அவளை காணும் வரை அவன் உயிர் அவனிடமே இல்லை..எங்கெங்கோ தேடினான்,ஆனால் அவள் கூறியது கூட அவன் மனதில் இல்லை அந்த அளவிற்கு அவன் மனம் பயத்தில் இருந்தது ஒருவேளை என்னை பிடிக்காமல் சென்று விட்டாளா..
“அஞ்சு …எங்கடி இருக்க! என்றவனுக்கு கண்ணில் நீர் கோர்த்தது..”
பின்பு ஏதோ தோன்ற, ஐஸ் கிரீம் கடை பக்கம் சென்று பார்த்தன் அங்கு அவள் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…அப்போது தான் அவனுக்கு உயிரே வந்தது போல் இருந்தது…
அவளும் அப்போது தான் அவனை பார்த்தாள்..அவனை பார்த்து சிரித்ததும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது..
பாவா இங்க வாங்க!!என்று சைகை செய்ததும் அவன் அவளிடம் அருகில் சென்று அமர்ந்தான்…பாவா இங்க ஐஸ் கிரீம் செம்மையா இருக்கு நீங்களும் சாப்டுங்க என்று அவனுக்கும் வாங்கி கொடுத்தாள்..
அவனுக்கோ அவள் செய்வதும் ஏதும் புரியவே இல்லை…
அஞ்சு கிளம்பு போலாம் என்று அவளின் கையை பிடித்து கொண்டு விரைவாக வெளியேறினான்…
காருக்கு சென்ற பிறகு,அவனது முகத்தில் இருந்த சோகத்தை கண்டவளுக்கு,
பாவா என்ன ஆச்சு! என்றதும் அவன் அவளை இறுக அணைத்து கொண்டான்…அவனின் முதுகை ஆறுதலாக நீவி விட்டாள்…அவனின் கண்ணீர் அவளது கழுத்தை நினைத்ததும் தான் அவளுக்கு என்னவோ போல் ஆனது அவனின் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள் அவன் நிமிரவே இல்லை…
அவன் குனிந்து இருப்பதை பார்த்தவளுக்கு என்ன செய்வதேன்று தெரியவில்லை…
பாவா இங்க பாருங்க என்று அவளின் இரு கைகளையும் நீட்டினாள் அவனை நோக்கி,அப்போது அவன் சற்றும் தாமதிக்காமல் அவளின் நெஞ்சில் சாய்ந்து கொண்டான்…அப்போது அவன் தாயை தேடும் சேயாக தான் தோன்றினான்…அரை மணி நேரம் அப்படியே இருந்தவனுக்கு அடுத்து என்ன செய்யணும் என்று ஏதும் தோன்றவில்லை…
எழுந்து வந்து இங்க உட்காருங்க என்றதும், அவன் ஏதும் கேட்காமல் அவள் இருந்த இருக்கையில் உட்கார்ந்ததும் ,அவள் தான் கார் டிரைவ் செய்து கொண்டு வந்தாள் அது கூட அவன் நினைவில் வரவில்லை..
பாதி தொலைவு வந்ததும் தான் அவன் நினைவுக்கு வந்தது..
ஹே அஞ்சு என் மேல இருக்க கோவத்துல எங்காவது கொண்டு போய் விற்றாதடி…
அப்போ நான் கோவப்படுற மாறி ஏதோ பன்னிருக்கிங்க அப்படித்தான!!
ஹே ஏதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டி கொஞ்சம் மெதுவா போடி..
அஞ்சு நிஜமா உனக்கு கார் ஓட்ட தெரியுமா? என்றதற்கு எனக்கு அதெல்லாம் தெரியாது.. முதல் முறையாக இப்போ தான் ஓட்றேன்.. உங்கள பார்த்து தான் காலையில் கத்துகிட்டேன்.. என்றதும் அவனோ அவளை ஆவேன பார்த்தான்..
அஞ்சு எனக்கு என்ன ஆனாலும் பரவாலடி, நீ கார் நிறுத்தி வெளிய போடி…நீங்க இல்லாம எனக்கு தனியா வாழ பிடிக்காது ..எங்க போனாலும் ரெண்டு பேரும் ஒன்றாகவே போலாம் என்றாள் கூலாக..
என்னடி சொல்ற??
அப்போது தான் அவன் அவள் கூலாக, அழகாக ஸ்டீரிங் திருப்புவதை பார்த்து டிரைவ் செய்வதை பார்த்தவனுக்கு புரிந்தது அவளுக்கு கார் ஓட்ட தெரியும் என்று,
எப்போ இருந்து கார் டிரைவ் பண்ண தெரியும் அஞ்சு ??
ஸ்கூல் முடிச்சதும் கத்துகிட்டேன் பாவா..
ஏன் எங்கிட்ட சொல்லவே இல்லை..
நீங்க ஏன்கிட்ட கேட்கவே இல்லையே என்று சிரித்துக்கொண்டே பேசினாள்…
அதற்குள் வீடு வந்தது..இந்த வாய் இருக்கே வாயி என்றவன் அவளின் அருகில் சென்றதும் “என்ன” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்..
“என்ன பண்றதா இருக்கீங்க” என்றதும் அவளுக்கு ஒரு இதழ் முத்தத்தை குடுத்து விட்டு இருவரும் இறங்கி உள்ளே வரும்போது ,பெரயவர்கள் இருவரையும் பார்த்ததும் அவர்களுக்கு சுத்தி போட்டார்…
பாட்டி பசிக்குது என்ன சமச்சிங்க, ஏதுவா இருந்தாலும் எடுத்துட்டு வாங்க என்று கத்தி கொண்டு இருந்தாள்..திடீர்ன்னு நியாபகம் வந்தவளாக ,
பாட்டி நீங்க போக வேண்டாம்..
ஏன்டா கண்ணு..
பாவா நீங்க போங்க என்றதும் அவன் திரு திருவென்று விழித்தான்….
அவன் முழிப்பதை பார்த்தவளுக்கு, கண்டிப்பா நீங்க தான் எங்க எல்லார்க்கும் எதாவது செஞ்சி எடுத்துட்டு வரணும் என்று சட்டமாக கூறினாள்…
madam குளிச்சிட்டு வரிங்களா என்றான் !!
அது வரைக்கும் முடியாது பாவா..வயிறு பசிக்குது என்று தன் வயிட்ரை தடவி காட்டி கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது..
சரி அஞ்சு ஒரு ஐந்து நிமிடம் என்றவன்…
அவளுக்கு சூடாக தோசையும்,அவளுக்கு பிடித்த வெங்காய சட்னியும் வைத்து எடுத்து வந்து கொடுத்தான்…
கொடுத்த பிறகும் அவனை கோபமாக பார்த்தாள்..
இப்போ எதுக்குடி முறைக்கிற,
யாரு எனக்கு ஊட்டி விடுறது..சமச்சி குடுத்தா அதோட முடிஞ்சுதா என்ன…ஆவேன வாயை காட்டினாள்..
சிரித்துக்கொண்டே ஊட்டி விட்டான்..அதை பார்த்த பெரியவர்களுக்கும் ஒரே சிரிப்பு எப்போதும் இறுக்கமாக இருந்து கொண்டு அனைவரையும் கண் பார்வையிலே வேலை வாங்கும் பேரனை என் பேத்தி இப்படி வேலை வாங்குகிறாளே என்று பெருமையாக இருந்தது..
அப்போது நியாபகம் வந்தவளாக தாத்தா பாட்டி நீங்களும் வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தாள்..
நாங்க சாப்பிட்டோம் கண்ணு.. நீ சாப்பிடு என்றவருக்கு புன்னகையை பதிலாக கொடுத்தாள் …
அவன் தோசை சுடுவதும் , இவள் சாப்பிடுவதும் நேரம் சென்று கொண்டே இருந்தது…போதுமா என்று அவன் அவளை அவன் கேட்கவே இல்லை…அவனை பொறுத்தவரை பொண்ணுங்க நல்ல சாப்பிட்ட தான் நல்லா ஸ்ட்ரோங் ஆக இருக்க முடியும் என்பான்..
அவன் சென்றதும் அவள் அவர்களோடு கல்லூரி கதை,செவரு ஏறி குடிச்ச கதை எல்லாம் சொல்லி கொண்டு இருந்தாள் அதை கேட்ட அவர்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு…சாரியான வாலு பொண்ணுங்க டா நீங்க ..
அதை ஆமோத்திவள்,என்னால சும்மாவே இருக்க முடியாது பாட்டி எதாவது சேட்டை பண்ணிக்கிட்டே தான் இருப்பேன்னு அம்மா நெறைய ஸ்கூல் மாத்தினாங்க…நல்லவேளை கல்லூரி மட்டும் ஒரே கல்லூரி தான்..
ஆனாலும் அஞ்சு பிரின்சிபால் ரொம்ப பாவம்டா ,கொஞ்சம் பாவம் புண்ணியம் பாத்திருக்கலாம்…
பாட்டி உங்களுக்கு அவர பத்தி ஒண்ணுமே தெரியாது ஏதோ ஒரு நாள் கிளாஸ் கட் அடிச்சிட்டு போனதுக்கலாம் கோச்சிகிட்டா !! நாங்க என்ன பாட்டி பண்ண முடியும்..
அனைத்தையும் கேட்டு கொண்டு இருக்கும்போதே பிரகாஷ் வந்து விட்டான்..
நீங்க உட்காருங்க பாவா..நான் போயிட்டு உங்களக்கு தோசை ஊத்திட்டு வரேன் என்றவளை தடுத்தவன்,இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் அஞ்சு…
அப்போ சரி என்றவள்,அவர்களின் HOSTEL கதை,தன்னை காதலிப்பதாக யாரவது சொல்ல வந்தாள் அவர்களை ஓட ஓட துரத்துவது பற்றி அனைத்தையும் கூறினாள்…
அவர்களும் சுவாரசியமாக கேட்டு கொண்டு சிரித்து கொண்டு இருந்தவர்களை பார்த்தவனுக்கு மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது…அவர்களிடம் இவள் இந்த அளவுக்கு ஒட்டி கொள்வாள் என்று அவன் நினைக்கவே இல்லை..அதும் பெரியவர்களின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு…
எல்லாமே இருந்தும் ஏதோ குறை இருப்பது போல் தோன்றும்… எத்தனையோ சண்டே வந்துருக்கு ஆனால் இப்படி ஒரு நாள் அவனின் வாழ்வில் வந்தது இல்லை….
“எந்த நிலைமையிலும் இவளை நான் கண்கலங்க விடவே கூடாது என்று முடிவு செய்து கொண்டான்..”
அப்போ தான் ஒன்றை கவனித்தான்.. தான் இருப்பதே இவர்கள் மறந்து விட்டு அவர்கள் பாட்டுக்கு பேசி கொண்டிருப்பதை,
ஹலோ நானும் இங்க ஒருத்தன் இருக்கேன்னு நியாபகம் இருக்கா,என்னை யாரும் சேர்த்துக்க மாட்டிங்களா என்று சோகமாக இருப்பது போல் கேட்டான்…
பாவா ரொம்ப கேவலமா நடிக்கிரிங்க என்று கலகலவென்று சிரித்தாள்..
உன்னை..,, என்று அடிக்க ஓடினான் அவன் கையில் மாட்டாமல் ஓடி அழகு காண்பித்தாள்..
அதை பார்த்த பெரியவர்கள் இருவரையும் அழைத்து எப்போது திருமணம் செய்ய போறீங்க என்றதும்,
அஞ்சு உடனே எனக்கு இப்போ பண்ணா கூட ஓகே தான் பாட்டி இவர்தான் ஒத்து வர மாட்டேங்றாரு…
அதற்க்கு அவன் அப்படி எல்லாம் உன்னை விட்டு விடரதா உத்தேசம் எனக்கு இல்லை அஞ்சு..உனக்கான வழியா choose பண்ணி சொல்லு, இல்லன்னா நம்ம office க்கு வா போலாம் என்றவனை,
நீங்க போங்க கொஞ்ச நாள் ஆகட்டும் என்று கொஞ்சினாள்.. இப்போ தான கல்லூரி முடித்தேன் அதுக்குள்ள PRESSURE பண்ணா எப்படி பாவா என்று போலியாக அழுதாள்..
பாட்டி நீங்களாவது சொல்லுங்க என்று சப்போர்ட்டுக்கு ஆள் வேற சேர்த்து கொண்டவளை,இவளை என்ன தான் செய்வதென்று அவனுக்கு புரியவில்லை…
ஓனே WEEK ல நீயாக சொல்லணும் இல்லைன்ன என்று அவன் இழுத்ததும்,
இல்லைன்னா…. என்று அவனை போல் இழுத்து சொன்னவளை பார்த்தவனுக்கு அதற்க்கு மேல் அவனால் கோவத்தை காட்ட முடியவில்லை…
சரி பாவா யோசிக்கிறேன் என்று சொன்னாள்..
சரிங்க தாத்தா பாட்டி நீங்க போயிட்டு தூங்குங்க இல்லன்னா இவ night புள்ளா இவ செவரு ஏரி குதிச்ச கதைய சொல்லியே ஓட்டிருவாள் என்று அவன் இப்போது சிரித்தான்..
உங்களை என்று அவள் மறுபடியும் அவனை துரத்த ஆரமித்தாள்..
அவர்கள் கிளம்பியதும் அவனுக்கு தோசை ஊற்ற கிட்சேன்க்கு சென்றாள்,அவள் சென்றதும் அவள் பின்னாடியே சென்று,அவளை கட்டிக்கொண்டு அவளது கழுத்தில் முகம் புதைக்கும்போது,அவள் வெட்கத்தில் நெளிந்தாள்..
“பாவா” என்று சினுங்கியவள்..
OHH madam க்கு வெட்கம், கூச்சம்லாம் வருமா? இது தெரியாம போச்சே,இனி அதிகமா வாய் பேசினால் இப்படி தான் செய்யணும் போல,ஏன்றவனுக்கு வெட்க்கத்தையே பரிசாக அளித்தாள்..
அவளின் உணர்ச்சியை மதித்தவன்.. அவளை விட்டு விலகி ,அவளின் பக்கத்தில் அமர்ந்து அவள் தோசை சுட இவன் சாப்பிட்டு கொண்டு இருந்தான்,இடை இடையே அவளுக்கு ஊட்டி கொண்டு தான் இருந்தான்..
அவன் சாப்பிடும்போது அனைத்தையும் ஓரம் எடுத்து வைத்து விட்டு,
போலாமா என்றாள்..
நீ போ அஞ்சு நான் பால் கலக்கி எடுத்து வரேன்..
சரி என்று விட்டு அவள் அமைதியாக செல்வதை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது…
அவள் சிணுங்கியதும் தான் உணர்ச்சியின் வெளியில் இருந்து இவனால் வர முடிந்தது…இவள பக்கத்துல வெச்சிகிட்டு என்னால சும்மா இருக்க சொன்னா எப்படி தான் முடியும் நானும் மனுஷன் தான்டா…இருந்தாலும் ஒரு மனது அவளை வறுத்த கூடாது என்று தான் கூறியது…
அப்போது தான் அவனுக்கு நியாபகமே வந்தது காலையில் நடந்த பிரச்சனையை பற்றி அவள் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை என்று,எல்லாமே அவளிடம் சொல்லிரலாம் என்று தான் தோன்றியது.. ஒரு வேலை அவள் என்னை விட்டு சென்று விட்டாள் என்னால் தாங்கி கொள்ள முடியுமா என்று பல கேள்விகள் அவனிடம் தோன்றியது…
“ஒரு மனம் சொல்லி விடு அவளிடம் ஏதும் மறைக்க கூடாது என்று கூறியது.. மற்றொரு மனமோ அது எல்லாம் உன்னுடைய கடந்த காலம் தான், இப்போ எல்லாம் சரியாக தானே இருக்கிறாய் என்றது..”
ஒரு குழப்பத்தோடு ரூமிருக்கு சென்றவன்,அங்கு அவள் இருந்த கோலத்தை பார்த்தவனுக்கு மூளை வேலை செய்ய மறுத்தது..