Advertisement

அதிகாலை பொழுது புலர்ந்தது கூட தெரியாமல் ஆதி போர்வைக்குள் தன்னை மறைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“யாதவ் எழுந்து சாதம் வைத்துவிட்டு வந்து ஆதியை  டீ குடிக்கும் போகலாம்” என்று ஆதியை எழுப்ப முயன்ற தோற்றுப் போய் அருகில் அமர்ந்து இருந்தான்.

அப்போது ஆதியின் செல்போன் ஒலிக்கத் தொடங்கியது.

அரைத்தூக்கத்தில்  கண்களை முழித்தும் முழிக்க  முடியாமலும் செல்போனின் சத்தத்தைக் கேட்டு கைகளால் தேடி எடுத்தான்.  மிகவும் கஷ்டப்பட்டு கண்களை ஒரு வழியாக திறந்து யாரென்று பார்த்தான்.

ரசிகசியாவிடமிருந்து தான் கால் வந்திருந்தது.  ‘இந்த நேரத்துல எதுக்கு கால் பண்றா? என்னன்னு தெரியலையே. எதுக்கும் எடுக்க வேணாம். அப்புறமா பார்த்துக்கலாம்’ என நினைத்தவன்,  செல் போனை வைத்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

“ஆதி என்னவோ தெரியல. அந்த பொண்ணு இந்த நேரத்துல கால் பண்ணுது. எடுத்து பேசுடா” என யாதவ்  கட்டாயப் படுத்தினான்.

“என்னவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்.  போடா” என ஃபோனை சைலண்டில் போட்டு விட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டு புரண்டு படுத்தான்.

ரகசிய விடமிருந்து பல முறை கால் வந்து கொண்டே இருந்தது.

இதைப்பார்த்த யாதவ்,  ஒழுங்கு மரியாதையா ஃபோன் எடுத்து அந்த பொண்ணு கிட்ட என்னனு கேளேடா. ஒரு பொண்ணு இத்தனை முறை போன் பண்றானா காரணமில்லாமல பண்ணமாட்டா.

அவ்ளோ அக்கறை இருந்தா நீயே பேசுடா.

நானா  அவ பின்னாடி சுத்துறேன்.

அப்போ உன் வேலைய பாரு.

சொன்னா கேளுடா.  ஏதாவது எமர்ஜென்சியா  இருக்க போகுது.

“உன்னை எல்லாம் ஃப்ரெண்டா  வெச்சிகிட்டு இம்சையா  இருக்கு” என சலித்துக் கொண்டு எண்ணிற்கு  இருக்கு உயிர் கொடுத்தான்.

எத்தனை  டைம் கால் பண்றேன். எடுக்காமலே இருக்கீங்களே.

அதான் இப்ப எடுத்துட்டேன் இல்ல. சொல்லு.

எங்கப்பா இன்னைக்கு  பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார வர சொல்லிட்டாங்க.

என்னடீ சொல்ற.

நைட்டே சொல்ல ட்ரை பண்ணேன்.  சொல்ல முடியல.

இதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற.

டென்ஷன் ஆகாம என்ன பண்ண சொல்றீங்க.  பொண்ணு பாக்க வராங்க.

நான்தான் இருக்கேன்ல.

“அப்படியெல்லாம் விட முடியாது. தப்பு  நடக்கறதுக்கு முன்னாடியே  நிறுத்திட்டா நல்லதுனு”  என்று நினைக்கிறேன்.

என்னடி நானும் பாக்குறேன்.  ஒரு வார்த்தை கூட மாமானு  சொல்லல. ஏதோ மொட்டையா பேசிக்கிட்டே போற.

ஆமா இப்போ உங்கள மாமானு  சொல்றது ரொம்ப முக்கியம். பட்டிக்காடு.. பட்டிக்காடு.

என்ன பட்டிக்காடா?  அப்ப எதுக்கு இந்த பட்டிகாடு பின்னாடி சுத்துற.

இத பாருங்க.  இப்ப உங்க கிட்ட சண்டை போட எனக்கு நேரம் இல்ல. இப்ப வரைக்கும் நாம  நேர்ல மீட் பண்ணலாம்னு  எத்தனையோ தடவை கேட்டும் நீங்க வரவே இல்ல. போன்ல மட்டும் தான் பேசிட்டு இருக்கோம். இதுவே சந்தேகமா தான் இருக்கு.

வர டைம் கிடைச்சா  வராம போவேனா.

லவ் பண்றவங்களுக்கு ஒரு நாள் ஒரு நிமிஷம் கூட நேரம் இல்லாம போய்டுமா? லவ்வரோட முகத்தை ஒரு தடவையாவது பார்க்கணும்னு தோணாதா?

எல்லாருக்குமே  இந்த ஆசை இருக்கும்.  எனக்கு  தான் இருக்கு. அதுக்காக வேலையை விட்டுட்டு வர முடியுமா? லூசு. பார்த்தா தான்  வருமா லவ் வருமாடீ.

இது ஒண்ணும் காதல் கோட்டை படம் இல்ல. பார்க்காமலேயே லவ் பண்றதுக்கு.  நீங்க அஜித்தும்  இல்ல. நான் தேவயானியும் இல்ல.

இப்ப என்ன பண்ண சொல்ற.

மாப்பிள்ளை வீடு வர்றதுக்குள்ள நீங்க வந்து அப்பா கிட்ட பேசுங்க.

திடீர்னு இப்படி சொன்னா நான் வந்து என்னத்த பேசுறது. ‘என்னடா இவ ரொம்ப வில்லங்கமா பேசிட்டு இருக்கா.  இவளை எப்படி கட் பண்றது’ என அவசரமாக மனதிற்குள் சிந்தித்தான்.
இப்ப வீட்ல யாரும் இல்லையா?

எல்லாரும் இருக்காங்க. நான் தெரியாம ரெஸ்ட் ரூம்ல வந்து நின்னு பேசிட்டு இருக்கேன்.

மாப்பிள்ளை வீடு வந்தா வரட்டும்.  நீ ரெடியா இரு.  கண்டிப்பா கரெக்ட் டைமுக்கு நான் வந்துடுவேன்.  அட்ரஸ  மட்டும் அனுப்பிவை.

ஏற்கனவே ஒரு நாள் வாட்ஸ்அப்ல சொன்னேனே.  மறந்துட்டீங்களா?

அதெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியாது ரகசியா.

சரி. நான்  அட்ரஸ் அனுப்புறேன். ரொம்ப நேரம் பேச முடியாது. நீங்க வந்து பேசினா தான்.  எங்க அப்பாவ எதிர்த்து எல்லாம் என்னால பேச முடியாது.  பயமா இருக்கு ஆதி.

நான் வந்து பேசினா மட்டும் கொஞ்சுவாங்களா?

ரொம்ப பயமா தான் இருக்கு.  இருந்தாலும் முயற்சி பண்ணி பார்க்கலாமே ஆதி.

சரி நீ போய் ரெடியாகு. என் நம்பரை டெலீட் பண்ணு.  வேற மெசேஜ் எது இருந்தாலும் டெலிட் பண்ணிடு.

எதுக்கு  ஆதி?

எல்லாம் காரணமாத்தான்.  சொல்றேன்.  சொல்றத மட்டும் செய்.

‘யாராவது பாத்தாலும் பிரச்சனை தான் ‘ என நினைத்து ஆதியிடம் பேசி முடித்தவுடன் அவனிடம் இருந்து வந்த மெசேஜ் கால் ஹிஸ்டரி அனைத்தையும் டெலிட் பண்ணினாள் ரகசியா.

நீ பண்றது எதுவுமே எனக்கு சரியா படல ஆதி. உன்னோட பேரை தவிர  அந்த பொண்ணுங்க கிட்ட உன்னை பத்தி வேற எதுவுமே  சொல்றது இல்ல. உன்ன போய் எப்படி நம்பறாங்க.  இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ தெரியல.

இதுல என்னடா பிரச்சனை வரப்போகுது.

வரும்போது தெரிஞ்சுக்கோ.   அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறியா? ஆதி.  அவங்க வீட்டுக்கு போகப் போறியா?

இல்லடா.

அப்புறம் எதுக்கு அந்த பொண்ணுகிட்ட அப்படி சொன்ன.

அது என்னோட இஷ்டம்.

அப்படி எல்லாம் விட முடியாது. ஒரு ஃப்ரெண்டா நான் உனக்கு அட்வைஸ் பண்ணி தான் ஆகணும்.  நீ அத  கேட்டுத்தான் ஆகணும்.

இந்த அட்வைஸ் பண்றது
எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு உனக்கே தெரியும்.

நீ வருவனு  நம்பிக்கையோடு அந்த பொண்ணு காத்துட்டு இருப்பா.

அதுக்கு நான் என்னடா பண்றது.

பொய்யான நம்பிக்கைய ஏண்டா தர.  நேரடியா  வரமாட்டேனு சொல்ல வேண்டியது தானே.

நான் உன்னை லவ் பண்ணலனு எடுத்தவுடனே சொல்லிட முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா தான் வெட்டி விடனும்.

நீ எல்லாம் மனுசனே இல்ல.  நிச்சயமா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி தண்டனைய கடவுள் உனக்கு கொடுப்பார்.

என்னடா சாபம் விடுறியா?

உன் கூட இருந்தா இதுக்கு மேல என் பேரு கெட்டு போயிடும்.

சரி இருக்காத.

இத்தனை நாளா ஏதோ  விளையாட்டா பண்றேன்னு நினைச்சேன்.  லவ் என்கிற பேர்ல இந்த பொண்ணுங்க மனச சாகடிக்கிற.  ஒருத்தரோட மனச கொல்றதும்  கொலை பண்றதும் ரெண்டும் ஒண்ணு தான்.

“இதை நீ அப்படி நினைச்சுகிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இப்ப இருக்க பொண்ணுங்க எத்தனை பேர் உண்மையா லவ் பண்றாங்கன்னு” நினைக்கிற.
எல்லாம் கேடிங்கடா.

நூத்துல ஒருத்தர் வேணா நீ சொல்ற மாதிரி  இருக்கலாம்.  எல்லா பொண்ணுங்களும் அப்படி கிடையாது.  பொண்ணுங்கள பத்தி ரொம்ப தப்பா புரிஞ்சுட்டு இருக்க ஆதி.

என்னோட டிக்ஸனரில லவ்வுக்கு அர்த்தமே வேற. அதெல்லாம் உனக்கு புரியாது.

இதுக்கு மேல நீ திருந்தலனா ரொம்ப கஷ்டப்படுவடா ஆதி.

எப்பா சாமி அவனவன் என்னென்னமோ பண்றான். நான் சும்மா டைம்பாஸ்க்கு லவ் பண்றேன்.  அதுகூட என்னோட சரியான லைஃப் பார்ட்னர செலக்ட் பண்ணதான் யாதவ்.

யாரும் உன்ன மாதிரி பண்ணமாட்டாங்க. பாவத்தை சேர்க்காதடா ஆதி.

உன்னோட அட்வைஸ் எனக்கு  தேவையில்ல.  நிறுத்திக்கோடா.

ஓகே. இனிமே என்னோட அனுமதி இல்லாம ஏன் போட்டோவை எங்கயாவது அனுப்பினனு  தெரிஞ்சது….

என்னடா பண்ணுவ?

நானே ஸ்டேஷன்ல போய் உன்மேல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.

இந்தா  வீரசிங்கம் கிளம்பிட்டாரு.

விளையாடாத ஆதி.  நான் சீரியசாதான் பேசுறேன்.  நீ பண்றது தப்புன்னு தெரியாம தப்பான வழிய நோக்கி சரியா போயிட்டு இருக்கு.

என் லைஃப பாத்துக்க எனக்கு தெரியும்.  போடா.

தயவு செஞ்சு இனிமே எந்த பொண்ணு கிட்டயும் லவ் பண்றேன்னு மட்டும் சொல்லாதடா. அந்த பொண்ணு நாளைக்கு வீடு தேடி வந்தா என்ன பதில் சொல்லுவ.
இதே மாதிரி இன்னும் நாலு பேர் வந்தா என்ன பண்ணுவ?

லூசாடா நீ. எப்படிடா வரமுடியும். ட்ரூ காலர்ல உன் நம்பர போட்டாவே தெரிஞ்சிட போகுது.  இவ்வளவு யோசிக்கற நான் இத  யோசிக்க மாட்டேனா? இந்த நம்பர்ல  என்னோட அட்ரஸ் என்னோட பேர் எதுவுமே கிடையாது.

யாரோட பேர்ல  இருந்தாலும் அந்த அட்ரஸ்ல போய் கேட்டா சொல்ல மாட்டாங்களா?

டேய்!  அது என் பிரச்சனை. நான் பாத்துக்குறேன். நீ உன் வேலையை பாரு யாதவ்.

தயவுசெய்து ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகிற வழிய பாருடா.  இந்தக் கருமத்தை எல்லாம் விட்டுரு.  எல்லா பொண்ணுங்களும் ஏமாளியா இருக்க மாட்டாங்க. பொண்ணுங்க விஸ்வரூபம் எடுத்தா தாங்க மாட்ட ஆதி.

நீ இந்த டயலாக் பேசுறத முதலில் நிறுத்து.  நான் வீட்டுக்குனு ஒரு சிம்  தனியா வச்சிருக்கேன். என்னோட பெயர் மட்டும் வேணாம்னு சொல்லிருக்கலாம்.  என்னைய பத்தி உண்மையான எந்த  டீடைலும் சொன்னது இல்ல.  எவளையும் இதுவரைக்கும் நேர்ல நான் பார்த்ததும் கிடையாது.  எவ  வந்து என்னைக் கேக்க போறா?

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

திருக்குறள் கேள்வி பட்டதில்லையா? ஆதி. மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்னு சொல்லுவாங்க..

திருவள்ளுவர் வந்துட்டாருடா. அப்புறம் ஆத்திச்சூடி, மூதுரை இதெல்லாம் வருமா? போடா இவனே.

உன் விளையாட்ட இத்தோட நிறுத்திக்கோ ஆதி. அந்த பொண்ணுக்கு ஒழுங்கா ஒரு பதில் சொல்லு.  நல்ல மாப்பிள்ளையா  கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருக்கட்டும்.

“அவள எப்படி கட்  பண்ணுறதுனு  எனக்கு தெரியும். நீ உன் வேலைய பாரு. எடத்த காலி பண்ணு” என்றான்  ஆதி

ஆதி பொறுமையாக எழுந்த குளித்துவிட்டு தயாராகி யாதவையும் ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்தான்.

நீங்க எழுந்து வர  வரைக்கும் நான் பசியோடு இருக்க முடியாது.  ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி நானே சமைச்சேன்.  வேணும்னா சாப்பிடுங்க சார்.  இல்லன்னா ஹோட்டல்ல போய் சாப்பிடுங்க.

என்னடா கோவமா இருக்கியா?

ஐயோ!  உங்க மேல நான் கோபப்பட முடியுமா? ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

“நீ என்னமோ பண்ணு.  எனக்கு பசிக்குது.  என்ன சமையல் செஞ்ச” எனக் கேட்டுக் கொண்டே பாத்திரத்தைத் திறந்து பார்த்தான்.

சாதமும்,  சுண்டல் குழம்பும்,  தயிறும் இருந்தது. இது காலைல வச்ச மாதிரி தெரிலையே.

ஆமா.  சாதம் மட்டும் தான் இப்ப வச்சது. வச்சிட்டு வந்து தான் டீ குடிக்க கூப்பிட்டேன். குழம்பு நைட் செஞ்சது தான்.

“ஆதி  அமைதியாக போட்டு சாப்பிட்டு விட்டு  எனக்கு இன்னைக்கு லஞ்ச் வேணாம்டா.  நான் வெளியே சாப்பிட்டுகிறேன்.  கிளம்பு ஆபீஸ் போலாம்” என்றான்.

அந்த பொண்ணு அவ்வளவு தூரம் அழுது கேட்டுச்சு.  அதைப்பத்தி ஒரு நிமிஷம் கூட யோசிக்கல. பாவம்டா ஆதி.

” என் விஷயத்தில் நீ தலையிடாதனு  சொல்லிட்டேன். கிளம்பு” என்றான் இதற்கு மேலும் அவனிடம் பேசிப் ஆதி.

மெல்லிசை தொடரும்…

Advertisement