அத்தியாயம் 26:

அவன் சிரித்துக்கொண்டே அஞ்சு madam என்னை கல்யாணம் பண்ணிக்கிரிங்களான்னு கேட்டேன்..

அப்போது தான் அவளுக்கு புரிந்தது பாவா நிஜமாவா என்று கண்கலில் கண்ணீரோடு கேட்டவளை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷம்…

நான் இருக்கும்வரை நீ எதுக்குமே அழக்கூடாது அம்முலு என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்..

அவள் அமர்ந்த வாக்கிலே அவனை அணைத்து கொண்டாள்…

என்னை கல்யாணாம் பண்ணிக்க உனக்கு எதுக்குடி அவ்வளவு ஆர்வம்,,

இப்போ என்னை ஆபீஸ்ல மாமா பொண்ணுன்னு கூட்டிட்டு வந்தது,அப்பறம் அங்க வீட்டுல உங்க காதலியாக இருப்பது எல்லாம் எனக்கு வேண்டாம் எங்க இருந்தாலும் உங்க மனைவியாக இருக்க ஆசைபடுகிறேன் என்று கூறியதும் அவனிற்கும் கண்ணீர் கோர்த்தது அவளுக்கு முகம் முழுவதும் முத்தங்களை கொடுத்தான்..

எனக்கான அங்கிகாரம் தான் இது…

சரி அஞ்சு வீட்டுக்கு கிளம்பலாமா??

ஓகே பாவா போலாம் என்றவள் அவனை விட்டு நகராமல் மடியிலே உட்கார்ந்துகொண்டு போலாம் என்றாள் அவனும் என்ன தான் செய்வான்…

என்னடி நக்கலா..

இல்லையே பாவா..

அவனை நோக்கி இரு கைகளையும் நீட்டி தூக்கிட்டு போங்க என்றதும் அவளின் செய்கையில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது…

இங்க என்னால ஏதும் பண்ண முடியாதுங்கற தைரியத்துல தான் நீ இப்படி எல்லாம் பண்ற அப்படித்தான என்றவனுக்கு அவள் ஆமா ஆமா என்று பதில் அளித்தாள்…

சரி போனா போகுது என்று எழுந்து கொண்டாள்…இருவரும் வீட்டிற்கு செல்லும்போது,

பாவா எனக்கு இந்த மாறி இரவு நேரத்தில் TRAVEL   பண்ண ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்படி கார்ல இல்ல மனசுக்கு பிடிச்சவங்க கூட நடந்து போகறது ரொம்ப பிடிக்கும்…

அவள் கூறியதை கேட்டவன் உடனே காரை ஓரமாக நிறுத்தியவன்…இறங்கு அஞ்சு என்றான்..

தொல்ல தாங்க முடியலன்னு இங்கயே இறக்கி விட போரிங்களா ??

அவனுக்கு ஒரே சிரிப்பு எனக்கும் ஆசை தான் அஞ்சு ஆனால் என்ன பண்றது..

அவன் அப்படி கூறியதும் எப்போதும் போல் அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்…

சரியான கொரங்கு டி நீ…

இறங்கு …

அவன் சொனதும் இறங்கி விட்டாள்..

என்னாச்சு பாவா..

நடக்கணும்ன்னு சொன்ன,நடக்கலாமா…

ஹை ஜோலி பாவா….loveyou

சிறிது தூரம் அவனின் கையை  கோர்த்துக்கொண்டு,அவனின் தோலில் சாய்ந்து கொண்டவளுக்கு மனதில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது…

அவளாக வீட்டிற்கு கிளம்பலாம் என்று கூறியதும் தான் அவன் அவளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்…இருவரும் வீட்டிற்கு சென்று தங்களை சுத்த படுத்தி கொண்டு படுத்ததும் அவள் உடனே உறங்கி விட்டாள்..

அவனுக்கு தான் அவளை பற்றி யோசனையாக இருந்தது….அவள் வீட்டில் எப்படி சொல்லவாள்  ,அவர்களை  எப்படி இவள் சமாளிப்பாள் என்று பெருத்த யோசனையாக இருந்தது…

ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாள்,அவளை விட்டு என்னால் இருக்கவே முடியாது! என்ன தான் செய்வது என்று யோசனையாக இருந்தவன்,அவர்களிடம் சொல்லவே வேண்டாம் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தவன் உறங்கியும் விட்டான் …

இந்த கல்யாணம் தங்களுக்கு நிம்மதி தரும் என்று தான் இருவரும் இவ்வளவு ஆர்வமாக இருந்தனர்…ஆனால் இந்த வாழ்க்கை தான் இருவரையும் மொத்தமாக வதைக்க போகின்றது என்று தெரியுமா என்ன?காலம் தான் இதற்க்கு பதில் கூற வேண்டும்…

காலமும் நேரமும் யாருக்கும் காத்து இருக்காமல் அவர்களின் கல்யாண தேதியை முடிவு செய்தனர்…

கல்யாணம் நெருங்குவதால் அவளை அலுவலகம் வர வேண்டாம் என்று கூறி விட்டான்…அலுவலகத்தில் இருந்து வந்தவன்,

அஞ்சு இங்க வா!! என்று அழைத்தான்..

சொல்லுங்க பாவா என்று அவன் அருகில் அமர்ந்தான்….அவளிடம் ஒரு மூன்று தேதியை காட்டி உனக்கு எந்த தேதி ஓகேன்னு சொல்லு..

எந்த தேதியாக இருந்தாலும் ஓகே தான் பாவா என்று கூறியவளை பார்த்தவனுக்கு,என்ன சொல்வதென்ரே தெரியவில்லை..

பெரியவர்களுக்கும் ஒரே சிரிப்பு..அவர்களே பேசி முடிக்கட்டும் என்று அவர்கள் சிரித்துக்கொண்டே உள்ளே சென்று விட்டனர்..

அடியே மக்கு பொண்டாட்டி!! என்றதும் அவளுக்கு சிறு கோபம் எட்டி பார்த்தது…

பாவா என்ன ஏன் மக்குன்னு சொல்றிங்க அப்படி என்ன எனக்கு தெரியாம போச்சுன்னு சொல்லுங்க..

பின்ன என்னடி உனக்கு எப்போ DATE டைம்ன்னு தெரிஞ்சா தான கல்யானம் DATE முடிவு பண்ண முடியும் என்று அவன் கூறியதும் தான் அவளுக்கு அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்….

SORRYY பாவா…

அவள் மூன்று தேதியில் முதல் தேதியே சரி என்று கூறிவிட்டாள்..அவனும் அதை தான் நினைத்து இருந்தான் அதை போலவே அவளும் அதையே சரி என்று கூறிவிட்டாள்…

இரவு உணவை முடித்துக்கொண்டு இருவரும் அறைக்கு சென்று ஆயத்தமாகும்போது அவன் குளித்துவிட்டு வரேன் என்று சென்று விட்டான்…

அவன் வந்ததும் தூங்கலாமா? என்றவளை பார்த்தான் அவள் கண்ணில் இருந்த வலியை அவனால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லையே ஆனால் என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை..

மறுபடியும் அவனுக்கு அதே யோசனை தான் ஒருவேளை அவர்கள் வீட்டில் ஒத்துகொள்ள வில்லை என்றாள் என்ன செய்வது என்று அவனுக்கு பயமாகவே இருந்தது…

அவர்களிடம் சொல்லவில்லை என்றாலும் பரவா இல்லை “அவளை மட்டும் என்னால் விட்டு குடுக்க முடியாது என்று அவனின் காதல் மனம் நினைத்தது..”

அஞ்சு…உனக்கு இது ஓகே தானா

ஓகே தான் பாவா…நீங்க கேட்கறது எனக்கு நல்லாவே புரியுது…என்னோட வீட்டில் ஒத்துக்க வாய்ப்பில்லை அதனால தான மறைக்கிறோம் விடுங்க பாத்துக்கலாம்…எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் ஆனாலும் பரவால்லை என்றவளை பார்த்தவனுக்கு புரிந்தது அவர்களை விட இவள் தன்னை அதிகமாக காதலிக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது…அவனுக்குமே இதில் சிறு வருத்தம் இருக்க தான் செய்தது…

ஒருவேளை இவர்கள் இருவரும் பேசி இருந்தால் வருங்காலத்தில் எந்த பிரச்சனயும் வராமல் இருந்துருக்குமோ என்னவோ??

காலையில் அலுவலத்திற்கு கிளம்பி வந்த பிரகாஷ் கிட்ட அஞ்சலியா கூட்டிட்டு போயிட்டு அவளுக்கு பிடிச்ச மாறி புடவை,நகை எல்லாம் வாங்கி குடுத்துரு என்ற பெரியவர்களுக்கு, சரி என்று பதில் அளித்தான்..

அஞ்சு கிளம்பு போயிட்டு வரலாம் என்றவனை அதிசயமாக  பார்த்தாள்..

அப்போ OFFICE..

அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைடா… நீ வா என்றதும், அவளும் கிளம்பி அவனோடு கடைக்கு சென்று புடவைகளை தேர்ந்தெடுக்கும்போது,திடீர் என்று அவளுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..

பாவா உங்க ஸ்டைல்ல கல்யானமா இல்ல எங்க ஸ்டைல் கல்யாணமா என்றதற்கு உனக்கு எப்படி பிடிக்குமோ எனக்கு அப்படி ஓகே டா..

அப்போ உங்க முறை படியே பண்ணிக்கலாம் என்றவளை அவன் காதலாக பார்த்தான்..மொத்ததில் இந்த கல்யாணமே அவனுக்காக தான் அவள் செய்து கொள்கிறாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும்..அனைத்தையும் எடுத்து கொண்டு காரின் அருகில் வந்து அவளிடம் கொடுத்துவிட்டு நீ வீட்டுக்கு பத்ரமா போயிருவ தான அஞ்சு என்றதற்கு அதெல்லாம் பத்ரமா போயிருவேன் என்றாள்..

அவளை பத்திரமாக  கிளப்பிவிட்டுட்டு, இவன் வேறு ஒரு காரில் வந்த இவனின் மேனேஜர் PICKUP செய்து கொண்டான் பிறகு அவன் அவளை மறந்து சென்று விட்டான்…

காரில் செல்லும்போது அவளுக்கு யோசனையாகவே இருந்தது…தான் செய்வது சரியா தவறா என்று அவளால் அலசி ஆராய  முடியவில்லை…

அவன் செய்த மிக பெரிய தவறு அவளை தனியாக அடிக்கடி விட்டு சென்றது தான்…

நாளை கல்யாணம் என்றாள் இன்று கூட பிஸி ஆக இருக்கும் கணவனை நினைத்து அவளுக்கும் அவன் மேல் சிறு கோபம் வந்தது தான்…அதை இப்பவே பேசி இருந்தாள் ஒரு வேலை சரியாக இருந்திருக்கும்…இவள் மொத்தமாக பேசும்போது அவன் நிலைமை தான் என்னவாகுமோ

இரவு அவன் வந்ததும்,பாவா வாங்க சாப்பிடலாம் என்று அவனை அழைத்தாள்..அவன் அவள் பின்னே சென்று,கிட்செனில் அமர்ந்து சாப்பிட்டான்…

தோசை சுடும் அவளையே பார்த்தான்..

என்ன பாவா  பார்வைலாம் ஒரு மார்கமா  இருக்கு…

இன்னைக்கு எங்க முறைப்படி மஞ்சள் பூசி ஒரு நிகழ்ச்சி  இருக்கும் அது அவ்வளவு நன்றாக இருக்கும் அஞ்சு…உனக்கு அதை பண்ண முடியலைன்னு வருத்தமாக இருக்கு என்றான்

அதுல எனக்கு பெருசா விருப்பம் இல்லை பாவா  ஆனால் எனக்கு ஒரு ஆசை இருக்கு என்றவளை,

உனக்கு என்ன வேணுமோ சொல்லு அஞ்சு செஞ்சிறாலம் என்றவனை காதலாக பார்த்தாள்…

எனக்கு மருதாணி வெச்சி விடுங்க அது போதும் என்றவளை,

அவ்வளவு தானா இந்த சின்ன மூளை யோசிக்குது என்றான்..

“சின்ன சின்ன விஷயத்துல எவ்வளவு காதல் இருக்குன்னு உங்களுக்கு தெரியாது பாவா…”..பிடிச்சவங்களுக்காக சிறு நேரம் ஒத்துக்கினால் கூட அது அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று அவள் கூறியதை அவன் கவனிக்க மறந்தான்

இந்த வர்ரத்தையின் அர்த்தம் அவனுக்கு புரியும்போது அவள் அவனோடு இருக்க மாட்டாள்..அவள் இல்லாதபோது அவனுக்கு புரிவதில் யாருக்கு நன்மை இருக்க போகிறது..

அவ்வளவு தான அஞ்சு வா வெச்சி விடுறேன் என்று ரூமிற்கு அழைத்து சென்றான்….

அவளை அமர வைத்து,அவள் சொன்னது போல் ஒவ்வொரு விரலாக வைத்து விட்டான்…அவளின் முதத்தில் விழுந்த கற்றை முடிகளை ஒதுக்கி விட்டவனின் பார்வை அவளை மேலிருந்து கீழாக பார்த்தது…காதலனின் பார்வை இப்போது கணவனின் பார்வையாக மாறியது..

கல்யாண கலை வந்துருச்சுன்னு சொல்லுவங்களா அது உனக்கு வந்திருச்ச்சி அஞ்சு…உன்ன இப்படி பார்க்க அவ்வளவு அழகாக இருக்கு…என்னோட மனசு முழுவதும் நிறைஞ்ச மாறி இருக்கு…

அப்படியா என்றவள் எதிரில் தெரிந்த கண்ணாடியை பார்த்தாள் எப்போதும் போல் புடவை கட்டி,பாட்டி அவளுக்கு வழக்கத்தை விட பூவை நிறைய அவள் தலையில் வைத்து விட்டு,பிரகாஷின் தாயின் நகைகளை எல்லாம் போட்டு விட்டு அவளுக்கு அழகு பார்த்தார்..முகத்திலும் காலிலும் அவரே மஞ்சள் எல்லாம் பூசி அவளை பார்க்கும்போது அவனின் தாயை பார்த்தது போல் இருந்தது என்று இன்று முழுக்க அழுது விட்டார்…இவளால் அவர்களை சமாதனம் செய்ய முடியாமல் போயிற்று…அவர்களின் பாசம் எப்போதும் போலவே அவளை பிரமிக்க வைத்தது..

பாட்டி உடனே அஞ்சு நீ எங்கயும் வெளியலாம் போக கூடாது சரியா!!வெளிய போனா உன்ன  கண்ணு வெச்சிருவாங்க என்று ஒரு திருஷ்டி பொட்டையும் அவளின் கன்னத்தில் வைத்து விட்டார்…

கண்ணாடியில் பார்த்து கொண்ட அவளுக்கே தான் ரொம்ப அழகா இருக்கிறோம் என்று தான் தோண்டியது அதையே இவளின் கனவனும் கூறும்போதும் அவளுக்கு வெட்கம் தான் வந்தது..

அவனும் பாட்டியை போல் அவளின் கண் மையா எடுத்து அவளின் கழுத்தில் திருஷ்ட்டி போட்டு வைத்து விட்டான்…மறுபடியும் அவளுக்கு வெட்கம் தான் வந்தது

ஹே அஞ்சு புதுசா இது என்ன வெட்கம் லாம் என்றதற்கு,

போங்க பாவா என்று சிணுங்கினாள்…

நீ இந்த மாறி வெட்க்க படுற மாறி இருந்தா உன்னை தினமும் கல்யாணம் பண்ணிக்கலாம் போலயே,

மஞ்சளாக இருந்த அவள்  முகம் சிறிது நேரத்தில் செவ்வானமாக சிவந்து விட்டது…அதை அவன் போனில் வீடியோ எடுத்து கொள்ள தவற வில்லை…இருவருமே இந்த அழகிய தருணத்தில் பல புகைப்படங்களை எடுத்து கொண்டனர்…

சிறிது நேரத்தில் இருவருமே ஒரு மோன நிலையில் தான் இருந்தனர்..அவன் அவளையே காதல் மயக்கத்தில் பார்த்துகொண்டு இருந்தான்..

“முதல் நாள் பார்த்த வனப்பு

துளி குறையவும்  இல்லை உனக்கு

உறக்கம் விழிப்பில் கனவா

உனை காண்பதே வழக்கம் எனக்கு

அருகினிலே வருகையிலே துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்

முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று

நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே”