எந்த எல்லைகளுக்கும் உட்படாத , பொதுவான இலக்கணம் ஒன்றை வகுத்து விட முடியாத ஒரு உணர்வு தான் காதல்… அது எப்போது யாருக்கு வர வேண்டும் என்ற கோட்பாட்டை வரையறுக்காதது…. எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யாருக்குள் வேண்டுமானாலும் உருவாகலாம் உணர வைக்கலாம் ….. ஆனால் இதிலும் சில விதி விலக்கு உள்ளது ….
அது விழிகளால் பார்க்கும் போது புற அழகினால் ஏற்படும் ஈர்ப்பு மட்டும் அல்ல காதல்…. அது உயிரில் கலந்து இதயத்தில் உருவாகும் உன்னதம் …. அது தான் உண்மையான காதல்….. அதை ஆழ்ந்து அனுபவித்து உணர்ந்து கொண்டனர் அர்வின் சாகர் அக்ஷரா இருவரும் ….
தன் நெஞ்சில் முகம் புதைத்தவாறு நின்றிருந்தவளின் தலையில் கன்னம் வைத்து அர்வினும் தன்னவனின் இதயத்துடிப்பை தன் இதயத்தின் வழியே உள்வாங்கி கண்மூடி அனுபவித்தவாறு அக்ஷராவும் என்று ஒருவரின் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டு நின்றிருந்தனர்….
எவ்வளவு நேரம் நின்றிருந்தார்களோ தெரியவில்லை…. விட்டால் இன்று முழுவதும் கால் கடுக்க இப்படியே நின்றிருப்பார்கள் ….. அவ்வாறு இல்லாமல் அதை தடுப்பது போல் அக்ஷராவின் மொபைல் ஒலி எழுப்பி அவர்களை கலைத்தது ….
எடுத்து பேசியவள் மறுமுனையில் இருப்போரிடம் ” சரி நான் கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்…. ” என்று பேசி விட்டு அவனைப் பார்த்து
” நான் கிளம்புறேன்…. பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க…. ” என்றாள் மெல்லிய குரலில்.
தன்னைப் பார்த்து தன் கண்களை பார்த்து பேசுவதற்கு நாணம் கொண்டு தலை தாழ்த்தி நின்றிருந்தவளின் தோரணையை கண்டு ஒரு ஆண் மகனாய் கர்வம் கொண்டவன் அவளின் வெட்கத்தை வெகுவாய் ரசித்தான்…..
அவள் கிளம்பும் நொடியில் அவளைப் போக விடாமல் சட்டென்று கைப்பிடித்து நிறுத்தியவன்
” ஷாரா…. என்னை பற்றி எதுவும் தெரிய வேணாமா உனக்கு ….? ” என்றதும்
” உங்களைப் பற்றி தான் எனக்கு நல்லாத் தெரியுமே அர்வின்…. முன்னாடி என் காதலை ஏற்காமல் நிராகரிச்சிங்க…. இப்போ என் காதலை புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்கிட்டீங்க…. இனியும் என்னை முழுமனசோடு காதலிப்பீங்க …. எனக்கு இது போதும் அர்வின் இதைவிட வேற என்ன தெரிஞ்சுக்கணும் ….? ” என்றாள் கண்கள் முழுவதும் காதல் மின்ன….
அவள் காதலில் கரையத் துடித்தவன் என்ன நினைத்தானோ தான் சொல்ல வந்ததை சொல்லாமல் ” சரி கிளம்பு… ” என்றான்… தன்னிடம் எதுவோ சொல்ல வந்து பின் சொல்லாமல் தவித்த அவன் பார்வையில் தத்தளித்து தடுமாறியவள்
அப்போதும் அவ்விடத்தை விட்டு நகராது ஆணியடித்தது போல் நின்றிருந்தாள்…..
மெலிதாக புன்னகைத்துக் கொண்டவன் அவள் செல்வதற்கு மெல்ல தலையசைத்து மீண்டும் அனுமதி வழங்க…. அவளும் அவனை இதயத்தில் மட்டும் அல்லாமல் விழிகளிலும் நிறைத்துக் கொண்டு முக மலர்ச்சியுடன் கிளம்பினாள்….
*********************************
இன்றோடு ஒரு மாத காலம் முடிந்து விட்டது. அர்வினின் காதலை அறிந்து….. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒரு மாத காலத்தில் அவனை எத்தனையோ முறை சந்தித்தும் இருக்கிறாள் அவனிடம் பேசியும் இருக்கிறாள்…. ஆனால் அன்று அவன் வீட்டிலிருந்து கிளம்பி வரும்போதும் அவ்வளவு ஏன் இந்த ஒரு மாத காலமாகவே அவனை சந்திக்கும் போதெல்லாம் அவன் தன்னிடம் எதுவோ சொல்ல வருவது போன்றும் அதை சொல்லாமல் தவிர்த்து தவிப்பது போன்றும் தோன்றியது அக்ஷராவிற்கு….
தவித்து துடித்த அவனின் பார்வை மறைமுகமாய் எதையோ தன்னிடம் உணர்த்துவது போல் உணர்ந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடி போனாள்….
‘ அவன் கண்கள் தன்னிடம் சொல்லிய செய்தி தான் என்ன ….? ‘ எவ்வளவு முறை முயன்றும் அவளால் அதை எளிதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை ….
‘ என்னடி தெரியும் என்னை பத்தி உனக்கு ….. நான் ரொம்ப நல்லவன்னா…? உன் அண்ணன் ஒரு போலிஸ் தானே போய் அவன் கிட்ட கேட்டு பாரு…. ‘ இது அவன் சொன்ன வார்த்தைகள் தான்…. அடிக்கடி அவள் மனதில் வந்து போகும் நெருடலான முள் போன்று தைத்துக் கொண்டே இருந்தது ….
அவன் சொன்னது போல் அகத்தியனிடமே கேட்டு விடலாமா என்று கூட நினைத்தாள் தான்…. ஆனால் அது அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையால் அல்ல …. தன்னால் முடிந்த வரையில் அவன் மனதில்
கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தை ஆற்றவே….
காயம் பட்ட அவன் மனதை மயிலிறகால் வருடி செல்லவே….
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை அறியாமல் கூட அவனைக் காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக வேணும் அவனைப் பற்றி தெரிந்து கொள்வது என்று எண்ணியவள் மொபைலை எடுத்து பேசினாள்
” ஹலோ அண்ணி…. ” என்ற உற்சாகம் நிறைந்த வர்ஷனாவின் குரலில் தானும் முகமும் அகமும் மலர புன்னகைத்தவள்
” வர்ஷனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…. ” என்றவள் இடத்தையும் நேரத்தையும் குறிப்பிட்டு வரச் சொல்லவும் …. உடனே வர்ஷனாவும் சம்மதம் தெரிவித்து கிளம்பினாள் …..
சொன்னது போல் தனக்கு முன்னரே வந்து காத்துக் கொண்டிருந்த வர்ஷனாவிடம் மன்னிப்பு இறைஞ்சிய அக்ஷராவைக் கண்டு …
” நோ இஷ்யூஸ் அண்ணி…. ” என்று நட்புடன் கூறியவள் தனக்கும் அவளுக்கும் சேர்த்து கோல்ட் காபி ஆர்டர் செய்தாள்…. பின் இருவரும் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்கையில் அது எப்படியோ வர்ஷனாவின் குடும்ப பின்னணியில் வந்து நிற்க்க….
” வர்ஷனா நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன் உங்க வீட்ல நீயும் உங்க அண்ணாவும் மட்டும் தான் இருக்கீங்க…. உங்க அப்பா அம்மா….? ” என்று கேள்வியோடு இழுத்தவளிடம்
” அவங்க யாரும் இப்போ உயிரோட இல்லை…. ” என்றவள் சில நொடிகள் இடைவெளி விட்டு
” அண்ணி நீங்க என்னோட பேமிலியை பபற்றி தெரிஞ்சுக்க முன்னால் அர்வின் அண்ணாவைப் பற்றி தெரிஞ்சுக்கணும்…. ” என்று விட்டு ஆரம்பித்தாள்…..
*********************************
அர்வின் சாகர் A. S. P ( அசிஸ்டன்ட் சுப்ரிடெண்டன்ட் ஆப் போலீஸ் – கர்நாடகா )
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்
( மைசூர் இராச்சியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது )
சிவப்பு நிறக் கவசம் கொண்ட சின்னத்தின் முகட்டில் இந்திய அரசாங்கத்தின் சின்னமாக பயன்படுத்தப்படும் அசோகாவின் சிங்க தலைநகரமும் , நீல வட்ட வடிவ அபாகஸில், இடதுபுறத்தில் பாய்ந்து செல்லும் குதிரையின் உயரமான உருவத்தில், நடுவில் தர்மச்சக்கரம் கொண்டு ஒரு காளை போன்ற உயரமான சிற்பங்களைச் சுமந்து செல்லும் நீல பிரைஸுடன் சித்தரித்தும்…. வலதுபுறம், மற்றும் சாரநாத்தின் அசோகத் தூணின் ஒரு பகுதியாக காண்பித்து இடது மற்றும் வலதுபுறத்தில் தர்மசக்கரங்களின் வெளிப்புறங்களையும் கவசத்தின் இருபுறமும் சிவப்பு-மனிதனையும் , மஞ்சள் நிற சிங்க – யானை ஷரபா ஆதரவாளர்களால் அதாவது சிங்கம் மற்றும் யானைகளை விட வலிமையான நீதியை நிலைநிறுத்துவதாக நம்பப்படும் புராண உயிரினங்களை கொண்டு பச்சை, இலைப் பெட்டியில் நிற்க வைத்தபடியும் . பெட்டியின் கீழே பகட்டான தேவாநாகரி, இந்தியாவின் தேசிய முழக்கம், “சத்யமேவ ஜயதே” ( ” சத்தியமே ஜெயிக்கும் ” ) என்ற கோல்டன் எழுத்துக்களைக் கொண்டும் பொறிக்கபட்டிருந்தது அவர்களின் அடையாள சின்னம் ….
ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் சீருடை அணிந்து பெருமை மிகுந்த பணியில் வீர நடை போட்டு…. இரவும் பகலும் என்ற பாகுபாடு இல்லாமல் கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் உறைந்த பனியிலும் உடலின் பிணியிலும் சோர்ந்து போகாது மனம் தளராது நின்று காப்பவன் வேகமுடன் அலுவலகத்தின்னுள்ளே நுழைய…. வருபவர்களை வரவேற்பது போல் பளிச்சென்று பார்வையில் படும்மாறு மேலே சுவற்றில் பெரியதாக மாட்டப்பட்டிருந்த அவர்களது அடையாளச் சின்னத்தின் கீழே தனது சூழல் நாற்காலியில் அமர்ந்து தனது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவன் மறுமுனையில் இருப்போரிடம் உத்தரவுகளை இட ஆரம்பித்தான்….
” ஹலோ ஹெட் குவார்டர்ஸ்…. ஐம் அர்வின் சாகர் அசிஸ்டன்ட் சுப்ரீடெண்டன்ட் ஆப் போலீஸ்…. ஆயுத கிடங்கிற்கு போகிற எல்லா ரூட்டையும் இம்மீடியட்டா பிளாக் பண்ணுங்க…. அந்த ரூட்ல போகிற எல்லா வெகிகிள்ஸ்ஸையும் செக் பண்ணுங்க…. உங்களுக்கு சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனடியாக அரெஸ்ட் பண்ணுங்க …. ஐ வில் பி தேர் வித் இன் டென் மினிட்ஸ் …. கமான் குவிக்…. ” என்று உத்தரவிட்டவன் சொன்னது போல் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவ்விடத்திற்கு விரைந்தான் …..
உரிமம் பெறப்படாத ஆயுதங்களை கடத்தி செல்வதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வழியில் சென்ற வாகனங்களில் சோதனை மேற் கொண்டனர் ….. அப்போது எதிரில் வந்த லாரி ஒன்றிலிருந்து வேகமாக கீழிறங்கி ஓடி தப்பிக்க முயன்ற ஓட்டுநரை …. அருகில் இருந்த காவலர்கள் துரத்தி செல்ல…..
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அர்வின் சாகர் நின்ற இடத்தில் இருந்தே தரையில் இருந்த செங்கற்கல்லை எடுத்தவன் அதீத வேகத்தில் தூக்கி அடித்தான்….
அர்வின் அடித்த வேகத்தில் அவன் பின்னந்தலையில் பட்டு அந்த இடத்திலேயே மயக்கமுற்று கீழே விழுந்தவனை மற்ற காவலர்கள் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி நிறுத்த….
அருகில் சென்ற அர்வின் சாகர் …. ” எதுக்குடா எங்கள பார்த்ததும் பயந்து ஓடுற ….? ” என்றான்
” அது அது வந்து… என்கிட்ட லைசென்ஸ் இல்லை சார் …. அதான் உங்களை பார்த்ததும் ப…. பயத்துல …. ஓடினேன்…. ” என்றான் தப்பிக்கும் நோக்கில் திக்கி திணறியவாறு ….
அவன் வந்த வாகனத்தை சோதனை செய்து பார்த்ததில் …. அவர்களின் சந்தேகம் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவது போல் பல லட்சங்கள் மதிப்பு பெறும் ஆயுதங்களை கடத்தி சென்று கொண்டிருந்தனர்….
அவற்றைக் கைப்பற்றிய அர்வின் சாகர் குற்றவாளியை அருகில் இருந்த காவலரிடம் ஒப்படைத்து விட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட
” சார்…. இது பெரிய இடத்து விவகாரம் …. கொஞ்சம் யோசிச்சு …. ” என்று சொல்லி கொண்டிருந்தவனிடம் அவனை மேலும் பேசி முடிக்க விடாமல் சட்டென்று திரும்பி பார்த்தான் அர்வின் சாகர் …..
அந்த இருட்டிலும் பார்க்கும் எதிராளியை அச்சமுறுத்தி குலைநடுங்க செய்யும் அளவிற்கு ஊடுருவி கண்காணிக்கும் பளபளப்பான கூர் விழிகளால் சுட்டெரிக்க…. அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச நா எழாமல் ஒட்டிக் கொண்டு கதி கலங்கி நின்றவன் அடுத்த நிமிடம் அடித்து பிடித்து அலறாத குறையாக குற்றவாளியை இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு காவல் நிலையத்திற்கு சென்றான்….
எந்த ஒரு குறிக்கோளினை அடைவதற்கும் லட்சியம் மிகவும் அவசியம். வாழ்க்கையில் லட்சியம் கொண்டிருப்பவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
அர்வின் சாகர் எடுத்துக் கொண்ட இவ்வழக்கில் எதிராளிகளிடமிருந்து எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் அவனுக்கு தொடர்ந்து வந்த வண்ணமாய் இருந்தாலும் …. அதை எல்லாம் துச்சம் என கருதி…. எதற்கும் அஞ்சாமல் அசைந்துக் கொடுக்காமல் தான் நிர்ணயித்த இலக்கை அடையும் வரை அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பது ஒன்றே குறிக்கோள் என்று உறுதியுடன் போராடியவன் அதில் வெற்றியும் கண்டான் ….
அவனின் வெற்றிக்கு மேலிடத்தில் இருந்தும் வெளியில் பொது மக்களிடம் இருந்தும் பத்திரிகை ஊடகங்களில் இருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வந்து குவிய….. வீட்டிலும் அவனின் வெற்றியை கொண்டாடுவது போல் அர்ஜித் சாகர் ஜீவிதா அருண் சாகர் லலிதா என்று அனைவரும் மனமாற வாழ்த்தி பாராட்டினர்….
” வாவ்…. சூப்பர் அண்ணா…. கலக்கிட்டீங்க…. வாழ்த்துக்கள்…. இன்னைக்கு சிட்டி ஃபுல்லா உங்களை பற்றி தான் எல்லோரும் பேச்சு…. எவ்ளோ பெருமைக்குரியவர் னு எங்க திரும்பினாலும் உங்கள் புராணமே தான்….” என்று வர்ஷனா கூறவும் அவளைக் கண்டு லேசாக நொடித்துக் கொண்ட ஆஷிகா
” அர்வின் சாகர் அப்படி சாதிச்சிட்டாரு…. அர்வின் சாகர் இப்படி சாதிச்சிட்டாரு…. னு உங்களோட பெருமை இந்த ஊர் மட்டுமில்ல…. இந்த ஸ்டேட்டுக்கே தெரியுமே…. இது ரொம்ப பழைய நியூஸ்…. அது மட்டும் இல்லாமல் அர்வின் அண்ணா இந்த கேஸ்ல வின் பண்ணிடுவார்னு உங்க எல்லோருக்கும் முன்னாடியே எனக்கு தெரியும்…. அதனால் இதுல ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்லை…. ஆனால் உங்க யாருக்கும் தெரியாத ஒரு புது நியூஸ் சொல்லவா….? ” என்றாள் ஆஷிகா கடைசியாக சொன்னதை மட்டும் கொஞ்சம் ரகசியமாக….
” அண்ணா உங்களுக்கு என் பிரெண்ட் நீராஜாவை தெரியும்ல…. ” என்றதும்
” யாரு அந்த நெட்ட கொக்கு தானே….? ” என்று வர்ஷனா வம்புக்கு இழுக்க….
” அவள் ஒண்ணும் நெட்ட கொக்கு இல்லை…. ” என வேகமாக நொடித்துக் கொண்டவள் அர்வினிடம் திரும்பி
” அவள் உங்களை சைட் அடிக்கிறாள்…. ” என்று விட்டு கண்ணடித்தாள்…. ” அடியே அதிகப்பிரசங்கி…. உன் வால் தனத்தை கொஞ்சம் அடக்குறியா….? ” என்ற வர்ஷனா அவளின் காதை பிடித்து மெல்ல திருகியதில்
” வலிக்கலையே… வலிக்கலையே…. ஆ வலிக்குது…. வலிக்குது…. ” என்று போலியாக அலற…. பெரியவர்கள் அனைவரும் இளையவர்கள் இவர்களின் விளையாட்டை கண்டு ரசித்து சிரித்தனர்…..
” அவளை விடு வர்ஷு…. ஆமா ஆஷு…. அந்த நீரஜா எப்படி இருப்பாள்….? ” என்று கேள்வி கேட்ட அர்வினை பார்த்து வாயைப் பிளந்து நின்றாள் வர்ஷனா….
” அண்ணா நீங்க அவளை பார்க்கலையா….? அன்னைக்கு கூட நம்ம வீட்டுக்கு வந்திருந்தாளே…. ” என்றவளிடம்
” அப்படியா…. அடடா நான் மிஸ் பண்ணிட்டேனே…. ” என்று போலியாக வருத்தப்பட…. ” சரி பரவாயில்ல அண்ணா விடுங்க…. அன்னைக்கு பார்க்கலைன்னா என்ன நாளைக்கு நீங்களே என்னை டிராப் பண்ணுங்க அப்போ நான் உங்களுக்கு அவளை இன்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கிறேன்…. ” என்றாள் வர்ஷனாவை பார்த்து பழிப்பு காட்டியபடியே….
அதைக் கண்டு சிரித்தவன் ” அதுக்கென்ன வந்துட்டால் போச்சு…. ” என்று அவன் பேசியது வெளியில் ஆதரிக்கும் விதத்தில் இருந்தாலும் உள்ளுக்குள் நீரஜாவைப் பார்த்து ‘ நன்றாக படிக்க வேண்டும் படிப்பு ஒன்றே உன்னுடைய வளமான வாழ்விற்கு உதவும் ஊன்றுகோல் ‘ என்பதை சொல்வதற்கு தான் ….
மறுநாள் காலையில் இருந்தே உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளிடம்
” சாரி ஆஷு…. ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு …. சோ உன் பிரண்டு நீரஜாவை நான் இன்னொரு நாள் கண்டிப்பாக மீட் பண்ணுறேன் …. ” என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக…. ஆனால் அப்போதும் மலை இறங்கி வராமல் பிடிவாதமாய் பேசாமல் இருந்தவள் முகம் வாட அமர்ந்திருந்தாள்…. அதைக் கண்டு மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டவன் தன்னுடைய வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அவளுக்காகவே அவளோடு செல்வதற்கு சம்மதம் தெரிவித்தான்…..
அவளின் சிறுமுக வாட்டத்தைக் கூட காண சகிக்காதவன்…. அவளின் சிறு சுணங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவன்…. மலரை விட மென்மையான மனம் கொண்டவளை காமவெறி பிடித்த மனித மிருகங்கள் கசக்கி சின்னா பின்னமாக்கப் போவது தெரிந்தால்….? அந்த கயவர்களிடம் சிக்கித் தவித்து தத்தளித்து தன் உயிரை விடப் போவது அறிந்தால்….? எங்கனம் பொறுப்பானோ அவன்….?
ஆனால் அது தான் விதி….
அவளுடன் சேர்ந்து புறப்பட்டவன் அவளை பள்ளியின் எதிரில் இருக்கும் சாலையோரத்தில் இருந்த மரத்தின் அடியில் நிறுத்தி இறக்கி விட….
” அண்ணா…. ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் இங்கே இருங்க…. நான் நீரஜாவை பார்த்து அவளை கூட்டிட்டு வர்றேன்…. ” என்று விட்டு அவனைப் பார்த்து பின்னால் நடந்தவாறு பேசியபடியே சென்றவள் வேகமாக திரும்பி பள்ளியை நோக்கி ஓட எத்தனிக்கையில்….
அவள் திரும்பிய வேகத்தில் கீழே விழப் போவதை உணர்ந்து கொண்ட அர்வின் சாகர் …. ” ஏய் ஏய்… ” என்று அவளை எச்சரிக்கும் நோக்கில் அவளிடம் விரைந்து செல்ல… அதற்குள் எதிரில் வந்த அந்த கயவனின் மீது இடித்து கீழே விழுந்திருந்தாள்….
அப்போது தான் அவன் ஆஷிகாவைப் பார்த்தான்…. பள்ளி சீருடையில் சிறுமியாய் இருந்தாலும் அவளின் அழகான வதனமும் மினுமினுப்பான தோலும் கீழே விழுந்ததில் லேசாக விலகிய துணியின் இடைவெளியில் தெரிந்த வளவளப்பான கால்களும் இப்பொழுதே அவளை அள்ளி சென்று அடைந்து விட துடித்த தன் கீழ்த்தரமான காமவெறி தலை தூக்க… அவளைக் கை தூக்கி விடுவதற்கு உதவுபவன் போல் நெருங்கியவன் …. தங்களை சமீபித்து விட்ட அர்வினைக் கண்டு மேலும் முன்னேறாமல் அப்படியே பின் தங்கினான்….
எதிர்பாராத வேகத்தில் கீழே விழுந்த ஆஷிகாவிற்கு வலது பக்க முழங்கையில் சிராய்த்திருந்ததில் …. அவளுக்கு செய்ய வேண்டிய முதலுதவியே முதன்மையாய் பட…. அர்வினிற்கும் அவனை கருத்தில் படாமல் போனது துரதிர்ஷ்ட்டமே…. அதற்குள் அங்கிருந்த ஒருசில ஆட்கள் உதவிக்கு வர…. அவளை கைத் தூக்கி எழுப்பி விட்டவன் தன் காரில் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து அவள் காயத்திற்கு மருந்திட்டான்….
” என்ன ஆஷு நீ …? மெதுவா போகக்கூடாதா…? ” என்று அதட்டியவனிடம் …. கண்களில் மெல்லிய கோடு போல் பளபளத்த கண்ணீரை உள்ளிழுத்தவாறு “சாரிண்ணா ” எனவும் ஏற்கனவே கீழே விழுந்து அதிர்ச்சியில் அச்சத்தில் நடுங்கி கொண்டு இருப்பவளிடம் மேலும் தன் அதட்டலைக் காண்பித்ததை நினைத்து தன்னையே கடிந்து கொண்டவன் அவளை சமாதானப்படுத்தினான்….
அவளை மீண்டும் வீட்டிற்கே அழைத்து செல்ல முற்பட….
” ஐ கேன் மேனேஜ் அண்ணா… ” என்று விட்டு பள்ளிக்கே செல்வதாக கூறியவளை கண்டு லேசாக புன்னகைத்தவன் அவள் பள்ளி வாயிலின் உள்ளே செல்லும் வரை காத்திருந்து பின் கிளம்பி சென்றான்….