Advertisement

அத்தியாயம் 6

“நான் என்னடா விது பண்ணேன்? கொன்னுடுவேன் அது இதுன்னு பேசுற?” என்றார் கண்ணீருடன்

“என்ன பண்ணலை நீ? ஹான். என்ன பண்ணலை? என்னைக் கதாலிச்சத தவிர அவ வேற எந்தத் தப்புமே பண்ணல.. அவ ஆத்ல அவ எப்படி இருந்தான்னு தெரியுமா? எனக்காக எல்லாத்தையும் மாத்திகிட்டா.. ஆனா நான் அவள நரகத்துல கொண்டு வந்து விட்டுருக்கேன்..”

“விது..” துருபதன் தமயனின் கையைப் பிடித்து ஆசுவாசப்படுத்த முயல அவனின் கையைத் தட்டி விட்டான் விதுரன்..

“அவளுக்குப் பிடிக்காத எதையுமே அவ செய்ய மாட்டா.. என்னைக் கல்யாணம் செஞ்ச அப்பறம் எல்லாமே மாறிப்போச்சு.. முதல் தடவை நம்ம ஆத்துக்கு வந்தப்ப உன்னை இம்ப்ரெஸ் பண்ண நான் சொல்ற படி செய்ன்னு சொன்னேன்.. அதுக்கு அவ நான் நானா இருந்து அத்தையோட மனச ஜெயிக்கணும்… இப்படி நடிச்சு ஜெயிக்கிறதுல என்ன இருக்கு.. இது என்ன கம்படிசனா? வாழ்க்கை அப்படின்னு சொன்னா?

ஆனா இப்போ அவ நடிச்சுட்டு தான் இருக்கா? அவ நான் வெஜ் இல்லாம சாப்பிடவே மாட்டா தெரியுமா? அவளோட டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைல்ன்னு எல்லாமே இங்க வந்ததும் மாத்திகிட்டா.. அவளுக்கு உடம்பு சரியில்லாம போனா அவ பக்கத்துலையே யாராச்சும் ஒருத்தர் உட்கார்ந்திருக்கனும்.. அத்தை எப்பவும் அவ கூடவே இருப்பாங்க.. இன்னைக்குப் புள்ளா அவ வலில கஷ்டப்படுட்டு இருந்திருக்கா..

சாப்பாடும் சாப்பிடாம அவ மயங்கி கிடக்குற நீங்க அவளைப் பத்தி கவலைப் படாம அவளைப் பார்க்க போன என்னையும் தீட்டு போகதேன்னு சொல்லுறீங்க..

உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா நீங்க அப்பவும் தீட்டுன்னு ஒதுங்கி தான் இருப்பீங்களா? எல்லா மாமியாரும் இப்படித் தான் மகள்ன்னா ஒரு நியாயம் மருமகள்ன்னா ஒரு நியாயம்..

நீ நல்ல மனைவியா அம்மாவா தானே இருந்த.. ஏன் உன்னால ஒரு நல்ல மாமியாரா இருக்க முடியலை? அவளை உனக்குப் பிடிக்காம இல்ல.. முதல் தடவை ஜீவி நம்மாத்துக்கு வந்தப்ப நீ அவள நல்ல தான் கவனிச்சுகிட்ட.. மகனோட ப்ரெண்டா வந்த பொண்ண உனக்குப் பிடிச்சது.. அதே பொண்ணு உனக்கு மருமகளா வந்ததும் பிடிக்கலை.. காரணம் அவ வேற ஜாதி..

அவ இந்த ஆத்துக்கு வந்த நாள்ல இருந்து நம்ம யார்கூடாவாச்சும் சண்டை போட்டிருக்காளா? உங்களுக்கு ஏன் இவ்வளவு இன்செகியூரிட்டி? கல்யாணம் ஆனதும் எந்தப் பொண்ணும் தன்னோட கணவன அவங்க குடும்பத்துல இருந்து பிரிக்கணும்னு நினைக்க மாட்டாங்க.. மாமியார் மாமனாரோட நடவடிக்கை தான் அவங்கள அந்த முடிவுக்குப் போக வைக்குது..

மருமகள மகளா பார்த்தீங்கன்னா எந்தப் பிரச்சனையும் வராது.. காதலிச்சுக் கல்யாணம் செஞ்சு வந்தவ உங்க பையன உங்ககிட்ட இருந்து பிரிச்சு கூடீட்டு போகிடுவா, அவ வேற வீட்டுக்கு ஒரே பொண்ணு உங்க மகன வீட்டோட மாப்பிள்ளையா அவங்க வீட்ல இழுத்துப்பாங்கன்னு.. அக்கம் பக்கம் இருக்கவங்க சொன்னதைக் கேட்டு அவகிட்ட நீ சரியவே நடந்துக்கல மா..

பிரிக்கணும்னு நினைச்சுருந்தா நீங்க எல்லாரும் சென்னைக்கு வந்த சில நாள்லையே என்ன அவ தனியா கூடீட்டுப் போயிருக்கலாம்.. அம்மா வீட்ல சுதந்திரமா வாழ்ந்துட்டு இங்க எல்லா வேலையும் செஞ்சுகிட்டு நம்ம ஆச்சாரம் எல்லாத்தையும் கஷ்ட்டப்பட்டுப் பாலோ செஞ்சுட்டு இருந்திருக்க மாட்டா..

நீயும் ஒரு பொண்ணு தானேமா.. இப்படி மாசம் மாசம் தனியா வலியோட கஷ்டப்படுறது உனக்கும் இருந்திருக்கும் தானே.. இதே நிலைமை ஒரு வேல உனக்குப் பொண்ணு பிறந்திருந்தா அவளுக்கு வர கூடாதுன்னு நினைச்சிருப்ப தானே வாழ்க்கைல ஒரு தடவையாச்சும்..

எந்த ஒரு கடவுளுமே இந்த மாதிரி நேரத்துல கோவிலுக்கு வரக் கூடாது சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லல.. கடவுள் தூணிலும் இருக்கார் துரும்பிலும் இருக்கார்ன்னு சொல்லுறோம்.. அப்போ இந்த மூணு நாள் நீங்க எந்த இடத்துல இருந்தாலும் கடவுள் பக்கத்துல இருக்க மாதிரி தானே.. 

இதுக்கிடைல உனக்குப் பேரன் பேத்திய பார்க்கனும்னு ஆசை வேற வந்துடுச்சு.. முதல்ல மருமகள ஒழுங்கா பார்த்துக்கோங்க அப்பறம் பேரன் பேத்திய பத்தி யோசிக்கலாம்.. அவ கொஞ்ச நாள் அவங்க அம்மா ஆத்லையே இருக்கட்டும்.. நான் அப்பறம் கூட்டீண்டு வரேன்..

இத்தனை நாள் அமைதியா இருந்தவன் இன்னைக்குப் பேசுறான் அவ தான் சொல்லிக் கொடுத்தாளோன்னு யோசிச்சீங்கன்னா.. அதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணுமில்ல..” கோபமாகப் பேசி முடித்தவன் வீட்டில் இருக்கப் பிடிக்காமல்  வெளியே சென்றான்..

மகனின் பேச்சைக் கேட்ட வைதேகி தரையில் மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.. அவர் செய்த தவறுகள் எல்லாம் அவரை வருத்தியது.. மனைவியின் அருகே சென்ற சேதுராமன்

“விதுரன் சொன்னது எல்லாமே உண்மை வைதேகி.. நாம ஒரு பொண்ணப் பார்த்து அவனுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சு அவ தனிக் குடித்தனம் கூடீண்ட்டுப் போயிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.. வீட்டுக்கு வர மருமக கைல தான் அந்த வீட்டோட சந்தோசமே இருக்குன்னு சொல்லுவாங்க.. நம்ம ஜீவிதா வந்த நேரம் நம்ம எல்லாரும் ஒரே வீட்ல ஒன்னா இருந்திருக்கோம்.. அந்தப் பொண்ணு தப்பானவ இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ.. அழுகைய விடு..”

“நான் ஜீவிதாவ பார்த்து மன்னிப்பு கேட்கணும்..”

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. ஜீவிதா நம்மாத்துக்கு வந்ததும் எல்லாம் பேசலாம்..”

                          *******************

வெளியே சென்ற விதுரனின் மனம் முழுவதும் ஜீவிதா ஜீவிதா ஜீவிதா மட்டுமே.. எந்தக் கவலையும் இன்றிப் பட்டாம்பூச்சி போல் சுத்திக் கொண்டிருந்த பெண்ணைக் காதல் கல்யாணம் என்று கூறி சிறையில் அடைத்துவிட்டேன்..

அவள் மேல் எப்படிக் காதல் வந்ததென்று இதுவரை அவனுக்குத் தெரியாது.. அவளிடம் மிகவும் பிடித்த விஷயம் எது என்று கேட்டால் அதுவும் தெரியாது.. ஏன் அவளிடம் நான் காதலை சொன்னேன்? இந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் தெரியாது.. காரணம் இன்றி வருவது தான் காதலோ? அதற்கும் பதில் தெரியாது..

அவனிற்குத் தெரிந்தது எல்லாம் ஒன்று தான் அவள் இல்லாமல் அவனுக்கு வாழ்க்கை இல்லை.. முதல் நாள் அலுவகத்தில் அவளைப் பார்த்த பொழுதும் சரி அவளுடன் நண்பனாகப் பழகிய பொழுதுகளிலும் சரி, காதலானாகக் கணவனாகப் பல பரிமாணங்கள் எடுத்த பொழுதும் சரி அவனிற்குத் தோன்றியது எல்லாம் ‘என் உயிர் உள்ள வரை அவளை விடக் கூடாது’ என்பதே.. இருவரும் உருகி உருகி காதலிக்கவில்லை… விதுரன் அவளிடம் காதலை சொன்னபொழுது அவனை அவளுக்குப் பிடிக்கும்.. பிடித்தம் காதலாக மாறியது எந்த நொடி என்று அவளும் அறியாள் அவனும் அறியான்..

காதலை சொன்னார்கள் வீட்டில் சம்மதம் கேட்டார்கள் திருமணமும் செய்து விட்டார்கள்.. அவர்களின் இருவருக்கும் இது வரை சின்னச்சின்னச் செல்ல சண்டைகள் மட்டுமே வந்திருக்கிறது.. இப்பொழுது கூட ஜீவிதாவிற்கு மாமியாரின் மேல் கோபம் எல்லாம் இல்லை… அவர்களின் பழக்கவழக்கம் இவளிற்குப் பிடிபடச் சிறிது காலம் ஆகும்… அதுவரை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று எண்ணியிருந்தாள்..

விதுரனிற்குத் தான் மனைவியின் இந்த நிலையைத் தாங்க முடியவில்லை.. அவன் மேலேயே அவனிற்குக் கோபமாக வந்தது.. அந்தக் கோபத்தைத் தான் தாயிடம் காட்டிவிட்டு வந்திருந்தான்.. அவனின் பேச்சு ஒரு விதத்தில் நன்மையில் தான் முடிந்திருக்கிறது… வைதேகியும் அவரின் தவறுகளைப் புரிந்து கொண்டார்.. இனி எல்லாம் சுகமே…  

                 *************************************************

“என்ன ஜீவி எதைக் கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லீட்டு இருக்க.. மெலிஞ்சு போயிருக்க.. அங்க சாப்டுறியா இல்லையா நீ? நாங்க ஊட்டி ஊட்டி உனக்குப் பலகீட்டோம்.. எல்லாம் உங்க அப்பாவ சொல்லணும்.. இனிமே ஒழுங்கா நீயே உன்னைப் பார்த்துக்கோ”

“அப்பா எப்போ வருவாங்க?”

“எதுக்கு?”

“வந்ததும் உங்களுக்கு டிவோர்ஸ் கொடுக்கச் சொல்லணும்.. பொண்ணு முடியாம இருக்காளேன்னு கவலை இல்லை.. சும்மா திட்டிகிட்டே இருக்கீங்க.. அப்பாகிட்ட சொல்லி நல்லா அம்மாவ வாங்கீட்டு வர சொல்றேன்..”

“நேரம் தான்.. உங்க அப்பாக்கு நான் கிடைச்சதே பெருசு.. டிவோர்ஸ் தானே தாராளமா நான் தரேன். உங்க அப்பா அழகுக்கு எத்தனை பொண்ணுங்க வராங்கன்னு நானும் பார்க்குறேன்..”

“பாருங்க பாருங்க..”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே முருகன் டியூட்டியில் இருந்து வந்தார்..

“ஹே வாடா ஜீவி.. எப்போ வந்த? எப்படி இருக்க? மாப்பிள்ளை எங்க? அவர் வரலையா? அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று அடுக்கடுக்காகக் கேட்டுக் கொண்டே போனார்..

“போலீஸ்காரர்ன்னு நிருபிக்கிறீங்க பார்த்தீங்களா?One question at a time pls..” என்றாள் புன்னகையுடன்..

“சரி சொல்லுடா எப்போ வந்த? மாப்பிள்ளை எங்க?”

“ஒரு கேள்வி தானே கேக்க சொன்னேன்.. ரெண்டு கேக்குறீங்க?” ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டாள்..

“வாலு.. நீ வேற மாப்பிள்ளை வேறையா? ரெண்டு பேரும் ஒன்னு தான்..” மகளின் தலையைச் செல்லமாகக் களைத்து விட்டார்..

“பார்டா. அப்போ எனக்குப் பசிச்சா உங்க மாப்பிள்ளை சாப்பிடுவாரா?”

“ஜீவிமா.. அப்பா பாவம் விட்டுட்டு..”கைகளைத் தூக்கிக் கும்பிடு போட்டார்.

“ஹாஹா..”

அதற்குள் கணவனுக்குத் தேனீர் எடுத்து வந்த ரமா, மகள் மருமகனுடன் வந்ததையும் அவளிற்கு ட்ரிப்ஸ் போட்டிருப்பதையும் கூறினார்.. அப்பொழுது தான் மகளின் கையில் இருந்த வென்ப்ளானைப் பார்த்தார்..

“என்னமா ஆச்சு? ட்ரிப்ஸ் போடுற அளவுக்கா உடம்பப் பாத்துக்காம இருப்ப.. அங்க நீ சந்தோசமா இருக்கியாடா?” என்றார் வருத்தத்துடன்..

ரமா தான் கணவனிடம் அடிக்கடி புலம்புவார் அவ்வளவு ஆச்சாரமான குடும்பத்தில் மகள் மகிழ்ச்சியாக இருப்பாளா? என்று.. அப்பொழுது எல்லாம் சமாதானம் சொல்லும் முருகனிற்கே இன்று மகளின் நிலையைப் பார்த்ததும் அந்தச் சந்தேகம் வந்தது..

“நான் அங்க ரொம்பச் சந்தோசமா இருக்கேன்… விது என்னை நல்லா பாத்துக்குறார். இங்க நீங்க ரொம்பச் செல்லம் கொடுத்து லஞ்ச் டின்னர் எல்லாம் ஊட்டி விடுவீங்க.. அங்க என் மாமியார் எனக்கு ஊட்டி விட மாட்டுறாங்க..  அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு மத்தப்படி அங்க எல்லாரும் என்னை நல்லா பாத்துக்குறாங்க..” என்றாள் சிரித்துக் கொண்டே..

மகளின் பதிலில் தானும் சிரித்த முருகன் “மாப்பிள்ளைய ஊட்ட சொல்லிடுவோம்டா…” என்றார்.

தாய் தந்தையுடன் வெகு நாட்களுக்குப் பிறகு உடன் இருப்பதால் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.. அவள் தூங்கும் முன் மொபைலை எடுத்துப் பார்க்க விதுரனிடம் இருந்து நான்கு மெசேஜ் வந்திருந்தது..

“ஹாட் டின்னர்?”

“டேப்லேட் போட்டியா?”

“பேயின் இப்போ இருக்கா?”

“கோபமா இருக்கியா என்மேல?” என்று

மெசேஜை படித்தவள் ரிப்ளை செய்யாமல் மொபலை தூர வைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்..

‘செய்றத எல்லாம் செஞ்சுட்டு கோபமா இருக்கியான்னு கேள்வி  வேற? அதுவும் துரை கால் பண்ண மாட்டீங்களோ.. போடா டேய்..’

இரண்டு நாட்கள் கடந்தும் அவனிடம் இருந்து அவளிற்கு எந்த ஒரு அழைப்பு வரவில்லை.. குட் மார்னிங், சாப்டியா? ரெஸ்ட் எடுத்தியா? குட் நைட்.. மெசேஜ்கள் மட்டும் தொடர்ந்ததே தவிர அவளிற்கு அவன் அழைப்பு விடுக்கவில்லை..

ஜீவிதாவின் உடல்நிலை சற்றுத் தேறியிருக்க.. மனம் கணவனின் அருகாமைக்கு ஏங்கியது..

‘நீ தானே என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போன.. நீ தான் வந்து என்னைக் கூடீட்டு போகணும்..’ என்று ஆரம்பத்தில் நினைத்தவள் ஐந்து நாட்கள் ஆகியும் அவன் வருவது போல் தெரியவில்லை என்றதும் தாயிடம் சென்றாள்

“எங்க ஆத்துக்குப் போறேன்மா..” என்று கூறிய மகளைப் பார்த்த ரமா சிரிப்புடன்

“நாளைக்கு மாப்பிள்ளை வரேன்னு சொன்னார்.. அவரோடவே போ.. இன்னைக்கு ஒரு நாள் எங்க ஆத்ல இருமா..” என்றார்..

“அம்மா..” என்று சிணுங்கியவள் “அவர் உங்களுக்குப் போன் செஞ்சாரா?” என

“டெயிலி பேசிடுவார்.. ஜீவிதா என்ன பண்ற? சாப்டாளா? தூங்குனாலன்னு.. கேள்விக் கேட்டு என்னைக் கொன்னுட்டார்..”

‘ஓ சார் பொண்டாட்டிக்கு போன் செய்ய மாட்டீங்க மாமியாருக்கு செய்வீங்களோ.. இருக்குடா விதுரா உனக்கு..’ மனதில் கணவனைத் தாளித்தாள்.

மறுநாள் விதுரன் அவளை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தபொழுதும் அவளுடன் பேசவில்லை. ‘உனக்கே அவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்’ என்று ஜீவிதாவும் அவனுடன் பேசவில்லை..

வீட்டிற்கு வந்ததும் வைதேகி இருவரையும் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்.. ‘இப்போ எதுக்கு இது?’ என்று யோசித்த ஜீவிதாவும் எதுவும் கூறாமல் வீட்டினுள் நுழைந்தாள்..

உள்ள வந்த மறுநொடி வைதேகி மருமகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“என்னை மன்னிச்சிடுமா ஜீவிதா.. காதல் கல்யாணம் செஞ்சுகிட்டு வர பொண்ணுங்க எல்லாம் பையன அம்மாகிட்ட இருந்து பிரிச்சுடுறாங்க அப்படி இப்படின்னு எல்லாரும் சொல்லவும் , எங்க நீயும்  என் பையன என்கிட்ட இருந்து பிரிச்சிடுவியோன்னு நான் ரொம்பவே பயந்துட்டேன்.. அதான் உன்கிட்ட முகம் கொடுத்து நான் பேசலை.. ஆச்சாரம் அது இதுன்னு சொல்லி உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்.. என்னை மன்னிச்சுடு..” என்றார்

“அத்தை என்ன இது? மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.. நான் எதுவுமே நினைக்கலை.. எல்லா மாமியாருக்குமே வர கவலை தான் உங்களுக்கும்.. அது எனக்குப் புரிஞ்சது.. நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. இது என்னோட குடும்பம்.. இங்க இருக்கப் பழக்கத்தை நானும் கத்துக்கணும் தானே.. நான் எதையுமே தப்பா எடுத்துக்கலை அத்தை..

இது எல்லாம் எனக்குப் புதுசு.. அதுனால கஷ்டமா இருந்தது.. அவ்வளவு தான்..”

“ஆமாமா நோக்கு இது எல்லாமே புதுசு நான் தான் ஒன்னான உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கணும்.. என்னோட தப்பு தான்.. அதைச் செய்யாம உன்னை எங்க பிள்ளையை  எங்களாண்ட இருந்து பிரிக்க வந்த வில்லி மாதிரி பாத்துட்டேன்.. சாரிமா..”  

“ஐயோ அத்தை.. எத்தனை தடவை சாரி சொல்லுவீங்க.. ப்ளீஸ் இதை விட்டுடுங்க..”

அங்கே ஒரு மன்னிப்பு கேட்கும் படலம் இனிதே நடந்து முடிய மனைவியுடன் அறைக்கு வந்த விதுரன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்..

“விடுடா தடியா… இப்போ தான் நான் உன் கண்ணுக்கு தெரியுறேனா? ஒரு வாரமா நான் இருக்கேனா செத்தேனான்னு வந்து பார்த்தியா? விடுடா எருமை..” என்று அவள் பலவாறாகத் திட்டிக் கொண்டிருக்க

“அடச்சீ வாய மூடுடி..”

“என்னது ச்சீயா.. உன்னை.. விளக்கெண்ணை விடுடா.. நாதாரி..”

“அடியே மரியாதையே இல்ல புருஷனுக்கு..”

“உன் முகரகட்டைக்கு இந்த மரியாதைப் போதும்டா..”

“ரொம்பப் பேசுற இந்த வாயை” என்றவள் அவள் உதட்டில் பட்டும் படாமலும் முத்தமிட்டான்..

“பொருக்கி பொருக்கி நாயே..”

“அடங்க மாட்டியாடி நீ..” என்றவன் அவளைக் கட்டிலில் தள்ள

“டேய் வேண்டாம்.. நான் உன் மேல கோபமா இருக்கேன்.. இப்படிப் பண்..”  அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் இதழை மறுபடியும் தீண்டினான்..

முத்தத்தின் ஆட்சியில் இரு உயிர்கள் கலக்கும் முத்தம்.. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது போல இதழ்களை ஒன்றி பிணைக்க வைக்கும் முத்தம்.. இமைக்க மறந்து நீண்டுகொண்டே இருந்தது..  மூச்சு விடும் நேரம் மட்டும் பிரிந்தன அவர்களின் இதழ்கள்.. இதழ் தீண்டல் அடுத்தக் கட்டத்தை அடைந்தது.. இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்தனர்..

கூடிக் கலைத்து கணவனின் மார்பில் படுத்திருந்த ஜீவிதாவின் முடியை கோதிக் கொடுத்துக் கொண்டே

“ஐயம் சாரிடா..” என்றான்

“என்கிட்ட மட்டும் ஏன் பேசல.. அம்மாவுக்கு டெயிலி கால் செஞ்சு நான் என்ன பண்றேன்னு கேட்டிருக்க.. அதை என்கிட்ட கேட்க வேண்டியது தானே..” என்றாள் அவன் மார்பில் இருந்து தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து

“உனக்கு மெசேஜ் போட்டேன்ல.. நீ தானே ரிப்ளை செய்யல..”

“அதுக்கு.. கால் செய்ய மாட்டியா?” அவன் முடியைப் பிடித்து ஆட்டினாள்.

“ஹா வலிக்குதுடி ராட்சசி..” அவள் கையைத் தட்டிவிட்டவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு

“எனக்கு ரொம்பக் கில்டியா இருந்ததுடா.. அதான் பேசல..” என்றான்..

“கில்டியாவா? நீ அப்படி என்ன பண்ண விது?”

“உன்னை மேரேஜ் செஞ்சு கூடீட்டு வந்து ரொம்பக் கஷ்டப்ப்டுத்தீட்டேன்.. உங்க வீட்ல சுதந்திரமா இருந்த.. இங்க வந்து கூண்டுல மாட்டுன கிளி மாதிரி ஆகிட்ட..”

“போ லூசு. எல்லாப் பொண்ணுங்களுக்கும் இது நடக்கிறது தான்.. பிறந்த வீட்ல ஒரு பழக்கம் இருக்கும் புகுந்த வீட்ல ஒரு பழக்கம் இருக்கும்.. முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.. போகப் போக எல்லாம் சரியாகிடும்.. மாமியார் அம்மா மாதிரி இருக்கணும்னு நினைக்கிற பொண்ணுங்க, தான் அவங்களுக்குப் பொண்ணா நடந்துக்குராங்களான்னு கேட்ட இல்லை தான் பதிலா வரும்..

அத்தை ரொம்ப நல்லவங்க.. முதல் தடவை நான் ஸ்ரீரங்கம் வந்தப்ப எவ்வளவு அன்பா பாத்துகிட்டாங்க.. அது தான் அவங்க உண்மையான குணம்.. அக்கம் பக்கம் இருக்கவங்க பேசறதுல கொஞ்சம் பயந்துட்டாங்க.. காதலிச்சுக் கல்யாணம் செஞ்சாலே அந்தப் பொண்ணு ஏதோ பெரிய குற்றம் செஞ்ச ரேஞ்சுக்கு தான் இந்த உலகம் பேசுது.. காதலிக்கிறதோ கல்யாணம் செய்றதோ தப்பில்லை.. கடைசி வர அதே காதலோட வாழாம பிரிஞ்சு போறது தான் தப்பு.. நீ என்னை விட்டு போக மாட்டேன்னு எனக்குத் தெரியும்.. நானும் உன்னை விட்டு போக மாட்டேன்னு உனக்கும் தெரியும்.. இந்தச் சாரி எல்லாம் வேண்டாம்..”

“என் ஜீவிக்குள்ள இவ்வளவு முதிர்ச்சியா?” என்று ஆச்சரியப் பட்டவன் “வேற என்ன வேணும்?” என்றான்

“எனக்கு என் விது மாதிரியே ஒரு பேபி வேணும்.. இன்னும் பத்து மாசத்துல என் கைல இருக்கணும்..” என்றாள் கண்ணடித்து

“பத்து மாசம் எதுக்கு? எட்டு மாசத்துலையே வர வெச்சுடுவோம்..” என்றவன் அதற்கான வேலையில் ஈடுபட்டான்..

சில மாதங்களுக்குப் பிறகு…

ஆபிசில் இருந்து வீடு வந்த விதுரன் குடும்பமே மூஞ்சியைக் கர்ச்சிபால் மூடி இருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அறைக்குச் சென்றான்..

அங்கே டைனிங்டேபிளில் ஜீவிதாமீனை உண்டுவிட்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு ஹாலிற்கு வர அங்கே எல்லாரும் முகத்தை மூடியிருப்பதைப் பாத்து

“இதுக்குத் தான் அத்தை நான் வெளியவே வாங்கிச் சாப்ட்டுகுறேன்னு சொன்னேன். நீங்க கேட்கவே மாற்றீங்க.. ஸ்மெல் ரொம்ப வருதா?” என்றாள் கவலையுடன்

“இந்த மாதிரி நேரத்துல வெளி சாப்பாடு ஒத்துக்காது.. கொஞ்ச நேரம் தானே.. ஜன்னல்ல திறந்து வெச்சா ஸ்மெல் போகிட போகுது..” ஜன்னல் கதவுகளைத் திறந்து கொண்டே வைதேகி கூற

“சரி நான் அம்மா ஆத்துக்குப் போகும் போது இதெல்லாம் சாப்ட்டுக்குறேன்.. இனிமே நம்மாத்துல நான் சாப்பிடல….”

“ஏற்கனவே ரொம்ப மெலிஞ்சு போயிட்ட… பிடிச்சதை சாப்ட்டு உடமைபை நல்லா வெச்சுக்கிட்டா தானே உள்ள இருக்கக் குழந்தையும் நல்லா இருக்கும்.. ஒழுங்கா சாப்பிடு..” என்று அதட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்..

மாமியாரின் மாற்றம் அவளிற்கு மிகவும் சந்தோசத்தை அளித்தது… அன்று மன்னிப்பு கேட்டப்பிறகு வாரத்திற்கு ஒரு நாள் உனக்குப் பிடித்த அசைவ உணவைவீட்டில் சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறினார். அவள் அதை மறுத்துவிட்டாள்.. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்வாள்.. வீட்டில் சாப்பிட மாட்டாள்..

கருத்தரித்தப் பின்பு வெளி உணவுகள் அவளிற்கு ஒத்துக் கொள்ளாமல் போக வீட்டிலேயே செய்து கொள்ளுமாறு வைதேகி கூற.. அவள் மறுத்துவிட்டாள். முடிந்த வரை அம்மா வீட்டிற்குச் செல்லும் போது சாப்பிட்டுக் கொள்வாள்.. மூன்று மாதம் முடிந்ததும் மீன் சாப்பிடுமாறு மருத்துவர் கூற வைதேகிரமாவிடம் அவர்கள் வீட்டில் அசைவம் செய்யும் நாளன்று மருமகளுக்குக் கொடுக்குமாறு கூறியிருந்தார்.. ரமா வீட்டில் அன்று மீன் செய்ததால் அதை மகளிற்கு அனுப்பியிருந்தார்.. அந்த ஸ்மெல் தாங்காமல் தான் குடும்பமே மூக்கை கர்சீப்பால் மூடிக் கொண்டிருந்தார்கள்..

அறைக்கு வந்தவள் கணவனைக் கண்டு கொள்ளாமல் குளியல் அறைக்குள் செல்லப் போக அவள் கைகளைப் பிடித்துத் தன் புறம் இழுத்தான்..

“இரு விது..” என்றவள் அவன் கைகளில் இருந்து தன் கையை உருவ முயல..

“ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாதா? எப்பப்பாரு உனக்கு இதே வேலை..”

“நான் வெஜ் சாப்ட்டுட்டு அப்படியே உன்கிட்ட வர ஒரு மாதிரி இருக்கு.. அதான்..”

“பரவாயில்லை..”

“உனக்குப் பிடிக்காது தானே.. அதைச் சாப்டுட்டு எப்படி உன்னை நான் கிஸ் பண்றது.. ஸ்மெல் வரும்ல..”

“இப்படித் தான்..” என்றவன் அவள் இதழை சிறை செய்தான்..

அவனிடம் இருந்து விலகியவள் “விது விடு.. என்ன பண்ற?”

“காதல்ல எப்பவுமே அசைவம் தான்டி சுப்பர்..” என்று மேலும் நெருங்க

சைவமும் அசைவமும் கலந்த ஒரு விருந்து அங்கே பரிமாறப்பட்டது..

விதுரன்தனது காதல் தாரகையுடன் தங்களுக்கான ப்ரத்யேக உலகத்திற்குச் சென்றான்.

  முற்றும்….

 

 

 

 

Advertisement