Advertisement

மெல்லிசை ?? – 20

“லட்சுமி பதறிப்போய் கத்தினாள்.  அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

ரகுராம் தனது அண்ணனை தூக்கி கட்டிலில் படுக்க வைக்க சொன்னார்.  ஜெய் மெதுவாக பிடித்து  தூக்கி கட்டிலில் படுக்க வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தான்.

கதிரேசன் மெதுவாக கண் விழித்து பார்த்தார்.

“அண்ணன் வெய்யில்ல வேலை செஞ்சது மயக்கம் வந்து இருக்கும்” என ரகுராம் சமாளித்து அக்கம் பக்கத்து வீட்டாரை அனுப்பி வைத்தார்.

“எனக்காக நீங்க கவலைப்பட வேணாம்பா.  நானே குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்கிறேன்.

எனக்கு எதுவுமே வேண்டாம்.  நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பல”  என குழந்தைகளை வேகமாக இழுத்துக் கொண்டு சம்யுக்தா வாடீ” என தங்களது அறைக்கு சென்று வேகமாக கதவை சாத்தினான்.

“இதை பார்த்து பதறிப் போய் அதி வேகமாக சென்று கதவை தட்டினான். ஜெய்.. டேய்..  நான் பேசிட்டு இருக்கேன்ல.  வெளிய வாடா.  அவசரப்படாதடா”  எனக் கதவைத் பலமாக தட்டினான்.

“அனைவரும் பதறிப் போயினர்.  லட்சுமியோ  பிள்ளைக்குனு  நினைக்கிறதா?  புருஷனுக்குனு  நிற்கிறதா?  கடவுளே! பேசாம என்னைய  முதல்ல கொண்டு போய்டு” என அழுதார்.

ஆதி பேச ஒரு வழியாக  ஜெய் கோவம் குறைந்து  கதவை திறக்க.

“ஏண்டா இப்படி என்னைய  சித்திரவதை பண்றீங்க”  என லட்சுமி அழுதாள்.

“நான் மட்டும் வேற என்னம்மா பண்ணுவேன்.  தெரியாத்தனமா ஒரு தப்பு பண்ணிட்டேன்.  அதை சரி பண்ண தானே பாக்கணும்.  அந்த நிலம் இருந்தா பின்னாடி பையனுக்கு ஆகும்னு  தானே இவ்வளவு தூரம் கெஞ்சறேன்’ என ஜெய் அழுதான்.

இதை எல்லாம் பார்த்த கதிரேசனை ஒரு முடிவுக்கு வந்தார்.  என் தலையெழுத்து எனக்கு பூர்வீகமும் இல்லனா ஆயிடுச்சு. அவ்வளவுதானே.  என்ன வேணா பண்ணுங்க டா.  நான் எங்க வந்து கையெழுத்து போட்டணும்னு  சொல்லுங்க.  கையெழுத்து போட்டு போறேன்.  எல்லாத்தையும் வித்து தின்னுங்கடா.  என்னமோ பண்ணுங்க.  எதையும் கண்ணால பார்க்க நான் இருக்க கூடாது. கடவுளே!  என்னைய  சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடு.

“ஆதி  நீ சொன்ன மாதிரி பத்திரம்  ரெடி பண்ணிடு.  என் கண்ணு முன்னாடியே எல்லாம்  போகுது.   இதெல்லாம் பாக்கணுமா?” என  கண்களில் கண்ணீருடன் படுத்துக்கொண்டார்.

அடுத்த சில தினங்களில் நிலத்தை விற்பதற்கான ஏற்பாடுகள் அதிவேகமாக  நடந்தது. நிலத்தை வாங்க பார்ட்டி வந்தார்கள்.

பத்திரம் தயாரானது.

அதேசமயம் பிள்ளைகளையும் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் கொண்டு சேர்த்தனர். “சம்யுக்தாவிற்கு  உடன்பாடு இல்லை என்றாலும் இந்த ஒரு வருடம் தானே” என பொறுத்துக் கொண்டாள்.

“நிலத்தை விற்று ஜெய்யிடம் பணத்தையும் கொடுக்க.  ஜெய் தனது கடன் மொத்தத்தையும் கட்டி  முடித்தான்.  மீதி இருக்கும் பணத்திற்கு இப்போதைக்கு இங்கேயே ஒரு கடையைத் திறக்கலாம்னு  முடிவு பண்ணியிருக்கேன். இல்லன்னா பசங்க பேர்ல  டெபாசிட் பண்றேன்’

என்றான்.

கதிரேசன் எதுவும் பேச தயாராக இல்லை.  மௌனமாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

“சம்யுக்தாவிற்கு கிராமத்து சமையல் முதலில் பிடிக்காமல் இருந்தாலும் நாளுக்கு நாள் அதையே பழகிக் கொண்டாள். பிரண்டை துவையல்,  சுண்டைக்காய் குழம்பு, முடக்கத்தான் ரசம்,  புளியாரை துவையல்,  கண்டங்கத்தரி” என  மூலிகை சமையலை இப்போதெல்லாம் ரசித்து சாப்பிடத் துவங்கி இருந்தாள். குழந்தைகள் கூட இந்த சமையலை மிகவும் விரும்பி சாப்பிட தொடங்கினார்கள்.

“பாட்டி பசிக்குது. இன்னைக்கு என்ன சமையல்” ஆரவ் ஆர்வத்துடன் கேட்க.

வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும், முரமுரென புளிச்ச மோரும் கண்ணு..

“இதென்ன பாட்டி புது டிஷ்ஷா  இருக்கு.”

“இதுக்கு அந்த காலத்துல ஔவை பாட்டி ஒரு பாட்டே பாடி இருக்காங்களாம். இந்த சோத்த சமைச்சு கொடுத்த புல்வேளூர்பூதனுக்கு  உலகத்தையே கொடுக்கலாம்னு பாடுனாங்களாம். சாப்பிட்டு  பாரு ஆறு. அருமையா இருக்கும்” என லட்சுமி கூற.

“மாமியார் கூறியதை கேட்டு சம்யுக்தா ஆச்சரியம் அடைந்தாள். இதெல்லாம் உங்களுக்கு எப்படி அத்தை தெரியும்” எனக் கேட்டாள்.

“எல்லாம் காதுல கேட்கறது தாம்மா.”

“வழுதுணங்காய்னா என்ன காய் அத்தை.”

“அட கத்தரிக்காய்னு சொன்னா தான் உங்களுக்கு தெரியுமா?”

“ஓஓ! கத்தரிக்காய் தானா?”  என சாப்பிட்டு பார்த்தாள். “நிஜமாவே சூப்பரா இருக்கு அத்தை” என்றாள்.

“இதெல்லாம் இத்தனை நாளா சாப்படாம மிஸ் பண்ணிட்டோம் மம்மி. சூப்பரா இருக்கு” என மித்ரா சாப்பிட்டாள்.

இது உடம்புக்கு ரொம்ப நல்லது கண்ணுங்களா. வழுதுணங்காய் பெருங்குடல் புற்றுநோய் வராம பாதுகாக்கும். சாப்பிடற உணவு உணவுகுழாயிணூடே போகும் நஞ்சு பொருட்கள உறிஞ்சி குடல பாதுகாக்குதுனு சொல்லுவாங்க.

“சூப்பர் பாட்டி. நிறைய விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கிங்க.”

“அத்தை நீங்க நிஜமாவே படிக்காதமேதை தான்” என சம்யுக்தா ஆச்சர்யப்பட்டாள்.

“மம்மி இதுக்கு முன்னாடி நீங்க இது மாதிரி எல்லாம் சமைச்சு கொடுத்ததே இல்லை.  பாட்டி பாருங்க என்னென்னமோ செஞ்சு தராங்க” என்றான் ஆரவ்.

“இதெல்லாம் நம்ம சிட்டில கிடைக்காது தங்கம்.  இங்க கிராமத்துல ஈசியா கிடைக்குது. அதனால பாட்டி செய்யறாங்க”  என்றாள்.

“தலைவலி காய்ச்சல் என்றாலும் கஷாயம் வைத்து பற்றுப்போட்டு போக்கிக் கொண்டனர்.  இந்த வாழ்க்கை  வித்தியாசமாக தான் தெரிந்தது.  முடிந்தவரை கைவைத்தியம் தான் செய்து கொண்டார்களே தவிர மருத்துவமனைக்கு பெரிதாக சென்று அங்கு வந்த அந்த நாட்களில் அவள் பார்த்ததே இல்லை.  இப்படியும் வாழ முடியுமா?”  என ஆச்சரியத்தோடு நாட்களை நகர்த்தினாள்.

கதிரேசன் அன்றைய தினம் ஆதியின் கல்யாண பேச்சை மீண்டும்  தொடங்கினார்.

“ஆதி இங்க வாடா.”

“என்னப்பா?”

“நடந்த குழப்பத்தில ஆரம்பிச்ச கல்யாண  பேச்சையே  மறந்துட்டேன்.  வர்ற முகூர்த்தத்துல உனக்கும் இசைக்கும் நிச்சயதார்த்தம் முடிச்சிடலாம்னு  முடிவு பண்ணியிருக்கேன்.  உனக்கு எப்ப எப்படி லீவுனு சொன்னா சொன்னா முடிவு பண்ண வசதியா இருக்கும்.”

“இப்படி அப்பா திடீர்னு  எப்படிப்பா?”

“உனக்கும்  வயசு ஆகிட்டே  போகுதில்ல.  காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும் இல்ல.”

“அதுக்கு இப்ப என்ன அவசரம்?”

“அவசரம் தான்.  இசைக்கக் வயசு ஆகுது இல்ல.  எவ்வளவு நாளைக்கு வீட்ல வச்சுட்டு இருக்கிறது.”

“தாராளமா அவளுக்கு கல்யாணம் பண்ணுங்க.  நான் வேணாம்னு சொல்லல. எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்” என்றான்.

“உன் முடிவை நான் கேட்கல.

உனக்கு எப்ப லீவுனு  மட்டும் தான் நான் கேட்டேன்.”

“இவரு கிட்ட பிடிவாதமா பேசினா வேலைக்கு ஆகுமா? உண்மைய சொல்லிடலாமா?” என யோசித்தான்.

“என்னடா யோசிக்கிற?”

“அப்பா கல்யாணம் என்னோட தனிப்பட்ட விஷயம்.  எனக்கு பிடிச்ச பொண்ண  தான் கல்யாணம் பண்ணிக்க முடியும். இசைக்கும் எனக்கும் ஒத்து வராது.”

ஆதி சொல்வதைக் கேட்டு கதிரேசன் எழுந்து நின்றார். கண்கள் சிவக்க அவனை பார்த்தார். “என் தங்கச்சிக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்டா.  கொடுத்த வாக்கு தவறினா நான் உயிரோடு இருக்க மாட்டேன்.”

“அப்பா சும்மா இப்படி மிரட்டிக் கிட்டே  இருக்காதீங்க. எப்ப பாரு தங்கச்சிக்கு வாக்கு கொடுத்தேன்,

அக்காவுக்கு வாக்கு கொடுத்தேன்னு. இப்படி  எத்தனை பேர் வாழ்க்கைய நாசம் பண்ணுவீங்க. உங்க வார்த்தைய காப்பாத்தறதுக்காகவும் உங்க கௌரவத்துக்காகவும் என் வாழ்க்கையை நான் அழிச்சுக்க முடியாது.”

“அப்பாவையே எதிர்த்து பேசுறியா டா. வேணாம்டா.  உன் மேல இசை உயிரா  இருக்கா.  அந்த பிள்ளை காதுல விழுந்தா தாங்க மாட்ட டா” என லட்சுமி கூற.

“நான் அவகிட்ட நேத்தே சொல்லிட்டேன்.”

“என்னடா சொன்ன?”

“உனக்கும் எனக்கும் ஒத்துவராது. உன்னை எனக்கு பிடிக்கலனு சொன்னேன்.”

லட்சுமி அவனை அடிக்க கையை ஓங்கினாள்.

“அம்மா. நான் சின்ன பையன் இல்ல.”

ஓங்கிய கையை இறக்கி விட்டு, “மல்லிகா  நம்மள நம்பி தாண்டா இவ்வளவு நாளும் உசுர வச்சுக்கிட்டு இருக்கா.”

” அம்மா ஆவுன்னா உயிர் உயிர்னு  சொல்லி தயவு செய்து மிரட்டாதீங்க. உங்களை மாதிரி எல்லாம் நான் மிரட்ட மாட்டேன்.  நீங்க என்ன சொன்னாலும் நான் சாக மாட்டேன். என்னோட முடிவுல நான் தெளிவா இருக்கேன். அவ்ளோதான்.”

கதிரேசன் கண்கலங்க.  அதிர்ச்சியில் அப்படியே கட்டிலில் மீண்டும் அமர்ந்து சுவற்றில் சரிந்தார்.

“என்னங்க..  என்னங்க..”  என லட்சுமி பதற.

ஆதியும் ஒரு நிமிடம் பதறிப் போனான்.  “அப்பா..  அப்பா.. என்னப்பா?”

கதிரேசன் வாயே பேசாமல் அப்படியே படுத்தான்.  சற்று நேரம் கழித்து  நீ உன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துக்கோடா. என்ன ஒன்னு. நான்  பேசிய வார்த்தை செத்துப்போச்சு.  நான் கொடுத்த வாக்கு செத்துப்போச்சு. அப்பவே நானும் செத்ததுக்கு சமம் தான்.  என் தங்கச்சி மூஞ்சிய இனிமே நான் எப்படி முழிப்பேன்.  நான் எப்படி தெருவுல தலைநிமிர்ந்து நடப்பேன்”  என புலம்பினார் .

“உன்னோட சந்தோஷத்துக்காக உங்க அப்பாவா கொன்னுடாதடா.  ஆதி  நான் உன் கால்ல கூட விழறேன்டா” என லட்சுமி கூற.

” அம்மா.  என்னம்மா இப்படி எல்லாம் பேசறிங்க.  எனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அத எனக்கு பிடிச்ச மாதிரி நான்  வாழக்கூடாதா?”

“நல்லா வாழ்ந்துக்கோப்பா.  எங்களுக்கு ஒரு கொள்ளிய வச்சிட்டு  சந்தோசமா வாழ்ந்துக்கோ” என்றார்.

ஆதியால்  சட்டென்று எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்தான்.

“ஒரே ஒருநாள் மட்டும் டைம் கொடுங்கம்மா.  ப்ளீஸ்” என்றான்.

“நல்ல டைம் எடுத்துக்கோடா . ஆயிரம் முறை யோசிச்சிப் பாரு.  இசை மாதிரி ஒரு தங்கமான பொண்ணு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா. அவள இழந்துட்டா நிச்சயம் உன் வாழ்க்கை நல்லா இருக்காது. இசை உனக்கு இன்னொரு அம்மாவா இருப்பாடா.  யோசிடா”  என்றாள்.

” நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேம்மா”  என்று கூற.

“லட்சுமி கண் கலங்க அவனைப் பார்த்தாள்.”

“பயப்படாதீங்க உங்கள மாதிரி நான் ப்ளாக் மெயில் பண்ண மாட்டேன். செத்துலாம்  போகமாட்டேன். கொஞ்ச நேரம் மன நிம்மதி வேணும்னு நினைக்கிறேன். அமைதியாக வந்து உட்கார்ந்து யோசிக்கணும்.”

“சரி போய்ட்டு வா” என்றார்.  “ஆனா எங்களை என் மனசுல வெச்சுட்டு யோசி” என்றாள்.

ஆதி வெளியிலிருந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டியை எடுத்துக் கொண்டு அந்த ஊரின் எல்லையில் உள்ள அம்மன் கோவிலை நோக்கி சென்றான்.

“அங்க போனா அவங்க தொல்லை தாங்கல. இங்க  நிம்மதியா இருக்கலாம் அப்படின்னு இங்கே வந்த எங்கயும்  நிம்மதி இல்ல.  என்னடா வாழ்க்கை இது.  இப்ப நான் என்ன தான் செய்வது” என மூளையை கசக்கிக்  கொண்டு பலமுறை யோசித்தான்.  ஆனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. முடிவெடுக்க முடியாமலும் மன நிம்மதி இல்லாமலும் கோவிலில் இருந்து வீட்டிற்கு மீண்டும் கிளம்பினான்.

வழிநெடுக இசையைப் பற்றிய சிந்தனையோடு வந்ததால் நாய் குறுக்கே வந்ததை கவனிக்காமல் அதன் மேல் வண்டியை விட்டுக் கீழே விழுந்தான்.  கை கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது.  அந்த காயத்தோடு வந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

ஆதியை காயத்தைப் பார்த்த லட்சுமி பதறிப்  போனாள்.

அதைப் பார்த்த மஞ்சுவும்,  இசையும் ஓடி வந்தார்கள்.  அருகிலிருந்த கிணற்றுப்பாசான் இலையை பறித்து வந்த காயத்தின் மேல் கசக்கி விட்டார்கள்.

இசை  சில இலைகளை பறித்து வந்து அழுதுகொண்டே அவசரமாக காயத்தில் வைத்துக்  கட்டினாள்.

“ரொம்ப வலிக்குதா மாமா” என கண்ணீருடன் ஆதியைப் பார்த்து  கேட்க.

“இவளால எப்படி இந்த கேட்க முடியுது. அவ்வளவு மோசமா பேசி அழவச்சேன்.  இந்த காயத்துக்கு போய் இப்படி அழறா.  என்ன பொண்ணுடா இவ” என  அப்பொழுதுதான் இசையை அதிசயமாக பார்த்தான்.

Advertisement