Advertisement

மெல்லிசை ?? – 22

அப்பதான் வருண் என் மேல வச்சிருக்க காதல பத்தி பேசினது புரிஞ்சது. இப்படி ஒரு நல்லவரோட மனச புரிஞ்சிக்காம இத்தனை நாளா இருந்திட்டனேனு நினைச்சேன்.

“ஆமா லட்சுமி. வருண் பேசியத கேட்ட அந்த நிமிஷமே இசைய தனியா கூட்டிட்டு வந்து நான் தான் சொன்னேன். வருண விட நல்ல புருஷன் உனக்கு கிடைக்க மாட்டான்னு. என் புள்ளைய மாதிரி கேடுகெட்டவன கல்யாணம் பண்றத விட நல்லவனா இருக்கு வருண கட்டிக்கோ. சந்தோஷமா இருப்பனு சொன்னேன். காலைல நடக்க வேண்டியது நான் பாத்துக்குறேன். காலைல நீ கோவிலுக்கு கிளம்பிடுமானு சொன்னேன். காலைல நடக்கப்போற கல்யாணத்த பத்தி நான் இசை கிட்ட அப்பவும் சொல்லல. காலைல நடக்கப் போறத பாத்து இசையே முடிவு பண்ணட்டுமேனு நினைச்சேன். இசை நான் எதிர்பாத்த மாதிரி நல்ல முடிவ தான் எடுத்திருக்க. சந்தோஷமா இரும்மா” என்றார்.

“அதேசமயம் வருண் மாமாவோட உண்மையான காதலை இத்தனை நாளா புரிஞ்சுக்காம இருந்துட்டேனே. அதுதான் நான் செய்த பெரிய தப்பு. என்றவள் வருணின் கைகளை பிடித்து மன்னிப்பு கேட்டாள்.”

“இசை நீ என் உயிர் டா. என்கூட ஒவ்வொரு நிமிஷமும் உன் முகத்துல சந்தோஷத்தை மட்டும் தான் பார்க்கணும்” என தன் கரங்களுக்குள் அவளது மென்மையான கரங்களை பிடித்துக் கொண்டு காதலோடு இசையைப் பார்த்தான்.

மகனின் ஆசை நிறைவேறியதை எண்ணி மஞ்சு மகிழ்ச்சி அடைந்தாள். ரகுராம் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தாளும் இசையே தனக்கு மருமகளாக வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

இசை சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து போனான். தன்னை பற்றிய உண்மை தெரிந்ததால் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றான்.

“ஆதியோட கல்யாணம் இதே இடத்தில் இப்ப நடக்கப்போகுது” என கதிரேசன் கூறினார்.

“என்னங்க சொல்றீங்க?” என லட்சுமி கேட்க.

” அப்பா ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன். இல்லன்னு சொல்லல. அதை உணர்ந்து திருந்தி தான் இசையோடு காதலை புரிஞ்சுகிட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினேன். அதுக்குள்ள இசை அவசரப்பட்டு தப்பான முடிவு எடுத்துட்டா. ஒருமுறை என்கிட்ட சொல்லியிருந்தா கூட அவ கிட்ட மன்னிப்பு கேட்டிருப்பேன் இல்ல. உன்னை புரிஞ்சுக்கிட்டு உன்னோட காதல ஏத்துகிட்டு நெருங்கி வரும் போது ஏண்டி என்ன விட்டு விலகின.

“நீ வச்சிருக்கிறது காதல் இல்லடா. இனி அந்த வார்த்தையை சொல்ல கூட உனக்கு தகுதி கிடையாது. எல்லாமே முடிஞ்சது. இனி வருண் தான் எனக்கு எல்லாமே. மத்த பொண்ணுங்க மாதிரி உன்னைய நல்லவனா திருத்தி கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷனு இருப்பேனு நினைச்சியா? நான் என்ன உன்னைய திருத்த கடவுளாடா. உன்னோட பாணில சொல்லணும்னா ப்ராக்டிகலா யோசிடா. உன்ன மாதிரி இருக்கவனுங்கல இந்த கலியுகத்தில திருத்தி கூடவே வாழ எந்த பொண்ணும் வரமாட்டா. அப்படியே ஒருத்தி வந்தா நிச்சயமா அவ உன்னால பாதிக்கப்பட்டவளா தான் இருப்பா. நிச்சயமா சேர்த்து வச்சு பதிலடி கொடுக்க தான் வருவா. அனுபவிப்படா. பெண் பாவம் பொல்லாதது” என்றாள்.

“ஐயா வண்டி எங்க வந்த இருக்கு என அந்த புது நபர் யாருக்கோ ஃபோன் போட்டு கேட்க.

“இதோ பக்கத்துல வந்துட்டாங்க” என்று அவர் கூற.

அப்போது இரண்டு கார் அங்கு வந்து நின்றது. அனைவரும் திரும்பிப் பார்க்க.

ஒரு காரில் இருந்து மணப்பெண் அலங்காரத்துடன் ஒரு பெண்ணும், அவளோடு மூன்று பேரும், இன்னொரு காரிலிருந்து யாதவும், அவனோடு இரண்டு பேருமாக இறங்கினார்கள்.

“ஆதி அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். யாதவ் இவன் எப்படி?” என மணப்பெண்ணை பார்க்க. மேலும் அதிர்ச்சி அடைந்தான். “இவ யாரு?

இவங்களோட யாதவ் எப்படி வந்தான்” என குழப்பங்களோடு அவர்களைப் பார்த்தான்.

“என்னப்பா? ரொம்ப குழப்பமா இருக்கா?”

“ஆ.. ஆமா.. ஆமாப்பா” என தலையசைத்தான் ஆதி.

“யாதவ் அருகில் வந்தான். நீ எப்படிடா இவங்க கூட. இவங்களாம் யாரு?” எனக் கேட்டான்.

“இந்த ஊருக்கு கரெக்ட் டைமுக்கு பஸ் இல்ல. இங்க வர லிஃப்ட் கேட்டேன். கொடுத்தாங்க. எங்க போறேன்னு கேட்டாங்க. இந்த கோவிலுக்குனு சொன்னேன். அவங்களும் இங்கதான் வரேன்னு சொன்னாங்க. ஓகேனு வந்துட்டேன்” என்றான்.

ஓகே. நான் கூட பயந்துட்டேன்.அந்த பொண்ணு யாருடா? எதுவுமே தெரியல. எங்கப்பா கல்யாணம்னு சொல்றாரு.

” எனக்கு எப்படிடா தெரியும்” என்றான் யாதவ்.

“அந்த மாலைய எடுங்க” என கதிரேசன் கூற.

வந்தவர்கள் மாலையை எடுத்துக் கொடுக்க. மணப்பெண்ணாக வந்தவள் ஆதியின் காதருகில் நின்று, “என்னடா, ஆதி, தேவ், டேய், மாமா ரொம்ப அதிர்ச்சியா இருக்கா? என்னைய புடிக்கலையா?” எனக் கேட்டாள்.

அவளை ஏறிட்டு பார்த்தவன், இவ யாரு? டேய் னு மிர்த்திகா சொல்லுவா. ஆதினு தூரிகா சொல்லுவா. தேவ்னு யாஷிகா சொல்லுவா. மாமானு ரகசியா சொல்லுவா. இவ எல்லாத்தையும் சேர்த்து சொல்றாளே” என யோசித்தான்.

“அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம் ஆதி. நல்ல நேரம் போகுது. முதல்ல மாலைய எடுத்து அந்த பொண்ணு கழுத்துல போடு” என்றார். “இவ தான் இந்த வீட்டு மருமக” என கதிரேசன் கூற.

” முடியாதுப்பா” என்றான்.

“ஏண்டா முடியாது.”

” அவர் கேரக்டர் என்னனே தெரியாது. கேரக்டருக்கு செட்டாகுமானு தெரியாது.”

“இதெல்லாம் நீ காதலிக்கிறேன்னு அந்த புள்ளயை ஏமாத்தும் போது யோசிச்சு இருக்கணும்.”

“இவள காதலிச்சேனா? இவ யாருன்னே தெரியலையே. அப்பா சத்தியமா நான் ஒன்னும் பண்ணல. ஆனா அவளுக்கும் எனக்கும் செட்டாகாதுப்பா.”

“அந்த வார்த்தைக்கே இங்க இடமில்லடா. முதல்ல மாலைய போடு” என கதிரேசன் ஆவேசமாக கூற.

லட்சமி எதுவும் புரியாமல் அழுது கொண்டே நின்றாள்.

“அப்பொழுதுதான் ஆதி யாதவ் வந்ததற்கான காரணத்தை புரிந்து கொண்டான். எவளோ ஒருத்தி கிட்ட போட்டு கொடுத்து கூட்டிட்டு வந்து நிக்கறான். உனக்கு இருக்குடா’ என நினைத்தான் ஆதி.

அங்க என்னடா முறைப்பு. மாலைய கையில வாங்கி வேண்டா வெறுப்பாக மாலையைக் கழுத்தில் போட்டான்.

“கட்டுடா தாலிய” என கதிரேசன் தாலியை எடுத்து கொடுக்க.

மறுப்பு கூற முடியாமல் அவளது கழுத்தில மங்கல நாண் பூட்டினான்.

என்னடா எல்லா பொண்ணுங்களோட உன் நம்பர பிளாக் பண்ணிட்டோம்னு நினைச்சமே. ஆனா இவ மட்டும் எப்படி வந்தா? யாருனு மண்டைக்குள்ள பூரான் ஓடுதாடா” என மணப்பெண் கேட்க.

“யாருடீ நீ ” எனக் கேட்டான்.

“என்னால உன்ன மறக்க முடியலடா. அதுக்காக உன்னைய திருத்தவும் வர்ல.”

“அப்புறம் எதுக்குடீ வந்த?”

இதுக்கு மேல வேற யாரையும் நீ ஏமாத்திட கூடாது. இன்னொன்னு உன்னைய விடவும் முடியலடா. கொஞ்சம் ஓவரா லவ் பண்ணிட்டேன். இனி உன் கூடவே இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமா உனனைய கொடும பண்ணுவேனாம். உன் இன்பமும் நானே. துன்பமும் நானே. இது தான் என்னோட கேரக்டர்டா. இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

“ஏண்டா என்னைய கல்யாணம் பண்ணிகிட்டோம்னு கதற வைப்பேன்டீ. முதல்ல உன் பேர சொல்லுடீ ஃப்ராடு” என்றான்.

“எல்லாம் பொறுமையா வீட்டுல போய் பேசிக்கலாம். எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க” என்று கூறியவர் ஐயருக்கு கொடுக்க வேண்டிய குரு தட்சணையை கொடுத்து விட்டு பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு அனைவரையும் அழைக்க.

அனைவரும் கதிரேசன் வீட்டிற்கு வந்தனர். ஆதி பல குழப்பங்களுடன் இருந்தான். அவனால் முழுவதுமாக எதையும் யோசிக்க முடியவில்லை.

வருணும் நினைத்து பார்க்க முடியாத அளவு தன் கனவுகள் மொத்தமாக தனக்கு கிடைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு காணப்பட்டான்.

“இசை நிஜமாகவே என்ன முழுமனதோடு ஏத்துக்கிட்டியா? என்னோட நிலமைய பார்த்து பாவம்னு நினைச்சி இந்த முடிவுக்கு வந்தியா?” என்றான்.

“சத்தியமா இல்ல மாமா. உங்களோட ஆழமான காதலையும், பாசத்தையும் பார்த்து அந்த நிமிஷமே என்னோட முடிவை நான் மொத்தமா மாத்திகிட்டேன். ஆதி மாதிரி ஒருத்தனுக்காக நான் அழுவதை விட உண்மையான காதலுக்காக உங்களோட வாழ்வது தான் எனக்கு சொர்க்கம் மாமா. நீங்க தான் எனக்கு கடவுள் கொடுத்த வரம்” என அவனது கரங்களுக்குள் தன் கரங்களை கொடுத்தாள்.

வீட்டிற்கு மணமக்களுக்கு மஞ்சுவும், லட்சுமியும் சேர்ந்து ஆரத்தி கரைத்து கொண்டு வந்தது அவர்களுக்கு சுற்றிப் பொட்டு வைத்து உள்ளே அழைத்து வந்தனர்.

“லட்சுமிக்கு இந்த பெண் யார்?” என்று எதுவும் புரியாமல் தவித்தாள்.

“ஆதியோ அதற்குமேல் குழப்பத்தில் இருந்தான். இவள் யார்?” என்று தெரியாமல் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.

“அப்பா இவ யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும்.”

கதிரேசன் மௌனமாக நிற்க.

“யாதவ் நிச்சயமா உனக்கு தெரிஞ்சிக்கும். மரியாதையா சொல்லிடு” என கேட்க.

அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“ஏன்? எல்லாருமா சேர்ந்து என்ன இப்படி கொல்றீங்க. நீ யாருடீ? உன் பேரு என்ன? இப்ப சொல்ல போறியா இல்லையா?” என அவளை அடிக்க கை ஓங்கினான்.

“உங்கள எங்களுக்கு பிடிக்கல. ஆனாலும் அவளுக்கு பிடிச்சிருக்கேனு கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம். என் பொண்ணு மேல ஒரு அடி விழுந்தா கூட யோசிக்காம இங்கயே வெட்டி போட்டுட்டு என் பொண்ண கூட்டிட்டு போயிட்டே இருப்போம்” என பெண்ணின் தந்தை கூறினார்.

“தீப்ஷினி இப்படி கேவலமான ஒருத்தன் உனக்கு தேவையா? இவனை எப்படி நீ லவ் பண்ணின. சத்தியமா எங்களுக்கு புரியல” என தீப்ஷினியின் அம்மா கூறினாள்.

என்ன தீப்ஷினியா? இப்படி ஒரு பேர சத்தியமா நான் கேள்விப்பட்டதே இல்ல. எல்லாருமா சேர்ந்து பொய் சொல்லி என் மேல பழிய போடுறாங்க.

“அப்போ என் பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியாது இல்லையா? உன்னை எல்லாம் மாப்பிள்ளைனு கூப்பிட கூட எனக்கு வாய் வரலடா” என தீப்ஷினியின் தந்தை கூறினார்.

சத்தியமா இப்படி ஒரு பேருல யாரோடயும் நான் பேசவே இல்லை.

“நீங்க மட்டும் தான் உங்க ஃப்ரெண்டோட போட்டோவ கொடுத்து பேசுவீங்களா? அதை பொண்ணுங்க நாங்க பண்ண மாட்டோமா?” என தீப்ஷினி கேட்டாள்.

இதைக்கேட்ட ஆதி அதிர்ந்து போனான்.

தொடரும்….

அன்பு நெஞ்சங்களுக்கு…

அடுத்த பகுதியோடு கதை முடிகிறது.. மிகவும் தாமதமாக அப்டேட்ஸ் கொடுத்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் தங்கங்களே… பணிச்சுமை தான் காரணம்..

Advertisement