அத்தியாயம் 25:

காலையில் அவனுக்கு முன்பே எழுந்து விட்டாள்…உறங்கும் அவனையே பார்த்தவள் பின்பு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்…அவள் வெளியில் வந்து பார்க்கும்போது அவன் அங்கு இல்லை…

கீழே சென்று தன் வேலைகளை எப்போதும் போல் பார்த்தாள்…இந்த மாறி வாழ்க்கை தான் அவள் எதிர்பாரத்தது கணவன் ,குழந்தை இதை தாண்டி ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று தான் அவளுக்கு தோன்றும்..

ஆனால் இதை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் நிறைய இருக்கிறது என்று இந்த பேதை பெண்ணிற்கு புரியும்போது அவள் நிலைமை தான் என்னவாகுமோ ??பூ போல் இருக்கும் தன்னுடைய வாழ்க்கையை இவளே இனி சிக்கலாகி கொள்ள போகிறாள் என்று அவளுக்கு தெரியுமா என்ன ?

அவன் மேலே சென்று அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வரும்போது அவளும் ரெடி ஆகி இருந்தாள்….

என்ன அஞ்சு ரெடி ஆகி இருக்க எங்கயாவது வெளிய போகனுமா என்றவனுக்கு,

சாப்பாடு பரிமாறி கொண்டே,நானும் உங்களோடு office வரேன் என்றவளை அவன்  ஆச்சர்யமாக பார்த்தான்..

அஞ்சு என்னோட முகத்தை பார்த்து சொல்லு பாப்போம்..

நிஜமா தான் பாவா நானும் உங்களோடு வரேன்…எனக்கு வீட்டுலையே சும்மாவே இருக்க பிடிக்காது நானும் உங்க கூட வந்து என்னோட FIELD RELATED ஆக எதாவது கத்துகிறேன் என்றவளை அவன் மெச்சுதளாக பார்த்தான்..

அவனை பொறுத்தவரை பெண்கள் நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும்…வெளியே வேலைக்கு சென்று உலகத்தை எதிர்த்து போராட வேண்டும் அதை விட்டுட்டு ரூமில் அடங்கி கிடந்தால் பிடிக்காது..

சரி என்றவன் அவளை அப்போது தான் பார்த்தான்…எப்பவும் போல இன்றும் அவள் அழகாக தான் இருந்தாள் ஆனால் புடவையில் இருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

Madam SAREE லயே இப்படியா வருவிங்க என்று நமட்டு சிரிப்பு சிரித்தான்..

ஹிஹிஹிஹி என்றவள் ஐந்து நிமிடம் வந்து விடுகிறேன் என்று கூறியவள் சொன்னது போல் சீக்கிரம் கிளம்பி ஊதா நிற குர்தியில் இறங்கி வந்தாள்…

அவனுக்கு அதற்க்கும் சிரிப்பு தான் வந்து அவன் போட்டிருந்த சட்டையின் கலரில் தான் அவளும் குர்தி போட்டிருந்தாள்..

அஞ்சு இனி நம்ம COUPLES டிரஸ் மாறி டெய்லி போட்டுட்டு போலாம் என்றான்..

அவள் அவனிடம் அசடு வழிந்தாள்…

இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி காரில் செல்லும்போது,

அஞ்சு உன்னை அலுவலத்தில் என்னோடைய மாமா பொண்ணுன்னு தான் சொல்ல போறேன் சரியா…

சரிங்க சார் என்றவளை மெச்சுதலாக  பார்த்தான்..அவனை பற்றி அவளுக்கு தான் ஏற்கனவே தெரியுமே…சொந்தம் பந்தம் எதுவும் அலவலகத்தில் கிடையாது..எதுவாக இருந்தாலும் அது அது, அந்த அந்த இடத்தை பொருத்தது தான்….அதை அவன் சொல்லும் முன்பு அவள் அழகாக புரிந்து கொண்டாள்…

இருவரும் ஒன்றாக இறங்கி அலுவலத்தில் இறங்கி வருவதை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே வியப்பு…நம்ம OWNER சிடுமூஞ்சி கூட ஒரு பொண்ணா என்று அனைவரும் அவர்களை ஆச்சர்யமாக பார்த்தனர்…

அவனே அனைவருக்கும் இவளை அறிமுகம் செய்து வைத்தான் பின்பு மேனேஜரிடம் அவளை அழைத்து சென்று,சைட் ஒர்க் ,INTERIOUR DESINGNING லாம் எப்படி பண்றதுன்னு சொல்லி குடுங்க என்றவன்..

 இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இவ என்னோட மாமா பொண்ணு இவகிட்ட அதிகம் யாரும் ADVANTAGES எடுத்துகாம பாத்துகோங்க..  கூடிய சீக்கிரம் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு சோ ரொம்ப safe ஆக பாத்துகோங்க சரியா என்று அவன் கேட்டதும்  மேனேஜர் மண்டையை மட்டும் சரி சரி என்று ஆட்டிவைத்தான்…இவங்களை சித்தார்த் அங்கிள் கிட்ட கூட்டி போய் வேலைய கத்து குடுங்க என்றதும் சரிங்க சார் என்றான்..

அதன் பின்பு அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை அவள் அதை எல்லாம் அவனிடம் எதிர்பார்க்கவும் இல்லை…

பின்பு அங்கு சென்று அவளின் தந்தை வயதுடைய(சித்தார்த் ) அவரிடம் DESINGING லாம் எப்படி செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக கத்து கொண்டாள் அவர் அவளை பெருமையாக பார்த்தார்… இவ்வளவு சிறு வயதில் இந்த அளவுக்கு புரிதலோடும் ,மரியாதையோடும்  இருக்கும் இந்த பெண்ணை அவருக்கு பிடித்து போனது…அவளை தன் மகளாக எண்ணி அனைத்தையும் பொறுமையாக சொல்லி கொடுத்தார்…

மதியம் வரை அதை கற்று கொண்டு இருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை..

அவனின் MANAGER கிட்ட அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க என்று கூறியவன் அதன் பின்பும் அவளை கண்டு கொள்ள வில்லை அவன் வேலை அவனை அப்படி இழுத்துகொண்டது…

அவளிடம் வந்த மேனேஜர் madam நீங்க சாப்டுட்டு வேலை பாருங்க என்றதும்,

அவரு சாப்பிட்டாறா என்று கேட்டாள்…

சார் இம்போர்டன்ட் மீட்டிங்ல இருக்காங்க mam …இப்போ போய்ட்டு எதாவது கேட்டால் கண்டிப்பாக ரொம்ப திட்டுவாறு madam..அவர் பயந்தவாறு சொன்னதும் அவள் சரி நான் பார்த்துகிறேன் என்று சொல்லி விட்டு,

 தனியாக சாப்பிட பிடிக்காமல்,அனைத்து ஊழியர்களோடும் சென்று,நானும் உங்க கூட சாப்பிடலாமா?என்று கேட்டவளை அனைவருக்கும் நிரம்ப பிடித்து போனது…

அவள் எவ்வளவு பெரிய ஆள் ஆனால் தன்னோடு சாப்பிட வரட்டுமா என்றவளை கண்டிப்பாக வாங்க madam என்றனர்..

அஞ்சுவை பொறுத்தவரை அவள் இருக்கும் இடம் சந்தோசமாக இருக்க வேண்டும்..அவளிடம் இருக்கும் எளிமையான தோற்றம் அனைவரையுமே இழுத்து விடும்..அது போல் தான் இன்றும் அவளை அனைவருக்குமே பிடித்து விட்டது..

அஞ்சலி வீட்டுலயும் சார் இப்படி தான் இருப்பாறா என்றவங்களுக்கு,இது அலுவலகம் அதனால் தான் அவர் இப்படி இருக்கிறார் ஆனால் வீட்டில் அவர் வேறு மாறி ரொம்ப பாசமாக இருப்பார்…அவரை பொருத்த வரை தொழில் வேறு,சொந்த வாழ்க்கை வேறு அவ்வளவு தான்..

அவள் சொன்ன பதிலில் அனைவருக்குமே நிம்மதியாக இருந்தது…நாம் நினைத்தது போல் அவரில்லை..

அனைவரிடமும் சகஜமாக அதும் சிரித்த முகமோடு இருக்கும் அவளை அனைவருக்குமே பிடித்து இருந்தது…

இவள் சாப்பிட்டு முடித்ததும் அவர்  cabin க்கு வரலாமா  என்று உங்கள் சார் கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க மேனேஜர் என்றதும் அவன் கேட்டுவிட்டு,அவர் உங்களை வர சொன்னார் என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்..

excuse me சார் என்று கேட்டுவிட்டே அவள் சென்றாள்..

அவளை பார்த்ததும் என்ன அஞ்சு எதாவது வேண்டுமா என்று ஏதோ கோப்புகளை பார்த்து கொண்டே இவளிடம் பேசினான்..

ஆமா சார் வேண்டும் தான் ஆனால் எப்படி கேட்பது  என்று தெரியவில்லை என்றாள்..

அவனுக்கோ சிறு பதட்டம் வந்தது உடனே எழுந்து அவள் அருகில் வந்து என்ன ஆச்சு அஞ்சு,உடம்பு எதும் சரி இல்லையா என்று அவள் கழுத்தில் கை  வைத்து பார்த்தான்…

அவளோ அவனை “என்ன” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்..

நீங்கள் சாப்டிங்களான்னு தெரில அதான் பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன் என்றாள்…

அப்போது தான் அவனுக்குமே தான் சாப்பிடாதது நியாபகம் வந்தது…

ஆமா அஞ்சு மறந்துட்டேன்..!!

அவள் அவன் கையில் சாப்பாடு இருக்கும் ஒரு பொட்டலத்தை கொடுத்தாள்..

நீங்க சாப்டுங்க நான் கிளம்பறேன் என்று கிளம்பியவளை கையை பிடித்து தடுத்து  நிறுத்தியவன்,அவளை அருகில் அமர வைத்து தான் சாப்பிடும்போது அவளுக்கும் ஊட்டிவிட்டான்..

எனக்கு போதும் நீங்க சாப்டுங்க என்று அவள் வெளியேறும்போது,தேங்க்ஸ் அஞ்சு என்றான்..

அவங்க கேட்ட கேள்விக்கு நீ என்னை புரிந்து கொண்டு சரியாக பதில் கூறியதற்கு…

கதவை லாக் செய்து விட்டு அவள் மறுபடியும் உள்ளே வரும்போது அவனுக்கு சற்று பயமாக இருந்தது.. எடக்கு மடக்கா எதாவது கேட்பாளோ என்று தான் அவனுக்கு தோன்றியது அது போல் தான் அவளும் கேட்டாள்…

அவனின் அருகில் சென்று,இதற்க்கு கை மாறாக நீங்கள் எனக்கு ஒன்னு செய்ய வேண்டும் செய்விங்களா என்றதற்கு,

நீ என்னோட உயிரை கேட்டாலும் குடுப்பேன் என்றான்…

அவனின் வாயில் கை வைத்தவள், என் உயிர் போகும்போது தான் அதை கூட உங்களிடம் கேட்ப்பேன் இப்போ நான் கேட்க்க மாட்டேன் என்றவளை பார்த்து கொண்டே இருந்தவன்…

சரிடா உனக்கு என்ன வேணுமோ அதை நீ கேளு நான் கண்டிப்பா குடுக்குறேன் என்றான்..

அதில் தைரியம் வர பெற்றவளாக, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் பாவா என்றாள்..இப்போ உங்க கூட வர மாறி அப்பவும் உங்க கூட அலுவலகத்திற்கு வரேன்…

madam க்கு இப்பவே பதில் வேண்டுமா இல்லை வீட்டிற்கு போன பின்பு பதில் வேண்டுமா என்றவனுக்கு,

எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் நல்ல முடிவாக சொன்னாள் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்..

சரி நான் கிளம்பறேன் என்றவளை தடுத்தவன்…சைட் வொர்க் போலாம் அஞ்சு நானே கூட்டிட்டு  போறேன் நீ போயிட்டு வெயிட் பண்ணு நான் வரேன்..

ம் ம் ம் என்ற பதிலோடு அவள் கிளம்பி விட்டாள்..

அவள் சென்றதும் அவன் ஒரே யோசனையாகவே இருந்தாள்…சாப்பிட்டு விட்டு யோசனையயை கைவிட்டவன் cabin விட்டு வெளியே வந்தவன்,அவளை அழைத்துக்கொண்டு சைட் வொர்க் கு கூட்டி போயிட்டு அனைத்தையும் சொல்லி கொடுத்தான்…

அஞ்சு இதெல்லாம் நீ சீக்கிரம் கத்துகிட்டா,நான் மீதி இருக்க வேலையா லாம் நான் பார்பேன்…

கண்டிப்பா சீக்கிரம் கத்துகிறேன் என்றாள்..

அந்த பாக்டரி ல நீ சொன்ன ஐடியா வெச்சி தான் பிரிக் manufactured பண்ணிட்டு இருக்காங்க அஞ்சு என்று அவன் கூறியதும் அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை thank you பாவா என்றாள்…

நான் அங்க போயிட்டு பார்க்கலாமா என்றதற்கு அவன் முறைத்தான்..

ஹே வாயடி இது உன்னோட office நீ தான் பார்க்கணும்..நீ சொல்றத நான் கேட்கணும் அவ்வளவு தான் புரிஞ்சுதா!! என்றதற்கு அவள் அவனை காதலாக பார்த்தாள்..

madam உங்க romance லாம் வீட்டுல காட்டுங்க இப்போ அங்க போலாமா என்றதற்கு,

போலாம் பாவா என்றாள்…

அந்த factory க்கு அவளை அறிமுக படுத்திவிட்டு,இந்த factory வொர்க் இனி இவங்க controlல நடக்கும் என்று கூறிவிட்டு அவளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவளிடம் சொல்லிவிட்டு எனக்கு ரொம்ப இம்போர்டன்ட் CLIENT மீட்டிங் இருக்கு அஞ்சு நீ எல்லாத்தையும் பொறுப்பாக பார்த்துக்கோ,உனக்கு ஹெல்ப் பண்ண சித்தார்த் அங்கிள் அனுப்பி வைக்கிறேன் என்றான்..

சரி பாவா…

அவன் சென்றதும் அவளுக்கு ஹெல்ப் பண்ண வந்த அங்கிள் கிட்ட எந்த மாதிரியான பிரிக் லாம் manufactured பண்றாங்கன்னு அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டாள்..அவன் சொன்னது போலவே பொறுப்பாக அவளது கம்பனி போல் பார்த்து பார்த்து அதன் நுணுக்கங்களை எல்லாம் கற்று கொண்டாள்…

அவன் அதிகாரத்தோடு அனைத்தையும் கூறுவான் இவளோ அன்போடு அனைவரிடமும் வேலையை  வாங்கினாள்…அங்கு இருந்த அனைவருக்கும் சின்ன முதலாளி அம்மாவை அனைவருக்கும் நிரம்ப பிடித்து விட்டது…அனைவரிடமும் சமமாக பழகுவது அவர்களோடு சாப்பிடுவதையும் கண்ட அவர்களுக்கு அவள் மேல் அளவுக்கு அதிகமான பிரியம் வந்தது…

அவர்களிடம் பேசிக்கொண்டு வேலை பார்த்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை அவ்வளவு நன்றாக சென்றது..வேலை நேரம் முடிந்ததும் அனைவரும் சென்றனர்..இவள் அவனை தேடி office க்கு சென்றாள்…அப்போது நேரம் ஏழு யை கடந்தது…

உள்ளே போலாமா என்று மேனேஜர் கிட்ட கேட்டுவிட்டு உள்ளே சென்றதும், அவன் தலை வலியில் தலையை  பிடித்துகொண்டு அமர்ந்திருந்தான்..அவனின் அருகில் சென்று அவன் கையை எடுத்துவிட்டு இவள் அவன் நெற்றியில் மெதுவாக பிடித்து விட்டாள்..அவன் நெற்றியின் மேல் சிறு பிஞ்சு கரங்கள் பட்டதும் அவனுக்கு உடலில் அப்படி ஒரு சிலிர்ப்பு வந்தது…அவள் பிடித்து விட அவன் தலை வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது…

அவள் கையை எடுத்து அவள் நின்ற வாக்கிலே பிடித்து அதற்க்கு முத்தத்தை குடுத்தான்…அவள் அவன் தலை மீது அவளின் முகத்தை பதித்தாள்…

அம்முலு என்று அவன் அழைத்ததும்.,

கேட்குது சொல்லுங்க என்றாள்..

என்னை பிடிச்சிருக்கா என்றான்..

அவள் உடனே அவனின் கையிடம் இருந்து தன் கையை விலக்கி விட்டு சென்றாள்..அவனுக்கு அவளின் செயலில் கொஞ்சம் பயம் வந்து விட்டது..

அவள் உடனே சென்று DOOR லாக் செய்து விட்டு வந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது..என்னோட PERSMISSION இல்லாம யாரும் உள்ள வர மாட்டாங்க அஞ்சு…

அப்படியா  என்று கூறியவள் அவன் முன் போய் நின்று ஏதோ யோசிப்பது போல் யோசனை செய்தவளை இழுத்து தன் மடியின் மேல் அமரவைத்து,இந்த சின்ன மூளை அப்படி என்ன தான் யோசிக்குது என்றான்..

அது வந்து பாவா…

பிடிச்சிருக்கான்னு கேட்டிங்களா அதுக்கு என்ன  பதில் சொல்லலாம்ன்னு யோசிக்கிறேன் என்றவளை இப்போது அவன் முறைத்தான்..

ஓகே ஓகே என்றவள்….ஏன்னோட செல்ல பாவா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..

அப்போ உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம் தான அஞ்சு என்று கூலாக கேட்டவனுக்கு இவள்,

முழு சம்மதம் தான் என்று எப்போதும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதை போல் பதில் கூறினாள்…

திடீர்ன்னு நியாபகம் வந்தவளாக,

பாவா COME AGAIN என்று விழி விரித்தாள்….