Advertisement

                                      அத்தியாயம்—5
               சிவமுகிலன்  வெளியே  வர..   அங்கு அபர்ணா  ஆட்டோவிற்க்காக   நின்றுகொண்டிருந்தாள்.      
              அவளிடம்.. ‘நான் வெளில தான் போறேன்..  ஆன்  த  வேன்னா..  நானே  டிராப் பண்ணிடறேன்..” என்றான்  உள்ளுக்குள்  சிரித்துக்கொண்டே..
           ‘இல்லைங்க சார்..   நான் எங்கக்கா  காலேஜ்க்கு   போறேன்..   இங்கிருந்து  பக்கத்தில  தான் இருக்கு..   உங்களுக்கு  சிரமம் வேண்டாம.” என்றாள்  முடிவாக.
           ‘சரி..  உன் விருப்பம்…” என  கிளம்பிவிட்டான்.
          ஆனந்தி சொன்ன இடத்திற்க்கு  வந்ததும்..   போன் செய்து..      
          ‘நான் வந்துட்டேன்..   நீ எங்க இருக்க..?”
          ‘அபர்ணா.. இங்க உள்ளே வா.. நான் உன்னைப் பார்த்திட்டேன்..” என  கையசைத்தாள்  ஆனந்தி.
                  உள்ளே சென்றதும்..  ‘உள்ள வா..  ரூம் புக்செய்திருக்கேன்..” என  அங்கு  பக்கத்தில்  இருந்த  தனியறையை  காட்ட.. 
               உள்ளே  போகாமல் வெளியில்  நின்றபடியே.. ’என்ன பிரச்சனை..?  எத்தனை நாளா   நீ இப்படி டிஸ்டர்ப்டா இருக்க..?   வேற   யாரோ  வருவாங்கன்னு   வேற  சொல்லிட்டு…  ஏன் இப்படி ரூம் மாதிரி புக் பண்ணிருக்க..? நம்ம அப்பாவோட    ப்ரெண்ட்ஸ்..   இல்லைன்னா உனக்கு தெரிஞ்சவங்களோ.. இல்ல என் ஆபிஸ்ல  ஒர்க் பண்றவங்கன்னு யாராவது..   நம்மளை  யாருடனோ  இங்க  வச்சிப்பார்த்தா என்ன நினைப்பாங்க..?    ஏன் என்கிட்ட எதுவுமே  சொல்லலை..?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.
                ‘முதல்ல உள்ள வா அபர்ணா…   நானே டென்சன்ல இருக்கேன்..  நீ வேற..”  என  சலித்துக்கொண்டு  அவளை உள்ளே கூட்டிச் சென்றவள்.. ‘அதபத்தி  பேசத்தான  கூப்பிட்டிருக்கேன்..  உக்காரு..”  என்றாள்.
               ஆபர்ணாவின்  பதட்டத்தை  கவனித்திருந்த  சிவமுகிலன்..  அவர்களின்  அறைக்கு  வெளியே   பாதுகாப்பிற்காக  வந்து  நின்றான்..
               ‘அவங்க வரதுக்குள்ள  நான்  என்ன  பிரச்சனைன்னு  சுருக்கமா  சொல்லி முடிச்சிடறேன். கொஞ்சம் அமைதியா என்ன நான் சொல்றன்னு  கேளு…    என  சொல்ல ஆரம்பிக்கவும்  பொறுமையாக கேட்க   ஆரம்பித்தாள்.   அனைத்தையும்  கேட்டவுடன் அபர்ணாவிற்க்கு   கோபம் வர…
                 ‘உனக்கு  கொஞ்சமாவது அறிவிருக்கா..? நீயெல்லாம் ஒரு  கா…லேஜ்  லெக்சரர்  வேற..   இதெல்லாம் ஒரு பிரச்சனையா? யாரோ ஒருத்தன்  மாசக்கணக்கில    உன்னை   பாலோ  பண்றதே தப்பு..   இதுல அவனபார்த்தா  நல்லவனாத்  தெரியிறான்னு    அக்மார்க்   சர்டிபிகேட்  வேற கொடுக்கற..?   இதுல அவன் சொல்றவங்களைத்தான் நீ கல்யாணம்  பண்ணனும்   சொல்றான்.  அதை  சொல்ல  அவன் யாரு..? நான் கூட  காலேஜ்ல தான் ஏதோ  ஸ்டுடண்ஸ் பிரச்சனை   பண்ணிட்டாங்கன்னு  எப்படி  பயந்துபோய்ட்டேன் தெரியுமா..?  வரட்டும் அவன் எவனாயிருந்தாலும்  பார்த்துக்கலாம்.  அவன் இன்னைக்கு  வரலைன்னாலும் சரி..   இத இப்படியே  விட்டுடக்கூடாது. அப்பாகிட்ட  சொல்லி   ஒரு முடிவு கட்டிடலாம் சரியா…?” என்றாள்  அபர்ணா  தைரியமாக.
         ஆனந்திதான்  ‘ஏய்.. அவசரப்படாதடி.. அவனுக்கு  நம்ம   ஃபேமலிப்பத்தி  எல்லாம்  தெரிஞ்சிருக்கு.  நான் ஓகே. சொல்லலைன்னா நேரா அப்பாகிட்ட.. இல்லன்னா அம்மாகிட்டயாவது..   அவனே  பேசறேன்னு  சொல்றான்.” என  பதறினாள்.
    ‘ஓஹோ…  அந்த அளவுக்கு பண்றானா..? வரட்டும்  வரட்டும்..  இன்னைக்கே   அவனுக்கு ஒரு முடிவு கட்றேன்.. ” என்றாள்  சவாலாக.
     இதையெல்லாம்   ஒரு   ஓரத்தில்  நின்று கேட்டுக்  கொண்டிருந்தவனுக்கு..  சிரிப்பாக இருந்தது.  பார்ரா.. நம்மகிட்டதான் பூனை வேஷமா? வெளில புலிமாதிரியில்ல  இருக்கா…? அதுவும் வெறும் புலியில்லை..  பாயும்புலிடா சாமியோவ்..   என்று  பெருமையாக  நினைத்திருந்தான்.
    ’சிவா.. நீ எங்க இருக்கடா..? நான்  காபிடேக்கு வந்திட்டேன்..”  என்றான்  வெற்றிமாறன்.
     ‘உள்ள வா..   நானும் இங்கதான் இருக்கேன்..” என்று  ரிசப்சன் நோக்கி வந்தான். 
      சிவமுகிலனைப்  பார்த்த  வெற்றிமாறன்.. ‘என்னடா..  ரொம்ப  சந்தோஷமா இருக்கமாதிரி  தெரியுது..?”  என்றான்.
    ‘ஹ்ம்ம்.. அப்படியா தெரியுது..?  ஆனா.. நீ   ரொம்ப சந்தோஷப்படாத.. இது வேற ஒன்னு…”  என்றான்  சிவமுகிலன்.
    ‘சரி வந்துட்டாங்களா..? நீ  பார்த்துப்பேசிட்டியா..?” என்றான்.
    ‘வந்துட்டாங்க..  நானும் பார்த்திட்டேன்..  ஆனா நான் பார்த்தேன்னு அவங்களுக்குத்  தெரியாது…    அப்புறம்..   ஆனந்தியோட தங்கையும் கூட வந்திருக்கிறா..” என்றான்  சிரிப்போடு.
   ‘அவளுக்கு  ஏண்டா  பர்மிஷன் கொடுத்த.? தேவையில்லாத  தொல்லை..” என்றான்  கடுப்போடு.
    ‘ஓய்..  உன்வீட்டம்மா  அவங்க   தங்கையில்லாம   நான் வரமாட்டேன்னு  ரொம்ப  ஸ்ரிக்டா சொல்லிட்டாங்க..  நான் என்ன பண்ணட்டும்..?  நீயும் ரொம்ப அவசரப்படுத்துற.   ஒரு  முக்கியமான விசயம்.. அவங்க  தங்கை  என்னுடை  ஆபிஸ்ல  ஒர்க்  பண்ற   பொண்ணு.  உன்  கோபத்தையெல்லாம்  அந்த  பொண்ணுகிட்ட  காட்டக்கூடாது..‚” என்றான்  ஸ்டிரிக்டாக. 
     ‘ஆபிஸ்ல  ஒர்க்  பண்ற  பொண்ணுக்காக  நீ   சப்போர்ட்  பண்ற  மாதிரி  எனக்கு  தெரியலையே..   நீ  யாருக்காகவும்  இப்படி  சப்போர்ட்  பண்ணமாட்ட..   அதுவும்     எனக்கு  மச்சினிச்சியா  ஆகப்போறவ..    அவளைப்பத்தி   நானே  கவலைப்படலை..   அவளுக்காக  நீ  சப்போர்ட்  பண்றன்னா..   என்ன  கரெக்ட்  பண்ணிட்டியா?” என்றான்  சந்தேகத்தோடு.
      ‘உன் விஷயத்தில அவசரப்படற  மாதிரி என் விஷயத்தையும்  ஓபன் பண்ணிடாதப்பா..  அவ என்னுடைய ஆளுன்னு  எனக்கு மட்டும்தான்  தெரியும்..   இன்னும் அவளுக்கே  தெரியாது..  புரிஞ்சதா..?” என்றான்.
       ‘அப்படியே ஆகட்டும் சகல..” என்று வெற்றி தன்  சிரம்  தாழ்த்தி சிரிப்போடு   சொல்லவும்… சிவமுகிலனுக்கு  எல்லையில்லா மகிழ்ச்சி.
      ‘ஆமா..   இது எப்பயிருந்து..? சொல்லவேயில்ல..?”  என்றான்.
      ‘அத அப்புறமா பேசிக்கலாம் வெற்றி.. முதல்ல   நான்  சொல்றதைக்கேளு..”  என்று  ஆனந்தியும்  அபர்ணாவும்  பேசிக்கொண்டதை  சொன்னான்.  வெற்றிமாறனுக்கு சிரிப்புதான்  வந்தது.
      ‘பார்க்க  பச்சபுள்ள  மாதிரி  இருக்கா.  அவ  அக்காக்காக  இவ  என்னை  என்னன்னு  பார்ப்பாளாமா..?  சரி வா பார்த்துக்கலாம்..” என்றான்.
    ஆனந்தி  சிவமுகிலனுக்கு   போன் செய்தாள்.
    ‘இதோ  உள்ளே வந்திட்டோம்..” என்று  கட்  செய்தான்.   இருவரும் உள்ளே வந்ததும்..  அதிர்ச்சியில்  தானாக எழுந்து  நின்றாள் அபர்ணா.
    ‘சார்  நீ..ங்க  இங்க..  நான்தான்  நானே பார்த்துக்கிறேன்னு   சொன்னனே சார்..  இது கொஞ்சம் பர்சனல் சார்..  நீங்க  தயவு செய்து  போங்க  சார்..” என்று கெஞ்சினாள்.
     ‘அபர்ணா..“  என   ஆனந்தி சற்று சத்தமாக  அழைத்தாள்.  ஆனந்திக்கு  சிவமுகிலனும்  பக்கத்தில்  இல்லையென்றால்..  வெற்றியை  எப்படி  சமாளிப்பது  என்ற  பயம்.  தன்னிடம்  பேசும்  போதும்..  சிவமுகிலனின்  பார்வையில்  ஒரு  கன்னியம்  இருக்கும்.   அதனால்தான்  சிவமுகிலனிடத்தில்   வெற்றியை  பார்க்கும்போது..  நீங்களும்  வரவேண்டும்   என்று  சொல்லியிருந்தாள் ஆனந்தி.
     ‘ஆனந்தி…. இவர்தான் எங்க எம்.டி.சார்.” என்றாள்  அபர்ணா.
     அதிர்ச்சியில்.. ‘ஏய்  இவர்தாண்டி  எனக்கு டார்ச்சர் குடுக்கிறார்..” என்று     ஆனந்தி   எவ்வளவு  மெதுவாக சொன்னாலும்.. சிவமுகிலன் காதில் அது தெளிவாகக் கேட்டது.
     வெற்றிமாறன் ஆனந்தியிடம்.. ‘சாப்டியா…?” என்றான்.
     பிறகுதான் அபர்ணாவிற்க்கே  அடடா… நாம இதைக்கூட  கவனிக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டாள்.  அவள் சாப்பிட்டேன் என்று சொல்லி  தலையசைக்கவும்.. 
     வெற்றி.. ’உன்னைப்பார்த்தாலே அது தெரியுது. “ என்றான்    அவள் சொல்வது பொய் என்று  தெரிந்து   கொண்டவனாய்.
   பேரரை  அழைத்து..  வெஜிடெரியன்  ஐட்டம் சிலவற்றை  ஆர்டர் செய்தான்.
   ‘இல்ல..   எனக்கு வேண்டாம்..” என்றாள்  ஆனந்தி.
    சிவமுகிலன்..   ‘என்னை உங்க வெல்விசரா  நினைச்சிக்கோங்க.. நான் பில் பே  பண்றேன்.  தயவு செஞ்சி சாப்பிடுங்க…   எங்களை    வில்லன்  மாதிரி  பீல்  பண்ண வைக்காதிங்க..      உங்க அனுமதி   இல்லாம நாங்க   எதுமே  செய்யமாட்டோம்.   இட்ஸ்  எ  ப்ராமிஸ்..” என்றான்.
     ‘நீங்க எங்க  சூழ்நிலையை  கொஞ்சம்  யோசிச்சிப்  பாருங்க..   நீங்க யாருன்னு எங்களுக்கு  தெரியாது.  இதுல  வேற  நீங்க சொல்றவங்களை  கல்யாணம் பண்ணசொல்றிங்க.. என்னோட   கல்யாணத்தை  என்னோட  அப்பா அம்மாதான் முடிவு  பண்ணனும்..   இது எவ்ளோ  பெரிய விஷயம்..  நீங்க சொல்ற மாதிரி  நான்  செஞ்சா..   எங்க  பேரண்ட்ஸ்க்கு   இதவிட நாங்க பண்ற     பெரிய துரோகம்  வேற எதுவுமே  கிடையாது.  அவங்க எங்க மேல எவ்ளோ நம்பிக்கை  வைச்சிருக்காங்க..?  எங்களுக்கும் அவங்கதான் உலகம்..    அவங்க  சந்தோஷம்தான்  முக்கியம்.  நீங்க  நல்லா படிச்சிருக்கீங்க..    உங்களுக்கு  நான் சொல்ல  வரது புரியும்ன்னு   நம்புறேன்.”  என்றாள்  பொறுமையாக.
       நம்ம ஆனந்தி  இவ்ளோ.. நீளமா பேசுவான்னு இப்பதான் நமக்கு தெரியுது..   என   நினைத்திருந்தாள்  அபர்ணா.
      ‘முதல்ல என்னப் பாரு..”  என்றான்  வெற்றிமாறன்.  சங்கடத்தோடு  தலை  குனிந்திருந்தாள்  ஆனந்தி.   
     ‘சரி.. பார்க்கலைன்னா பரவாயில்லை..   நான் சொல்றதைக்  கொஞ்சம் கவனமாக்  கேளு..     எனக்கு  உன்னை  கண்டுபிடிக்கவே   மூனு வருஷமாச்சி..    உன்கிட்ட இந்த விஷயம் சொல்லி  இரண்டு வருசம் ஆச்சி..  அவள்  அதிர்ந்து பார்த்தாள்..  என்ன பார்க்குற..?  நல்லா நியாபகப்படுத்திப்பாரு..  நீ இந்த  வேலைக்கு   இன்ட்ர்வியூக்கு  வரும்போது.. உன் அம்மாகூட தான வந்த..?     அப்போ  உன்கிட்ட  வேலைகிடைச்சா   என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு  கேட்டேன்.      நீ பயந்ததும்..   சரி பயப்படாத.. வேலை  கிடைக்கலைன்னா  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு  சொன்னேனே…  நியாபகம்  இல்லையா…?”  என  சிரிப்போடு  வெற்றி  கேட்க..
      அவனா  நீ  என்பதுபோல் வெற்றியை  பார்த்துவைத்தாள்  ஆனந்தி.. 
      ஆனந்தியின்  பார்வை  புரிந்தாலும்.. ‘அதுக்கப்புறமும்  இந்த  இரண்டு வருசமா  உன்கிட்ட  கல்யாணம்  பண்ணிக்கலாம்னுதான  கேக்குறேன்.   அதுவும்  சிவா மூலமாத்தான்  கேட்டுருக்கேன்..  இப்பதான்  முதன்முறையா  உன்கிட்ட  இப்படி  தனியா வச்சி  பேசுறேன்..   இதைத்தவிர   வேற  எதாவது  உன்கிட்ட  தப்பா  பேசியிருக்கேனா..?   இல்ல..  நீ  வேலைசெய்யிற  இடம்..  அப்படியிப்படின்னு  உன்னை    டிஸ்டர்ப்  பண்ணியிருக்கேனா..?” என்று  கேள்வியாய்  பார்த்தான்.
        அபர்ணா..  ’இங்க பாருங்க..   நீங்க எப்படிதான்  சொன்னாலும்..    நீங்க பண்றது  அராஜகம்..  நீங்க பண்றதை   ஒருவாட்டி உங்க அப்பாம்மாகிட்ட  போய்  சொல்லிப்பாருங்க..     நீங்க  என்ன தப்பு பண்றிங்கன்னு..  அவங்க சொன்னா உங்களுக்கு புரியும்..    இது எல்லாத்துக்கும்  மேல..    இவளுக்கு  உங்களை  பிடிக்க வேணாமா..?   உங்களை  பிடிச்சிருந்தா   ஆனந்தி  எதுக்கு  என்னையும்   எங்க  பாஸைசையும்   கூட  வரவைக்கப்போறா..?  புரிஞ்சிக்கோங்க.”  என்றாள் சற்று அழுத்தமாக.
       ‘நான்  உன்கிட்ட   பேசலை..  வாயை  மூடு..” என  கோபக்குரலில்  சொன்னான்  வெற்றி.
       ‘நீ   என்  அக்காவை  மிரட்டுவ..   நான்  வாயை  மூடிட்டு  இருக்கனுமா..?” என  எகிறாள்   அபர்ணா.
       ‘இதுக்குத்தான்   தேவையில்லாத  தொல்லையெல்லாம்  அவாய்ட்  பண்ணசொன்னேன்..” என  சிவாவிடம்  உறுமினான் வெற்றி.
       ‘அபர்ணா..  ஒரு  பத்து  நிமிசம்  அமைதியா  இரு..  வெற்றி  பேசினதும்  கிளம்பிடுவிங்க..” என  அமைதிப்படுத்தினான் சிவமுகிலன்.
       ‘சார்..  யாரோ  ஒருத்தர்  பேசுறதை   நாங்க  ஏன்  கேட்கனும்..?” என  தயக்கமிருந்தாலும்  தனது  பாஸையும்  எதிர்த்தே  பேசினாள்.
       ‘கேட்கலன்னா..  வெற்றி  உங்க  வீட்டுக்கு  வந்து  பிரச்சனை  பண்ணுவார்  அபர்ணா..” என்றான்  புரியவைக்கும்  நோக்கோடு.
       ஆனந்தியும்  அபர்ணாவும்  திடுக்கிட்டு  வெற்றியை  பார்க்க..
       ‘சரி..  நான் இந்த விசயத்தை   இனிமேல்  உன்கிட்ட  பேசக்கூடாதுன்னா..   இரண்டு கண்டிசன்ஸ் இருக்கு..    ஒன்னும்  பெரிசா   பண்ணத்  தேவையில்லை..   என் சொந்த ஊர்  கிருஷ்ணகிரி..    என் அப்பாபேரு.. சந்திரவாணன்..    அம்மாபேரு மணி மாலா..   என்  பேரு வெற்றிமாறன்.  அப்புறம்  இந்த  ஒரு  வருசமா  உன்னை  நான்  பாலோ  பண்றது..  இப்போ   உன்கிட்ட என்ன  பேசினேனோ அது எல்லாம் ஒன்னுவிடாம  உங்கப்பாம்மாகிட்ட சொல்லனும்.   நீ  சொன்னதும்..  அவங்க ரியாக்சன் என்னன்னு   எனக்கு அப்படியே மறைக்காம  எனக்கு  சொல்லனும்  புரிஞ்சதா..?” என  மிரட்டும்  தோரணையில்  சொல்ல..
      அகல  விரித்த  கண்களோடு  அதிர்ச்சியாய்  பார்த்தாள்  ஆனந்தி.
     ‘நீ   சொல்லலைன்னாலும்..  நானே அவங்கள பார்த்து இன்னும் ரெண்டு நாள்ல  பேசத்தான்  போறேன்..  ஆனா..   உங்க  வீட்ல  இதுபத்தி  நானா  பேசினா..   நாங்க  ரெண்டுபேரும்  லவ்  பண்றோம்..   உங்ககிட்ட  சொல்ல  ஆனந்தி  பயப்படுறா..   எனக்கு  உங்க  பொண்ணை  கட்டிகொடுங்கன்னு    அராஜகமா  பேசுவேன்..   அப்புறம்  உனக்குத்தான்   சங்கடம்..” என   மிரட்ட..
        ‘ம்ம்..  சொல்லுவிங்க..  சொல்லுவிங்க..” என்று  அபர்ணா  முனுமுனுத்தாள்.  வெற்றியை  முறைத்துப்பார்த்து. 
    வெற்றி.. ‘டேய் சிவா   இந்த  சாப்பாட்டுக்கு   நீ பணம் குடுக்காதடா..   நான்தான்   குடுப்பேன்.” என்றான் காட்டமாக.

Advertisement