாள்.. மதியம் தன் தோழிகள் சொல்லியது.. அதை தொடர்ந்து.. சர்வேஷ்ஷூம் மீராவும் பள்ளியின் தெருமுனையில் நின்று பேசியது வரை எல்லாம் சொல்லிவிட்டாள்.

வர்ஷினிக்கு, இது காதல் விவகாரம் என்ற பதட்டம் இல்லை.. மீராவை காணோம் என பதறும் அவர்களின் அண்ணன் டீச்சர் மட்டுமே கண்களுக்கு தெரிந்தனர். இப்படி லவ் லெட்டர் கொடுப்பது பிரச்சனையாகும் என்று அவளுக்கு ஒரு க்ளூ இல்லைவேயில்லை. எனவே, சர்வேஷ்ஷூம் மீராவை காணாமல் பதருவானே என எண்ணமும் எழ.. எல்லாம் சொன்னாள் பெண்.

அஹ.. நிம்மதியானது டீச்சருக்கு. மீராவின் அண்ணனிடம் நீங்க.. அந்த பக்கமே தேடுங்க.. எனக்கும் டியூஷன் முடிந்தது.. நானும் வருகிறேன் தேடுவோம் என்றார்.

இருவரும் தனி வண்டியில் சென்றுக் கொண்டிருக்கும் போதே.. டீச்சர் மெதுவாக பள்ளியின் வளாகத்தில் தேடினார். அங்கே வாட்ச்மேனிடம் விசாரித்தார்.. அவர் அந்த பெண் இந்தபக்கம் நடந்து சென்றது என சொல்லினார்.

இருவருமாக பார்க் சென்று பார்த்தனர்.. பார்க் வளாகத்தில் அங்கிருந்த வாட்ச் மேன்னிடம் எதோ பேச்சு வார்த்தையில் இருந்தாள் மீரா.

ஆசிரியர் சென்று என்னவென விசாரித்து.. கூட்டி வந்தார்.. மீராவை.

மீராவின் முகம் டீச்சரை பார்த்ததும் அதிர்ந்து என்றால்.. அண்ணனை பார்த்ததும் பயத்தில் வெளிறி போனது. 

மீராவின் அண்ணன் இறுக்கமாக டீச்சரிடம் நன்றி கூறி தங்கையின் கையை பற்றி அழைத்து சென்றான். 

பார்த்திருந்த டீச்சருக்கு புரிந்தது.. அவனின் நிலை. டீச்சர் “நாளைக்கு எல்லா ஹோம் வொர்க்கும் முடித்து வந்திடனும்.. நோ ரீசன்” என மீராவிடம் அவள் நாளை பள்ளி வர வேண்டும் என.. அண்ணனை பார்த்துக் கொண்டே சொன்னார்.

மீரா தலையசைத்தாள். அவளின் அண்ணன்.. ஏதும் சொல்லாமல் வண்டியில் அமர்ந்து தங்கையை பார்த்தான். மீரா ஏறி அமைந்தாள். வண்டி சீறி பறந்தது.

மீரா வீடு வந்ததும்.. அவளின் அண்ணன்.. கண்மண் தெரியாமல் அடி வெளுத்துவிட்டான். அவளின் சின்னம்மாவே வந்து தடுத்து நிறுத்துமளவு அடி மிதி. மீரா தப்பி பிழைத்து தன் அறைக்கு சென்றுவிட்டாள். அண்ணனும் அறையை பூட்டிவிட்டான்.

மீராவின் தந்தை வந்து நடந்தவைகளை கேட்டறிந்தார். மீராவின் அண்ணனின் கோவம் குறையவில்லை. தந்தையிடம் பேசவில்லை.. நான் பார்த்துக் கொள்கிறேன் அவளை.. உங்களால்தான் அவள் கெட்டு போகிறாள்.. உங்களை போல அவளையும் நீங்க மாற்றிவிடுவீர்கள் என ஏதேதோ பேச்சுகள்.

மீராவின் வீடு போர்களமானது.

ஷர்மி, வீடு வந்ததும் உமர் அண்ணனுக்கு அழைத்து நடந்தவைகளை சொன்னாள்.. வர்ஷினிதான்  நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருந்தீங்கன்னு சொன்னால்.. தேடி போயிருக்காங்க.. நீங்க வீட்டுக்கு வந்திடுங்க அண்ணா’ என்றாள்.

உமர் அப்போதே “ஏன் சொன்னால் வர்ஷினி, எதுக்கு இப்போது சொல்லணும் இவன் பேரை. மீராவை பார்த்ததை மட்டும் சொல்லியிருக்கணும்.. எதுக்கு இவன் போரையும் சொன்னால்” என அப்போதே சாடினான்.

ஷர்மி “டேய்.. மீராவை காணோம் டா.. அவங்க அண்ணன் முகத்தை பார்க்கணுமே.. எனக்கே பயமாக இருந்தது.. உங்களுக்கு எல்லாம் அக்கறையே இல்லை.. சர்வேஷ் தானே காரணம்.. சும்மா, வர்ஷினியை சொல்ற..” என சொல்லி, அவர்களின் பதிலை எதிர்பாராமல் அழைப்பினை துண்டித்தாள் ஷர்மி.

வர்ஷினிக்கு பயம் வந்தது.. தான் சர்வேஷ் பெயரை சொல்லியிருக்க கூடாதோ என.

வார விடுமுறை முடிந்தது.

மறுநாள் பள்ளியில் மீராவை பார்க்க முடியவில்லை யாராலும். சர்வேஷ் மீராவின் வகுப்பில் வந்து விசாரித்துக் கொண்டிருந்தான் இடைவேளையில். 

அப்போது அவனின் டியூசன் ஆசியர் வந்து அவனை அழைத்து சென்றார் பள்ளி முதல்வரிடம்.

விவகாரம் பெரிதானது.. மீராவின் அண்ணன்.. பள்ளியில் வந்து சர்வேஷ்ஷின் பெயரில் க்ம்பளைன்ட் செய்தான்.

மீராவை நடுவழியில் சர்வேஷ் நிறுத்தி பேசியிருக்கிறான்.. மீரா மனமொடிந்து எங்கோ தொலைந்துவிட்டால்.. நாங்கள்தான் தேடி கண்டுபிடித்தோம்.. சர்வேஷ் பெயரில் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.. என நடந்தவைகளை மாற்றி கூறினான், பள்ளியில் முதல்வரிடம் மீராவின் அண்ணன். 

அத்தோடு ‘நான் நிறைய முறை மீராவிடம் பேச கூடாது என சொல்லியிருக்கிறான். இவனை பார்க்க கூடாது என்தான்.. டியூஷன் மாற்றினேன்.. அப்படியும் இவன் வந்துவிட்டான்.. என மீராவின் அண்ணன் சர்வேஷ்ஷை பற்றி குற்றம் சொல்லிக் கொண்டே போனான். 

சர்வேஷ் வந்தான் தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு.. மீராவின் அண்ணன் வெறி கொண்டு அமர்ந்திருந்தான்.

சர்வேஷ்.. மீராவின் அண்ணனை பார்த்து பயந்தான். மீராவை பற்றி சொல்ல  முடியவில்லை அவனால்.. அவளின் புலம்பல்கள் எல்லாம் கேட்டவனாகிற்றே அதனால் அமைதியானான்.

முதல்வர் “நீ மீராகிட்ட என்ன பேசின.. ஏதாவது தவறாக..” என நிறுத்திக் கொண்டார்.

சர்வேஷ் மிரண்டு போனான்.. தலைகுனிந்து நின்றான், பேச முடியாமல்.. “அதெல்லாம் இல்லைங்க.. சும்மா பேசிட்டு இருந்தோம்.. அவ்வளவுதான் எனக்கு தெரியாது என்ன ஆச்சுன்னு” என்றான்.

 மீராவின் அண்ணன்.. ‘ எப்படி பேசறான்னு பாருங்க.. இவனையெல்லாம் விசாரிக்கவே கூடாது.. பள்ளியிலிருந்து அனுப்புங்க.. பரீட்சை எழுத விடாதீங்க..’ என்றான்.

சர்வேஷ் மீராவை பற்றி சொல்ல வேண்டாம் என எண்ணி அமைதியாகவே நின்றான்.

பள்ளி முதல்வர்.. மீராவின் அண்ணனை சமாதானம் செய்தார். மீராவை நான் பள்ளிக்கு அனுப்பமாட்டேன் இவன் இருக்கும் வரை.. என கோவமாகவே பேசி தீர்த்தான், அவளின் அண்ணன்.

முதல்வர், நான் பார்த்துக் கொள்கிறேன்.. என பேசி அனுப்பி வைத்தார், மீராவின் அண்ணனை. 

சர்வேஷ் பற்றி இதுவரை எந்த கம்ப்ளைன்ட்டும் இருந்ததில்லை. ஏதும் அவடிம் சொல்லாமல் சர்வேஷ்ஷினை வகுப்பிற்கு அனுப்பினார்.

பள்ளியில் செய்தி பரவியது.

மாலையில் சர்வேஷ்ஷின் மாமா.. பள்ளி முதல்வரை வந்து பார்த்தார். வந்து பார்த்தார்.. சர்வேஷ் பற்றி முதல்வர் சொல்லி.. பரீட்சை இன்னமும் ஒருமாதத்தில் இருக்கிறது.. படிக்க மட்டும் சொல்லுங்க என ஒரு வார்னிங் கொடுத்து அனுப்பினார்.

சர்வேஷ் தலைகுனிந்து நின்றான். அவனுக்கு கோவம்தான் வந்தது.. மீராதான் காரணம்.. ஆனால், எல்லா பழியும் என் மேல்.. பள்ளியில் இப்போது நான்தான் தவறானவன்.. மீராவும் வந்து நடந்ததை சொல்லவில்லை என எதோ வேகம்.. மாமாவேறு வந்து என அவமானத்தில் சங்கடமாக நின்றிருந்தான்.

நண்பர்கள் அந்த மாலை நேரத்தில்  இவனுக்காக காத்திருந்தனர்.. பள்ளியின் முன்பு.. வர்ஷினியும் அவர்களோடு நின்றிருந்தாள்.

சர்வேஷ் வெளியே வந்தான் தன் மாமாவோடு. அவர் என்ன சொல்லுவது என தெரியாமல் நண்பர்களை பார்த்தும் தலையசைத்து கிளம்பிவிட்டார்.

சர்வேஷ்ஷின் பார்வை.. வர்ஷிணியின் மேல் பதிந்தது.. வர்ஷினிக்கு, அவனின் நண்பர்கள்தான் சொல்லியிருந்தனர்.. சர்வேஷ்ஷிடம் மீரா தானே லெட்டர் கொடுத்தாள். இவன் மீராவிடம் நாம பிரென்ட்ஸ் எனதான் சொல்லியிருக்கிறான்.. அதற்குத்தான் மீரா வீட்டுக்கு போகாமல் இருந்திருக்கிறாள் என சொல்லியிருந்தனர்.

வர்ஷினிக்கு, இப்போது சர்வேஷ்ஷின் முகம் பார்க்கவே முடியவில்லை.. அன்றே உமர் கேட்டான்.. இவன் பேர் ஏன் வர்ஷினி சொன்னால் என. இப்போது அவனின் மாமா வந்தது.. மதியம் பள்ளி முழுவதும் சர்வேஷ் பற்றியே பேசியது எல்லாம் சேர.. வர்ஷினி, எதோ தவறு செய்துவிட்ட நிலையில் நின்றாள்.

சர்வேஷ் குனிந்த தலையோடு வெளியே வந்தான்.. அவனின் கோவம் முழுவதும் பயந்து நின்றுக் கொண்டிருந்த வர்ஷினி மேல் திரும்பியது.. பற்களை கடித்துக் கொண்டு அவளை கடக்கத்தான் முயன்றான்..

வர்ஷினி “சர்வா.. சாரி” என்றாள்.