Advertisement

எப்படிடா இவ்வளவு அழுத்தமா சொல்ற.

டேய்! நானென்ன நேரிலயா பாக்க போறேன். நாங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருப்போம். நீ வேலைய பாருடா. ஷாப்பிங் போறது சின்ன சின்ன சந்தோஷம் அதையெல்லாம் இல்லன்னு சொல்ல கூடாது.

“சரி டா மச்சி நீ சந்தோசமா போயிட்டு வா. என்ன ஃப்ராடு தனம் வேணாலும் பண்ணு. இதுக்கு அனுபவிப்படா” என்றான்.

சரி சரி.. கூல் மச்சி.. வேலைய பாரு. அந்த மேனேஜர் வந்த கத்துவான்.

“நான் வேலையை தான் பார்த்துகிட்டு இருக்கேன். நீ முதல்ல உன்னோட வேலையை பாரு” என்றான்.

ஆதி உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.

இன்னும் என்னடா கேக்க போற.

உங்க அத்தை பொண்ணு பேசினாங்களே. அவங்க பேரு?

ஆமா. அவ பேரு இசை.

அவங்கள பத்தி நீ என்ன நினைக்கிற.

அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான்.

அந்தப் பொண்ண தான் உங்க அம்மா உனக்கு நிச்சயம் பண்ண போறாங்களோ?

ஆமாண்டா. அப்படித்தான் கனவு கண்டுட்டு இருக்காங்க.

பொண்ணு பாக்க எப்படி இருப்பாங்க.

நல்லாத்தான் இருப்பா. ஆனா கருப்பா இருப்பா.

இந்த காலத்துல கலர் எல்லாம் ஒரு குறையா சொல்லவே முடியாது டா. கருப்பா இருக்கவங்க மனசு வெள்ளையா இருக்கும். ஆனா வெள்ளையா இருக்கிறவங்களோட மனசு வெள்ளையாவே இருக்கும்னு நம்பரையா?

டேய்! அவளுக்கு எந்த இடத்தில என்ன பேசறதுன்னு தெரியாது. சிட்டி லைஃப்க்கு அவ ஒத்து வரமாட்டா.

இங்க எல்லாருமே சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பழகுவாங்க. அவளுக்கு ஒரு மண்ணும் தெரியாது டா.

அது போகப் போக சரி பண்ணிக்கலாம். லைஃப்னா என்னன்னு தெரியாமலே லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ற ஒரே ஆள் நீயா தாண்டா இருப்ப.

“அடே சாமி. உன் தத்துவம் எல்லாம் எனக்கு வேண்டாம். அட்வைஸ் பண்றது எனக்கு பிடிக்காது. போய் வேலைய பாருடா” என்றான் ஆதி.

அன்று மாலை மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

“சரிடா என் ஆளு ஷாப்பிங் வர சொன்னா. நான் பைக்கை எடுத்திட்டு அப்படியே போயிட்டு அப்படியே நைட்டு டிஃபன் வெளியிலேயே சாப்பிட்டு அப்புறமா ரூமுக்கு வரேன்” என்றான்.

என்னமோ நெஜமாவே நேர்ல ஷாப்பிங் போய் கூடவே நின்னு வாங்கித்தர மாதிரியே நடிக்கிறது. உன் புத்தி தான் தெரிஞ்சிடுச்சே. பார்க்குல போய் உட்கார்ந்துட்டு வீடியோ கால்ல டிரஸ்ஸை செலக்ட் பண்ண வேண்டியது. இந்த கருமத்த ரூம்ல வச்சு பண்ணினா என்ன?

நீ இப்படி வேற நினைச்சுட்டு இருக்கியா? வீடியோ கால் பண்ண மாட்டேன் டா. அவ கிட்ட வரேன்னு தான் சொல்லுவேன். ஆனா போக மாட்டேன். நானும் சென்னையில் தான் இருக்கேன்னு நிறைய தடவை நேரில் மீட் பண்ண வர சொன்னா. ஆனா இப்ப வரைக்கும் வரேன்னு சொல்லுவேன். ஆனா போக மாட்டேன். இப்பவும் அப்படித்தான் பண்ணுவேன். பார்க்குக்கு நான் போறது வேற விஷயம்டா.

“என்னமோ பண்றா. பெண் பாவம் பொல்லாதது. பாத்து நடந்துக்கோ. என் தலையெழுத்து. உன் கூடலாம் இருக்கனும்னு” என தனக்குள் புலம்பிக் கொண்டான்.

உனக்கு என்ன மச்சி. தலையெழுத்து சூப்பரா இருக்கு.

ஆமா. இவன் விதி கடவுள். சொல்லிட்டான். வயிறு வேற இப்பவே பசிக்குது.

நேரா ரூமுக்கு போ. காலைல வச்ச சாப்பாடு ரூம்ல இருக்கு. வேற எதுவும் வேணும்னா நான் வரும் போது வாங்கிட்டு வரேன்.

“நான் அதையே சாப்பிட்டுகிறேன். எனக்கு எதுவும் வேண்டாம்” என்றான்.

ரொம்ப சந்தோஷம். நான் வர லேட்டாகும். நீ சாப்பிட்டு பாத்திரத்த கழுவி வச்சிடு மச்சி.

“உன் கூட இருக்கிற பாவத்துக்கு இதையும் நான் சேர்ந்து தான பண்ணனும். நீ கெளம்பு” என்றான்.

“நீ எப்படிடா போவ. ஆட்டோலயா?” என ஆதி கேட்க.

“அதான் கலட்டி விட்டுட்டு போறதுன்னு முடிவு ஆயிடுச்சு.

நான் எப்படி போனா உனக்கென்ன? உன் வேலைய பார்த்துட்டு கெளம்புடா” என்று சொல்லிவிட்டு யாதவ் கிளம்பினான்.

“நல்லது சொன்னா கோவத்த பாரு” என சொல்லிக் கொண்டே ஆதி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து பார்க்கை நோக்கி சென்றான்.

அங்கு சென்றவன் தனது செல்போனை ப்ளைட் மோடில் போட்டுவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து சுற்றுச்சூழலை மெல்ல ரசிக்கத் தொடங்கினான்.

அரை மணி நேரம் அமர்ந்தவன் மெதுவாக வெளியே வந்து பைக்கை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த ஹோட்டலுக்கு வந்தான்.

சூடாக பரோட்டா, ஆனியன் தோசை, ஒரு ஆம்லெட் ஒரு ஆஃப் ஆயில் வாங்கி உள்ளே தள்ளிவிட்டு நிம்மதியாக தனது அறைக்கு வந்தான்.

என்னடா அதுக்குள்ளே ஷாப்பிங் முடிஞ்சதா? ஆதி .

அதெல்லாம் சூப்பரா முடிஞ்சது மச்சி.

அப்போ அவள நேர்ல மீட் பண்ணல. அப்படி தானே.

“நான் அப்படி ஒரு தப்ப பண்ணுவேன்னு நீ நினைக்கிறாயா? மச்சி. அதனால தாண் டா நீ இன்னும் வளரவே இல்லை”

அப்ப வீடியோக்கால் பண்ணலையா?

நான் தான் உன் போட்டோ அனுப்பி வெச்சி இருக்கேனே. நான் எப்படி அவளுக்கு வீடியோ கால் பண்ண முடியும்.

அப்ப என்னதான் பண்ணி தொலச்ச. வழக்கம்போல கொஞ்ச நேரம் பார்க்குல போய் நிம்மதியா உட்கார்ந்து இருந்தேன். ஃபோனை ப்ளைட்மோட்ல போட்டேன். இப்பவரை ஆன் பண்ணல. நிம்மதியா சாப்பிட்டு கிளம்பி வந்துட்டேன்.

அவ ஃபோன் மேல ஃபோன் பண்ணி இருப்பாளே டா.

பண்ணிட்டு போறா. விடுடா. இவளுங்க சாப்பிங் பண்றதுக்கு எல்லாம் நம்ம ஊருகாயாக முடியாது.

அப்புறம் ஏன்டா அவ கிட்ட வரேன்னு சொன்ன.

ஒவ்வொன்னுக்கும் உனக்கு விளக்கம் சொல்ல முடியாது. போடா. ட்யூப் லைட்டு.

அப்போது தான் ஆதி தனது செல்போனை எடுத்து ஆன் பண்ணினான்.

மிர்த்திக்காவிடம் இருந்து இருப்தைந்து மிஸ்டு கால் வந்திருந்தது. இவனை திட்டி மெசேஜ் வந்த வண்ணம் இருந்தது.

இதெல்லாம் உனக்கு தேவையாடா.

ஹிக்கும். அடப்போடா. ஒருத்தி சண்டை போட்டா பக்கம் பக்கமாக மெசேஜ் பண்ணியே கொல்றா. அவளை ஓரம் கட்டிட்டேன்.

அடப்பாவி..

இவ எப்ப பார்த்தாலும் ஷாப்பிங் மேக்கப்னு திரியறா. இருக்க வேண்டியது தான். ஆனா ரொம்ப ஓவரா இருக்கா. இவ பின்னாடி எல்லாம் நம்மளால கூஜா தூக்க முடியாது. சோ இவளையும் கட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்.

பொண்ணுங்களோட லைஃப் உனக்கு விளையாட்ட போயிடுச்சா. லவ் பண்ணிட்டு உன் இஷ்டத்துக்கு கழட்டிவிட்டு போனா அவங்க சும்மா இருப்பாங்களானு நினைக்கிறியா?

அவளுங்களால என்ன பண்ணிட முடியும்னு நினைக்கிற. மீறி அவ ஏதாவது பண்ணனும்னு நெனச்சா அவ போட்டோஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு.

ச்ச்சீ. நீ இவ்ளோ கேவலமானவனா ஆதி.

நான் நல்லவன் தான். சும்மா இதெல்லாம் டைம் பாஸ்க்கு தாண்டா.

பொண்ணுங்க போட்டோவ வச்சி பிளாக்மெயில் பண்ற அளவுக்கு நீ அசிங்கமானவன்னு நான் நினைச்சு கூட பாக்கல ஆதி.

டேய்! ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். சத்தியமா இது வரைக்கும் ஒரு பொண்ண கூட நான் பிளாக்மெயில் பண்ணதே கிடையாது டா மச்சி. காட் ப்ராமிஸ்டா.

எனக்கும் வயசு ஆகுது. எனக்கும் ஆசைகள் இருக்கும். ஏதோ இந்த மாதிரி போட்டோஸ பார்த்து ஏக்கத்தை தீத்துக்க வேண்டியது தான். அதுக்காக மிஸ் யூஸ் பண்ண மாட்டேன் டா. அந்த அளவுக்கு நான் கெட்டவனும் கிடையாது.

பண்றது தப்பு. அதை நியாயப்படுத்தி வேற பேசுற. உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்ல.

“இல்லடா. எனக்கு பிடிக்கலனா நான் கட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். அவ்வளவுதான்டா. நான் இப்படித்தான்” என்றான் ஆதி.

மீண்டும் மிர்த்திகாவிடமிருந்து போன் வர.

“எப்படி சமாளிக்கலாம்” என்று ஆதி யோசித்துக் கொண்டே போனேன். காலை அட்டன் செய்தவன் சாரிடி. நீ சொன்ன டைமுக்கு என்னால வர முடியல.

உன் சாரி ஒண்ணும் எனக்கு தேவையில்லடா.

ஏய் ப்ளீஸ். பர்ஸ்ட் நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுடி.

இதுக்கு மேல புதுசா என்ன பொய் யோசிச்சு வச்சிருக்க. சொல்லுடா.

“என் ஃப்ரெண்டுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சி” என்றான்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கிட்டே தான் இருக்கிற. உன்ன பொறுத்தவரைக்கும் லவ் உனக்கு டைம் பாஸ் . அவ்ளோ தானே. எனக்கு நல்லாவே தெரியுதுடா.

இதுக்கு மேல என்கிட்ட பொய் பேசாத டா.

உன் கிட்ட போய் நான் பொய் சொல்லுவேனா.

இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாத. நான் நிறைய டைம் பாத்துட்டேன். நீ இப்படியே தான் பண்ற. இன்னைக்கு வரைக்கும் நேர்ல மீட் பண்ண வர மாட்டேங்குற. இதுக்கு என்ன அர்த்தம்.

எனக்கு டைம் இல்லடி. நான் ரொம்ப பிஸி. இன்னைக்கு ஃப்ரெண்டுக்கு ஆக்ஸிடென்ட். சோ வர முடியல. நம்புடி.

நீ சொல்ற பொய்ய அப்படியே நம்பற அளவுக்கு படிப்பறிவு இல்லாத நான் இல்ல.

நான் சொல்றத நம்பாதவ எனக்கு உண்மையான லவ்வரா இருக்க முடியாது.

உன்கிட்ட வந்து கெஞ்சி கொஞ்சி லவ்ர்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லடா. இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ.

‘பெரிய தலைவலியா இருக்காளே’ என நினைத்தவன், நான் சொல்றத கொஞ்சம் கேளுடி.

போதும் நிறுத்துடா. இன்னைக்காவது மீட் பண்ணுவோம்னு எவ்ளோ ஆசையா எதிர் பார்த்துட்டு இருந்தேன். தெரியுமாடா.

நான் வேணும்னு பண்லடி.

உனக்கு காதல்னா என்னன்னு தெரியுமாடா. அப்படி ஒரு உணர்வே உன்கிட்ட ஒரு பர்சண்ட் கூட இல்லன்னு இன்னைக்கு முழுசா புரிஞ்சுக்கிட்டேன் டா.

நீ தப்பா புரிஞ்சிகிட்டு பேசற. வேணான்டி.

“இதுக்கு மேலயும் என்னைய ஏமாத்த நினைக்காத. வைடா ஃபோன” என மிர்த்திகா ஃபோனை கட் பண்ணினாள்.

மெல்லிசை தொடரும்…..

Advertisement