Advertisement

மெல்லிசை  ?? – 15

யாதவ் கொடுத்த  இந்த  அடியை எதிர்பார்க்காத ஆதி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியோடு விழிகள் விலகாமல் அவனைப் பார்த்தான்.

என்னடா ரொம்ப அதிர்ச்சியா இருக்கா? தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க.  நானும் மனுஷன் தான். எத்தனை நாளைக்கு பொறுத்துக்க முடியும். நல்லத நாய் சொன்னா கூட கேட்டுக்கணும்னு சொல்லுவாங்க.  இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்.  மரியாதையா உன்னைய  நீ மாத்திக்கோ.

அத வாயில சொல்ல வேண்டியதானே.  இப்ப எதுக்குடா அடிச்ச.

ஏன்?  உன்னைய  அடிக்க எனக்கு உரிமை இல்லையா?

உரிமை இருக்குடா.  அதனாலதான் அமைதியா நிக்கிறேன்.  இதுவே வேற ஒருத்தனா இருந்தா நடக்கறதே வேறயா  இருக்கும்.

என் கூட இருந்தா ஒழுக்கமா இரு. இல்லைனா  தயவுசெஞ்சு எடத்த காலி பண்ணு.

என்னோட லைஃப் பார்ட்னர தாண்டா செலக்ட் பண்றேன். அதுக்காக கொஞ்சம் தேடுறேன். அவ்வளவுதான.

“ச்ச்சீ.  வாய மூடு. இந்த வார்த்தையை கேட்டு காதே புளிச்சு போயிடுச்சு” என்றான் யாதவ்.

“அப்போது அங்கு மேனேஜர் வர.  வந்த வேகத்திலேயே ஆதி கொஞ்சம் என்னோட  ரூமுக்கு வாங்க” என்றார்.

“இந்த  மண்டையன் எதுக்கு கூப்பிடுறானோ தெரியலையே. என்ன  சொல்லித் தொலைக்க போறானோ?” என சொல்லிக் கொண்டே ஆதி மேனேஜர் அறைக்கு சென்றான்.

நீங்க கொடுத்த டீட்டெயில்ஸ் எல்லாம் பாத்துட்டேன். அத  மெயின் பிரான்ஞ்சுக்கு ஃபார்வோடு பண்ணினேன்.

ஓகே சார்..

நீங்க லாங் சைட்  போறதுக்கு பைக்ல போறதாகவும் , அதுக்கு பெட்ரோல் போட  சம்டைம்ஸ் ஆட்டோல போகனு  ரெண்டுக்கும்  கணக்கை எழுதி வச்சிருக்கீங்க.  பில்  ரொம்ப ஓவரா தெரியுதாம்.  அதனால இனிமேல் ஆட்டோலயும் போக  வேணாம்,  பைக்லயும் போக வேணாம்.

பின்ன எப்படி சார் போறது.

மெய்ன் ப்ரான்ஞ்ல இருந்து பஸ்ல போக சொல்லிட்டாங்க.  உன்னைய கால்  பண்ண சொன்னாங்க.

“என்ன சார் சொல்றீங்க?  பஸ்ல  போறது ரொம்ப லேட் ஆகும் சார்” என்றான் ஆதி.

“லேட் ஆனாலும் பரவால்ல.  நீங்க பஸ்ல போயிட்டு பஸ்லயே வாங்க. சம்பளத்தில் பாதிய  இதிலயே கணக்கு போட்டு வாங்குறீங்க. அதெல்லாம் எங்களுக்கு சரிப்படாது.  இனிமே லாங் சைட் போனா நீங்க பஸ்ல தான் போகணும்.  அதமீறி  பைக்ல போனா செலவு நீங்களே பண்ணிக்கோங்க”  என்றார்.

‘ஹிக்கும்.. மெய்ன் ப்ரான்ஞ்சுல கால் பண்ணி பேசிட்டாலும் அப்படியே வெளங்கிடும். கன்னடத்துல, இங்கிலீஷ்ல பேசியே சாவடிப்பானுங்க. கன்னடமும் தெரியாம, இங்கிலீசும் முழுசா தெரியாம கஷ்டமடா சாமி’  நினைத்துக் கொண்டு என்ன சொல்வதென  தெரியாமல் யோசித்தார். “வேறுவழியின்றி ஓகே சார்” என கடுப்போடு கூறிவிட்டு வெளியே வந்தான்.

“என்னடா  முடிவு  பண்ண”  என யாதவ் கேட்க.

பஸ்ல எப்படிடா போறது. ஏதோ இதுல கணக்கு காட்டி கொஞ்சம் ஆட்டைய போட்டா அதுக்கும் ஆப்பு வச்சிட்டானுங்க.  உடனே எப்படி முடிவு பண்ண முடியும்.  அதான் யோசிக்கிறேன்டா.

நீ பஸ்ல போறத பத்தி நான் கேட்கல.  லைஃப பத்தி கேட்கிறேன்.

“இவன் ஒருத்தன்.  இருக்கிற கடுப்புல.  நான் மட்டும் தான் லாங்  சைட்டுக்கு போகனுமா?  உன்ன போக சொன்னா என்ன?  எப்ப பார்த்தாலும் என்னையவே  போக சொல்றான்.  அடுத்த மூணு நாள் நான் லாங் சைட்  போகணும்.  இங்க பக்கமா  இருக்கும்னு தான் இங்க  வீடு பாத்தேன்.  இங்க இருந்து திரும்ப அங்கயே போக சொன்னா  ஐம்பது கிலோ மீட்டருக்கு அலையணும்.   என்ன வேலையோ?  என்ன கர்மமோ?” என புலம்பி கொண்டு அமர்ந்தான்.

அப்போது தூரிகாவிடம் இருந்து கால் வந்தது.

‘இவளுங்க வேற. மாத்தி மாத்தி கால் பண்ணி உயிர வாங்குறாளுங்க.
இவ என்ன சொல்லப் போறாளோ?  இவ இம்சையும்  தாங்கல. இவளையும் கட் பண்ண வேண்டியதுதான்’ என நினைத்துக் கொண்டு இணைப்பிற்கு  உயிர் கொடுத்தான்.

ஹாய்!  ஆதி.  என்ன பண்றீங்க?.

“ஆஃபீஸ்ல இருக்கேன்.  கொஞ்சம் ஒர்க்” என்றான்.

நீங்க என்ன வேணா பண்ணுங்க. ஆல்ரெடி நான் கேட்டிருந்தேன்.  நாம எப்ப மீட் பண்ணலாம்.

நான் கொஞ்ச நாளைக்கு பிஸி.  இப்பலாம் மீட் பண்ண முடியாது.

அதெல்லாம் முடியாது.  என்ன பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது. நாம மீட் பண்ணியே ஆகணும்.

அதெல்லாம் எதுவும் முடியாது. மீட்  இப்ப என்ன அவசரம்.

அவசரம்தான் ஆதி.  நேத்து நைட்டு உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு டெலிட் பண்ணாம அப்படியே தூங்கிட்டேன். எங்க அண்ணன் மெசேஜ எடுத்து படிச்சு பாத்துட்டான்.

“அச்சோ!  அப்புறம் என்ன ஆச்சு.  ஏண்டி உங்க அண்ணனுக்கு  அறிவே கிடையாதா?  அடுத்தவங்க மொபைல எடுத்து பாக்கலாமா? படிச்சவந்தானடி. என்ன  குடும்பம் இது.

என் குடும்பத்த பத்தி பேசாதீங்க.  டெலீட் பண்ணாம தூங்கினலு என் தப்பு.

” ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே”

என்னத்த சொல்லி சமாளிக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை டார்லிங், செல்லம்,  ஐ லவ் யூ னு  கிஸ்ஸிங்  இமேஜா  போட்டுட்டு என்னத்த சொல்லி சமாளிக்க.

இப்போ என்னதான் ஆச்சு?

அண்ணா  அடிச்சுட்டாங்க.
அழுது கெஞ்சி  இன்னும் வீட்டில யார்கிட்டயும் சொல்லல.

இவ்வளவு நடந்தும் உன்னோட  ஃபோனை புடுங்கி வைக்கலையா? இன்னும் பேசிகிட்டு இருக்க.

உங்களுக்கு அப்படி வேறெ ஒரு  ஆசையா?  அவன் வீட்ல இல்ல.  நான் தெரியாம தான் பேசிட்டு இருக்கேன். உன்கிட்ட பேச மாட்டேன்னு சத்தியம் வேற பண்ணியிருக்கேன்.

‘ரொம்ப சந்தோஷமடா சாமி’ என நினைத்துக் கொண்டு திரும்பி வந்து உங்க அண்ணன் பார்த்து பிரச்சனை பண்றதுக்குள்ள லாக் போட்டு தொல.  ஒரு போன ஒழுங்கா லாக் போட்டு வைக்க தெரியல.  நீ எல்லாம் என்னடீ ஜென்மம்.  அன்னைக்கு என்னவோ வீரவசனம் பேசினவ.  என் உயிரே போனாலும் உங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்னு.  எனக்கு அதெல்லாம் வெறும் டயலாக் தானா?

இப்பவும் நான் உங்கள காட்டிக்கொடுக்கல.  எங்க அண்ணன் எவ்வளவு கேட்டும்  நான் ஒரு வார்த்தை கூட பேசல.  உங்கள பத்தி எதுவும் சொல்லல.

‘தெரிஞ்சா தானடீ  சொல்லுவ’  என்ன நினைத்துக் கொண்டு ரிஸ்க் எடுக்காத தூரி.  பேசாம என் நம்பர டெலிட் பண்ணிடு.

என்ன சொல்றீங்க?  அப்படி எல்லாம் பண்ண முடியாது.  வாழ்ந்தாலும் சரி. செத்தாலும் சரி.  அது உங்களோட தான்.

‘ஹிக்கும். இந்த  டயலாக எப்ப தான் விடுவாளுங்க.  எல்லாம் சினிமா பார்த்து கெட்டு போனதுங்க’  என நினைத்துக் கொண்டு,  “என்னால உங்க பேமிலில பிரச்சனை வேணாம்.  கொஞ்சநாள் டெலிட் பண்ணிட்டு சைலண்டா இரு. அப்புறம் பேசிக்கலாம்” என்றான்.

எங்க அண்ணன் வீட்டில என்ன சொன்னாலும்.  சரி என்னோட லைஃப்ல  உங்களைத் தவிர வேறு யாரும் வர முடியாது.

எதுக்குடி லூசுத்தனமா அடம்பிடிக்கிற. ப்ராக்டிகலா யோசிடீ.  நாம  இன்னும் ஒரு முறை கூட நேரில் கூட பார்த்தது இல்ல.
கண்மூடித்தனமா எப்படி அன்பு வைக்கிற.  லவ் பண்ற.

லவ் பண்ணி என்ன பிரயோஜனம். அந்தப்பக்கம் ஒன்னுமே இருக்க மாதிரி தெரியலையே.

அப்படி எல்லாம் இல்லடீ.  எனக்கும் உன் மேல நிறைய  அன்பு இருக்கு. கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு. கொஞ்ச நாளைக்கு மீட் பண்ண முடியாதுன்னு தான் சொல்றேன். புரிஞ்சுக்கோ தூரிகா.

எதுவும் சொல்ல வேணாம்.  நீ சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நான் ஒன்னும் லூசு கிடையாது.  உன்னை நம்பி தான் நான் என்னோட அந்த மாதிரி ஃபோட்டோவ  கூட அனுப்பினேன்.

ஹேய்!  இப்ப எதுக்கு ஃபோட்டோ பத்தி பேசுற.  எந்த சூழ்நிலையிலும்  உன் ஃபோட்டோவ நான் மிஸ்யூஸ்  பண்ண மாட்டேன்.  நீ என்னைய தாராளமா நம்பலாம்.

நார்மலா  வெறும் போட்டோ அனுப்பி இருந்தா  பயப்பட மாட்டேன் ஆதி.  நான் அனுப்புனது  வேற மாதிரி ஃபோட்டோஸ்  ஆச்சே.

ஏண்டீ!  அதுல தலையே இல்ல. வெறும் முண்டத்த   மட்டும் அனுப்பிட்ட.  அதை  வச்சு நான் என்ன பண்ண போறேன் .

உங்களுக்கு முகத்தையும் சேர்த்து வேற அனுப்பனுமா?  அதுக்கு பர்ஸ்ட்  என்  கழுத்துல தாலி கட்டுங்க.

முகத்தை தான்  ஏற்கனவே பார்த்து இருக்கேன்ல.  நீ  இந்த மாதிரி ஃபோட்டோஸ் அனுப்பும் போது  மட்டும் முகத்தை காட்ட மாட்டேங்குற.

“நீங்க எப்ப தாலி கட்றீங்களோ அப்புறம்  முழுசா பார்த்துக்கோங்க” என்றாள்.

“உன்கிட்ட வெட்டி கதை பேச நேரமில்ல.  எனக்கு ஆஃபீஸ்ல வேலை இருக்கு” என்றான்.

ஆதி  நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.  நீங்க அசால்டா பேசினா கிளம்பி நேரிலேயே வருவேன். வீட்டில் பிரச்சனை பெருசா நடக்கிறதுக்குள்ள  நேர்ல எங்க வீட்ல வந்து பேசுங்க

‘வரது எல்லாம் நமக்கு வில்லங்கமா தான் வருதுங்க.  ஒரு சில  விஷயங்கள் மட்டும் இவகிட்ட புடிச்சிருக்கு.  ஆனா இவ கிட்ட நிறைய மைனஸ் இருக்கு.  இவள  கட்டிக்கிட்டு யாரு குப்பை கொட்றது’  என நினைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்முனையில் துர்காவின் அண்ணனின் குரல் கேட்டது.

“நேத்து அவ்வளவு தூரம்   சொல்லியும் மறுபடியும்  பேசிகிட்டு இருக்கியா?  உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்?”  என பரத்தின் குரல் கேட்க.

“ஆதிக்கு  அதிர்ச்சியாக இருந்தது. ஃபோனை அவளிடமிருந்து பிடுங்கி  ஏண்டா பொறுக்கி யாருடா நீ?  எத்தனை நாளா என் தங்கச்சியை ஏமாத்திட்டு இருக்க. எந்த ஊரேடா?  ஹலோ.. ஹலோ”  என்றான்.

ஆதி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான். “போசாம ஃபோனை கட் பண்ணலாமா”  அவசரமாக சிந்தித்தான்.

“எத்தனை நாளா உனக்கு அவன் கூட  பழக்கம்?”  என தங்கச்சியை அறைந்தான். ஆதிக்கு  அவனது குரலும் அடியும்  நன்றாகவே கேட்டது.

இப்பதான் நான் கொஞ்ச நாளா பழக்கம்.

“அவன்  யாரு?  எந்த ஊர்?  எப்படி பழக்கம்?” என கேள்வி மேல் கேள்வி கேட்க. தூரிகா மௌனமாகவே இருந்தாள்.

“டேய்! யாருடா நீ? எந்த ஊரு?”  என பரத் கேட்க.

ஆதி ஃபோனை கட் பண்ணினான்.  தூரிகாவின் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டான்.

என்ன மச்சி.  அடுத்த ஆப்பு ரெடி ஆயிடுச்சா?

“என்ன நேரத்துல வாய் வெச்சியோ.  எல்லாம் பிரச்சனையா நடக்குது” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்து மிர்த்திகாவிடம் இருந்து கால் வந்தது.

“என்னடா இன்னைக்கு பிரச்சனை மேல  பிரச்சனையா வருது. ஃபோன எடுக்கலாமா? வேண்டாமா?”  என யோசித்தான்.

“அதற்குள் மிர்த்திக்காவிடம் இருந்து மெசேஜ் வந்தது.  நீ மட்டும்  ஃபோன் எடுக்கல கிளம்பி நேர்ல வருவேன்டா”  என்று அனுப்பி இருந்தாள்.

‘அட்ரஸே  தெரியாது.  எங்கனு வருவா?  சரியான திமிர் பிடிச்சவளா இருக்கா?’  என நினைத்துக் கொண்டே மொபைலை பார்க்க.  மீண்டும் அவளிடமிருந்து கால் வந்தது.  வேற வழியே இல்லாமல்  ‘ பேசி தொலைச்சிட்டு இவளையும் பிளாக்ல போட வேண்டியது தான்’  என நினைத்தவன், “ஹலோ!” என்றான்.

கோவமா பேசினா அப்படியே தொலஞ்சி  போய்டுவானு  விட்டுட்டீங்களோ.

அப்படி எல்லாம் இல்லடீ. கொஞ்சம் வேலை அதிகம்.  அதான்.

இந்த சமாளிப்பெல்லாம்  எங்கிட்ட வேணாம்.  ஆம்பளையா லட்சணமாய் நேரடியா பேசுடா.  உன் பிரச்சனை என்ன?

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே மிர்த்திகா.

ஓகே. அப்போ  ஈவினிங் ஃபைவ்க்கு  அசோக் நகர் வா.  நான் உன்ன மீட் பண்ணனும்.

என்ன அசோக் நகருக்கா? அசோக் நகர்  தெரியாதா?

அப்படி இல்ல  மிர்த்து.

“அப்புறம் என்ன?  நீ வேணா  உன்னோட  அட்ரஸ் சொல்லு.  நான் அங்க வரேன்” என்றாள்.

வேதாளம் முருங்கமரம் ஏறுதே. கடவுளே!  ” இப்ப எதுக்கு மீட் பண்ணனும்” எனக் கேட்டான்.

உங்கள நேர்ல பாக்கணும்.  லவ்வ சொல்லி நாலு மாசம் ஆகுது.  இன்னைக்கு வரைக்கும் நீங்க மீட்  பண்ணவே இல்ல.  நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சந்தேகத்தை அதிகமாக்குது.

மெல்லிசை தொடரும்…

Advertisement