காலையில் அலுவலகத்துக்கு சென்றவன் மீட்டிங் முடித்து கொண்டு, அடுத்து அவன் திருவண்ணாமலையில் இருக்கும் அவனது கம்பெனியின் கிளைக்கு சென்றுகொண்டு இருந்தான்…
இதற்க்கு மேல் என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை அம்முலு!!
“இருக்குற உன்னை நான் காப்பாத்திக்க வேண்டியது தான் “என்று சற்று வேகமாக சென்று கொண்டு இருந்தான்..
இருந்தாலும் அவன் மனதில் பயம் சற்று அதிகமா தான் இருந்தது,சும்மாவே என்னோடு வர மாட்டேன் என்று கூறுபவள் இன்று மட்டும் எப்படி வாருவாள்,தான் கொஞ்சம் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவள் வந்து விடுவாள் என்று மனம் அவனை சாந்தபடுத்தியது ..
இவன் அங்கு செல்வதற்கு முன்பே,
ஒரு பில்டிங் அளவுக்கு மீறி கட்டி கொண்டு இருந்தான்…இந்த பிரச்சனை கண்டிப்பாக அஞ்சலி கைக்கு செல்லும் என்று தெரியும் …அப்படி செய்தால் தான் இவளை நேரில் சந்திக்க முடியும் என்று ஒரு முடிவோடு சென்றான்…
அதே போல் அவள் தன்னை காண வருவாள் என்று அந்த பில்டிங் கட்டும் இடத்திற்கு சென்றான் …..
இவனுக்கு பல அரசியல் வாதிகளை தெரியும் …திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு MLA க்கு பணத்தை வாரி கொடுத்து அந்த collector நேராக வந்து என்னை பார்த்து இந்த பிரச்சனை சரி செய்ய சொல்லு என்று காசு கொடுத்த பிரகாஷை வித்யசமாக பார்த்தார் …
யாரவது காசு கொடுத்து பிரச்சனையை விலைக்கு வாங்குவர்களா!!என்று யோசித்தவர் பிறகு இதுலாம் நமக்கெதுக்கு என்று அஞ்சலிக்கு போன் செய்தவர்,இந்த வேலைய நீங்களே போய் பார்த்து என்னனு எனக்கு இன்போர்ம் பண்ணுங்க …
அவங்க மேல கேஸ் FILE பண்ணி வேலை நடக்கறத தடுக்கலாமே சார் அதை எல்லாம் விட்டுட்டு நம்ம எதுக்கு சார் அவங்கள போயிட்டு பார்க்கணும் …
நான் சொன்னத நீங்க செய்ங்க madam! என்றவர் போன் வைத்து விட்டார் ..
“ஒரு collector ஆக இருந்தாளும் நம்மலே சுயமா முடிவு எடுக்க முடியாது போல என்று, வேலை நடக்கும் இடத்தை நோக்கி சென்றாள்…”
பாவா !!!போதும் நிறுத்துங்க !!அப்போ இது எல்லாமே உங்களோடு பக்கா பிளான் அப்படிதான என்று அவனை அடிக்க துரத்தி கொண்டே ஓடினாள்…
ஏண்டி ஐந்து வருஷ கதைய சொல்லிருக்கேன்.. நீ என்னடானா இது என்னோட கதையா என்று கேட்டுகிட்டு இருக்க மக்கு பொண்டாட்டி..உண்மையா சொல்லு அஞ்சு!! நீ படிச்சி தான் வேலைய வாங்குனியா??
நீங்க என்னை அப்போ திருட்டு தனமா இத்தனை முறை பார்த்துருகிங்க இதுக்கு ஹெல்ப் பண்ண எங்க அண்ணாவும், சம்யுவும் வேலை பார்த்துருக்காங்க உங்களுக்கு…
அம்மாடி நீ!! எதனால விட்டுட்டு போனன்னு கூட தெரில..
ஏண்டி விட்டுட்டு போனன்னு கேட்டா நான் தான் விட்டுட்டு போனேன்னு சொல்ற ..
ஆமா அது உண்மை தான என்றவள்,ஐந்து வருடத்திற்கு முன்பு மோனிக்கா தன்னை அழைத்ததையும் என்ன என்ன பேசினால் என்பதையும்,பதிலுக்கு வேறு ஒருத்தன் பிரகாஷ் போல் பேசியது இதை அனைத்தையும் காட்டினாள்..
இப்போது தான் அவனுக்கு விஷயமே புரிந்தது..ஆனால் அவள் ஏன் இப்படி ஒரு வேலைய எனக்கு பார்த்து வெச்சிருக்கா?? அந்த அளவுக்கு அவள் தைரியமான ஆள் இல்லையே!! அப்போ அஞ்சலி அப்பா சொன்ன மாறி அவர் சொல்லிதான் மோனிக்கா இந்த வேலைய பார்த்திருக்கிறாள் என்று தெளிவாக அவனுக்கு புரிந்தது …
ஹே அஞ்சு!! உங்க அப்பாக்கு எதுக்குடி என் மேல இப்படி ஒரு கோவம் …உங்க அப்பா சொல்லி தான் மோனிக்கா இதை பார்த்திருக்கா..
பாவா!!!நான் கேட்கிற ஒரு கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க மத்த எல்லா கேள்விக்கும் விடையும் கிடைச்சிரும் …
கேளு அஞ்சு !!
உங்களுக்கும் மோனிக்காவுக்கும் என்ன தொடர்பு??
அஞ்சு உன்கிட்ட இதை கடைசி வர சொல்ல கூடாதுன்னு தான் இருந்தேன் ..நீயே கேட்ட பின்பு சொல்லாம இருக்க முடியுமா??
நீ நெனைக்கிற மாறி நாங்க காதலர்கள்லாம் இல்லை …அப்போ எனக்கு இருந்த ஒரு தப்பான பழக்கம் இது.. மோனிக்கவுக்கு காசு கொடுத்தாள் கூட வருவாள் அவ்வளவு தான் ..
அவளுக்கு இப்போது விஷயம் புரிந்தது..
அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன்,அஞ்சு இங்க பாரு நான் பண்ணது சரின்னு சொல்ல வரல அது வயசு கோளாறுல நான் பண்ண தப்பு ,அது இப்படி என்னை துரத்தி வந்து என்னோட வாழ்க்கைய அழிக்கும்ன்னு எனக்கு தெரியாதே …ஆனால் உன்ன எப்போ பார்த்தேனோ அன்னைல இருந்து இப்போ வரைக்கும் உன்ன மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கேன்…
உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று புரியுது…கூட இருந்து சண்டை போடு,இல்லை அடி ஆனால், என்னை விட்டு மட்டும் மறுபடியும் போயிராதடி ..
இதுக்கு மேல நீ என்னை விட்டு போனா நான் கண்டிப்பா செத்துருவேண்டி!! என்று அவளின் மடியில் முகம் புதைத்து அழுதான்…
அவளின் கண்ணீர் அவனின் கழுத்தில் பட்டு தெரித்தது…
அஞ்சு ப்ளீஸ்டி என்னை மன்னிச்சிரு தெரியாம பண்ணிட்டேன்!! என்றதும்,உடனே அவள் போனில் இருந்த ஒரு காணொளி ஒன்றை காண்பித்தாள்…
அதை பார்த்ததும் அவன் போனை தூக்கி எறிந்தான்…
“அஞ்சு என்னை மன்னிச்சிருடி” என்று அவள் காலிலே விழுந்தான்..
தயவு செஞ்சி எழுந்திரிங்க…இதை பார்த்த அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? என்று முகத்தை மூடி கொண்டு அழுதாள் …
அஞ்சு பப்ளீஸ்டி!!அழாதடி…
இந்த மாறி நானும் பண்ணிருந்தா நீங்க என்னை ஏத்துகிட்டு இருந்திருபிங்களா!!
அவள் அப்படி கேட்டதும் அவன் எதுவும் பேசாமல் ரூமிற்கு சென்று விட்டான்…இரண்டு பேருக்கும் சிறு தனிமை தேவைப்பட்டது ..
வெகு நேரம் அழுதவள் உறங்கி போனாள்…அவள் உறக்கத்தில் இருக்கும்போது யாரோ தன்னை “அத்தை” என்று அழைப்பது போல் இருந்தது…
கண்களை அவளால் திறக்க முடியவில்லை,கஷ்டப்பட்டு கண் திறந்தவள் முன் “ஆத்விகா”இருந்தாள்..
அவளை பார்த்ததும் அஞ்சு அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றி கன்னத்தில் இதழ் பதித்தாள்…
அண்ணா-சம்யு எப்படி இருக்கீங்க…இங்க எப்படி வந்திங்க …அவங்க கூட்டிட்டு வந்தாங்களா!!
அஞ்சலி ஒவ்வொன்றாக கேளு பொறுமையா பதில் சொல்றோம் என்று சம்யு சிரித்தாள்…
பிரகாஷ் எங்க அஞ்சலி என்று அஜய் கேட்டான்..அவங்க ரூம்ல இருக்காங்க நான் tired ஆக இருந்ததுன்னு இங்கயே தூங்கிட்டேன் என்று பொய்யுரைத்த அஞ்சலியை அஜய் உற்று பார்த்தான்..
“அப்போ இன்னும் உங்க சண்டை முடியலை அப்படித்தான!!” என்றதும் அவள் தலை குனிந்தாள்…
இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்க போறீங்க!!பழசுலாம் மறந்துட்டு ரெண்டு பெரும் சந்தோசமா இருக்க பாருங்க என்று பொறுப்பான அண்ணனாக கூறினான்..
சரி அண்ணா…
திடீர் என்று பிரகாஷ் ஓடி வந்தான்…
டேய் நீ உள்ள தூங்குரன்னு சொன்னா,நீ எதுக்கு இப்படி ஓடி வர என்ன அச்சு …
திரும்பவும் உன் கொரங்கு தங்கச்சி செவரு ஏரி குதிச்சிட்டாளோ? என்று ஒரு சந்தேகம் என்றதும்,
அஞ்சலி அவனை அடிக்க துரத்தினாள்…என்னை பார்த்தா உங்களுக்கு கொரங்கு மாறி தெரியுதா? என்று அவனை அடித்து கொண்டு இருந்தாள் …எப்படி இருக்கன்னு night ல கேளு சொல்றேன் என்றதும் அஞ்சலிக்கு முகம் சிவந்து விட்டது …
ஹெலோ நாங்களும் இங்க தான் இருக்கோம் கொஞ்சம் பார்த்து romance பண்ணுங்க …
அவ எவ்வளவு அழகா அவளோட அம்மாவையும் அத்தையும் காப்பாத்தி விட்டு,மகளிர் அணி நாங்க கெத்து என்பதை காட்டி விட்டாள்..
அதனால நீ என்ன பண்றன்னா,ஆண்கள் அணிக்கு ஒரு டிக்கெட் குறையுது அதை பில் பண்ற வழிய பாரு என்றதும் பிரகாஷ்க்கு ஒரே வெட்கம் …
ஆம்…இத்தனை வருட பிரிவில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக பிரசவ வலியில் ஒன்றும் ஆகாது என்று சம்யுக்தாவின் மூலம் புரிந்து கொண்டான்…அதும் அன்று ஆத்விகாவை கையில் வாங்கியபோது தங்களுக்கும் இப்படி ஒரு ரோஜா குவியல் போன்ற பெண் குழந்தை வேண்டும் என்று ஏக்கம் வந்தது …
எப்போது எல்லாம் மனம் அவனுக்கு வேதனையாக இருக்கிறதோ அப்போது எல்லாம் அஜய் வீட்டுக்கு சென்று ஆத்விகாவை பார்த்துவிட்டு அவளோடு விளையாடிட்டு தான் வருவான்…பாட்டி இறந்த பின்பு இந்த குழந்தை தான் தன்னை வாழ வைத்தது என்றாள் மிகை இல்லை…அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இதை ஏற்று கொள்ள கத்து கொண்டான் …
டேய் பிரகாஷ்!!என்னடா வெட்கம்லாம் படுற அப்போ ஜூனியர் வர போகிறார் அப்படிதான!!
YES YES…
ஹே வாயடி!! உன்னை அடக்க ஒரு நாள் எங்க சைடுல இருந்து ஒரு ஜூனியர் சீக்கிரம் வருவான் என்று அஜய் கூறியதும்,
உடனே ஆத்விகா,அவனை எப்படி செவரு ஏரி ஓட வைக்கிறேன்ன்னு பாருங்க என்று சவால் விட்டதும்,
அஜய் டேய் பிரகாஷ் நான் மறுபடியும் யீந்து போயிட்டேன் டா…பொண்டாட்டியும் கொரங்கு,தங்கச்சியும் கொரங்கு ,என்னோட மகளும் கொரங்குடா…
பேசாம இந்த மூனையும் நாளைக்கு போயிட்டு FOREST ல விட்டுட்டு வந்துரலாம்டா என்று அவன் கூறியதும்,எல்லாருக்குமே ஒரே சிரிப்பு…
அப்பா பேசி பேசியே நேரத்தை வளர்க்காத,போயிட்டு சமைத்து எடுத்துட்டு வா நாங்க வெயிட் பண்றோம்…
இந்த கொசு தொல்லை தாங்க முடிலடா பிரகாஷ்!!
சொன்னது போல் அரை மணி நேரத்தில் சூடாக தோசை, உருளை கிழங்கு குருமா,தக்காளி சட்னி எல்லாம் தயார் செய்து எடுத்து வந்த ஆண்கள் ,மகளிர் அணிக்கு பரிமாறினார்கள் …
எல்லோரும் சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்…
பிரகாஷ் தான் ஆரமித்திருந்தான்,இப்படி ஒரு உறவுகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும் ..என்னோட மனசு அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது என்றதை அனைவரும் ஆமோதித்தனர்…
யாருன்னே தெரியாத அஜய் நண்பனாக வந்தது அவனின் வாழ்வின் ஒளி வீசியது போல் இருந்தது …அதன் பிறகு தனக்கு சொந்தமாக மாறிய தங்கை…தன்னை எப்போதும் மாமா என்று அழைக்கும் தங்கையின் குழந்தை …வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கிறது அஜய் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா…
திடீர் என்று திரும்பி பார்த்ததும் அஞ்சலியை காணவில்லை …