நான் இப்படி ஏமாந்து போயிட்டனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்…அவன் அலுவலகத்தில் அசிங்படுத்தியது நினைத்து கூட அவளுக்கு கஷ்டமாக இல்லை …ஒரு பொண்ணு கூட இப்படி இருந்துட்டு என்னோடையும் இவங்களுக்கு இப்படி இருக்க எப்படி தான் மனசு வந்தது…
பெத்தவங்களை கூட ஒதுக்கி வெச்சிட்டு இவங்க தான் வேணும்ன்னு நான் வந்தது தான் தப்பா, இல்லை நானாக சென்று அவங்களிடம் கல்யணம் பண்ணிக்கலாம் என்று கேட்டதால் என்னை கேவலமாக நினைத்து விட்டாங்களா??எப்படி பார்த்தாலும் நான் செய்தது தான் தவறு மொத்த தவறும் என்னுடையது தான …
இவ்வளவு யோசித்தவள் ஒரு விஷயத்தை மறந்து விட்டாள் அவன் அவளிடம் ராமனை போல் ஒழுக்கத்தோடு ஒதுங்கி தான் இருந்தான் இதை ஏன் இந்த பேதை பெண்ணுக்கு புரியவில்லை…
அழுது கொண்டே இருந்தவளுக்கு ,அந்த எண்ணில் இருந்து போன் வந்தது…எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள் ஒருவாராக தன்னைசரி செய்ந்து கொண்டு எடுத்தாள்..
சொல்லுங்க உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும்??
மொனிகவோ பொய்யாக அழுதுகொண்டே,எனக்கு பிரகாஷ் தான் வேண்டும்… என்னை இப்படி ஏமாத்திட்டு உங்க கூட வந்து கல்யணம் பண்ணிகிட்டாங்க என்று அவள் அழுததும் அவள் நம்பி விட்டாள் …
பிரகாஷ் என்னை தான் கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னார் ஆனால் உன்னை இப்படி கல்யாணம் பண்ணி என்ன ஏமாத்திட்டாங்க…
நீ ஒரு பொண்ணா இருந்துகிட்டு,எங்க வாழ்க்கையில வந்து இப்படி எங்கள பிரிச்சிட்ட்டியே என்று அவள் முதலை கண்ணீர் வடித்தாள்..
அவர் என்னை திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னதால் தான் என்னோட கர்ப்பை அவரிடம் இழந்துட்டேன்…
உடனே அஞ்சு இதையெல்லாம் நான் எப்படி நம்புறது ???என்றதும் மோனிகாவிற்கு ஒரே ஆச்ச்சர்யம் ரெண்டு பேருக்கும் இடையில் இப்படி ஒரு புரிதலா ??
பிரகாஷ் சிரிச்சா கன்னத்துல குழி விழும் அப்பறம் …என்று வெட்க்க பட்டவள் அவருக்கு நெஞ்சுல ஒரு மச்சம் இருக்கும் என்றதும் அஞ்சு போனை தூக்கி மறுபடியும் எரிந்து விட்டாள்..
திரும்பவும் அதே எண்ணில் இருந்து போன் வந்தது ,நீயா அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி போயிரு,இல்லன்னா உன்னை கஷ்டபடுத்தி வீட்டை விட்டு வெளிய அனுப்பிருவான் பிரகாஷ்… என்றதும் தான் அவளுக்கு நியாபகம் வந்தது இன்னைக்கு அவன் தன்னை அசிங்கபடுத்தியது நினைத்து அவளுக்கு மோனிகா சொல்வது சரி தானோ என்று தோன்றியது..
போனை அனைத்து தூக்கி போட்டவளுக்கு எதுவுமே புரியவில்லை…
ஆனால் புரிந்த விஷயமோ அவ்வளவு கசப்பாக இருந்தது…
அந்த பக்கம் மோனிகா அஞ்சுவின் அப்பாக்கு கால் செய்து,சார் நீங்க சொன்ன மாறியே எல்லாம் முடிச்சிட்டேன் கண்டிப்பா பிரிஞ்சிருவங்க சார் என்றதும்,
அவர் ம் ம் என்ற பதிலோடு வைத்து விட்டார்..
உடனே அவர் அஞ்சுவிற்கு போன் செய்தார்,அப்பா CALLING என்று வந்ததும் அவளுக்கு அப்படி ஒரு அழுகை வெடித்தது….
போனை பார்த்து கொண்டே இருந்தவள் எடுத்து சொல்லுங்க அப்பா..
அஞ்சு கண்ணு எப்படி இருக்க எப்போதான் ஊர்ருக்கு வர போற என்றதும் கண்டிப்பா வந்துருவேன் அப்பா…
அம்மா உனக்காக ரொம்ப நாளாக காத்துகிட்டு இருக்காங்க அஞ்சு சீக்கிரம் வந்துரு மா என்று போனை வைத்து விட்டார்..அவருக்கு மனதில் அப்படி ஒரு சந்தோசமாக இருந்தது ..எப்படியோ என்னோட மகளை அந்த கேடுகெட்டவன் கிட்ட இருந்து ஒரு வழிய பிரிச்சிட்டேன்..
அவருக்கு போன் பேசும்போதே புரிந்துவிட்டது மகள் அழுதிருக்கிறாள் என்று,புரிந்து கொள்ளும் பெண் தான் அதனால் சீக்கிரம் அவனிடமிருந்து பிரிந்து விடுவாள்…
என் மகள் அவனிடமிருந்து வரட்டும் அவனை கொள்ளாமல் விட மாட்டேன்…என்னோட செல்ல பொண்ண ஏமாத்தி கூட்டிட்டு போயிட்டு கல்யாணம் பண்ணிருக்கானே கடவுளே!!அவருக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது என்ன முயன்றும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை…என்ன இருந்தாலும் அவரும் பெண் குழந்தையின் தந்தை ஆயிற்றே…
வேறு யாராக இருந்தாலும் கூட பரவால்லை அந்த பொம்பள பொறுக்கி கிட்ட போயிட்டு என்னோட மகள் மாட்ட வேண்டுமா ??
பத்து நிமிடங்களில் இவனை பற்றிய தகவல்கள் அனைத்தையும் அஞ்சுவின் அப்பா சேகரித்து விட்டார்…பெரிய பிசினஸ் MAGNET தான் அந்த அளவுக்கு பணம் அவனிடம் இருக்கிறது என்று தான் அனைவரும் கூறினார்கள்..
பணம் இல்லை என்றாலும் பரவால்லை ஆனால் ஒழுக்கம் ???அந்த கருமத்தை தான் ஹைதராபாத்தில் பார்த்த்னே சீ….
முகத்தை கழுவி கொண்டு வந்து கொஞ்ச நேரம் அமர்ந்து செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்தாள்
இதற்க்கு மேல் இவங்க கூட நான் வாழறதுல எந்த அர்த்தமும் இல்லை…ஆனால் இந்த குழந்தை ???இப்படி ஒரு பாவி வைத்துள்ள நீ வந்துருக்க கூடாது தங்கம்….நான் வாழ்ந்ததே பொய்யான வாழ்க்கை இதுல நீ வந்துருக்கவே கூடாது நீ ,வயிற்றை குனிந்து பார்த்தவளுக்கு, உன்னை எப்படி தான் காப்பாற்ற போகிறேன் என்று தெரியவில்லை தங்கம்…
இன்னும் சற்று நேரத்தில் அந்த குழந்தை இல்லாமலே போக போகிறது என்று அவளுக்கு தெரியுமா என்ன??
சரியாக அந்நேரம் பிரகாஷ் வீட்டிற்கு வந்ததும் மனைவியை தான் தேடினான்…
நேராக ரூமிற்கு சென்று பார்த்தான்..அவள் அழுதிருக்கிறாள் என்று அவள் முகமே சொல்லாமல் சொல்லியது..
அஞ்சு என்னை மன்னிச்சிருடி office ல ஒரே டென்ஷன் அதனால தான் அப்படி கத்திவிட்டேன் என்னை மன்னிச்சிரு என்று அவளின் காலில் விழுந்தான்…
அவள் எதுமே பேசவில்லை…
அஞ்சு எதாவது பேசுடி…
அப்போதும் பேசவில்லை …ஆனால் அவள் கண்ணில் நீர் வழிந்தது ….
அவனோ தான் திட்டியதால் தான் அழுகிறாள் என்று அவளை அணைத்து சமாதனம் செய்து கூட பார்த்தான்…
அவள் அளுதலே தவிர அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ..
அவளின் அமைதி அவனிர்க்கே பயத்தை தான் கொடுத்தது…
என்ன தான் செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை…
கொஞ்ச நேரம் இருவருக்குளும் அப்படி ஒரு அமைதி,அவனால் அதற்க்கு மேல் அவளை அப்படி வேதனையில் அவனால் பார்க்க முடியவில்லை …
காரை எடுத்துகொண்டு வெளியே சென்று விட்டான் …ஏண்டி இப்படி பண்ற !!!நான் பண்ணது தப்பு தான் அதை மன்னிச்சி எங்கிட்ட பேச கூடாதா என்று தன் மனதிடம் பேசியவன்…நேராக பாருக்கு சென்றவன் நன்றாக குடித்து விட்டு காரை எடுத்துகொண்டு,வீட்டிற்கு சென்றான் …
அவன் வீட்டை விட்டு செல்லும்போது எப்படி இருந்தாலோ அப்படியே தான் உட்காந்து இருந்தாள்..
அவன் குடித்துவிட்டு வந்ததை பார்த்த பெரியவர்களுக்கு ஒரே பயமாக தான் இருந்தது…என்ன தான் அச்சு ரெண்டு பேருக்கும் எப்படி கேட்பது என்றும் தெரியாமல் மாடிக்கு செல்லும் அவனையே பார்த்துகொண்டு இருந்தனர்…
எதோ தவறு நடக்க போகிறது என்று தான் தோன்றியது அந்த பெரியவர்களுக்கு..
அவன் உள்ளே சென்று அவளின் காலுக்கு கீழ் அமர்ந்தான்…
அஞ்சு இங்க பாரு டி உன்னை இப்படி பார்க்க என்னால முடியல்லைடி எதுவாக ஒருந்தாலும் வாயை திறந்து சொல்லுடி….எனக்கு பயமாக இருக்குத் உன்னோட முகத்தை இப்படி சோகமாக பார்க்க முடியல்லடி…
அஞ்சு! அஞ்சு! என்று அவன் அவ்வளவு பொறுமையாக அழைத்தும் அவன் சிறிது கூட அசையவேயில்லை…
சற்று தைரியம் வந்தவனாக,அவளின் அருகில் சென்று அமர்ந்து அவளை அணைத்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்..
அவளோ தீச்சுட்டார் போல் எழுந்து விட்டாள்,அவனை முறைத்தாள்…
எதுக்கு அஞ்சு முறைக்கிற..
உங்களுக்கு இப்போ என்ன தான் வேண்டும் என்று அவள் கத்தினாள்…
நீ தான் வேண்டும் என்று அவன் ஆசையாக அவளை பார்த்தான் …
அவன் சரியாக தான் சொன்னான் அவளோ வேறு ஒரு அர்த்ததில் புரிந்துகொண்டு,
“உங்களுக்கு எங்கிட்ட இருந்து என்னோட உடல் தான் தேவைபடுது அப்படித்தான என்று கத்தினாள்…”
அவனோ முழு போதையில் இருந்தவனால் அவள் கூறிய அர்த்ததை புரிந்து கொள்ள முடியவில்லை ..
நேராக ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவி விட்டு வந்தான்,
ஹே COME AGAIN …
மறுபடியும் மறுபடியும் சொல்றதால ஒரு அர்த்தம் மாறி போயிருமா என்ன..
கொஞ்சம் தெளிவாக மாறியவன் திரும்ப சொல்லு என்றதும்,
உங்களுக்கு தேவை என்னோட உடல் தான்…
“என்னடி சொன்ன! என்று அவளை ஒரு அரை விட்டிருந்தான்..”
உண்மைய சொன்னா என்னைய அடிக்க வேற செய்விங்களா..
சீ …உனக்கு வெட்கமா இல்லையடி இப்படி பேசறதுக்கு…உன்னோட NAILPOLISH ல இருந்து நீ தலைக்கு போடுற கிளிப் வரைக்கும் அதை எல்லாம் நோட் பண்றவன்டி நான்…அதுல எல்லாமே காதல் தான் இருக்குமே தவிர காமம் ஒன்னும் இருக்காது…மூன்று மாசமாக என்னோடு இருக்க,இருந்தும் என்னை பத்தி நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா என்று அவனும் அவளிடம் கத்தி கொண்டு தான் இருந்தான்…
Ohh …என்றவள் சார்க்கு பிசினஸ் தவிர வேற எதுமே தெரியாதுன்னு நெனச்சனே என்று அவள் நக்கலாக கூறியதும் அவனுக்குள் அப்படி ஒரு கோவம்..
என்னடி நெனச்சிருக்க உன்னோட மனசுல …இந்த உலகத்துலேயே நீ ஒருத்தி தான் பொண்ணுன்னு நெனச்சிட்டு இருக்கியா??
இல்லையே என்றாள்…என்னை தவிர எத்தனை பெண்கள் இருக்காங்க என்று அவள் இரு பொருள்பட கூறினாள்..
அவன் அதை கவனிக்க வில்லை….நான் பண்ண ஒரே தப்பு நீ தாண்டி..உன்னை நான் கல்யாணமே பண்ணிருக்க கூடாது என்று அவன் கூறியதும்..
அந்த பெண் அப்போது சொன்னது கூட இவள் நம்பவில்லை ஆனால அவனின் வாய்மொழியாக கேட்கும்போது அவளுக்கு கண்ணீர் நிற்பேனா என்றது,இவனோடு வாழ்ந்த மூன்று மாதமும் பொய்யா??
அவனுக்கு தான் பேசியது தவறு தான் என்று தெரியும் …அவன் போதையில் ஏதோ ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறான் அவளாவது சும்மா இருந்திருக்க வேண்டும் ஆனால அவளும் கூட கூட பேசியதும் தான் அவனுக்கு வார்த்தை கட்டுகிடங்காமல் வந்தது..
அவளின் கண்ணில் தெரிந்த வேதனையில் அவன் வாயை மூடி கொண்டான்…
இங்க பாரு அஞ்சு அவள் அருகில் சென்றவன்,அவனின் மூச்சுகாற்று அவளின் மேல் படும் அளவுக்கு அவளின் அருகில் சென்றதும் அவளுக்கே அவளின் மேல் சந்தேகம் வந்து விட்டது,ஒருவேளை எப்போதும் போல் அவனின் அணைப்பில் உருகி விடுவேனோ?? என்று தோன்றியது…
“என்னோட முகத்தை பார்த்து சொல்லுடி உன்னோட உடம்புக்கு ஆசைப்பட்டு தான் உன்னை நான் கல்யாணம் பண்ணிகிட்டனா சொல்லுடி…”
“உன்னோட வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தைய கேட்க்கிறதுக்கு நான் செத்து போயிருக்கலாம்டி…அவளின் கையை பிடித்து அவனின் நெஞ்சில் வைத்தவன் இங்க அவ்வளவு வலியா இருக்கு அஞ்சு “
எனக்கு புரிதலோடு இருக்க அன்பான மனைவியா நீ இருப்பன்னு நெனச்சி தான் உன்னை கல்யாணம் பண்ணேன்…நம்ம காதலை நீ இப்படி அசிங்க படுத்துவேன்னு நான் கனவுல கூட நினைக்கல..
சி கைய விடு என்று அவனின் கையை அவள் உதறினால் …என்ன டிராமா பண்ணிகிட்டு இருக்கியா நீ, என்றதும் அவன் கோவத்திற்கு உச்சிக்கே சென்றான்…குழந்தைகிட்ட சொல்ற மாறி சொல்றேன் …
குடித்த போதை கூட இவள் பேசிய வார்த்தையில் களைந்து விட்டது…
என்னடி நெனச்சிருக்க இந்த உலகத்துலேயே நீ ஒருத்தி தான் அழகுன்னு நெனச்சிகிட்டு ஆடுறியா?
இந்த மூணு மாசத்துல எப்ப நான் தொட்டாலும் உருகுவ, ஆனா இன்னைக்கு இந்த அணைப்பு உனக்கு அவ்வளவு கசக்குதா?? சொல்லுடி என்று அவன் கேட்டதும் ..
அவள் அவனை ஓங்கி அறைந்து விட்டாள்…உனக்கு வெட்கமா இல்லை என்ன மனுஷன் நீ சீ …என்று அருவருப்பில் முகத்தை சுருக்கினாள்..
அவள் அடித்ததுலாம் அவனுக்கு பிரச்சனையே இல்லை,அவள் அருவருப்பாக முகத்தை அப்படி செய்தது அவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது…
கட்டின பொண்டாட்டிய பாத்து இவ்வளவு கேவலமா கேள்வி கேட்கிற??நான் தான் ஏமாந்துட்டேன், உன்னை நம்பி இங்க நான் வந்துருக்கவே கூடாது,அவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள்….
நீ என்னடி என்ன நம்பி வந்துருக்க கூடாத்துன்னு சொல்றது ,இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ,உன்னை பார்த்தது கூட தப்பு தான்டி…எங்கயோ போய் தொலைடி…
“இனிமேல் என்னோட வாழ்க்கைக்கு நீ வேண்டாம்டி என்றவன்,அழும் அவளை பார்த்தவன் அவளை கட்டிலில் தள்ளிவிட்டு என்னோட மூஞ்சியிலே இனி முழிக்காதடி “ஏமாத்துகாரி “என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்…”
அவன் அப்படி தள்ளுவான் என்று அவள் நினைக்கவே இல்லை நிலை தடுமாறி விழுந்தவள் “அம்மா” என்று வயிற்ரை பிடித்துகொண்டு,மயங்கி விட்டாள்…