அத்தியாயம் 7:

“அந்த லெட்டர்யை பார்த்ததும் அவனுக்குள் அப்படி ஒரு கலவரமாக இருந்தது” …

அதை எடுக்கும் முன்பு, அவன் கண்ணில் கண்ணீர் வழிந்தது ..

நான் என்னடி தப்பு பண்ணேன்! என்று லெட்டரை படிப்பதற்கு முன்பே அழுது விட்டான்…

அதை திறந்து பார்த்தான் ஒண்ணுமே இல்லை, கண்ணை நன்றாக துடைத்து கொண்டு பார்த்தான் ஒன்றுமே இல்லை …அவள் கிட்சேன்னிலிருந்து வெளியே வந்து, அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தாள்..

ஆனால், அவனின் அழுகை அவளையே அசைத்து பார்த்தது…”அவள் ஓடி வந்து அவனை மடி தாங்கினாள்”..அவனோ சொல்லவே வேண்டாம் அவளின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி விட்டான்…

“பாவா” என்று அழைத்தவள்,அவன் அவளை இறுக்கமாக அனைத்து விட்டு ரூமிற்கு சென்று கதவை லாக் செய்து திறக்கவே இல்லை ..

இவளுக்கு என்னவோ போல் ஆனது, அவன் விளையாடியது போல் இவளும் சற்று விளையாடி பார்ப்போம் என்று தோன்றியது அதனால் தான் அவள் அப்படி செய்து இருந்தாள்..

அவனோடு இருக்கும்போது மட்டும் தான் அவளின் குறும்பு தனம் வெளியே வரும் இன்று சற்று அதிகமாக இருந்தது.. ஆனால் அவளுக்கே ஏன்டா இப்படி பண்ணோம் என்றானது..

“அவன் அழுத அழுகையே சொல்லாமல்  சொன்னது அவன் இவள் இல்லாமல் இருக்க மாட்டான்” என்று,இப்போ என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக அவன் ரூமிற்கு முன்னாடி நின்று கொண்டு இருந்தாள் …போன் செய்து பார்த்தாள் அவன் எடுக்கவில்லை…

ரூமிற்கு முன்னாடி சென்று “பாவா” என்னை மன்னிச்சிருங்க தெரியாமல் பண்ணிட்டேன் “SORRYY” என்று கேட்டும் அவன் எந்த பதிலையும் அளிக்கவில்லை..ஒரு மணி நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்..கடைசியா கதவை தட்டி பார்த்தாள் அப்போது தான் திறந்தான் ..

“அவள் தான் ஆரம்பித்தாள் SORRY” அவன் போயிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டான்…

இவள் அவன் முன் போய் நின்று “பாவா” இங்க பாருங்க என்றாள் அவன் அப்போதும் அழுது கொண்டே இருந்தான் ..

என்னை ஏன்டி இப்படி கொல்லாம கொல்ற! ..இதுக்கு பேசாம மொத்தமா என்னை கொன்னுட்டு நீ மட்டும் நிம்மதியா இருந்துட்டு போடி” …

உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா சொல்லு நாளைக்கு நான் உங்க  வீட்டுலே போயிட்டு விட்டுட்டு வந்துறேன்…

சற்று யோசித்து, கண்டிப்பா நீ நாளைக்கு ரெடி ஆக இரு போலாம் ..நீ இப்படிலாம் பண்றதுக்கு நீ இல்லாமலே இருந்துக்கிறேன்…நீ போயிட்டு உன் ரூம்ல போய்ட்டு படு good night என்றான்…

என் முகத்தை பார்த்து சொல்லுங்க பாப்போம் என்று கூறியவள், அவன் முகம் நோக்கி குனிந்தாள் இதழ் முத்தம் கொடுத்தாள் அந்த நொடி அவனுக்கும் அது தேவைப்பட்டது..அவள் ஆரம்பித்த இதழ் முத்தம் அங்கு யுத்தமாகவே மாறியது அவன் முடிக்கும்போது..

அவனுக்கு இதுவே போதும் என்று தான் தோன்றியது..அவளை அமர வைத்து நெற்றியில் இதழ் பதித்தான்…

“நீங்க எவ்வளோ மிஸ் பன்றிங்கன்னு நல்ல புரிஞ்சிகிட்டேன் சாரி பாவா என்றாள்”..

SORRY இப்படியா கேட்க்க சொல்லி குடுத்தேன் என்றதற்கு முகம் சிவந்தவள், அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் இப்போதைக்கு இது போதும் ..

வாங்க சாப்பிட போலாம் பசிக்குது என்றாள் ..

இரவு  BALCONYIL அமர்ந்து இருவரும் மாறி மாறி பறிமாரிக்கொண்டு உண்டனர் அவனுக்கு அவளே ஊட்டியும் விட்டாள்…

அனைத்தையும் எடுத்து வைத்தவள்..ஊஞ்சலில் வந்து, அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்..

ஏன் பாவா எங்கிட்ட எதாவது உங்களுக்கு வித்தியாசம் தெரியுதா இன்னைக்கு?

ஏன் தெரியமலா இருக்கும்!! எனக்கு பிடிக்கும்ன்னு கடல்நிற சேலை கட்டிருக்க,பின்னி தலையில பூ வெச்சிருக்க..அப்பறம் முகத்துல சொல்ல முடியாத ஒரு வெட்கம் வேற நல்ல தெரியுது ..

“பாவா” என்று சிணுங்கினாள் …

நீங்க சந்தோசமா இருக்கிங்களா! என்று கேட்டாள்.

“எனக்கென்ன அஞ்சு குறை நீயே என் பக்கத்துல இருக்கும்போது இந்த உலகத்தையே வென்ற மாறி இருக்கு தெரியுமா”!!

அப்படியா !!!

பால்கனில நீயும் நானும் அப்பறம் உனக்கு பிடிச்ச நிலா ,இந்த ரோஜா தோட்டம் , இந்த இரவு எல்லாமே பிடிச்ச்சிருக்கு..

“உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா,

மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா”

“சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா”…

Anjuu நான் ஒன்னு கேட்கவா?

கேளுங்க..

இந்த ஐந்து வருஷத்துல நீ எப்படி நான் இல்லாம  இருந்த ?

வேலைய பாத்துட்டு அம்மா ,அப்பா அவங்களுக்காக  வாழ்ந்தேன்..தினம் தினம் உங்க நியாபகம் வரும் ஆனா யார்கிட்ட சொல்றதுனே தெரியாது எனக்குள்ள நானே வெச்சிகிட்டேன்..இரவெல்லாம் என்னால தூங்கவே முடியாது பாவா உங்கள போன்ல பாத்துகிட்டு உங்க கூட பேசிகிட்டு அழுது கிட்டே தூங்கிருவேன் …இதே மாரிதான் இந்த ஐந்து வருஷத்தையும் ஓட்டினேன்..

“இப்போ வந்தீங்கள அதே மாறி முன்னவே எங்கிட்ட வந்துருக்கலாம் இல்ல,ஆனா எங்கிட்ட ஏன் நீங்க வரல?”

இதே கேள்விய நான் கேட்டா  collector madam என்ன பதில் சொல்லுவிங்க..

 நிச்சயம் உங்கள தேடி வந்து இருக்க மாட்டேன்.. ஆனா, உங்கள நெனச்சிகிட்டே வாழ்க்கை முழுவதும் வாழ்ந்துருப்பேன்..

இவளை ஒருமுறை பார்த்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் அவன் அவளை தேடி வந்தான் ..அவள் வேறு யாரையாவது விரும்பினால் அவள் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டும் நாம் அவள் வழியில் குறுக்கிட வேண்டாம் என்று தான் இருந்தான்..

ஆனால் அவளை ஒரு நாள்  கோவிலில் கவலை நிறைந்த முகத்துடன் தனியாக பார்த்தான் ..கழுத்தில் தாலியும் இல்லை காலில் மெட்டியும் இல்லை என்ற சிறு நிம்மதியுடன்,இவளை பற்றி விசாரித்தபோது இவனுக்கு புரிந்து போனது இவள் தன்னால் தான் கல்யாணம்  வேண்டாம் என்று கூறிகொண்டு இருக்கிறாள் என்று புரிந்தவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது ..

இவளை மறுபடி தன்னிடம் வர வைக்க வேண்டும் என்று தான் இந்த கம்பனி வேலை எல்லாம் ஆரமித்தது…

இது எல்லா இவளுக்கு எப்போது தான் புரியுமோ என்று பெரு மூச்சி விட்டான் ..

வழக்கம் போல் அவன் அருகாமையில் உறங்கி விட்டாள்..அவளை தூக்கிக்கொண்டு ரூமில் படுக்க வைத்தான்..தூங்கும் அவளையே பார்த்தவனுக்கு அவளிடம்  எல்லை மீரக்கூடாது..இவள் என்னருகில் இருப்பதே போதுமானது..அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு உறங்கி விட்டான்

காலையில் எழும்போது அவன் மேல் சிறு பாரம் தெரிந்தது,அவன் மனைவி தான் மொத்தமாக அவன் மேல் கிடந்தாள் ..

இந்த வேலைய நான் பண்ணிருந்தா ஏன் கர்ப்பு போச்சுன்னு கதரிருப்பா..

இப்படி ஒரு பொண்டாட்டிய வெச்சிகிட்டு கடைசி வரை பாத்துகிட்டே தான் இருக்கனும் போல …

அவளிடம் இருந்து தன்னை பிரித்துக்கொண்டு எழுந்தவன்,அவள் சேலையெல்லாம் விலகி இருந்தது அதை சரி செய்து விட்டு நகர்ந்தான்..

“இவள இனிமேல் புடவை கட்ட வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தான்” ..காலையிலே மனிஷன சோதிக்கிறாடா சாமி ..

வழக்கம் போல் தன்னுடைய வேலையை கவனித்தான் இன்று சீக்கிரம் JAGGING யை முடித்து கொண்டு வந்தும் அவள் எழவில்லை,இவனே சென்று அவளுக்கு ஒரு காபி போட்டு எடுத்துகொண்டு அறைக்கு வந்தான்..அவள் அப்போது தான் குளித்து முடித்து,புடவை கட்டிக்கொண்டு இருந்தாள் அவன் நேரம் கழித்து தான் வருவான் என்று ரூமை தாளிட மறந்தாள்…

Anjuu என்று அழைத்தான்,அவளுக்கோ அய்யோ என்றானது,அவள் சேலையை வைத்து முகத்தை மூடி கொண்டாள்…

அவன் நிலையோ அந்தோ பரிதாபம்!!..

அவளின் அருகில் சென்றவன் என்னை நல்லவனா இருக்க விடமாட்ட போல,அவளோ சிணுங்கினாள்…

அஞ்சு இங்க பாரேன் எதுக்கு இந்த வெட்கம்,முன்னாடி உன்ன நான் இப்படி பார்த்ததே இல்லையா என்ன!! பின்ன என்னடி!!!

முகத்தில் இருந்து சேலையை எடுத்து விட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தான் அவளுக்கோ உடல் கூசியது…

அஞ்சு இந்த பக்தனுக்கு கொஞ்சம் மோட்சம் கொடேன் …அவளோ அவனை இறுக்கி அணைத்திருந்தாள் ..

எல்லாம் ஓகே ஆனால் அவனுக்கு ஏனோ, ஏதோ ஒன்று இடிப்பது போல் தோன்றியது,அவள்  கையில் காபியை கொடுத்து விட்டு குளிப்பதற்கு சென்று விட்டான்…

“அவளுக்கு பெரிதாக ஒன்றும் அப்போதைக்கு தோன்றவில்லை”..அவன் கொடுத்த காபியை குடித்துவிட்டு சமைப்பதற்கு சென்று விட்டாள்..

அவன் TIFFONயை மேசையில் எடுத்து வைத்ததும் அவன் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது ..அவளும் அமர்ந்து பரிமாறிவிட்டு சாப்பிட்டார்கள்…

“அஞ்சு” கொஞ்ச நாளைக்கு நீ WORK FROM HOME பண்ணு சரியா,சும்மா இருந்த சரியாக வராது லீவ் கான்செல் பண்ணிடு சரியா என்றான் …

இந்த வேலை உனக்கு எவ்ளோ முக்கியம்ன்னு எனக்கு நல்லா தெரியும் ..சமையல் செய்ய யாராவது ஆள் போடறேன் நீ வொர்க் மட்டும் பாரு ஓகே வா..அவனுக்கு தெரியும் அவங்க வீட்டுல சமைப்பதற்கு வேலை செய்ய அனைத்திற்கும் ஆளுங்க உண்டென்று அதனால் தான் அவன் அப்படி கூறியது ..

ஆனால் அவளோ, வேறு மாதிரி எடுத்துகொண்டாள்..அவனுக்கு நம்மளை பிடிக்கல போல அதனால தான் நம்மளை AVOID பண்றான்னு தவறாக  புரிந்துகொண்டாள்.. அவள் இதை எல்லாம் அவனிடம் இப்பவே கேட்டு இருந்தாள் பிரச்சனை வந்திருக்காது…

அவள் ஒரே வார்த்தையில் “ம்” என்றாள் ..கிளம்பும் அவசரத்தில் அவனும் அவளின் முக வாட்டத்தை கவனிக்க மறந்தான்..மற்றொன்றையும் மறந்தான் இன்று அவளின் பிறந்த நாள் அதற்காக தான் கேசரி செய்து இருந்தாள் அதையும் அவன் கவனிக்க வில்லை

எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் நீ சாப்பிட்டு தூங்கிரு சரியா என்றான்..

“ம்” என்றாள்..

அவன் சொன்னது போல் கொஞ்ச நாளைக்கு வேலையை WFH  மாற்றி இருந்தாள்..

வேலை முடித்தவள் வீட்டிற்கு போன் செய்து இருந்தாள்…அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினர்..அனைவரிடம் இருந்தும் வாழ்த்துக்கள் வந்தது ஆனால்  அவனிடம் மட்டும் எந்த வாழ்த்துகளும் வரவில்லை…இதற்குமேல் யோசித்தால் சரி வராது என்று குளித்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு COFEE எடுத்துகொண்டு ஒரு புக்கையும் எடுத்துகொண்டு தோட்டதில் அமர்ந்து படித்துகொண்டு இருந்தாள் அதில் தன்னை தொலைத்து இருந்தாள் சொல்லபோனால் அவனையும் மறந்து இருந்தாள் …அவளுக்கு இருக்கும் ஒரு நல்ல பழக்கம் இது சந்தோசமாக இருந்தாலும் சரி துக்கமாக இருந்தாலும் சரி புத்தகத்தை தான் நாடுவாள்..

“இவன் இல்லாத இந்த ஐந்து வருடமும் இவளை காப்பற்றியது இந்த புத்தகங்கள் தான் என்றாள் மிகையில்லை”…

எல்லாரும் SAREE MAKEUP THINGS வாங்கி வைத்தால் இவளோ புத்தகத்தை வாங்கி ரூமில் அடுக்கி வைத்து இருப்பாள் …இவனும் சரி அம்மா, அப்பா அனைவரும் திட்டுவார்கள் ..இவ்வளவு ADDICTION வேண்டாம் என்று கூறுவார்கள்

ஆனால் அவளுக்கோ புத்தகம் என்றாள் அலாதி பிரியம்..படித்துக்கொண்டே நேரம் போனது தெரியாமல் உறங்கி விட்டாள்…

அவன் வேலைகளை முடித்து கொண்டு நேரத்தை பார்த்தான்…நேரத்தை பார்க்கும்போது தான் அவனையும் அறியாமல் தேதியை பார்த்தான்…

அட கடவுளே !!!!

காரை வேகமாக ஷாப்பிங் மாலை நோக்கி செலுத்தினான்..அங்கே சென்று ஷாப்பிங்யை முடித்தகொண்டு வீட்டை நோக்கி செலுத்தினான்..

அங்கே பூந்தோட்டத்தில் பூக்களோட பூக்களாக அவளும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள் இதில் வெள்ளை சுடிதாரில் தேவதை போல் இருந்தாள் ..

அவள் ஏழுவதர்க்கு முன்பு அவளுக்கான SURPRISE ரெடி செய்துவிட்டு அவளை எழுப்பினான்….

அஞ்சு சாப்டியா!! என்று கேட்டதும் “ம்”என்ற பதிலோடு நிறுத்தி விட்டாள்..

என்ன ஆச்சுடா ஒரு மாறி இருக்க உடம்பு சரி இல்லையா ??என்று கேட்டுவிட்டு தொட்டு பார்த்தான்..

தொடதிங்க!!உங்களுக்கு என்னால ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு அதனால தான எங்கிட்ட நடிக்கிரிங்க…

என்னடி உளறிகிட்டு இருக்க!!!தூக்கம் கலையலயா??

இப்ப தான் நான் தெளிவா பேசிகிட்டு இருக்கேன்…

என்ன அடுத்த சண்டைக்கு ரெடி ஆகிட்டியா??

நான் போனதும் இன்னொரு பொண்ண ஏமாத்தி கல்யாணம் பண்ண ஆளு  தான நீ ??

சி வாய மூடுடி!! உன்னை போய் love பண்ணி கல்யாணம் பண்னேன் பாத்தியா என்ன சொல்லணும்டி…போனா போய் தொலையுதுன்னு விடாம உன்ன தேடி திரும்ப வந்தேன் பாத்தியா! அதான் நான் பண்ண மிகபெரிய தப்பு ..

அதன் பின்பு அவன் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விட்டான்…திரும்ப வந்தவன் நாளைக்கு காலையில ரெடியாக இரு ..வீட்டுக்கு கிளம்பி போய்கிட்டே இரு!!!!

  “ஓன் மோர் திங் ..என்கிட்ட இருக்க பணத்துக்கும் அழகுக்கும் எவ கூட வேணாலும்  சுத்த முடியும்டி ஆனா உன் கழுத்துல கட்டின தாலிக்கு நான் மதிப்பு குடுக்குறுவேன் டி நான்”..

இந்த உலகத்துலையே நீ ஒருத்தி தான் அழகுன்னு நெனச்சிட்டு இருக்கியா என்ன ??

“அகைன் எவேர்ய்திங் இஸ் ஓவர்” என்று கத்தியவன் ரூமிற்கு சென்று விட்டான்..

அவளோ அலை அடித்து ஓய்ந்தது போல் அமர்ந்து விட்டாள் !!!!!