கவினும் நந்தனும் சேர்ந்து பெண்களிடம் நெருங்கி தகாத முறையில் நடக்க ஆரம்பித்திருந்த வேளையில் …. இடி இடிப்பது போன்று அந்த கட்டிடமே அதிரும் வகையில் கீழே விழுந்திருந்த இரும்பு ஏணியின் பெரும் சத்தத்தைக் கேட்டு சடாரென்று தங்களின் நடையை நிறுத்திய அகத்திய வர்மனும் அர்வின் சாகரும் பெண்கள் இருவரையும் அடைத்து வைக்கப் பட்டிருந்த கட்டிடத்தினை நோக்கி ஓடி வந்திருந்தனர் ….
வலது புறத்திலும் இடது புறத்திலும் என்று ஓரிரு நொடி இடைவெளியில் ஆளுக்கு ஒரு பக்கமாய் அர்வினும் அகத்தியனும் அவர்கள் இருக்கும் கட்டிடத்தினுள் நுழைய…. கதவில்லாத அறையின் வாசலில் தூக்கி ஏறியப்பட்டிருந்த வர்ஷனாவின் துப்பட்டாவை தாண்டி உள்ளே சென்று எதிரே நின்றனர்….
இரு பெண்களுக்கும் போதை மருந்து கலக்கப்பட்ட தண்ணீரை வலுக்கட்டாயமாய் கொடுக்க ஆரம்பித்த வேளையில்…. எதிர்பாரா விதத்தில் எதிர்பாரா நேரத்தில் உள்ளே நுழைந்த இரு புயல்களின் அதிரடி அரவத்தில் சடாரென்று திரும்பிய கவினேஷும் நந்தனும் விக்கித்து விதிர் விதிர்த்து நிற்க்க …. ஒரு நொடியும் தாமதியாது அகத்தியனும் அரவினும் பெண்களை தங்களின் பக்கம் இழுத்துக் கொள்ள …. கைகளில் பிடித்திருந்த தண்ணீர் பாட்டில் நழுவி கீழே விழுந்திருந்தது ….
இருட்டிலும் ஊடுருவி கண்காணிக்கும் கண்கள், வேட்டையாடப்பட்ட இரையின் தொண்டையைக் கடித்துக் கொல்லும்
காட்டின் கொடுங்கோலனான …. புலியின் மறுஉருவமாய் அரவினையும்…. கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து ….. வேட்டையாடும் யுக்தியை தன் சிறப்பியல்பாகவே பெற்றதனாலேயே, அதிகார ஆணவத்தில் இருக்கும் சர்வ வல்லமை படைத்த அகத்தியனையும் காண்கையில் ஈரக்குலை நடு நடுங்கி பளீரென்ற மின்னல் தாக்கியது போல் உணர்ந்த கவின் நந்தன் இருவரும் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தனர்… ஏனெனில் தங்களின் எதிரே பற்றிக் கொண்டு எரியும் நெருப்பைப் போல் சுட்டெரிக்கும் அவர்களின் கண்கள் தணல்களைப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கையில் எங்ஙனம் அவர்களால் முன்னேற முடியும் …??
என்ன நடக்குதென்றே புரியாமல் அலக்ளிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் கூட தாங்கள் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணரவே முழுதாய் ஒரு முழு நிமிடம் தேவைப்பட….. கிணற்றில் விழுந்த பூனைக்கு ஒரு சிறிய பலகைக் கிடைத்தால் அதை பொக்கிஷமாய் பற்றி பிடித்துக் கொள்வது போல் …. அந்நேரத்தில் கண்ட அர்வினையும் அகத்தியனையும் இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொண்டனர் அக்ஷராவும் வர்ஷனாவும் ….
அர்வின் தனக்கு எதிரே அவர்களைக் கண்டு அச்சத்தில் கை கால்கள் வெடவெடத்து போய் நின்றிருந்த நந்தனை ஒரே அடியில் வீழ்த்தியதில் …. நிலை கொள்ளாமல் அரை உயிராய் சுருண்டு கீழே விழுந்திருக்க …. சற்றும் எதிர்பார்த்திராத இத்திருப்பத்தினால் கவினேஷ் ஸ்தம்பித்து நின்றாலும் …. கீழே குனிந்து அர்வினின் அடியில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டவன்…. அடுத்த நொடி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியினால் தனக்கு நேர் எதிரே நின்றிருந்த அகத்தியனின் இடது தோள் பட்டையில் வேகமாகவும் மிக ஆழமாகவும் குத்திக் கிழித்திருந்தான் ….
அவனின் தாக்குதலில் தன் கையில் வைத்திருந்த கன்னை கீழே நழுவ விட்ட அகத்தியனை…. ” ஐயோ ஏங்க…. ” ” அண்ணா… ” என்றவாறு வர்ஷனாவும் அக்ஷராவும் தாங்கி பிடித்துக்கொள்ள…. அடுத்த நொடியில் அரவினிடம் திரும்பியவன் அவன் முகத்திற்கு நேரே தூக்கி அவனையும் தாக்க முற்பட… ஆனால் அர்வினோ வினாடிக்கும் கீழ் சட்டென்று நகர்ந்து தன்னிடது பக்கமாய் சுற்றி அவன் கழுத்தை வலது முழங்கையால் அழுத்தி கைகளைப் பிடித்து மடக்கியவாறு அவனிடம் இருந்த கத்தியினை லாவகமாய் தட்டிப் பறித்தான் ….
என்ன தான் அகத்தியனை பிடித்து நின்றாலும் பெண்கள் இருவருக்கும் தங்களின் பார்வை என்னவோ அர்வினின் மேலே பயத்துடன் படிந்திருக்க…. அவர்களை நோக்கி பார்வையை மட்டும் திருப்பிய அர்வின் வார்த்தைகளில் கடுமையைக் கூட்டி ….
” அங்க போய் நில்லுங்க… ” என்று தாங்கள் நின்றிருந்த அறையை விட்டு வெளியே பார்வையால் சுட்டிக் காட்ட…. அவர்கள் திரும்பிய அடுத்த நொடி …. அகத்தியனைத் தாக்கியது போலவே தன் இடது கையால் அவனது வலது தோள் பட்டையிலும் சரட்டு சரட்டென்று தாக்கினான் ….
அர்வினின் இந்த தாக்குதலில் இரத்தம் பீறிட்டு வெளியேற…. அந்த இடத்திலேயே மடிந்து கீழே விழுந்த கவினேஷை தூக்கி நிறுத்த முற்பட்ட வேளையில் …. படீரென்று மின்னல் தாக்கியது போல் அர்வினின் பின்னந்தலையில் இரும்புக் கம்பியைக் கொண்டு அடித்தான் நந்தன் ….
அவன் அடித்த வேகத்தில் சட்டென்று மயக்கம் இருட்டிக் கொண்டு வர ஒரு நொடி கண்களை மூடித் திறந்து மண்டியிட்டு அமர்ந்த அர்வினை அதே இரும்புக் கம்பியைக் கொண்டு முகத்திலும் அடித்திருந்ததில் …. தலையிலும் இடது கன்னத்திலும் இரத்தம் சொட்ட சொட்ட அப்படியே முன்னால் சரிந்து விழுந்தான் அர்வின் …. அதற்குள் கவினேஷும் கைக்கெட்டிய தூரத்தில் விழுந்திருந்த அகத்தியனின் கன்னை எடுத்து அவர்களை நோக்கி நீட்டியவாறு தடுமாறிய படி எழுந்து நிற்க்க …. இப்போது கவினும் நந்தனும் ஒருசேர நின்றிருந்தனர் …
இவை அனைத்தும் ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்திருக்க …. கையில் ஏற்பட்ட காயத்தோடு அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த பெண்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு ‘ சரண்டர் ‘ என்பது போல் இரு கரங்களையும் மெல்ல தூக்கினான் அகத்தியன் …
சூரியனை நேருக்கு நேர் பார்க்கக் கூடிய….. மனிதனின் பார்வை திறனை விட எட்டு மடங்கு கூர்மையான பார்வை கொண்ட ஒரே பறவையான கழுகின் சிறப்பம்சத் திறனையுடைய அகத்தியன் ….. எதிரில் நின்று கைககளைத் தூக்கியப்படியே அவர்கள் அறியாதவாறு ஒரு ஒரு இன்ஞ்சாக முன்னால் சென்று சட்டென்று தன் வலது காலால் அவன் கைகளில் பிடித்திருந்த கன்னை சுழற்றி தட்டிவிட…. அடுத்த நொடி முகத்திற்கு நேரே இரும்புக் கம்பியை நீட்டிய நந்தனின் மணிக்கட்டை அழுத்திப் பிடித்து முன்னால் இழுத்து விட்டு தன் காலால் அவனின் கால்களில் அடித்து இடறி விட்டவன்…. அவன் கீழே விழும் முன் அவனின் கழுத்தை பலமாய் நொடித்து திருப்ப… அவனின் கழுத்தெழும்பு உடைந்த அந்நொடியே அவனின் உயிர் உடலை விட்டு இப்பூமியைத் தாண்டி சென்றது….
அதைப் பார்த்த கவின் அடுத்த நொடியில் அர்வினின் அருகில் விழுந்து கிடந்திருந்த கன்னை பாய்ந்து சென்று எடுத்து பட் பட்டென்று சுட்டதில் குறிதவறிய குண்டுகள் நேர்சுவற்றில் பாய்ந்ததில் அதன் ஒரு பகுதி சட்டென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்த அகத்தியனின் கைகளில் உரசி விழ …. அதற்குள் சுதாரித்து எழுந்த அர்வின் கவினின் முதுகில் எட்டி உதைத்திருந்தான் ….
அவன் உதைத்த வேகத்தில் முன்னால் சென்று சுவற்றில் மோதி விழ…. தன் அருகில் கீழே விழுந்திருந்த அகத்தியனை கரம் கொடுத்து தூக்கிவிட்டவன்…. முன்னால் சென்று அவனை எழுப்பி நிறுத்தி மீண்டும் மீண்டும் அவனின் தலையை அழுத்தி பிடித்து மாறி மாறி சுவற்றில் அடித்து வீழ்த்தினான்….
இவை அனைத்தையும் பயத்தோடும் ஒருவித திகிலோடும் தங்கள் காதுகளை மூடியவாறு அந்த அறையின் வெளியே நின்றிருந்த பெண்கள் இருவரும் அங்கு பரவிய மெல்லிய வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருக்க …. அவர்களிடம் தன் பார்வையை திருப்பிய அர்வின் மீண்டும் அகத்தியனிடம் திரும்பினான்….
” அகத்தியன் இங்கே நிற்கிறது சேஃவ் இல்லை… அதனால நீங்க முதலில் பொண்ணுங்களை கூட்டிகிட்டு போங்க…. எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம எல்லோருக்கும் நல்லது …. ” என்று விட்டு
உயிரற்ற சடலமாய் கிடந்த நந்தனையும் ஒருமுறை திரும்பி பார்த்து
” இவனுங்களை நான் பார்த்துக்கிறேன் ” என்றான்….
” இல்லை அர்வின்…. இந்த நிலைமையில உன்னை மட்டும் தனியா விட்டுட்டு போறது அவ்வளவு நல்லது இல்லை…. அதுவும் இல்லாமல் அங்க பாரு …. அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்… ” என்று கவினை சுட்டிக்காட்ட…. அடிபட்ட நெற்றியில் இருந்து முகம் முழுவதும் ரத்தம் வலிய…. சுவற்றில் சாய்ந்தபடி கால் நீட்டி மடங்கி அமர்ந்தவாக்கில் திக்கி திணறியவாறு மெதுவாக பேசினான் கவின் …. மரண பயமும் வலியும் கண்களிலும் மனதிலும் ஆட்டுவித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்…
” டேய்…. ரொம்பப் பெ… பெரிய தப்பு பண்றீங்க டா…. என்னைக் கொன்னுட்டு உங்களால…. உயிரோடு இருக்க முடியாது …. எங்க அப்பா எப்படியும் உங்களை கண்டுபிடித்திடுவார் …. நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…. உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் இங்கே இருந்து தப்பிச்சு போயிடுங்க…. ” என்றான் என்னவோ அவர்கள் இருவரையும் இவன் மன்னித்து விடுதலை செய்வது போல் ….
அவனின் பேச்சில் வெகுண்டெழுந்த அகத்தியனைக் கைப்பிடித்து தடுத்து நிறுத்திய அர்வினிற்கும் உச்சக் கட்ட ஆரோஷமும் அந்நொடியே அவனை அணுவனுவாய் வெட்டி சிதைத்து சின்னாபின்னமாக்கி விடும் குரூரம் உதித்தாலும் தன்னை வெகுவாய் கட்டுப்படுத்திக் கொண்டவன்
” அகத்தியன்… வேண்டாம்…. இன்னும் ஒரு அடி அடித்தால் கூட செத்துருவான்…. ” என்றதும்….
” என்னது…. செத்துருவானா…? அப்படினால் , அவனை இப்படியே உயிரோடு விட்டு உயர்ந்த பதவியை கொடுத்து கவுரவப்படுத்த சொல்றியா …? ” என்றான் கோபங்களை உள்ளடக்கியபடி ….
” அகத்தியன்…. அவன் சாகக்கூடாதுன்னு நான் சொல்ல வரலை…. ஆனால் அவன் இப்படி சாகக் கூடாதுன்னு தான் சொல்றேன் …. இவனை என்கிட்ட விட்டுருங்க…. ” என்றவன் பளபளப் பேறிய தன் கூர் தீட்டிய விழிகளால் ஆராய்ந்து அங்கிருந்த ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு கவினேஷிடம் விரைந்தவன் அவன் கைகள் இரண்டிற்கும் நடுவில் இரும்புக் கம்பியை நுழைத்து விட்டு பின்னால் அழுத்திக் கட்டினான்….
” பரத்தையும் பிரபாகரனையும் வரச்சொல்லி முதலில் அக்ஷராவையும் வர்ஷனாவையும் இங்கிருந்து கூட்டிட்டு போகச் சொல்லுங்க …. அதுற்குப் பிறகு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்… ”
என்றான்
அகத்தியனிற்கு புரிந்து விட்டது அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று…. எப்போதும் தெளிவான முடிவைக் கொண்ட நேரடி சண்டையை விரும்புகின்ற வேங்கையின் வெறித்தனத்தைக் கையாள்பவன் ….
அதன் எதிரியை அல்லது இரையை நேருக்கு நேர் தாக்கி சண்டையை விரைவாக முடிக்கும் வல்லியத்தின் வீறுகளைக் கோலோச்சுபவன்…. தனது எதிரியான கேடுகெட்ட குணம் கொண்ட மிருகத்தினை முழுமையாக வேட்டையாடி வெல்லத் தயாரானான்….
இப்போது அவன் தன் காதல் மனைவியின் சகோதரன் அல்ல…. தன் தங்கையின் காதல் கணவனும் அல்ல….
இதுவரையில் அவன் நடத்திய வேட்டையில் சிக்கிய ஓநாய்களை ஆவேசம் கொண்டு துரத்திப் பிடித்து உருத்தெரியாது அழித்தொழிக்கும் வலிமைப் படைத்த வியக்கரத்தின் வீரான் மகனாய் உருவெடுத்து நின்றிருக்கும் வீர மறவன் அவன்…. அர்வின்…. அர்வின் சாகர்….