Advertisement

     ‘ஏய் ஆனந்தி இதுக்கெல்லாம் நீ பயப்படாதடி..  இவங்களுக்கு  எதுக்கு  நாம  பயப்படனும்…?  வா.. நாம  வேற எங்காச்சம்  போய் சாப்பிடலாம்..” என்றாள்  அபர்ணா.
    பொறுமையிழந்தவன்.. ‘சிவா..   மொதல்ல உன் ஆளைக்கூட்டிட்டு  வெளிய போ…   நான் இவளை சாப்பிட  வச்சிட்டு  உனக்கு  கால் பண்றேன்.” என்றான் வெற்றிமாறன்.
       ‘வெற்றி..”  என்று  பதட்டமாகப் பார்த்தான்..  ஆனால்   வெற்றியை அல்ல..   அபர்ணாவை..   அப்பொழுதுதான் புரிந்தது..  அடடா…. நாம  உன் ஆள் என்று போட்டுக்கொடுத்து விட்டோமே.. என சாரி  சொல்பவனாய்   சிவமுகிலனைப்   பார்த்தான்  வெற்றி.
    ஹ்ம்…. கிழிஞ்சது  போ. என நினைத்து..   ‘வா நாம வெளிய   வெய்ட் பண்ணலாம்.” என்றான் அபர்ணாவிடம்..
      ‘சார்.. அவர்  என்னை  உன் ஆளுன்னு  சொல்றார்.  நீங்களும் அமைதியா  இருக்கிங்க..?”  என்று  கண்கலங்கினாள்.
    ‘அபர்ணா..    நீ  என்னோட  ஒர்க்  பண்றதால..  வெற்றி   அப்படி  சொல்லியிருப்பார்.  நீ  அதை  பெருசா  எடுத்துக்காத..  வா..  நாம  வெளில  வெய்ட்  பண்ணலாம்.” என்றான்  தன்மையாக.
     ‘இல்லங்க சார்..  நான் என் அக்காவை விட்டு எங்கையும்   வரமாட்டேன்.. அதுவுமில்லாம  நாம  எப்படி   தனியாக வெளிய  வெய்ட்  பண்ணமுடியும்..? நீங்க  என்னோட  பாஸ்.. யாராவது  பார்த்தாங்கன்னா  நம்மளைப் பத்தி  என்ன  நினைப்பாங்க..? நாம  இங்கையே  இருக்கலாம்…” என்றாள்.
       கடுப்பாக.. ’சரி நீங்க இங்க இருங்க…    நாங்க வெளிய போறோம்..” என்றான்  வெற்றிமாறன்.
   ‘கொஞ்சம் பொறுமையா பேசு வெற்றி…” என  வெற்றியை  கண்டித்து..
   ‘அபர்ணா…  நாம தனியா எங்ககேயும்   இருக்க  வேண்டாம்.  கார்ல  வெய்ட்  பண்ணலாம்  வா..”  என்றான்.
    ‘நான்  ஆனந்தியை  விட்டு  எங்கையும்  வரமாட்டேன்..” என்றாள் உறுதியாக.
    ‘ஏன்   வீட்டுக்கு  போற  எண்ணமில்லையா..?” என  மிரட்டினான் வெற்றி.
    அதற்க்கும்  அபர்ணா  ஏதோ  சொல்லவர.. ‘அபர்ணா..  ஆனந்திக்கு  ஒன்னும்  ஆகாது..   என்னை  நம்பு.. “ என  அடக்கி.. 
    ’வெற்றி  நான் உன்னை நம்பிதான் இவங்களை  இங்க விட்டுட்டு போறேன்..    எது பேசினாலும்   நீ  அவங்களை டச்   பண்ணாமதான் பேசனும்..   ஒரு கால் மணி நேரத்தில வெளிய வந்திடனும்..  சரியா..?” என்றான் கண்டிப்போடு.
   ‘அது  இவ எவ்ளோ சீக்கிரம் சாப்பிடறாளோ அது பொருத்துதான் நான் வரமுடியும்.” என்றான்  வெற்றி.
   ‘அவ  இவன்னு..  பேச்சைப்பார்..   மரியாதைன்னா..  என்னன்னு    தெரியுமா உங்களுக்கு?” என்றாள்.
    ‘சிவா   ப்ளீஸ்..  இன்னும்   நான்    ஏதாவது   சொல்றதுக்குள்ள  நீ கொஞ்சம்   இவள  கூட்டிட்டுப்போ..   நான் பேச வந்தது   இவகிட்ட இல்ல.  என்  பொண்டாட்டிகிட்ட..”  என்று  அழுத்தமாக ஆனந்தியைப் பார்த்தான்.
   ‘மறுபடியும் நீ ஆரம்பிக்காதே அபர்ணா.   நாம  ரொம்ப  நேரம்  இங்க  இருக்கவேணாம்னா..   முதல்ல  என்னோட வெளில  வா..”  என்று அவள் கையைப் பிடித்து   இழுத்துச்சென்றான் சிவமுகிலன்.
    ரூமைவிட்டு வெளியே வந்தவுடன்..   அவன்   கையிலிருந்து..    தன் கையை  விடுவிக்க  முயன்றாள்..  பிறகுதான் நினைவிற்கு   வந்தவனாய்   அவளின்   கையை விட்டான்.   இம்முறை  அவன்  சொல்லாமலேயே  முன் இருக்கையில்   அமர்ந்தாள். 
     ‘டூ  மினிட்ஸ்ல  வந்திடறேன்..” என  சென்றவன்..   இரண்டு  ஐஸ்க்ரீம்  கப்புகளோடு  வந்து..     ‘அபர்ணா…” என  அன்போடு  அழைத்து..  ஒரு கப்பை   அவளிடம்   நீட்டினான்.
    ’இல்லை   வேண்டாம்.. “  என்றாள்.
    ‘இங்க பாரு..   வெற்றியைப்பத்தி  எனக்கு  நல்லாத் தெரியும்.    நாங்க சின்ன வயசுலயிருந்தே    ரொம்ப க்ளோஸ்    ப்ரெண்ஸ்..  வெற்றி  ரொம்ப  நல்லமாதிரி..   சரி  வெற்றியை  விடு..  
      நாம ஒரே ஆபிஸ்ல ஒர்க் பண்றோம். என்னைப்பத்தி  உனக்கு தெரியும்னு  நினைக்கிறேன்..  நான் யார்கிட்யேயும்  இவ்ளோ  பேசினதுக்கூட இல்லை..    உங்கக்காக்கு  ஒரு பிரச்சனையும்    வராம    நான் பார்த்துக்கிறேன்.  இப்ப இந்த ஐஸ் க்ரீம் கரையறதுக்குள்ள  சாப்பிடு..” என்றான்.
       அபர்ணா  அமைதியாகவே  இருக்க.. ‘அவங்க மட்டும்  நல்லா சாப்டறாங்க..    நீ வேற   மதியம் எனக்கு  கொஞ்சமாதான்  சாப்பாடு  போட்ட..” என  குறைபட்டு..   ஐஸ்க்ரீமோடு   கையை நீட்டிக்கொண்டே இருக்க..     பாஸ்  என்ற  பயத்தில்  வேறு  வழியின்றி   வாங்கிக்கொண்டாள்.
    ‘யாருன்னே… தெரியலைன்னாலும்..   வெற்றிகிட்ட  நல்லா  வாயடிக்கிற.. என்கிட்ட மட்டும்  பேசவே மாட்ற..” என்றான்.
     ’அவன்  வம்பு பண்றான்..   அதனால பேசறேன்..”  என்றாள்.
     ‘ஓஹோ.. அப்ப வம்பு  பண்னினாதான்   பேசுவியா…?”  என்றான் கிண்டலாக.   மீண்டும் அமைதியானாள்  அபர்ணா.
                              —————————
    வெற்றி.. ‘இரண்டாவது   கண்டிசன்..  இப்ப  நீ இத  சாப்பிடலைன்னு   வச்சிக்கோ..?  நானே  உனக்கு  சாப்பாடு   ஊட்டிவிட்டு   இப்பவே   உன்னை எனக்கு நிச்சயம் பண்ணிக்குவேன்.” என்றான்   சிரித்தபடி.
      ஆன்…  என  ஆனந்தி   விழிவிரிக்க..
    ‘நான் பேச  வேண்டியதைப்  பேசிட்டேன்.    நீ சாப்டின்னா    நாம போலாம்.  சிவா  வேற வெளிய  வெய்ட் பண்றான். அவன் மட்டும்னா  பரவாயில்லை..   கூடவே  உன் தங்கையும்  இருக்கா.. சீக்கிரமா  சாப்பிடு..”       
     ‘நான்   உங்களை  லவ்  பண்றேன்னு   ஏது   எங்கவீட்ல  சொல்லிடாதிங்க..   ஏற்கனவே  எங்கம்மாக்கு   உடம்பு  சரியில்லன்னு  எங்கப்பா  ரொம்ப  வேதனைல  இருக்கார்..” என  ஆனந்தி  மன்றாட..
     ‘உங்க  வீட்ல  இருக்க  எல்லார்பத்தியும்   எனக்கு   தெரியும்  ஆனந்தி..   நான்   அந்தளவுக்கு   போகக்கூடாதுனா..    உன்   வீட்டுக்கு  போனதும்  நான்  சொன்னதை  செய்..   இப்போ  இதை  சாப்பிடு..   கிளம்பலாம்..” என்றான்.     
     ‘எனக்கு  உங்க  முன்னாடி  சாப்பிட  முடியலை..   என்ன பேசனுமோ.. பேசிட்டிங்க இல்ல..   நீங்க   கிளம்புங்க..  நான் சாப்ட்டுக்கிறேன்.” 
      ‘ம்கூம்..  இது வேலைக்காகாது.”  என  ஸ்பூனை கையில்  எடுக்க..
       ‘இல்லையில்லை..   நானே சாப்டுறேன்.” என்றாள்.
      ‘இப்பமட்டும் எப்படி சாப்டுவ..? என்று முனகி..   ஸ்பூனை அவள் கையில் கொடுத்தான்.  அவள்  சாப்பிடும் வரை  பத்து நிமிடம் அமைதியாக இருந்தவன்..
       ‘நீ  எந்த தயக்கமும் இல்லாம..  நான் சொன்னதெல்லாம் உன் அம்மாகிட்ட சொல்லு.  உன்மேல எந்த தப்பும் இல்லை.  நீ இன்னைக்கு  பேசலைன்னா  கண்டிப்பா  நான் நாளைக்கு உன் வீட்டிற்க்கு வந்து  என் அத்தைகிட்ட பேசுவேன்.” என்றான்  கண்டிப்போடு.
       ‘அத்தையா..” என  தன்  கண்களை  அகல  விரிக்கவும்..
       ‘பின்ன  உன் அம்மா  எனக்கு அத்தைதானே..?”  என   சிரித்தான்.
        வெற்றியின்   சிரித்தமுகம்  அவளை  வசீகரிக்க..   ஏனென்றே தெரியாமல்  தடுமாறினாள்.  தன்  தடுமாற்றத்தை  மறைக்க..
     ‘நான் கிளம்பறேன்..   எனக்கு டைம் ஆச்சி..”  என்றாள்  அவசரமாக.
     ‘மணி ஐஞ்சிதான ஆகுது.  எப்பவும் நீ  காலேஜ்  முடிஞ்சி  வீட்டிற்க்கு  போகவே ஆறு மணி  ஆகும்.    இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.   உங்க அம்மாகிட்ட  பேசினதுக்கப்புறம்..  நான்  நைட்  உனக்கு   போன்  பண்ணுவேன்.  என்கிட்ட  பேசனும்..  சரியா..?”  என்றான்.
      பயத்துடன்.. ‘என் நெம்பர் உங்களுக்குத்  தெரியுமா..? எப்படி  தெரியும்…?”
      ‘ம்ம்…  கொஞ்சம்   பரவாயில்லை..  வந்ததுக்கு  இந்த ஒரு வார்த்தையாவது  பேசினியே..  ஆமா…  நீ   பாடம்  நடத்தவாவது  பேசுவியா..? இல்ல..   பார்வையாலேயே  நடத்திடுவியா..? நீ   எப்படி இந்த  வேலைக்கு செட்  ஆன..?” என்றான்.
    அதற்கும்  அமைதியாகத்தான்  இருந்தாள்.   ‘உன்னைப்பத்தி   எல்லாமே  எனக்குத்தெரியும்  போது..    உன் நெம்பர் மட்டும்   எனக்குத்  தெரியாம  இருக்குமா..?   ஆனாலும்   என்னைக்காவது   உனக்கு போன்  செய்திருக்கேனா..?  நானும்  மனுசன்தான்  ஆனந்தி..    எனக்கும்  ஒரு  தங்கை இருக்கா..   கிட்டதட்ட  உன் வயசுதான் ஆகுது.    எனக்கு உன் சூழ்நிலை  தெரியாமல்  இல்லை.  ஆனா..  இன்னும்   கொஞ்சநாள்ல   கல்யாணம்  செய்தே  ஆகனும்ங்கிற  கட்டாயத்தில  நான்  இருக்கேன்..   உன்னைத்தவிர  வேற  யாரையும்  என்னால  கல்யாணம்  செய்துக்க  முடியாது..”   என்றான்.
      ‘டைம் ஆச்சி…. அங்க அபர்ணாவேற  எனக்காக  வெய்ட் பண்ணிட்டு இருப்பா.”  என  பேச்சை  மாற்றினாள்.
      ‘அவ  ஒன்னும்    முன்ன பின்ன  தெரியாதவங்களோட  இல்லை..   அவங்க  எம். டி.யோடதான  இருக்கா..? சிவா  ரொம்ப  நல்லவன்..   முதல்ல நான் அவன்கிட்ட  உன்னப்பத்தி  சொல்லி  ஹெல்ப்   கேட்க்கும்போது   அவன்   ஒத்துக்கவே  மாட்டேன்னு  சொல்லிட்டான்.   நான் அவனை  கன்வீனியன்ஸ்  பண்றதுக்குள்ள  ஒரு வழியாகிட்டேன்.  ஆனாலும்..   என்னை  நீ  ரொம்ப  அலையவைக்கிற…   இதுக்கெல்லாம் இருக்கு  உனக்கு…” என்று  மீண்டும்  சிரித்தான்.   மறுபடியும்  அவன் சிரிப்பில்  மயங்கினாள் ஆனந்தி. 
       ‘உன் முகமே சரியில்லை.  ரெஸ்ட்ரூம் போய்  முகத்தை கழுவு.  இல்லைன்னா  பார்க்கறவங்க  என்னதான்  தப்பா நினைப்பாங்க. நான் பில் பே  பண்ணிட்டு  இங்கையே  வெய்ட் பண்றேன்.  சீக்கிரம்   போய்ட்டு வா..” என்றான்.
                     ————————————–
       சிவமுகிலனிடம்.. ‘அவங்கள  இன்னும் காணோம்.  கொஞ்சநேரத்தில வரேன்னு சொன்னாங்க..  நான்  போய் பார்த்திட்டு வந்திடுறேன் சார்..”  என  எழ  முற்ப்பட்டாள் அபர்ணா.
    ‘ஒரு நிமிஷம் இரு..   நான் வெற்றிக்கு  கால் பண்றேன.” என்றான்.
    ‘வெற்றி..  இன்…னுமா சாப்பிடறாங்க..?” என  இழுத்தான்.
     சிவமுகிலன்  நக்கலாக  கேட்பதை  புரிந்துகொண்ட  வெற்றி..    ‘நீ  கேட்படா.. ஏன் கேட்க மாட்ட? முக்கால்வாசி  நேரத்தை.. நீங்க  ரெண்டு பேருமே   வேஸ்ட்   பண்ணிட்டிங்க..” என்றான்  கடுப்பாக.
   ‘கூல் மேன்.  ஏன் இப்படி கோபப்படுற..? எப்பதான் வர ஐடியாவுல இருக்கன்னு  நான் தெரிஞ்சிக்கலாமா..?  இல்ல  அதுவும் முடியாதா?”
   ‘ரெஸ்ட்  ரூம்  போயிருக்கா..  அவ வந்தும் வந்திடறேன்.”
   ‘இன்னும் கொஞ்ச நேரத்தில  வந்திடுவாங்க..   ஆனந்தி  வந்ததும்  நானே உங்க  ரெண்டு  பேரையும்  டிராப் பண்ணிடறேன்.” என்றான். 
   ‘இல்லையில்ல..  நாங்க  ஆட்டோ பிடிச்சி போய்டுவோம்…  சார்.. ”
   ‘ஆமா…. டிரைவிங்  ஸ்கூல்ல  எப்ப ஜாயின் பண்ணப்போற..?” என்றான்.
   ‘நான் அது பத்தி இன்னும் அப்பாகிட்ட  பேசலைங்க சார்.”
   ‘அவர் வேண்டாம்னு  சொன்னா…  நீ  கத்துக்கமாட்டியா.?”
   ‘எங்கப்பா அப்படி சொல்லமாட்டார்.”
    ‘நான் சொன்னதுக்காக  நீ  கத்துக்கமாட்ட..? அப்படித்தான?” என்றான்.
    அவள் கலக்கமாக  பார்த்தாள். ‘என்ன பார்க்கற..? எப்படியும் நீ ஆபிஸ் வந்தா.. அங்க நான் சொல்றத தான கேட்கனும்? வா…. பார்த்துக்கலாம்.” என  மிரட்ட..  தலைகுனிந்து கொண்டாள்.
    ‘அங்க பாரு..  உங்கக்கா பத்திரமா  வந்துட்டாங்க.  போதுமா?”
    அபர்ணா..  ஆனந்தியைப் பார்த்ததும்.. ’சார் நான் கிளம்பறேன்.”
   ‘முக்கியமான  ப்ராஜக்ட்  ஒர்க்  போய்ட்டிருக்கு..  இங்க  வந்ததால..  வேலையெல்லாம்   பெண்டிங்கில  இருக்கு..    நாளைக்கு  காலை  பத்து  மணிக்குள்ள  அதை  முடிச்சே ஆகனும்..   அதனால  நாளைக்கு எட்டு    மணிக்கெல்லாம்   ஆபிஸ் வந்திடனும்..” என்றான்.
     சரி  என்பதாய் தலையசைத்தாள்.  ’சரி  கிளம்பு..“ என  சொல்லியும்..  அபர்ணா  சிவமுகலனையே   பார்த்திருக்கவும்.. 
    ‘என்ன..?” என்றான்.
    ‘இந்த டோர்  ஓபன்  பண்ண  கத்துக்கிட்டேன்..  ஆனா   திறக்க  முடியல..” என்றாள்.
      ஓ.. அதுதான் விஷயமா..? என  நினைத்து அவள் அருகில் நெருங்கினான்.  கண்களை  மூடிக்கொண்டு  சீட்டோடு  ஒட்டிக்கொண்டாள்  அபர்ணா.        கதவைத்  திறந்துவிட்டு  அவன்  இருக்கைக்கு   நகரும்போது  அவனே எதிர்பாராமல்  அவனின்  வலிமையான  தோள்பட்டை அவளது  மார்பில்  உரசிட..  அபர்ணா   உடல்  சிலிர்த்து  சிவந்திட..   மேலும்    கண்களை    அழுத்தமாக  மூடிக்கொண்டாள்.
       கண்களை  திறக்காத  அபர்ணாவின்  கண்களில்  கண்ணீர்  வெளியேற… ‘ஐ… ம்..  ரியலி சாரி…. நான் தெரியாம மோதிட்டேன்..” என  வருந்தினான். 
      ஆனந்தி  அருகில்  வந்து  ‘அபர்ணா.. போலாம்  வா…” என்றாள்.  அதன் பிறகுதான் கண்களை திறந்தாள்.  அமைதியாக  யாரிடமும் எதுவும் சொல்லாமல்  வெளியேறினாள்.
     வெற்றி..  ‘என்னடா… என் வேலை முடியறதுக்குள்ள..  உன் வேலை முடிஞ்சிடுச்சா..?” என்றான் நக்கலாக. 
   ‘கார் கதவு திறக்க  தடுமாறினா வெற்றி… அதனால  நான் திறந்துவிட்டனா..  அப்ப தெரியாம..  அவ மேல  கொஞ்சம்  டச் பண்ணிட்டேன்..” என்று   குற்றவுணர்வோடு  விளக்கம்  கொடுக்க..
    ‘ம்ம்.. உன்னப் பார்த்தா.. தெரியாம மோதின மாதிரி  தெரியலையே..  அதுவுமில்லாம.. அப்படியே  தெரியாம  மோதினாலும்..   அதுக்காக   அவ  கோவம்தான படனும்…?   இப்படி   ஜெர்க்  ஆகக்கூடாதே..”  என  சந்தேகமாக  சிவமுகிலனைப்  பார்த்தான்.
    ‘வெற்றி.. அப்படியா   சொல்ற..?”  என்று   ஆச்சரியமான  சிவமுகிலன்.. 
    ‘சரி..  அதவிடு  உன் விசயம் என்னாச்சி…? என்றான். 
   ‘பேசியிருக்கேன்..  பார்கலாம்..    கண்டிப்பா    இன்னைக்கு  அவங்க  வீட்ல இதுபத்தி  பேசிடுவான்னு  நினைக்கிறேன்..    இல்லைன்னா  நானே  நாளைக்கு  வந்து  பேசுவேன்னு  சொல்லிருக்கேன்..”
     ‘சரி.. டைம்  ஆயிடுச்சி..   போலாமா..?” என  கிளம்பினார்கள்.

Advertisement