அத்தியாயம் 30:

அவள் கோவிலில் இருந்து வீடு வருதற்கு முன்பு அவன் வந்து விட்டான்…தலையில் கை வைத்து கொண்டு இருந்தவனை, பார்த்தவள் அருகில் சென்று தலையயை மென்மையாக  பிடித்து விட்டாள்…

அவனுக்கு அலுவலகத்திலே தலை வலி அதிகமா இருந்ததும் அவளின் நியாபகத்தில் வீடு வந்து விட்டான்….அவளின் தளிர் போன்ற கையால் பிடித்து விட்டதும் அவனுக்கு தலை வலி சிறிது குறைவது போல இருந்தது…வழக்கம் போல் அவளின் கையை  பிடித்து முத்தம் கொடுத்தவன் அவள் முகத்தை நோக்கினான் ஏதோ சந்தோசமாக இருப்பது போல் தோன்றியது…

இந்த ஐந்து நாளாக அவளின் சோர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு வேதனையாக  தான் இருந்தது…. ஆனால் இன்று அளவுக்கு அதிகமா அவள் சந்தோசமாக இருப்பது போல் தோன்றியது..

என்ன madam ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!என்னன்னு சொன்னா நானும் சந்தோசமா இருப்பேன்ல என்று அவன் கேட்கும்போது அவளுக்கு வெட்கம் வந்து தலையை குனிந்து கொண்டாள் ..

.வர வர நீ ரொம்ப வெட்க்க படுற என்ன விஷயம் என்றவன் அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டான்….

அவளோ வெட்கத்தில் நெளிந்தாள்.. பாவா இது ஹால் கைய விடுங்க..

அப்படியா இது ஹால்லா எனக்கு அப்படி ஒன்னும் தெரிலையே…நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இங்க இருக்கோம்…தாத்தா பாட்டி வெளிய போயிருக்காங்க வர லேட் ஆகும் அதனால இங்க நம்ம ப்ரீயாக இருக்கலாம்…

நீ சொல்லு என்ன இன்னைக்கு சந்தோசமாக இருக்க ???

அது வந்து என்று இழுத்தவள் ..அதற்குள் அவன் அவளை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்று விட்டான்…அதன் பின்பு அவள் சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கூட அவன் தரவில்லை…

பாவா…

சொல்லு அம்முலு ..

ஏதோ சொல்லனும்ன்னு நெனைக்கிற அது என்னனு சொல்லு கேட்போம் ..

அதை எப்படி சொல்றது என்று வெட்கப்பட்டு அவனின் நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டாள்..

நமக்குள்ள ஒளிவு மறைவு எதுக்கு அஞ்சு ஏதுவாக  இருந்தா என்ன நீ சொல்லு..

எனக்கு…என்றவள் எதுமே கூறவில்லை..

அவனை தாபத்தோடு பார்த்தாள் அவன் அதை வேறு மாரியாக புரிந்துகொண்டு அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றான்..இத்தனை நாளில் அவளாக அவனை நாடவில்லை இன்று ஏனோ அவள் அவனை பைத்தியமாக ஆக்கிகொண்டு இருந்தாள்..

அஞ்சு!!என்னடி என்னை ரொம்ப மிஸ் பண்ணியோ??

ஆமா என்றவள் அதன் பின்பு எதுவும் பேசவில்லை …சொல்லவந்ததை அவள் மறந்தும் போய்விட்டாள்..

காலையில் எழுந்த இருவருக்குமே,மனம் நிம்மதியாக இருந்தது…இருவரும் கிளம்பி அலுவலகத்திற்கு சென்றனர்…இப்பொழுதுலாம் அவளே பல வீடுகளுக்கு பிளான் போட்டு தரும் அளவுக்கு திறயாமையாக DESIGNING எல்லாம் கற்று தேறி விட்டாள்…வாழக்கை இருவருக்குமே நன்றாக தான் சென்றது…

காலையில் வேலை ,இரவு கூடல் என்று நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது…

மொத்தத்தில் அவன் அவளை யோசிக்க விடாமல் பிஸியாக வைத்து கொண்டான் என்பது தான் உண்மை..

அங்கு அவள் தந்தையோ கோவத்தில் கத்திக்கொண்டு இருந்தார்…இவ்வளவு ஆளுங்கள அவளோட பாதுகாப்புக்கு போட்டும்  அவள் எனக்கே தெரியாமல் ஒருவனை கல்யாணம் செய்து கொண்டாள்…அவள் கல்யான,  பண்ணிகொண்டதையே அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அதும் அந்த பொறுக்கிய போயிட்டு கல்யாணம்  பண்ணிகிட்டளே என்று ஆதங்கமாக இருந்தது அவருக்கு..

என்ன செய்து அவளை அவனிடம் இருந்து பிரிப்பது என்று அவரின் ஆளுங்ககிட்ட யோசனை கேட்டு கொண்டு இருந்தார்…

திடீர் என்று அவருக்கு ஒரு யோசனை அந்த மோனிகா என்ற பெண்ணிடமே உதவி கேட்டால் என்ன என்று தோன்ற,உடனே அவரின் பணபலத்தினால் அதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அவளை சந்திக்க நேரில் சென்றார்…

எல்லாம் ஏன்னோட நேரம் போயும் போயும் இவளைலாம் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது பாரு என்று தன் நிலையை  நினைத்த அவருக்கே வெட்கமாக இருந்தது..

சொல்லுங்க சார் என்று வந்து சேர்ந்தாள்…

உனக்கு ஒரு வேலை,ஒரு பொண்ண இவன்கிட்ட இருந்து பிரிக்கணும் ஏன் எதுக்குன்னுலாம், கேட்காத உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ வாங்கிக்கோ எனக்கு வேலைய மட்டும் சரியாக செய்து கொடு அவ்வளவு தான்..

யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே,அவன் போட்டோ எதாவது குடுங்க என்றவளிடம் ,அவனின் போட்டோவை காட்டியதும்  அவளுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது…

அட நம்ம பிரகாஷ் கிட்ட இருந்து தான் இவளை பிரிக்கணுமா??சார் நீங்க கவலை படமா போங்க இனி இது என்னோட பிரச்சனை நான் பாத்துகிறேன்…சார் கேட்கிறேன்னு தப்பாக நினைக்க வேண்டாம் இந்த பொண்ணுக்கு எதாவது வீக்னெஸ் உண்டா??என்று கேட்டவளை அவர் முறைத்தார்…

இல்லை சார் அப்போ தான் பிரிக்கிறதுக்கு எனக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் சார்..

மோனிகாவை பொறுத்தவரை இந்த அளவுக்கு யாரிடமும் கெஞ்சி கொண்டுலாம் பேச மாட்டாள்…அவர் இவ்வளவு பணத்தை தூக்கி போட்டதும் அவளுக்கு ஏதோ கடவுளை பாப்பது போல் தோன்றியது…

அந்த பொண்ணுக்கு யாரவது தன்னை ஏமாற்றினால் சுத்தமாக பிடிக்காது…அவன் மேல அவளுக்கு இருக்க நம்பிக்கைய மட்டும் உடச்சிறு…

 அவ்வளவு தானா விஷயம் ரொம்ப சுலபம் இன்னைக்கே முடிச்சிறேன் என்று அவருக்கு நம்பிக்கை வார்த்தை கொடுத்தவள் அந்த வேலையை பார்க்க சென்று விட்டாள்..

மோனிகா,பிரகாஷோடு இருக்கும்போது ஒரு வீடியோ எடுத்து வைத்து இருந்தாள்…அது அவன் அவளிடம் உருகி உருகி இருந்த இருந்த ஒரு காணொளி பதிவு அதை அஞ்சுவிற்கு அனுப்பி விட்டாள்…அனுப்பி முடித்ததும் மோனிகாவின் மனதில் அப்படி ஒரு வன்மமான சிரிப்பது…

“அன்னைக்கு என்னை எப்படி அடிச்ச எனக்கு எப்படி இருந்துருக்கும்…”

ஆனால் அவளுக்கே புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் பிரகாஷிற்கு திருமணம் என்றாள் பிடிக்காத ஒன்று எப்படி அவளை திருமணம் செய்து இருப்பான் என்ற கேள்வி தான் இன்னும் அவளுக்கு உறுத்துகிறது…

அவன் அவளிடம் உருகுவதை பார்த்தால் உண்மையிலே அவளை அவன் காதல் செய்து தான் திருமணம் செய்து இருப்பானோ என்ற நினைத்ததும்,அவளின்  மனதோ ஐயோ அப்படி மட்டும் இருக்கவே கூடாது என்று தான் வேண்டியது..

எத்தனை CUSTOMER கூட இருந்திருப்பேன் ஆனாலும் இவன் மட்டும் தான் மென்மையாக தீண்டினான் மற்றவர்கள் எல்லாம் ஏதோ கொரங்கு கிட்ட கிடைச்ச பூமாலை போல் தீண்டியதை நினைத்தவளுக்கு,இப்போது கூட பிரகாஷ் தீண்டலே தேவைப்பட்டது…

எங்கிட்ட இல்லாதது அவகிட்ட அப்படி என்ன தான் இருக்கிறதோ அப்படி ஒரு கொஞ்சல் ,அப்படி ஒரு காதல் அவள் மேல்… அவள் என்னை விடலாம் அப்படி ஒரு அழகு இல்லையே என்று அவள் மனதை அவளே தேற்றி கொண்டாள்…

அவனோடு அவளை பார்த்த மொனிகாவிர்க்கு கூட புரிந்து இருந்தது அவன் அவளை எவ்வளவு நேசிக்கிறான் என்று புரிந்து இருந்தது ஆனால் புரிய வேண்டியவளுக்கோ புரியுமோ ?புரியாதோ?

அஞ்சுவின் அப்பா மோனிகாவிற்கு அழைத்து என்ன அச்சு என்றதும் ,

இந்த பக்கம் இவளுக்கோ கடுப்பாக இருந்தது அதை அனுப்பி இரண்டு நாள் ஆகிவிட்டது ஆனாலும் அவள் இன்னும் பார்க்கவில்லை…அதற்க்கு நான் என்ன தான் செய்வது என்று தான் தோன்றியது..

இது சரி வரது போல நீ வேற எதாவது போயிட்டு பண்ணு காசு உன்னோட அக்கௌன்ட்க்கு  வரும் என்றதும்,சரி என்று போன் வைத்தாள்…

என்ன செய்யலாம் என்று யோசித்தவள்,அவளிற்கே அழைத்து கூட பார்த்தாள் ஆனால் அவள் எடுக்கவில்லை இந்த பாகம் இருந்த மொனிகாவிர்க்கோ மண்டை காய்ந்தது….

ஒருத்தன் போன் செய்து TORTURE பண்றான் இவள் போன் எடுக்காமலே என்னை TORTURE பன்றாள்…

இப்படி இரண்டு ஜீவன்கள் தங்களை பிரிக்க போடும் சதி திட்டங்கள் ஏதும்  தெரியாமல்,இருவரும் சிரித்துக்கொண்டே அலவலகத்தில் நுழைந்தார்கள்..

அஞ்சு நீ போயிட்டு உன்னோட வேலைய பாரு,எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்று அவன் கிளம்பி விட்டான்…

எப்போதும் போல் வேலை பார்த்துகொண்டு இருந்தாள்,திடீர் என்று வொமிட் வருவது போல் தெரிந்தது சரி என்று ரெஸ்ட்ரூம் சென்று வந்தாள்…பின்பு அவளால் எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு தலை சுற்றல்,வொமிட் இது எல்லாம் மாறி மாறி இருந்ததாள் அவளால் ஏதும் செய்ய முடியவில்லை…இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என்று யோசித்தவள் அவனிடம் சென்று சொல்லிவிட்டு செல்லலாமே என்று அனுமதி வாங்காமல் உள்ளே சென்று விட்டாள்…

அஞ்சலி!!!!உனக்கு மேனஸ்ன்னு ஒன்னு இருக்கா இல்லையா??வெளிய போ என்று கத்தி விட்டான்…

அவளை பார்த்த மேனேஜர்க்கே பிரகாஷ் மேல் அப்படி ஒரு கோவம் வந்தது…பாவம் சின்ன பொண்ண இப்படி திட்டி விட்டாரே என்று கடுப்பாக இருந்தது..

Sorry என்றவள் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் ஓடி சென்று காரில் புகுந்து கொண்டாள்…இது ஒரு சிறு விஷயம் இதற்க்கு போயிட்டு என்னை இப்படி திட்டி விட்டானே …நான் என்ன இவனுக்கு அடிமையா  இவன் சொல்றத மட்டும் கேட்டுகிட்டு இவனுக்கு வேலை செஞ்சி குடுக்குறதுக்கு,நான் பண்ண தப்பால இப்போ நானே கஷ்டப்படுரானே கடவுளே!!

இப்போ நான் என்ன தான் செய்வது யோசித்தவளுக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு ஒரு வலி…தன்னை சமாளித்துகொண்டு சென்றவளுக்கு,இவளின் கண்ணீர் முன்னாள் வரும் காரை மறைத்தது….எவ்வளவு அழுதும் அவளால முடியவில்லை…தப்பு பண்ண நானே தண்டனைய அனுபவிக்க வேண்டியது தான்…

அவங்களுக்கு இந்த பிசினஸ் தான் முக்கியமன்ன போக வேண்டியது தானா எதுக்கு என்னோட பின்னாடி வந்து என்னை ஏமத்தி கல்யணம் பண்ணி இப்போ நானும் அழுதுகிட்டு,அவங்களும் நிம்மதி இல்லாம இருக்கறதுக்கு பிரிஞ்சே போயிடலாம்….

இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு அவசியம் தானா?என்று அவள் மனதில் பல கேள்விகள் தோன்றி அவளை வதைத்தது…

வீட்டிற்கு வந்தவள் உடனே ரூமிற்கு சென்று விட்டாள்…அப்போது தான் தேதியை பார்த்தாள்…பார்த்தவளுக்கு கடவுளே இது உண்மையாக இருக்கணும் என்று சந்தோசத்தில் கண்ணீர் வழிந்தது…

திரும்பவும் காரை எடுத்து கொண்டு மெடிக்கல் சென்று ஒரு PREGNANCY கிட வாங்கி வந்து செக் செய்யலாம் என்று முடிவு எடுத்தவளுக்கு ஒரே பதட்டமாக இருந்தது…

எங்கள் இருவரின் காதலுக்கான சாட்சி இது என்று அவளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தமாக இருந்தது…..அப்போது இருந்த பிரச்சனை கூட பின்னுக்கு சென்று விட்டது..

குழந்தை என்னை போல் இருக்குமா இல்லை அவங்களை போல் இருக்குமோ என்று யோசித்தவள் தன் வயிற்ரை தடவியவளுக்கு  ஆனந்த கண்ணீர் வழிந்தது…

PREGNANCY செக் பண்ணியவளுக்கு அது POSITIVE ரிசல்ட் காட்டியதும் அவளுல் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போயிற்று…

அவங்களுக்கு சொல்லலாமே என்று போனை எடுத்தவளுக்கு புது நம்பரில் இருந்து அவ்வளவு CALLS,யாராக இருக்கும் என்று அந்த எண்ணிற்கு அழைத்தாள் அழைப்பு எடுக்கவில்லை..அதே எண்ணில் இருந்து  நெறைய மெசேஜ் வந்து இருந்தது,என்னவாக இருக்கும் என்று பார்த்தவளுக்கு,அதன் பிறகு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

சீ!!! …..என்று அந்த வீடியோ பார்த்துவிட்டு போனை தூக்கி எறிந்தாள்…

கடவுளே என்று சத்தமாக கத்தினாள் …எல்லாமே பொய் எல்லாமே பொய் !இப்படி நான் ஏமாந்து போயிட்டனே!!!!