Advertisement

ஒரு பாத்திரத்தில் சட்னிக்கு தேவையான அனைத்தையும் போட்டு இந்தாம்மா சட்னி அரைச்சுடு.  அந்தா பாரு  ஆட்டுக்கல் இருக்கு. நான் ஆட்டுக்கல்ல இப்ப தான்  கழுவிட்டு வந்தேன்.

‘நானா  வாய கொடுத்து மாட்டிக்கிட்டனே.  வேற வழியே இல்ல’  நினைத்துக் கொண்டு ஒரு சொம்பில் தண்ணீரையும் சட்னி அரைக்க வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

மிக்ஸியிலேயே  அரைத்து பழக்கப்பட்டவள் உரலில் அரைப்பதற்கு கஷ்டப்பட்டாள்.  திணறிக்கொண்டு சட்னி ஆட்டிக் கொண்டிருக்க.

ஜெய் அங்கு வந்தான்.

“இதெல்லாம் எனக்குத் தேவைதானா?  இதுக்கு தான இங்க கூட்டிட்டு வந்திங்க”  என முறைத்தாள்.

இங்க வந்து  வார்த்தைய விடாத சம்யு.  அமைதியா இரு.

“நீங்க உட்கார்ந்து நாலு சுத்து சுத்துங்க.  என்னால சுத்த முடியல” என்றாள்.

“சுற்றிலும் பார்த்தான்.  அங்க சித்தி வராங்க.  அப்பா கிட்ட சொன்னா பிரச்சனையாகும். நீயே பண்ணு” எனக் கூறி விட்டு வெளியே சென்றான்.

‘உனக்கு இருக்கு இன்னைக்கு’  என நினைத்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க கஷ்டப்பட்டு சட்னி அரைத்து முடித்தாள்.

“அப்பொழுது இன்னொரு பாத்திரத்தை  எடுத்துக் கொண்டு வந்த மஞ்சு இது குழம்பு வைக்க.  அப்படியே ஆட்டி  எடுத்து எடுத்துட்டு வந்துரும்மா” எனக் கூறிவிட்டு இன்னொரு சம்பத் தண்ணீரை வைத்து விட்டு சென்றார்.

“எங்க அம்மா பேச்சைக் கேட்டு இங்கே வந்தேன் பாரு?  என்ன சொல்லணும். இதுவும் வேணும். இன்னமும் வேணும். எல்லாம் என்  தலையெழுத்து” என தனக்குள் சொல்லிக் கொண்டு ஆட்டி எடுத்து மஞ்சுவிடம் கொடுத்தாள்.

“டாடி எங்காவது வெளியே கூட்டிட்டு போங்க” என பிள்ளைகள் கேட்க.

“வயலுக்கு போய் சுத்திப் பார்க்கலாம் வாங்க” என ஜெய் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.

“என்னங்க நானும் வரேன்” என சம்யுக்தா கேட்க.

“காலையில வீட்ல வேலை இருக்கும். நீ கூட வந்தா நல்லா இருக்காது” என்றான்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது.   என்னையும் கூட்டிட்டு தான் போகணும்” என பிடிவாதம் பிடிக்க.

அவதான் வரேன்னு சொல்றா. கூட்டிட்டு போடா.  இங்க தான் நாங்க மூணு பொம்பளைங்க  இருக்கிறோம்ல. நாங்க அடுப்படி வேலை எல்லாம் பாத்துக்குறோம். நீ போம்மா?  என  லட்சுமி சொல்ல.

“அத்தையே  சொல்லிட்டாங்க.  வாங்க போலாம்” என  தன் கணவனின் கையை பிடித்துக் கொள்ள.

அமைதியாக  தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு  மோட்டார் ஓடிக்கொண்டிருக்க.  பம்புசெட்டில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடிக்கொண்டிருந்தது.

“மம்மி இங்க பாருங்க. எவ்வளவு  பெரிய ஷவரா இருக்கு” என்றான்.

ஹஹஹ. ஜெய் சிரித்துக் கொண்டே “நம்ம வீட்ல இருக்குற ஷவரை விட இதுல குளிச்சா சூப்பரா இருக்கும்” என கூறினான்.

தண்ணீரை கண்டவுடன் பிள்ளைகள் இருவரும் வாய்க்காலில் இறங்க.

“சளி பிடிக்கும் வேணாண்டா. இறங்க கூடாது” என குழந்தைகளை சம்யுக்தா மிரட்ட.

“ஒரு நாளைக்கு தானே.  வீடு  சந்தோஷமா இருக்கட்டும்” என கூற.

இருவரும் இறங்கி ஆசை தீர ஆட்டம் போட்டனர்.

பாரு சம்யு. பசங்க  எவ்வளவு சந்தோஷமா இருக்காங்கன்னு.

“அதுங்களுக்கு விவரம் தெரியல. வந்தவுடனே காலையிலேயே என்னைய உரல்ல  ஆட்ட வச்சிட்டீங்கள்ல..  இன்னும் என்ன எல்லாம் படுத்த போறீங்கன்னு தெரியல. குறிப்பிட்ட வரைக்கும் தான் பொறுமையா இருப்பேன். என்னைக்கு எல்லை மீறுதோ அன்னைக்கு பொட்டிய தூக்கிட்டு  நான் கிளம்பி விடுவேன்”  என்றாள்.

எங்க போவ?

எங்கம்மா வீட்டுக்கு?

ஓஹோ! நீ போகும்போது பாத்துக்கலாம்.

“பாக்க தானே போறீங்க” என்றாள்.

பிள்ளைகள் வெகுநேரம் ஆட்டம் போடவே அவர்களை மிரட்டி கரைக்கு இழுத்து வந்து  வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

 உடம்பு துவட்ட ஒரு துண்டு இல்ல. இப்படி தண்ணிய ஊத்திட்டு  வந்து ஈரத்தோட நிக்கிறீங்க.  உடம்பு கெட்டுப் போச்சுன்னா என்ன பண்றது.  இந்த  ஊருல ஒரு ஹாஸ்பிடல் கூட இல்ல.  பதினைஞ்சு  கிலோமீட்டர் வெளியே போனா தான் ஹாஸ்பிடல்.

“நாங்க எல்லாம் முடிஞ்சவரைக்கும் ஹாஸ்பிடல் போறது இல்ல. எல்லாம் பாட்டி வைத்தியம் தான்” என்றான் ஜெய்.

“உங்க பாட்டி வைத்தியத்த நீங்களே வெச்சுக்கோங்க” என்று கூறிவிட்டு குழந்தைகளை தனது அறைக்கு அழைத்து வந்தாள்.  அவசரமாக துண்டை கொண்டு வந்து  குழந்தைகளுக்கு துடைத்துவிட.

ஏண்டா!  புது இடம். புது  தண்ணீ.  சேரலனா சளி பிடிக்குமே.

“அதெல்லாம் சரியா போய்டும்மா. பழகட்டும்” என்றான்.

“சளி பிடிக்கட்டும்.  அப்புறமா உங்களுக்கு இருக்கு” என்றாள்.

“எங்க அம்மா இருக்காங்க. பாத்துப்பாங்க.  நான் போயி ஒரு ஆளைக் கூட்டிட்டு வரேன்.  இந்த பொருள்களையெல்லாம் எடுத்து வைக்கலாம்” என்றான்.

முதல்ல மிக்ஸி,  கிரைண்டர் எடுத்து வைங்க.  அது இல்லாம  என்னால எல்லா வேலையும்  செய்ய முடியாது.

எது எது எந்த பாக்ஸில் இருக்கும்னு தெரியாது.  எல்லாத்தையும் பொறுமையா தான் எடுத்து வைக்கணும்.  கொஞ்சம் அவசரப்படாம பொறுமையாய் இரு.

அவசரப்படாம நான் என்ன பண்ணுவேன்.  கஷ்டம் எனக்குத்தான.

 நல்லா யோசிச்சி சொல்லு சம்யு.  அப்புறம் வெளியே எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு  அது கெட்டுப் போச்சு, இதே  உடைஞ்சு போச்சுனு  கம்ப்ளைன்ட் சொல்லக்கூடாது.

உடைஞ்சா  நீங்க தானே வாங்கி தர போறீங்க. எனக்கு என்ன?

என்ன பெரியவனே.  சின்னவனுக்கு ஃபோனை போட்டு வர சொல்லுடா. நான் சொன்னா கேக்க மாட்டேங்கறான். அவன்  வந்தா தான்  நல்ல நாள் பார்த்து ஒரு கல்யாணத்தை பண்ணிடலாம்.

“சரிம்மா.  நான் அவன் கிட்ட பேசுறேன்” என்று கூறிவிட்டு ஜெய் வெளியே வந்தான்.

“அப்பா கொஞ்சம் இந்த பொருட்களை எல்லாம் எடுத்து சுத்தம் பண்ணி வைக்கணும்.  அதுக்கு ஒரு ஆள் மட்டும் ரெடி பண்ணி குடுங்கப்பா?”  என கேட்க.

நம்ப முனுசாமி சும்மாதான் இருப்பான்.  அவன வர சொல்றேன்.  நீ சாப்பிட்டு வீட்டிலேயே இரு.

சரிங்கப்பா. நான்  கொஞ்சம் ஊருக்குள்ள போயிட்டு வரேன்பா.

வந்ததும் வராததுமா எங்கடா போற. நான் தான் ஆள வரச் சொல்றேன்னு சொல்றேன்ல.  அந்த பிள்ளை டவுன்ல இருந்தது.  அதுக்கு இங்க பிடிக்குதோ என்னமோ?  அந்த பொருளை எல்லாம் கொஞ்சம் வச்சு  கொடுத்தா   ஆறுதலாய் இருக்கும் இல்ல.

‘அதுவும் சரிதான்’ என நினைத்துக் கொண்டு,  “சரிங்கப்பா” என

மீண்டும் வீட்டிற்குள் சென்றான்.

குழந்தைகள் சாப்பிட தொடங்கியிருந்தனர்.

“சம்யுக்தாவோ எப்படியும்  சாப்பிட மாட்டாங்க.  இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரவ் ஆரம்பிக்க போறான்.  எப்படி சமாளிக்கப் போறிங்களோ?  எனக்கு தெரியாது” என சம்யுக்தா ஜெய்யின் அருகில் நின்று சொல்லிக் கொண்டிருக்க.

“பாட்டி உங்க ஊரு இட்லி சூப்பரா இருக்கு” என என்றான் ஆரவ்.

“நல்லா சாப்பிடு பேராண்டி” என்றார்.

“பாட்டி எங்க ஊர்ல எல்லாம் அம்மா வாங்கித்தர  இட்லி தோசை மாதிரியே இருக்கும்.  அது டேஸ்ட் இல்ல.  ஆனா இது சூப்பரா இருக்கு” என்றான்.

“சம்யுக்தா குழந்தைகளின் பேச்சை கேட்டு ஆடிப்போனாள்.  இது பசங்களுக்கு பிடிக்காதுனு நினைச்சேன்.  என்ன இப்படி சொல்லுதுங்க” என யோசித்தாள்.

“இயற்கையை ஜெயிக்க யாராலயும் முடியாதுடி என் செல்ல பொண்டாட்டி. பாத்தியா?  அம்மிக்கல் ஆட்டுக்கல்லுனு  அரைச்சு குழம்பு வைக்கிறது எவ்வளவு டேஸ்ட்னு.  தெரிஞ்சுக்கோ.  உன்னோட ஆர்டர் போட்ட  டிஃபனும், உன்னோட  மிக்ஸி கிரைண்டர்,  பிரிட்ஜ்னு யூஸ் பண்ணி செய்யற சாப்பாடும் என்னைக்குமே இத  ஓவர்டேக் பண்ண முடியாது.  பாரம்பரியத்தை உங்க நாகரீகத்தால வின் பண்ண முடியாது” என்றான்

போதும். ரொம்ப அளக்காதிங்க. ஏதோ ஒரு நேரம் சாப்பிட்டா போதுமா?  எல்லா நேரமும் குழந்தைக  இப்படியே இருப்பாங்கன்னு நினைக்காதீங்க.

அதையும்தான் பார்க்கலாமே.

சரி. பொருள்  எடுத்து வைக்க ஆள் வர சொல்லி இருக்கேன். கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.  எந்த பொருள் வைக்கலாம்னு சொல்லிடு.

மிக்ஸி, ஃப்ரிட்ஜ்  இல்லாம எனக்கு வேலையே ஓடாது.  கிச்சன்ல அதெல்லாம்  முதல்ல செட் பண்ண சொல்லுங்க.

நான் வைக்க சொல்லிடுவேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல. அப்புறம் உங்க அம்மா  அத  தொட்டாங்க, இத தொட்டாங்க,   யூஸ் பண்ண தெரியல ,உடச்சிட்டாங்க இந்த மாதிரி பேச்செல்லாம் வரக்கூடாது.

அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.  முதல்ல  ஏசி செட் பண்ணனும்.

இது  கிராமம்.  நீ வந்த உடனே எல்லாத்தையும் எடுத்து மாட்ட   இது சிட்டி இல்ல.  இங்க அதுக்கெல்லாம் ஆள் கிடைக்க மாட்டாங்க.  டவுனுக்கு போய் தான் கூட்டிட்டு வரணும்.

ரொம்ப சந்தோஷம்.  இன்னைக்கு நைட்டு இருக்கு கச்சேரி.

எதுக்குடி?

புள்ளைங்க ஏசி  இல்லாம தூங்க மாட்டாங்க. நைட் தான் தெரியப்போகுது.

உனக்கு அந்த கவலை வேணாம். அதுக்கு எல்லாம் இங்க வாய்ப்பு கிடையாது.  என்ன கல்யாணம் பண்ணிட்டு வரும்போது இதெல்லாம் இங்க இல்லனு தெரியும் இல்ல. இன்னைக்கு என்ன புதுசா கேக்குற.

அப்பதான் அப்படி இருந்துச்சு. நான் வந்தே  பன்னிரண்டு  வருஷம் ஆகுது.  இன்னைக்கு வரைக்கும் அப்படியேவா வச்சிருப்பிங்க.

நீ ஒன்னும் இங்க இல்லையே.

“எங்க இருந்தா என்ன?  எப்படியோ தப்பி தவறி ஒரு டிவி மட்டும் இருக்கு. அதுவும் ஓடுமா ஓடாதோ? தெரியல.”

அது என் தந்தை வாங்கி வச்சிருக்கான்.  இங்கே இவங்களுக்கு டிவி பார்க்கலாம் நேரமில்ல.  அதுதவிர கேபிள் கனெக்ஷன் கொடுக்கணும். அதை வெட்டி செலவுனு  எங்க அப்பா சொல்லுவாங்க.  டிவில  நாடகத்தைப் பார்த்தா  குடும்பம் கெட்டு போயிடும்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு.  அதனாலேயே கேபிள் கனெக்ஷன் கொடுக்கல.

அப்ப எதுக்கு டிவி?

என் தம்பி வந்தா டிவிடியில இல்லனா பென்டிரைவ்ல   படம் பாத்துப்பான்.  அவ்வளவுதான்.

“நல்ல குடும்பமடா சாமி.  நீங்களே வாழுங்க. தெரியாத்தனமா கழுதைக்கு வாழ்க்கப்பட்டுட்டேன்” என்று சம்யுக்தா கூறும் போது கதிரேசன் அங்கு வந்து நின்றார்.

மெல்லிசை தொடரும்….

அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் செல்லக்குட்டீஸ்….

Advertisement