அத்தியாயம் 38:

அதோ இதோ என்று சம்யுக்தாவின் வளைகாப்பு வந்து விட்டது…அன்று அஜய் அங்கு இங்கும் அழிந்து கொண்டு இருந்தான்..

எதுக்குடா இப்படி அலையிற என்று அண்ணனும்,தங்கையும் கூட கேட்டனர்..

உங்களுக்கு ஒன்னும் தெரியாது சும்மா இருங்க!! என்று இல்லாத டென்சனை இருப்பது போல் காட்டி கொண்டு இருந்தவனை என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் பார்த்து கொண்டு இருந்தனர்…

சம்யுக்தாவிற்காக பிரகாஷ் தங்க வளையலும்,ஒரு ஆரமும் வாங்கி கொடுத்திருந்தான் அதை அவள் மறுக்க வில்லை கண்ணீரோடு வாங்கி கொண்டாள் ..சாப்பாடு எல்லாம் வெளியே சொல்லி இருந்தனர்…அஞ்சலி பத்து நிமிடத்தில் வந்து விடுவேன் என்று கூறி இருந்தாள்..இன்று சண்டே என்பதால் அவளுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் போனது..

சரியாக அஞ்சலி உள்ளே வருவதை பார்த்த அஜய் ,டேய் பிரகாஷ் உள்ளே போ அண்ணி வராங்க என்றதும் அவன் அவளை கீழே எட்டி பார்த்தான் ..அவளை பார்பதற்காக வீட்டிலே கேமரா பிட் பண்ணி வைத்திருந்தான் …அதை பார்த்த அஜய் உன் லொள்ளுக்கு ஒரு அளவு இல்லாம போயிட்டு இருக்குடா..

அதுக்கு பேரு லொள்ளு இல்லடா LOVVU..

சீக்கிரம் உள்ளே போடா! என்று அஜய் கத்திக்கொண்டு இருந்தான் …

எண்டா கத்துற!! கதவை திறந்தா தான அவ உள்ள வருவா அதுக்குள்ள நான் உள்ளே போயிருவேன் நீ இப்படி கத்தாத என்றான் …

இப்போ எதுக்குடா நீ குட்டி போட்ட பூனை மாறி நடந்துட்டு இருந்த என்றதற்கு ,அவன் சொன்ன பதிலில் அவனை இருவரும் குனிய வைத்து முதுகில் அடித்தனர்..

டேய் எங்க வீட்டுல விழா இந்த மாறி வரும்போதுலாம் எங்க சித்தப்பன்,பெரியப்பன்,முக்கியமாக எங்கப்பன் எல்லாரும் இப்படிதான் நடப்பானுங்க அதான் நானும் நடந்து பார்த்தேன்..

ஆனாலும் என்னோட தங்கச்சி இப்படி ஒரு பைத்தியத்தை கல்யணம் பண்ணிருக்க வேண்டாம்டா..

“ஆமா உன்னோட தங்கச்சி இஸ்ரோ விஞ்ஞானி அவளை நாசா விஞ்ஞானி பொண்ணு கேட்டாங்க போடா கம்முன்னு ….”

இருவரும் ஒரே நேரத்தில் திரும்பவும் அடிக்க ஆரமித்ததும் ,டேய் ரெண்டு தெலுங்கு பார்ட்டியும் ஒரு தமிழ் பார்ட்டிய அடிக்கிறிங்களா!! இப்போ எங்க அண்ணி வந்து உங்க ரெண்டு பேரையும் அடிப்பாங்க பாருங்க !!என்றதும் இன்னும் ரெண்டு அடி எக்ஸ்ட்ரா வாங்கினான்..

அப்போது சரியாக CALLING பெல் அடித்ததும் “அவன் இதோ என்னோட தெய்வம் காப்பாத்த வந்துட்டாங்க என்றான்…அதில் இருவருக்குமே சிரிப்பு தான்..”

நீ உள்ளே போ பிரகாஷ் நான் பாத்துகிறேன்…

“சம்யு நீ பொண்ணு மாறி நடந்துதுக்கோ சரியா! என்றதும் அவள் அவனை முறைத்தாள்…”

கதவை திறந்தவனின் தலை கலைந்திருந்ததை பார்த்த அஞ்சலி,

காலையிலே செம்ம அடி வாங்கிருப்பிங்க போல என்று கலாய்த்தாள்…நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு பார்த்த நீ அவங்கள மாறி என்னை கலாய்க்கிற என்றான் …

எவங்கள சொல்றிங்க…நம்ம மட்டும் தான இருக்கோம் என்றவளுக்கு,சம்யு வைத்துள்ள இருக்க குழந்தையும் சேர்த்து சொன்னேன் என்று அசடு வழிந்த கணவனுக்கு “தூ” என்ற பதிலை சம்யு கொடுத்தாள்..

அவள் சிரித்து விட்டு தன் தாயயை அழைத்து கொண்டு உள்ளே வந்தாள்..

இவங்க என்று அஞ்சலி இழுக்கும்போது …

என்னோட அம்மா…

அஞ்சலியின் தாயும் யாரிடமும் எந்த பந்தாவும் காட்டாதவங்க தான் அதனால தான் அஞ்சலியும் அப்படியே வளர்ந்தாள் …சம்யு பத்தி அனைத்தையும் சொல்லி இருந்தாள் அஞ்சலி அவளின் தாயிடம்,அதனால் நானும் வருகிறேன் அஞ்சலி என்றார்..

சம்யு மரியாதை நிமித்தமாக எழுந்து வணக்கம் வைத்தவளை,அமர வைத்தவர் அவளை உள்ளே அழைத்து சென்று அவளை கிளப்பி வெளியே அழைத்து வந்து, அவளுக்கு சடங்கு லாம் செய்யும்போது அஜய் கண்ணில் கண்ணீர் வழிந்தது, அதை பார்த்த சம்யுவின் கண்ணிலும் நீர் வழிந்தது…

ரொம்ப நன்றி மா!! என்று இருவரும் காலில் விழ வரும்போது அஞ்சலியின் தாய் நகர்ந்துவிட்டார்…

இந்த மாறி நேரத்துல இப்படி எல்லாம் கீழே விழ கூடாது சம்யு எழுந்திரி !!!என்றதும், அஜய் ஆன்டி நான் ப்ரெக்னன்ட்  இல்லை என்னை ஆசிர்வாதம் பண்ணினா  நானும் எழுந்துருவேன் என்றதும் அவருக்கு அப்படி ஒரு சிரிப்பு நல்ல இரு கண்ணு ..இதை எல்லாம் பார்த்துகொண்டு இருந்த அனைவருக்குமே சிரிப்பு உள்ளே இருந்த பிராகாஷ்  கூட சிரித்து விட்டான் …

அஞ்சலியின் அம்மாவும் அவளுக்கு தங்க வளையல் எடுத்து வந்து அவளின் கைக்கு போட்டு விட்டார்..பெரியவர்கள் இல்லை என்ற எந்த குறையும் இல்லாமல் அனைத்தும் நன்றாக இருந்தது ….

அப்போது தான் அஞ்சலியை பிரகாக்ஸ் கவனித்தான் அவளின் முகத்தில் தெரிந்த எக்கத்தை அவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அல்லவா!! புரிந்தவனுக்கும் அவளின் வேதனை தன்னால் தானே!! என்று தோன்றியது..

அனைவரும் போட்டோ எடுத்து கொண்டனர்..

அஞ்சலி நீ கொஞ்சம் நேரம் என்னோடு இருக்கிறியா??

சரி அஞ்சு நீ முடிச்சிட்டு சொல்லு நான் கார் அனுப்புறேன் …

என்னம்மா சொல்றிங்க நான் இருக்கேன் அவளோட அண்ணனாக நான் வந்து விட மாட்டனா!!நீங்க பத்ரமா போங்க அவளை நான் கூட்டிட்டு வரேன் என்று கூறியவனுக்கு சரி கண்ணு!! என்று கூறிவிட்டு அவர் கிளம்பி விட்டார்..

முன்பு எல்லாம் அண்ணி என்று அழைத்தான் இப்போது அவளை தன் தங்கயாக பார்க்க அரமித்தான் அதனால இனி அவள் அவனுக்கு தங்கச்சி தான் ..

அஞ்சலி என்று அஜய் அழைத்ததும் சொல்லுங்க அண்ணா..

நன்றின்னு ஒரு வார்த்தை கண்டிப்பா சொல்லி விட முடியாது…ஆனால் நீ எங்க இருந்தாலும் நீ நல்ல இருப்படா உன்னோட நல்ல மனசுக்கு..

“நீங்க சொன்னா சரி தான்” என்று மேலும் இரண்டு மணி நேரம் அவர்களோடு சிரித்து கொண்டு இருந்தவள்,அப்போ நான் கிளம்பறேன் என்றதும் சொல்லியபடியே அஞ்சலியை காரில் அழைத்து சென்று வீட்டில் விட்டுட்டு தான் வந்தான்…

அவன் உள்ளே வரும்போது அண்ணனும்,தங்கையும் சிரித்து கொண்டு இருந்தார்கள் ..

பிரகாஷ்!! என்று அழைத்தவனுக்கு அதற்க்கு மேல் வார்த்தையே வரவில்லை..எல்லாத்துக்குமே நன்றி டா யாரும் இல்லாத அனாதையாக இருந்த எங்களை உன் மூலமாக தான் இந்த விழா கூட இவ்வளவு சிறப்பாக நடந்துருக்கு டா…

நீ சொன்ன மாறி என்னோட தங்கைக்காக நீ காலம் முழுவதும் கூட காத்திருக்கலாம் தப்பே இல்லை …

இன்னைக்கு தான் சம்யு முகத்துல அப்படி ஒரு சந்தோசத்தை பார்த்தேன் பிரகாஷ் ….

உன்னாளையும் ,அஞ்சலியாளையும் தான் இவ்வளவு சிறப்பாக  நடந்துருக்கு என்று கூறியவனின் கண்ணின் வழிந்த கண்ணீரை பார்த்தவன் சற்று அமைதியாகி விட்டான்..

ஏன் பொண்டாட்டி சொன்ன மாறி குழந்தைய மட்டும் பெத்து குடுங்க நாங்க வளர்க்கிரோமேன்றதும் அவனும் சிரித்து கொண்டே சம்யு அப்போ நம்ம அடுத்த HONEYMOON போலாம் என்று கண் சிமிட்டினான் ..

அதற்க்கு அவள் ஒரு விரலை காட்டி பிச்சிருவேன் பிச்சி என்றவளையும் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது …

சம்யுக்கு ஒன்பது மாதத்தில் வலி எடுத்ததும்,அஜயை அழைத்து கொண்டு HOSPITAL சென்றாள்..அவளை ரோம்ப தொந்தரவு செய்யாமல் அவர்களின் மகள் வெளியே வந்து விட்டாள் ..அந்த குழந்தையயை  முதலில் பிரகாஷிடம் தான் கொடுத்தனர்..

 …அதை வாங்கும்போது ரோஜா மொட்டு போல் இருந்தாள்…குழந்தையை வாங்கும்போதும் அவனின் உடலிள் ஒரு சிலிர்ப்பு வந்ததும் அவனயும் மீறி அழுகை வந்தது …இந்த சந்தோசத்தையா தான் வேண்டாம் என்றோம் என்று தான் அந்த நிமிடத்தில் அவனுக்கு தோன்றியது …குழந்தைக்கு முத்தம் கொடுக்கும்போது அவனின் கண்ணில் இருந்து நீர் வழிந்து குழந்தையின் கன்னத்தில் பட்டு தெரித்தது ….

அஞ்சலியிடமும் அவன் அழைத்து சொல்லி விட்டான் அவள் உடனே கிளம்பிவரேன் என்றாள் …

அஞ்சலி வருவதை பார்த்த பிரகாஷ்,குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு ஒளிந்து கொண்டான்..

“அவள் வந்த வேகமே அவனுக்கு சொல்லாமல் சொல்லியது அவளுக்கு குழந்தை என்றாள் எவ்வளவு பிடிக்கும் என்று”,

வந்தவளின் கையில் குழந்தைய கொடுத்ததும் கண்களில் நீர் நிற்பேனா என்றது,

இங்கே பாருங்க அத்தை வந்துருக்கேன்!! என்று அவன் கூறியதும் குழந்தை சற்று அசைந்தது…அதை பார்த்தவளுக்கு மேலும் அழுகை தான் வந்தது …

சம்யு எப்படி இருக்கா அண்ணா..

நல்லா இருக்கா மா…

உள்ளே சென்றவள் சம்யுவை பார்த்தாள் நன்றாக தான் இருந்தாள் …

சம்யு!! என்று அழைத்ததும்..

அஞ்சலி!!! என்று அவளின் கையை பிடித்து கொண்டு அழுதாள் …அவர்களின் இருவருக்குள்ளும் சகோதரிகள் போன்ற ஒரு உணர்வு இருந்தது…

இருவரையும் இப்படி பார்த்த ஆண்களுக்கும் அழுகை தான் வந்தது …

அதான் வந்துட்டேன்ல சம்யு அழாத…உன்னை பார்த்துக்க ஒற்று நடுத்தர வயதுல இருக்க ஒரு பாட்டிய வீட்டுக்கு வேலைக்கு அனுப்புறேன்… அவங்க குழந்தையும், உன்னையும் நல்லா பாத்துப்பாங்க எதுக்கும் கவலை படாத சரியா…

அஞ்சு அவளுக்கு சமைத்து எடுத்து வந்திருந்தாள் அதை தான் அனைவரும் சாப்பிட்டனர்…

சம்யு உடம்ப நல்ல பாத்துகோங்க, டாக்டர் கிட்ட எல்லாம் கேட்டுகோங்க அண்ணா!!..எனக்கு இன்னைக்கு மீட்டிங் இருக்கு நான் office கிளம்பனும் என்றவலுக்கு குழந்தையை விட்டு பிரிய மனமில்லை…

“அத்தை இன்னக்கு போயிட்டு நாளைக்கு வந்து பார்க்கிறேன் தங்கம்!!!” என்றவள் குழந்தைக்கும்,சம்யுக்கும் ஒரு முத்தத்தை குடுத்து விட்டு தான் சென்றாள்…

காலம் நகர்ந்து கொண்டே இருந்தது…எல்லோர் வாழ்விலும் மாற்றம் வந்து கொண்டு தான் இருந்தது இவர்களின் வாழ்கையை தவிர,

அஞ்சலியின் வீட்டிலும் திருமணம் செய்து கொள் என்று கடந்த இரண்டு வருடங்களாக கேட்டு கொண்டு தான் இருந்தனர் …

அதே நேரத்தில் அங்கு அவனின் பாட்டியும் தவறி விட்டார் என்றதும் மறுபடியும் அவனின் உலகமும் நின்றது போல் இருந்தது…இப்போ நான் மொத்ததில் அனாதையாக மாறிட்டேன் என்று மறுபடியும் குடி பழக்கத்திற்கு சென்று கொண்டு இருந்தவனை அஜய் தான் தடுத்து நிறுத்தினான் …

பாட்டி இறந்து ஒரு வாரம் இவர்கள் மூவரும் அவனின் வீட்டில் தான்  இருந்தனர்..

இப்போ அஜய், சம்யுக்தாவின் ஆசை மகளுக்கே மூன்று வயதாகி விட்டது இவர்கள் இப்படியே இருந்தாள் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த அஜய் அவனின் ரூமிற்கு சென்றான்..

அங்கு அவன் மனைவியின் முகத்தை பார்த்து கொண்டு அழுதுகிட்டு இருந்ததை பார்த்தவனுக்கும் வேதனையாக தான் இருந்தது …

பிரகாஷ் இப்படி அவளை பாத்துகிட்டே நீ இருந்தின்னா கடைசி வரை நீ அவளை பாத்துகிட்டே தான் இருக்கணும்…

நான் சொல்றத கொஞ்சம் கேளு!!

அவளுக்கு இன்னும் உன் மேல கோவம் இருக்காது இந்நேரம் சண்டைலாம் மறந்து இருப்பா… ஒருவேளை நீ போயிட்டு நேர்ல கூப்பிட்ட கண்டிப்பா வருவா இல்லன்னா வீட்டுக்கு சொல்லிருவேன்னு பிளாக் மெயில் பண்ணி அவளை முதலில் கூட்டிட்டு வர வழிய பாரு…

அவன் அவன் love பண்ண பொண்ண தூக்கவே எவ்வளவு கிரிமினல் ஆக யோசிக்கிறான்.. நீ என்னடான்னா கட்டின பொண்டாட்டிய தூக்க இவ்வளவு யோசிக்கிற என்றதும் அவனின் முகம் ஒரே நிமிடத்தில் பிரகாசமாக மாறியது…

டேய் நண்பா!!!என்று அவனை இழுத்து கட்டி கொண்டான் பிரகாஷ் …

டேய் என்னையே இந்த அளவுக்கு கட்டி பிடிக்கிரன்னா என்னோட தங்கச்சி நிலமை அவ்வளவு தான் போல என்றவனுக்கு,

போடா!!அங்க மட்டும் என்ன??என்னோட தங்கச்சி நிலைமையும் மோசம் தான்…

அவனை அனுப்பி வைத்துவிட்டு,முகத்தை கழுவியவன் ஒரு தெளிவான முகத்தோடு அடுத்த நாளுக்காக காத்திருந்தான்…