Advertisement

மெல்லிசை ?? – 16

நிஜமாவே நீங்க என்னைய லவ் பண்றீங்களா? இல்ல டைம்பாஸ்க்கு தானா?

அது..வந்து. அப்படி எல்லாம் இல்ல.

“இதுக்கு மேல எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்லடா. நீ உண்மையாவே லவ் பண்ற நல்லவன் தானா இன்னைக்கு ஈவினிங் அஞ்சு மணிக்கு நாம மீட் பண்றோம். அவ்வளவுதான். வேற எந்த ரீசனும் எனக்கு தேவை இல்ல” என்றாள்.

“அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு என்னால வர முடியாது. நீ நம்புனா நம்பு. நம்பளனா போடீ. எனக்கு வேலை இருக்கு” என்றான்.

எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு முறை கூட தன்னோட லவ்வர பாக்கணும்னு நினைக்காத எவனும் இருக்க முடியாது. இவ்வளவு தூரம் ஒவ்வொரு டைம் கேட்கும் போதும் நீ ஏதோ ஒரு ரீசன் சொல்றேன்னா உன்கிட்ட உண்மையான லவ் இல்லன்னு தாண்டா அர்த்தம்.

சரி அப்படியே வச்சுக்கோடீ.

உன்கிட்ட நிரூபிக்கனும்னு எனக்கு அவசியமில்ல.

அப்புறம் எதுக்குடா லவ் பண்றேன்னு சொன்ன.

சொன்னேன். இல்லைன்னு சொல்லலியே.

சரி நீ வரவேண்டாம். நானே உன் இடத்தை கண்டுபிடிச்சி வரேன்.

என்னடீ சொல்ற. தேவையில்லாம பிரச்சினை பண்ணாத. எப்படி கண்டுபிடிச்சு வரப்போற. இவ பெரிய சிஐடி.. போடீ.

ஆமாடா. நான் அப்படி தான். ட்ரூ காலர்ல எல்லாம் போட்டு நான் வரமாட்டேன் கண்ணா. நீ எவன் பேர்ல வேணா சிம் வாங்கி இருக்கலாம். நீயே ஃப்ராடுனு தெரியுது. உன்னை கண்டு பிடிக்கிறது எனக்கு ஒரு மேட்டரே கிடையாது. நான் ஐடி ஃபீல்டுல ஒர்க் பண்றேன். என் ஃபோன் நம்பரை எப்படி கண்டு பிடிக்கணும்னு எனக்கு தெரியும்.

இப்ப எதுக்கு தேவையில்லாம என்கிட்ட பிரச்சனை பண்ற.

தேவையோட தான் பிரச்சினை பண்றேன். முதல்ல ஓப்பனா பேசுடா. நீ என்னைய லவ் பண்றியா? இல்லையா? எஸ் ஆர் நோ மட்டும் சொல்லு. நீ உண்மைய மட்டும் சொல்லனும்னு எதிர்பார்க்கிறேன்.

ரொம்ப ஓவரா பேசாதடீ. இவ்வளவு தூரம் நீ பேசியதுக்கு பிறகு நானும் ஓப்பனாவே சொல்றேன். உன் கேரக்டர் எனக்கு பிடிக்கல. நீ எனக்கு செட் ஆவனு எனக்கு தோணல. உன்ன கல்யாணம் பண்ணனும்னு நான் நினைக்கல.

நீ ஓவரா பேசாதடா. என் கேரக்டர் முன்னாடியே தெரிஞ்சுதான லவ் பண்ணுன.

அப்ப முழுசா தெரியாதுடீ. இப்பதான் தெரியும். மூணு மாசத்துக்கு மேல ஒரு டிரஸ யூஸ் பண்ண மாட்டாளாம் மகாராணி. உன்னோட மேக்கப் செட்டுக்கே என் சம்பளம் பத்தாது. உன்னை எல்லாம் எவன் கல்யாணம் பண்ணினாலும் தெருவுல நிறுத்திடுவ.

என்ன பத்தி பேசுற ரைட்ஸ் உனக்கு இல்லடா.

அதே தான் நானும் சொல்ல வரேன். என்ன பத்தி பேசுற ரைட்ஸ் உனக்கும் கிடையாதுடீ.

நீ எல்லாம் ஒரு பொண்ணு. உன்னை எல்லாம் எவன் கல்யாணம் பண்ணாலும் சத்தியமா உருப்பட மாட்டான்.

என் கேரக்டர் பத்தி நீ பேசாதடா. நேர்ல மீட் பண்ண கூட தைரியமில்லாத கோழை. உனக்கு என்னடா வாய். இதான் உன் புத்தின்னு தெரிஞ்சு போய்டுச்சு. நீ நல்லவன் கிடையாதுனு புரிஞ்சுகிட்டேன்.

“அதான் தெரிஞ்சுகிட்ட இல்ல. அப்புறம் என்னடீ பேச்சு. ஃபோனை வைடீ” என்றான்.

“உன்ன நான் பழி வாங்கனும்னா எனக்கு ஒரு நாள் போதும். ஆனா உன்ன மாதிரி அசிங்கத்தை நேர்ல பாக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.

பாக்கலாம்னு தாண்டா இவ்வளவு தூரம் உன்கிட்ட பேசினேன். உன்னோட சுயரூபத்தை புரிஞ்சுகிட்டேன். மத்த பொண்ணுங்க மாதிரி தெய்வீகக் காதல்னு உட்கார்ந்து அழுவேன்னு நினைச்சிடாதடா. உன்னைய ஒரு குப்பையா நினைச்சி தூக்கிப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். அதுதான் இந்த மிர்த்திகா உடைய கேரக்டர். மவனே இனிமே வாட்ஸ்ப், பேஸ்புக்ல, ட்விட்டர்ல, இன்ஸ்டாகிராமிலனு எங்கேயுமே உன் ஐடியா கூட நான் பாத்துரக்கூடாது. எல்லாத்தையும் பிளாக் பண்றேன். என் நம்பர டெலிட் பண்ணிட்டு போயிட்டே இருடா ஃப்ராடு. குட் பாய்” என அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாமல் இணைப்பை துண்டித்தாள். சொன்னது போலவே அவனது மொபைல் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டாள். தனது வேலையை பார்க்க தொடங்கினாள்.

‘அப்பாடா. அடுத்த இம்சையும் முடிஞ்சது. இப்ப தூரிகா பிரச்சனை தான் விஸ்வரூபமா இருக்கு. இந்த அண்ணன் இருக்க பொண்ணுங்கள இனிமே லவ் பண்ணக்கூடாது. தேவை இல்லாத பிரச்சினை வரும் போல இருக்கே. இதற்கெல்லாம் முடிவு கட்டணும்னு பேசாம சிம்ம உடைச்சு தூக்கி போட்டுட்டு கொஞ்ச நாளைக்கு ஊருக்கு போக வேண்டியதுதான். ஒரு ஒரு மாசம் கழிச்சு திரும்பி வந்துடலாம்’ என நினைத்தவன், யாதவ்! “நீ சொன்ன மாதிரி நான் ஊருக்கு போகணும்னு முடிவு பண்ணிட்டேன் டா” என்றான்.

என்ன மச்சி பிரச்சனைய ஃபேஸ் பண்ண முடியலையா? நீ இப்படித்தான் மாட்டுவனு அன்னைக்கே நினைச்சேன் டா.

“போதும் நிறுத்து. நான் மேனேஜர் கிட்ட ஏதோ ஒரு காரணத்தை சொல்லிட்டு ஊருக்கு கிளம்புறேன். எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்னு நினைக்கிறேன். என்னால முடியல யாதவ்” என கூறியவன் முதல் வேலையாக தனது செல்போனில் இருந்த சிம்மை கழட்டி இரண்டாக உடைத்து

அதை யாதவின் கையில் கொடுத்தான்.

என்னடா திடீர்னு சிம்மையே உடச்சிட்ட.

“வேற என்ன பண்ண சொல்ற. இவளுங்க தொல்லை எல்லாம் என்னால தாங்க முடியல. லைஃப்ல கல்யாணமே வேணாம்னு வெறுப்பா இருக்கு” என கூறிவிட்டு மேனேஜர் அறைக்கு சென்றான்.

சார் ஒரு விஷயம் பேசனும்.

என்ன ஆதி. சொல்லுங்க.

எனக்கு ஒரு மாசம் லீவு வேணும்.

ஆமா இவரு கலெக்டர் உத்தியோகம் பாக்குறாரு. ஒரு மாசம் லீவு கேட்ட உடனே தூக்கி கொடுத்துடுவாங்க. ஏற்கனவே நீ போட்ட லீவுக்கு இந்த மாச சம்பளமே எழுபது பர்சண்ட் தான் வரும். இதுல ஒரு மாசம் லீவு கொடுத்து என்ன பண்றது ஆதி.

“சார் ப்ளீஸ். அம்மாக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்காங்க. இப்ப தான் கால் வந்துச்சு.

அங்க என்ன கண்டிஷன்னு எனக்கு தெரியாது” என மனசாட்சியை கொன்று விட்டு சொன்னான்.

அச்சோ. சாரி ஆதி. இதுக்கு கண்டிப்பாக கொடுக்கணும் தான். ஆனா ஒன் மன்த் தர முடியாதுனு உங்களுக்கே தெரியும்.

நான் ஊருக்கு போயிட்டு கண்டிஷன் என்னன்னு பாத்துட்டு கால் பண்றேன் சார்.

“சரி ஓகே ஆதி. இமீடியட்டா கிளம்புங்க. லீவ் ரொம்ப போகாம பாத்துக்கோங்க” என்று கூறினார்.

‘அப்பாடா ஒரு லீவுக்கு எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு’ என நினைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“டேய்! மச்சி நான் லீவ் சொல்லிட்டேன். எவ காலும் இனி வராது. நான் நிம்மதியா இருக்க போறேன்” என்றான்.

“இடத்த காலி பண்ணு. நானாவது நிம்மதியா இருப்பேன்” என்றான் யாதவ்.

இங்கு ஜெய்யின் அப்பா கதிரேசன் சம்யுக்தா சொன்ன வார்த்தையை கேட்டு படிச்சபுள்ள இப்படியா பேசறது. நாகரீகமா பேசறது இல்லையா?

இப்ப என்ன மாமா சொல்லிட்டேன்.

அதான் என் புள்ளைய கழுதைனு சொல்லாம சொல்லிட்டியே.

சம்யுக்தா எதுவும் பேசாமல் மௌனமாக தலை குனிந்து நிற்க.

“நீங்க போயிட்டு ஆக வேண்டிய வேலை பாருங்க. ஆதிக்கு ஃபோன் போட்டு எப்ப ஊருக்கு வருவானு கேளு ” என லட்சுமி கூற.

“சரிம்மா” என்றான் ஜெய்.

கதிரேசனும் அமைதியாக வயலுக்கு கிளம்பினார்.

உடனே ஜெய் ஆதிக்கு போன் பண்ணினான்.

“என்னடா அண்ணா திடீர்னு ஃபோன் பண்ற. என்ன விஷயம்” என்றான்.

நான் பண்ணா திடீர்னு பண்ற மாதிரி தான் தோணும். ஏன் நீ கால் பண்ணி இருக்கலாமே.

“நான் ரொம்ப பிஸிடா அண்ணா. நீ விஷயத்தை சொல்லு” என்றான்.

ஊருக்கு எப்படா வர.

எதுக்குடா அண்ணா.

நான் வீட்டை காலி பண்ணிட்டு ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்.

என்னடா சொல்ற.

நீ எப்ப வர. அதை மட்டும் சொல்லு.

“நான் நைட்டு ட்ரெயின் பிடிச்சி ஊருக்கு வரேன் டா அண்ணா” என்றான்.

“என்னடா சொல்ற. நிஜமாவா?”

ஆமாடா. நீயும் வந்துட்டேங்கிற. அம்மாவும் வர சொல்லிக்கிட்டு இருக்காங்க. எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆகுது. மார்னிங்லாம் அங்க இருப்பேன் டா அண்ணா.

சூப்பர் டா. இப்பவே அம்மா கிட்ட சொல்றேன். எல்லாரும் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க ஆதி.

“ஓகே. நான் போய் பேக் பண்ணிட்டு இருக்கிற வேலையை பாக்குறேன்.

அப்புறமா கால் பண்றேன் டா அண்ணா. கால் பண்ணாலும் பண்ணலனாலும் காலையில வந்துருவேன்” என்றான்.

“ஓகே. ரொம்ப சந்தோசம். நீ வாடா. அப்புறம் பேசிக்கலாம்” என கூறிவிட்டு ஃபோன் காலை கட் பண்ணிவிட்டு ஜெய் வீட்டில் உள்ள அனைவரிடமும் இந்த சந்தோஷமான செய்தியை கூறினான்.

அனைவருக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் இசைக்கு மட்டும் தாங்கமுடியாத மகிழ்ச்சியாகவும் தன் காதலை நேரில் பார்த்து சொல்லப் போகிறோம் என்ற ஆசையும் முன்பை விட அதிகமானதை அவனது இதயத்துடிப்பு உணரவைத்தது.

மெல்லிசை தொடரும்..

அன்பு நெஞ்சங்களுக்கு

மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு தேர்வு பணி தொடங்கியதால் அப்டேட்ஸ் போட மிகவும் தாமதமாகிவிட்டது.. இனி தொடர்ந்து அப்டேட்ஸ் தருவேன் சகோக்களே..

Advertisement