Advertisement

மல்லிகைப் பந்தல்  கிராமத்தில் ஊரே அமைதியாக கொண்டிருந்த  வேளையில் ஜெய் தனது குடும்பத்தோடு வண்டியில் வந்து இறங்கினான்.

மகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த லட்சுமி  வண்டி சத்தம் கேட்டதும் எழுந்து வந்து கதவை திறந்தாள்.

கதவு திறக்கும்  சத்தம் கேட்டு மற்றவர்களும் எழுந்து வெளியில் வந்தனர்.

ஜெய்  மனைவி குழந்தைகளுடன் வந்திருப்பதைப் பார்த்து  அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

லட்சுமி தன் பேரப் பிள்ளைகளை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள்.

“ரகுராம், மஞ்சு, இசை, வருண், இசை மல்லிகா” என அனைவரும் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

‘அவங்க குடும்பத்த பாத்த உடனே வாயெல்லாம் பல்லு. இளிப்ப பாரு. இப்ப தான் நிம்மதியா இருக்கும். உனக்கு இருக்கு மவனே’ என மனதில் நினைத்தாள் சம்யுக்தா.

“அப்பா எங்கம்மா?”  என ஜெய்  கேட்க.

தோட்டத்துக்கு போய் இருக்காரு.  விடியப் போகுது. இப்ப வர  நேரம் தான்.  வந்திடுவாங்க.

வண்டியில் கொண்டு வந்த பொருட்களை அனைவரும் சேர்ந்து வீட்டில் இறக்கி  வைத்தனர்.  வண்டிக்கு ஜெய் பணம் கொடுத்து  திருப்பி அனுப்பினான்.

காலைல இந்த சாமான  எடுத்து வச்சிக்கலாம்.  அந்த கெழக்கால ரூம  சுத்தம் பண்ணி வச்சிருக்கேன்.  அதுல தங்கிக்கோங்கப்பா.  காலைல சரி பண்ணிக்கலாம்.

“சரிங்கம்மா” என்றான்.

“களைச்சுப் போய் இருந்திருப்பீங்க.  காப்பி தண்ணி போட்டு வாரேன்” என மஞ்சு உள்ளே போக.

பாத்திரத்தை கொண்டு வந்து சற்று நேரத்தில்  பாலைக் கறந்து அனைவருக்கும் சூடாக காப்பி கொண்டு வர.

“மம்மி இது என்ன?”  என ஆரவ் கேட்க.

காஃபி டா கண்ணா.

“எனக்கு கேப்புச்சினோ தான் வேணும். இது பிடிக்காது. உங்களுக்கு தெரியாதா?” என  அடம்பிடிக்க.

ஜெய்யை  பார்த்து முறைத்துக்  கொண்டு நின்றாள்.

“அப்படினா  அது என்ன? பேராண்டி” என லட்சுமி கேட்க.

‘இனிமேல் தான் ஜெய் ஆட்டம் ஆரம்பமே. மாட்னிங்க’ என நினைக்க.

அம்மாடி. மருமவளே புள்ள என்ன கேட்கறான்.

“அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது அத்தை.  பெங்களூருல கிடைத்ததெல்லாம் இங்கே கிடைக்காது.  இருக்கிறத சாப்பிட்டு பழகு” என் மகனை மிரட்ட.

ஆரவ்  அழத்தொடங்கினான்.

“மகனை எப்படி சமாதானப்படுத்துவது” என்று தெரியாமல் திகைத்தான் ஜெய்.

“வந்து இறங்கும் போதே  இப்படின்னா எப்படி நாட்களை நகர்த்தப் போறோமோ  தெரியலையே”  என கவலைப்பட்டான்.

“மித்ராவோ  எனக்கு பால் தான் வேணும்.  அதுல முந்திரி பருப்பு ஏலக்காய் போட்டு வேணும்” என கேட்க.

“காலைல கடை திறந்ததும் வாங்கிட்டு வந்து போட்டுதரேன்.  இப்ப இத குடிடா கண்ணு”  என லட்சுமி  கூற.

“மித்ராவும் வேண்டாம்” என அடம் பிடித்தாள்.

‘குழந்தைகளை பார்க்க சங்கடமாகத்தான் இருந்தது.  இது ஒரு ரெண்டு மூணு நாள் ஆனா சரியாக போய்டும்’ என மனதுக்குள் நினைத்தான்.

“பேராண்டி என்னமோ   கேட்டானே.  அப்படின்னா என்ன இசை?”  என இலட்சுமி இசை பிரியாவிடம் கேட்க.

“அத செய்ய  இப்ப நம்ம கிட்ட எதுவும் இல்ல அத்தை.  வேற ஏதாவது பண்ணி கொடுக்கலாம்.  சின்னப்பிள்ளை சிட்டில வளர்ந்தவன்.  அப்படி தான்  இருப்பான்.  போகப் போக சரியாகிடுவாங்க” என்றாள்.

சற்று நேரத்தில் லட்சுமி  உளுந்து கஞ்சி வைத்து அதில் ஏலக்காய் தேங்காய் வெல்லம் போட்டு சூடாக  கொண்டு வந்து  பிள்ளைகளிடம் கொடுக்க.

“இது என்ன பாட்டி?”  என ஆரவ் கேட்டான்.

“இது எங்க ஊரு கேப்ப சீனா பேராண்டி” என்று கூற.

இசை, வருண், ஜெய், சம்யுக்தா அனைவரும் சிரித்தனர்.

பாட்டி அதுக்கு பேரு கேப்ப சீனா இல்ல. கேப்புசீனோ.

என்னமோ ஒண்ணு. நீ  குடிச்சு பாரு நல்லா இருக்கும்.

“ஸ்பூன் இல்லையா?  எனக் கேட்டான்.

 இசை கொண்டு வந்து கொடுக்க.

ஒரு ஸ்பூன்  எடுத்துக் குடித்து பார்த்தான்.  அந்த சுவை  பிடித்திருந்தது.

“ம்ம்ம்ம்..  டேஸ்ட்டா இருக்கு மம்மி”  என்றான்.

“அதை பார்த்த மித்ராவும் வாங்கி குடித்தாள்.  சூப்பரா இருக்கு டாடி” என்றாள்.

ஜெய் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.

“இங்கெல்லாம் இதுதான் கிடைக்குமா பாட்டி” என ஆரவ்  கேட்க.

உனக்கு என்ன வேணுமோ நான் செஞ்சு தரேன் பேரா.  இல்லனா நான் உன் சித்திய செஞ்சு தர சொல்றேன்.

“இதுல  யாரு சித்தி?”  எனக் கேட்டான்.

“சின்ன வயசுல பார்த்தது இல்ல.  புள்ளைக்கு  மறந்து போயிருக்கும்.  இசையை காட்டி இவங்கதான் உங்க சித்தி பேராண்டி” என கூறினாள்.

பாட்டி என் பேரு பேராண்டி இல்ல. ஆரவ்.

அந்த பேரு எனக்கு வாய்ல கூப்பிட வர்ல பேராண்டி.

தெரிஞ்ச மாதிரி சொல்லுங்க பாட்டி.

சரி.. ஆறுனு கூப்பிடுறேன். உங்கள மாதிரி சொல்ல வர்ல.

மித்ரா சிரித்தாள். டேய் இன்னைல இருந்து உன் பேரு ரிவர்டா.. பாட்டி புதுசா நேம் வச்சிட்டாங்க.

ரிவர் இல்ல. ஆறுனு சொன்னேன்டியம்மா.

பாட்டி அப்போ இவ பேரு.

அக்காவ அவ இவனு பேசக்கூடாது ஆறு. நான் உன் அக்காவ மித்துனு கூப்பிடுவேன்.

“வாவ். சூப்பர் பாட்டி” என மித்ரா ஆட்டம் போட்டாள். இருவரையும் இசை அழைத்து சென்றாள்.

ஜெய் தம்பி வரேன்னு சொன்னானாடா.

ஏம்மா.  உன்கிட்ட ஆதி பேசலையா?

இன்னும் இல்லடா.

நான் ஊருக்கு வரதுல  டென்ஷனா இருந்ததால  நானும் ஆதி கிட்ட பேச நேரமில்லம்மா.

லட்சுமி சுற்றும் முற்றும் தனது பார்வையை சுழல விட்டு ஆளுக்கு ஒரு வேலையில் இருப்பதை பார்த்துவிட்டு,  உன் தம்பிக்கும் இசைகும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கிறோமடா.  அதுக்கு நிச்சயதார்த்த தேதி குறிக்கணும். இன்னும் உங்க சித்தப்பா வீட்டில சொல்லல.

ஏன்மா  சித்தப்பா கிட்ட சொல்லல.

அங்க  வருணன்  இருக்கானே.  இவனோட பெரியவன். அவனுக்கு இன்னும் கல்யாணம் பண்ணல. அதுக்குள்ள சின்னவனுக்கு பண்றோம்னு கஷ்டமா  இருக்கும்ல.

எப்படியும் நிச்சயம் பண்றதுன்னு முடிவு பண்ணு சொல்லித்தான் ஆகணும் .

அதுவரைக்கும் அவங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்னு தான் பார் சொல்லல.

இது தப்புமா.  வருணுக்கும் சீக்கிரம் ஒரு பொண்ணு பார்க்கலாம்.  நான் இங்கே தான இருக்கப் போறேன்.  வருண் கல்யாணத்த இந்த முறை  முடிச்சிடலாம்.

ரொம்ப சந்தோஷமா இருக்குது ஜெய். நீ கொஞ்ச நேரம்  ஓய்வெடுப்பா.

சரிங்கம்மா.  அம்மா ஒரு நிமிஷம்.

என்னப்பா?

பசங்க காலையில் இட்லி,  தோசைனு  டிஃபன் சாப்பிடப் பழகிவிட்டாங்க.

சரிப்பா செஞ்சுக்கலாம்.  நேத்து தான் மாவு ஆட்டி வச்சேன்.  பானைல மாவு  இன்னும் இருக்கு.  இட்லி, தோசை ரெண்டுமே  போட்டுக்கலாம்.

“சரி” என்றவன் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றான்.

சம்யுக்தா  முக்கியமான பொருட்கள் இருந்த பாக்ஸை மட்டும் தேடி  எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.  ஒரு இரும்பு மட்டும் கட்டில் காணப்பட்டது.

காற்றோட்டமான பெரிய அறை.  ஒரு பழைய ஃபேன் மேலே தொங்கிக் கொண்டிருந்தது.  இதைப் பார்த்த சம்யுக்தா  தன் கணவனை முறைக்க.

“நீ என்ன நினைக்கிறனு  எனக்கு தெரியுது சம்யு.  அதான் நாம  கொண்டு வந்த எல்லாம்  செட் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டனே.  இன்னிக்கு மதியத்துக்குள்ள  எல்லாம் செட் பண்ணி  முடிச்சிடுவேன்.  அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”  என்றான்.

வேறு வழியின்றி சம்யுக்தா  தலையசைத்து விட்டு ஒரு மூலையில் இருந்த பாயை எடுத்து கீழே விரித்துப் போட்டாள்.

ஏன்? மகாராணி இரும்பு கட்டில்ல படுக்க மாட்டிங்களோ?

எனக்கு அது தேவையில்ல.  ஒரு தலையணையை  கிடைக்குமா?  ஜெய்.

இது கிராமம். இங்கலாம் இப்படி பேர சொல்லி கூப்பிடாத சம்யு.

ஹிக்கும். சரிங்க மகாராஜா.

“இதுக்கு ஒண்ணும் குறச்சல் இல்ல. இரு” என  தனது அம்மாவின் அறைக்கு சென்று இரண்டு தலையணைகளை எடுத்து வந்து கொடுத்தான்.

இசை பிள்ளைகள் இருவரையும் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றேன் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்.

இதற்குள் லட்சுமி சாணம் கரைத்து வாசலுக்கு தெளித்துக் கொண்டு இருக்க.

“அதான் மருமக வந்தாச்சே.  இன்னும் என்ன நீங்க இந்த வேலை செய்யறீங்க” என மஞ்சு கேட்க.

“அவங்க இப்பதான் வந்து இருக்காங்க.  கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்”  என்று கூற.

“அதுவும் சரிதான்.  இன்னைக்கு என்ன சமைக்கலாம்” என கேட்க.

பெரியவன்  பிள்ளைங்க காலையில் இட்லி,  தோசை தான் சாப்பிடுவாங்களாம். மாவு இருக்கு.  இட்லியே  சுடலாம்.

அந்த மாவு காலையில ஒரு பொழுதுக்கு  மட்டும் தானே ஆகும். அப்புறம் மதியத்துக்கு என்ன செய்ய?

மதியத்துக்கு ஏதாவது  செஞ்சிக்கலாம்  மஞ்சு.

மூணு வேலையும்  சமச்சுக்கிட்டு கிடந்த காட்டுல வேலை எப்படி பார்க்கிறது.

ஒரு நாளைக்கு தானே மஞ்சு.

“சரி..  பண்ணுவோம். அப்புறம் மருமக கூடமாட ஒத்தாசையா இருந்தா சரியா போயிடும்.   நான் போய் இப்ப சட்னி சாம்பார்க்கு ரெடி பண்றேன்.  நீங்க பால் கறந்து ஊத்திட்டு வேலைய முடிச்சிட்டு வாங்க”  என மஞ்சு உள்ளே போனாள.

“பால் கறப்பதற்கு பாத்திரத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டு இந்த மனஷன் எப்ப தான் வருவாரு”  என சொல்லிக் கொண்டு லட்சுமி வழித்தடத்தை பார்த்துக் கொண்டிருக்க .

“கதிரேசன் அங்கு வந்த ு சேர்ந்தவர், என்னடீ தடத்தையே பார்த்துட்டு இருக்கவ” எனக் கேட்க.

உங்கள தான் எப்ப வருவிங்கனு பாத்துட்டு நின்னேன்.

தெனமும் வரவனுக்கு நேரம் தெரியாதா?  ஆமா உன் மவன் வந்தாச்சா?

ஆமா.  எனக்கு தான் மவன். உங்களுக்கு இல்லையா?

எனக்கும் தான் மவன். கத்தாத.  வந்துட்டானா?

“வந்துட்டாங்க”  எனக் லட்சுமி கூறும்போதே, “பேரப் பிள்ளைகள் இருவரும் தாத்தா”  என ஓடிவந்து கட்டிக் கொண்டனர்.

கதிரேசன் ஆசை தீர பிள்ளைகளை கொஞ்சிவிட்டு பேரனை  மட்டும் தூக்கி வைத்து கொண்டார்.

“கொஞ்ச நேரம் இங்க உட்காருங்க தாத்தா” என்றான்.

“பால கறந்துட்டு வரேன்டா. கன்னுக்குட்டி பசியோட கிடக்கு”   என்று கூற.

“நாங்களும் வரோம் தாத்தா” என்றனர்.

பேரப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பால் கறக்க சென்றார்.

அவர்  பால் கறப்பதை அதிசயமாக இருவரும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“தாத்தா இங்கே செண்ட் அடிக்க  மாட்டீங்களா?”  என ஆரவ்  கேட்க.

எதுக்குப்பா செண்டு?

“ரொம்ப  ஸ்மெல்லா  இருக்கே. ” என்றான்.

 சுமெல்லா? அப்படினா?

கெட்ட வாசனை அடிக்குது தாத்தா.

“அதுவா  மாட்டு சாணம் அப்படித்தான் இருக்கும். அதெல்லாம் மருந்துடா கண்ணு”  என்றார்.

“இருவருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும் தாத்தா ஏதோ சொல்ல வருகிறார்”  என்று மட்டும் தெரிந்தது. ஆரவ் அமைதியாகிப் போனான்.

 “தாத்தா நேரம் கிடைக்கும்போது இதபத்தி உங்களுக்கு சொல்லித் தாரேன்” என்றார்.

“சரிங்க தாத்தா இவ்வளவு பால் இருக்கு.  பால்கோவா செய்வீங்களா?”  என்றான்.

அதெல்லாம் உங்க பாட்டிக்கு செய்ய தெரியாதுப்பா.

 எங்க மம்மி செய்வாங்க.

 சரி அப்ப எவ்வளவு பால் வேணுமா வெச்சுக்கலாம்.  அம்மாவா செஞ்சு  கொடுக்க சொல்லலாமா?

சரிங்க பாட்டி என்றான் ஆரவ்.

ஆரவை  கொஞ்சி விட்டு தேவையான பாலை வைத்துவிட்டு மீதி பாலை ஊட்டுவதற்காக போனார்.

மஞ்சள் தனியாக வேலை செய்வதைப் பார்த்த ஜெய், “சின்னத்தைக்கு  போய்  ஏதாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்றான்.

சும்மா இருக்க முடியாமலும் வேறு வழியில்லாமலும்  சமையல் அறைக்கு சென்றாள்.

“அத்தை நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?  என்ன செய்யணும் சொல்லுங்க” என்றாள்.

இந்த சட்னிய கொஞ்சம் அரைக்கனும்மா.

“சரிங்க அத்தை.  மிக்ஸி எங்க?”  என்று தேடினாள்.

இங்க அதெல்லாம் இங்கே கிடையாதுமா.  கல்யாணம் ஆனா புதுசுலே பார்த்து இருப்பியே.  உங்க மாமாவுக்கு மிக்ஸி கிரைண்டர்ல பயன்படுத்தற  எதுவுமே பிடிக்காது. இங்க  எல்லாமே ஆட்டுக்கல் அம்மிக்கல் தான் இப்ப வரைக்கும்.

‘என்ன ஆட்டுக்கல்லில சட்னி அரைக்கணுமா?  கடவுளே!  இந்த மனுஷன் பேச்சை கேட்டு தெரியாத்தனமா வாய்விட்டு வந்து மாட்டிக்கிட்டேனா?’  என்ன நினைத்துக் கொண்டு நின்றாள்.

மெல்லிசை தொடரும்…..

Advertisement