அத்தியாயம் 20:

ஹே அஞ்சு எதாவது பண்ணுடி என்றதும் அவள் HANDBAGல் இருந்த பிஸ்கட் எடுத்து அந்த நாய்களிடம் போட்டாள்…அந்த நாய் அப்போது தான் அவர்களுக்கு வழியை விட்டது..

என்னடி ரெண்டு நாய் நமக்கு இப்படி உயிர் பயத்த காட்டிருச்சி என்றாள் சூர்யா…

இப்போ நம்ம சைடுல இருக்க பெரிய பிரச்சனையில்  இது தான் முதல் இடத்தை பிடிக்கும் பிரச்சனை என்றாள் அதில் மிகையில்ல்லை என்றாள் அம்பிகா..

நாய் கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும்  கூடிகொண்டே தான் போகிறது அந்த நாய்களின் எண்ணிக்கையும் கூடிகொண்டே தாண்டி போகிறது இதை தடுக்க யாரவது action எடுத்தால் நன்றாக இருக்கும்டி என்றாள் அஞ்சு..

பேசிக்கொண்டே மூவரும் ஒரு hotel க்கு  சென்றனர்…அவர்களுக்கு பிடித்த உணவுகளை வர வைத்து சாப்பிட்டு கொண்டே இருந்தவர்கள்,சூர்யாவை ரெண்டு பெரும் பார்த்தனர் அவளோ அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருப்பதை   அவர்களால் நம்பவே முடியவில்லை..

ஹே சூர்யா என்னடி இது ஹோட்டல் டி என்றாள் அம்பிகா

நான் மட்டும் என்ன இது சர்ச்ன்னு சொன்னனா??

ஹே அம்பிகா இவளுக்கு என்னடி ஆச்சு  ,ஹோட்டல் வந்து அமைதியா சாப்பிட்டுவிட்டு போனா நம்ம சூர்யாக்கு  என்னடி இங்க மதிப்பு…,

கூப்டுடி அந்த கடைகாரங்கள என்றதும் அம்பிகா கூப்பிட்டதும்,

அண்ணா என்ன இது சிக்கன் ரைஸ் இவளோ உப்பாக இருக்கு இதை நாங்க எப்படி சாப்பிடுவது,தெரிஞ்ச கடைன்னு உங்க கடைக்கு நாங்க அடிச்சி புடிச்சி வந்தா  நீங்கள் எங்கள இப்படி ஏமாத்துருரிங்க என்று அஞ்சு கேட்டதும்,

Sorrymam இப்போ வேற கொண்டு வரோம் என்று அவர் சென்று விட்டார்…இதில் highlight என்னவென்றால் அதில் இருந்த பாதி சாப்பாட்டை காலி செய்து தான் அவர்களிடம் மீதியை கொடுத்து சண்டை போட்டனர்…

எப்புடி என்று என்று அஞ்சு கெத்தாக காலர் இல்லாத சட்டையை தூக்கி காட்டினாள்…

சூர்யாவோ அவளை ஆவேன பார்த்தாள்..எப்பவுமே சண்டை போட ரெடியாக  இருந்தாள் விடுடி பரவா இல்லை என்று எப்போதும் சொல்பவள் இன்று சண்டை போட்டு விட்டாலே என்று அவளை ஆச்சரியமாக பார்த்தாள்..

என்னடி அஞ்சு ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது நீயா இது..

ஹோட்டலுக்கு வந்து நீ அமைதியாக இருந்தாள் எப்படி  டி நல்லாவா  இருக்குது அதான் களத்துல நானே இறங்கிட்டேன்…

அது சரி என்றவலுக்கும் ஒரே சிரிப்பாக  இருந்தது ..

இதி எல்லாமே பிரகாஷ் பாத்துகொண்டு தான் இருந்தான் ..ஆனால் அவர்களை தொந்தரவுலாம்  செய்யவில்லை…அவனுக்கு இன்று முக்கியமான மீட்டிங் இருந்தது அதை முடித்து கொண்டு வந்தவனுக்கு பசிப்பது போல் இருந்ததும் இங்கு இறங்கி சாப்பிட வந்தான்…அப்போது தான் மூவர்களையும் பார்த்தான் இந்த டைம்ல முப்பெருந்தேவிகளும் இங்க என்ன பண்ணுதுங்க  என்று அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்..

வழக்கம் போல் அவர்கள் செய்யும் சேட்டையை   பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது…அவனுக்கு நன்றாக தெரியும் இன்றோடு அவர்களின் கல்லூரி வாழ்க்கை முடியுது என்று இப்போ அஞ்சுவிடம் பேசினால் மறுபடியும் தன்  நினைவில் அவள் இந்த சந்தோசங்களை இழந்து விடுவாள் என்று அவர்களின் அருகில் செல்லவில்லை தூரமாக இருந்து பார்த்து கொண்டு இருந்தான்…அவர்களை அப்படியே விட்டு செல்ல மனமில்லாதவன் அவர்கள் கிளம்பம் வரை காத்திருப்போம் என்று, சாப்பிட்டுவிட்டு அமர்ந்து இருந்தான்..

ஒருவழியாக அவர்கள் கிளம்பியதும்,அவர்களை பின்தொடர்ந்து காரை மெதுவாக உருட்டி கொண்டு சென்றான்…

அவனுக்கு வந்ததில் இருந்தே சந்தேகம் எப்படி இந்த நேரத்தில் வெளியே வந்திருப்பார்கள்  என்று அப்போது தான், அவர்கள் ஒவ்வொருவராக செவரு ஏரி குதிப்பதை பார்த்தவனுக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது..சிரித்து சிரித்து அவனுக்கு கண்ணில் நீரே வந்துவிட்டது..அவர்கள் பத்திரமாக உள்ளே சென்றதை பார்த்தவன் காரை கிளப்பி கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்…

வீட்டிருக்கு வந்து தூங்க போகும் வரை அவனுக்கு அவர்களை நினைத்து அப்படி ஒரு சிரிப்பாக இருந்தது..

பசங்க இப்படி பண்ணுவோம் என்று தெரியும் ஆனால் பெண்களும் இந்த வேலையை  பார்ப்பார்கள் என்று இன்று தான் பார்க்கிறான்

அதில் தன்னவளையும் அப்படி பார்த்தவனுக்கு செம்ம சிரிப்பாக இருந்தது..குரங்குக்கே டப் குடுப்பாங்க போலிருக்கே!!மறுபடி மறுபடி அதை நினைத்து பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது…

அஞ்சு Bangaram எந்துக்கு ரா நுவ்வு இந்த அந்தங்கா உன்னாரு ரா(அஞ்சு தங்கம் நீ எதுக்கு இவ்வளவோ அழகா இருக்க டா)

காலையில் எழுந்தவன் புன்னகை முகமாகவே கிளம்பி கீழே வந்தான்…

அவனை அப்படி பார்த்த பெரியவர்கள் இருவருக்குமே மனம் நிம்மதியாக இருந்தது…இப்போ சில மாதங்களாக அவன் சிரித்த முகமாக இருப்பதை பார்த்தவர்களுக்கு இனி என்னோட பேத்தி கண்டிப்பா நல்லா  பார்த்துப்பா ..

என்ன பிரகாஷ் ஒரே சிரித்த முகமாக இருக்கிறாய் என்றதும் அவன் அதை அவர்களிடம் கூறினான் அதை கேட்ட அவர்களுக்கும் அப்படி ஒரு சிரிப்பு….

சரியான வாலு பொண்ணு கண்ணா..அதை ஆமோதித்தவன் முகத்தில் இன்னும் சிரிப்பு குறையவில்லை…

பிரகாஷ் என்ன முடிவு எடுத்திருக்க என்றார்கள்…இன்னும் கொஞ்சம் நல்ல யோசிக்கணும் பாட்டி..

சரி என்றனர்..

அதன் பிறகு அலுவலகத்திற்கு கிளம்பி சென்றவனுக்கு வேலை அவனை இழுத்து கொண்டது..

அவளிற்கு மெசேஜ் செய்து இருந்தான் நீ எப்போது ஊருக்கு கிளம்புற என்று கேட்டு இருந்தான்…

அவள் இன்னும் அதை பார்க்க வில்லை..

இங்கு இவர்களோ மணி 11 வரை நன்கு தூங்கி எழுந்தவர்கள் அவரவர் வீட்டிற்கு செல்வதற்கு தயாராகி கொண்டு இருந்தனர்…

மதிய உணவை முடித்தவர்கள் திரும்பவும் சோகமாக இருந்தனர்…

அப்போது தான் சூர்யாவிற்கு ஒரு எண்ணம் வந்தது,நம்ம ஏண்டி pgs company ல interview அட்டென்ட் பண்ணலாமே என்றாள்…

அதையே இருவரும் சரி என்று ஏற்று கொண்டனர்…

அஞ்சு நாங்க கண்டிப்பா வேலைக்கு போய் தான் ஆகணும் …நீ வீட்டுள கேட்டு சொல்லுடி நம்ம மூணு பேரும் திரும்ப ஒன்றாக இருக்க்கலாம்டி என்றாள்..

அதை கேட்ட அஞ்சுவின் முகம் மலர்ந்தது..

அஞ்சு வீட்டுல எப்போடி வராங்க என்றாள் அம்பிகா

அதெல்லாம் ஆறு மணி ஆகும்டி..

சூர்யாவும்,அம்பிகாவும் ஒரே ஊர் தான்…இவர்கள் இருவருமே கோயம்புத்தூர்..அதனால் அவர்களின் parents வந்து விட்டனர் …அவர்களுக்கு தேவையான உதவிகளை பண்ணி அவர்களை வழி அனுப்ப சென்றாள்…இருவருமே அவளை விட்டு பிரியும்போது அப்படி ஒரு அழுகை வந்தது..மூவருமே அழுவதை பார்த்த பெற்றோர்களுக்கும்மே வேதனையாக  இருந்தது…இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த அந்த கொடூர wardenக்கு கூட மனம் கனிந்தது…

அப்போது தான் அம்பிகா, ஹே யாரும் அழாதிங்காடி  அந்த warden நம்மள ஒரு மாறி பரிதாபமாக பார்க்குதுடி நம்ம gangக்கு  இது ஒரே அசிங்கம்டி…

ஹே இன்னைக்கு கூட அவங்க கிட்ட சண்டைக்கு போகனுமா விடுடி என்றாள் அஞ்சு..

“நீ சொல்றதும் சரி தாண்டி அவளை நம்ம போன் செய்து கொடுமை படுத்துவோம் டி..”.

மூவரும் சிரித்துக்கொண்டே விடை பெற்றனர்..

அவர்களை விட்டுட்டு வந்தவளுக்கும் வேதனையாக  இருந்தது…அப்போது தான் போனை பார்த்தாள் அவன் மெசேஜ் செய்து  இருந்தான்…

இவள் free ஆகிட்டு கூப்டுங்க என்று பதில் மெசேஜ் செய்யுப்போதே அவன் அவளை அழைத்தான்..

சொல்லுங்க பாவா…

அவளின் குரலில் இருந்த மாற்றம் அவனுக்கு புரிந்து தான் இருந்தது…

அஞ்சு எப்போ வீட்டுக்கு கிளம்புற என்றவனுக்கு “நீங்களே சொல்லுங்க பாவா என்றாள்..”

அவள் வீட்டிற்கு அவள் செல்வதற்கு என்னிடம் கேட்கிறாளே என்று எப்போதும் போல் அவன் மனம் அவளிடமே சாய்ந்தது …

Evening நான் வரேன் அஞ்சு ரெடியாக இரு என்றான்

சரி பாவா என்று போனை வைத்தவளுக்கு அவர்கள் இல்லாமல் இருப்பதற்கு என்னவோ போல் தான் இருந்தது …அவர்களை நினைத்து  கொண்டே இருந்தவள் உறங்கி விட்டாள்…

ஏழுமணிக்கு அவன் அழைத்தான்…கீழே வா அஞ்சு கிளம்பலாம் என்றான்..

ம் …என்ற ஒற்றை பதிலை அளித்தவள் ரூமை காலி செய்து விட்டு அவனோடு காரில் செல்லும்போதும் அவள் எதுவுமே பேச வில்லை அவனும் அவளின் மௌனத்தை கலைக்க விரும்பவில்லை…

அதற்குள் அவனுடைய வீடு வந்தது…அங்கு வந்ததும்,அவர்களை பார்த்ததும் இவள் முகம் மலர்ந்தது..

தாத்தா பாட்டி எப்படி இருக்கீங்க..சாப்டிங்களா

நாங்க நல்ல இருக்கோம் டா …அஞ்சு கண்ணு எப்படி இருக்க…

நல்லா இருக்கேன் தாத்தா பாட்டி என்று அவர்களின் சென்று அமர்ந்தவள்..அவனின் பாட்டியை கட்டிகொண்டாள்..

அவன் சைகையில் என்னையும் அதே போல் கட்டிகொள்ளேன் என்றான்..

உடனே அவளுக்கு முகம் சிவந்தது..

பாட்டி இன்னைக்கு என்ன சமையல் என்றதும்,அஞ்சு கண்ணு பசிக்குதாடா ,இதோ இப்போ போயிட்டு சமைக்கிறேன் என்றவரை தடுத்தவள்,நான் போறேன் பாட்டி நீங்க இருங்க..இன்னைக்கு என்னோடு சமையல் தான் பாட்டி…

குளிச்சிட்டு ஒரு  FIVE மினுட்ஸ் ல வந்துறேன் பாட்டி என்று அவளோடைய LUGGAGE எல்லாம் எடுத்துகொண்டு மேலே ஏறினாள் மீதி இருந்த BAGS இவன் எடுத்துக்கொண்டே இவள் பின்னே சென்றவனை பெரியவர்கள் பார்த்து சிரித்தனர்…

என்ன பிரகாஷ் இப்பவே பொண்டாட்டிக்கு  கூஜா தூக்க ஆரமிச்சிட்டியா என்றதும் தான், அவள் அவனை திரும்பி பார்த்தாள்,அவன் அவளோடய பைகளை எல்லாம் எடுத்து கொண்டு வந்தவனை பார்த்தவளுக்கு ஐயோ என்றானது…

அவனின் கம்பீரத்தை அவள் நேரிலே பார்த்தவளுக்கு இந்த செயல் என்னவோ போல் இருந்தது..அவனின் ஒற்றை கண் அசைவில் அலுவலகமே வேலை செய்ய ரெடியாக இருக்கும்போது அவன் தனக்கு செய்யும் வேலையை பார்த்தவளுக்கு வேதனையாக இருந்தது..

பாவா விடுங்க நான் எடுத்துட்டு போறேன் வைங்க என்றாள்..அவளின் கையை  பிடித்து  தடுத்தவனை என்னெவென்று பார்த்தாள் அப்போது அவனின் கண்ணில் தெரிந்த காதலில் சற்று தடுமாறி போய்விட்டாள் …

நீ எங்கிட்டா நல்லா  பேசி எத்தனை ஆகுது தெரியுமா அம்முலு??நீ இல்லாமல் இந்த ரூமுக்கு உள்ள வரதுக்கு எனக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா??அவங்கள பிரிஞ்சதுக்கு இவ்வளோ வருத்தபடுற நீ என்னை நெனச்சி பார்த்தியா அஞ்சு?என்கூட  என்னோட ரூம்லையே இருந்துட்டு போன உனக்கு அவ்வளவு வலி இருக்குன்னா எனக்கும் அதை விட வலி இருக்குடி ..நீ அதை அழுது காட்டிட்ட நான் காட்டல அவ்வளவு தான் என்று அவன் சொல்லும்போது அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது..

பாவா என்றவளுக்கு அதற்க்கு மேல் வார்த்தையே வரவில்லை..

என்னாலையும் உன்னை விட்டு இருக்க முடிலடி அஞ்சு..எனக்கும் தனிமை அவ்வளவு வெறுப்பாக இருக்கு..வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரும்போது யாராவது நமக்காக  காத்திருப்பது எவ்வளவு சந்தோசமாக இருக்கும் தெரியுமா??

நீ வீட்டுக்குலாம் போக வேண்டாம் அஞ்சு இங்கயே என்னோடு இருந்து விடு புரியுதா  என்று சற்று கடுமையாக கூறினான்..

அவள் அவனை ஆவேன பார்த்தாள்!!!!