பாட்டி எனக்கு சத்தியமாக தெரியாது…அவளை வேணும்ன்னு தள்ளி விடல கோவத்துல தான் தள்ளி விட்டேன் என்றவனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது…இரண்டு மாதங்களாக அவள் PERIODS ஆகாமல் இருந்தது நன்றாக புரிந்தது…
ஒரு நாள் கோவில் போயிட்டு வந்தவள் சந்தோசமாக அவனிடம் ஏதோ சொல்ல வந்ததும்,அன்று அவள் தன்னை அதிகம் நாடியதும்,அதுமட்டும் இல்லாமல் ஒரு நாள் உங்களுக்கு பெண் குழந்தை பிடிக்குமா? இல்லை,ஆண் குழந்தை பிடிக்குமா? என்று கேட்டவளுக்கு,அதற்க்கு தான் மௌனத்தையே பரிசாக அளித்தது எல்லாம் நியாபகத்துக்கு வந்தது….
அவளுக்கும் பிரசவ வலி வந்து தன்னை விட்டு சென்று விடுவாளோ என்று தான், அன்று கூட மௌனத்தில் இருந்தான்..
இன்று அவனுக்கு எல்லாமே நன்கு புரிந்தது…இப்போது புரிந்து ஒரு பயனும் இல்லையே என்று தான் தோன்றியது…
“அவளை நான் படுத்தின கஷ்டத்துக்கு தான் அவள் என்னிடம் சொல்லாமல் கூட சென்று இருக்கிறாள் அவள் செய்த அனைத்துமே சரி தான்…அவள் வைத்த காதலுக்கு நான் தான் உண்மையாக இல்லை …அவள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் …”
நான் இல்லாமல் கண்டிப்பாக அவள் நன்றாக தான் இருப்பாள் …அவ சந்தோசமாக இருந்தாலே போதும் என்று யோசித்தவன்,
பெரியவர்களையும் கஷ்டபடுத்த வேண்டாம் என்று,
“கண்டிப்பா ஒரு நாள் அவளை நான் கூட்டிட்டு வருவேன் பாட்டி நீங்க கவலை படாதிங்க,அவ என்னோட பொண்டாட்டி அவ இல்லாமல் என்னால மட்டும் இருக்க முடியுமா என்ன ??கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி, என்றவன் ,அவர்கள் இருவரையும் அழைத்து சென்று உண்ண வைத்துவிட்டு,இவனும் உண்ணும்போது மனைவி தன்னை இடையூறு செய்து கொண்டே சாப்பிடுவதை நினைத்தவனுக்கு இட்லி கூட உள்ளே இறங்க மறுத்தது…பெயருக்கு சாப்ப்பிட்டு விட்டு ரூமிற்கு சென்று கதவை லாக் செய்து கொண்டவன்,அவளுடைய அனைத்து பொருளையும் எடுத்து உள்ளே வைத்தவன்,தாலி இல்லாதது அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்தது …அதயாவது எடுத்து கொண்டு போயிருக்களே!! என்று மனம் பெரும் நிம்மதி கொண்டது…
குளிக்க கூட தோன்றாமல்,அவளின் ஒரு புடவையயை அணைத்து கொண்டு பெட்டில் படுத்து விட்டான்..அவளுக்கென்று இருக்கும் அந்த ப்ரேத்யேக நறுமணம் அவனின் மன கஷ்டத்தை சற்று போக்கியது போல் இருந்ததும் உறங்கி விட்டான்….
கடந்த ஒரு வாரத்தில்,அவன் அலுவலகம் கூட செல்லவில்லை பாரிலே இருந்தான்…யாராவது போன் செய்தால் கூட அவளாக தான் இருக்குமோ? என்று அவன் ஏமாந்து கொண்டு இருப்பதால் அதையும் தூக்கி எரிந்திருந்தான்…
அனைத்தையும் யோசித்து கொண்டே இருந்தவனுக்கு போதை சற்று குறைவது போல் தோன்றியது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான் ,உள்ளே சென்றதும் அவனின் தாத்தா, பாட்டி தனக்காக காத்திருப்பதை பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது…
உனக்காக இல்லைன்னாளும் எங்களுக்காகவது இதை நிறுத்திட்டு பழைய பிரகாஷ் மாறி நீ மறுபடியும் எங்களுக்கு வேண்டும் கண்ணா! என்று அவனின் கையயை பிடித்துகொண்டு அழுத பாட்டிக்கு அவனால் பதில் கூற முடியவில்லை …..
அவளை நினைத்து அழுவது போதும்.. இனிமேல் இவங்களுக்க்காகவது நான் வாழ வேண்டும் என்று நினைத்தவன்,மொத்தமாக நிறுத்த முடியாது பாட்டி ஆனால், கண்டிப்பக உங்களுக்காக குறைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, மாடிக்கு செல்லும் பேரனை நினைத்து கஷ்டமாக இருந்தது…அவளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை…அவளை பற்றி எதுவுமே தெரியவில்லை…தெரிந்து இருந்தாலும் இவன் கண்டிப்பாக அவளை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று அந்த பேச்சிற்கு அப்போதே முற்று புள்ளி வைத்து இருந்தான்…
வழக்கம் போல்பெட்டில் படுத்தவன் அவளின் புடவயயை மேலே எடுத்து போர்த்தி கொண்டு கொண்டு உறங்கி விட்டான்…
காலையிலே எழுந்தவன் இப்படியே இருந்தால் வேளைக்கு ஆகாது என்று முடிவு எடுத்தவன் உடற்பயிற்சி,யோகா போன்றவற்றில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக்கொண்டு சற்று தெளிவாக இருந்தான்..ஆனாலும் அவன் அவளது நினைவுகளை வெறுக்க வில்லை…
இருவரும் பிரிந்து இரண்டு மாதங்களை கடந்தது ஆனாலும் அவர்களின் வாழக்கையில் எந்த மாற்றமும் இல்லை வெளியே இருப்பவர்களுக்காக சந்தோசமாக இருப்பது போல் காட்டி கொண்டனர்…
இவனும் முன்பு போல் கம்பீரமாக அலுவலகத்தை நோக்கி சென்றான்…இவனிடம் எப்படி கேட்பது என்று தெரியமல் சித்தார்த் அங்கிள் தான் அரமித்திருந்தார்..
சார் அஞ்சலி எப்படி இருக்காங்க…!!
அவளுக்கென்ன அங்கிள் நல்ல இருக்கா!!…அவன் புன்னகை முகமாக கூறியதும் அவரும் சிரித்த முகமாக சரி என்று கிளம்பி விட்டார்…
அடுத்து அவனின் மேனேஜர் வந்து அவளை பற்றி விசாரித்ததும்,மறுபடியும் புன்னகை முகத்தோடு அவள் நன்றாக இருக்கிறாள்…எக்ஸாம் PREPARE பண்ணனும்ன்னு சொன்னதால தான் கூட்டிட்டு வரல என்று அவன் இன்முகமாக கூறியதும் அனைவருக்குமே அவன் பதிலில் திருப்த்தி தான் வந்தது…
திடீர்ன்னு அஞ்சலி madam வராம இருந்ததால ,எல்லாருமே அவங்க இல்லாம போர் அடிக்குது அவங்க எங்கன்னு எங்கிட்ட கேட்டாங்க அதான் சார் உங்ககிட்ட கேட்டேன் ..தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றர்ன்..
“சம்பளம் போடுற என்னை கூட யாரும் இப்படி தேட மாட்டிங்க போல ,என்னோட மனைவிய தான் எல்லாரும் தேடுறிங்க என்று அவனும் இன்முகமாக பதிலளித்தான்…”
இப்போது எல்லாம் ஒரு விஷயத்திற்கு பழக்க பட்டிருந்தான்…அவளின் நினைவுகள் அப்போது தான்வழியயை கொடுத்தது இப்போதுலாம் அவன் இன்பமாக அதை ஏற்று கொள்ளகற்று கொண்டான் …இல்லையென்றால் இவன் இவ்வளவு சின்ன வயதில் இப்படி ஒரு பிசினஸ் MAN ஆகி இருக்க மாட்டான் இல்லையா…
ஒருவேளை எங்களை பற்றி தவறாக எதாவது நினைத்து கொண்டீர்களா ,
அப்படிலாம் இல்லை சார்….உங்க இரண்டு பேரோட புரிதல் பத்தி எங்களுக்கு தெரியாத சார்??..நீங்க இரடு பேருமே MADEFOREACHOTHER சார்…
ம்ம….என்ற பதிலோடு குனிந்து கொண்டான்..
“புரிதல் பத்தி நினைத்ததும் அவனுக்கு விரக்தியில் சிரிப்பு வந்தது …”
அதன் பின்பு அவனால் ஏதும் யோசிக்க முடியாத அளவுக்கு அவனின் வேலைகள் இழுத்து கொண்டது ..
அவனின் ஒரு தந்திரமான செயல் என்னவென்றால்,தன்னை கஷ்டப்படுத்திய அதே விஷயத்தை நல்ல விதமாக எடுத்து கொண்டான் ..
எந்த ஒரு விஷயத்தையும் நாம் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் எல்லாமே இருக்கிறது..நல்ல விதாமாக பார்த்தாள் நல்லதேநடக்கும் அதை கெட்ட விதமாக பார்த்ததால் அந்த விஷயமே நம்மை அழித்துவிடும்…
மனைவி விட்டு சென்றதை கூட அவன் நல்ல விதத்தில் தான் எடுத்து கொண்டான்….
“கண்டிப்பாக என்றோ ஒரு நாள் நாங்கள் சேருவோம் என்ற நம்பிக்கை தான் அவனை வாழவே வைக்கிறது…”முன்பு போல் அவன் அதிகமா குடிப்பது எல்லாம் இல்லை எல்லாமே அளவாக இருந்தது,தன்னுடைய தாத்தா பாட்டியோடு அதிக நேரம் செலவிட்டான்…ஆனாலும் அந்த ரூமிற்கு செல்லும்போது மனைவியின் நினைவில் இரவு முழுவதுமே அழுகையில் கரைவதில்லை…அவளோடு இருந்த அந்த நினைவுகளே போதுமானதாக சென்றது…
அவனோடு அவள் இருக்கும்போது திங்கட்கிழமை என்றாள் சிவன் கோவில் போகணும்ன்னு அவனையும் அழைத்துகொண்டு இருப்பாள்,அவளோடு கூட செல்வான் ஆனால் சாமிலாம் கும்பிடமாட்டான்…
அவனை பொறுத்தவரை கடின உழைப்பு இருந்தாலே போதும் அனைத்தும் கிடைத்து விடும் என்று நம்புபவன் ஆனாளும் தன் மனைவியின் ஆசைக்காக செல்வான் தான்…
ஆனால் இன்று இவன் அவளுக்காக வேண்டிகொள்வதர்க்காக அனைத்து திங்கட்கிழமையும் கோவில்க்கு சென்று அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று சிவனை வழிபட்டு விட்டு தான் செல்கிறான்…
அஞ்சலி கோச்சிங் கிளாஸ் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது…எல்லாமே மாறி தான் இருந்தது…படிப்பில் மட்டும் கவனத்தை செளுத்தினாள்…
படித்து கொண்டே இருந்தவளுக்கு,திடீர் என்று அவன் கூறிய வார்த்தைகள் நியாபகம் வந்தது…நீ யாரையும் சார்ந்து வாழ கூடாது ,எதாவது பெருசாக சாதிக்கணும் என்று என்று அவன் அன்று கூறிய வாரத்தைகள் இன்றும் அவள் காதில்கேட்டு கொண்டு தான் இருக்கிறது…
அவனை மறக்க அவள் ஒரு போதும் நினைக்கவே இல்லை.. அவன் இல்லாத ஒரு வாழ்க்கை தனக்கு மட்டும் எதற்கு என்று கேட்பவள் இன்று தாய், தந்தைக்காக வாழனும் என்று முடிவு செய்தாள்…
பாவா!!என்றவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது…நான் அழ மாட்டேன் அவங்க சொன்ன மாறி கண்டிப்பா நான் பெருசா சாதிக்கணும்…ஆனால் சாதித்த பிறகு,அதை கொண்டாட அவன் என்னோடு இருக்க மாட்டனே என்றவளுக்கு மறுபடியும் அழுகை தான் வந்தது…அவங்க இல்லைன்னாலும் அவங்களோடு நினைவு எனக்கு எப்போதும் உண்டு அதுவே போதும் …
இதற்க்கு மேல் யோசித்தால் சரி வராது என்று,
அம்மா …
நான் கோவில்க்கு போயிட்டு வரேன்…
சரிடா …பாத்து போயிட்டு வா
அஞ்சலிக்கு இப்போதும் அதே சுதந்திரம் தான் ,ஒரு நாளும் அதற்க்கு அவர் தடை எல்லாம் போட மாட்டார்…பெண்கள் என்றாள் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறுபவர்..
இவளுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை அதனால் சிறுவயதில் இருந்து இவளிற்கு சிவன் பக்தி அதிகம்…அனைத்து திங்கள்கிழமையும் கோவில்க்கு வந்து விடுவாள்…அதே போல் தான் இன்றும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தாள்…
காரை விட்டு இறங்கி சாமியயை கண் மூடி வேண்டியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது…
அஞ்சலி,என்று அர்ச்சகர் வந்து அழைக்கும்போது கண் திறந்தவள்,எக்ஸாம் நெனச்சி பயபடுரியாடா! என்று கேட்டவருக்கு “இல்லை” என்று பதில் அளித்தாள்…
சிலர்க்கு சாமி கும்பிடும்போது அழுகை வருவது சாதாரணம் தான் என்று அவரும் சிரித்த முகமாக பிரசாதம் கொடுத்து,அவளின் ஹால் டிக்கெட்டை சாமி பாததில் இருந்து எடுத்து வந்து கொடுத்தார்…அவளை சிறு வயது முதல் பார்க்கிறார்,அவளுக்கு சாமி பாதத்தில் ஆசிர்வாதம் செய்து இவர் தான் HALLTICKET கொடுப்பார்..
அவளும் சிரித்த முகமாக வாங்கி கொண்டு,கோவிலை சுற்றி வந்தாள்…சுற்றி முடித்து வந்து கொஞ்ச நேரம் கண் மூடி அமர்ந்து இருந்தாள்…அமர்ந்த நிலையிலும் அவள் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது…
இருவரின் நல்ல நேரமோ என்னவோ,மீண்டும் இருவரும் சிவன் கோவிலுக்கு வந்து இருந்தனர்,அவனோட கம்பனியின் ஒரு கிளை இங்கு தான் இன்று திறந்துவைக்க போகிறான் அதற்காக தான் கோவிலுக்கு வந்து இருந்தான்…இவள் வருவதற்கு ஒரு பத்து நிமிடத்திற்கு முன்பு தான் வந்து இருந்தான்…சாமியையை வணங்கிவிட்டு அவன் கீழே சற்று நேரம் உட்கார்ந்து இருந்தவனுக்கு சிவனை பார்க்கும்போது அவளின் அழகு முகம் தான் நியாபகத்தில் வந்தது…
எதர்ச்சியாக திரும்பி பார்த்தான்,உண்மையிலே அவள் தான் வந்து கொண்டு இருந்தாள் …கண்களை நன்றாக தேய்த்து விட்டு கூட பார்த்தான் அவளே தான் கோவிலுக்கு உள்ளே வந்து கொண்டு இருந்தாள் …..
தன்னை அவள் பார்க்க வேண்டாம் என்று அவன் அவளை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான்…பார்பதற்கு நன்றாக தான் இருந்தாள் ,ஆனால் முகத்தில் இருக்கும் கவலை அது யாருக்கும் தெரியாத மாறி தான் இருக்கும் ஆனால் அவனுக்கு மட்டும் புரிந்து இருந்தது..
அவள் கடவுளை பார்த்து அழுகும் வரை அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தான்…அவளை அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று தான் தோன்றியது,
வேண்டாம் அது கூட அவளுக்கு வேதனையை தான் கொடுக்கும் என்று அவளை தூர இருந்தே பார்த்து கொண்டு தான் இருந்தான்…
அப்போது தான் அர்ச்சகர் சொன்னது நன்கு கேட்டது,ohhஉண்மையிலே என்னோட மனைவி ஏதோ எக்ஸாம்க்கு படிக்கிறாளா!!என்று மனம் நிம்மதி கொண்டது..
தன்னையே நினைத்து வாழ்க்கையயை வீணாக்கி விடுவாளோ என்ற பயம் அவனிடம் இருந்தது…ஆனால் இன்று அவளை நினைத்து பெருமையாக இருந்தது..
அவன் அவளை எப்படி பார்க்க வேண்டும் என்று நினைத்தானோ அப்படியே இருந்தாள்…
“அம்முலு !!! நீ ஒரு பெரிய விஷயத்த சாதிக்கும்போது உன்னை விட நான் அதிகமா சந்தோசமா இருப்பேன்டி என்று நினைத்தவனின் கண்களிலும் கண்ணீர் கோர்த்தது… “
அஞ்சலிக்கு திடீர் என்று உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்ற அங்கும் இங்கும் திரும்பி பார்த்தாள்…..