Advertisement

மெல்லிசை ?? – ( இறுதி )

“ஐயோ! நீ யாருன்னு சொல்லி தொலைடீ. சத்தியமா என்னால தாங்க முடியல என்றான்.”

“ஓகே! ரொம்ப நேரம் உன்னைய டென்ஷன் பண்ண விரும்பல. நானே சொல்லிடுறேன். தூரிக்கானு ஒரு பேரு ஞாபகம் இருக்காடா.”

“இருக்கு.அவளுக்கு என்ன ஆச்சு?”

” அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.”

“ரொம்ப சந்தோஷம். அதுக்குள்ள கல்யாணம் ஆயிடுச்சா. அதுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்.”

“அந்த கல்யாண மாப்பிள்ளை யாருன்னு கேட்கலையே?”

“அதைக்கேட்டு நான் என்ன பண்ண போறேன்.”

“நீதாண்டா கேட்டு தெரிஞ்சுக்கணும்.”

“சரி சொல்லித் தொலை. யாரு மாப்ள.”

“நீதாண்டா அந்த மாப்பிள்ளை.”

“என்ன நானா?” என அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

” ஆமாடா. என்னைய கல்யாணம் பண்ணிகிட்டா நீ தான அந்த மாப்பிள்ளை.”

அப்போ உன்னோட பேரு தான் தூரிகாவா?

“அந்த பேர் சேட் பண்றதுக்காக நான் வெச்சிக்கிட்டா பேருடா.”

” நானாவது என்னோட பேரையாவது உண்மையா சொன்னேன். நீ என்ன விட பெரிய ஃப்ராடா இருக்க.

“பேர்ல என்னடா இருக்கு. நீ உன் ஃப்ரெண்டோட போட்டோவ அனுப்பின. நான் என் ஃப்ரெண்டோட போட்டோவ அனுப்பினேன். ரெண்டுக்கும் சரியா போயிடுச்சு.

அதான் நேரில என்னைய பார்த்ததும் என்னை அடையாளம் தெரியல. அடையாளமே தெரியாம லவ் பண்ண ஒருத்தன் நீயா தான் இருப்ப.”

ஆதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. இந்த அட்ரஸ் எப்படி கண்டுபிடிச்ச.

“நீ என்னடா இப்படி இருக்க. சீப்பை ஓழிச்சி வச்சா கல்யாணம் நின்னுடுங்கிற மாதிரி இல்ல இருக்கு. சிம்ம ஓடச்சிட்டா இன்னும் உன்ன கண்டுபிடிக்க முடியாதா? தப்பு பண்ணா அடிக்கிறதுக்கு மட்டும் அண்ணன் இல்லடா. அந்த வாழ்க்கையே சரி பண்ணி கொடுக்கிறதும் அந்த அண்ணனா தான் இருப்பான்.”

“யாதவ் நீதான் போட்டு குடுத்தியா?” என ஆதி கேட்க.

“அவங்களே என்னைய தேடி கண்டுபிடிச்சி வீட்டுக்கு வந்துட்டாங்க டா” என்றான்.

“எப்படிடா?”

“அது அவங்களை தான் கேட்கணும்” என்றான்.

“நீ கொடுத்த ஃபோட்டோவ என் அண்ணன் கிட்ட காட்டினேன். உன்னை ரொம்ப லவ் பண்றேன்னு அழுதேன். அவன் அவனோட பிரெண்ட்ஸ்க்கு ஃபோட்டோவ வாட்ஸ்அப்ல அனுப்பினான். ஹோட்டல்ல சாப்பிடற இடத்தில யாதவ அண்ணா ஃப்ரெண்ஸோட பார்த்திருக்காங்க. அங்கேயே யாதவ பிடிச்சி மிரட்டி கேட்டிருக்காங்க. அவங்க தான் அப்போது நடந்த உண்மை எல்லாம் சொன்னாங்க. உன்னோட உண்மையான ஃபோட்டோஸ் காட்டினாங்க. அதுக்கு பிறகு வீட்டில அப்பா அம்மா கிட்ட அண்ணனே பேசி சம்மதம் வாங்கி எங்கப்பா உங்கப்பாகிட்ட பேசினு எல்லாம் ஒரே நாள்ல முடிஞ்சது”

“உன்னை எல்லாம் என் தங்கச்சிக்கு ஹஸ்பண்டுனு சொல்லவே எனக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும் இவ ஆசைபட்டுட்டா. யாதவுக்கு நீ ஃபோன் பண்ணி கல்யாணம்னு சொன்னியே . அப்போ நானும் பிரெண்ட்ஸோட யாதவ் பக்கத்துல தான் இருந்தோம். யாதவர் நாங்க இருந்தத காட்டி கொடுக்காம அழகா பேசி சமாளிச்சாங்க. தேங்க்ஸ் யாதவ்” என்றான்.

“அடப்பாவி. நீ எல்லாம் ஒரு ஃப்ரெண்டா. கூடவே இருந்து குழி பறிச்சுட்ட” என முறைத்தான்.

“முறைச்சா சரியா போகுமா? நீ பண்ணுன தப்புக்கெல்லாம் இவங்க பொண்ணு கொடுக்க நினைச்சதே பெரிய விஷயம் தான். அவங்க கால்ல விழுந்து கும்பிட்டு பிராயச்சித்தம் தேடிக்கோ. இந்தப் பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தெரிவிச்சது அதவிட பெரிய விஷயம். வேற ஒரு பொண்ணா இருந்தா நீ சொல்லுவியே அடிக்கடி பிராக்டிகலா யோசிக்கணும்னு. அப்படி யோசிச்சிட்டு உன்னைய தூக்கி வீசிட்டு போயிருப்பாங்க. இனிமே நீ யாரையும் ஏமாத்த வழி இல்ல மச்சி” என்றான்.

” நீயுமாடா புரிஞ்சுக்கல. லைஃப் பார்ட்னரா தனக்கு பிடிச்ச பொண்ணு வரணும்னு தானே ஆசைப்பட்டேன். மத்தபடி நான் எந்த தப்பும் பண்ணலையே.”

“பொண்ணுங்க என்ன கிள்ளுக்கீரையா? ஒவ்வொரு பொண்ணோட மனசா நீ கிள்ளி எறிய. உன்னைய எல்லாம் என் புள்ளனு சொல்லவே வெட்கமாயிருக்குடா. பொண்ணுங்களோட வாழ்க்கையில இப்படி கேவலமா நடந்திருக்க. அந்த பொண்ணுக்கு ஒரு அண்ணன் இருக்கிறதால கண்டுபிடிச்சி சேத்து வச்சுட்டாங்க. அண்ணன், தம்பி இல்லாத புள்ளைங்களோ ஏழை பொண்ணுங்களா இருந்து இப்படி ஏமாத்தி இருந்தா அந்தப் பாவம் நம்மள சும்மா விடுமா டா. உன்னை எல்லாம் பெத்ததுக்கு அப்பவே கொன்னு இருக்கலாம். தப்பு பண்ணிட்டேன் டா” என லட்சுமி லட்சுமி அழுதாள்.

“என்னை மன்னிச்சிடுங்கம்மா. நான் வேணும்னு பண்ணலம்மா” என்றான்.

“நீ கல்யாணம்னு சொன்னதும் உங்க அப்பாவோட ஃபோன் நம்பர யாதவ் கிட்ட இருந்து வாங்கி எல்லா விஷயத்தையும் நாங்க பேசிட்டோம். அன்னைக்கு நைட்டு தான் உன்ன பத்தி உண்மையான சுயரூபம் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிருக்கு. எல்லாம் ஒரே நேரத்தில நடந்ததால நல்லதா போய்டுச்சி. உங்க அப்பா கிளம்பி வர சொன்னதால என் தங்கச்சியை கூட்டிட்டு கிளம்பி வந்துட்டோம். கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது. ரிசப்ஷன் சென்னௌயிலயே வெச்சுக்கலாம்” என்றான் பரத்.

எல்லாமே முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல நம்ம என்ன பேசினாலும் வேலைக்கு ஆகாது. இவளும் வேணாம்னு தான் விட்டு தொலைச்சேன். கால சுத்தின பாம்பு மாதிரி திரும்ப வந்துட்டா. இனி எப்படி ஹேண்டில் பண்றதுனு தான் யோசிக்கணும். அடுத்து என்ன பண்ணலாம்னு பிராக்டிகலா யோசிக்கணும்” என எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான்.

“ஏதோ பையன் தெரியாம தப்பு பண்ணிட்டான். எல்லாரும் மன்னிச்சு ஏத்துக்கணும். பெரியவங்க நாமதான் சின்னப்பிள்ளைகள வழி நடத்தணும். கல்யாணம் பண்ணியாச்சு. இனி அவங்களே வாழ்க்கைய சரி பண்ணிக்குவாங்க. நீங்க எங்கள நம்பி பொண்ணு விட்டுட்டு போகலாம்” என்று கதிரேசன் கூறினார்.

“மாப்பிள்ள எப்ப சென்னை வருவாரு. அவருக்கு வேலை அங்க தானே” என தீப்ஷினியின் அப்பா மனோகரன் கேட்க.

“லீவ் போட்டு தான் வந்தான் சம்பந்தி. ஒரு வாரத்துல கிளம்பிடுவாங்க.”

” அப்போ ரிசப்ஷன் சென்னையில வச்சுக்கலாம். எங்க சொந்தக்காரங்க எல்லாம் அங்க தான் இருக்காங்க. எங்களுக்கும் அதுதான் வசதியா இருக்கும்” என்றார் மனோகரன்.

“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி செஞ்சுக்கலாம்” என கதிரேசன் கூறினார்.

“அப்பா” என ஆதி அழைக்க.

“நீ செஞ்ச வரைக்கும் போதும்டா. எதுவுமே பேசாத. இதுக்கு மேல யாவது எங்க பேச்சை கேட்டு நடந்துக்கோ” என்றார்.

ஆதி ஏதும் பேசாமல் மௌனமானான். அப்போது தான் தீப்ஷினியின் முகத்தை நன்றாக பார்த்தான். ‘நல்லா ஸ்டைலா சூப்பரா தான் இருக்கா. நம்ம செலக்சன் நல்லாதான் இருக்கு. கொஞ்சம் கேரக்டர தான் மாத்தணும்’ என நினைத்தான்.

” என்ன ஆதி பிராக்டிகலா யோசிக்கிறீங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“ஒருவாரம் இங்கேயே தங்கிட்டு கையோட மாப்பிள்ளைய அழைச்சிட்டு போயிடுங்க. கிராமத்தையும் சுத்தி பார்த்த மாதிரி இருக்கும்” என கதிரேசன் கூறினார்.

“அங்க எல்லாம் போட்டது போட்டபடி இருக்குங்க. நாங்க போய்த்தான் ஆகணும். உங்கள நம்பித்தான் எங்க பொண்ணு விட்டுட்டு போறான்” என மனோகரன் கூற.

“முன்ன பின்ன தெரியாதவங்கள நம்பி பொண்ண விட்டுட்டு வரமாட்டேன். நீங்க வேணா கிளம்புங்க. நான் இருந்து பொண்ணு மாப்பிள்ளைய கூட்டிட்டு வரேன்” என்றாள்.

“ரெண்டு நாளாவது இருங்க சம்பந்தி. இன்னிக்கு நல்ல நாளு. பொண்ணு மாப்பிள்ளையை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும். நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சி. அதை பத்தி இனி யோசிக்க வேணாம். ஆகப்போறது மட்டும் யோசிப்போம்” என்றார்.

“சரிங்க” என அனைவரும் இருந்தனர்.

” ஆதியோ இசை பார்த்தான்.

ஆரம்பத்திலேயே அவளோட காதல புரிஞ்சுகிட்டு இருந்திருந்தா நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கும். என்னோட முட்டாள்தனத்தால நானே எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிற்கிறேனே” என பார்த்தான்.

ஆதியின் முகத்தை பார்க்கவே கூடாது என்ற முடிவோடு இசை ஆதியை பார்ப்பதையே தவிர்த்தாள்.

கதிரேசன் ஊருக்குள் சென்று சமைப்பதற்கு ஆட்களை வரச்சொல்லி விருந்தினருக்கு சமைக்க ஆள் போட்டார்.

அதற்குள் கல்யாணம் ஆனது ஊருக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. திருமண செய்தி ஊருக்குள் அனைவருக்கும் தெரிந்தது.

அன்றைய இரவே மணமக்கள் இரு ஜோடிகளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று சாந்திமுகூர்த்த சம்பிரதாயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆதி இதை பற்றி எதுவும் பேச முடியாமல் தனது அறையில் அமர்ந்திருக்க.

தீப்ஷினி உள்ளே வந்தாள். “நீ எதிர்பார்க்கிற அளவுக்கு எதுவும் இன்னைக்கு நடக்கப் போறது இல்ல” என்றாள்.

“அப்படி ஒரு எண்ணம் எனக்கும் இல்லைடீ.

“கொஞ்ச நாள் போகட்டும். உன்னைய முழு மனசா ஏத்துக்க முடியாத பார்க்கலாம்” என்றாள்.

” அப்புறம் எதுக்குடீ தேடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டவ.”

“ஒத்த வரியில சொல்லனும்னா உன்னை பழி வாங்கதான்னு வச்சுக்கோ.”

“இதுல உன்னோட வாழ்க்கையும் தான் இருக்கு. அத மறந்துடாத.”

“இருக்கட்டும். இனி நம்மளோட வாழ்க்கை டாம் அண்ட் ஜெர்ரி போல தான் இருக்கும். மனச தேத்திக்கிட்டு அதுக்கு ரெடியா இருடா ஆதி” என்றாள்.

“இன்னைக்கு உனக்கு வலிக்கிற மாதிரி தான் நீ ஏமாத்தின ஒவ்வொருத்தருக்கும் வலிச்சிருக்கும். இப்ப தெரியுதாடா. வலினா என்னனு.”

“நான் வந்துட்டேன். இல்லன்னு சொல்லல. அதுக்காக உன்கிட்ட சாரி எல்லாம் கேட்க முடியாது. எப்ப உன் கழுத்துல தாலியை கட்டினேனோ அப்பவே நீ எனக்கு அடங்கி தான் நடக்கணும். தெரிஞ்சுக்கோ.”

“அப்படி வேற ஒரு ஆசை இருக்கா? பெரியவங்க முன்னாடி மட்டும் தான் உனக்கு மரியாதை. நாலு சுவத்துக்குள்ள வந்தா இந்த மரியாதை உனக்கு கிடையாதுடா. ஒவ்வொரு நாளும் நான் என்ன பண்ண போறேன்னு டென்ஷன்லயே இருக்கணும். அதே சமயம் என் சந்தோஷத்தையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். எப்ப கொஞ்சுவேன் எப்ப திட்டுவேனு நீ டெனீஷனாவே இருக்கணும். குட் நைட் ஆதி” என லைட்டை அணைத்துவிட்டு படுத்தாள்.

“வருணின் அறைக்கு தேவதை போல வந்த இசை முதல் முறையாக வருணைப் பார்த்து வெட்கப்பட்டாள். கன்னக் கதுப்புகள் சிவந்து காணப்பட்டது. தன்னவளின் முகத்தை பார்த்த வருணுக்கும் வெட்கம் வந்தது.

“மாமா ஒன்னு கேட்கவா” என்றாள்.

“கேளு இசை” என்றான்.

” ஒரு வார்த்தை உங்க காதலை முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கக் கூடாதா?”

“சொல்லனும்னு பலமுறை முயற்சி பண்ணினேன் இசை. ஆனா என்னோட ஊனம் தான் அதுக்கு தடையா இருந்தது.”

” ஊனம் வாழ்க்கையில ஒரு தடையே இல்ல மாமா. படிச்ச நீங்களே இப்படி யோசிக்கலாமா? அப்படி நினைக்கிறது முதல் தப்பு. அந்த எண்ணத்தை மாற்றிக்கோங்க மாமா.”

“அதனாலதான் நீ வந்துட்டியே இசை. இனி அப்படி ஒரு எண்ணமே என் மனசுல வராது. அந்த எண்ணத்தை தூக்கி எறிஞ்சிட்டேன் இசை.

என் லஃப்ல எப்போதும் இனி இசைங்கிற தென்றல் வீசிட்டே இருக்கும்” என தன்னவளின் கரங்களைப் பற்றினான். அவர்களது இல்வாழ்க்கையை அழகாக இனிதே தொடங்கியது.

அதே சமயம் ஜெய்யும், சம்யுக்தாவும் நடந்த சம்பவங்களில் இருந்து மீண்டு வந்தனர். அன்றைய தினம் அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

“ஜெய் இந்த ஆறு மாசம் போன உடனே நாம திரும்ப பெங்களூர் போய்டலாமே” என்றாள்.

“இன்னும் ஆறு மாசம் இருக்கு. அப்போ முடிவு பண்ணலாம். நீ கவலைப்படாத. உன்னையே நான் சந்தோஷமா வச்சிப்பேன் டார்லிங்” என்றான்.

ஒரு ஆண்டுகளுக்கு பிறகு ஆதி தீப்ஷினியுடன் சென்னையில் செட்டில் ஆகி இருந்தான். ஒவ்வொரு நாளும் தீப்ஷினியிடம் திட்டுவாங்காத நிமிடங்களே இல்லை. அவ்வப்போது சிறுசிறு அடிகளையும் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை புரிந்து கொண்டு அவளோடு மகிழ்ச்சியாக இருக்க தொடங்கி இருந்தான்.

தீப்ஷினியை அவனாக புரிந்து கொண்டான். வாழ்க்கை பாடத்தையும் புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கொடுத்து வாழப்பழகினான். தான் செய்த தவறை எண்ணி வருந்தினான். ஆனால் ஸாரி கேட்க மட்டும் அவனது தன்மானம் இன்று வரை இடம் கொடுக்கவில்லை.

இப்போது தீப்ஷினி மூன்று மாதம் தாய்மை அடைந்திருந்தாள். ஆதிக்கு இப்போது முழுப்பொறுப்பு வந்திருந்தது. ஆனாலும் அவனது மனதின் ஒரு ஓரத்தில் இசையின் மீதான காதல் இன்றளவும் ஒலிந்து கொண்டு தான் இருந்தது.

‘இன்று மட்டும் அல்ல. ஆதியின் இறுதி மூச்சு வரை இசை மீதான காதல் மறையாது. அழகான தென்றலின் அருமை தெரியாமல் என் தவறினால் புயலை (தீப்ஷினி) உள்வாங்கி கொண்டேன். அது எப்போது புயலடிக்கும். எப்போது அமைதியாகும்னே தெரியாம ஒவ்வொரு நாளும் வாங்கி கட்டிக்கிறனே’ என நினைத்தான்.

“டேய்! ஆதி அங்க என்னடா கனவு. வந்து கொஞ்சம் பால் ஆத்தி குடுடா. அப்படியே சட்னி ஆட்டிவச்சிடு. அப்பறமா இட்லி மட்டும் சூடா வச்சி கொடுடா” என்றாள்.

இதெல்லாம் எனக்கு தேவை தாண்டி. ம்ம்ம்ம். செஞ்சு தான ஆகணும் என கிச்சனுக்குள் சென்று வேலையை தொடங்கினான்.

“யாதவ் கால் பண்ண. டேய் நீ மட்டும் என் கைல கிடச்ச அவ்ளோ தான். ஓடிப்போய்டு நாயே” என்றான்.

“ஹஹஹ. ஆதி ரொம்ப சமாளிக்காத. என் தங்கச்சி சமைக்க சொல்லி ஆர்டர் போட்டாங்களா? சரி சரி வேலைய முடி மச்சி. அப்புறமா பேசறேன்” என இணைப்பை துண்டித்தான்.

“எல்லாம் இந்த டிக்ஸனரியால வந்த வினை. காதல்னால ஒரு சிங்கத்தையே சாச்சிட்டியேடி” என புலம்பிக் கொண்டு சட்னிக்கு ரெடி பண்ணத் தொடங்கினான்.

பெங்களூர் போக நினைத்த சம்யுக்தா மனம் மாறி கிராமத்து வாழ்க்கையே நிம்மதி எனும் முடிவிற்கு வந்தாள்.

அங்கேயே விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு மாட்டுப்பண்ணை வைத்து வெற்றிகரமாக நடந்தத் தொடங்கி இருந்தார்கள். ஜெய்யும் கிராமத்து மக்களுக்கு விவசாய கடன் சார்ந்த விழிப்புணர்வு கொடுத்து வழி நடத்தினான். அவர்களின் பிள்ளைகளின் கல்லூரி படிப்பு சார்ந்த விஷயங்களை சொல்லி கொடுத்தான். தன்னால் முடிந்த உதவிகளை செய்தான். இதனால் மக்கள் மனதில் உயர்ந்து நின்றான்.

குழந்தைகள் படிப்பிலும் சரி, ஒழுக்கத்திலும் சரி சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டனர். தாத்தா பாட்டி அரவணைப்பில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

மல்லிகா, லட்சுமி, ரகுராம், மஞ்சு அனைவரும் எப்போதும் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.

இசைக்கு இது ஏழாவது மாதம். குடும்பமே வளைகாப்பு நடத்த முடிவு செய்து அதை விழா போல கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.

வருண் டெட் எக்ஸாமில் செலக்ட் ஆக அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து இருந்தான்.

இசை முன்பைவிட இப்போது இன்னும் மெருகேறி இருந்தாள். பால்நிலா முகத்தை நாள் முழுவதும் பார்க்கத் தோன்றும். அத்தனை அழகு.

“இசை இத்தனை அழகும் அன்பும் எனக்கே சொந்தம்னு நினைக்கும் போது சிறகில்லாம வானத்தில பறக்கற மாதிரி ஃபீல் ஆகுதுடா செல்லம்.”

“மாமா நீங்க கிடைச்சது எனக்கு கடவுள் கொடுத்த வரம். என் உயிர் நீங்க தான் மாமா” என்றாள்.

“என் உயிர் தொடும் மெல்லிசை” நீ தான் செல்லம். “என் வாழ்க்கைல இசை எனும் தென்றலாய் நீ வந்த பிறகு தான் காதலெனும் மெல்லிய சாரல் வரத் தொடங்கி வாழ்க்கையே வசந்தமா மாறி இருக்கிறது” என தன்னவளின் கரங்களை பற்றுகிறான் வருணன்.

வருணனின் இந்த காதல் மழையில் மெல்லிசையாய் கரைந்து தன்னவனின் அன்பில் அடைக்கலமானாள்.

இருவரின் வாழ்க்கையும் காதலெனும் இதமான மெல்லிசயால் பின்னப்பட்டு அழகாய் மாறியது.

???? ….சுபம்… ????

மீண்டும் அடுத்த கதையோடு உங்களை சந்திக்கிறேன்… உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி தங்கங்களே..

Advertisement