Advertisement

அம்மா யோசிச்சு தான் பேசறீங்களா? அவசரப்படாதீங்கம்மா.

நல்லா யோசிச்சு தான் பண்றேன் டா.

“இது என்னோட வாழ்க்கைம்மா. உங்க  இஷ்டத்துக்கு என்னைய கேட்காம முடிவு பண்ணுவீங்களா?” என மூச்சுவிடாமல் பேசினான்.

அவனது வார்த்தையில் இருந்த கோபம் பதிலிலேயே தெரிந்தது.

ஆதி உங்க  அத்தை, உங்க அப்பா, இசை எல்லாரும் பக்கத்துல தான் இருக்காங்க.

“இருந்துட்டு போகட்டும் எனக்கென” என்றான்.

“நாங்க ஏற்கனவே சின்ன வயசுல முடிவு பண்ணுவது தான்  ஆதி…”

“அம்மா! அது சின்ன வயசுல முடிவு பண்ணது.  இப்ப நான் வளர்ந்து பெரிய பையனாகிட்டேன்…”

‘இவனை இதுக்கு மேல பேச விட்டா சரிப்பாடாது.  இசைய நேர்ல பார்த்தா வழிக்கு வந்துடுவான்’ என நினைத்த  லட்சுமி, வர  வைகாசி மாசம் உனக்கும் இசைக்கும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறோம் ஆதி.  அதுக்கு முன்னாடி நிச்சயதார்த்தம் வைக்கணும்.

“என்னம்மா சொல்ற. அடுக்கடுக்கா தலையில இடிய இறக்கிட்டு இருக்க.  நான் சென்னையில ஒர்க் பண்றேன். என்னோட படிப்புக்கு ஏத்த மாதிரி பொண்ணுதான் எனக்கு செட் ஆகும்…”

“நீ எதுவும் பேசாத ஆதி.  உங்க அண்ணன் குடும்பத்தோடு இந்த வாரம் வரானாம்.  நீயும்  கிளம்பி வந்துடு” என கூறிவிட்டு ஃபோனை கட் பண்ணினாள்.

“என்ன அண்ணி மருமகன் என்ன சொல்றாங்க” என மல்லிகா கேட்க.

என்ன சொல்லுவான் மல்லிகா.  அவனுக்கு ஒரே சந்தோஷம். என்ன பேசறதுன்னு தெரியாம பேசறான். அவனும் வரட்டும். எல்லாரையும் வச்சி நிச்சயதார்த்த தேதிய முடிவு பண்ணிடுவோம். உனக்கு சந்தோஷம்தானே.

“ரொம்ப சந்தோஷம் அண்ணி. எனக்கு இது போதும்” என பெருமூச்சு விட்டாள் மல்லிகா.

இசையின் மனதிற்குள் ஆதியின் மீதான அழகான காதல் ஏற்கனவே வேர் ஊன்றி இருந்தாலும் இப்பொழுது மெல்ல மெல்ல விருட்சமாக வளர தொடங்கியது.

“மருமகளே” என கதிரேசனி இசையைப் பார்க்க.

அவரது வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தவளாய் பதிலேதும் பேசாமல் வெட்கத்தோடு தலை குனிந்தாள்.

“வாய திறந்து வார்த்தைய சொன்னா தானம்மா எங்களுக்கு வெளங்கும்…”

“எல்லாம் உங்க முடிவுதான் மாமா” என  மெதுவான குரலில் இசை கூறினாள்.

“இப்படி ஒரு மருமக கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் இல்ல. என்ன மல்லிகா நான் சொல்றது” என கதிரேசன் கூற.

“ஆமாண்ணே.  நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்” என மல்லிகாவும் அவரது வார்த்தைக்கு பதிலளித்தாள்.

“அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் விட்டு கொடுப்பீங்களா? நீங்க சரியாத்தான் விட்டு கொடுக்காம பேசுவிங்க” என்றாள் லட்சுமி.

“அப்போது அங்கு கதிரேசனின் தம்பி ரகுராம் வந்தார்.  என்னை ஒரே சந்தோசமா தெரியுது. என்ன விஷயம்” எனக் கேட்டார்.

“பெரியவன்  ஊர்ல இருந்து வரானாம். அதுவும் குடும்பத்தோட. அதான் லட்சுமி ஒரே சந்தோசமா இருக்கா” எனக் கூறிய கதிரேசன், “இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்” என கண்களால் அவர்களுக்கு ஜாடை காட்டினான்.

அவரது கண் அசைவுகளை புரிந்து கொண்ட லட்சுமியும், மல்லிகாவும் அப்படியே பேசி சமாளித்தனர்.

“இசை! உங்க சின்னத்தை உன்ன  ரொம்ப நேரமா காணும்னு கேட்டுட்டு இருந்தா.  என்னன்னு கேட்டு வந்துடும்மா” என ரகுராம் கூறினார்.

இசை தனது தாயையும் மாமாவையும்  பார்க்க.

“கதிரேசன் போயிட்டு வா” என தலையசைக்க.

“எனக்கே தெரியாம வீட்டில ஏதேதோ பண்றிங்க. கண்ணுல கஞ்சிய தவிர எதுவுமே காட்டல” என தனது மனைவி லட்சுமியை பார்க்க.

கஞ்சிக்கே சமைய கட்ட விட்டு வெளிய வர மாட்டேங்கறிங்க. நேத்து இராத்திரி நீங்க தோட்டத்துக்கு போன பிறகு நாங்க லட்டு  பிடிச்சி வச்சிட்டு தான் தூங்க வந்தோம்.

“தூங்க வந்தோமா? அப்ப எங்க  செஞ்சிங்க…”

சின்னவரு வீட்டில தான் செஞ்சி வச்சோம். மஞ்சு கூப்பிட்டானு நானும் மல்லிகாவும் போனோம். கொஞ்சம் இங்கயும் மஞ்சு குடுத்து விட்டா.

“அது சரி. அப்பவே நெனச்சேன். ஏதோ வாசம் வருதுனு. நான் கவனிச்சிக்கிறேன்” என லட்சுமியைப் பார்த்தார்.

“இன்னும் சின்ன பிள்ளையாட்டம் தான் உங்க அண்ணன். பாரு மல்லிகா” என லட்சுமி சிரித்தாள்.

“உங்க அத்தை  ஏதோ  செஞ்சு வச்சிட்டு உனக்கு எடுத்து வச்சி இருக்காளாம்…”

“சரிங்க மாமா. இதோ போறேன்” என்றவள் தனது தாயிடமும் கூறிவிட்டு  அந்த பெரிய வீட்டின்  பின் பக்கம் உள்ள மற்றொரு அழகான வீட்டிற்குள்  நுழைந்தாள்.

“அத்தை… அத்தை.  என்ன பண்றீங்க” என குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் அத்தையை தேடினாள்.

“இசை! அம்மா உனக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இப்ப தான்  கிணத்தடிக்கு துணி துவைக்க போனாங்க” என்றான் வருணன். என்கிற வருண்.

ரகுராம்,  மஞ்சு தம்பதியினரின் ஒரே தவப்புதல்வன்.  அனைவரும் சுருக்கமாக வருண் என்றே அழைப்பார்கள்.  வலது கால் மட்டும் ஊனமாக இருக்கும். மனதளவில் பழக மென்மையானவன்.  தனது விடாமுயற்சியால் பி.லிட்  வித் பி.எட் படித்து முடித்து   டெட் எக்ஸாமிற்காக தீவிரமாக படித்துக் கொண்டிருப்பவன்.

அவனது மனம் போலவே அவனும் அழகானவன். அதைவிட அன்பானவன்.  இசை என்றால் அவனுக்கு உயிர். ஆனால் இதுவரை ஒரு முறை கூட இசையிடம்  வெளியில் சொல்லியதில்லை.

அவனது  ஊனத்தினால் அவனுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை அவனது காதலை வெளிப்படுத்த விடவில்லை.

“சரிங்க மாமா.  ஒண்ணும் பிரச்சனை இல்ல.  அத்தை எப்படியும்  எனக்காக எடுத்து வச்சிருப்பாங்க” என நேராக கிச்சனுக்குள் சென்றாள். மூடி வைத்திருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக தேடினாள்.

அவள் நினைத்தது போலவே ஒரு பாத்திரத்தில் நெய் மணம் கமல லட்டு பிடித்து வைத்திருந்தார் மஞ்சு.

அதை அப்படியே எடுத்துக் கொண்டு இசை ஹாலுக்கு வந்தாள். அவசரமாக ஒன்றை வாயில் எடுத்து போட்டு கொண்டாள்.

“ம்ம்ம்ம்.  சூப்பரா இருக்கு மாமா. நீங்க சாப்பிட்டீங்களா?…”

“இல்ல இசை…”

“இந்தாங்க. எடுத்துக்கோங்க மாமா” என பாத்திரத்தில் இருந்த லட்டை நீட்டினாள்.

“இல்ல இசையென்னும் அப்புறமா எடுத்துக்கிறேன்” என்று வருண்  கூற.

இப்படி எல்லாம் சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க. இந்தாங்க என வலுக்கட்டாயமாக அவனுக்குத் லட்டை எடுத்து தன் கையால் ஊட்டி விட்டாள்.

அவளிடம் ஏற்பட்ட  நெருக்கத்தில் இதயம் சில்லிட்டது.  அவளின் கை பொம்மையாய் வாயைத் திறந்தான்.

“மாமா இன்னும் வேணுமா?”

இனிப்பின் சுவையை விட இசையின் அன்பு அவனுக்கு தித்திப்பாக இருப்பதாக உணர்ந்தான்.

“இ..இல்.. இல்ல.. இசை.. எனக்கு இதுவே போதும்” என்றான்.

‘ஒருமுறையாவது தைரியமா நம்ம காதலை சொல்லி விடலாமா?’ என நினைத்தான்.

“ஆனால் இசை என்னைய பத்தி  என்ன நினைப்பாளோ தெரியலையே. எனக்கு இசையோடு சேர்ந்து வாழும் வரம் கிடைக்குமா?” என  சற்று  பயமும், தயக்கமும் எட்டிப்பார்த்தது. மௌனமாகவே நின்றான்.

“மாமா உங்க எக்ஸாம் ஸ்டடிலாம் எப்படி போயிட்டு இருக்கு…”

அதெல்லாம் சூப்பரா போய்ட்டு இருக்கு இசை.  ஆமா நீ கூட குரூப்-2 எக்ஸாமுக்கு படிக்கிறனு  பெரியப்பா சொல்லிட்டு இருந்தாங்க.

ஆமா மாமா.  எனக்கு அதுல தான் இன்ட்ரஸ்ட் அதிகம்.

சூப்பர் இசை. ஆல் தி பெஸ்ட்.

இருவரும் பேசிக்கொண்டிருக்க. “இருங்க வரேன்” என்றவள் சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

நான் இப்போ தண்ணி கேட்கவே இல்லையே இசை.

“கேட்கல நாளும் ஸ்வீட் சாப்பிட்டீங்களே.  தண்ணீர் குடிக்கணும்னு தோணும் இல்ல” என்று கூற.

“இத எல்லாம் கேட்காமலே புரிஞ்சிக்கிற.  என்னோட மனசு மட்டும் உனக்கு புரியாதா?  இசை” என மனதிற்குள்  கேள்விகளோடு  அவளைப் பார்த்தான்.

என்ன மாமா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க.

“ஒண்ணும் இல்ல இசை” என தண்ணீரை குடித்து விட்டு சொம்பை கீழே வைத்தான்.

அங்கு சில கணங்கள் எந்த சத்தமும் இன்றி அமைதி நிலவியது.

“மாமா என்ன? புதுப்பொண்ணு மாதிரி  இவ்வளவு சைலண்டா இருக்கீங்க.  ஜாலியா நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?” என இசை கேட்க.

பேசிட்டு தான இருக்கேன் இசை.

நீங்க முன்னாடிலாம் ரொம்ப ஜாலியா பேசுவிங்க. இப்போ கொஞ்ச நாளா உங்க கிட்ட ஒரு மாற்றம் தெரியுது. என்னாச்சு மாமா.

வருணின் இதழ்கள் வார்த்தைகளை விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது. ஆழ்மனதில் இருந்த இருக்கும் ஊனத்தை பற்றிய தாழ்வுமனப்பான்மை அவனது காதலை கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருந்தது.

இப்பதான் யாரும் இல்லயே.  மனசுல இருக்குறது ஒரே ஒரு முறை இசை கிட்டு சொல்லி பாக்கலாமா?  அப்புறம் அடியோட வெறுத்து நம்மகிட்ட பேசாம போய்ட்டா.  வேண்டாம்.

‘இப்படியே தள்ளி நின்னு சந்தோசமா பேசிக்கிட்டு அவ நெனப்ப நெஞ்சில சுமந்துட்டு காலத்த முடிச்சுக்கலாம்’ எனப் பலவாறாக அவனது எண்ண ஓட்டங்கள் சிதறிக் கொண்டிருந்தது.

Advertisement