அத்தியாயம் 29:

இரவு நேரம் கழித்து வந்தவனுக்கு, பாட்டி தான் அவனுக்கு டிப்பன் எடுத்து வைத்தார்,

அஞ்சு எங்க பாட்டி அவ சாப்பிட்டாளா? என்றதும்,

அவர் இல்லை பிரகாஷ்…அவளுக்கு வயிறுவலி…சாப்பிட கூப்பிடாலாம்ன்னு பார்த்தா அவ ரொம்ப tired ல தூங்கறா பிரகாஷ்…

நீ கூப்பிட்டு வந்து சாப்பாடு குடு என்றவருக்கு “சரி” என்ற பதிலோடு நிறுத்தி கொண்டான்…

அவள் கிளம்பி சென்றதில் இருந்து அவனுக்கு அதிகமாக மனைவியின் நியாபகம் தான் வந்தது…எதற்காக அவள் அப்படி பேசாமல் கூட சென்று இருப்பாள் இப்போது தான் அவனுக்கு புரிந்தது …இந்த நேரத்துல  போயிட்டு அவளை கஷ்டபடுத்திட்டனே” உடல் வலியால் தான் அவள் இப்படி நடந்து கொண்டாள் போல” என்று நினைத்தவன் உடனே மாடிக்கு சென்றவன் அறையை பார்த்தான்…

ரூமில் லைட் ஏதும் போடாமல் அவள் வயிற்றை பிடித்து கொண்டு படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு மனதில் அவ்வளவு வேதனையாக இருந்தது…

“இதை கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் இருக்கேனா” என்ற அந்த நிமிடம் அவனுக்கு வேதனையாக இருந்தது…

அவளின் அருகில் சென்றவன்,அவள் அழுது இருக்கிறாள் என்று நன்றாக புரிந்தது…அழுது அழுது முகம் வீங்கி இருந்தது…ஒரே நாளில் இளைத்தது போல் இருந்தாள்…அவளின் அருகில் படுத்ததும்,அவள் தானாக அவனை அணைத்து கொண்டு படுத்து விட்டாள் ஆனால் அவள் முழிக்கவே இல்லை….

அவளின் முகத்தில் இருந்த வேதனை உடல் வலியால் தான் என்று நினைத்தான்…அவளை எழுப்பலாமா ,வேண்டாமா? என்று யோசித்தவன்,

அஞ்சு எழுந்திரிடா!! என்றதும் அவள் எழவில்லை ஆனால் சிணுங்கினாள்..கழுத்தை தொட்டு பார்த்ததும் அவளின் உடல் சூடு நன்கு தெரிந்தது…ஏதோ முனங்கிக்கொண்டே இருந்தவளை பார்த்தவனுக்கும் வேதனையாக இருந்ததது.. அந்த நேரமே, டாக்டரை வரவழைத்து அவளுக்கு INJECTION போட்டுவிட்டு சென்றதும் தான் அவனுக்கு முகத்தில் இருந்த சிறு பதட்டம் கூட குறைந்தது…

DOCTOR என்ன ஆச்சு! என்றதும்,அவங்க ரொம்ப வீக் ஆக இருக்காங்க இந்த மாறி நேரத்துல  சிலருக்கு மட்டும் இந்த மாறி காய்ச்சல் வருவது நார்மல் தான் சோ டோன்ட் வொர்ரி என்றார் அவரை அனுப்பிவிட்டு வருவதற்குள் இவள் மறுபடியும் உறங்கி விட்டாள்…

மறுபடியும் அவளை அழைத்ததும்,அவள் கண் திறந்து அவனை பார்த்தவள் அழுது விட்டாள்..

அவன் என்ன ஆச்சு அஞ்சு! என்று கேட்டதும்,

அவள் அவனை அணைத்துக்கொண்டு அழுகையில் கரைந்தாள்..SORRY டி உனக்கு இந்த மாரின்னு எனக்கு தெரியாது தெரிஞ்சா  உன்கிட்ட அப்படி பேசி இருப்பனா சொல்லு..

சரி அழுகாத அஞ்சு,என்றவன் அவளை அழைத்துக்கொண்டு முகத்தை கழவி விட்டு துடைத்து விட்டவன் ,நீ இங்கயே இரு நான் போயிட்டு உனக்கு இட்லி எடுத்து வரேன் என்றவன்,எடுத்து வந்து அவளுக்கு ஊட்டிவிட்டான்..ஒரு இட்லி சாப்பிடும்போதே எனக்கு வொமிட் வர மாறி இருக்கு போதும் என்றதும் அவளுக்கு TABLETS லாம் கொடுத்தான்…உடனே படுக்காத வரேன் இரு என்றவன் பிரெஷ் ஆகி விட்டு லைட் ஆப் செய்து விட்டு அவளை தன் மேல் சிறு குழந்தை போல் இழுத்து அணைத்து கொண்டான்..

அவளுக்கும் அந்த  அரவணைப்பு தான்  தேவைப்பட்டது…

அஞ்சு உனக்கு எப்பவுமே இப்படி தான் ஆகுமா??

ஆமா பாவா..

அவள் சொல்லிய பதிலில் அவனுக்கு தான் மிகவும் வலித்தது…பெண்கள் என்றாள் சும்மா இல்லை போல இந்த வலியை ஆண்களால் தாங்கி கொள்ள முடியுமா? என்று யோசித்தவனுக்கு அவள் வலியில் சிணுங்கி கொண்டே தூங்கியவளை பார்த்தவனுக்கு தூக்கம் தூர சென்றது….

அவனுக்கு இந்த இரவே ரொம்ப பயம்  வந்து விட்டது …தான் பிறக்கும்போது வலி தாங்காமல் தான் அவனின் தாய் இறந்து விட்டார்…ஒருவேளை இவளையும் நான் இழக்க நேரிடுமோ என்னவோ என்று மிகவும் பயந்து விட்டான்…இதை இப்பவே இவன் சொல்லி இருக்கலாம் ஆனால் அவன் சொல்ல வில்லை…பேசி தீர்க்க முடியாத பிரச்சனை  என்று ஒன்ன்றும் இல்லை …

எதையோ யோசித்து கொண்டு இருந்தவன்,அவளின் சினுங்களால் என்னவென்று திரும்பி பார்த்தான்…அவளால் வலி தாங்க முடியாமல் சிணுங்கி கொண்டே இருந்தவளை பார்த்தவனுக்கும் வேதனையாக தான் இருந்தது…

அஞ்சு are you ஓகே…

இல்லை பாவா வலியில் தூக்கம் வரல என்இவள்  அவனை பார்த்தாள்,அவன் அவளை தன் மடியில் படுக்க வைத்து தலையை  கோதி விட்டான் அவன் கையை  பிடித்துகொண்டு படுத்திருந்தாள்…

அவனுக்கு தூக்கம் சொக்கியது ஆனாலும் அவன் அவளை விட்டு நகரவே இல்லை…கொஞ்ச நேரம் அவனின் மடியில் படுத்திருந்தவள் ,கொஞ்ச நேரம் அவனின் நெஞ்சில் படுத்திருந்தாள் நேரம் தான் சென்றது அவள் வலி குறையவில்லை…அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நகர்ந்தவளையும் அவன் அருகில் இழுத்து அணைத்துக்கொண்டு தான்  படுத்திருந்தான்…

சரியாக நான்கு மணிக்கு,அவனை விட்டு தள்ளி சென்று சோபாவில் சற்று நேரம் அமர்ந்து இருந்தவள்,கொஞ்ச நேரத்துலையே உறங்கிவிட்டாள் …அவனாலும் காலையில் எழுந்துகொள்ள முடியவில்லை,பாதி தூக்கத்திலே அவன் கைகள் அருகில் இருந்த மனைவியை தேடியது,அவள் இல்லாததும் எழுந்து பார்த்தன் அவள் சோபாவில் அமர்ந்த வாக்கிலே தூங்கியதை பார்த்தவனுக்கு மீண்டும் வேதனையாக இருந்தது…

அவளை தூக்கி வந்ததும்,அவளிற்கு சற்று முழிப்பு வந்தது…

அஞ்சு இப்போ ஓகே வா..

இல்ல டாக்டர் வர சொல்லவா என்றதற்கு,

வேண்டாம் பாவா நான் நல்லா தான் இருக்கேன் தூங்கினால் சரி ஆகிரும்…

கொஞ்சம் வலி குறைந்ததால் உறங்க ஆரமித்தாள் ,உறங்கும் அவளையே பார்த்து கொண்டு இருந்தவனும் எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை ….இருவருமே அதிகாலை ஐந்து மணிக்கு தான் உறங்கினார்கள்…இன்று அவனுக்கு விடுமுறையாக இருந்ததால் அவனும்  விட்டான்…

அவன் எழுந்திரிக்கும் போது,அவள் அவனின் அருகில் இல்லை..அவள் அப்போது தான் குளித்து விட்டு வந்தாள்..

அஞ்சு இப்போ வலி பரவால்லையா இல்ல HOSPITAL போகலாமா?

இல்லை பாவா  நல்ல இருக்கேன்…இப்போ கொஞ்சம் BETTER தான்..

சரி நீ போயிட்டு சாப்பிடு ,நான் குளிச்சிட்டு வரேன்..

ம் ம் என்ற ஒற்றை பதிலோடு கிளம்பி விட்டாள்…அவள் மனதில் ஏற்பட்ட குழப்பம் அப்படியே தான் இருந்தது …

கீழே சென்று சாப்பிட்டவள் கொஞ்ச நேரம் பெரியவர்களுடன் பேசிவிட்டு,அவன் வந்ததும் கொஞ்ச நேரம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தாள்… ஆனால் ஏதும் அவனிடம் அனாவசியமாக பேச வில்லை..

அவர்களுக்கு அது பெரிதாக தெரியவில்லை அவளுடலில் ஏற்பட்ட வலியால் தான் அப்படி இருக்கிறாள் என்று ஏதும் கேட்க்க வில்லை

அஞ்சு நீ போயிட்டு ரெஸ்ட் எடு என்று பாட்டி கூறியதும் அவள் சென்று விட்டாள்…

அவனுக்கு அலுவலக வேலை சம்மந்தமாக வேலை இருந்ததால் லேப்டாப்பில் சற்று நேரம் வேலை பார்க்க ஆரமித்தவன் வேலையிலே முழ்க்கி போய்விட்டான்…

பிரகாஷ்,இப்படி வேலை வேலைன்னு இருந்த என்ன தான் அர்த்தம்..அவளை பத்தி எதாவது யோசனை இருக்கா ??

அஞ்சுக்கு tired ஆக இருக்கும் பாட்டி அதனால, அவ தூங்கி எழட்டும் பாட்டி என்றவனை அவர் கோவமாக பார்த்தார் …

மணி என்னனு தெரியுமா இரவு எட்டு மணி ஆகிவிட்டது …அஞ்சுவ சாப்பிட போயிட்டு கூட்டிட்டு வா..

உன்னை நம்பி தான அவ வந்திருக்கா  அவளை கவனிக்காமல் எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு இருக்கிறது நல்லது இல்ல கண்ணா சொல்றத புரிஞ்சிக்கோ! என்ற பாட்டிக்கு.

நாங்க ரெண்டு பெரும் நல்ல புரிதலோடு தான் இருக்கோம் பாட்டி நீங்க கவலைபடாதிங்க…

என்னவோ போ பிரகாஷ்..

அவளை சாப்பிட அழைத்து வந்தவன்,அவளை நன்றாக சாப்பிட வைத்தவன் பெரியவர்களிடம் சொல்லி விட்டு அவளை ரூமிற்கு அழைத்து சென்றான்…

அவள் அவனிடம் ஏதும் பேசாமல் படுத்து கொண்டாள் அந்த வித்தியாசம் அவனை சற்று உறுத்தியது என்னவோ உண்மை தான் ஆனால் தங்கள் காதலின் மேல் இருந்த நம்பிக்கையில் அதை புறம் தள்ளினான்…

அஞ்சு இப்போ ஓகே தான நீ..

ஓகே தான் ஒன்னும் பிரச்சனை இல்லை..

சரி என்றவன் அவள் அருகில் படுத்து அவளை அணைத்து கொண்டு படுத்தான்…அவள் உறங்கி விட்டாள் என்று நினைத்தவன்,பால்கனிக்கு சென்று தன்னுடைய லேப்டாப்பில் விட்ட  வேலைகளை பார்க்க சென்றவன் அதிலே ஆழமாக புதைந்து விட்டான் ..

அவனின் அணைப்பில் இருந்தும் அவளுக்கு தூக்கம் வரவில்லை…அவன் சென்றதும் எவ்வளவு முயர்ச்சித்தும் அவளுக்கு அழுகையை அடக்க முடியவில்லை…

அவங்க கூட புரிஞ்சி என்னால இருக்கவும் முடியல்லை, அவங்ககிட்ட என்னோட பிரச்சனையை சொல்லவும் முடியவில்லை நான் ஏன் இப்படி இருக்கேன்…நான் எடுத்த முடிவு இப்படி தப்பு ஆகும்ன்னு நெனைக்கவே இல்லை என்று மறுபடியும் அவள் தனக்குளே புலம்ப ஆரமித்தவள் கொஞ்ச நேரத்தில் எப்படி உறங்கினாள்  என்று தெரியவில்லை…

வெகு நேரம் வேலை செய்தவன்,அவளை எட்டி பார்த்தான் நன்றாக உறங்கி விட்டாள் என்று தெரிந்தது…அவளின் அருகில் சென்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு உறங்கி விட்டான்…

அவன் செய்த மிக பெரிய தவறு தன் காதலின் மேல் கொண்ட அதீத நம்பிக்கை தான்…

வழக்கம் போல் காலையில் எழுந்தவன்,இன்று விரைவாக அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்…

காலையில் எழுந்ததும் அவனை தான் தேடினாள் ,அவன் இல்லாத விரக்த்தியில் மறுபடியும் தனிமையில் அழுகையில் கரைந்தாள் தன்னை சமாதனம் செய்ய ஒருவருமே இல்லை என்று விரக்த்தியில் கண்களை மூடி கொண்டு படுத்து விட்டாள்…காலையில் சாப்பிட அழைத்தும் சோர்வாக இருக்கிறது வேண்டாம் என்று கூறிவிட்டு படுத்து விட்டாள்…

தன்னை சமாளித்து கொண்டு,குளித்து விட்டு வந்தவள் அவன் அழைத்திருக்கிறானா? என்று போனை எடுத்து பார்த்தாள் ஆனால் அழைக்கவில்லை ..இது எதிர்பார்த்தது தானே, என்று கீழே சென்று பெயருக்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவளை,பாட்டி தான் அதட்டி அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டதும் அவளுக்கு கண்கள்  கலங்கியது தன் அன்னையின் நினைவில்…

மேலே சென்றாள் தூக்கமும் வரவில்லை என்று சிறிது நேரம் தோட்டதிற்கு சென்று அமர்ந்திருந்தாள்,மனம் பாரமாக இருப்பதால் அருகில் உள்ள கோவில்க்கு சென்று வரலாம் என்று யோசித்தவள்,பாட்டியிடம் சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று,சிவனின் முகத்தை பார்த்தவளுக்கு கண்ணீர் வழிந்தது..

கடவுளே எனக்கு இது தான் வேண்டும் என்று கேட்க்க கூட முடியவில்லை அந்த அளவுக்கு எல்லாமே எனக்கு நீ கொடுத்திருக்க ஆனால் எனக்கு தான் அதோடு ஒத்து  வாழ முடியவில்லையோ என்று கடவுளிடம் கேட்டு கொண்டு இருந்தாள் ..

ஏதோ தனிமையில் இருக்கிற மாறி இருக்கு எங்ககூடவே நீங்க இருக்கணும் என்று கடவுளிடம் வேண்டிவிட்டு சற்று நேரம் அங்கு அமர்ந்தவள்,ஒரு இரண்டு வயது குழந்தை கீழே வந்து விழுவதை பார்த்தவள்,அந்த குழந்தையை  தூக்கிவிட்டு கண்களை துடைத்து விட்டு, கன்னத்தில் முத்தமிட்டு அந்த குழந்தையின் அழகிய சிரிப்பில் தன் கவலைகளை மறந்தாள்..

“தனக்கும் இந்த மாறி குழந்தை இருந்தாள் நன்றாக இருக்கும் என்றவளின் கை தானாக தன்  வயிற்றில் கை வைத்தது…”

இந்த யோசனை தான் அவளின் வாழ்வை மாற்ற போகிறது என்று தெரியாமல் சந்தோசமான மன நிலையில் வீட்டுக்கு சென்றாள்..