அவளை பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான்..அவனால் கண்களை அவளை விட்டு சிறிது கூட அகற்ற முடியவில்லை..
பாவா எப்படி இருக்கேன் நான்…
“இருந்தாலும் நீ இவ்வளவு அழகா இருக்கவே கூடாது அம்முலு…”
கொல்றடி மனுஷன…
இன்னைக்கு எதாவது தப்பு நடந்தா நான் பொறுப்பே இல்லை..
அவன் அவளை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்து கொண்டே இருந்ததும்,அவளிற்கே வெட்கம் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..
அவளின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி,அவளை சற்று தள்ளி நிறுத்தியவன்,அவள் கட்டிருந்த புடவை காலையில் தான் வாங்கி கொடுத்தான்..
வாடாமல்லி நிற தங்க சரிகை வைத்த புடவை ,அதற்க்கு ஏற்றார் போல் சிறு கை வைத்து தைத்த blouse,அதற்க்கு ஏற்றார் போல் குடை மாறி இருந்த ஜிமிக்கி,கழுத்தில் ஒரு ஆரம், சிறு மெல்லிய செயின் ,எப்போதும் ஒளிர் விடும் தீபம் போல் மின்னும் மூக்குத்தி,தலை முடியை தளர பின்னி அதில் அவளின் முடியின் நீளத்திற்கு மல்லிகை பூ வைத்திருந்தாள் …கை நிறைய கண்ணாடி வளையல் அணிந்து இருந்தாள்.. உதட்டு சாயமே போடாமல் உதடு சிவந்து இருந்தது…அவளின் உடலில் ஓடும் அனைத்து ரத்தமும் முகத்தில் பாய்ந்தார் போன்று முகம் சிவந்து இருந்தது…எப்பவுமே புடவையை SINGLE ப்ளீட்ஸ் விட்டு கட்டிருப்பாள் இன்று மொத்தமாக அனைத்தையும் பின் பண்ணிருந்தாள் அதில் அவளின் மெல்லிய வெண்ணிற இடுப்பு நன்றாக தெரிந்தது..காலில் எப்போதும் போல் வெள்ளி கொலுசு போட்டிருந்தாள்,விரலில் புடவை நிறத்திற்கு ஏற்றார் போல் NAILPOLISH போட்டிருந்தாள்… உண்மையிலே அவளை பார்பதற்கு கல்யாண பெண் போல் அவ்வளவு கலையாக தான் இருந்தாள்…கையில் எப்பவோ வைத்த மருதாணி..மொத்தத்தில் அவள் பேரழகி தான்..குணத்திலும் அவள் பேரழகி தான்..
பாவா என்றவளுக்கு பேச்சே வர வில்லை..அவன் அவளின் அழகில் சுத்தமாக பேச்சிழந்து போனான்…
அஞ்சு இது ஒரு CRIME…
நீ என்ன ரொம்ப தான் படுத்துற போ என்றவன் சந்தோசத்தில் சத்தமாக விசிலடித்தான்…
பின்பு அவளின் அருகில் வந்தவன்..அவள் நெற்றியில் முத்தமிட்டு, கன்னத்தில் முத்தமிட்டான்,அவனை எப்பதுமே ஆசையாக பார்க்கும் கண்களுக்கு முத்தமிட்டான்,அவனை எப்பவுமே மயக்கத்தில் வைத்திருக்கும் மூக்குத்தியின் மேல் முத்தமிட்டு,அவளின் இதழின் அருகில் சென்றவன் மென்மையாக முத்தமிட்டு அது கொஞ்ச நேரத்தில் வன்மையாக மாறியது…அப்போதும் அவனால் விலக முடியவில்லை அவள் மூச்சு காற்றுக்குஏங்கும் போது தான் அவளை விட்டு விலகி அவளின் முகத்தை பார்த்தான்… அவளின் முகம் இன்னும் சிவந்து,அவன் முகத்தை பார்க்காமல் அவன் நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டாள்..
பெட்டில் அமர்ந்தவன் அவளை மடியில் அமரவைத்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்…அவளின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பினால் அவன் தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருந்தான்…ஒரு எல்லையை கடக்கும்போது அவன் சுதாரித்துவிட்டான்…அவளை விலகி எழுந்து சென்று முகத்தை கழுவி கொண்டு வந்தான்..அவள் அவனை தாபமாக பார்த்தாள்,அவனும் அதே நிலையில் தான் இருந்தான்,,இருவருமே உணர்ச்சின் பிடியில் இருந்து மீள முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தனர்..
அவன் அப்படி விலகி சென்றதும் அவளுக்கு தான் என்னவோ போல் இருந்தது..கண்ணில் நீர் வழிந்தது ..
“அஞ்சு ப்ளீஸ் டி அழாதடி” என்றவன் அவளின் அருகில் அமர்ந்து,நான் சொல்றத கேளு இதுக்கு மேல என்னால உன்கூட கொஞ்ச நேரம் இருந்தா கூட என்னோட எல்லைய தாண்டிருவேன்ன்னு பயமா இருக்கு…உன்ன கல்யாணம் பண்ணாம இப்படி ஒரு தப்ப செஞ்சா என்னோட மனசு கடைசி வரை கஷ்டப்படும்….நீ என்னோடே தேவதை உன்ன முறையாக கல்யணம் பண்ணி இந்த தப்ப சரியாக பண்ணனும்ன்னு நெனைக்கிறேன் புரியுதா என்றதும் தான் அவளுக்கு புரிந்தது…
நீ முதலில் போய் இதெல்லாம் மாத்திட்டு வேற டிரஸ் போட்டுட்டு வா உன்ன இப்படியே பார்த்துட்டு இருந்த என்னால எல்லா நேரமும் நல்லவனா இருக்க முடியாது அஞ்சு….
சரி என்று தலையை அசைத்தாள்..அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்..
என்னடா என்றான்..
டிரஸ் மாத்தணும்..
சரி மாத்து..
ம்ம்ம் என்று இடுப்பில் கை வைத்து முறைத்தவளை,
நான் வெளிய போய் தான் ஆகணுமா அஞ்சு,என்று அவளின் புடவையை திருகி கொண்டே கேட்டான்…
எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை பாவா..இப்படியே கூட என்னால தூங்க முடியும் தூங்கலாமா??
எனக்கும் ரொம்ப ஆசையா தான் இருக்கு அம்லு..ஆனாலும் என்றவன் தன்னுடைய மூச்சு காற்று அவள் மேல் படும் அளவுக்கு நெருங்கி நின்றவன்,சுத்தமா என்னால முடியல அம்முலு மூச்சு முட்டுதுடி…உன்னை இப்படியே வெச்சு அழகு பார்க்கணும்ன்னு ஆசையாகவும் இருக்கு, உன் மேல இருக்க என்னோட காதலை காட்டினால் இன்னைக்கு ஒரு night இல்லை அவ்வளவு night வேணும் அஞ்சு..
உன்னோட ஏக்கத்தை விட என்னோட ஏக்கம் ஒரு முத்தத்தில் அடங்காது அஞ்சு என்று கூறியவனின் கண்ணில் அவ்வளவு காதல் ஏக்கம், தாபம் அனைத்தும் அவ்வளவு தெரிந்தது..
எனக்கு புரியுது அஞ்சு உன்னோட நிலைமை எனக்காக தான் நீ இதெல்லாம் பண்றன்னு, ஆனாலும் உன்னோட நல்லத நானும் யோசிக்கணும் டி..என்னை ரொம்ப காக்க வைக்காமல் ஒரு நல்ல முடிவ சீக்கிரம் சொல்றியா என்றதும் சரி என்று தலையை ஆட்டினாள்…
நீ சீக்கிரம் சொன்ன கண்டிப்பா, நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்..
எனக்காக இவ்வளவு பண்ணும்ன்நு நினைக்கிறதுக்கு என்ன அஞ்சு காரணம்…என்னை உனக்கு அவளோ பிடிக்குமா??
“அதற்க்கு அவள் அவனின் கன்னத்தை கையில் ஏந்தி உங்களை விட வேற யாரையும் இவ்வளவு பிடித்தது இல்லை பாவா”
என்னோட ஒவ்வொரு சின்ன விஷயத்துலயும் அவ்வளவு யோசிக்கிறிங்க,என்னை குழந்தை மாறி பாத்துகிரிங்க இதெல்லாம் விட உங்ககிட்ட நான் ரொம்ப பாதுகாப்பாக இருப்பது போல் உணர்கிறேன் இதை விட ஒரு பொண்ணுக்கு என்ன வேண்டும்ன்னு சொல்லுங்க ..
அதெல்லாம் நெறைய இருக்குடா…நீ கஷ்டப்பட்டு உழைத்து உன்னோட காசுல என்னை நீ பாத்துக்கணும் அது தான் இதை எல்லாத்தையும் விட முக்கியமானது புரிஞ்சுதா..
ம் ம் ம் …நல்லா புரிஞ்சுது…
அஞ்சு நான் ஒன்னு கேட்கணும்..
சொல்லுங்க பாவா..
இன்னைக்கு மால்ல ஒரு பொண்ண என்னை வந்து கட்டிபிடிச்சதும்,நீ எதுக்கு என்னோட கைய விட்டன்னு சொல்லு..
ஐயோ பாவா உங்க மேல நம்பிக்கை இல்லாமலாம் விடல…எனக்கு அவ மேல அப்படி ஒரு கோவம் அவளை அடிக்கிற அளவுக்கு கோவம் வந்துரிச்சி அப்பறம் நீங்க தான் என்னோட கல்லோரியில படிச்சவங்கன்னு சொன்னதும் தான் போனா போகுதுன்னு விட்டேன் அதனால தான் அங்க இருந்து வந்துட்டேன்…
என்னோட புருஷன இன்னொருத்தி வந்து கட்டி பிடிச்ச எனக்கு கோவம் வராதா??அவளுக்கு என்னை பத்தி தெரியல ..அவகிட்ட சொல்லி வைங்க எங்க gang பத்தி அவளுக்கு தெரியாது ..அடுத்த வாட்டியும் அவ அப்படி பண்ணின என்னோட கை தான் பேசும் …
அவள் பேசும் கோவ வார்த்தை கேட்ட பிரகாஷ்க்கு இவ புடவை கட்டின பிரகாஷ் போலே என்று தான் தோன்றியது..தன்னை போலவே அடித்துவிட்டு தான் பேசுவேன் என்கிறாள்…
நீங்க படிச்ச கல்லூரியில் உங்கள் நட்பு எப்படியோ அதெல்லாம் எனக்கு தெரிய வேண்டாம் ஆனால் இப்போ நான் உங்க WIFE நான் சொல்றத தான் நீங்க கேட்கணும் சரியா..
உத்தரவு மகாராணி..
அப்போ நீ என்னை சந்தேகம்லாம் படலையா??
உங்களையா என்றவள் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்டது போல் சிரித்தாள்…நான் இங்க வந்த நாள்ல இருந்து நான் எத்தனை வாட்டி சிக்னல் குடுத்து கூட நீங்க எங்கிட்ட வரல ஏதோ புத்தர் மாறி அட்வைஸ் பண்றிங்க…உங்களையும் அவளையும் நான் சந்தேகம் வேற படனுமா என்று அவள் சிரித்தாள்.
பாவா இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா??
என்னடி..அவள் ஏதோ எடக்குமடக்காக சொல்ல போகிறாள் என்று அவனுக்கு புரிந்தது
நீங்க சரியான மக்கு பாவா என்று சிரித்தவளை பார்த்தவனுக்கும் அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு தான் வந்தது..
பிரகாஷ் குமார் பெரிய பிசினஸ் MAGNET என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு அவன் பெரிய பதவியை உடையவன்…பல அரசியல் வாதிகளுக்கு இவனிடமிருந்து தான் பணம் செல்கின்றது…யாராக இருந்தாலும் தன் ஒற்றை பார்வையிலே தள்ளி வைப்பவன்…தன்னிடம் வாலை ஆட்டிய பல GOVERNMENT அதிகாரிகளை இடம் மாற்றியவன்…அவனின் மூச்சே பிசினஸ் தான்…இந்த பிசினஸ் தான் வருங்காலத்தில் இவர்களிடம் ப்ரச்சனேயே வர போகிறது என்று தெரியுமா என்ன??ஒருவேளை தெரிந்திருந்தால் அவளை தன்னிடம் தக்க வைத்திருப்பானோ என்னவோ..
இப்படி கம்பீரமாக இருந்த பிரகாஷ்யை இவள் ஒரு காமெடி பீசாக மாற்றியது காதலில் மட்டுமே சாத்தியம்..
அடிவாங்க போற நீ என்றவன் அவளின் தலையில் ஒரு செல்ல கொட்டுகளை வைத்தான்…
பாவா என்றவள்
சொல்லு மா
தூக்கம் வருது …
அதனால என்னடி நானா இப்போ உனக்கு டிரஸ் மாத்தி விடனும்ன்னு கேட்கிறியா என்று நமட்டு சிரிப்பு சிரித்தான்..எனக்கு ஓகே தான் அஞ்சு என்று சும்மா தான் சொல்லி பார்த்தான்..
எனக்கும் ஓகே தான் பாவா என்றவள், அவனை நோக்கி தன இரு கைகளையும் நீட்டினாள்..
உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா சொல்லு..உங்கிட்ட மட்டும் நான் எப்பவுமே SURRENDR என்று இரு கைகளையும் உயர்த்தினான்…
அப்போ வெளிய போங்க என்றதும் சென்று விட்டான்…
அஞ்சு வரலாமா என்று கதவை தட்டியவன்,
கதவு திறந்து தான் இருந்தது…அதிலே அவனுக்கு மனம் நிறைந்தது தன் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் திறந்தே வைத்திருக்கிறாள் என்று அதை நினைத்தவனுக்கு கண்கள் கலங்கியது…அவள் என்னவள் என்ற கர்வமும் வந்தது..
உள்ளே சென்று பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு…டிரஸ் எல்லாம் அங்கேயே போட்டு விட்டு எதையுமே எடுத்து வைக்காமல் சுடிதார் போட்டு கொண்டு உறங்கி விட்டாள்…
அவனோடு இருக்கும்போது துப்பட்டா ஏதும் அவள் போட்டதில்லை காரணம் அவன் மேல் இருந்த நம்பிக்கையில் தான் ஆனால் கீழே வரும்போது துப்பட்டா போட்டுகொண்டு தான் வருவாள்…
அவன் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ,அவளின் அருகில் வந்து படுத்தவன்,அவளின் கையை எடுத்து தன் மேல் போட்டுகொண்டு, அவளை அணைத்துக்கொண்டு தான் படுத்தான்…
அவன் மனம் முழுவதும் நிறைந்து இருந்தது..ஆனால் அவள் தன் மேல் வைத்த நம்பிக்கை மட்டும் வாழ் நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவன் உறங்கி விட்டான்..
அவள் ஒரு நாள் தன் மேல் நம்பிக்கை இல்லாமல் விட்டு சென்று அவன் வாழ்வில் பெரிய சூறாவளியை உருவாக்க போகிறாள் என்று அவனுக்கு தெரியுமா…??