Advertisement

?? மெல்லிசை?? – 02

“இந்த சாபமெல்லாம் ஆதிக்கு பழிக்காதுடா. தப்பு என்னோடது மட்டும்  இல்ல. உருகி நாலு வார்த்தை பேசினா நம்பி  பின்னாடியே வரது யாரோட தப்புடா…”

“உன்ன நல்லவனு நம்பி பழகறாங்களே. அவங்க தப்பு தாண்டா…”

“அவளுங்க படிச்சவளுங்க தான. அறிவில்ல. செம்மறி ஆட்டுக் கூட்டம் மாதிரி வந்து என்கிட்டயே சிக்கறாளுங்க…”

“நீ நயவஞ்சகமான புலினு தெரிஞ்சா யாரும் சிக்க மாட்டாங்க ஆதி…”

“எப்ப பாத்தாலும் பசங்கள குறை சொல்றத விட்டுட்டு பொண்ணுங்க பக்கம் இருக்க தப்ப யோசிங்க. படிக்க போற வயசுல ஊர சுத்தறது யார் தப்பு? வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு காதல் கண்றாவினு சுத்தறது யார் தப்பு. ஆம்பள கூப்பிட்டா பொம்பள இவளுக்கு எங்க போகுது புத்தி” என ஆதிமூச்சு விடாமல் பேச.

போதும் நிறுத்துடா. பொண்ணுங்க காதல புனிதா நினைச்சு கட்டிக்க போறவன்னு நம்பிக்கையோட பழகற்ங்க. அவங்கள போய்  ஆடு மாட்ட சொல்ற மாதிரி பேசற. பெண் பாவம் பொல்லாததுடா. தப்பு மேல தப்பு பண்ணாதடா ஆதி. நம்ம குடும்பத்துக்குனு  கிராமத்தில ஒரு நல்ல பேரு இருக்குடா.

அடேய் லூசு அண்ணா. உன்ன மாதிரி அப்பா அம்மா சொல்ற பொண்ண பாத்து மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு கல்யாணத்த பண்ற ஆள் நான் இல்ல. என் லெவலே வேறடா.

காதல்னா என்னனு தெரியுமாடா? கல்யாணம்னா என்னனாது தெரியுமா? ஆதி.

என்னோட அகராதில காதலுக்குனு ஒரு தனி டிக்ஸனரியே போட்டு வச்சிருக்கேன். உனக்கும் வேணுமா சொல்லு ஜெய்.

அந்த அசிங்கத்த நீயே வச்சிக்கோ. எனக்கு என் சம்யுக்தா இருக்கா. அழகா ரெண்டு குழந்தைகங்க இருக்காங்க.

உனக்கு பொறாமைடா. எனக்கு பச்சக்கிளியா மாட்டுது. தானா வந்து வலைல விழுது. நான் வேணானு சொல்ல சினிமா ஹீரோ இல்லடா அண்ணா.

“எவளோட அண்ணன் வந்து உனக்கு ஆணி அடிக்கப் போறான்னு தெரியல. இப்ப ஹெச். ஆர் னு சொல்ற.  நீ எல்லாம் எனக்கு தம்பின்னு சொல்லவே வெட்கமா இருக்கு ஆதி. என்னோட நம்பர தயவுசெய்து உன் போன்ல வைக்காத. ச்ச்சீ.  நீ எல்லாம் திருந்தவே மாட்டியா?

“நான் எதுக்குடா திருந்தனும்…”

“பேசாத. போன வைடா”  என கூற.

“ஒரு ஆல் த பெஸ்ட் கூட சொல்ல துப்பில்ல.  நீ எல்லாம் ஒரு அண்ணனாடா.  நீ என்னடா சொல்றது.  நானே கட் பண்றேன்” என  மொபைல் போனின் இணைப்பை துண்டித்தான் ஆதிதேவன்.

“இவனெல்லாம் இந்த ஜென்மத்தில திருந்த மாட்டான்” என கடுப்பாக சொல்லி கொண்டே திரும்பினான் ஜெய்

சம்யுக்தா அவன் முகத்தின் அருகில் தன் முகத்தை கொண்டு வந்து “நீங்க முதல்ல திருந்துங்க.  உங்கள இன்னைக்கு என்ன பண்றேன் பாருங்க” என அந்த அறை முழுக்க கண்களை ஒருநொடி உலவவிட்டாள்.

நோ டியர். என் செல்லம்ல. நான் ரொம்ப நல்லவன்டி. என்னைய மாதிரி ஹஸ்பண்ட் கிடைக்க நீ போன ஜென்மத்தில  புண்ணியம் பண்ணி இருக்கனும்.

உங்களையெல்லாம் புழுவா கூட ஏத்துக்க முடியாது.  நீங்க கிடைக்க   போன ஜென்மத்தில வேற புண்ணியம் பண்ணனுமா. நான் கிடைக்க தான் நீ தவம் பண்ணி இருக்கனும். கண்ணு முன்னாடி நிக்காம  ஓடிப்போயிடுங்க ஜெய்.

“நான் உன்ன எருவு புழுவா கூட  ஏத்துக்க தயாரா இல்ல விதண்டாவாதம் பேசாமல் போய் வேலைய பாரு” என்றான்.

“அதெல்லாம் எனக்கு தெரியும்.  நீங்க சாப்பிட்டு முதல்ல எடத்த காலி பண்ணுங்க” எனக் கூறிவிட்டு சம்யுக்தா உள்ளே சென்றாள்.

இங்கு ஆதி தேவ் தனது ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் ஆஃபீஸ் வந்து இறங்கியவன்,

அங்கே வைக்கப்பட்டிருந்த ரிஜிஸ்டரில் “ஆதிதேவ்” என  ஸ்டைலாக கையெழுத்திட்டு உள்ளே நுழைந்தான்.

ஆதி உள்ளே வரும் போதே மேனேஜரின் குரல் அந்த கட்டிடத்தை அதிரவைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது.

ஆதி வழக்கம் போல இன்னைக்கும் லேட்டா.  ஒரு நாளைக்காவது ஃபைவ் மினிட்ஸ் ஆவது முன்னாடி வரீங்களா? சார்.

“இன்னிக்கு நான் நேரமா தான்  கிளம்பி வந்தேன் சார்.  டைம் பாருங்க 10 மணிக்கு இன்னும்  ரெண்டு நிமிஷம் இருக்கு” என மேனேஜரை பெருமையாக பார்த்தான்.

“மேய்க்கிறது எரும.  இதுல என்ன பெருமை” ங்கிற மாதிரி என்னைய சொல்ல வைக்காத ஆதி.

பத்து மணினா   பத்து மணிக்கே தான் வருவீங்களோ.  மெயின் பிரான்ஜ்ல  இருந்து கால் மேல கால் வந்துட்டு இருக்கு. அவங்களுக்கு நான் தான பதில் சொல்லனும்.

அதான் நான் வந்துட்டேன்ல சார்.

“இன்னும் கொஞ்ச நேரமா வரப் பாருங்க”  என  சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதியின் போனில் மெசேஜ் வரும் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

அதானே எங்கடா இன்னும் சத்தத்த காணமேனு பார்த்தேன். வந்தா ஃபோனும் கையுமாவே சுத்துறது. வேலையில கவனம்  இருந்தா தான.

“என்னோட வேலையில நான் சரியா தான் சார் இருக்கேன்” என மொபைலில் வந்த மெஸேஜை பார்த்தான்.

யாஷிகாவிடம் இருந்து தான் மெஸேஜ் வந்திருந்தது. “சாப்ட்டிங்களா? லவ் யூ தேவ். தேவ்வ்வ்வ்” என அனுப்பி இருந்தாள்.

‘இவளுக்கு வேற வேலையே இல்ல. எல்லாரும் இத தான் கேட்கறாளுங்க. எப்ப பாரு சாப்ட்டியா? னு வேற எதுவுமே பேசறதுக்கு இருக்காதா?’ என யோசித்தபடி நின்றான்.

ஆமா ஆமா ரொம்ப கரெக்டா தான் இருக்க ஆதி.  உன் வேலையில கரெக்டா தான் இருக்க.  செல்ஃபோன் பாக்கறது தான உன்னோட வொர்க். அத சரியா தான் பண்ற” என  மேனேஜர் ஆதியை முறைக்க.

செல்போனிற்கு மெஸேஜ்  மீண்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

“இவ்வளவு தூரம் ஒருத்தன் சொல்றேன். அந்த மரியாதைக்காகவாது  ஃபோன சைலன்ட்ல போட்டியா? அப்படி என்னதான் மெசேஜ் வந்துட்டே இருக்கு. பதில் அனுப்பு தொலைச்சுட்டு கூட  வரலாம் இல்ல” என கடுப்பாக கூறினார்.

“இவ வேற நேரம் காலம் தெரியாம” என  மெஸேஜை ஓப்பன் பண்ண. ரகசியாவிடம் இருந்து மெஸேஜ் வந்திருந்தது.

“மாமா,  ஹேப்பி மார்னிங். சாப்ட்டிங்களா?” கேட்டிருந்தாள்.

ஆதி கடுப்புடன், “ஹேப்பி மார்னிங் பட்டூஸ். மாமா பிஸி. லேட்டர்” என ஒரு மெஸேஜை தட்டி விட்டான்.

“ஓகே மாமா. டேக் கேர்” என பதில் அனுப்பிய ரகசியா,  ‘மக்கு முண்டம். இந்த காலத்துல எவ்வளவு மார்டனா இருக்காங்க. ஸ்டைலா பேர சொல்லி கூப்பிடலாம்னா  மாமானு தான் சொல்லனும்னு இம்சை பண்றானே. இவனலாம் லவ் பண்ணி என்னத்த செட்டில் ஆகிறதோ’ நினைத்துக் கொண்டு தன் வேலையை கவனிக்க புறப்பட்டாள்.

‘இவ பரவால. சொன்னா ஒரு மெஸேஜ்ல புரிஞ்சிக்கிறா. இவ கொஞ்சம் ஓகே தான்’ என நினைத்தான்.

அப்போது மீண்டும்  யாஷிகாவிடம் இருந்து  மெசேஜ் வந்து கொண்டிருந்தது. “தேவ் லவ் யூ சொல்லுடா. என்ன பண்ற. ஹலோ… தேவ்வ்வ்வ்வ்” என அனுப்பிக் கொண்டே இருந்தாள்.

‘இவ வேற என்ன சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டா.  இந்த டைம் பாத்து   டென்சன் பண்றாளே’ என நினைத்துக் கொண்டே மொபைலை சைலன்ட் இல் போட்டான்.

“போங்க ஆதி.  போயி ஆகவேண்டிய வேலைய பாருங்க” என  மேனேஜர்  சொல்ல.

அவரை  எதுத்து பேசு  வழி இல்லாமல் அமைதியாக உள்ளே சென்ற ஆதி தனது சீட்டில் அமர்ந்தான்.

“அவனைப் பார்த்த யாதவ்,  “என்ன மச்சி காலைலயே  அர்ச்சனையா?”  என சிரித்தான்.

“அவன் கிடந்துட்டு போறான் விடுடா. இதெல்லாம் நமக்கு சாதாரணம்.  அந்த கன்னடத்துப் பைங்கிளி வந்தாச்சா?” என  கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.

“இருக்கிறது உனக்கு பத்தாதா?  இதுல இன்னொன்னு வேற கேக்குதா?”  வேணான்டா. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.

“உனக்கு என்னடா வேகுது.  எனக்கு லக்கு இருக்கு. கிடைக்குது…”

“அது சரி.  அந்த பொண்ணு வர நேரம் தான்.  அதான்  மேனேஜர் சீன் போட்டுட்டு சுத்துறான். இதுல இருந்தே தெரியலையா?…”

ஆதியை மீண்டும் யோசிக்க விடாமல் யாஷிகாவிடம் இருந்து  மெசேஜ் வந்து கொண்டே இருக்க.

“கடுப்பான ஆதி ஸ்டாப் மெஸேஜ்” என ஒரு மெசேஜ்  அனுப்பினான்.

“முடியாது தேவ். ஏன் உங்களால ஒரு கூட அனுப்ப முடியாதா?  சார்.  ரொம்ப பிசியோ?” என யாஷிகா அனுப்பினாள்.

“ஒரு தடவ சொன்னா உனக்கு அறிவு இருக்காதா? இதுக்கு மேல மெசேஜ் பண்ணா பிளாக் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்” என பதில் மெசேஜ் அனுப்பினான்.

யாஷிகா  டென்ஷனாகி பெரிய பெரிய கட்டுரையாக டைப் பண்ணி அனுப்ப.

“இவளோட பெரிய தலைவலியா இருக்கு. இவகிட்ட பிடிக்காத விஷயமே இதுதான். ஏதாவது ஒன்னு சொல்லிட்டா போதும்.  வண்டி வண்டியா டைப் பண்ணி அனுப்ப வேண்டியது.  ச்ச்சீ. இவள முதல்ல லிஸ்டில இருந்து கட் பண்ணனும்”  என கடுப்பாகி அந்த மெசேஜை படிக்காமலேயே டெலிட் செய்து விட்டு யாஷிகாவை பிளாக் பண்ணினான்.

அப்போது அங்கு ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட ஆதி தைல நிமிர்ந்து பார்த்தான்.

பட்டர்ஃப்ளை டாப்ஸ் பர்ப்பிள் கலர் வித் ப்ளாக் ஜீன்ஸில் ஷாட்டான லூஸ் ஹேர்  விட்டு பயங்கர ஸ்டைலாக ஓயிலாக ஹீல்ஸ் செப்பலில் மெல்ல நடந்து வந்தாள்.

“அடேங்கப்பா. செம ஃபிகரா இருக்காடா. கட்டினா இப்படி ஒருத்திய கட்டனும்” ஆதியிடம் கூற.

“ரொம்ப தான். இதெல்லாம் நம்ம கல்ச்சர்க்கு செட் ஆகாது மச்சி. தேவையில்லாம ஆசைய வளர்த்துக்காத. இதெல்லாம் பாக்கறதோட நிறுத்திக்கனும்” என்றான் யாதவ்.

“அவளும் பொம்பள தான. ஓவரா பில்டப் கொடுக்காதடா. அதெல்லாம் நான் பாத்துக்கறேன்” என யாதவை வார்த்தைகளால் அடக்கினான்.

“அவள் அருகில் வரும் போது தன்னையும் அறியாமல் குட் மார்னிங் மேம்” என்றான்.

இதைப்பார்த்த யாதவ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான்.

“என்னடா இளிப்பு” என்பதைப் போன்ற முக பாவனேயோடு யாதவைப் பார்த்து முறைத்தான்.

“குட் மார்னிங் யா என்றவள்,  “என் டாடி ரூம் எங்க இருக்கு” எனக் கேட்டாள்.

“என்னது டாடியா? யார் உங்க டாடி” எனக்கேட்டான் ஆதி.

மேனேஜர் சண்முகம் தான் எங்கப்பா.

“ஹலோ.  மேனேஜர் சார் ரூம்  அதோ அங்க இருக்கு.  நீங்க போங்க” என யாதவ் வழிகாட்ட.

“ஓகே மிஸ்டர்.. மிஸ்டர்..  உங்க பேரு” யாதவைப் பார்க்க.

“மை நேம் இஸ் யாதவ். யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்” என்றான்.

“ரூபஸ்ரீ”  என்று கூறிவிட்டு தனது தந்தையின் அறையை நோக்கி சென்றாள்.

“இங்க என்னடா நடக்குது.  எனக்கு ஒண்ணுமே புரியல” என யாதவிடம் கேட்க.

“நீ ஏண்டா இவ்வளவு முட்டாளா ஆகிட்ட.   நல்ல சார்ப்பா தான இருந்த. நம்ம ஆபீஸ்க்கு  எப்போ ஹெச் ஆர்  வந்தாங்க. ஒரு நாளாவது கண்ல பார்த்து இருக்கியா?”  என யாதவ் கேட்டான்.

இல்ல தாண்டா.  இந்த மேனேஜர் தான் நேத்து ஏதோ உளறினான்.  நமக்குதான் ஹெச் ஆர்  வராங்கனு நான் நினைச்சிட்டேன் டா.

வர வர உன் போக்கே சரியில்லை ஆதி. இவங்களும் ஹெச் ஆர் தான்.  இல்லன்னு சொல்லல. ஆனா  பெங்களூரில வேற கம்பெனில இருக்காங்க.  அவ்வளவுதான்.  நம்ம மேனேஜரோட பொண்ணு.

அது சரி. நான் தான் ஏதோ நினைப்புல  தப்பா நினைச்சிட்டேன்.

“புத்தி ஒரு இடத்தில் இருந்தா தானே. சரியான நினைப்ப.

இந்த மனுஷன் என்ன லூசா டா. பெங்களூர்ல இருந்து வந்த பொண்ண நேரா வீட்டுக்கு போக சொல்ல வேண்டியது தானே. ஆஃபீஸ்க்கு எதுக்கு வர சொல்றான்.

அது அவங்க பர்ஷனல் மேட்டர். அதெல்லாம் நாம கேட்க முடியாது ஆதி.

“என்னமோ போடா. ஆசையா வந்தேன். இதுக்காக காலைல நேரமா எழுந்து வேற குளிச்சிட்டு வந்தேன்.  இப்படி  போய்டுச்சே” என முகத்தில் வாட்டத்தை காட்டினான்.

“அது உனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லவா?…”

“நீ ரெண்டே ரெண்டு கூட சொல்லுடா…”

“நீ நெஜமாவே என்னைய உன்னுடைய ஃப்ரண்டா நினைக்கிறாயா?”  ஆதி.

“சுத்தி வளச்சி பேசாம நேரா விஷயத்துக்கு வாடா” என்றான்.

“தயவு செஞ்சு இந்த காதல் விளையாட்டு விளையாடாத. இதோட நிறுத்திக்கோடா. ப்ளீஸ்”  என்றான்.

“நான் எங்கடா விளையாடுறேன்.  அது தானா வருது…”

“வேணாம்டா ஆதி.  இது நல்லதுக்கு இல்ல. காதல்னா என்னன்னு நெனச்ச…”

நீ என்ன வேணா நெனச்சுக்கோ யாதவ். காதலுக்கு  எனக்குன்னு தனியா ஒரு டிக்ஷனரி இருக்கு.

“அது நல்லதா இருந்தா பரவால்ல. கேவலமால்ல இருக்கு…”

“இதுல என்னடா கேவலம்னு நினைக்கிற. சத்தியமா எனக்கு புரியல யாதவ்…”

நம்மளுக்கு புடிச்ச பொண்ணு லைப் பார்ட்னரை செலக்ட் பண்றது தப்புன்னு சொல்றியாடா.

புடிச்ச பொண்ணு லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்றது தப்புனு சொல்லலடா.  அதுக்காக காதல்னு சொல்லிட்டு நிறைய பொண்ணுங்க கிட்ட பேசி பழகிட்டு இருக்கியே. அவங்க மனசுல ஆசைய விதைக்கிறியே அதை தான் தப்புன்னு சொல்றேன்.

காதல்னா இதுதான் நம்ம லைப் பார்ட்னர்னு மனசுல தோணனும் யாதவ்.  இந்த சினிமாவுலலாம் சொல்லுவாங்களே வயித்துல  பட்டாம்பூச்சி பறக்கற மாதிரி இருக்கும்னு.

‘உண்மையான காதல்னா தான  மனசுக்குள்ள சிறகடிச்சி பறக்க தோணும்’ என யாதவ் நினைத்துக் கொண்டான்.

எனக்கு  இதுவரைக்கும் அப்படி ஒரு ஃபீலிங் கே வரலடா.

அப்ப யாரு உங்க மனசுக்குள்ள இன்னும் வரலனு அர்த்தம்.

அதான் எல்லாருக்கும் போன் நம்பரை கொடுத்து பேசிட்டு இருக்கியே. இதோட  நிறுத்திக்கோடா ஆதி. இப்படியே போனா  நிச்சயமா ஏதாவது  பிரச்சனை ஆகும்டா.

“என்னடா பிரச்சனை ஆகும்.

ஏண்டா பயந்து சாகுற…”

“பயப்படாம என்ன செய்ய. உனக்கு ஃப்ரண்டா இருக்க பாவத்துக்கு இதெல்லாம் எனக்கு தேவ தாண்டா” என யாதவ் கோவத்தை வெளிப்படுத்தினான். எனக்கு தெரிய நாலு பொண்ணுங்க கூட  பேசுற. எப்படி மாட்டிக்காம பேசற.

அதெல்லாம் சாணக்கிய தந்திரம். எல்லாத்தையும் என் கண்ட்ரோல்ல வெச்சி இருப்பேன்டா.  நான் சும்மா பேசுறேன். அவ்வளவு தான்.  அவங்கல நேர்ல இப்ப வரைக்கும் பார்த்ததுகூட கிடையாது டா.    அவங்கள  ஃபோட்டோல தான்   நான் பார்த்திருக்கேன்.   மத்தபடி நான் தப்பு பண்றவனோ மோசமானவனோ  இல்ல டா.

ஆமாடா. நீ ரொம்ப நல்லவன் தான் போடா. ஒரே டைம்ல 4 பேரும் மெசேஜ் பண்ணா எப்படி சமாளிப்ப.

அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல டா.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோட்வேர்டு  கொடுத்து இருக்கேன். அத வச்சு தான்  சமாளிப்பேன்.

எத்தனை நாளைக்கு அத வச்சி சமாளிப்ப. பண்றதே  மொள்ளமாரித்தனம்.  இதுல என்ன கோட்வேர்டு வேற.  அதை மறந்து தொலச்சிட்டா என்ன பண்ணுவ.

அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது.இப்போ யாஷிகா

பேசினா தேவ்னு  மட்டும் தான் சொல்லுவா.  அதுவே  தூரிகா பேசினா  ஆதினு மட்டும் சொல்லுவா. ரகசியா மாமானு மட்டும்  தான் சொல்ல சொல்லி இருக்கேன்.மிர்திகா  மட்டும் என்ன சொன்னாலும் கேட்கமாட்டா.  வாடா போடா டேய்னே தான் சொல்லுவா.

ரொம்ப கேவலமா இருக்குடா.

போடா.  ஒவ்வொருத்தரும் இப்படி மட்டும்தான் சொல்லணும்னு சொல்லி வச்சிருக்கேன். எப்படி.

அட கூறு கெட்டவனே இதெல்லாம் ஒரு விஷயமாடா.  கண்டிப்பா நீ ஒரு நாளைக்கு மாட்டுவ.  அன்னைக்கு உனக்கு இருக்கு.

“நான் மாட்றதுக் கு வாய்ப்பே இல்ல டா மச்சி”  என காலரை தூக்கி விட்டு தனது தலைமுடியை   ஸ்டைலாக வருடி விட்டான்.

எப்படி ஆதி அவ்வளவு நம்பிக்கையோட சொல்ற.

“அது அப்படி தான். சிம் கார்ட மட்டும்  மாத்தி தூக்கி போட்டு போயிட்டே இருப்பேன்.  எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா.  மாட்டினா நீதாண்டா மாட்டுவ”  என்றான்.

“நான் எதுக்குடா மாட்டுவேன்” என  அதிர்ச்சியுடன் ஆதியை பார்த்தான்.

தொடரும்….

Advertisement